ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை தொகுத்து அருளிய பாசுரப்படி ராமாயணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை என்ற பெருமகனார், நாலாயிர திவ்வியப் பிரபந்தங்களிலுள்ள
சொற்றொடர்களையை தொகுத்து, ஸ்ரீ ராமாயணமாக அருளிச் செய்துள்ளார்.
இதனைத் தினமும் பாராயணம் செய்தால்
ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தைப் பாராயணம் செய்த பலனும்,
ஸ்ரீ ராமாயண பாராயண பலனும் ஒருங்கே கிடைக்கும்.
இதைப் பாராயணம் செய்ததின் பலனாக நல்ல கணவனையும்,
மக்கட் செல்வத்தையும் அடைந்து சௌபாக்கியம் பெற்றவர் பலர்.
ஸ்ரீமத் க்ருஷ்ண ஸமாஹ்வாய நமோ யாமுதஸூநவே |
யத்கடாக்ஷைக லக்ஷ்யாணாம் ஸுலப: ஸ்ரீதர: ஸதா ||–தனியன்
ஸ்ரீ யாமுனரின் திருக்குமாரரும்,
யாருடைய கடாக்ஷம் எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனின் கிருபையையும் நமக்கு எளிதாக அளிக்க வல்லதோ
அந்த ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளையை வணங்குகிறேன் .
நாம் எல்லோரும் அவருடைய திருவடித் தாமரைகளில் பணிந்து
நம் ஸம்ப்ரதாயத்திற்கு அவருடைய அர்ப்பணிப்பை எப்பொழுதும் ஞாபகத்தில் கொள்வோமாக.
திருநக்ஷத்ரம்: ஆவணி ரோகிணி
அவதார ஸ்தலம்: சங்கநல்லூர் (சேங்கனூர்)
ஆசார்யன்: நம்பிள்ளை
சிஷ்யர்கள்: நாயனாரச்சான் பிள்ளை, வாதிகேசரிஅழகிய மணவாள ஜீயர், பரகால தாசர் முதலியவர்கள்
ஸ்ரீ க்ருஷ்ணரின் அவதாரமாக, சேங்கனூரில் இருந்த ஸ்ரீ யாமுனர் என்பவருக்கு பிறந்த இவர்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை என்றே அழைக்கப்பட்டார்.
இவர் ஸ்ரீ நம்பிள்ளையின் பல சிஷ்யர்களுள் முதன்மையானவராகத் திகழ்ந்து
அவரிடமிருந்தே எல்லா சாஸ்திர அர்த்தங்களையும் கற்றுக கொண்டார்.
ஸ்ரீ நம்பிள்ளையின் அனுக்ரஹத்தால் நம்முடைய சம்ப்ரதாயத்தின் ப்ரஸித்தி பெற்ற ஆச்சார்யனாகத் திகழ்ந்தார்.
ஸ்ரீ பெரிய திருமொழி 7-10-10 இல் குறிப்பிட்டுள்ளபடி ஸ்ரீ திருக்கண்ணமங்கை எம்பெருமான் ,
ஸ்ரீ திருமங்கையாழ்வார் பாசுரங்களின் அர்த்த விசேஷங்களை ஸ்ரீ கலியன் வாயிலாகக் கேட்க விரும்பினார்.
எனவே அருளிச் செயலின் அர்த்த விசேஷங்களைக் கற்பதற்காக ஸ்ரீ கலியன் ஸ்ரீ நம்பிள்ளையாகவும்,
ஸ்ரீ எம்பெருமான் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளையாகவும் அவதாரம் செய்ததாக பெரியோர்கள் நிர்வாகம்.
இவருக்குஸ்ரீ வ்யாக்யானச் சக்கரவர்த்தி என்றும்
ஸ்ரீ அபய ப்ரத ராஜர் என்றும் வேறு சிறப்புப் பெயர்களும் உண்டு.
