ஸ்ரீ விஶ்ணு ஸஹஸ்ரநாம பாஷ்யம் – ஸ்ரீ ஆதி ஶங்கர பகவத் பாதர் அருளியது – பாகம் 5-திருநாமங்கள்–201– -307- வரை –

22-அம்ருத்யு: ஸர்வத்ருக் ஸிம்ஹ: ஸந்தாதா ஸந்திமான் ஸ்திர: |

அஜோ துர்மர்ஶண: ஶாஸ்தா விஶ்ருதாத்மா ஸுராரிஹா ||

இந்த இருபத்திரெண்டாவது ஸ்லோகத்தில் 11 திருநாமங்கள் உள்ளன. அவையாவன.

  1. அம்ருத்யு:, 199. ஸர்வத்ருக், 200. ஸிம்ஹ:, 201. ஸந்தாதா, 202. ஸந்திமான், 203. ஸ்திர:|
  2. அஜ:, 205. துர்மர்ஶண:, 206. ஶாஸ்தா, 207. விஶ்ருதாத்மா, 208. ஸுராரிஹா||

——————-

23, குருர்குருதமோ தாம: ஸத்ய: ஸத்யபராக்ரம: |

நிமிஶோSநிமிஶ: ஸ்ரக்வீ வாசஸ்பதிருதாரதீ:||

இந்த இருபத்தி மூன்றாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன.

  1. குரு:, 210.குருதம:, 211. தாம, 212. ஸத்ய:, 213. ஸத்யபராக்ரம: |
  2. நிமிஶ:, 215.அநிமிஶ:, 216. ஸ்ரக்வீ, 217. வாசஸ்பதிருதாரதீ: ||

————–

  1. அக்ரணீர்க்ராமணீ: ஸ்ரீமான் ந்யாயோ நேதா ஸமீரண:|

ஸஹஸ்ரமூர்த்தா விஶ்வாத்மா ஸஹஸ்ராக்ஷ: ஸஹஸ்ரபாத் ||

இந்த இருபத்தி நான்காவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன.

  1. அக்ரணீ:, 219. க்ராமணீ:, 220. ஸ்ரீமான், 221. ந்யாய:, 222. நேதா, 223. ஸமீரண:|
  2. ஸஹஸ்ரமூர்த்தா, 225. விஶ்வாத்மா, 226. ஸஹஸ்ராக்ஷ:, 227. ஸஹஸ்ரபாத் ||

—————–

  1. ஆவர்த்தனோ நிவ்ருத்தாத்மா ஸம்வ்ருத: ஸம்ப்ரமர்த்தன: |

அஹ: ஸம்வர்த்தகோ வஹ்னிரனிலோ தரணீதர: || 

இந்த இருபத்தி ஐந்தாவது ஸ்லோகத்தில் 8 திருநாமங்கள் உள்ளன. அவையாவன.

  1. ஆவர்த்தன:, 229. நிவ்ருத்தாத்மா, 230. ஸம்வ்ருத:, 231. ஸம்ப்ரமர்த்தன: |
  2. அஹ: ஸம்வர்த்தக:, 233. வஹ்னி:, 234. அனில:, 235. தரணீதர: ||

————–

  1. ஸுப்ரஸாத: ப்ரஸன்னாத்மா விஶ்வத்ருக்விஶ்வபுக்விபு:|

ஸத்கர்த்தா ஸதக்ருத: ஸாதுர் ஜஹ்னுர்நாராயணோ நர: || 

இந்த இருபத்தி ஆறாவது ஸ்லோகத்தில் 11 திருநாமங்கள் உள்ளன. அவையாவன.

  1. ஸுப்ரஸாத:, 237. ப்ரஸன்னாத்மா, 238. விஶ்வத்ருக், 239. விஶ்வபுக், 240. விபு: |
  2. ஸத்கர்த்தா, 242. ஸத்க்ருத:, 243. ஸாது, 244. ஜஹ்னு, 245. நாராயண:, 246. நர: ||

————–

  1. அஸங்க்யேயோSப்ரமேயாத்மா விஶிஶ்ட ஶிஶ்டக்ருத் ஶுசி: |

ஸித்தார்த்த: ஸித்தஸங்கல்ப: ஸித்தித: ஸித்திஸாதன: || 

இந்த இருபத்தி ஏழாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. அஸங்க்யேய:, 248. அப்ரமேயாத்மா, 249. விஶிஶ்ட:, 250. ஶிஶ்டக்ருத், 251. ஶுசி:|
  2. ஸித்தார்த்த:, 253. ஸித்தஸங்கல்ப:, 254. ஸித்தித:, 255. ஸித்திஸாதன:  |

—————

28. வ்ருஶாஹீ வ்ருஶபோ விஶ்ணுர் வ்ருஶபர்வா வ்ருஶோதர: | 

வர்த்தனோ வர்த்தமானஸ்ச விவிக்த: ஶ்ருதிஸாகர: || 

இந்த இருபத்தி எட்டாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

256. வ்ருஶாஹீ, 257. வ்ருஶப:, 258. விஶ்ணு:, 259. வ்ருஶபர்வா, 260. வ்ருஶோதர:  |

261. வர்த்தன:, 262. வர்த்தமான:, 263. விவிக்த:, 264. ஶ்ருதிஸாகர:  ||

————–

  1. ஸுபுஜோ துர்த்தரோ வாக்மீ மஹேந்த்ரோ வஸுதோ வஸு:| 

நைகரூபோ ப்ருஹத்ரூப: ஶிபிவிஶ்ட: ப்ரகாஶன: ||

இந்த இருபத்தி ஒன்பதாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. ஸுபுஜ:, 266.துர்த்தர:, 267. வாக்மீ, 268. மஹேந்த்ர:, 269. வஸுத:, 270. வஸு: |
  2. நைகரூப:, 272.ப்ருஹத்ரூப:, 273. ஶிபிவிஶ்ட:, 274. ப்ரகாஶன: ||

————————

30-ஓஜஸ்தேஜோத்யுதிதர: ப்ரகாஶாத்மா ப்ரதாபன:| 

ருத்த: ஸ்பஶ்டாக்ஷரோ மந்த்ரஸ்சந்த்ராம்ஶுர்பாஸ்கரத்யுதி: ||

இந்த முப்பதாவது ஸ்லோகத்தில் 8 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. ஒஜஸ்தேஜோத்யுதிதர:, 276. ப்ரகாஶாத்மா, 277. ப்ரதாபன: |
  2. ருத்த:, 279. ஸ்பஶ்டாக்ஷர:, 280. மந்த்ர:, 281. சந்த்ராம்ஶு:, 282. பாஸ்கரத்யுதி: ||

——-

  1. அம்ருதாமஸூத்பவோ பானு: ஶஶபிந்து: ஸுரேஶ்வர:|

ஔஶதம் ஜகதஸ் ஸேது: ஸத்யதர்மபராக்ரம: ||

இந்தமுப்பத்தொன்றாவது ஸ்லோகத்தில் 7 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. அம்ருதாம்ஸூத்பவ:, 284. பானு:, 285. ஶஶபிந்து:, 286. ஸுரேஶ்வர:|
  2. ஔஶதம், 288. ஜகதஸ்ஸேது:, 289. ஸத்யதர்மபராக்ரம:||

————

  1. பூதபவ்யபவன்னாத: பவன: பாவனோSனல: |

காமஹா காமக்ருத் காந்த: காம: காமப்ரத: ப்ரபு: ||

இந்த முப்பத்திரண்டாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. பூதபவ்யபவன்னாத:, 291.பவன:, 292. பாவன:, 293. அனல: |
  2. காமஹா, 295.காமக்ருத், 296. காந்த:, 297. காம:, 298. காமப்ரத:, 299. ப்ரபு: ||

———–

  1. யுகாதிக்ருத் யுகாவர்த்தோ நைகமாயோ மஹாஶன:|

அத்ருஶ்யோSவ்யக்தரூபஸ்ச ஸஹஸ்ரஜிதனந்தஜித் ||

இந்த முப்பத்து மூன்றாவது ஸ்லோகத்தில் 8 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. யுகாதிக்ருத், 301. யுகாவர்த்த:, 302. நைகமாய:, 303. மஹாஶன:|
  2. அத்ருஶ்ய, 305. வ்யக்தரூப:, ச, 306. ஸஹஸ்ரஜித், 307. அனந்தஜித் ||

—

22-அம்ருத்யு: ஸர்வத்ருக் ஸிம்ஹ: ஸந்தாதா ஸந்திமான் ஸ்திர: |

அஜோ துர்மர்ஶண: ஶாஸ்தா விஶ்ருதாத்மா ஸுராரிஹா ||

இந்த இருபத்திரெண்டாவது ஸ்லோகத்தில் 11 திருநாமங்கள் உள்ளன. அவையாவன.

  1. அம்ருத்யு:, 199. ஸர்வத்ருக், 200. ஸிம்ஹ:, 201. ஸந்தாதா, 202. ஸந்திமான், 203. ஸ்திர:|
  2. அஜ:, 205. துர்மர்ஶண:, 206. ஶாஸ்தா, 207. விஶ்ருதாத்மா, 208. ஸுராரிஹா||

—-

201.ஓம் ஸந்தாத்ரே நம:

கர்மஃபலை: அவரவரது வினைப்பயன்களை

புருஶான் அவரவரோடு

ஸந்தத்த இணைக்கிறார் (கூட்டுவிக்கிறார்)

இதி எனவே

ஸந்தாதா பகவான் ‘ஸந்தாதா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் ஒவ்வொருவரது வினைப்பயனையும் அவர்களோடு இணைக்கிறார் (அதற்கு தக்க பலனை அளிக்கிறார்). எனவே, அவர் ‘ஸந்தாதா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

எத்தனை பிறவி எடுத்தாலும் தத்தம் வினைப்பயனை அவரவர்களே தான் அனுபவிக்க வேண்டும். ஒருவரது வினைப்பயனை மற்றவர் அனுபவித்தல் இயலாது.

————-

202.ஓம் ஸந்திமதே நம:

ஃபலபோக்தா அந்தந்த பலனை அனுபவிப்பவரும்

ச ஸ ஏவேதி அவரேயாதலால்

ஸந்திமான் பகவான் ‘ஸந்திமான்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இங்கு அந்த பரப்ரஹ்மத்தை தவிர்த்து வேறொன்றுமில்லை. பற்பல ஜீவராசிகளின் வடிவில் அதனதன் வினைப்பயனை அனுபவிப்பவரும் அவரே. எனவே, பகவான் ‘ஸந்திமான்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———

203.ஓம் ஸ்திராய நம:

ஸதைகரூபத்வாத் (ஸதா ஏக ரூபத்வாத்) எப்பொழுதும் மாறாத உருவத்துடன் இருப்பவராதலால்

ஸ்திர: பகவான் ‘ஸ்திர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் என்றும் மாறாத உருவத்துடன் இருப்பதால் ‘ஸ்திர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

——–

204.ஓம் அஜாய நம:

அஜதி ‘அஜ’ என்றால்

கச்சதி செல்வது மற்றும்

க்ஷிபதி அழித்தல் என்று பொருள்

இதி வா பகவான் இவ்விரண்டும் செய்வதால் (நல்லோரிடம் செல்கிறார், தீயோரை அழிக்கிறார்)

அஜ: அவர் ‘அஜ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் நல்லோரிடம் செல்கிறார்; தீயோரை அழிக்கிறார். எனவே, அவர் ‘அஜ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————–

205.ஓம் துர்மர்ஶணாய நம:

மர்ஶிதும் ஸோடும் ‘மர்ஶண’ என்றால் ஸஹித்துக் கொள்ளுதல் என்று பொருள்

தானவாதிபிர் ந ஶக்யதே அஸுரர்களால் (பகவானை ஸஹித்துக் கொள்ள) இயலாது

இதி எனவே

துர்மர்ஶண: பகவான் ‘துர்மர்ஶண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

துர்மர்ஶண: என்றால் ஸஹிக்க முடியாதவர் என்று பொருள். அஸுரர்களாலும், தீய எண்ணம் கொண்டவர்களாலும் பகவானை ஸஹித்துக் கொள்ள இயலாது. எனவே, அவர் ‘துர்மர்ஶண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———-

206.ஓம் ஶாஸ்த்ரே நம:

ஶ்ருதி  ஸ்ம்ருத்யாதிபி: ஶ்ருதிகளைக் (வேதங்களைக்) கொண்டும், (மனுஸ்ம்ருதி முதலிய) ஸ்ம்ருதிகளைக் கொண்டும்

ஸர்வே ஶாமனுஶிஶ்டிம் கரோதீதி அனைவரையும் கட்டளையிட்டு, வழிநடத்தி ஆள்வதால்

ஶாஸ்தா பகவான் ‘ஶாஸ்தா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஶ்ருதிகளையும் (வேதங்கள்), (மனுஸ்ம்ருதி முதலிய) ஸ்ம்ருதிகளையும் கொண்டு அனைவரையும் கட்டளை யிட்டு, வழி நடத்தி ஆள்வதால் பகவான் ‘ஶாஸ்தா’ என்ற திரு நாமத்தால் அழைக்க ப்படுகிறார்.

—————

207.ஓம் விஶ்ருதாத்மனே நம:

விஶேஶேண சிறப்பாக

ஶ்ருதோ அறிகிறார்

யேன ஸத்ய ஞானாதி லக்ஷண: தன்னுடைய ஸத்யம் (மெய்), அறிவு முதலிய குணங்களால்

ஆத்மாதோ ஆத்மாவின் தன்மையை

விஶ்ருதாத்மா எனவே, பகவான் ‘விஶ்ருதாத்மா’ என்ற திரு நாமத்தால் அழைக்கப் படுகிறார்.

பகவான் தன்னுடைய ஸத்யம், ஞானம் முதலிய குணங்களால், ஆத்மாவின் தன்மையை (மற்றெல்லோரையும் காட்டிலும்) சிறப்பாக அறிகிறார். எனவே, அவர் ‘விஶ்ருதாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப் படுகிறார்.

—————

208.ஓம் ஸுராரிக்னே நம:

ஸுராரிணாம் (ஸுர + அரிணாம்) தேவர்களின் எதிரிகளை (அஸுரர்களை)

நிஹந்த்ருத்வாத் அழிக்கிறார்

ஸுராரிஹா எனவே, பகவான் ‘ஸுராரிஹா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான், ஸுரர்கள் என்றழைக்கப்படும் தேவர்களின் எதிரிகளை அழிப்பதால் அவர் ‘ஸுராரிஹா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————-

23, குருர்குருதமோ தாம: ஸத்ய: ஸத்யபராக்ரம: |

நிமிஶோSநிமிஶ: ஸ்ரக்வீ வாசஸ்பதிருதாரதீ:||

இந்த இருபத்தி மூன்றாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன.

  1. குரு:, 210.குருதம:, 211. தாம, 212. ஸத்ய:, 213. ஸத்யபராக்ரம: |
  2. நிமிஶ:, 215.அநிமிஶ:, 216. ஸ்ரக்வீ, 217. வாசஸ்பதிருதாரதீ: ||

 

209.ஓம் குரவே நம:

ஸர்வவித்யானாமுபதேஶ்ட்டத்வாத் அனைத்து வித்தைகளையும் உபதேசிக்கும் ஆசிரியராக இருப்பதாலும்

ஸர்வேஶாம் அனைவரையும் (அனைத்தையும்)

ஜனகத்வாத்வா தோற்றுவிக்கும் தந்தையாக இருப்பதாலும்

குரு: பகவான் ‘குரு’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து வித்தைகளையும் உபதேசிக்கும் ஆசிரியராக இருப்பதாலும், அனைவரையும் (அனைத்தையும்) தோற்றுவிக்கும் தந்தையாக இருப்பதாலும் பகவான் ‘குரு’ என்ற திருநாமத்தால் அழைக்கப் படுகிறார்.

————-

210.ஓம் குருதமாய நம:

விரிஞ்ச்யாதீனாமபி நான்முகக் கடவுளான ப்ரஹ்மா முதலானோருக்கும்

ப்ரஹ்மவித்யாஸம்ப்ரதாயகத்வாத் ப்ரஹ்ம ஞானத்தை தந்தருளுவதால்

குருதம: பகவான் ‘குருதம’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைவரையும் படைப்பதால் நான்முகக் கடவுளான ப்ரஹ்மா அனைவருக்கும் குருவாகக் கருதப்படுகிறார். அந்த ப்ரஹ்மாவே, ப்ரஹ்ம ஞானத்தை பகவானிடமிருந்துதான் கற்கிறார். இவ்வாறு, ப்ரஹ்மா முதலானோருக்கும் ப்ரஹ்ம ஞானத்தை தந்தருளுவதால், பகவான் ‘குருதம’ என்ற திருநாமத்தால் அழைக்கப் படுகிறார்.

தம என்றால் ‘உயர்ந்த’ அல்லது ‘சிறந்த’ என்று பொருள். குருதம: என்றால் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர், அனைத்து ஆசிரியர்களைக் காட்டிலும் உயர்ந்தவர் என்று பொருள்.

‘யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம்’ (ஶ்வேதாஶ்வதர உபநிஶத் 6.18)

ஶ்வேதாஶ்வதர உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: எவர் முதன் முதலில் நான்முகனைப் படைத்தாரோ…

இதி மந்த்ரவர்ணாத் இந்த மந்திரத்தின் படி பகவான் ‘குருதம’ என்ற திருநாமத்தால் அழைக்கப் படுகிறார்.