ஸ்ரீ நாயனாராச்சான் பிள்ளையை தன் ஸ்வீகார புத்ரராக ஏற்றுக் கொண்டார்.
இவர் வாழ்ந்த காலத்தில், பின்வரும் ஸ்ரீ ஸூக்திகளை அருளி உள்ளார்
4000 திவ்ய பிரபந்தம் (அருளிச்செயல் பாசுரங்கள்) – எல்லாவற்றுக்கும் இவர் வ்யாக்யானம் அருளியுள்ளார்.
அவற்றுள் பெரியாழ்வார் திருமொழியிலிருந்து சுமார் 400 பாசுரங்களின் வ்யாக்யானங்கள் தொலைந்துபோக
அவற்றுக்கு மட்டும் மாமுனிகள் வ்யாக்யானம் அருளியுள்ளார்.
ஸ்தோத்ர க்ரந்தங்கள் –
இவர் பூர்வாசார்யர்களின் ஸ்தோத்ர ரத்னம், சதுச்லோகி, கத்யத்ரயம் ,
மற்றும் ஜிதந்தே ஸ்தோத்ரம் போன்றவைகளுக்கு வ்யாக்யானம் அருளியுள்ளார்.
ஸ்ரீராமாயணம் –
ஸ்ரீராமாயணத்திலிருந்து முக்கியமான சில ச்லோகங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றுற்கு விளக்கமான
வ்யாக்யானத்தை ஸ்ரீராமாயண தனி ச்லோகியில் எழுதியுள்ளார்.
இவருடைய விபீஷண சரணாகதி பற்றிய புலமை மிக்க மிகச் சிறந்த விளக்கங்களுக்காக
இவர் அபய ப்ரத ராஜர் என்ற பெயர் சூட்டப்பட்டார்.
இவர் மாணிக்க மாலை, பரந்த ரஹஸ்யம், ஸகல பிரமாண தாத்பர்யம் போன்ற பல ரஹஸ்ய க்ரந்தங்களை எழுதியுள்ளார்.
அவைகள் ரஹஸ்ய த்ரயம் பற்றி மிகச் சிறப்பாக விளக்குகின்றன.
ரஹஸ்ய த்ரயம் பற்றிய விளக்கங்களை ஏடு படுத்தியதில் இவர் முதன்மையாகத் திகழ்ந்தார்.
பிள்ளை லோகாசார்யார் நம்பிள்ளை மற்றும் பெரியவாச்சான் பிள்ளையின் விளக்கங்களிருந்து
முக்கியமான ஸாராம்சத்தைக் கொண்டு தன்னுடைய அஷ்டாதச ரஹஸ்ய கிரந்தத்தை எழுதினர்.
நம்பிள்ளை தம்முடைய நல்லருளால் ஏவியிடப்
பின் பெரியவாச்சான் பிள்ளை அதனால்
இன்பா வருபத்தி மாறன் மறைப் பொருளை சொன்னது
இருபத்து நாலாயிரம்.
நம்பிள்ளை தம்முடைய கருணையினால் பெரியவாச்சான் பிள்ளையிடம் திருவாய்மொழிக்கு உரை எழுதப் பணிக்கிறார்.
அதை மனதில் கொண்டு பெரியவாச்சான் பிள்ளையும், சகல வேதங்களின் சாரமான திருவாய்மொழிக்கு
மிகவும் அனுபவிக்கத்தகுந்த ஒரு வ்யாக்யானம் எழுதினார் 24000 ஸ்லோகங்கள் அடங்கிய
ஸ்ரீ ராமாயணத்தைப் போன்றே 24000 படிகள் கொண்டதாக எழுதினார்
பெரியவாச்சான்பிள்ளை பின்புள்ளவைக்கும்
தெரிய வியாக்கியைகள் செய்வால்
அரிய அருளிச்செயல் பொருளை ஆரியர்கட்கிப்போது
அருளிச்செயலாய்த் தறிந்து.
பெரியவாச்சான் பிள்ளையின் வ்யாக்யானத்தினாலே தான் பிற்காலத்தில் உள்ளவர்கள்
அருளிச்செயலின் அர்த்தத்தை புரிந்து கொள்ளவும்
அதன் உண்மையான அர்த்தங்களைப் பரப்பவும் முடிந்தது.
இவருடைய வ்யாக்யானம் நமக்குக் கிடைக்காமல் போயிருந்தால் யாராலும்
அருளிச்செயலின் அர்த்தத்தையறிந்து கொண்டிருக்கவே முடியாது.
மேலும் மாமுனிகள் தம்முடைய 39 வைத்து பாசுரத்தில், திருவாய்மொழியின்
பிரதான 5 வ்யாக்யான கர்த்தாக்களில் இவரும் ஒருவர் என்றும்
அந்த வ்யாக்யானங்களைப் பாதுகாத்து நம்மிடையே பரப்பியிராவிட்டால் நம்மால்
அருளிச்செயலின் அர்த்தங்களைப் புரிந்து கொண்டே இருக்க முடியாது என்று குறிப்பிடுகிறார்.
அவருடைய வாழ்க்கையில் ஏற்பட்ட சில நிகழ்வுகளை வார்த்தை மாலை என்ற க்ரந்த்தத்தின் மூலமும்
நம் பூர்வாசார்யர்களின் க்ரந்தங்களின் மூலமும்
அறிந்து கொள்ளலாம்.
அவைகளில் சில கீழே:
“நாம் எல்லோரும் “எம்பெருமானின் கிருபைக்குப் பாத்திரர்களா அல்லது
அவருடைய லீலைக்குப் பாத்திரர்களா?” என்று ஒருவர் கேட்க,
அதற்கு பெரியவாச்சான் பிள்ளை “அகப்பட்டோம் என்றிருந்தால் க்ருபைக்கு விஷயம்
உடன்பட்டோம் என்றிருந்தால் லீலைக்கு விஷயம்
[நாம் எல்லோரும் இந்த சம்சார சாகரத்தில் பிடிபட்டு உழல்கிறோமே என்று நினைத்தால்
நாம் எம்பெருமானின் க்ருபைக்குப் பாத்திரர்கள்.
ஆனால் நாம் எல்லோரும் இந்த சம்சார சாகரத்தில் மிகவும் சந்தோஷமாக இருப்பதாக எண்ணினால்
அப்போது நாம் எம்பெருமானின் லீலைக்குப் பாத்திரர்களாகிறோம்]” என்கிறார்.
இன்னொருவர் கேட்கிறார் “பாரதந்த்ரியம் என்றால் என்ன” என்று.
பெரியவாச்சான் பிள்ளையின் பதில் “எம்பெருமானின் சக்தியில் முழுமையாகச் சார்ந்து இருப்பது,
உபாயாந்தரங்களை முழுவதுமாக விட்டு விடுவது
(சுய முயற்சியும் சேர்த்து), எப்பொழுதும் பகவத் கைங்கர்ய மோக்ஷத்திற்காகவே ஏங்குவது.
இவையே பாரதந்த்ரியம்”.
மற்றொருவர் கேட்கிறார். “உபாயம் என்றால் என்ன?
நாம் நம்முடைய எல்லாவிதமான பற்றுதல்களையும் விடுவதா
அல்லது அவனைப் பிடித்துக் கொள்வதா”.
பெரியவாச்சான் பிள்ளையின் பதில “இரண்டுமே உபாயம் அல்ல.
எம்பெருமானே நாம் விடுவதற்கும் பிடித்துக் கொள்வதற்கும் ஏதுவாகிறான். அவனே உபாயம்”.
ஒரு சமயம் பெரியவாச்சான் பிள்ளையின் பந்துக்களில் ஒருவர் அவரிடம் ” நான் மிகவும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.
நான் அநாதி காலம் இந்த சம்சார சாகரத்தில் உழன்று கொண்டுச் கர்மங்களை சேர்த்துக் கொண்டு இருக்கிறேன்.