———————-

211.ஓம் தாம்னே நம:

தாம ஜ்யோதி: தாம என்றால் ஒளி (ஜ்யோதி) என்று பொருள்

‘நாராயண பரோ ஜ்யோதி:’ (நாராயண உபநிஶத் 13.1)

நாராயண உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: நாராயணரே உன்னதமான ஒளியாவார்

இதி மந்த்ர வர்ணாத் இந்த மந்திரத்தின் படி

தாம: பகவான் ‘ தாம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

 தாம என்றால் ஒளி மிக்கது என்று பொருள். மிகச்சிறந்த ஒளி வடிவினராக இருப்பதால் பகவான் ‘தாம:’ என்ற திரு நாமத்தால் அழைக்கப் படுகிறார்.

ஸர்வகாமானாமாஸ்பதத்வாத்வா அனைத்து ஆசைகளும் சென்றடையும் இடமாக இருப்பதால்

தாம: பகவான் ‘தாம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நம் அனைத்து ஆசைகளும் பகவானின் கருணையாலேயே நிறைவேறுகின்றன. அனைத்து ஆசைகளும் முடிவில் பகவானையே சென்றடைகின்றன. எனவே, பகவான் ‘தாம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘பரம் ப்ரஹ்ம பரம் தாம‘ (ப்ருஹதாரண்யக உபநிஶத் 2.3.6)

ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: அந்த பரப்ரஹ்மமே அனைத்தும் சென்றடையும் இடமாக இருக்கிறார்.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

————

212.ஓம் ஸத்யாய நம:

ஸத்ய வசன உண்மைக் கூற்றுக்களாகவும்

தர்ம ரூபத்வாத் அறமே வடிவானவராயும் இருப்பதால்

ஸத்ய பகவான் ‘ஸத்ய’ (மெய்யானவர்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

எங்கெங்கெல்லாம் உண்மையும், அறமும் நிலைத்திருக்கிறதோ, அங்கெங்கெல்லாம் பகவான் இருக்கிறார். மேலும், அவர் (வேதங்களின் வடிவில்) உண்மையான கூற்றாகவும் இருக்கிறார். எனவே, பகவான் ‘ஸத்ய’ என்ற திருநாமத்தால் அழைக்கப் படுகிறார்.

புராணங்கள், அறத்தை நான்கு கால்கள் கொண்ட ஒரு எருதாக உருவகப் படுத்துகின்றன. அந்த நான்கு கால்களில் உண்மையும் ஒன்றாகும். முதல் யுகமான க்ருத யுகத்தில் நான்கு கால்களுடன் இருந்த அறமானது, இந்தக் கலியுகத்தில் வாய்மை என்னும் ஒரே காலில் மட்டும் நின்று கொண்டிருக்கிறது என்றும் புராணங்கள் கூறுகின்றன.

108 திவ்யதேசங்களில் ஒன்றான திரு மெய்யம் என்னும் திருத் தலத்தில், பகவான் ‘ஸத்ய மூர்த்தி’, ‘மெய்யன்’ என்ற திருநாமத்துடனே எழுந்தருளியிருக்கிறார்.

‘தஸ்மாத் ஸத்யம் பரம் வதந்தி‘

வேதங்களிலும், உபநிடதங்களிலும் கூறப்பட்டுள்ளது: ஆகவே, அந்த (என்றும் மாறாது இருக்கும்) உண்மையான தத்துவத்தையே பரம்பொருள் என்று கூறுகின்றனர்.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

ஸத்யஸ்ய உண்மையான பொருட்கள் அனைத்திற்குள்ளும்

ஸத்யமிதி வா உண்மையின் வடிவாய் இருப்பதால்

ஸத்ய பகவான் ‘ஸத்ய’ (மெய்யானவர்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

உண்மை எங்கிருந்தாலும், எதனில் இருந்தாலும் அதில் பகவான் உறைகிறார் என்றே கொள்ளவேண்டும். பகவான் அல்லது வேறு உண்மை எதுவுமில்லை. அவர் மாறாத அனைத்திற்குள்ளும் உறைந்து அவற்றிற்கு மாறாத தன்மையை அளிக்கிறார். எனவே, பகவான் ‘ஸத்ய’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ப்ராணா வை ஸத்யம் தேஶாம் ஏஶ ஸத்யம்‘ (ப்ருஹதாரண்யக உபநிஶத் 2.3.6)

ப்ருஹதாரண்யக உபநிடதத்தில் கூறப்பட்டுள்ளது: இந்த ஜீவாத்மா என்றும் மாறாத உண்மைப் பொருளாகும். அதற்குள்ளும் (அதனிலும் மேம்பட்ட) உண்மையாக பரமாத்மாவே இருக்கிறார்.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

————

213.ஓம் ஸத்யபராக்ரமாய நம:

ஸத்ய: அவிதத: உண்மையான, என்றும் வீணாகாத

பராக்ரமோ யஸ்ய ஸ: 

வீரத்தை உடையவராதலால்

ஸத்ய பராக்ரம: பகவான் ‘ஸத்யபராக்ரம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானின் சக்தியும், வீரமும் என்றும் மாறாதவை (நித்தியமானவை). அவை ஒரு நாளும் வீண்போவதில்லை. எனவே, அவர் ‘ஸத்யபராக்ரம:’ (உண்மையான வீரமுடையவர்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

——–

214.ஓம் நிமிஶாய நம:

நிமிலிதே மூடியுள்ளன

யதோ நேத்ரே எவரது (அவரது) கண்கள்

யதோ யோக நித்ராரதஸ்ய யோக நித்திரையின் பொழுது

அதோ நிமிஶ: எனவே, பகவான் ‘நிமிஶ:’ (கண்களை மூடியுள்ளவர்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் யோக நித்திரைக் கொள்ளும் பொழுது அவரது கண்கள் மூடியுள்ளன. எனவே, அவர் ‘நிமிஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

——————-

215.ஓம் அநிமிஶாய நம:

நித்ய எப்பொழுதும்

ப்ரபுத்த ஸ்வரூபத்வாத் விழிப்புடன் இருப்பதால்

அநிமிஶ: பகவான் ‘அநிமிஶ:’ என்ற திரு நாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் எப்பொழுதும் விழிப்புடனே இருக்கிறார். நம்மைப் போன்று அவர் தூங்குவதில்லை. எனவே, அவர் ‘அநிமிஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ப்ரபுத்த என்ற சொல்லிற்கு பல பொருட்களுள் உண்டு. அவற்றுள் ‘விழிப்புடன் இருத்தல்’, ‘அறிவொளியோடு இருத்தல்’ என்பவையும் அடங்கும். இங்கு பகவான் எப்பொழுதும் விழித்திருக்கிறார் என்று பொருள். யோக நித்திரையில் கண்களை மூடி இருந்தாலும், விழிப்புடனேயே இருக்கிறார். மேலும், அவரது அறிவானது என்றும் ஒளிவீசிக் கொண்டே இருக்கும்.

மத்ஸ்யரூபதயா வா மீனாக அவதரித்ததனாலும்

ஆத்மரூபதயா வா (அனைவருக்குள்ளும்) உறையும் ஆத்மாவாக இருப்பதனாலும்

அநிமிஶ: பகவான் ‘அநிமிஶ:’ என்ற திரு நாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானின் முதலில் மீனாய் திருவவதாரம் செய்தார். மீன்கள் இயற்கையாகவே தம் இமைகளை மூடாது. எனவே, பகவான் ‘அநிமிஶ:’ (கண்களை மூடாதவர், விழிப்புடன் இருப்பவர்) என்று அழைக்கப்படுகிறார். மேலும், அனைத்து உயிரினங்களுக்குள்ளும் உள்ளுறை ஆத்மாவாக இருக்கிறார். புலன்கள் தூங்கினாலும் (அடங்கினாலும்) ஆத்மா தூங்குவதில்லை. எனவே, பகவான் ‘அநிமிஶ:’ (கண்களை மூடாதவர், விழிப்புடன் இருப்பவர்) என்று அழைக்கப்படுகிறார்.

மத்ஸ்யாவதார வரலாறு:

முந்தைய கல்பத்தின் முடிவில் (அதாவது, ப்ரஹ்மாவின் ஒரு பகல் பொழுதின் முடிவில்) ஹயக்ரீவன் என்ற அசுரன் ப்ரஹ்மாவிடமிருந்து வேதங்களைக் கவர்ந்து சென்றான். ப்ரஹ்மாவின் வேண்டுகோளுக்கிணங்க பகவான் அந்த வேதங்களை மீட்க முடிவெடுத்தார். அச்சமயம், ஸத்யவ்ரதன் என்றொரு த்ராவிட தேசத்து அரசன் இருந்தான். அவன் (இன்றைக்கு நாம் ‘வைகை’ என்று அழைக்கும்) க்ருதமாலா நதிக்கரையில் நீராடும் வேளையில் பகவான் அவன் கைகளில் ஒரு சிறு மீனாகத் தோன்றினார்.

பெரும் திமிங்கலங்களும், முதலைகளும் வாழும் சமுத்திரத்தில் தம்மால் வாழ இயலாதென்றும், தம்மை காக்குமாறும் அந்த மீன் (பகவான்) வேண்ட, ஸத்யவ்ரதன் அந்த மீனை தன் கமண்டலத்தின் கொண்டு சென்றான். அவன் அரண்மனையை அடையும் பொழுதே அந்த மீன் அவனது கமண்டலம் வரையிலும் வளர்ந்தது. அவன் அதை ஒரு தொட்டியில் விட, தொட்டில் வரையிலும் வளர்ந்தது. பின்னர் குளம், ஏரி ஆகியவற்றில் விட அந்த மீன் அந்தந்த அளவிற்கு வளர ஸத்யவ்ரதன் இது ஒரு சாதாரண மீன் அல்ல என்று உணர்ந்தான்.

அவன் வேண்ட, பகவான் அவனுக்கு காட்சியளித்தார். ‘அன்றிலிருந்து ஏழாவது நாளில் பூமி ஒரு பெருமழையால் மூழ்கும் என்றும் அப்பொழுது ஒரு படகு தோன்றுமென்றும், அப்படகில் ஸத்யவ்ரதன், ஸப்த ரிஶிகள் மற்றும் அனைத்து வகை மூலிகைகள் மற்றும் விதைகளை ஏற்றிக் கொண்டு அந்த படகை (மீனான) தனது கொம்பில் வாசுகி என்னும் பாம்பைக் கொண்டு கட்டி விடுமாறும்’ கூறிவிட்டு மறைந்தார்.

அவ்வாறே, ஏழாம் நாள் பெருமழை பொழிய, ஒரு படகும் தோன்றியது. ஸத்யவ்ரதனும் பகவான் கூறியபடியே ஸப்தரிஷிகள் மற்றும் மூலிகைகளையும் அந்த படகில் ஏற்றிக் கொண்டு, வாசுகியை பகவானின் (மத்ஸ்யாவதார மூர்த்தியின்) கொம்பில் கட்டினான். பகவான் ஸத்யவ்ரதனுக்கும், ஸப்தரிஷிகளுக்கும் வேதார்த்தங்களை உபதேசித்த படியே ப்ரளய ஜலத்தில் அந்த படகை வழி நடத்தி சென்றார்.

முடிவில், கடலுக்கு அடியில் ஒளிந்திருந்த ஹயக்ரீவனைக் கொன்று அவனால் கவரப்பட்ட வேதங்களை மீட்டு ப்ரஹ்மாவிடம் தந்தருளினார்.

இந்த ஸத்யவ்ரதனே இந்த கல்பத்தின் மனுவாக நியமிக்கப்பட்டார்.

———-

216.ஓம் ஸ்ரக்விணே நம:

பூததன்மாத்ரரூபாம் பஞ்ச பூதங்கள், மற்றும் தன்மாத்திரைகளின் வடிவமான (அதாவது புலன்களின் சூட்சுமமான நிலை)

வைஜயந்த்யாக்யாம் ‘வைஜயந்தி’ என்ற பெயருடைய

ஸ்ரஜம் மாலையை

நித்யம் என்றும் (எக்காலத்திலும்)

பிபர்த்தீதி தாங்கியிருப்பதால் (அணிந்திருப்பதால்)

ஸ்ரக்வீ பகவான் ‘ஸ்ரக்வீ” (மாலையை அணிந்திருப்பவர்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் பஞ்சபூதங்கள், மற்றும் அனைத்து தன்மாத்திரைகளின் வடிவான ‘வைஜயந்தி’ என்ற மாலையை எப்பொழுதும் அணிந்துள்ளார். எனவே, அவர் ‘ஸ்ரக்வீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தன்மாத்திரைகள் – இவை நம் புலன்களின் சூட்சும வடிவங்களாகும். இந்த தன்மாத்திரைகளே நமது புலன்களுக்கு அதன் சக்தியை வழங்குகிறது (உதாரணமாக, ஶப்த தன்மாத்திரையிலிருந்து நமக்கு கேட்கும் திறன் கிடைக்கிறது).

நித்யம் – எப்பொழுதும். பகவான் வைஜயந்தி மாலையை எப்பொழுதும், எல்லா அவதாரத்திலும் (நமக்குத் தெரியாவிடினும்) அணிந்துள்ளார். சங்கு, சக்கரம் போன்று வைஜயந்தி மாலையும் பகவானுடன் எப்பொழுதும் இருக்கும் ஒரு அடையாளமாகும்.

———

217.ஓம் வாசஸ்பதய உதாரதியே நம:

வாசோ வித்யாயா ‘வாச’ என்றால் அனைத்து வகையான அறிவையும் குறிக்கும்

பதி: அவற்றின் தலைவர் (அனைத்து வித்தைகளிலும் தேர்ச்சி பெற்றவர்)

வாசஸ்பதி: ‘வாசஸ்பதி:’ என்று அழைக்கப்படுகிறார்

ஸர்வார்த்தவிஶயாதீர் அனைத்து பொருட்களையும் உள்ளபடி அறியும்

புத்திரஸ்யேத்யுதாரதீ: அறிவைப் பெற்றிருப்பதால் ‘உதாரதீ’ என்று அழைக்கப்படுகிறார்

வாசஸ்பதிருதாரதீ: எனவே, பகவான் ‘வாசஸ்பதிருதாரதீ:’ என்ற திரு நாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘வாச’ என்றால் அனைத்துவித ஞானத்தையும் (அறிவையும்) குறிக்கும். வாசஸ்பதி என்றால் ‘அறிவின் தலைவர்’ என்று பொருள். அனைத்தையும் உள்ளபடி அறியும் அறிவைப் பெற்றிருப்பதால் ‘உதாரதீ’ என்று அழைக்கப்படுகிறார். எனவே, பகவான் ‘வாசஸ்பதிருதாரதீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

இத்யேகம் நாம | பொருள் தனித்தனியே இருப்பினும் ‘வாசஸ்பதி’, ‘உதாரதீ’ ஆகியவை இணைந்து ‘வாசஸ்பதிருதாரதீ’ என்று ஒரே திருநாமமாக வழங்கப்பட்டுள்ளது.

—————

  1. அக்ரணீர்க்ராமணீ: ஸ்ரீமான் ந்யாயோ நேதா ஸமீரண:|

ஸஹஸ்ரமூர்த்தா விஶ்வாத்மா ஸஹஸ்ராக்ஷ: ஸஹஸ்ரபாத் ||

இந்த இருபத்தி நான்காவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன.

  1. அக்ரணீ:, 219. க்ராமணீ:, 220. ஸ்ரீமான், 221. ந்யாய:, 222. நேதா, 223. ஸமீரண:|
  2. ஸஹஸ்ரமூர்த்தா, 225. விஶ்வாத்மா, 226. ஸஹஸ்ராக்ஷ:, 227. ஸஹஸ்ரபாத் ||

———-

218.ஓம் அக்ரண்யே நம:

அக்ரம் ப்ரக்ருஶ்டம் ‘அக்ரம்’ என்றால் மிகச்சிறந்த என்று பொருள்

பதம் இருப்பிடம்

நயதி வழிநடத்திச் செல்கிறார்

முமுக்ஷூனிதி முக்தியை விழைபவர்களை (முமுக்ஷுக்களை)

அக்ரணீ: பகவான் ‘அக்ரணீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் முக்தியை விழைபவர்களை (முமுக்ஷுக்களை), அந்த முக்திக்கான மிகச்சிறந்த பாதையில் வழிநடத்திச் செல்கிறார். எனவே, அவர் ‘அக்ரணீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அக்ரணீ – ‘க்’ என்ற சொல் வடமொழியில் வரும் மூன்றாவது ‘க’ வாகும்.

———-

219.ஓம் க்ராமண்யே நம:

பூதக்ராமஸ்ய (நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய) ஐம்பூதங்களை

நேத்ருத்வாத் நியமித்து ஆள்வதால்

க்ராமணீ: பகவான் ‘க்ராமணீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களை நியமித்து ஆள்வதால் பகவான் ‘க்ராமணீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இங்கு ஐம்பூதங்களுக்குள், அவற்றின் கலவையால் உருவாக்கப்படும் அனைத்து ‘அசித்’ பொருட்களும் அடக்கம்.

———–

220.ஓம் ஸ்ரீமதே நம:

ஸ்ரீ: காந்தி: ‘ஸ்ரீ’ என்றால் ஒளி என்று பொருள்

ஸர்வாதிஶாயின்யஸ்யேதி அனைவரைக் காட்டிலும் மேலான ஒளியை உடையவராதலால்

ஸ்ரீமான் பகவான் ‘ஸ்ரீமான்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைவரைக் காட்டிலும் (அனைத்தைக் காட்டிலும்) மேலான ஒளி படைத்தவராக இருப்பதால் பகவான் ‘ஸ்ரீமான்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

முன்பு 22வது திருநாமத்தில் மஹாலக்ஷ்மி பகவானின் வக்ஷஸ்தலத்தில் (திருமார்பில்) குடியிருத்தல் பிரதானமான பொருளாகக் கொண்டு ‘ஸ்ரீமான்’ என்று விளக்கியிருந்தார் .