எனக்கு எம்பெருமான் எப்படி மோக்ஷம் அளிப்பான்”.
அதற்கு அவர் பதிலுரைக்கிறார “நாம் எல்லோரும் எம்பெருமானின் சொத்து,
அவன் நம்மை எப்பொழுது சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறானோ அப்போது
நம் கர்மாக்களை எதுவும் பார்க்காமல் நம்மை சேர்த்துக் கொள்வான்” என்று கூறினார்.
ஒரு ஸ்ரீவைஷ்ணவன் இன்னொரு ஸ்ரீவைஷ்ணவனிடம் குறை காணும் பொழுது,
பெரியவாச்சான் பிள்ளை “எமன் தன்னுடைய வேலையாட்களிடம் ஸ்ரீவைஷ்ணவர்கள்
குறையைப் பார்க்காது அவர்களிடமிருந்து தள்ளியே இருக்கச் சொல்கிறார்.
பிராட்டியும் சொல்கிறாள் ‘ந கஸ்ச்சின் ந அபராத்யாதி‘ –
பிறரிடம் குற்றம் காணாதீர்கள். எம்பெருமான் ‘என்னுடைய பக்தர்கள் குற்றம் செய்தாலும்
அதுவும் நன்மைக்கே’ என்கிறான்.
ஆழ்வார் பெருமானின் பக்தர்கள் யாராக இருந்தாலும் அவர்களைக் கொண்டாட வேண்டும் என்கிறார்.
இவர்கள் எல்லோரும் பக்தர்களைக் கொண்டாடும் பொழுது, பக்தர்களை நிந்திக்கவும் ஒருவர் வேண்டுமே,
அதை நீரே செய்யக் கடவது” என்கிறார்.
ஒரு முறை பாகவதர்களின் பெருமைகளை பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது
வேறு ஒருவர் எம்பெருமான் விஷயமாகப் பேச உடனே பெரியவாச்சான் பிள்ளை விசேஷ விஷயங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் போது
எதற்கு சாமான்ய விஷயங்களைப் பற்றிப் பேச வேண்டும் என்று கூறினாராம்.
ஒவ்வொரு ஸ்ரீவைஷ்ணவனும் அருளிச் செயலில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருக்க வேண்டும் என்று கூறுகிறார்.
——-
ஸ்ரீ பால காண்டம்
திருமடந்தைமண்மடந்தைஇருபாலும் திகழ
நலம் அந்தம் இல்லதோர் நாட்டில்
அந்தம்இல்பேரின்பத்துஅடியரோடு
ஏழுலகம் தனிக்கோல் செல்ல விற்று இருக்கும்
அயர்வறும்அமரர்கள் அதிபதி யான அணியார் பொழில்சூழ்அரங்கநகரப்பன்
அலைநீர்க்கடலுள்அழுந்தும்நாவாய்போல் ஆவார் ஆர்துணை என்று துளங்கும்
நல் அமரர்
துயர் தீர
வல்லரக்கர் இலங்கை பாழ்படுப்பதற்கு எண்ணி
மண் உய்ய மண்ணுலகில் மனிசர் உய்ய
அயோத்தி என்னும் அணி நகரத்து
வெங்கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய்க்
கௌசலை தன் குல மதலையாய்த்
தயரதன் தன் மகனாய்த் தோன்றிக்
குணம் திகழ் கொண்டலாய்
மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காக்க நடந்து,
வந்து எதிர்த்த தாடகை தன் உரத்தைக் கீறி
வல் அரக்கர் உயிர் உண்டு
கல்லைப் பெண்ணாக்கிக்
காரார் திண் சிலை இறுத்து
மைதிலியை மணம் புணர்ந்து
இருபத்தொரு கால் அரசு களை கட்ட
மழுவாளேந்தி வெவ்வரி நற் சிலை வாங்கி வென்றி கொண்டு
அவன் தவத்தை முற்றும் செற்று,
அம் பொன் நெடு மணி மாட அயோத்தி எய்தி
அரியணை மேல்
மன்னன் ஆவான் நிற்க;
————-
ஸ்ரீ அயோத்தியா காண்டம்
கொங்கைவன் கூனி சொற்கொண்டு
கொடிய கைகேயி வரம் வேண்ட
கொடியவள் வாய்க்கடியசொற்கேட்டு
மலக்கியமாமனத்தினனாய்மன்னவனும்மறாது ஒழிய
குலக்குமரா ! காடுறையப் போஎன்று விடை கொடுப்ப
இருநிலத்தை வேண்டாது
ஈன்று எடுத்த தாயரையும் இராச்சியமும்ஆங்கொழிந்து
மைவாய களிறொழிந்து மாஓழிந்துதேர்ஒழிந்து
கலன்அணியாதேகாமர்எழில்விழல் உடுத்து
அங்கங்கள்அழகுமாறி
மான்அமரும்மெல் நோக்கி வைதேகி இன்துணையா
இளங்கோவும்வாளும் வில்லும்கொண்டுபின் செல்லக்
கலையும்கரியும்பரிமாவும்
திரியும் கானம் நடந்து போய்ப்
பக்தியுடைக்குகன்கடத்தக்கங்கைதன்னைக் கடந்து
வனம்போய்ப்புக்குகாய்யோடுநீடுகனிஉண்டு
வியன்கானம் மரத்தின் நீழல்
கல்லணைமேல்கண்துயின்று
சித்திரக்கூடத்துஇருப்ப, தயரதன் தான்
நின் மகன்மேல்பழிவிளைத்திட்டு
என்னையும் நீள் வானில்போக்க
என் பெற்றாய்கைகேசீ!
நானும் வானகமேமிகவிரும்பிப்போகின்றேன்
என்று வான்எறத்
தேன் அமரும்பொழில்சாரல்சித்திரக்ககூடத்து
ஆனை புரவி தேரோடுகாலாள்
அணிகொண்ட சேனை சுமந்திரன்
வசிட்டருடன்பரதநம்பிபணியத்
தம்பிக்குமரவடியைவான்பணையம் வைத்துக் குவலயமும்
துங்கக்கரியும்பரியும்இராச்சியமும்
எங்கும் பரதற்குஅருளிவிடைகொடுத்துத்
திருவுடைதிசைக்கருமம்திருந்தப் போய்த்
தண்டகாரண்யம் புகுந்து
————-
ஸ்ரீ ஆரண்ய காண்டம்
தயங்குமறைமுனிவர்க்கு
‘அஞ்சேன்மின் !’என்று அருள் கொடுத்திட்டு
வெங்கண்விறல்விராதன்உகவில்குனித்து
வண்தமிழ்மாமுனிகொடுத்தவரிவில் வாங்கி
புலர்ந்து எழுந்த காமத்தால்
சுடுசினத்துச் சூர்ப்பணகா
பொன்னிறம் கொண்ட
சீதைக்குநேராவன்என்றுவரக்
கொடிமூக்கும் காது இரண்டும்
கூரார்ந்தவாளால்ஈராவிடுத்துக்
கரனொடு தூடணன்தன்உயிரை வாங்க
அவள்கதறித் தலையில் அங்கை வைத்து
மலைஇலங்கைஓடிப்புக,
கொடுமையில்கடுவீசை அரக்கன்
அலைமலிவேற்கண்ணாளைஅகல்விப்பான்
ஓர் உருவு ஆயமானை அமைத்து சிற்றெயிற்று
முற்றல் மூங்கில் மூன்று தண்டத்தனாய் வஞ்சித்து
இலைக்குரம்பையில் தனி இருப்பில்
கனிவாய்த்திருவினைப் பிரித்து
நீள்கடல்சூழ் இலங்கையில்
அரக்கர் குடிக்குநஞ்சாகக்கொடுபோந்து