பின்னர் 178வது திருநாமத்தில், அனைத்து செல்வங்களுடன் திருமகள் உறைதலைப் பிரதானமாய்க் கொண்டு ‘ஸ்ரீமான்’ என்று உரை தந்திருந்தார்.

இங்கோ, அவரது மேனி ஒளியைக் கொண்டு உரை அளித்துள்ளார்.

————

221.ஓம் ந்யாயாய நம:

ப்ரமாண உண்மையான அறிவை விளக்கும் சான்றுகளை

அனுக்ராஹக சார்ந்து

அபேதகாரகஸ் தர்கோ அத்வைதமென்னும் ‘அபேத’ தத்துவத்தை விளக்கும் தர்க்கமாய் இருப்பதால் (தர்க்கம் = வாதம், எதிர்வாதம் மூலம் உண்மையை அறியும் அறிவி)

ந்யாய: பகவான் ‘ந்யாய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ப்ரமா’ என்றால் அறியப்படவேண்டிய உண்மைப் என்று பொருள். அதை நமக்கு அறிவிப்பவை ‘ப்ரமாணங்கள்’ எனப்படும். அத்தகைய ப்ரமாணங்களைச் சார்ந்து, வாத-எதிர்வாதம் மூலம் தர்க்க ரீதியாக அபேத (அத்வைத) தத்துவத்தை விளக்கும் முறைக்கு ‘ந்யாயம்’ என்று பெயர். பகவானே இந்த ‘ந்யாய’ வடிவினராய் இருப்பதால் அவர் ‘ந்யாய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நமது ஸனாதன தர்மத்தில் ஆறு வகைப் ப்ரமாணங்கள் உள்ளன. அவையாவன,

1.ப்ரத்யக்ஷம் (நேரடியாய் நம் புலன்களின் மூலம் அறிவது)

  1. அனுமானம்(நம் முன்னனுபவத்தைக் கொண்டு அறிவது. உதாரணமாக, புகையுள்ள இடத்தில் நெருப்பும் இருக்கும். முன்பு நாம் நெருப்பையும், புகையையும் ஒன்று சேரப் பார்த்திருப்பதால் இவ்வாறு அறிகிறோம்)
  2. உபமானம்(நாம் அறிந்த ஒன்றைக் கொண்டு, அறியாத ஒன்றை அறிய முயல்வது)
  3. அர்த்தாபத்தி(யூகித்து அறிவது; ஒருவர் மாட்டு வண்டியில் காலைப் பயணித்தார். அடுத்த ஊரை அடைவதற்கு அரை நாள் ஆகும். எனவே, அவர் அடுத்த ஊரை அடைந்திருக்க வேண்டும்)
  4. அனுபலப்தி(எதிர்மறை வாதங்களைக் கொண்டு ஒன்றை அறிவது. உதாரணமாக, “இங்கு தங்கத் தட்டு இல்லை” என்று ஒருவர் கூறினால், அவர் ‘தங்கம்’ என்ற பொருளையும், ‘தட்டு’ என்ற பொருளையும் ஏற்றுக்கொள்கிறார் என்று பொருள் கொள்ளலாம்)
  5. ஶப்தம்(சொல் அல்லது கூற்று: ஒருவர் அல்லது ஒரு நூல் கூறுவதை அப்படியே ஏற்றுக்கொள்வது. வேதங்கள், உபநிடதங்கள் அனைத்தும் இந்த வகையைச் சேர்ந்ததாகும்)
  6. ————

222.ஓம் நேத்ரே நம:

ஜகத்யந்த்ர இந்தப் ப்ரபஞ்சம் என்னும் இயந்திரத்தை

நிர்வாஹகோ வழிநடத்துபவராக இருப்பதால்

நேதா பகவான் ‘நேதா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்தப் ப்ரபஞ்சம் என்னும் இயந்திரத்தை வழி நடத்துபவராக இருப்பதால் பகவான் ‘நேதா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———-

223.ஓம் ஸமீரணாய நம:

ஶ்வஸனரூபேண மூச்சுக்காற்றின் வடிவில்

பூதானி அனைத்து உயிரினங்களையும்

சேஶ்ட்யதீதி நடமாடச் செய்வதால்

ஸமீரண: பகவான் ‘ஸமீரண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மூச்சுக்காற்றின் (ப்ராண வாயுவின்) வடிவில் அனைத்து உயிரினங்களையும் நடமாடச் செய்வதால் பகவான் ‘ஸமீரண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————————-

224.ஓம் ஸஹஸ்ர மூர்த்னே நம:

ஸஹஸ்ராணி ஆயிரக்கணக்கான

மூர்த்தானோSஸ்யேதி தலைகள் உடையவராக இருப்பதால்

ஸஹஸ்ர மூர்த்தா பகவான் ‘ஸஹஸ்ரமூர்த்தா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஆயிரக்கணக்கான தலைகள் உடையவராக இருப்பதால் பகவான் ‘ஸஹஸ்ரமூர்த்தா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

225.ஓம் விஶ்வாத்மனே நம:

விஶ்வஸ்யாத்மா இந்தப் ப்ரபஞ்சத்தின் உள்ளுறை ஆத்மாவாக இருப்பதால்

விஶ்வாத்மா பகவான் ‘விஶ்வாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்தப் ப்ரபஞ்சத்தின் உள்ளுறை ஆத்மாவாக இருப்பதால் பகவான் ‘விஶ்வாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

226.ஓம் ஸஹஸ்ராஷாய நம:

ஸஹஸ்ராண்யக்ஷீண்யக்ஷாணி (ஸஹஸ்ராணி அக்ஷீணி அக்ஷாணி) ஆயிரக்கணக்கான கண்களும் (அக்ஷீணி), புலனுறுப்புக்களும் (அக்ஷாணி)

வா யஸ்ய ஸ எவரிடம் உள்ளனவோ அவர் (அந்த பகவான்)

ஸஹஸ்ராக்ஷ: ‘ஸஹஸ்ராக்ஷ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானுக்கு ஆயிரக்கணக்கான கண்களும், புலனுறுப்புக்களும் உள்ளதால் அவர் ‘ஸஹஸ்ராக்ஷ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———

227.ஓம் ஸஹஸ்ரபதே நம:

ஸஹஸ்ராணி ஆயிரக்கணக்கான

பாதா அஸ்யேதி திருப்பாதங்களை உடையவராதலால்

ஸஹஸ்ரபாத் பகவான் ‘ஸஹஸ்ரபாத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஆயிரக்கணக்கான திருப்பாதங்கள் உடையவராக இருப்பதால் பகவான் ‘ஸஹஸ்ரபாத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ஸஹஸ்ரசீர்ஶா புருஶ: ஸஹஸ்ராக்ஷ: ஸஹஸ்ரபாத்’ (புருஶ ஸூக்தம் 1)

புருஶ ஸூக்தத்தில் கூறப்பட்டுள்ளது: அந்த (பரம)புருஶன் ஆயிரக்கணக்கான தலைகளை உடையவர்; அவருக்கு ஆயிரக்கணக்கான கண்களும், புலன்களும், பாதங்களும் உள்ளன.

இங்கு ஆயிரம் என்றால் எண்ணிலடங்கா என்று பொருள் கொள்ள வேண்டும்.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

————–

  1. ஆவர்த்தனோ நிவ்ருத்தாத்மா ஸம்வ்ருத: ஸம்ப்ரமர்த்தன: |

அஹ: ஸம்வர்த்தகோ வஹ்னிரனிலோ தரணீதர: || 

இந்த இருபத்தி ஐந்தாவது ஸ்லோகத்தில் 8 திருநாமங்கள் உள்ளன. அவையாவன.

  1. ஆவர்த்தன:, 229. நிவ்ருத்தாத்மா, 230. ஸம்வ்ருத:, 231. ஸம்ப்ரமர்த்தன: |
  2. அஹ: ஸம்வர்த்தக:, 233. வஹ்னி:, 234. அனில:, 235. தரணீதர: ||

————-

228.ஓம் ஆவர்த்தனாய நம:

ஆவர்த்தயிதும் சுழற்றுவது (சுழற்றுவதை)

ஸம்ஸார சக்ரம் பிறப்பு, இறப்பென்னும் இந்த ஸம்ஸார சக்கரத்தை

ஶீலமஸ்யேதி இயற்கையான குணமாக (கொண்டுள்ளபடியால்)

ஆவர்த்தன: பகவான் ‘ஆவர்த்தன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பிறப்பு, இறப்பென்னும் இந்த ஸம்ஸார சக்கரத்தை சுழற்றுவதை தனக்கு இயற்கையான குணமாகக் கொண்டுள்ளபடியால், பகவான் ‘ஆவர்த்தன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

229.ஓம் நிவ்ருத்தாத்மனே நம:

ஸம்ஸாரபந்தான் ஸம்ஸாரத் தளைகளில்

நிவ்ருத்த ஆத்மா கட்டுப்படாத ஆத்மா (ஆத்மாவை உடையவராக இருப்பதால்)

ஸ்வரூபமஸ்யேதி இயற்கையாகவே

நிவ்ருத்தாத்மா பகவான் ‘நிவ்ருத்தாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்த ஸம்ஸாரமென்னும் சக்கரத்தை சுழற்றுபவராக இருப்பினும், இயற்கையாகவே அவர் இந்த ஸம்ஸாரத் தளைகளில் கட்டுப்படுவதில்லை. எனவே, பகவான் ‘நிவ்ருத்தாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———

  1. ஆவர்த்தனோ நிவ்ருத்தாத்மா ஸம்வ்ருத: ஸம்ப்ரமர்த்தன: |

அஹ: ஸம்வர்த்தகோ வஹ்னி ரனிலோ தரணீ தர: || 

இந்த இருபத்தி ஐந்தாவது ஸ்லோகத்தில் 8 திருநாமங்கள் உள்ளன. அவையாவன.

  1. ஆவர்த்தன:, 229. நிவ்ருத்தாத்மா, 230. ஸம்வ்ருத:, 231. ஸம்ப்ரமர்த்தன: |
  2. அஹ: ஸம்வர்த்தக:, 233. வஹ்னி:, 234. அனில:, 235. தரணீ தர: ||

————–

230.ஓம் ஸம்வருதாய நம:

ஆச்சாதிகயா (பரம் பொருளை நம்மிடமிருந்து) மறைக்கும் தன்மையுடைய

அவித்யயா அறியாமையால்

ஸம்வ்ருதத்வாத் மூடப்பட்டுள்ளார்

ஸம்வ்ருத: எனவே, பகவான் ‘ஸம்வ்ருத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நமது அறியாமையானது அந்த பரம்பொருளை நாம் காணவொட்டாமல் நம்மிடமிருந்து அவரை மூடி மறைத்துள்ளது. இவ்வாறு, அறியாமையால் (அஞ்ஞானத்தால்) மூடியுள்ள படியால் அவர் ‘ஸம்வ்ருத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அத்வைதத்தின் படி, அஞ்ஞானத்தால் பிறப்பு, இறப்பென்னும் இந்த ஸம்ஸாரத்தில் ஜீவாத்மா தளைப்பட்டிருக்கிறான். ஞானத்தால் பரப்ரஹ்மத்தை உணர்ந்து மோக்ஷமடைகிறான். இங்கு, பரம்பொருளை அஞ்ஞானம் சூழ்ந்தது என்று பொருளல்ல (பகவானை அஞ்ஞானம் தீண்டாது). நமது அஞ்ஞானமானது (அறியாமையானது) பகவானை நம்மிடமிருந்து மூடி மறைத்துள்ளது என்று பொருள் கொள்ளவேண்டும்.

————

231.ஓம் ஸம்ப்ரமர்த்தனாய நம:

ஸம்யக் எல்லோரையும், எல்லாவிடங்களிலிருந்தும்

ப்ரமர்த்தயதீதி அழிக்கிறார்

ருத்ரகாலாத்யாபிர் ருத்ரன், காலன் (காலம்)

விபூதிபிர் இதி ஆகிய உருவங்களை தரித்து

ஸம்ப்ரமர்த்தன: பகவான் ‘ஸம்ப்ரமர்த்தன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் ருத்ரன், காலன் (காலம்) ஆகிய உருவங்களை தரித்து அனைவரையும், அனைத்து இடங்களிலிருந்தும் (ப்ரளய காலத்தில் ருத்ரனாகவும், அவரவரது ஆயுளின் முடிவில் காலனாகவும்) அழிக்கிறார். எனவே, அவர் ‘ஸம்ப்ரமர்த்தன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

—————

232.ஓம் அஹ:ஸம்வர்த்தகாய நம:

ஸம்யகஹ்னாம் சரியாக ஒவ்வொரு நாளையும் (பகல் பொழுதையும்)

ப்ரவர்த்தநாத் உருவாக்குகின்ற

ஸூர்ய: கதிரவனின் வடிவானவராய் இருப்பதால்

அஹ: ஸம்வர்த்தக: பகவான் ‘அஹ: ஸம்வர்த்தக:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் கதிரவனின் வடிவில் ஒவ்வொரு நாளையும் (பகல் பொழுதையும்) சரியாக உருவாக்குகிறார். எனவே, அவர் ‘அஹ: ஸம்வர்த்தக:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———-

233.ஓம் வஹ்னயே நம:

ஹவிர் யாகங்களிலும், ஹோமங்களிலும் அளிக்கப்படும் ஹவிஸ்ஸை (ஹவிஸ் – தேவர்களின் உணவு)

வஹநாத் தேவர்களுக்குக் கொண்டு செல்லும்

வஹ்னி: அக்னியின் வடிவாய் இருப்பதால் பகவான் ‘வஹ்னி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

யாகங்களிலும், ஹோமங்களிலும் அளிக்கப்படும் ஹவிஸ்ஸை (ஹவிஸ் – தேவர்களின் உணவு) தேவர்களுக்குக் கொண்டு செல்லும் அக்னியின் வடிவாய் இருப்பதால் பகவான் ‘வஹ்னி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———–

234.ஓம் அனிலாய நம:

அனிலய: (காற்று வடிவில்) எந்த ஒரு குறிப்பிட்ட இடத்திலும் நிலைக்காது சென்றுகொண்டே இருப்பதால்

அனில: பகவான் ‘அனில:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

(காற்று வடிவில்) எந்த ஒரு குறிப்பிட்ட இடத்திலும் நிலைக்காது சென்றுகொண்டே இருப்பதால் பகவான் ‘அனில:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அநாதித்வாத் தொடக்கமும், முடிவும் இல்லாமையால்

அனில: பகவான் ‘அனில:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் வாயு (காற்றின்) வடிவாய் உள்ளார். காற்றிற்கு தொடக்கமோ, முடிவோ இல்லை. எனவே, காற்றின் வடிவில் இருக்கும் பகவான் ‘அனில:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அநாதானாத்வா அவரை கைப்பிடிக்குள் அடக்க (க்ரஹிக்க) முடியாது

அனில: எனவே பகவான் ‘அனில:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் வாயு (காற்றின்) வடிவாய் உள்ளார். அவரை கைப்பிடிக்குள் அடக்க (க்ரஹிக்க) முடியாது. எனவே, பகவான் ‘அனில:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அநநாத்வா (மூச்சுக்காற்றின் வடிவில்) அனைத்தையும் இயக்குவதால்

அனில: பகவான் ‘அனில:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

(மூச்சுக்காற்றின் வடிவில்) அனைத்தையும் இயக்குவதால் பகவான் ‘அனில:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனில: என்றால் ஓரிடத்தில் நிலையில்லாதது (காற்று) என்று பொருள். இந்த திருநாமத்தையும் அவ்வாறே ஆச்சார்யர் விளக்கியுள்ளார். இதிலுள்ள வெவ்வேறு அர்த்தங்களால், வாயுவின் வெவ்வேறு குணங்களைக் கொண்டு பகவானை வர்ணித்துள்ளார் ஆதிசங்கரர்.

——-

235.ஓம் தரணீதராய நம:

சேஶதிக்கஜாதி ரூபேண ஆதிசேடன், எட்டு திக்கிலும் இந்தப் ப்ரபஞ்சத்தைத் தாங்கும் யானைகள் (அஷ்ட திக்கஜங்கள்) ஆகிய வடிவிலும்

வராஹரூபேண ச வராஹ அவதாரத்தின் பொழுதும்

தரணீம் பூமியை

தத்த இதி தாங்குவதால்

தரணீதர: பகவான் ‘தரணீதர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் ஆதிசேஷன் மற்றும் எட்டு திக்கிலும் இந்தப் ப்ரபஞ்சத்தைத் தாங்கும் யானைகள் (அஷ்ட திக்கஜங்கள்) வடிவில் இந்தப் ப்ரபஞ்சத்தைத் தாங்குகிறார். மேலும், பூமியை ஹிரண்யாக்ஷன் கடலுக்கடியில் மறைத்து வைத்த பொழுது வராஹ அவதாரமெடுத்து பூமியை மீட்டார். எனவே, பகவான் ‘தரணீதர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———

  1. ஸுப்ரஸாத: ப்ரஸன்னாத்மா விஶ்வத்ருக்விஶ்வபுக்விபு:|

ஸத்கர்த்தா ஸதக்ருத: ஸாதுர் ஜஹ்னுர்நாராயணோ நர: || 

இந்த இருபத்தி ஆறாவது ஸ்லோகத்தில் 11 திருநாமங்கள் உள்ளன. அவையாவன.

  1. ஸுப்ரஸாத:, 237. ப்ரஸன்னாத்மா, 238. விஶ்வத்ருக், 239. விஶ்வபுக், 240. விபு: |
  2. ஸத்கர்த்தா, 242. ஸத்க்ருத:, 243. ஸாது, 244. ஜஹ்னு, 245. நாராயண:, 246. நர: ||

—

236.ஓம் ஸுப்ரஸாதாய நம:

ஶோபன: மிக மங்களமான

ப்ரஸாதோ அவரது கருணை

யஸ்ய அபகாரவதாமபி தன்னை (பகவானை) அவமதித்து, தவறிழைத்த

ஶிஶுபாலாதீனாம் சிசுபாலன் முதலானோருக்கும்

மோக்ஷப்ரதாத்ருத்வாத் இதி முக்தியை அளிப்பதால்

ஸுப்ரஸாத: பகவான் ‘ஸுப்ரஸாத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானின் கருணை மிகவும் மங்களகரமானது. அவரை அவமதித்து, தவறிழைத்த சிசுபாலன் முதலானோருக்கும் முக்தியை அளிக்கக்கூடியது. எனவே, அவர் ‘ஸுப்ரஸாத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———-

237.ஓம் ப்ரஸன்னாத்மனே நம:

ரஜஸ்தமோப்யாம் ரஜோ மற்றும் தமோ குணங்களால்

அகலுஶித மாசடையாதது (தீண்டப்படாதது)

ஆத்மா ஆன்மாவையும்

அந்த:கரணமஸ்யேதி மனதையும் உடையவராதலால்

ப்ரஸன்னாத்மா பகவான் ‘ப்ரஸன்னாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானின் ஆன்மாவும், மனதும், உருவமும் சுத்தஸத்வ வடிவானது. ரஜோ, தமோ குணங்களால் மாசடையாதது. எனவே அவர் ‘ப்ரஸன்னாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அந்த:கரணம் என்றால் உள்ளுறுப்புகள் என்று பொருள். இவ்விடத்தில் இதற்கு மனம் என்று பொருள் கொள்வதே ஏற்புடையதாகும். 

கருணார்த்ர ஸ்வபாவத்வா கருணையே வடிவானவராக இருப்பதால்

ப்ரஸன்னாத்மா பகவான் ‘ப்ரஸன்னாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கருணையே வடிவானவராக இருப்பதால் பகவான் ‘ப்ரஸன்னாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

யத்வா அல்லது

ப்ரஸன்னஸ்வபாவத்வா மகிழ்ச்சியான இயல்புடையவராதலால்

ப்ரஸன்னாத்மா பகவான் ‘ப்ரஸன்னாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்

காருணிக இத்யர்த்த: மிகவும் கருணையுள்ளவர் என்று இதற்குப் பொருள்.

மிகவும் கருணையுள்ளவரானதால் பகவான் இயல்பாகவே மகிழ்ச்சியுடன் இருக்கிறார். எனவே, அவர் ‘ப்ரஸன்னாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஆச்சார்யாள் இங்கு ‘மகிழ்ச்சியான ஸ்வபாவமுடையவர்’ என்று உரை தந்துள்ளார். மேலும், இதற்கு ‘பரம காருணிகர்’ என்று அர்த்தம் என்றும் கூறியுள்ளார். இவற்றை இணைத்துப் பார்க்கும் பொழுது, தனது கருணையால் தன் அடியவர்கள் மகிழ்வதைக் கண்டு தான் மகிழ்கிறார் என்றும் பொருள் கொள்ளலாம்.

அவாப்தஸர்வகாமத்வாத்வா தனது அனைத்து ஆசைகளும் ஈடேறப்பெற்றவர்

ப்ரஸன்னாத்மா (ஆதலால்) பகவான் ‘ப்ரஸன்னாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தனது அனைத்து ஆசைகளும் (எண்ணங்களும்) ஈடேறப்பெற்றவர். அதனால் அவரது மனம் என்றுமே மகிழ்ச்சியுடனும், நிறைவுடனும் (ப்ரஸன்னமாக) இருக்கும். எனவே, அவர் ‘ப்ரஸன்னாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———————-

238.ஓம் விஶ்வத்ருஶே நம:

விஶ்வம் இந்தப் ப்ரபஞ்சத்தை

த்ருஶ்ணோதீதி காக்கிறார்

விஶ்வத்ருக் (எனவே) பகவான் ‘விஶ்வத்ருக்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஞித்ருஶா ப்ராகல்பே பலமானவர், துணிச்சல் மிக்கவர் என்ற பொருள்படும் ‘ஞித்ருஶா’ என்ற தாதுவிலிருந்து ‘த்ருக்’ என்ற விகுதி உருவாகியுள்ளது.

இந்தப் ப்ரபஞ்சத்தைத் தாங்கிக் காப்பதால் பகவான் ‘விஶ்வத்ருக்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———-

239.ஓம் விஶ்வபுஜே நம:

விஶ்வம் இந்தப் ப்ரபஞ்சத்தை

புங்க்தே புனக்தி (ப்ரளய காலத்தில்) உண்கிறார்

பாலயதீதி வா (மற்றெல்லா நேரங்களிலும்) காத்தருள்கிறார் 

விஶ்வபுக் எனவே, பகவான் ‘விஶ்வபுக்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் இந்தப் ப்ரபஞ்சத்தை ப்ரளய காலத்தில் உண்கிறார். மற்றெல்லா காலங்களிலும் அதை காக்கிறார். எனவே, பகவான் ‘விஶ்வபுக்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

புங்க்தே மற்றும் புனக்தி (வடமொழியில் நான்காவது ‘ப’) என்ற சொல்லிற்கு உண்பது, அனுபவிப்பது என்று பல பொருள்கள் உண்டு. பெரும்பாலும் இந்த சொல் உண்பதைக் குறிப்பதால்  இந்தப் ப்ரபஞ்சமே பரம்பொருளின் அனுபவத்திற்காகவே ஏற்பட்டதாகும். எனவே, ப்ரபஞ்சத்தை அனுபவிப்பவர் என்ற பொருள் கொண்டாலும் தகும்.

———————

240.ஓம் விபவே நம:

ஹிரண்யகர்ப்பாதிரூபேண ‘ஹிரண்யகர்ப்பர்’ முதலான

விவிதம் பல்வேறு

பவதீதி உருவங்களை ஏற்பதால்

விபு: பகவான் ‘விபு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ஹிரண்யகர்ப்பர்’ முதலான பல்வேறு உருவங்களை ஏற்பதால் பகவான் ‘விபு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘நித்யம் விபும்’ (முண்டக உபநிஶத் 1.6)

முண்டக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: (அந்தப் பரப்ரஹ்மம்) எப்பொழுதும் உள்ளது, அனைத்துமாகத் தோற்றமளிப்பது.

இதி மந்த்ரவர்ணாத் | இந்த (உபநிடத) மந்திரத்தின் படி (பகவான் ‘விபு’ என்று அழைக்கப்படுகிறார்).

————

241.ஓம் ஸத்கர்த்ரே நம:

ஸத்கரோதி நற்காரியம் புரிகின்றார்

பூஜயதீதி (நல்லோரை) வணங்குகிறார்

ஸத்கர்த்தா (எனவே) பகவான் ‘ஸத்கர்த்தா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் நல்லோரை வணங்குகிறார். எனவே, அவர் ‘ஸத்கர்த்தா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———————

242.ஓம் ஸத்க்ருதாய நம:

பூஜிதைரபி (அனைவராலும்) வணங்கத்தக்கவர்களாலும்

பூஜித: வணங்கப்படுகிறார்

ஸத்க்ருத: (எனவே) பகவான் ‘ஸத்க்ருத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பிறரால் வணங்கப்படும் தேவர்கள், முனிவர்கள், ஆச்சார்யர்கள் போன்றவர்களும் பகவானை வணங்கி, வழிபடுகின்றனர். எனவே, பகவான் ‘ஸத்க்ருத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———

243.ஓம் ஸாதவே நம:

ந்யாய ப்ரவ்ருத்ததயா அனைவரையும் அறவழியில் (நியாய வழியில்) நடத்திச் செல்வதால்

ஸாது: பகவான் ‘ஸாது:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைவரையும் அறவழியில் (நியாய வழியில்) நடத்திச் செல்வதால் பகவான் ‘ஸாது:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸாதயதீதி வா உருவாக்குகிறார்

ஸாத்யபேதான் (இந்தப் ப்ரபஞ்சத்தில் பல்வேறாகக் காட்சியளிக்கும்) பொருட்களுக்குள் பேதங்களை

ஸாது: பகவான் ‘ஸாது:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பரப்ரஹ்மம் எனும் ஒரே வஸ்துவால் (பொருளால்) ஆன இந்தப் ப்ரபஞ்சத்தில் பல்வேறு பேதங்களை உருவாக்குவதால் பகவான் ‘ஸாது:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

உபதானாத் மூலப் பொருளாய் (மூல காரணமாய்) இருக்கிறார்

ஸாத்யமாத்ரஸாதகோ வா (இங்கு பலவாகத் தெரியும்) அனைத்துப் பொருட்களையும் உருவாகும்

ஸாது: பகவான் ‘ஸாது:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, இந்தப் ப்ரபஞ்சத்தில் பலவாகத் தெரியும் அனைத்துப் பொருட்களுக்கும் மூல காரணமாய் இருப்பதால் பகவான் ‘ஸாது:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

—————-

244.ஓம் ஜான்ஹவே நம:

ஜனான் அனைத்து ஜீவராசிகளையும்

ஸம்ஹாரஸமயே அழியும் காலத்தில்

அபஹ்னுதே அபனயதீதி தன்னுள் லயமடையச் செய்வதால்

ஜஹ்னு: பகவான் ‘ஜஹ்னு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான், ப்ரளய காலத்தில் (இந்தப் ப்ரபஞ்சம் அழியும் காலத்தில்) அனைத்து ஜீவராசிகளையும் தன்னுள்ளே லயமடையச் செய்கிறார்.  எனவே, அவர் ‘ஜஹ்னு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஜனான் + அபஹ்னுதே = ஜஹ்னு:

ஜஹாத்யவிதுஶோ (ஜஹாதி அவிதுஶோ) ஞானமற்றோரை விடுத்து

பக்தான் நயதீதி பக்தர்களை வழிநடத்திச் செல்கிறார்

பரம்பதமிதி வா (தன்னுடைய) பரமபதத்திற்கு (வைகுண்டத்திற்கு)

ஜஹ்னு: பகவான் ‘ஜஹ்னு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தன்னிடம் பக்தியில்லாத, ஞானமற்றோரை விடுத்து, தனது பக்தர்களை தன்னுடைய மேலான பரமபதத்திற்கு வழிநடத்திச் செல்வதால் பகவான் ‘ஜஹ்னு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————–

245.ஓம்நாராயணாய நம:

நர ஆத்மா ‘நர’ என்றால் ஆத்மா என்று பொருள்

ததோ ஜாதான்யாகாஶாதீனி அந்த ஆத்மாவின் பிறப்பிடமான ஆகாயம் முதலியவை

நாராணி ‘நாரம்’ என்று அழைக்கப்படும்

கார்யாணி தானி அயம் காரணாத்மனா வ்யாப்னோதி (அந்த ஆகாயம் என்னும்) காரியத்தை (அதன் காரணமாய் இருந்து) பரவி இருப்பதால்

அதஸ்ச தான்யயனமஸ்யேதி அதற்கு (நாரங்களுக்கு) இருப்பிடமாக (அயனமாக) இருப்பதால்

நாராயண: பகவான் ‘நாராயணன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அஜாமிளனுக்கு முக்தியளித்த திருநாமம். திருமங்கையாழ்வாரை ஆட்கொண்ட திருநாமம். நாராயண நாமத்தின் பெருமையை விவரிக்க இயலாது.

நரம் என்னும் ஆத்மாக்களின் பிறப்பிடமாக இருப்பதால் ஆகாயம் முதலானவை ‘நாரங்கள்’ என்று அழைக்கப்படுகிறது. அந்த நாரங்களை, அவற்றின் காரணமாக இருப்பதால், பகவான் பரவியிருக்கிறார் (வ்யாபித்திருக்கிறார்). எனவே, அவர் அவற்றின் இருப்பிடமாகிறார் (அயனம்). எனவே, பகவான் ‘நாரயணன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘யச்ச கிஞ்சித் ஜகத் ஸர்வம் த்ருஶ்யதே ஶ்ரூயதேபி வா |

அந்தர் பஹிஸ்ச தத் ஸர்வம் வ்யாப்த நாராயண: ஸ்தித:’ || (நாராயண உபநிஶத் 13.1-2)

நாராயண உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: நாம் பார்த்தும், கேட்டும் அறிந்து கொள்ளும் (எல்லையற்ற) இந்தப் ப்ரபஞ்சத்தை உள்ளும், புறமுமாக பகவான் நாராயணர் பரவியுள்ளார் (வ்யாபித்துள்ளார்).

இதி மந்த்ரவர்ணாத் இந்த மந்திரத்தின் படி (பகவான் ‘நாரயணன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்).

நரஜ்ஜாதானி தத்வானி நாராணீதி ததோ விது: |

தான்யேவ சாயன தஸ்ய தேன நாராயண: ஸ்ம்ருத: || (மஹாபாரதம்)

மஹாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது: நரனிலிருந்தே அனைத்து தத்துவங்களும் உருவாகின்றன. எனவே, அவை ‘நாரங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. இந்த நாரங்களைத் தனது முதல் இருப்பிடமாகக் (அயனமாகக்) கொண்டுள்ளதால், பகவான் ‘நாராயணன்’ என்று அழைக்கப்படுகிறார்.

இதி மஹாபாரதே | இந்த மஹாபாரத ஸ்லோகத்தின் படி (பகவான் ‘நாரயணன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்).

நாராணாம் ஜீவானாம் அனைத்து ஜீவராசிகளும் ‘நாரங்கள்’ ஆகும்

அயனத்வாத் ப்ரளய இதி வா ப்ரளய காலத்தில் (இந்த நாரங்களாகிய ஜீவராசிகள் அனைத்தும்) சென்றடையும் இடமாக இருப்பதால்

நாராயண: பகவான் ‘நாராயணன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நாரங்கள் என்றழைக்கப்படும் ஜீவராசிகள் அனைத்தும் ப்ரளய காலத்தில் பகவானுக்குள்ளே சென்று ஒடுங்குகின்றன. இவ்வாறு, நாரங்களின் இலக்காக (அயனமாக) இருப்பதால், பகவான் ‘நாராயணன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘நாராணாமயன யஸ்மாத்தஸ்மான் நாராயண: ஸ்ம்ருத:’ (ப்ரஹ்மவைவர்த்த புராணம்)

ப்ரஹ்மவைவர்த்த புராணத்தில் கூறப்பட்டுள்ளது: நாரங்களின் இருப்பிடமாதலால் பகவான் ‘நாராயணன்’ என்று அழைக்கப்படுகிறார்..

இதி ப்ரஹ்மவைவர்த்தாத் | இவ்வாறு ப்ரஹ்மவைவர்த்த புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

ஆபோ நார இதி ப்ரோக்தா ஆபோ வை நரஸூனவ: |

தா யதஸ்யாயனம் பூர்வம் தேன நாராயண: ஸ்ம்ருத: || (மனு ஸ்ம்ருதி 1.10)

மனு ஸ்ம்ருதியில் கூறப்பட்டுள்ளது: நரனான பகவானிடமிருந்து உருவானதால் தண்ணீருக்கு ‘நாரம்’ என்று பெயர். அந்த நாரத்தையே தனது இருப்பிடமாகக் கொண்டுள்ளதால், பகவான் ‘நாராயணன்’ என்று அழைக்கப்படுகிறார்.

நாராயணாய நம இத்யயமேவ ஸத்ய:

ஸம்ஸாரகோரவிஶஸஹரணாய மந்த்ர: |

ஶ்ருண்வந்துமவ்யமதயோ யதயோSஸ்தராகா

உச்சைஸ்தராமுபதிஶாம்யஹமூர்த்த்வபாஹு: || (நரஸிம்ஹ புராணம்)

நரஸிம்ஹ புராணத்தில் கூறப்பட்டுள்ளது: ஓ நல்லறிவு கொண்டோரே!!! பற்றுதலற்ற துறவிகளே!!! நீங்கள் கேளுங்கள். நான் என் கைகளை உயர்த்தி உரத்த குரலில் உங்களுக்கு அறிவுறுத்துகிறேன். ‘நாராயணாய நம:’ என்னும் இந்த மந்திரமே (அனைத்திலும் சிறந்த) உண்மையாகும். இந்தப் பிறவியென்னும் கொடிய நஞ்சினை அழிக்க வல்லதாகும்.