வம்புலாமகடிகாவில்சிறையா வைக்க
அயோத்தியர் கோன் மாயமான்மாயச்செற்று
அலைமலிவேற் கண்ணாளை அகன்று தளர்வைய்தி
சடாயுவை வைகுந்தத்து எற்றிக்
கங்குலும்பகலும்கண்துயில் இன்றிக்
கானகப்படி உலாவி உலாவிக்
கணை ஒன்றினால்கவந்தனை மடித்துச்
சவரி தந்த கனி உவந்து,
————
ஸ்ரீ கிஷ்கிந்தா காண்டம்
வன மருவு கவி அரசன் தன்னோடு காதல் கொண்டு-(பெருமாள் 10-6)
மராமரங்கள் ஏழும் எய்து
உருத்து ஏழு வாலி மார்பில் ஒரு கணை உருவ ஓட்டி
கருத்துடைத் தம்பிக்கு இன்பக் கதிர் முடி அரசு அளித்து
வானரக் கோன் உடன் இருந்து வைதேகி தனைத் தேட
விடுத்த திசைக் கருமம் திருத்திக்
திறல் விளங்கு மாருதியும்
மாயோன் தூது உரைத்தல் செய்ய
———-
ஸ்ரீ சுந்தர காண்டம்
சீராரும் திறல் அனுமன் -3-10-10
மா கடலைக் கடந்தேறி-10-2-6-
மும் மதிள் நீள் -திரு எழு கூற்று இருக்கை
இலங்கை புக்குக்-3-9-10
கடிகாவில்,-10-2-5-
வாராரும் முலை மடவாள் வைதேகி தனைக் கண்டு-3-10-10-
‘நின் அடியேன் விண்ணப்பம்-3-10-1-
கேட்டருளாய்!திரு விருத்தம் 1
அயோத்தி தன்னில் ஓர்,
இடவகையில் எல்லி அம்போது இனிது இருக்க
மல்லிகை மா மாலை கொண்டு அங்கு ஆர்த்ததுவும்;
கலக்கிய மா மனத்தினளாய் கைகேயி வரம் வேண்ட
மலக்கிய மா மனத்தினனாய் மன்னவனும் மறாதொழியக்
‘குலக்குமரா! காடு உறையப்போ என்று விடை கொடுப்ப
இலக்குமணன் தன்னோடு அங்கு ஏகியதும்
கங்கை தன்னில்
கூர் அணிந்த வேல் வலவன் குகனோடு
சீர் அணிந்த தோழமை கொண்டதுவும்;
சித்திர கூடத்து இருப்பப் பரத நம்பி பணிந்ததுவும்;
சிறு காக்கை முலை தீண்ட அனைத்துலகம் திரிந்து ஓடி
‘வித்தகனே !ராமவோ ! நின்அபயம் ! ‘ என்ன
அத்திரமேஅதன்கண்ணைஅறுத்ததுவும்;
பொன் ஒத்த மான் ஒன்று புகுந்து இனிது விளையாட
நின் அன்பின் வழி நின்று சிலை பிடித்து எம்பிரான் ஏகப்
பின்னே அங்கு இலக்குமணன் பிரிந்ததுவும்
‘அயோத்தியர் கோன் உரைத்த அடையாளம்;-3-10-10-ஆறு அடையாளங்கள் சொல்லும் பொருளும்
‘ஈது அவன் கை மோதிரமே’என்று
அடையாளம் தெரிந்து உரைக்க,
மலர்க் குழளால் சீதையும்,
வில் இறுத்தான் மோதிரம் கண்டு
அனுமான் அடையாளம் ஒக்கும் என்று
உச்சி மேல் வைத்து உகக்க,
திறல் விளங்கு மாருதியும்-10-11-
இலங்கையர் கோன்-8-5-7-
மாக் கடிகாவை இறுத்துக் காதல் மக்களும் சுற்றமும் கொன்று-10-2-6
கடி இலங்கை மலங்க எரித்து
அரக்கர் கோன்-திருமாலை 11
சினம் அழித்து,-8-6-9-
மீண்டு, அன்பினால்,