இதி நாரஸிம்ஹ புராணே | இவ்வாறு நரஸிம்ஹ புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

———–

246.ஓம் நராய நம:

நயதீதி நர: ப்ரோக்த: பரமாத்மா ஸனாதன: |

அனைவரையும் (நற்பேற்றுக்கு) வழிநடத்தி அழைத்துச் செல்வதால், என்றும் உள்ள அந்த பரமாத்மா ‘நரன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இதி வ்யாஸ வசனம் ஸ்ரீவ்யாஸரின் இந்தக் கூற்றின்படி பகவான் ‘நரன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———————

  1. அஸங்க்யேயோSப்ரமேயாத்மா விஶிஶ்ட ஶிஶ்டக்ருத் ஶுசி: |

ஸித்தார்த்த: ஸித்தஸங்கல்ப: ஸித்தித: ஸித்திஸாதன: || 

இந்த இருபத்தி ஏழாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. அஸங்க்யேய:, 248. அப்ரமேயாத்மா, 249. விஶிஶ்ட:, 250. ஶிஶ்டக்ருத், 251. ஶுசி:|
  2. ஸித்தார்த்த:, 253. ஸித்தஸங்கல்ப:, 254. ஸித்தித:, 255. ஸித்திஸாதன:  ||

—————

  1. ஓம் அஸங்க்யேயாய நம:

யஸ்மின் எவரிடம் (பகவானிடம்)

ஸங்க்யா நாம ரூப பேதாதி: ‘ஸங்க்யா’ அதாவது பெயர் (நாம), உருவம் (ரூப) முதலிய வேறுபாடுகள்

ந வித்யத இதி காணப்படுவதில்லையோ

அஸங்க்யேய: எனவே, பகவான் ‘அஸங்க்யேய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ஸங்க்யா’ என்றால் எண்ணிக்கை என்று பொருள். உலகில் அனைத்தையும் நாம் பெயர் (நாமம்) மற்றும் உருவத்தாலேயே (ரூபம்) வேறுபடுத்துகிறோம். பகவானிடம் இத்தகைய நாம, ரூப வேறுபாடுகள் இல்லையாதலால், பகவான் ‘அஸங்க்யேய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————–

  1. ஓம் அப்ரமேயாத்மனே நம:

அப்ரமேய புலன்கள் மற்றும் மனதால் இன்னதென்று உணர்ந்தறியமுடியாத

ஆத்மா ஸ்வரூபமஸ்யேதி ஆத்மா, (அவரது இயற்கையான உருவம்) உடையவர் ஆதலால்

அப்ரமேயாத்மா பகவான் ‘அப்ரமேயாத்மா’  என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானின் ஆத்மாவின் தன்மையை (அல்லது அவரது இயற்கையான உருவத்தை) நமது புலன்கள் மற்றும் மனதால் இன்னதென்று உணர்ந்தறிய இயலாது. எனவே, பகவான் ‘அப்ரமேயாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———————–

  1. ஓம் விஶிஶ்டாய நம:

அதிஶேதே விஞ்சியவர்

ஸர்வமதோ அனைத்தையும் (அனைவரையும்)

விஶிஶ்ட: (எனவே) பகவான் ‘விஶிஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் (அறிவு, பலம், செல்வம், வீரம் முதலிய) அனைத்திலும், அனைவரையும் (அனைத்தையும்) விஞ்சியிருப்பதால் அவர் ‘விஶிஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———

  1. ஓம் ஶிஶ்டக்ருதே நம:

ஶிஶ்டம் ஶாஸனம் ‘ஶிஶ்டம்’ என்றால் ஆணையிடுதல் அல்லது ஆள்வது என்று பொருள்

தத் கரோதீதி அதை புரிவதால் (அனைவரையும் ஆணையிட்டு ஆள்வதால்)

ஶிஶ்டக்ருத் பகவான் ‘ஶிஶ்டக்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்தையும் (அனைவரையும்) ஆணையிடுபவராய் (ஆணையிட்டு ஆள்பவராய்) இருப்பதால், பகவான் ‘ஶிஶ்டக்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஶிஶ்டான் தனது அடியவர்களை

கரோதி பாலயதீதி வா காக்கிறார் (கரோதி என்றால் காப்பது என்றும் பொருள்)

ஶிஶ்டக்ருத் எனவே, பகவான் ‘ஶிஶ்டக்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தனது அடியவர்களை (ஶிஶ்டர்களை) காக்கிறார். எனவே, அவர் ‘ஶிஶ்டக்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஶிஶ்ட – அடியவர்கள் + கரோதி – காப்பது = ஶிஶ்டக்ருத்

ஸாமான்யவசனோ தாதுர்விஶேஶவசனோ த்ருஶ்ட:  குரு காஶ்டானீத்யாஹரனே யதா, தத்விதிதி வா ஶிஶ்டக்ருத் |

பொதுவான பொருளை விடுத்து சிறப்புப் பொருளை குறிப்பதற்கு இங்கு ‘க்ரு’ என்ற வேர்ச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. “குரு காஶ்டானி” என்ற வாக்கியத்தில் ‘க்ரு’ என்ற வேர்ச்சொல் ‘எடுத்துச் செல்லுதல், கொண்டு செல்லுதல்’ என்ற பொருளில் உபயோகப் படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறே இங்கும் ‘க்ரு’ என்ற வேர்ச்சொல் இந்த திருநாமத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

———————-

  1. ஓம் ஸித்தார்த்தாய நம:

ஸித்தோ நிர்வ்ருத்த: முழுமையடைகின்றன (ஸித்த:)

அர்த்த்யமானோSர்த்தோSஸ்யேதி அவர் விரும்பிய அனைத்தும் அடையப்பெறுவதனால்

ஸித்தார்த்த: பகவான் ‘ஸித்தார்த்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தான் விரும்பிய அனைத்தும் அடையப்பெறுகிறார். எனவே, அவர் ‘ஸித்தார்த்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ஸத்யகாம:’ (சாந்தோக்ய உபநிஶத் 8.7.1)

சாந்தோக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: விரும்பிய அனைத்தையும் அடைகிறார். 

————-

  1. ஓம் ஸித்தஸங்கல்பாய நம:

ஸித்தோ நிஶ்பன்ன: பூர்த்தியாகிறது (ஸித்த:)

ஸங்கல்போSஸ்யேதி அவரது எண்ணங்களும், முடிவுகளும்

ஸித்தஸங்கல்ப: எனவே, பகவான் ‘ஸித்தஸங்கல்ப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானின் எண்ணங்களும், தீர்மானங்களும் (முடிவுகளும்) எப்பொழுதும் பூர்த்தியாகிறது. எனவே, அவர் ‘ஸித்தஸங்கல்ப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ஸத்யஸங்கல்ப:’ (சாந்தோக்ய உபநிஶத் 8.7.1)

சாந்தோக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: அனைத்து எண்ணங்களும் ஈடேறப்பெறுகிறார்.

முன் திருநாமத்தில் (ஸித்தார்த்த:) விரும்பிய பொருளை அடைபவர் என்று பொருள் கொள்ளவேண்டும். இந்த திருநாமத்தில் (ஸித்தஸங்கல்ப:) தனது அனைத்து எண்ணங்களும் ஈடேறப்பெறுபவர் என்று பொருள் கொள்ள வேண்டும். 

———

  1. ஓம் ஸித்திதாய நம:

ஸித்திம் ஃபலம் பலன்களை (ஸித்தி)

கர்த்ருப்ய: செயல் புரிபவர்களுக்கு

ஸ்வாதிகாரானுரூபதோ (ஸ்வ அதிகாரான் அனுரூபதோ) அவரவரது செயல்களுக்குத் தக்கவாறு

ததாதீதி அளிப்பதால்

ஸித்தித: பகவான் ‘ஸித்தித:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் ஒவ்வொருவருக்கும், அவர்களது செயல்களுக்குத் தக்க பலன்களை அளிக்கிறார். எனவே, அவர் ‘ஸித்தித:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———-

  1. ஓம் ஸித்திஸாதனாய நம:

ஸித்தே: க்ரியாயா: ‘ஸித்தி’ என்றால் செயல் (க்ரியா)

ஸாதகத்வாத் அதை புரிபவராகவும், அதைப் புரிபவர்களுக்கு உதவுபவராகவும் இருப்பதால்

ஸித்திஸாதன: பகவான் ‘ஸித்திஸாதன:’ என்ற திரு நாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் ‘ஸித்தியை’ (அதாவது செயல்களைப்) புரிகிறார். செயல்களைப் புரிபவர்களுக்கு (அவர்களைத் தூண்டி) உதவுபவராகவும் இருக்கிறார். எனவே, அவர் ‘ஸித்திஸாதன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பொதுவாக ஸாதனம் என்றால் கருவி, வழி என்று பல பொருள்கள் உண்டு. இங்கு, பகவான் ஸித்திக்கு (செயல்களுக்கு) ஸாதனமாய் இருக்கிறார் என்று பொருள்.

———

  1. வ்ருஶாஹீ வ்ருஶபோ விஶ்ணுர் வ்ருஶபர்வா வ்ருஶோதர: | 

வர்த்தனோ வர்த்தமானஸ்ச விவிக்த: ஶ்ருதிஸாகர: || 

இந்த இருபத்தி எட்டாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. வ்ருஶாஹீ, 257. வ்ருஶப:, 258. விஶ்ணு:, 259. வ்ருஶபர்வா, 260. வ்ருஶோதர: |
  2. வர்த்தன:, 262. வர்த்தமான:, 263. விவிக்த:, 264. ஶ்ருதிஸாகர: ||
  1. ஓம் வ்ருஶாஹிணே நம:

வ்ருஶோ தர்ம: புண்யம் ‘வ்ருஶ’ என்றால் தர்மம் (அறம்) அல்லது நற்கருமம் (புண்யம்) என்று பொருள்

ததேவாஹ: அவரே (இந்த அறம், மற்றும் நற்கரும வடிவான பகவானே) ‘அஹ’ என்றழைக்கப்படும் பகலாக இருக்கிறார்

ப்ரகாஶஸாதர்ம்யாத் ஒளி வடிவானவராய் இருப்பதால் (பகவான் பகலுக்கு ஸமமானவர்)

வ்ருஶாஹீ எனவே, பகவான் ‘வ்ருஶாஹீ’ என்ற திருநாமத்தால் அழைக்கபடுகிறார்.

பகவான் அறம் மற்றும் நற்கரும (வ்ருஶ) வடிவினராய் இருக்கிறார். ஒளிபடைத்தவராய் இருப்பதால் அவரே பகலாகவும் இருக்கிறார் (அஹி). எனவே, பகவான் ‘வ்ருஶாஹீ’ (வ்ருஶ + அஹி) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

த்வாதஶாஹப்ரப்ருதிர்வ்ருஶாஹ: பன்னிரு வேள்விகள் ‘வ்ருஶாஹ’ என்று அழைக்கப்படுகின்றன

ஸோSஸ்யாஸ்தீதி அவை (அந்த பன்னிரு வேள்விகள்) பகவானிடமே நிலைபெற்றிருக்கின்றன

வ்ருஶாஹீ எனவே, பகவான் ‘வ்ருஶாஹீ’ என்ற திருநாமத்தால் அழைக்கபடுகிறார்.

பன்னிரு வேள்விகள் ‘வ்ருஶாஹ:’ என்று அழைக்கப்படுகின்றன. அவை அனைத்தும் பகவானிடமே நிலைப்பெற்றிருக்கின்றன. எனவே, பகவான் ‘வ்ருஶாஹீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ராஜாஹ: ஸகிப்யஶ்டச்’ (பாணினி சூத்ரம் 5.4.91)

பாணினி ஸூத்திரத்தில் கூறப்பட்டுள்ளது:

ராஜா, அஹி, ஸகி முதலிய சொற்கள் ஒரு ‘தத்புருஶ’ சொற்றொடரின் பின் வரும்பொழுது அதனுடன் ‘டச்’ என்ற விகுதி சேர்க்கப்படுகிறது. 

இதி டச் ப்ரத்யய: ஸமாஸாந்த: |

பாணினி ஸூத்ரத்தின் படி ‘வ்ருஶாஹ’ என்ற சொல்லின் இறுதியில் ‘டச்’ விகுதி சேர்க்கப்பட்டுள்ளது.

———-

  1. ஓம் வ்ருஶபாய நம:

வர்ஶத்யேஶ மழைப்போல பொழிகிறார்

பக்தேப்ய: பக்தர்களின்

காமானிதி விருப்பங்களை

வ்ருஶப: எனவே பகவான் ‘வ்ருஶப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் பக்தர்களுக்கு, அவர்கள் விரும்புவதை மழை போன்று பொழிகிறார். எனவே, அவர் ‘வ்ருஶப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———-

  1. ஓம் விஶ்ணவே நம:

விஶ்ணு: பகவான் ‘விஶ்ணு’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘விஶ்ணுர்விக்ரமனாத்’ (மஹாபாரதம் உத்யோக பர்வம் 70.13)

எங்கும் பரந்திருக்கும் தனது இயல்பினால் (எங்கும் வ்யாபித்துள்ளதால்) அவர் விஶ்ணு என்று அழைக்கப்படுகிறார்.

இதி வ்யாஸோக்தே: ஸ்ரீவ்யாஸரின் இந்தக் கூற்றின்படி (பகவான் ‘விஶ்ணு’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்).

எங்கும் பரந்திருக்கும் தனது இயல்பினால் (எங்கும் வ்யாபித்துள்ளதால்) அவர் விஶ்ணு என்று அழைக்கப்படுகிறார் என்ற ஸ்ரீவ்யாஸரின் கூற்றின்படி பகவான் ‘விஶ்ணு’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———-

  1. ஓம் வ்ருஶபர்வணே நம:

வ்ருஶரூபாணி அறமே வடிவானதாய்

ஸோபானபர்வான்யாஹு: படிக்கட்டுகள் (பர்வா என்றால் படிக்கட்டு) கூறப்பட்டுள்ளன

பரம் தாம பரமபதமான பகவானின் இருப்பிடத்தை

ஆருருக்ஷோர் ஏறிச் செல்வதற்கு

இத்யதோ வ்ருஶபர்வா எனவே, பகவான் ‘வ்ருஶபர்வா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானின் பரமபதமான இருப்பிடத்தை அடைய அறமே வடிவான படிக்கட்டுக்கள் அமைக்கப்பட்டுள்ளன (வேதங்கள் ‘வர்ணாஸ்ரம தர்மமான’ இந்தப் படிக்கட்டுக்களைப் பற்றி விளக்குகின்றன). எனவே, பகவான் ‘வ்ருஶபர்வா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———-

  1. ஓம் வ்ருஶோதராய நம:

ப்ரஜா (ப்ரஜைகளான) அனைத்துயிர்களையும்

வர்ஶதீவ மழை பொழியுமா போல பிறப்பிக்கிறார்

உதரமஸ்யேதி தனது வயிற்றிலிருந்து

வ்ருஶோதர: எனவே, பகவான் ‘வ்ருஶோதர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தனது வயிற்றிலிருந்து அனைத்து உயிர்களையும் மழையானது நீரைப் பொழிவது போல உருவாக்குகிறார் (பிறப்பிக்கிறார்). எனவே, அவர் ‘வ்ருஶோதர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————–

  1. ஓம் வர்த்தனாய நம:

வர்த்தயதீதி (அனைவரையும், அனைத்து உயிரினங்களையும்) ஊட்டமளித்து வளர்க்கிறார்

வர்த்தன: எனவே, பகவான் ‘வர்த்தன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் அனைத்து உயிரினங்களையும் (அனைவரையும்) ஊட்டமளித்து வளர்க்கிறார். எனவே அவர் ‘வர்த்தன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———

  1. ஓம் வர்த்தமானாய நம:

ப்ரபஞ்ச ரூபேண இந்த ப்ரபஞ்சத்தின் வடிவில்

வர்தத இதி (அனைத்து திசைகளிலும், அனைத்து பரிமாணங்களிலும்) வளர்கிறார்

வர்த்தமான: எனவே, பகவான் ‘வர்த்தமான:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான், இந்தப் ப்ரபஞ்சத்தின் வடிவில் அனைத்து திசைகளிலும், அனைத்துப் பரிமாணங்களிலும் முடிவின்றி வளர்கிறார். எனவே, அவர் ‘வர்த்தமான:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———–

  1. ஓம் விவிக்தாய நம:

இத்தம் வர்த்தமானோSபி பகவான் இவ்வாறு (ப்ரபஞ்சமாய்) வளர்ந்தாலும்

ப்ருதகேவ திஶ்டதீதி தான் எதனுடனும் கலவாது தனித்தே இருக்கிறார்

விவிக்த: எனவே, அவர் ‘விவிக்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் அனைத்தையும் படைத்து, அனைத்துமாய் வ்யாபித்து, இந்தப் ப்ரபஞ்சமாகவே விரிந்து வளர்ந்தாலும், தான் எதனுடனும் கலவாது தனித்து இருக்கிறார். எனவே, அவர் ‘விவிக்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

விவிக்த: என்றால் தனித்திருப்பவர் என்று பொருள்.

———–

  1. ஓம் ஶ்ருதிஸாகராய நம:

ஶ்ருதய: ஶ்ருதிகள் (வேதங்கள்)

ஸாகர கடலுக்குள்ளே

இவாத்ர நிதீயந்தே எவ்வாறு செல்வக்குவியல்கள் (முத்துக்களும், பவளங்களும்) நிறைந்திருக்குமோ

இதி (அவ்வாறு வேதங்கள் பகவான் என்னும் கடலுக்குள் இருக்கின்றன) எனவே,

ஶ்ருதிஸாகர: பகவான் ‘ஶ்ருதிஸாகர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கடலுக்குள் முத்துக்கள், பவளங்கள் போன்ற செல்வக்குவியல்கள் நிறைந்துள்ளன. அதுபோன்றே, பகவான் என்னும் கடலுக்குள் வேதங்கள் என்னும் செல்வக்குவியல் நிறைந்துள்ளது. எனவே, பகவான் ‘ஶ்ருதிஸாகர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———–

  1. ஸுபுஜோ துர்த்தரோ வாக்மீ மஹேந்த்ரோ வஸுதோ வஸு:| 

நைகரூபோ ப்ருஹத்ரூப: ஶிபிவிஶ்ட: ப்ரகாஶன: ||

இந்த இருபத்தி ஒன்பதாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. ஸுபுஜ:, 266.துர்த்தர:, 267. வாக்மீ, 268. மஹேந்த்ர:, 269. வஸுத:, 270. வஸு: |
  2. நைகரூப:, 272.ப்ருஹத்ரூப:, 273. ஶிபிவிஶ்ட:, 274. ப்ரகாஶன: ||

—

  1. ஓம் ஸுபுஜாய நம:

ஶோபனா நன்மை தருவதான (அழகான)

புஜா திருத்தோள்களை கொண்டிருக்கிறார்

ஜகத்ரக்ஷகரா: உலகத்தை (உலகத்தோரை) காப்பதற்காக

அஸ்யேதி ஸுபுஜ: எனவே, பகவான் ‘ஸுபுஜ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்த உலகத்தையும், உலகத்தோரையும் காப்பதற்காக நன்மை தருவதான, அழகான திருத்தோள்களைக் கொண்டிருப்பதால் பகவான் ‘ஸுபுஜ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஶோபனம் என்றால் காந்தி (ஒளி), நன்மை, அழகு, அலங்காரம், அணிகலன் என்று பல பொருள்கள் உண்டு. இவை அனைத்துமே பகவானின் தோள்களுக்குப் பொருந்தும்.

———

  1. ஓம் துர்த்தராய நம:

ப்ருதிவ்யாதீனபி இந்த பூமி முதலான

லோகதாரகான்யன்யைர் அனைவரையும் தாங்கக்கூடிய

தாரயிதுமஶக்யானி பிறரால் தாங்குவதற்கு கடினமானவற்றையும்

தாரயன் தாங்குகிறார்

ந கேனசித் தாரயிதும் ஷக்ய இதி ஆனால், ஒரு பொழுதும் தான் பிறரால் தாங்க இயலாதவராய் இருப்பதால்

துர்த்தர: பகவான் ‘துர்த்தர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான், அனைத்தையும் தாங்கக் கூடியதானதும், பிறரால் தாங்குதற்குக் கடினமானதுமான பூமி முதலியவற்றைத் தாங்குகிறார். ஆனால், ஒரு பொழுதும் பிறரால் தாங்க இயலாதவராய் இருக்கிறார். எனவே, அவர் ‘துர்த்தர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

து:கேன கடினமானது

த்யானஸமயே த்யானிக்கும் பொழுது

முமுக்ஷுபிர் முக்தியை விழைபவர்கள்

ஹ்ருதயே (தங்கள்) மனத்தினுள்

தாரயத இதி (பகவானின் உருவத்தை) தாங்குவதற்கு

துர்த்தர: எனவே, பகவான் ‘துர்த்தர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

முக்தியை விழைபவர்கள், த்யானிக்கும் பொழுது பகவானின் உருவத்தை தத்தம் மனத்தினுள் தாங்குவது மிகக் கடினமானது. எனவே, அவர் ‘துர்த்தர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

து: என்றால் கடினமானது. தர என்றால் தாங்குவது. பகவான் கடினமானவற்றை எளிதில் தாங்குகிறார். அவரை பிறர் தாங்குவது இயலாது. த்யானத்தின் பொழுதும் அவரது உருவத்தை நம் மனத்தினுள் அவ்வளவு எளிதில் தாங்கி விட முடியாது. இவ்வாறு, பல காரணங்களினால் பகவான் ‘துர்த்தர:’

———

  1. ஓம் வாக்மினே நம:

யதோ நி:ஸ்ருதா எவரிடமிருந்து தோன்றினவோ

ப்ரஹ்மமயீ வாக் (பரப்ரஹ்மமே சொல் வடிவாய் இருக்கும்) வேதங்கள்

தஸ்மாத் பகவான்

வாக்மீ ‘வாக்மீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானிடமிருந்தே வேதங்கள் தோன்றின. எனவே, அவர் ‘வாக்மீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

  1. ஓம் மஹேந்த்ராய நம:

மஹாம்ஸ்சாஸாவிந்தரஸ்சேதி மிகச்சிறந்த (மிகவும் பெரிய) இந்திரன்

மஹேந்த்ர: பகவான் ‘மஹேந்த்ர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார் 

ஈஶ்வரானாமபி ஈஶ்வர: அனைத்து ஈஸ்வரர்களுக்கும் ஈஸ்வரர்.

மிகச்சிறந்த (மிகவும் பெரிய) இந்திரன் ஆதலால், பகவான் ‘மஹேந்த்ர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். இந்தப் ப்ரபஞ்சத்தில் சக்தி படைத்த ஈஸ்வரர்கள் (ஆளுநர்கள்) பலர் உள்ளனர். அவர்கள் அனைவரையும் ஆளும் ஈஸ்வரனாக பகவான் இருக்கிறார் என்று இதற்குப் பொருள்.

————

  1. ஓம் வஸுதாய நம:

வஸு தனம் வஸு என்றால் செல்வம் என்று பொருள்

ததாதீதி (செல்வத்தை) அனைவருக்கும் அளிப்பதால்

வஸுத: பகவான் ‘வஸுத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைவருக்கும் செல்வத்தை (வஸுவை) அளிக்கிறார் (ததா). எனவே, பகவான் ‘வஸுத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்த இரு (268, 269) திருநாமங்களையும் இணைத்துப் பார்க்கும் பொழுது, நமக்கு செல்வத்தை அளிக்கும் பல ஈஸ்வரர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கும் செல்வத்தை பகவானே அளிக்கிறார் (வஸுத:). எனவே, அவர் அந்த ஈஸ்வரர்களுக்கும் ஈஸ்வரராக இருக்கிறார் (மஹேந்த்ர:) என்று பொருள் கொள்ளலாம்.

————–

270. ஓம் வஸவே நம:

தீயமானம் கொடுக்கப்படும்

தத் வஸ்வபி அந்த செல்வமாக

ஸ ஏவேதி வா அவராகவே இருப்பதால்

வஸு: பகவான் ‘வஸு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அவ்வாறு பிறருக்கு அளிக்கப்படும் செல்வமும் பகவானன்றி வேறொன்றுமில்லை. அந்த செல்வமாகவும் தானே இருப்பதால், பகவான் ‘வஸு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஆச்சாதயத் மறைத்துக் கொள்கிறார்

ஆத்மஸ்வரூபம் தனது இயற்கையான உருவத்தை

மாயயேதி வா மாயையினால்

வஸு: எனவே, பகவான் ‘வஸு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான், மாயையினால் தனது இயற்கையான உருவத்தை பிறரிடமிருந்து மறைத்துக் கொள்கிறார். எனவே, அவர் ‘வஸு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அந்தரிக்ஷ ஏவ ஆகாயத்தில் மட்டுமே

வஸதி வசிக்கிறார்

நான்யத்ரேதி வேறெங்கும் (வசிப்பதில்லை)

அஸாதாரணேன வசனேன இவ்வாறு தனிச்சிறப்புடைய

வஸனேன இருப்பிடத்தை கொண்டிருப்பதால்

வாயுர்வா வஸு: காற்றிற்கு (வாயு பகவானிற்கு) ‘வஸு’ என்று பெயர் (அவரது உள்ளுறை ஆத்மாவாக – அந்தர்யாமியாக இருப்பதால் பகவான் ‘வஸு’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வாயு பகவான் ஆகாயத்தில் மட்டுமே வசிக்கிறார். வேறெங்கும் வசிப்பதில்லை. இவ்வாறு, தனிச்சிறப்புடைய இருப்பிடத்தைக் கொண்டிருப்பதால் அவருக்கு ‘வஸு’ என்று பெயர். அந்த வாயு பகவானிற்கும் உள்ளுறை ஆத்மாவாக (அந்தராத்மாவாக) இருப்பதால் பகவான் ‘வஸு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘வஸுரந்தரிக்ஷஸத்’ (கடோபநிஶத் 2.5.2)

கடோபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: ‘ஆகாயத்தில் வசிப்பவர் வஸு’

————-

271. ஓம் நைகரூபாய நம:

ஏகம் ரூபமஸ்ய ஓரு குறிப்பிட்ட உருவம் என்பதை

ந வித்யத இதி அவர் ஏற்பதில்லை

நைகரூப: எனவே, பகவான் ‘நைகரூப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் ஒரு குறிப்பிட்ட உருவம் என்று ஏற்றுக்கொள்வதில்லை. எனவே, அவர் ‘நைகரூப:’ (பல உருவங்கள் கொண்டவர்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நைகரூப: என்பதை ந + ஏக + ரூப: என்ற பிரிக்கவேண்டும். ஒரு உருவம் கிடையாது என்பது இதன் பொருள். அத்வைதத்தின் படி, பரப்ரஹ்மம் எந்த ஒரு உருவமும் அற்றவர். மாயையின் வசப்பட்டே அவருக்கு உருவம் உள்ளதாக நாம் கற்பித்துக் கொள்கிறோம்.

விஶிஶ்டாத்வைதத்தில், பகவானுக்கு பல்வேறு உருவங்கள் உண்டு. அவை அனைத்தும் உண்மையே. எனவேதான், அவருக்கு “ந ஏக ரூப:” என்ற திருநாமம் பொருந்தும் என்று பொருள் கூறுவர். பல்வேறு உருவங்கள் இருப்பதால், ஒரு உருவத்தை மட்டும் அவரது உருவம் என்று கொள்ளலாகாது என்பது இதன் பொருள்.

‘இந்த்ரோ மாயாபி: புருரூப ஈயதே’ (ப்ருஹதாரண்யக உபநிஶத் 2.5.19)

ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: அந்தக் கடவுளானவர் (பரப்ரஹ்மம்) மாயையினால் பல்வேறு உருவங்கள் கொள்வதாக உணரப்படுகிறார்.

இதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

‘ஜ்யோதீம்ஶி விஶ்ணு:’ (விஶ்ணு புராணம் 2.12.37)

விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: அனைத்து ஒளிகளும் விஶ்ணுவே.

இத்யாதிஸ்ம்ருதேஸ்ச | இத்தகைய ஸ்ம்ருதிகளும் இதே கருத்தை வலியுறுத்துகின்றன.

———–

272 ஓம் ப்ருஹத்ரூபாய நம:

ப்ருஹன்மத் மிகப்பெரிய

வராஹாதிரூபமஸ்யேதி வராஹம் முதலிய பல்வேறு உருவங்களை எடுப்பதால்

ப்ருஹத்ரூப: பகவான் ‘ப்ருஹத்ரூப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான், வராஹம் முதலிய அவதாரங்களை எடுக்கும் பொழுது மிகப்பெரிய திருமேனியை (உருவத்தை) ஏற்கிறார். எனவே, அவர் ‘ப்ருஹத்ரூப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———

273- ஓம் ஶிபிவிஶ்டாய நம:

ஶிபய: பஶவ: ‘ஶிபி’ என்றால் மிருகங்கள் என்று பொருள்

தேஶு விஶதி ப்ரதிதிஶ்டதி அவற்றில் நிலைகொண்டுள்ளார் (விஶதி என்றால் நிலைபெற்றிருத்தல் என்று பொருள்)

யஞ்யரூபேணேதி வேள்வியின் வடிவில்

ஶிபிவிஶ்ட: யஞ்யமூர்த்தி: எனவே, வேள்வியின் வடிவினரான பகவான் ‘ஶிபிவிஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வேள்வியின் வடிவினரான பகவான், அந்த வேள்வியில் ஆகுதியாகக் கொடுக்கப்படும் மிருகங்களுக்குள் வேள்வியின் பொருட்டு நிலைபெற்றுள்ளார். எனவே, அவர் ‘ஶிபிவிஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘யக்ஞோ வை விஶ்ணு: பஶவ: ஶிபிர்யஞ்ய ஏவ பஶுஶு ப்ரதிதிஶ்டதி’ (தைத்த்ரீய ஸம்ஹிதை 1.7.5)

தைத்த்ரீய ஸம்ஹிதையில் கூறப்பட்டுள்ளது: விஶ்ணுவே வேள்வியாவார். அந்த வேள்வியில் ஆகுதி கொடுக்கப்படும் மிருகங்களுள் வேள்வியே நிலைபெற்றுள்ளது.

விஶ்ணுவே வேள்வியாதலால், அந்த யாக மிருகங்களில் அவரே நிலைபெற்றுள்ளார் என்பது இதன் பொருள்.

இதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

ஶிபயோ ரஶ்மயஸ்தேஶு ‘ஶிபி’ என்றால் கிரணங்கள் என்றும் பொருள்

நிவிஶ்ட இதி வா அவற்றுள் உறைவதால்

ஶிபிவிஶ்ட: பகவான் ‘ஶிபிவிஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஶிபி என்றால் கிரணங்கள் என்றும் பொருள். கதிரவன் மற்றும் வெண்மதியின் கிரணங்களில் உள்ளுறைந்து இருப்பதால் பகவான் ‘ஶிபிவிஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஶைத்யாச்சயனயோகாஸ்ச ஶீதீ வாரி ப்ரசக்ஷதே |

தத்பானாத்ரக்ஷணாஸ்சைவ ஶிபயோ ரஶ்மயோ மதா: ||

தேஶு ப்ரவேஶாத்விஶ்வேஶ: ஶிபிவிஶ்ட இஹோச்யதே |

குளிர்ச்சியாய் இருப்பதாலும், பகவான் அதில் துயில்கொள்வதாலும், நீரை ‘ஶி’ என்று அழைப்பார்கள். அதை (கதிரவனின் கிரணங்கள்) பருகுவதாலும், (வெண்மதியின் கிரணங்கள்) பாதுகாப்பதாலும், (கதிரவன் மற்றும் வெண்மதியின்) கிரணங்களை ‘ஶிபி’ என்று அழைப்பர். அந்த கிரணங்களுள் (ஶிபிக்குள்) பிரவேசித்து உள்ளுறைவதால் விஶ்வேஶ்வரரான பகவான் ‘ஶிபிவிஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———

274- ஓம் ப்ரகாஶனாய நம:

ஸர்வேஶாம் அனைத்தையும்

ப்ரகாஶனஶீலத்வாத் ஒளிவிடச் செய்வதால்

ப்ரகாஶன: பகவான் ‘ப்ரகாஶன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானே அனைத்தையும் ஒளியூட்டுகிறார். நமக்கு ஒளியை வழங்கும் கதிரவன், வெண்மதி, தீ போன்ற அனைத்துமே பகவானிடமிருந்தே தத்தம் ஒளியைப் பெறுகின்றன. எனவே, பகவான் ‘ப்ரகாஶன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———

30-ஓஜஸ்தேஜோத்யுதிதர: ப்ரகாஶாத்மா ப்ரதாபன:| 

ருத்த: ஸ்பஶ்டாக்ஷரோ மந்த்ரஸ்சந்த்ராம்ஶுர்பாஸ்கரத்யுதி: ||

இந்த முப்பதாவது ஸ்லோகத்தில் 8 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. ஒஜஸ்தேஜோத்யுதிதர:, 276. ப்ரகாஶாத்மா, 277. ப்ரதாபன: |
  2. ருத்த:, 279. ஸ்பஶ்டாக்ஷர:, 280. மந்த்ர:, 281. சந்த்ராம்ஶு:, 282. பாஸ்கரத்யுதி: ||

——-

275- ஓம் ஒஜஸ்தேஜோத்யுதிதராய நம:

ஓஜ: ப்ராணபலம் ‘ஓஜஸ்’ என்றால் ப்ராணன் மற்றும் பலத்தைக் குறிக்கும்

தேஜ: ஶௌர்யாதயோ குணா: ‘தேஜஸ்’ என்றால் சூரத்தனம் முதலிய குணங்களைக் குறிக்கும்

த்யுதிர்தீப்தி: ‘த்யுதி’ என்றால் ஒளியைக் குறிக்கும்

தா: தாரயதீதி இவை அனைத்தையும் தன்னுள் கொண்டிருப்பதால்

ஒஜஸ்தேஜோத்யுதிதர: பகவான் ‘ஒஜஸ்தேஜோத்யுதிதர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தன்னுள் ‘ஓஜஸ்’ என்றழைக்கப்படும் ப்ராண சக்தி, பலம், ‘தேஜஸ்’ என்றழைக்கப்படும் சூரத்தனம் முதலிய குணங்கள் ‘த்யுதி’ என்றழைக்கப்படும் ஒளி ஆகிய அனைத்தையும் ஒருங்கே கொண்டுள்ளார். எனவே, அவர் ‘ஒஜஸ்தேஜோத்யுதிதர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அதவா, அல்லது

ஒஜஸ்தேஜ இதி நாமத்வயம் ‘ஒஜஸ்’ மற்றும் ‘தேஜஸ்’ என்று இரண்டு நாமங்களாய்ப் பிரித்தால்,

‘பலம் பலவதா சாஹம்’ (ஸ்ரீ பகவத்கீதை 7.11)

ஸ்ரீமத் பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது: வல்லோரிடத்தே விருப்பமும் விழைவுந்தீர்ந்த வலிமை நான்.

‘தேஜஸ்தேஜஸ்வினாமஹம்’ (ஸ்ரீ பகவத்கீதை 7.10)

ஸ்ரீமத் பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது: ஒளியுடையோரின் ஒளி நான்.

இதி பகவத்வசனாத் | இவ்வாறு, பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஸ்ரீமத் பகவத்கீதையில் கூறியுள்ளபடி அவர் பலவான்களுக்குள் பலமாகவும், ஒளிபொருந்தியோருள் ஒளியாகவும் இருக்கிறார் (எனவே, ‘ஓஜஸ்தேஜ:’ என்று அழைக்கப்படுகிறார்).

த்யுதிம் ஞானலக்ஷணாம் தீப்திம் ‘த்யுதி’ என்றால் ஞானத்தினால் விளையும் அறிவொளியாகும்

தாரயதீதி அந்த ஞான ஒளியாக விளங்குவதால் (ஞான ஒளியைத் தன்னுள் தாங்குவதால்)

த்யுதிதர: பகவான் ‘த்யுதிதர:’ திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘த்யுதி’ என்றால் ஞானத்தினால் விளையும் அறிவொளியாகும் அந்த ஞான ஒளியாக விளங்குவதால் (ஞான ஒளியைத் தன்னுள் தாங்குவதால்), பகவான் ‘த்யுதிதர:’ திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்த திருநாமத்தை பிரித்துப் பொருளுரைத்திருந்தாலும், ஆதிசங்கரர் தனது முதல் விளக்கமான ‘ஓஜஸ்தேஜோத்யுதிதர:’ என்பதையே பிரதானமான விளக்கமாகக் கொண்டுள்ளார். ஆயிரம் திருநாமக் கணக்கில், இது ஒரே திருநாமமாகத்தான் கணக்கிடப்பட்டுள்ளது.

———–

276- ஓம் ப்ரகாஶாத்மனே நம:

ப்ரகாஶஸ்வரூப ஒளிமயமான

ஆத்மா யஸ்ய ஸ: ஆத்மாவைக் (திருமேனியைக்)​கொண்டவர் எவரோ

ப்ரகாஶாத்மா (அந்த பகவான்) ‘ப்ரகாஶாத்மா’ என்ற திரு நாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் ஒளிமயமான ஆத்மாவை (திருமேனியை) உடையவராதலால் அவர் ‘ப்ரகாஶாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

——————

277- ஓம் ப்ரதாபனாய நம:

ஸவித்ராதி கதிரவன் முதலான விபூதிபி: உருவங்களைத் தரித்து

விஶ்வம் இந்தப் ப்ரபஞ்சத்திற்கு

ப்ரதாபயதீதி வெப்பமளிப்பதால்

ப்ரதாபன: பகவான், ‘ப்ரதாபன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் கதிரவன் முதலிய உருவங்களை தரித்து, இந்தப் ப்ரபஞ்சத்திற்கு வெப்பத்தை அளிக்கிறார் (அல்லது இந்தப் ப்ரபஞ்சத்தினை வெம்மையினால் சுட்டெரிப்பதால்). எனவே, அவர் ‘ப்ரதாபன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————-

278- ஓம் ருத்தாய நம:

தர்மஞானவைராக்யாதிபிரூபேத்வாத் அறம், அறிவு, பற்றின்மை ஆகியவை நிறைந்திருப்பதால்

ருத்த: பகவான் ‘ருத்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானிடம் அறம், அறிவு, பற்றின்மை ஆகியவை நிறைந்திருப்பதால் அவர் ‘ருத்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ருத்த: என்றால் செல்வசெழிப்பு (செல்வசெழிப்புள்ளவர்) என்று பொருள். தர்மம் (அறம்), ஞானம் (அறிவு) மற்றும் வைராக்யம் (பற்றின்மை) ஆகியவையே உண்மையான செல்வங்களாகும். இவை அனைத்தும் நிறைந்திருப்பதால் பகவான் ‘ருத்த:’ என்று அழைக்கப்படுகிறார்.

———–

279- ஓம் ஸ்பஶ்டாக்ஷராய நம:

ஸ்பஶ்டம் உதாத்தம் ‘ஸ்பஶ்டம்’ என்றால் மிகத் தெளிவாக (உரக்க) என்று பொருள்

ஓம்காரலக்ஷணம் ஓம்காரமென்னும்

அக்ஷரமஸ்யேதி சொல்லால் உரைக்கப்படுகிறார் (உணர்த்தப்படுகிறார்)

ஸ்பஶ்டாக்ஷர: எனவே, பகவான் ‘ஸ்பஶ்டாக்ஷர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் ஓம்காரத்தால் (உரத்து) தெளிவாக உணர்த்தப்படுகிறார். எனவே, அவர் ‘ஸ்பஶ்டாக்ஷர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———

280. ஓம் மந்த்ராய நம:

ரிக்யஜு:ஸாமலக்ஷணோ ரிக், யஜுர், ஸாம வேதங்களின் (அவ்வேதங்களிலுள்ள மந்திரங்களின்) வடிவில் இருப்பதால்

மந்த்ர: பகவான் ‘மந்த்ர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் ரிக், யஜுர், ஸாம வேதங்களின் வடிவில் (அந்த வேதங்களில் உள்ள மந்திரங்களின் வடிவில்) இருப்பதால் அவர் ‘மந்த்ர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———–

281. ஓம் சந்த்ராம்ஶவே நம:

ஸம்ஸாரதாபதிக்மாம்ஶு இந்தப் பிறவியென்னும் கதிரவனின்

தாபதாபித வெப்பத்தினால் தாக்கப்பட்டு தவிக்கும்

சேதஸாம் மனிதர்களுக்கு

சந்த்ராம்ஶுரிவ வெண்மதியின் கிரணங்கள் எவ்வாறு மக்களை குளிர்விக்குமோ அவ்வாறே அனைவரையும் குளிர்வித்து

ஆஹ்லாதகரத்வாத் மகிழ்விப்பதால்

சந்த்ராம்ஶு பகவான் ‘சந்த்ராம்ஶு’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கதிரவனின் கதிர்களால் துன்புறுவோரை வெண்மதியானது எவ்வாறு தன் கிரணங்களால் குளிர்விக்குமோ, அவ்வாறே, இந்தப் பிறவியென்னும் கதிரவனின் வெப்பத்தால் தாக்கப்பட்டுத் துன்புறுவோரை பகவான் குளிர்வித்து மகிழ்ச்சியூட்டுகிறார். எனவே, அவர் ‘சந்த்ராம்ஶு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

திக்ம என்றால் வெப்பம். இங்கு கதிரவனைக் குறிக்கும்.

———

282. ஓம் பாஸ்கரத்யுதயே நம:

பாஸ்கரத்யுதி கதிரவனின் ஒளியை

ஸாதர்ம்யாத் ஒத்தவராய் (ஒத்த ஒளியை உடையவராய்) இருப்பதால்

பாஸ்கரத்யுதி பகவான் ‘பாஸ்கரத்யுதி’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கதிரவனை ஒத்த ஒளி படைத்தவராய் இருப்பதால் பகவான் ‘பாஸ்கரத்யுதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————-

  1. அம்ருதாமஸூத்பவோ பானு: ஶஶபிந்து: ஸுரேஶ்வர:|

ஔஶதம் ஜகதஸ் ஸேது: ஸத்யதர்மபராக்ரம: ||

இந்தமுப்பத்தொன்றாவது ஸ்லோகத்தில் 7 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. அம்ருதாம்ஸூத்பவ:, 284. பானு:, 285. ஶஶபிந்து:, 286. ஸுரேஶ்வர:|
  2. ஔஶதம், 288. ஜகதஸ்ஸேது:, 289. ஸத்யதர்மபராக்ரம:||

———–

  1. ஓம் அம்ருதாம்ஸூத்பவாய நம:

மத்யமானே கடையும்பொழுது

பயோனிதாவம்ருதாம்ஸோஸ்சந்த்ரஸ்ய பாற்கடலை அம்ருதத்தின் தன்மையைக் கொண்ட வெண்மதி

உத்பவோ தோன்றினார்

யஸ்மாத்ஸ: எவரால் (எந்த பரம்பொருளின் சக்தியால் வெண்மதி தோன்றினாரோ) அவர்

அம்ருதாம்ஸூத்பவோ அந்த பகவான், ‘அம்ருதாம்ஸூத்பவ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

(தேவர்களுக்கு அமுதம் கிடைப்பதற்காக) பாற்கடலைக் கடையும்பொழுது பகவானின் சக்தியாலேயே, அந்த பாற்கடலிலிருந்து அம்ருதத்தின் தன்மையுடன் கூடிய சந்திரன் (வெண்மதி) தொன்றினார். எனவே, பகவான் ‘அம்ருதாம்ஸூத்பவ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அம்ருத + அம்ஸு + உத்பவ: = அம்ருதாம்ஸூத்பவ:

———

284. ஓம் பானவே நம:

பாதீதி நன்றாக ஒளிவிடுவதால்

பானு: பகவான் ‘பானு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஒளி படைத்தவராக இருப்பதால் பகவான் ‘பானு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———-

285. ஓம் ஶஶபிந்தவே நம:

ஶஶ இவ முயலைப் போன்ற வடிவுடைய

பிந்துர்லாஞ்சனம் ‘பிந்து’ அதாவது குறியை

அஸ்யேதி உடையதால்

ஶஶபிந்துஸ்சந்த்ர: வெண்மதி (சந்திரன்) ஶஶபிந்து என்று அழைக்கப்படுகிறார்

தத்வத் அது போன்றே (அந்த வெண்மதியைப் போன்றே)

ப்ராஜா: அனைத்து உயிரினங்களையும்

புஶ்ணாதீதி போஶித்து வளர்ப்பதால்

ஶஶபிந்து: பகவான் ‘ஶஶபிந்து:’ என்ற திரு நாமத்தால் அழைக்கப்படுகிறார்.

முயலைப் போன்று குறியீடு இருப்பதால் வெண்மதியை (சந்திரனை) ‘ஶஶபிந்து’ என்று அழைப்பார்கள். அந்த வெண்மதியைப் (சந்திரனைப்) போன்றே அனைத்து உயிரினங்களையும் போஶித்து வளர்ப்பதால் பகவான் ‘ஶஶபிந்து:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘புஶ்ணாமி சௌஶதீ: ஸர்வா: ஸோமோ பூத்வா ரஸாத்மக:’ (ஸ்ரீமத் பகவத்கீதை 15.13)

ஸ்ரீ பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது: ரஸ வடிவமுள்ள சோமமாகி (வெண்மதி) பூண்டுகளையெல்லாம் வளர்க்கிறேன்.

இதி பகவத்வசனாத் இது (ஸ்ரீமத் பகவத் கீதையில்) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கூற்றாகும்.

————

286. ஓம் ஸுரேஶ்வராய நம:

ஸுராணாம் தேவானாம் ‘ஸுரர்’ என்றால் தேவர்கள் என்று பொருள்

ஶோபனதாத்ருணாம் (அந்த தேவர்களுக்கும் மற்றும்) அனைவருக்கும் நன்மையை அளிப்போருக்கும்

ச ஈஶ்வர: அரசராக இருப்பதால்

ஸுரேஶ்வர: பகவான் ‘ஸுரேஶ்வர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தேவர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் நன்மையை அளிப்போருக்கும் அரசராக (ஈஶ்வரனாக) இருக்கிறார். எனவே, அவர் ‘ஸுரேஶ்வர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

—————

287. ஓம் ஔஶதாய நம:

ஸம்ஸார ரோக இந்தப் பிறவியென்னும் பெரும்பிணிக்கு

பேஶஜத்வாத் மருந்தாக இருப்பதால்

ஒளஶதம் பகவான் ‘ஒளஶத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் இந்தப் பிறவியென்னும் பெரும்பிணியைத் தீர்க்கும் மருந்தாக இருக்கிறார். எனவே, அவர் ‘ஒளஶத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————-

288. ஓம் ஜகதஸ்ஸேதவே நம:

ஜகதாம் இந்த பிறவியென்னும் பெருங்கடலை

ஸமுத்தாரணஹேதுத்வாத் கடப்பதற்கு உதவி புரிபவராகவும்

அஸம்பேதகாரணத்வாத்வா ஒன்றை ஒன்று கலவாமல் பிரித்து வைப்பவராகவும்

ஸேதுவத் ஒரு பாலத்தைப் போல (பாலம் எவ்வாறு ஒரு நீர் நிலையின் இரு பக்கங்களையும் பிரிக்கிறதோ அவ்வாறே)

வர்ணாஶ்ரமாதீனாம் வர்ணாஶ்ரமங்களை

ஜகத:ஸேது: பகவான் ‘ஜகத:ஸேது:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் இந்தப் பிறவியென்னும் பெருங்கடலைத் தாண்ட உதவும் பாலமாக இருக்கிறார். மேலும், ஒரு பாலம் எவ்வாறு நீர் நிலையின் இரு பக்கங்களை பிரிக்கிறதோ அவ்வாறே பகவானும் இவ்வுலகில் வர்ணாஶ்ரம தர்மங்கள் ஒன்றுக்கொன்று கலவாமல் பிரித்து வைக்கிறார். எனவே, அவர் ‘ஜகத:ஸேது:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஏஶ ஸேதுர்விதரண ஏஶாம் லோகானாமஸம்பேதாய (ப்ருஹதாரண்யக உபநிஶத் 4.4.22)

ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: இந்த மக்களை ஒருவருக்கொருவர் கலவாத வண்ணம் (பரப்ரஹ்மம்) ஒரு பாலமாக இருக்கிறார்.

இதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

————–

289. ஓம் ஸத்யதர்மபராக்ரமாய நம:

ஸத்யா அவிததா உண்மையாகவும்

தர்மா: ஞானாதயோ குணா: (தர்மம் என்றால்) ஞானம் முதலிய குணங்களும்

பராக்ரமஸ்ச யஸ்ய ச வீரமும் ஒருங்கே உள்ளவராதலால்

ஸத்யதர்மபராக்ரம: பகவான் ‘ஸத்யதர்மப்ராக்ரம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் உண்மை, ஞானம் முதலிய குணங்கள் மற்றும் வீரம் ஆகியவை ஒருங்கே அமையப்பெற்றிருக்கிறார். எனவே, அவர் ‘ஸத்யதர்மபராக்ரம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

—————

  1. பூதபவ்யபவன்னாத: பவன: பாவனோSனல: |

காமஹா காமக்ருத் காந்த: காம: காமப்ரத: ப்ரபு: ||

இந்த முப்பத்திரண்டாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. பூதபவ்யபவன்னாத:, 291.பவன:, 292. பாவன:, 293. அனல: |
  2. காமஹா, 295.காமக்ருத், 296. காந்த:, 297. காம:, 298. காமப்ரத:, 299. ப்ரபு: ||

—-

  1. ஓம் பூதபவ்யபவன்னாதாய நம:

பூதபவ்யபவதாம் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் (ஆகிய முக்காலங்களிலும்)

பூதக்ராமாணாம் உயிர்த்தொகுதிகளுக்கு

நாத: எஜமானனாய் இருக்கிறார்

தைர்யாச்யதே அவர்களால் வணங்கப்படுகிறார் (அர்ச்சிக்கப்படுகிறார்)

தானுபதபதி (நல்வழியில் அவர்கள் நடவாதபொழுது) அவர்களை அல்லலுக்கு உட்படுத்துகிறார்

தேஶாமீஶ்டே ஶாஶதீதி வா அவர்களை ஆணையிட்டு ஆள்கிறார்

பூதபவ்யபவன்னாத: எனவே, பகவான் ‘பூதபவ்யபவன்னாத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் முக்காலங்களிலுமுள்ள உயிர்த்தொகுதிகளால் (உயிரினங்களால்) வணங்கப்படுகிறார். தவறான வழியில் நடக்கும் பொழுது அல்லல்களுக்கு உட்படுத்துகிறார். அனைவருக்கும் எஜமானனாய் ஆணையிட்டு ஆள்கிறார். எனவே, அவர் ‘பூதபவ்யபவன்னாத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———-

  1. ஓம் பவனாய நம:

பவத தூய்மையாக்குகிறார்

இதி எனவே

பவன: பகவான் ‘பவன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைவரையும் தூய்மையாக்குகிறார். எனவே பகவான் ‘பவன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘பவன: பவதாமஸ்மி’ (ஸ்ரீமத் பகவத்கீதை 15.13)

ஸ்ரீ பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது: தூய்மை செய்வனவற்றுள்ளே காற்று நான்

இதி பகவத்வசனாத் இது (ஸ்ரீமத் பகவத் கீதையில்) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கூற்றாகும்.

————

  1. ஓம் பாவனாய நம:

பாவயதீதி அனைவரையும் செலுத்துகிறார்

பாவன: எனவே, பகவான் ‘பாவன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைவரையும் செலுத்துவதால் (காற்றையும் வீசும்படி செய்வதால்) பகவான் ‘பாவன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பீஷாஸ்மாத்வாத: பவதே (தைத்ரிய உபநிஶத் 2.8)

தைத்ரீய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: இவரிடம் உள்ள பயத்தினாலேயே (இவரது ஆணைக்குக் கட்டுபட்டே) காற்று வீசுகிறது,

இதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

——————-

  1. ஓம் அனலாய நம:

அனான் ப்ராணான் ‘அன’ என்றால் ப்ராணனை (மூச்சுக்காற்றைக்) குறிக்கும்

ஆத்மவத்வேன லாதீதி உள்ளுறை ஆத்மாவாக அதை உள்ளிழுப்பதால்

ஜீவ: ஜீவாத்மாவை

அனல: ‘அனல’ என்று அழைப்பார்கள். (பரமாத்மாவும் ஜீவாத்மாவும் வேறல்ல என்பதால்) பகவான் ‘அனல’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான், ஜீவாத்மாவின் வடிவில் மூச்சுக்காற்றை (ப்ராணனை) உள்ளிழுக்கிறார் (அனைவரையும் வாழவைக்கிறார்). எனவே, அவர் ‘அனல:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அத்வைதத்தின் படி ஜீவாத்மாவும், பரமாத்மாவும் ஒன்றே. ஆச்சார்யாள் இதை முன்னுரை பகுதியில் பல ஶ்ருதி, ஸ்ம்ரிதி, புராண வாக்கியங்களை மேற்கோள் காட்டி விரிவாக விளக்கியுள்ளார்.

னலதேர் கந்தவாசினோ ‘னல’ என்றால் மணத்தைக் குறிக்கும்

‘நஞ்’பூர்வாத்வா அதற்கு எதிர்மறையாய் (‘அ’ என்ற சொல் சேர்வதன் மூலம்)

அனல: பகவான் ‘அனல:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘னல’ என்றால் மணத்தைக் (வாசனை) குறிக்கும். எவ்வித மணமும் அற்றவர் என்பதால் பகவான் ‘அனல:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

எதிர்மறைப் பொருளைக் குறிக்க ‘னல’த்தின் முன் ‘அ’ சேர்ந்து, ‘அனல:’ என்று உருவாகிறது.

‘அகந்தம் அரசம்’ (பரப்ரஹ்மம்) மணமற்றது, சுவையற்றது.,

இதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

பரப்ரஹ்மத்தை சுவைத்தோ, முகர்ந்தோ உணர இயலாது என்பதே இதன் உட்பொருளாகும்.

ந அலம் பர்யாப்தமஸ்ய வித்யத இதி வா அவருக்கு முடிவு, எல்லைநிலம் என்பதே கிடையாது (அலம், பர்யாப்தம் என்றால் முடிவு என்று பொருள்)

அனல: எனவே பகவான் ‘அனல:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானுக்கு முடிவோ, எல்லை என்பதோ கிடையாது. எனவே, அவர் ‘அனல:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

—————

  1. ஓம் காமக்னே நம:

காமான் ஹந்தி அனைத்து ஆசைகளையும் வேரறுக்கிறார்

முமுக்ஷூணாம் முக்தியை விழைவோருக்கும்

பக்தானாம் பக்தர்களுக்கும்

ஹிம்ஸகானாம் துன்பங்களைத் தரவல்ல (எதிரியான)

சேதி காமஹா எனவே, பகவான் ‘காமஹா:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பக்தர்கள், மற்றும் முக்தியை விழைவோர்களுக்கு, அவர்களுக்குத் தடங்கலாய், எதிரியாய் உள்ள காமங்களை (ஆசைகளை) வேரறுக்கிறார். எனவே, பகவான் ‘காமஹா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

—————-

  1. ஓம் காமக்ருதே நம:

ஸாத்விகானாம் ஸத்வ குணமுடையோரின்

காமான் (நியாயமான) ஆசைகளை

கரோதீதி நிறைவேற்றுகிறார் (பூர்த்தி செய்கிறார்)

காமக்ருத் எனவே, பகவான் ‘காமக்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

(பக்தர்களின் முன்னேற்றப் பாதைக்கு இடையூறாய் இருக்கும் ஆசைகளை வேரறுக்கும் அந்த பகவானே) ஸத்வ குணமுடையோரின் நியாயமான ஆசைகளை நிறைவேற்றுகிறார். எனவே, (காமஹந்தாவான) பகவான் ‘காமக்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

காம: ப்ரத்யும்ன: காமனின் மறு அவதாரமான ப்ரத்யும்னனை

தஸ்ய ஜனகத்வாத்வா பிறப்பித்த தந்தையாதலால்

காமக்ருத் பகவான் ‘காமக்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, காமனின் மறு அவதாரமான ப்ரத்யும்னனை பிறப்பித்த தந்தையாதலால் பகவான் ‘காமக்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

காமனின் மறு அவதாரம்: மன்மதன் (காமன்), தேவர்களுக்காக, சிவபெருமானின் தவத்தைக் கலைத்தான். இதனால் வெகுண்ட சிவன் தனது நெற்றிக்கண்ணால் அவனை எரித்தார். அவ்வாறு எரிந்த காமன், பகவான் கிருஷ்ணாவதாரம் எடுத்த பொழுது அவருக்கும், ருக்மிணிக்கும் மகனாகப் (ப்ரத்யும்னனாகப்) பிறந்தான். அவனால் தனக்கு மரணமேற்படும் என்றறிந்த ஸம்பராஸுரன் என்ற அஸுரன் ப்ரத்யும்னனை அவன் பத்து நாள் குழந்தையாக இருந்த பொழுதே துவாரகையிலிருந்து தூக்கி சென்றான். அங்கு, மாயாவதி (அதாவது முற்பிறப்பில் மன்மதனின் மனைவி ரதி) என்னும் தனது பணிப்பெண்ணிடம் அக்குழந்தையைக் கொடுத்து வளர்க்கச் செய்தான். அக்குழந்தையைப் பார்த்ததும் தன் முற்பிறப்பு நினைவு பெற்ற மாயாவதி அக்குழந்தையை வளர்த்தாள். தக்க வயதடைந்ததும் ப்ரத்யும்னனைக் கொண்டு ஸம்பராஸுரனை வதம் செய்வித்து, பின்னர் ப்ரத்யும்னனையே மணந்தாள் மாயாவதி. அனைவரும் பின்னர் துவாரகைக்குத் திரும்பினர். இந்த சரித்திரம் ஸ்ரீமத் பாகவதம் 10-வது ஸ்கந்தம் 55-வது அத்தியாயத்தில் விரிவாக .கூறப்பட்டுள்ளது.

 கடுவினைக் களையலாகும் காமனைப் பயந்த காளை

இடவகைக் கொண்டதென்பர் எழிலணி அனந்தபுரம் (திருவாய்மொழி 10.2.7)

————-

  1. ஓம் காந்தாய நம:

அபிரூப அழகிய வடிவு படைத்தோருக்குள்

தம: மிகச்சிறந்தவராதலால்

காந்த: பகவான் ‘காந்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பேரழகு படைத்தோர் பலர். அவர்கள் அனைவரைக் காட்டிலும் சிறந்த பேரழகு கொண்டவராதலால் பகவான் ‘காந்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

—————

  1. ஓம் காமாய நம:

காம்யதே விரும்பப்படுகிறார்

புருஶார்த்த அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நால்வகை குறிக்கோள்களை

அபிகாங்க்ஷிபிர் (அடைய) விரும்போவோராலும்

இதி எனவே

காம: பகவான் ‘காம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நால்வகை குறிக்கோள்களை அடைய விரும்புவோராலும் (அவற்றை வழங்கக்கூடியவர் பகவான் ஒருவரே என்பதால்) விரும்பப்படுகிறார். எனவே, பகவான் ‘காம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

  1. ஓம் காமப்ரதாய நம:

பக்தேப்ய: தன் அடியவர்களின்

காமான் (நியாயமான) ஆசைகளை

ப்ரகர்ஶேண அவர்கள் விரும்பியதை விட பல மடங்கு உயர்ந்த அளவில்

ததாதீதி வழங்குவதால்

காமப்ரத: பகவான் ‘காமப்ரத:’ என்ற திரு நாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தனது அடியவர்களின் நியாயமான விருப்பங்களை, அவர்கள் வேண்டியதை விட பல மடங்கு உயர்ந்த அளவில், பகவான் நிறைவேற்றுகிறார். எனவே, அவர் ‘காமப்ரத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

  1. ஓம் ப்ரபவே நம:

ப்ரகர்ஶேண மிகச் சிறந்தவராய்

பவனாத் இருப்பதால்

ப்ரபு: பகவான் ‘ப்ரபு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மிகச்சிறந்தவராய் (சிறந்த தேவனாய்) இருப்பதால் பகவான் ‘ப்ரபு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

——————-

  1. யுகாதிக்ருத் யுகாவர்த்தோ நைகமாயோ மஹாஶன:|

அத்ருஶ்யோSவ்யக்தரூபஸ்ச ஸஹஸ்ரஜிதனந்தஜித் ||

இந்த முப்பத்து மூன்றாவது ஸ்லோகத்தில் 8 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. யுகாதிக்ருத், 301. யுகாவர்த்த:, 302. நைகமாய:, 303. மஹாஶன:|
  2. அத்ருஶ்ய, 305. வ்யக்தரூப:, ச, 306. ஸஹஸ்ரஜித், 307. அனந்தஜித் ||

———–

  1. ஓம் யுகாதிக்ருதே நம:

யுகாதே: காலபேதஸ்ய யுகங்கள் முதலிய கால வேறுபாடுகளை

கர்த்ருத்வாத் உருவாக்குவதால்

யுகாதிக்ருத் பகவான் ‘யுகாதிக்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

யுகங்கள் முதலிய கால வேறுபாடுகளை உருவாக்குவதால் பகவான் ‘யுகாதிக்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

யுகானாம் யுகங்களை

ஆதிம் தொடக்கத்தில்

ஆரம்பம் கரோதீதி வா துவங்கிவைக்கிறார்

யுகாதிக்ருத் எனவே பகவான் ‘யுகாதிக்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, கல்பத்தின் தொடக்கத்தில் யுகங்களின் சுழற்சியைத் தொடங்கி வைக்கிறார். எனவே, பகவான் ‘யுகாதிக்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இதி நாம்னாம் த்ருதீயம் ஶதம் விவ்ருதம் | இத்துடன் (யுகாதிக்ருத் என்னும் இந்த திருநாமம் வரையில்) முன்னூறு திருநாமங்களின் விவரணம் முற்று பெறுகிறது.

—————–

  1. ஓம் யுகாவர்த்தாய நம:

யுகானி க்ருதாதீனி ‘க்ருதயுகம்’ (முதலாம் யுகமான ஸத்ய அல்லது க்ருத யுகம்) தொடக்கமாக நான்கு யுகங்களை

ஆவர்த்தயதி மீண்டும், மீண்டும் வரிசை மாறாமல் சுழல விடுகிறார்

காலாத்மனேதி காலத்தின் வடிவாய்

யுகாவர்த்த: எனவே பகவான் ‘யுகாவர்த்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

காலத்தின் வடிவினரான பகவான், க்ருதயுகம் முதலிய நான்கு யுகங்களை மீண்டும், மீண்டும் வரிசை மாறாமல் சுழல விடுகிறார். எனவே, பகவான் ‘யுகாவர்த்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————-

  1. ஓம் நைகமாயாய நம:

ஏகா மாயா ந வித்யதே ஒன்றல்ல அவரது மாயைகள்

பஹ்வீர்மாயா எண்ணற்ற மாயைகளை

வஹதீதி உருவாக்குகிறார்

நைகமாய:  எனவே, பகவான் ‘நைகமாய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானின் மாயைகள் ஒன்றிரண்டல்ல. எண்ணிலடங்கா மாயைகளை உருவாக்குவதால் அவர் ‘நைகமாய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ந லோபோ நஞ:’ (பாணினி ஸூத்ரம் 6.3.73)

இதி நகாரலோபோ ந பவதி இந்த பாணினியின் ஸூத்ரத்தின்படி, எதிர்மறையைக் குறிக்கும் ‘நஞ’ விலிருந்து ‘ந’காரம் நீக்கப்படுவதில்லை

ஞகாரானுபந்தஸ்யாபி ‘ஞ‘காரத்தை தவிர்த்து தனியே இருப்பினும் 

‘ந’காரஸ்ய ப்ரதிபோதவாசினோ வித்யமானத்வாத் ‘ந‘காரம் எதிர்மறையான பொருளையே குறிக்கும் என்று (நாம்) அறியவேண்டும்.

நைகமாய: என்ற திருநாமத்தை ந+ஏக+மாய என்று பிரித்துப் பொருள் கொள்ள வேண்டும். இங்கு ‘ந’காரம், ஒன்றல்ல (ந ஏக:) (ஒன்றின் எதிர்மறையான) பல என்ற பொருள் தருகிறது.

———–

  1. ஓம் மஹாஶனாய நம:

மஹத் அஶனம் அஸ்யேதி அளவிடமுடியாத அளவு உணவை உட்கொள்கிறார்

மஹாஶன: எனவே, பகவான் ‘மஹாஶன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்

கல்பாந்தே கல்பத்தின் முடிவில்

ஸர்வக்ரஸனாத் அனைத்தையும் உண்கிறார்.

பகவான் மஹாகல்பத்தின் முடிவில் இந்தப் ப்ரபஞ்சம் அனைத்தையும் உண்கிறார். எனவே, அவர் ‘மஹாஶன:’ (அளவிடமுடியாத உணவை உண்பவர்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ப்ரஹ்மாவின் ஒரு பகல் பொழுது 1000 சதுர்யுகங்களால் ஆனது (மனிதர்களின் காலக்கணக்கின்படி 432,00,00,000 (432 கோடி) வருடங்கள். அவரது ஒரு பகல் முடியும்பொழுது பூமி, புவர்லோகம், ஸ்வர்கலோகம் (தேவர்கள் வாழும் ஸ்வர்கம்) ஆகியவை அழிகின்றன. அவரது ஒரு இரவு நேரமும் 432 கோடி வருடங்களாகும் (ஆக, ப்ரஹ்மாவின் ஒரு நாள் என்பது நம் கணக்கில் 864 கோடி வருடங்கள்). இவ்வாறான 360 நாட்கள் அவரது ஒரு ஆண்டு. அவ்வாறு 100 ஆண்டுகள் ப்ரஹ்மாவின் ஆயுட்காலம் (31104000,00,00,000 ஆண்டுகள்). ப்ரஹ்மாவின் ஆயுட்காலம் முடிந்ததும் ஈரேழு பதினான்கு உலகங்களும் (இந்தப் ப்ரபஞ்சம் முழுவதும்) பகவானால் உட்கொள்ளப்படுகின்றன (அழிக்கப்படுகின்றன). பின்னர் 31104000,00,00,000 ஆண்டுகள் ஒன்றுமில்லாத வெறுமையில், பரப்ரஹ்மம் மட்டுமே இருக்கிறார். பின்னர் ப்ரஹ்மாவையும், ஈரேழு பதினான்கு உலகங்களோடு ப்ரபஞ்சத்தையும் மீண்டும் முன்போலவே படைக்கிறார். இந்த சுழற்சி ஆரம்பம், முடிவு ஏதுமின்றி இடைவிடாது நடைபெறுகிறது (this cycle is eternal).

————

  1. ஓம் அத்ருஶ்யாய நம:

ஸர்வேஶாம் அனைத்து

புத்தீந்த்ரியாணாம் அறிவுப்புலன்களால் (கண், காது, மூக்கு, நாக்கு மற்றும் தோல்)

அகம்ய: அணுக இயலாதவராதலால்

அத்ருஶ்ய: பகவான் ‘அத்ருஶ்ய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் அனைத்து அறிவுப் புலன்களாலும் அறிய முடியாதவராய், அவற்றால் அணுக இயலாதவராய் இருக்கிறார். எனவே, அவர் ‘அத்ருஶ்ய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

—————-

  1. ஓம் வ்யக்தரூபாய நம:

ஸ்தூலரூபேண மிகப் பெரிய தனது வடிவால்

வ்யக்தம் ஸ்வரூபமஸ்யேதி அவரது உருவம் நன்றாக புலப்படும் வகையில் இருப்பதால்

வ்யக்தரூப: பகவான் ‘வ்யக்தரூப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நம் புலன்களுக்கு விஷயமாகாத இறைவன், அனைத்துமாய் விரிந்து பரந்திருக்கும் வடிவில் அனைவருக்கும் புலப்படும் வகையில் இருக்கிறார். எனவே அவர் ‘வ்யக்தரூப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸ்வயம்ப்ரகாஶமானத்வாத் ஒளியாய் சுடர்விடுகிறார்

யோகினாம் யோகிகளுக்குள்

வ்யக்தரூப இதி வா தனது உருவில்

வ்யக்தரூப: பகவான் ‘வ்யக்தரூப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஞானிகள் மற்றும் யோகிகளுக்குள் பகவான் ஒளியாய் தனது இயற்கை வடிவத்தில் சுடர்விடுகிறார். எனவே, அவர் ‘வ்யக்தரூப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————-

  1. ஓம் ஸஹஸ்ரஜிதே நம:

ஸுராரீனாம் தேவர்களின் (மற்றும் நல்லோரின்) எதிரிகளான அஸுரர்களை

ஸஹஸ்ராணி ஆயிரக்கணக்கான

யுத்தே ஜயதீதி போர்க்களத்தில் வெல்பவராதலால்

ஸஹஸ்ரஜித் பகவான் ‘ஸஹஸ்ரஜித்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தேவர்களின் (மற்றும் நல்லோரின்) எதிரிகளான ஆயிரக்கணக்கான அஸுரர்களை போர்க்களத்தில் வெற்றி கொள்கிறார். எனவே, அவர் ‘ஸஹஸ்ரஜித்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

—————

  1. ஓம் அனந்தஜிதே நம:

ஸர்வாணி பூதானி அனைத்து ஜீவராசிகளையும்

யுத்தக்ரீடாதிஶு போர்க்களம் மற்றும் விளையாட்டுகளில்

ஸர்வத்ராசிந்த்யஶக்திதயா சிந்தனைக்கு எட்டாத தமது சக்தியால்

ஜயதீதி வெல்கிறார்

அனந்தஜித் எனவே, பகவான் ‘அனந்தஜித்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் (தேவாதி தேவர்கள் உட்பட) அனைத்து ஜீவராசிகளையும் போர்க்களம், மற்றும் விளையாட்டுக்களில் நம் சிந்தனைக்கு எட்டாத தமது சக்தியால் வெற்றி கொள்கிறார். எனவே, அவர் ‘அனந்தஜித்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———————

Leave a Reply