அயோத்தியர் கோன் தளிர் புரையும் அடி இணை பணிய;
————
ஸ்ரீ யுத்த காண்டம்–38 பாசுரங்கள்
காண எண்கும் குரங்கும் முசுவும் படையாக் 6-10-6-
கொடியோன் இலங்கை புகலுற்று-8-6-4-
அலையார் கடற்கரை வீற்றிருந்து–4-1-3
செல்வ வீடணற்கு நல்லவனாய்(நல்லானாய் )-6-8-5
விரி நீர் இலங்கை அருளிச்-7-6-9-
சரண் புக்க
குரை கடலை அடலம்பால் மறுக எய்து,10-7
கொல்லை விலங்கு பணி செய்ய-8-6-4
மலையதனால் அணை கட்டி-8-8-
மறு கரையை ஏறி-10-7
(வால்மீகி
கும்பகர்ணன் முதலில்
இந்திரஜித் 5 நாள்
இராவணன் 7 நாள்
கம்பராமாயணம் மாறுபாடு உண்டு
இங்கு ஆழ்வார் பாசுரப்படி)
இலங்கை பொடி பொடியாகச்-siriya thiru madal-26
சிலைமலி நெஞ்சரங்கள் செல உய்த்துக்-11-4-7-
கும்பனோடு நிகும்பனும் பட 10-2-5
இந்திரசித்தழியக் கும்பகர்ணன் பட-10-3-2-
அரக்கர் ஆவி மாள,4-8-5-
அரக்கர் கூத்தர் போலக் குழமணி தூரம் ஆட,-10-3-1-
இலங்கை மன்னன் முடி ஒருபதும் தோள் இருபதும் போய் உதிரச்-3-9-5
சிலை வளைத்துச்-8-5-5-
சரமழை பொழிந்து-thiruppaavai -4
(கரம் துணிந்து பாட பேதம் )வென்றி கொண்ட செருக் களத்துக்-6-6-8
கடிக்கமல நான்முகனும் கண் மூன்றத்தானும்-naanmukan -42
எண்மர் பதினொருவர் ஈரறுவர் ஓரிருவர்-poykai -52
மற்றுமுள்ள வானவர்-thiruchchantha viruththam 87
மலர்மழை பொழிந்து-10-9-3
மணி முடி பணித அடியிணை வணங்கக்–periya thirumoli 1-2-6-
கோலத், திரு மா மகளோடு-6-9-3
செல்வ வீடணன்-6-8-5
வானரக் கோனுடன்-3-10-8-
இலகும்-9-7-5-
அணி நெடுந்தேர் ஏறிச்-5-4-9-
சீரணிந்த குகனோடு கூடி-3-10-4-
அங்கண் நெடு மதிள் புடை சூழ் அயோத்தி எய்தி-10-1
நன்னீராடிப்-thiru viruththam -21
பொங்கிள ஆடை அரையில் சாத்தித்-perumaal 6-9
திருச்செய்ய முடியும் ஆரமும் குழையும் -thiruvaay 8-4-7
முதலா மேதகு பல் கலன் அணிந்து-thiruvaasiriyam -1
சூட்டு நன் மாலைகள் அணிந்து-21
பரதனும் தம்பி சத்துருக்கனனும் இலக்குமணனோடு இரவும் நன் பகலும்-2-3-7-
வடிவிணை இல்லாச் -9-2-10-
சங்கு தங்கு முன்கை நங்கை-thiruchchantha- 58
மலர்க் குழலாள் சீதையும் தானும்-3-10-9
கோப்புடைய சீரிய சிங்காதனத்திருந்து -thiruppaavain -23
ஏழுலகம் தனிக் கோல் செல்ல–4-5-1-
வாழ்வித்தருளினார்.”–
————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஹனுமத் பரத சத்ருக்ந லஷ்மண ஸீதாப் பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply