ஸ்ரீ விஶ்ணு ஸஹஸ்ரநாம பாஷ்யம் – ஸ்ரீ ஆதி ஶங்கர பகவத் பாதர் அருளியது – பாகம் 6-திருநாமங்கள்–308– -425- வரை –

  1. இஶ்டோSவிஶிஶ்ட: ஶிஶ்டேஶ்ட: ஶிகண்டீ நஹுஶோ வ்ருஶ:|

க்ரோதஹா க்ரோதக்ருத்கர்த்தா விஶ்வபாஹுர் மஹீதர: ||

இந்த முப்பத்து நான்காவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. 308.இஶ்ட:, 309.அவிஶிஶ்ட:, 31௦. ஶிஶ்டேஶ்ட:, 311. ஶிகண்டீ, 312. நஹுஶ:, 313. வ்ருஶ:|
  2. 31க்ரோதஹா,315. க்ரோதக்ருத்கர்த்தா, 316. விஶ்வபாஹு:, 317. மஹீதர: ||

————

  1. அச்யுத: ப்ரதித: ப்ராண: ப்ராணதோ வாஸவானுஜ:|

அபாம்நிதிரதிஶ்டானமப்ரமத்த: ப்ரதிஶ்டித: ||

இந்த முப்பத்தைந்தாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. அச்யுத:, 319. ப்ரதித:, 320. ப்ராண:, 321. ப்ராணத:, 322. வாஸவானுஜ: |
  2. அபாம்நிதி:, 324. அதிஶ்டான:, 325. அப்ரமத்த:, 326. ப்ரதிஶ்டித: ||

————–

  1. ஸ்கந்த: ஸ்கந்ததரோ துர்யோ வரதோ வாயுவாஹன: |

வாஸுதேவோ ப்ருஹத்பானுராதிதேவ: புரந்தர: ||

இந்த முப்பத்து ஆறாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. ஸ்கந்த:, 328. ஸ்கந்ததர:, 329. துர்ய:, 330. வரத:, 331. வாயுவாஹன: |
  2. வாஸுதேவ:, 333. ப்ருஹத்பானு:, 334. ஆதிதேவ:, 335. புரந்தர: ||

————

  1. அஶோகஸ்தாரணஸ்தார: ஶூர: ஶௌரிர்ஜனேஶ்வர:|

அனுகூல: ஶதாவர்த்த: பத்மீ பத்மநிபேக்ஷண: ||

இந்த முப்பத்து ஏழாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. அஶோக:, 337. தாரண:, 338. தார:, 339. ஶூர:, 340. ஶௌரி:, 341. ஜனேஶ்வர: |
  2. அனுகூல:, 343. ஶதாவர்த்த:, 344. பத்மீ, 345. பத்மநிபேக்ஷண: ||

———–

  1. பத்மனாபோSரவிந்தாக்ஷ: பத்மகர்ப: ஶரீரப்ருத்|

மஹர்த்திருத்தோ வ்ருத்தாத்மா மஹாக்ஷோ கருடத்வஜ: ||

இந்த முப்பத்து எட்டாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. பத்மநாப:, 347. அரவிந்தாக்ஷ:, 348. பத்மகர்ப:, 349. ஶரீரப்ருத்|
  2. மஹர்த்தி:, 351. ருத்த:, 352. வ்ருத்தாத்மா, 353. மஹாக்ஷ:, 354. கருடத்வஜ:||

——-

  1. அதுல: ஶரபோ பீம: ஸமயஜ்ஞோ ஹவிர்ஹரி:|

ஸர்வலக்ஷணலக்ஷண்யோ லக்ஷ்மீவான் ஸமிதிஞ்ஜய: ||

இந்த முப்பத்து ஒன்பதாவது ஸ்லோகத்தில் 8 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. அதுல:, 356. ஶரப:, 357. பீம: (அபீம:), 358. ஸமயஜ்ஞய:, 359. ஹவிர்ஹரி: |
  2. ஸர்வலக்ஷணலக்ஷண்ய:, 361. லக்ஷ்மீவான், 362. ஸமிதிஞ்ஜய:||

—–

40-விக்ஷரோ ரோஹிதோ மார்கோ ஹேதுர்தாமோதர: ஸஹ: |

மஹீதரோ மஹாபாஹோ வேகவானமிதாஶன: ||

இந்த நாற்பதாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. விக்ஷர:, 364. ரோஹித:, 365. மார்க்க:, 366. ஹேது:, 367. தாமோதர:, 368. ஸஹ: |
  2. மஹீதர:, 370. மஹாபாக:, 371. வேகவான், 372. அமிதாஶன: ||

——

  1. உத்பவ: க்ஷோபணோ தேவ: ஸ்ரீகர்ப்ப: பரமேஶ்வர: |

கரணம் காரணம் கர்த்தா விகர்த்தா கஹனோ குஹ: ||

இந்த நாற்பத்தொன்றாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. உத்பவ:, 374. ஷோபண:, 375. தேவ:, 376. ஸ்ரீகர்ப்ப:, 377. பரமேஶ்வர: |
  2. கரணம், 379. காரணம், 380. கர்த்தா, 381. விகர்த்தா, 382. கஹன:, 383. குஹா: ||

————-

  1. வ்யவஸாயோ வயவஸ்தான: ஸம்ஸ்தான: ஸ்தானதோ த்ருவ:|

பரர்த்தி: பரமஸ்பஶ்டஸ்துஶ்ட: புஶ்ட: ஸுபேக்ஷண: ||

இந்த நாற்பத்திரெண்டாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. வ்யவஸாய:, 385. வ்யவஸ்தான:, 386. ஸம்ஸ்தான:, 387. ஸ்தானத:, 388. த்ருவ:|
  2. பரர்த்தி:, 390. பரமேஸ்பஶ்ட:, 391. துஶ்ட:, 392. புஶ்ட:, 393. ஸுபேக்ஷண: ||

—————

  1. ராமோ விராமோ விரதோ மார்கோ நேயோ நயோSநய:|

வீர: ஶக்திமதாம் ஶ்ரேஶ்டோ தர்மோ தர்மவிதுத்தம: ||

இந்த நாற்பத்து மூன்றாவது ஸ்லோகத்தில் 11 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. ராம:, 395. விராம:, 396. விரத:, 397. மார்க:, 398. நேய:, 399. நய:, 400. அனய:|
  2.             வீர:, 402. ஶக்திமதாம் ஶ்ரேஶ்ட:, 403. தர்ம:, 404. தர்மவிதுத்தம: ||

————-

  1. வைகுண்ட: புருஶ: ப்ராண: ப்ராணத: ப்ரணவ: ப்ருது:|

ஹிரண்யகர்ப்ப: ஶத்ருக்னோ வ்யாப்தோ வாயுரதோக்ஷஜ: ||

இந்த நாற்பத்து நான்காவது ஸ்லோகத்தில் 11 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. வைகுண்ட:, 406. புருஶ:, 407. ப்ராண:, 408. ப்ராணத:, 409. ப்ரணவ:, 410. ப்ருது: |
  2. ஹிரண்யகர்ப்ப:, 412. ஶத்ருக்ன:, 413. வ்யாப்த:, 414. வாயு:, 415. அதோக்ஷஜ: ||

——-

  1. ருது: ஸுதர்ஶன: கால: பரமேஶ்டீ பரிக்ரஹ:|

உக்ர: ஸம்வத்ஸரோ தக்ஷோ விஶ்ராமோ விஶ்வதக்ஷிண: ||

இந்த நாற்பத்தைந்தாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. ருது:, 417. ஸுதர்ஶன:, 418. கால:, 419. பரமேஶ்டீ, 420. பரிக்ரஹ: |
  2. உக்ர:, 422. ஸம்வத்ஸர:, 423. தக்ஷ:, 424. விஶ்ராம:, 425. விஶ்வதக்ஷிண: ||

—-

  1. இஶ்டோSவிஶிஶ்ட: ஶிஶ்டேஶ்ட: ஶிகண்டீ நஹுஶோ வ்ருஶ:|

க்ரோதஹா க்ரோதக்ருத்கர்த்தா விஶ்வபாஹுர் மஹீதர: ||

இந்த முப்பத்து நான்காவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. 308.இஶ்ட:, 309.அவிஶிஶ்ட:, 31௦. ஶிஶ்டேஶ்ட:, 311. ஶிகண்டீ, 312. நஹுஶ:, 313. வ்ருஶ:|
  2. 31க்ரோதஹா,315. க்ரோதக்ருத்கர்த்தா, 316. விஶ்வபாஹு:, 317. மஹீதர: ||

————–

  1. ஓம் இஶ்டாய நம:

பரமானந்தாத்மகத்வேன ஆனந்தமே வடிவானவராய் இருப்பதால்

ப்ரிய அனைவராலும் விரும்பப்படுகிறார்

இஶ்ட: எனவே, பகவான் ‘இஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஆனந்தமே வடிவானவராய் இருப்பதால் அனைவராலும் விரும்பப்படுகிறார். எனவே, பகவான் ‘இஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

யஞ்யேன வேள்விகளின் மூலம்

பூஜித இதி வா வழிபடப்படுகிறார்

இஶ்ட: எனவே, பகவான் ‘இஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வேள்விகளுக்கு ‘இஶ்ட:’ என்று பெயர். அனைத்து வேள்விகளாலும் பகவான் ஒருவரே வழிபடப்படுகிறார். எனவே, அவர் ‘இஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————–

  1. ஓம் அவிஶிஶ்டாய நம:

ஸர்வேஶாமந்தர்யாமித்வேன அனைவரின் உள்ளுறை ஆத்மாவாக இருப்பதால்

அவிஶிஶ்ட: பகவான் ‘அவிஶிஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைவரின் உள்ளுறை ஆத்மாவாக இருப்பதால் பகவான் ‘அவிஶிஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———–

  1. ஓம் ஶிஶ்டேஶ்டாய நம:

ஶிஶ்டானாம் விதுஶாம் ‘ஶிஶ்டர்கள்’ அதாவது கற்றரிந்தோரால்

இஶ்ட: விரும்பப்படுகிறார்

ஶிஶ்டேஶ்ட: எனவே, பகவான் ‘ஶிஶ்டேஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கற்றரிந்தோரால் (ஶிஶ்டர்களால்) விரும்பப்படுகிறார். எனவே, பகவான் ‘ஶிஶ்டேஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஶிஶ்டா கற்றறிந்தோரை (ஞானிகளை)

இஶ்டா அஸ்யேதி வா விரும்புகிறார்

ஶிஶ்டேஶ்ட: எனவே, பகவான் ‘ஶிஶ்டேஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கற்றறிந்த ஞானிகளை பகவான் மிகவும் விரும்புகிறார். எனவே, பகவான் ‘ஶிஶ்டேஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ப்ரியோ ஹி ஞானினோSத்யர்த்தமஹம் ஸ ச மம ப்ரிய:’ (ஸ்ரீமத் பகவத்கீதை 7.17)

பகவானும் கீதையில் கூறுகிறார்: ஞானிக்கு நான் மிகவும் இனியவன்; அவன் எனக்கு மிகவும் இனியவன்.

இதி பகவத்வசனாத் இது (ஸ்ரீ பகவத் கீதையில்) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கூற்றாகும்.

ஶிஶ்டை: அடியவர்களால் (ஶிஶ்டர்களால்)

இஶ்ட: பூஜித இதி வா (இஶ்டி என்றால் வழிபாடு) வழிபடப்படுகிறார்

ஶிஶ்டேஶ்ட: எனவே, பகவான் ‘ஶிஶ்டேஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தனது அடியவர்களால் (ஶிஶ்ட:) வழிபடப்படுகிறார் (இஶ்ட:). எனவே, பகவான் ‘ஶிஶ்டேஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————-

  1. ஓம் ஶிகண்டினே நம:

ஶிகண்ட: கலாபோSலங்காரோSஸ்யேதி மயில் தோகையால் (தனது திருமுடியை) அலங்கரித்துக் கொண்டவராதலால்

ஶிகண்டீ: பகவான் ‘ஶிகண்டீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்

யதோ கோபவேஶதர: ஏனெனில், (கண்ணனாக அவதரித்த பொழுது) அவர் இடையனின் வேடம் பூண்டிருந்தார்.

பகவான் கண்ணனாக அவதரித்த பொழுது, இடையனின் வேடம் பூண்டிருந்தார். அப்பொழுது தனது திருமுடியில் மயில் தோகை அணிந்து அலங்கரித்துக் கொண்டார். எனவே, அவர் ‘ஶிகண்டீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஶிகண்ட என்றால் மயில் தோகை. அதை அணிந்துள்ளவர் ஶிகண்டீ.

—————–

  1. ஓம்நஹுஶாயநம:

நஹ்யதி கட்டிவைக்கிறார்

பூதானி அனைத்து உயிரினங்களையும் (ஜீவராசிகளையும்)

மாயயாSதோ மாயையினால்

நஹுஶ: பகவான் ‘நஹுஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் அனைத்து ஜீவராசிகளையும் (உயிரினங்களையும்) மாயையினால் கட்டிவைத்துள்ளார். எனவே, அவர் ‘நஹுஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நஹ பந்தனே ‘நஹ’ என்ற வேர்ச்சொல் ‘கட்டுதல்’ அல்லது ‘கட்டி வைத்தல்’ என்ற பொருளில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.

————–

  1. ஓம்வ்ருஶாயநம:

காமானாம் (நியாயமான) ஆசைகளை

வர்ஶணாத் மழைபோல பொழிவிப்பதால்

வ்ருஶ: தர்ம: அறத்திற்கு ‘வ்ருஶ:’ என்று பெயர். அறமே வடிவினராய் இருப்பதால் பகவான் ‘வ்ருஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைவரின் நியாயமான ஆசைகளையும் மழைபோல பொழிவிப்பதால் (நிறைவேற்றுவதால்) அறத்தை ‘வ்ருஶ:’ என்று அழைக்கிறோம். பகவானே அறம். அறமே பகவான். எனவே, அவர் ‘வ்ருஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வ்ருஶோ ஹி பகவான்தர்ம: ஸ்ம்ருதோ லோகேஶு பாரத |

நைகுண்டகபதாயானைர்வித்தி மாம் வ்ருஶமுத்தமம் || (மஹாபாரதம் ஶாந்தி பர்வம் 342.88)

மஹாபாரதம் ஶாந்திபர்வத்தில் கூறப்பட்டுள்ளது: ஓ பரதகுலத்தோனே!!! அனைவருக்கும் நன்மை தரக்கூடிய புனிதமான தர்மத்தை ‘வ்ருஶ’ என்று அழைப்பார்கள். எனவே, வேதத்தின் ‘நிகண்டுகளில்’ (அந்த அறமே உருவான) என்னை உத்தமமான ‘வ்ருஶ’ என்று .அழைக்கின்றனர்.

நிகண்டு = அகராதி

 ————

  1. ஓம்க்ரோதக்னேநம:

ஸாதூனாம் தனது அடியவர்களின்

க்ரோதம் சினத்தை

ஹந்தீதி அழிப்பதால்

க்ரோதஹா பகவான் ‘க்ரோதஹா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தனது அடியவர்களின் சினத்தை அழிப்பதால் பகவான் ‘க்ரோதஹா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மனிதன் விஷயங்களைக் (புலனின்பங்களைக்) கருதும்பொழுது அவற்றில் பற்றுதல் உண்டாகிறது. பற்றுதலால் விருப்பம் உண்டாகிறது. விருப்பத்தினால் சினம். (ஸ்ரீமத் பகவத்கீதை 2.62).

பகவான் சினத்தை அழிக்கிறார் என்றால், அதன் வித்தான பற்றுதலையும் சேர்த்தே அழிக்கிறார் என்று பொருள் கொள்ளவேண்டும்.

———————-

  1. ஓம்க்ரோதக்ருத்கர்த்ரேநம:

அஸாதுஶு அறமற்ற தீயோரின்

க்ரோதம் சினத்தை

கரோதீதி தூண்டிவிடுகிறார் (வளர்க்கிறார்)

க்ரோதக்ருத் எனவே, பகவான் ‘க்ரோதக்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அறத்தை பின்பற்றாத தீயோரின் சினத்தைத் (அவர்கள் மென்மேலும் தவறிழைத்து துன்பப்படும்படி) தூண்டி வளர்க்கிறார். எனவே, பகவான் ‘க்ரோதக்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

க்ரியத இதி கர்ம செயப்படுவது ‘செயல்’ என்று அழைக்கப்படுகிறது

ஜகத்தஸ்ய (அவ்வாறு செயப்பட்டதான) இந்த உலகத்தின்

கர்த்தா காரணமானதால் (அதை உருவாக்கியவராதலால்) பகவான் ‘கர்த்தா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

செய்யப்படுவது ‘செயல்’ என்றும் அதை செய்பவர் ‘கர்த்தா’ என்றும் அழைப்பர். இந்த உலகத்தை உருவாக்கியதால் பகவான் ‘கர்த்தா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

யோ வை பாலாக ஏதைஶா புருஶாணா கர்த்தா யஸ்ய வை தத்கர்ம ஸ வேதிதவ்ய (உபநிஶத் வாக்கியம்)

வேதங்கள் மற்றும் உபநிடதங்களில் கூறப்பட்டுள்ளது: ஓ பாலகனே!!! யார் இந்த புருஷர்களை (அனைத்து உயிரினங்களையும்) உருவாக்குகிறாரோ, யாரால் இங்கு அனைத்து செயல்களும் செய்யப்படுகிறதோ அவரை (அந்த பரப்ரஹ்மத்தை) அறிந்து கொள்ள வேண்டும்.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

க்ரோதக்ருதாம் மிகுந்த சினத்தோடு (தன்னை எதிர்க்கும்)

தைத்யாதீனாம் அசுரர் முதலானோரை

கர்த்தா சேதக வெட்டி அழிக்கிறார்

க்ரோதக்ருத்கர்த்தா எனவே, பகவான் ‘க்ரோதக்ருத்கர்த்தா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்

இத்யேகம் வா நாம இது (க்ரோதக்ருத்கர்த்தா) ஒரே திருநாமமாகும்.

மிகுந்த சினத்தோடு தன்னை எதிர்க்கும் அசுரர் முதலானோரை வெட்டி அழிக்கிறார். எனவே, பகவான் ‘க்ரோதக்ருத்கர்த்தா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இங்கு கர்த்தா என்னும் சொல் வெட்டுதல் என்ற பொருளில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.

முதலில் இரண்டு திருநாமங்களாக பிரித்துப் பொருளுரைத்திருந்தாலும் ஆதிசங்கரர் ‘க்ரோதக்ருத்கர்த்தா’ என்று ஒரே திருநாமமாகத்தான் கணக்கிட்டுள்ளார்.

—————

  1. ஓம்விஶ்வபாஹவேநம:

விஶ்வேஶாமாலம்பனத்வேன இந்தப் ப்ரபஞ்சத்திலுள்ள அனைவருக்கும் ஆதாரமாக விளங்குவதால்

விஶ்வபாஹு: பகவான் ‘விஶ்வபாஹு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் இந்தப் ப்ரபஞ்சத்திலுள்ள அனைவருக்கும் ஆதாரமாக (கீழே விழுவோரைத் தாங்கும் கைகளைப் போல) தாங்குகிறார். எனவே, அவர் ‘விஶ்வபாஹு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

விஶ்வே இந்தப் ப்ரபஞ்சத்திலுள்ள அனைவரும்

பாஹவோSஸ்யேதி அவருக்கு கரங்களாய் இருப்பதால்

விஶ்வபாஹு: பகவான் ‘விஶ்வபாஹு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, இந்த ப்ரபஞ்சத்திலுள்ள அனைவரும் அவரது (அவரிட்ட கடமைகளை நிறைவேற்றும்) கரங்களாய் இருப்பதால் பகவான் ‘விஶ்வபாஹு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

விஶ்வதோ இந்த ப்ரபஞ்சத்தின் அனைத்து இடங்களிலும்

பாஹவோSஸ்யேதி வா அவரது கரங்கள் உள்ளன

விஶ்வபாஹு: எனவே, பகவான் ‘விஶ்வபாஹு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்தப் ப்ரபஞ்சம் முழுவதும் பகவானின் கரங்கள் உள்ளன. எனவே, அவர் ‘விஶ்வபாஹு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘விஶ்வதோபாஹு:’ (ஶ்வேதாஶ்வதர உபநிஶத் 3.3)

ஶ்வேதாஶ்வதர உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:

(பரப்ரஹ்மம்) இந்தப் ப்ரபஞ்சத்திலுள்ள அனைத்து கரங்களின் உரிமையாளராவார்.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

——————

  1. ஓம்மஹீதராயநம:

மஹீம் பூஜாம் தரணீம் வா ‘மஹீ’ என்றால் பூஜை அல்லது பூமி என்று பொருள்

தரதீதி இந்த இரண்டையும் தாங்குகிறார் (நமது பூஜைகளை ஏற்றுக் கொள்வதன் மூலம் தாங்குகிறார்; பூமியை அதன் ஆதாரமாய் இருந்து தாங்குகிறார்)

மஹீதர: எனவே பகவான் ‘மஹீதர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் ‘மஹீ’ என்றழைக்கப்படும் பூஜைகளையும் (அவற்றை ஏற்றுக்கொள்வதன் மூலமும்), பூமியையும் (அதன் ஆதாரமாய் இருப்பதன் மூலமும்) தாங்குகிறார். எனவே அவர் ‘மஹீதர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————–

  1. அச்யுத: ப்ரதித: ப்ராண: ப்ராணதோ வாஸவானுஜ:|

அபாம்நிதிரதிஶ்டானமப்ரமத்த: ப்ரதிஶ்டித: ||

இந்த முப்பத்தைந்தாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. அச்யுத:, 319. ப்ரதித:, 320. ப்ராண:, 321. ப்ராணத:, 322. வாஸவானுஜ: |
  2. அபாம்நிதி:, 324. அதிஶ்டான:, 325. அப்ரமத்த:, 326. ப்ரதிஶ்டித: ||

———

  1. ஓம்அச்யுதாயநம:

ஶட்பாவவிகாரரஹிதத்வாத் பகவான் ஆறு வகையான மாறுதல்களற்றவர்

அச்யுத: எனவே, அவர் ‘அச்யுத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் ஆறுவகையான மாறுதல்களற்றவர் (அஸ்தி – உண்டாதல், ஜாயதே – பிறத்தல், வர்த்ததே – வளர்தல், பரிணமதே – வளர்தலின் முடிவை அடைதல், அபக்ஷீயதே – தேய்தல், நஶ்யதி – அழிதல்). எனவே அவர் ‘அச்யுத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ஶாஶ்வதம் ஶிவமச்யுதம்’ (நாராயண உபநிஶத் 13.1)

நாராயண உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: அவர் (பரப்ரஹ்மம்) என்றும் மங்களமானவராகவும், வழுவாதவராகவும் இருக்கிறார்.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

முன்பு 100-வது திருநாமத்தில் (அச்யுத:) ஆசார்யாள் “பகவான் தன் இயற்கையான வலிமை (மற்றும் சக்தியிலிருந்து) முன்பு என்றும் நழுவியதில்லை, இனி நழுவப்போவதுமில்லை” என்று உரை அளித்திருந்தார்.

————

  1. ஓம்ப்ரதிதாயநம:

ஜகதுத்பத்யாதிகர்மபி: இந்தப் ப்ரபஞ்சத்தை உருவாக்குதல் முதலிய செயல்களால்

ப்ரக்யாத: புகழ்பெற்று விளங்குபவர்

ப்ரதித: எனவே, அவர் ‘ப்ரதித:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் இந்தப் ப்ரபஞ்சத்தை உருவாக்குதல் (காத்தல் மற்றும் அழித்தல்) முதலிய செயல்களால் மிகவும் புகழ்பெற்று விளங்குகிறார். எனவே, அவர் ‘ப்ரதித:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————–

  1. ஓம்ப்ராணாயநம:

ஸூத்ராத்மனா இந்தப் ப்ரபஞ்சத்திலுள்ள அனைத்தையும் இணைக்கும் கயிறாக (மாலைகளில் மணியைக் கோர்க்கும் ஸூத்ரம் போல)

ப்ரஜா: உயிரினங்களுக்கு

ப்ராணயதீதி உயிரை (ப்ராணனை) அளிப்பதால்

ப்ராண: பகவான் ‘ப்ராண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் இந்த ப்ரபஞ்சத்திலுள்ள அனைத்தையும் இணைக்கும் கயிறாக, அனைத்து ஜீவராசிகளுக்கும் (உயிரினங்களுக்கும்) உயிர் அளிப்பவராக உள்ளார். எனவே, அவர் ‘ப்ராண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ப்ராணோ வா அஹமஸ்மி’

நானே ப்ராணனாக இருக்கிறேன்.

இதி பஹ்வ்ருசா | இது பஹ்வ்ருச ஶ்ருதியின் கூற்றாகும்.

முன்பு, 66-வது திருநாமத்தில் ஆச்சார்யாள் “பகவான் அனைத்து ஜீவாராசிகளுக்குள்ளும் உறைந்து, அவைகள் மூச்சுக்காற்றை (உள்ளிழுத்து, வெளியிட்டு) ஸ்வாசிக்கச் செய்கிறார்” என்று விளக்கமளித்திருந்தார்.

————

  1. ஓம்ப்ராணதாயநம:

ஸுராணாமஸுராணாம்  தேவர்கள் (ஸுரர்கள்) மற்றும் அசுரர்களின்

ப்ராணம் பலம் ‘ப்ராணன்’ அதாவது பலத்தை

ததாதி தருகிறார் (தேவர்களுக்கு)

த்யதி வேதி குறைக்கிறார் (அசுரர்களுக்கு)

ப்ராணத: எனவே, பகவான் ‘ப்ராணத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தேவர்களுக்கு ப்ராணனை (பலத்தை) அளிக்கிறார், அசுரர்களுக்கு ப்ராணனை (பலத்தை) கெடுக்கிறார். எனவே, அவர் ‘ப்ராணத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

முன்பு 65-வது திருநாமத்தில் ஆசார்யாள் “அனைத்து ஜீவராசிகளுக்கும் மூச்சுக்காற்றான ப்ராணனை தந்து, அவர்களை நடமாட வைப்பதால், பகவான் ‘ப்ராணத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்” என்று விளக்கியிருந்தார்.

த: என்ற சொல்லிற்கு ததாதி – தருதல், த்யதி – வெட்டுதல் முதலிய பல பொருட்கள் உள்ளன. இங்கு ஆசார்யாள் இந்த இரண்டு பொருட்களையும் ஒன்றிணைத்து இங்கு உரை அளித்துள்ளார். தேவர்களுக்கு பலத்தை அளிக்கும் அவரே, அசுரர்களின் பலத்தை குறைக்கிறார். பாற்கடலைக் கடையும் பொழுது அசுரர்களை வாசுகியின் தலைப்பாகத்தை இழுக்கச் செய்து அவர்களின் பலத்தை குறைத்தார். தேவர்களின் பக்கலில் மழையைப் பொழியச்செய்து அவர்களின் சோர்வை நீக்கி பலத்தைப் பெருகச்செய்தார்.

————-

  1. ஓம்வாஸவானுஜாயநம:

அதித்யாம் கஶ்யபாத் அதிதிக்கும் காஶ்யப முனிவருக்கும் பிள்ளையாக

வாஸவஸ்யானுஜோ வாஸவனான இந்திரனின் தம்பியாக (வாமனனாக)

ஜாத இதி பிறந்தததனால்

வாஸவானுஜ: பகவான் ‘வாஸவானுஜ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் அதிதிக்கும், காஶ்யப முனிவருக்கும் பிள்ளையாக இந்திரனின் தம்பியாக (வாமனனாக) அவதரித்தார். எனவே, அவர் ‘வாஸவானுஜ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

—————-

  1. ஓம்அபாம்நிதயேநம:

ஆபோ தண்ணீரானது

யத்ர எங்கு

நிதீயந்தே ஸ: நிறைந்திருக்குமோ

அபாம்நிதி: அந்த சமுத்திரத்தின் வடிவாய் இருப்பதால் பகவான் ‘அபாம்நிதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தண்ணீரால் நிறைந்திருப்பதால் கடலானது ‘அபாம்நிதி:’ என்று அழைக்கப்படுகிறது. அந்த கடலும் பரப்ரஹ்மத்தின் ஒரு வடிவேயாகும். எனவே, பகவான் ‘அபாம்நிதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ஸரஸாமஸ்மி ஸாகர:’ (ஸ்ரீமத் பகவத் கீதை 10.24)

ஸ்ரீமத் பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது: நீர்நிலைகளில் நான் கடல்.

இதி பகவத்வசனாத் இது (ஸ்ரீமத் பகவத்கீதையில்) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கூற்றாகும்.

—————-

  1. ஓம்அதிஶ்டானாயநம:

அதிதிஶ்டந்தி நிலைபெற்றிருக்கின்றன

பூதானி அனைத்து உயிரினங்களும்

உபாதான காரணத்வேன மூலப்பொருளாய் இருப்பதால்

ப்ரஹ்மேதி பரப்ரஹ்மமான பகவானிடத்தில்

அதிஶ்டானம் எனவே, பகவான் ‘அதிஶ்டானம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்தப் பிரபஞ்சத்திலுள்ள உயிரினங்கள் அனைத்திற்கும் மூலப்பொருளாய் இருப்பதால், அனைத்துமே பகவானிடத்தில் நிலைபெற்றிருக்கின்றன. எனவே அவர் ‘அதிஶ்டானம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘மத்ஸ்தானி ஸர்வபூதானி’ (ஸ்ரீமத் பகவத் கீதை 9.4)

ஸ்ரீமத் பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது: என்னிடத்தே பூதங்களெல்லாம் நிலைப்பெற்றன

இதி பகவத்வசனாத் இது (ஸ்ரீமத் பகவத்கீதையில்) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கூற்றாகும்.

அதிஶ்டானம் என்றால் ஆதாரம் அல்லது வசிக்கும் இடம் என்று பொருள். பகவானிடமிருந்தே நாம் அனைவரும் தோன்றுகிறோம். அவரே நமது மூலப்பொருளாவார். எனவே, அவர் அனைத்திற்கும் அதிஶ்டானமாய் இருக்கிறார்.

—————

  1. ஓம்அப்ரமத்தாயநம:

அதிகாரிப்ய: அந்தந்த அதிகாரிகளை (செயல் புரிபவர்களை)

கர்மானுரூபம் அவரவரது வினைகளுக்கேற்ப

ஃபலம் ப்ரயச்சன் உரிய பலன்களை வழங்குகிறார்

ந ப்ரமாத்யதீதி அதனின்று (உரிய பலன்களை வழங்குவதிலிருந்து) ஒரு பொழுதும் தவறுவதில்லை

அப்ரமத்த: எனவே பகவான் ‘அப்ரமத்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் ஒவ்வொரு அதிகாரிக்கும் (செயல் புரிபவருக்கும்) அவரவரது வினைகளுக்கேற்ப உரிய பலன்களை வழங்குவதிலிருந்து ஒரு பொழுதும் தவறுவதில்லை. எனவே, அவர் ‘அப்ரமத்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அப்ரமத்த என்றால் கவனத்துடன் இருப்பவர் (அல்லது கவனக்குறை ஏதுமில்லாதவர்) என்று பொருள். பகவான் வினைகளுக்கேற்ப பலன்களை வழங்குவதில் மிகவும் கவனமாக இருக்கிறார் என்று பொருள்.

—————-

  1. ஓம்ப்ரதிஶ்டிதாயநம:

ஸ்வே தன்னுடைய

மஹிம்னி மகிமையிலேயே

ஸ்தித: நிலைபெற்றுள்ளார் (தன்னுடைய மகிமையினாலேயே புகழ் பெற்றுள்ளார்)

ப்ரதிஶ்டித: எனவே அவர் ‘ப்ரதிஶ்டித:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தன்னுடைய மஹிமையிலேயே நிலைபெற்றுள்ளார் (அனைத்திற்கும் ஆதாரமான அவருக்கு வேறு தனிப்பட்ட ஆதாரம் எதுவும் தேவையில்லை. தானே தனக்கு ஆதாரமாய் இருக்கிறார்). எனவே, அவர் ‘ப்ரதிஶ்டித:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ஸ பகவ: கஸ்மின் ப்ரதிஶ்டித: இதி ஸ்வே மஹிம்னி’ (சாந்தோக்ய உபநிஶத் 7.28.1)

சாந்தோக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:

(பரப்ரஹ்மம்) எதில் நிலைபெற்றுள்ளார். தன்னுடைய புகழில் (மஹிமையில்)

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

————–

  1. ஸ்கந்த: ஸ்கந்ததரோ துர்யோ வரதோ வாயுவாஹன: |

வாஸுதேவோ ப்ருஹத்பானுராதிதேவ: புரந்தர: ||

இந்த முப்பத்து ஆறாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. ஸ்கந்த:, 328. ஸ்கந்ததர:, 329. துர்ய:, 330. வரத:, 331. வாயுவாஹன: |
  2. வாஸுதேவ:, 333. ப்ருஹத்பானு:, 334. ஆதிதேவ:, 335. புரந்தர: ||

————

  1. ஓம்ஸ்கந்தாயநம:

ஸ்கந்ததி ‘ஸ்கந்தனம்’ செய்கிறார்

அம்ருதரூபேண கச்சதி அமுதமாக பொங்கி பிரவகிக்கிறார்

வாயுரூபேண ஶோஶயதீதி காற்றின் வடிவில் உலர்த்துகிறார்

வா ஸ்கந்த: எனவே, பகவான் ‘ஸ்கந்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அமுதமாய் பொங்கி பிரவகிக்கிறார். காற்றின் வடிவில் உலர்த்துகிறார். எனவே, பகவான் ‘ஸ்கந்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸ்கந்த என்ற சொல்லிற்கு ப்ரவாஹம் மற்றும் உலர்த்துதல் ஆகிய பொருள்கள் உண்டு.

————

  1. ஓம்ஸ்கந்ததராயநம:

ஸ்கந்தம் தர்மபதம் ‘ஸ்கந்தம்’ என்றால் அறவழி என்று பொருள்

தாரயதீதி (அந்த அறவழியை) ஏற்கிறார், தாங்குகிறார்

ஸ்கந்ததர: எனவே பகவான் ‘ஸ்கந்ததர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ஸ்கந்தம்’ எனும் அறவழியைத் தாங்குகிறார் (அறவழியையே ஏற்கிறார்). எனவே, பகவான் ‘ஸ்கந்ததர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

  1. ஓம்துர்யாயநம:

துரம் வஹதி பாரத்தை சுமக்கிறார்

ஸமஸ்தபூதஜன்மாதி லக்ஷணாமிதி அனைத்து உயிரினங்களின்  பிறப்பிறப்பென்னும்

துர்ய: எனவே, பகவான் ‘துர்ய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் (அனைத்து உயிரினங்களின் உள்ளுறை ஆன்மாவாக இருந்து) அனைத்து உயிரினங்களின் பிறப்பிறப்பென்னும் பாரத்தை சுமக்கிறார். எனவே, அவர் ‘துர்ய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

  1. ஓம்வரதாயநம:

அபிமதான் விரும்பிய

வரான் வரங்களை

ததாதீதி வாரி வழங்குவதால்

வரத: பகவான் ‘வரதன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தனது பக்தர்களுக்கு அவர்கள் விரும்பிய வரங்களை வாரி வழங்குகிறார். எனவே, அவர் ‘வரதன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வரம் காம் வரம் என்றால் பசுக்கள்

தக்ஷிணாம் ததாதீதி அவற்றை தானமாக அளிக்கிறார்

யஜமானரூபேணேதி வா வேள்விகள் மற்றும் நற்காரியங்களில் தலைவராய் (யஜமானராய்)

வரத: எனவே, பகவான் ‘வரதன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் வேள்விகள் மற்றும் நற்காரியங்களின் தலைவராய் இருந்து பசுக்களை (வரங்களை) தானம் அளிக்கிறார். எனவே, அவர் ‘வரதன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘கௌர்வை வர:’ வர என்றால் பசுக்கள்

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

————-

  1. ஓம்வாயுவாஹனாயநம:

மருத: ஸப்த ஏழு வகையான காற்றுகளை

ஆவஹாதீன் ‘ஆவஹ’ முதலிய

வாஹயதீதி செலுத்துவதனால் (அல்லது அந்த காற்றுகளில் பயணிக்கிறார்)

வாயுவாஹன: எனவே, பகவான் ‘வாயுவாஹன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் ஆவஹ முதலிய ஏழு வகையான காற்றுகளை செலுத்துகிறார் (அல்லது அந்த ஏழு காற்றுகளின் மூலம் பயணிக்கிறார்). எனவே, அவர் ‘வாயுவாஹன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஏழு வகையான காற்றுகள் – பூமிக்கும், மேகங்களுக்கும் இடையில் உள்ள காற்று ஆவஹ, மேகங்களுக்கு, சூரியனுக்கும் இடையில் உள்ளது ப்ரவஹ, சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் அனுவஹ, சந்திரனுக்கும் நக்ஷத்திரங்களுக்கும் இடையில் ஸம்வஹ, நக்ஷத்திரங்களுக்கும் மற்ற கிரஹங்களுக்கும் இடையில் விவஹ, கிரஹங்களுக்கும் ஸப்தரிஶி மண்டலத்திற்கும் இடையில் பராவஹ மற்றும் ஸப்தரிஶி மண்டலம் மற்றும் த்ருவ நக்ஷத்திரத்திற்கு இடையில் உள்ளது பரிவஹ எனப்படும்.

————–

  1. ஓம்வாஸுதேவாயநம:

வஸதி வசிக்கிறார்

வாஸயதி ஆச்சாதயதி மறைத்து  வைக்கிறார்

ஸர்வமிதி வா அனைத்து உயிரினங்களுக்குள்ளும்

வாஸு: இவை ‘வாஸு:’ என்ற சொல்லிற்குப் பொருளாகும்.

தீவ்யதி ‘திவ்’ எனும் வேர்ச்சொல்லிற்கு க்ரீடயதி விளையாடுதல்,

விஜிகீஶதே வெற்றிகொள்ளுதல்,

வ்யவஹரதி இந்தப் ப்ரபஞ்சத்தின் அனைத்து காரியங்களையும் நடத்துதல்,

த்யௌததே ஒளிவீசுதல்,

ஸ்தூயதே துதிக்கப்பெறுதல்,

கச்சதீதி எங்கும் செல்வது என்று பொருள்.

வாஸுச்சாஸௌ ‘வாஸு’ வாகவும்

தேவஸ்சேதி ‘தேவனாகவும்’ இருப்பதனால்

வாஸுதேவ: பகவான் ‘வாஸுதேவ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘வாஸு’ என்ற சொல்லிற்கு அனைத்து உயிரினங்களுக்குள்ளும் உறைதல் (வசித்தல்) மற்றும் அனைத்தையும் (தன் மாயையினால்) மறைத்து வைத்தல் என்று பொருள். ‘தேவன்’ என்றால் விளையாடுதல், வெற்றிபெறுதல், அனைத்து காரியங்களையும் நடத்துதல், ஒளிவீசுதல், துதிக்கப்பெறுதல் மற்றும் எங்கும் செல்லுதல் என்று பொருள். பகவான் ‘வாஸு’ வாகவும் தேவனாகவும் (இந்த இரண்டாலும் குறிக்கப்படும் அனைத்துப் பண்புகளையும் உடையவராக) இருப்பதால் ‘வாஸுதேவ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

சாதயாமி ஜகத் ஸர்வம் பூத்வா ஸூர்ய இவாம்ஶுபி: |

ஸர்வபூதாதிவாசஸ்ச்ச வாஸுதேவஸ்தத: ஸ்ம்ருத: || (மஹாபாரதம் ஶாந்தி பர்வம் 341.41)

மஹாபாரதம் ஶாந்தி பர்வத்தில் கூறப்பட்டுள்ளது: கதிரவனின் வடிவில் எனது கிரணங்களால் இந்த உலகனைத்தையும் மூடுகிறேன் மற்றும் அனைத்து உயிரினங்களும் உறையும் இடமாக இருக்கிறேன். எனவே, நான் ‘வாஸுதேவன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறேன்.

வாஸனாத் ஸர்வபூதானாம் வஸுத்வாத் தேவயோனித: |

வாஸுதேவஸ்ததோ வேத்ய:… || (மஹாபாரதம் உத்யோக பர்வம் 70.3)

மஹாபாரதம் உத்யோக பர்வத்தில் கூறப்பட்டுள்ளது: தனது மாயத்திரையினால் அனைத்து உயிரினங்களையும் மறைப்பதனாலும், தனது மகிமைமிக்க ப்ரகாசத்தினாலும் (ஒளியினாலும்), தேவர்களின் பிறப்பிடமாக இருப்பதனாலும் (அவர்களை தோற்றுவிப்பதாலும்) பகவான் ‘வாஸுதேவன்’ என்று அறியப்படுகிறார்.

இதி உத்யோக பர்வணி | இவ்வாறு மஹாபாரதம் உத்யோக பர்வத்தில் கூறப்பட்டுள்ளது.

ஸர்வத்ராஸௌ ஸமஸ்தம் ச வஸத்யத்ரேதி வை யத: |

தத: ஸ வாஸுதேவேதி வித்வித்பி: பரிபட்யதே || (ஸ்ரீவிஶ்ணு புராணம் 1.2.12)

ஸ்ரீவிஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: அந்த பரமாத்மா அனைத்து உலகங்களிலும் உள்ள அனைத்துப் பொருட்களிலும் வசிக்கிறார் (உறைகிறார்). எனவே, கற்றறிந்தோர் அவரை வாஸுதேவன் என்று அழைக்கின்றனர்.

ஸர்வாணி தத்ர பூதானி வஸந்தி பரமாத்மனி |

பூதேஶு ச ஸ ஸர்வாத்மா வாஸுதேவஸ்தத: ஸ்ம்ருத: || (ஸ்ரீவிஶ்ணு புராணம் 6.5.80)

ஸ்ரீவிஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: அனைத்து உயிரினங்களும் அந்த பரம்பொருளுக்குள் வசிக்கின்றன. அந்த பரமாத்மாவும் அனைத்து உயிரினங்களுக்குள்ளும் வசிக்கிறார். எனவே, அவர் வாஸுதேவன் என்று அழைக்கப்படுகிறார்.

இதி ச விஶ்ணு புராணே | இவ்வாறு ஸ்ரீவிஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

————

  1. ஓம்ப்ருஹத்பானவேநம:

ப்ருஹந்தோ பானவோ யஸ்ய சந்த்ரஸூர்யாதிகாமின: |

தைர்விஶ்வம் பாஸயதி ய: ஸ ப்ருஹத்பானுருச்யதே ||

எவருக்கு கதிரவன் மற்றும் திங்களுக்குள் செல்லக்கூடியதான மிகச்சிறந்த (மிகத் தீவிரமான) கிரணங்கள் உள்ளனவோ (எவர் அந்த கதிரவனுக்கும், திங்களுக்கும் கூட ஒளி வழங்குகிறாரோ), எவர் அந்த கிரணங்களால் அனைத்துப் ப்ரபஞ்சத்திற்கும் ஒளி வழங்குகிறாரோ அந்த பரமாத்மா ‘ப்ருஹத்பானு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————-

  1. ஓம்ஆதிதேவாயநம:

ஆதி: காரணம் அனைத்திற்கும் ‘ஆதியாக’ அதாவது அனைத்திற்கும் காரணமாக இருப்பதனாலும்

ச சாஸௌ மற்றும்

தேவஸ்ச்சேதி தேவனாக இருப்பதனாலும்

ஆதிதேவ: பகவான் ‘ஆதிதேவ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்

த்யௌதனாதி குணவான் தேவ: (முன்பு வாஸுதேவ: என்ற திருநாமத்தில் கூறப்பட்ட) ஒளிமிக்கவர் போன்ற குணங்களால் நிறைந்தவர் ‘தேவனாவார்’..

அனைத்திற்கும் மூல காரணமாக இருப்பதனாலும் (ஆதி) தேவனாக இருப்பதாலும் பகவான் ‘ஆதிதேவ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இங்கு தேவன் என்ற சொல்லிற்கு முன்திருநாமமான வாஸுதேவ: என்பதில் கூறப்பட்ட அனைத்துப் பொருட்களையும் நாம் ஏற்றுக்கொள்ளலாம்.

————-

  1. ஓம்புரந்தராயநம:

ஸுரஶத்ரூணாம் தேவர்களின் எதிரிகளின் (அதாவது அஸுரர்களின்)

புராணாம் இருப்பிடங்களை (நகரங்களை)

தாரணாத் அழிப்பதனால்

புரந்தர: பகவான் ‘புரந்தர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தேவர்களின் எதிரிகளான அஸுரர்களின் நகரங்களை (இருப்பிடங்களை) அழிக்கிறார். எனவே, அவர் ‘புரந்தர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘வாசம்யம புரந்தரௌ ச’ (பாணினி ஸூத்ரம் 6.3.69)

இதி பாணினினா நிபாதநாத் | இந்த பாணினியின் ஸூத்திரத்தின் படி ‘தார’ என்ற விகுதி ‘தர’ என்று குறுகியுள்ளது.

————-

  1. அஶோகஸ்தாரணஸ்தார: ஶூர: ஶௌரிர்ஜனேஶ்வர:|

அனுகூல: ஶதாவர்த்த: பத்மீ பத்மநிபேக்ஷண: ||

இந்த முப்பத்து ஏழாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. அஶோக:, 337. தாரண:, 338. தார:, 339. ஶூர:, 340. ஶௌரி:, 341. ஜனேஶ்வர: |
  2. அனுகூல:, 343. ஶதாவர்த்த:, 344. பத்மீ, 345. பத்மநிபேக்ஷண: ||

————

  1. ஓம்அஶோகாயநம:

ஶோகாதிஶட்பிர்வர்ஜித: சோகம் முதலிய ஆறு வகை துன்பங்கள் அற்றவர் ஆதலால்

அஶோக: பகவான் ‘அஶோக:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் சோகம் முதலிய ஆறு வகை துன்பங்கள் அற்றவர். எனவே அவர் ‘அஶோக:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———-

  1. ஓம்தாரணாயநம:

ஸம்ஸாரஸாகராத் இந்தப் பிறவியென்னும் பெருங்கடலினின்று

தாரயதீதி (நம்மைத்) தாண்டுவிப்பதால்

தாரண: பகவான் ‘தாரண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் நம்மை இந்தப் பிறவியென்னும் பெருங்கடலினின்று தாண்டுவிக்கிறார். எனவே, அவர் ‘தாரண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தாரயதி என்ற வடமொழி சொல்லிற்கு காத்தல், தாண்டுதல், தாண்டுவித்தல் ஆகிய பொருள்கள் உண்டு. இந்தத் திருநாமத்தில் தாண்டுவித்தல் என்ற பொருளில் வருகிறது.

———-

  1. ஓம்தாராயநம:

கர்ப (ஒரு தாயின் கர்ப்பத்தில்) உருவாதல்

ஜன்ம பிறத்தல்

ஜரா மூப்பு

ம்ருத்யு இறத்தல்

லக்ஷணாத் பயாத் (இவற்றால் நமக்கு ஏற்படும்) அச்சங்களைப்

தாரயதீதி போக்குகிறார்

தார: எனவே பகவான் ‘தார:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் நமது கர்ப்பவாசம், பிறத்தல், மூப்படைதல் மற்றும் இறப்பு ஆகிய (அதாவது பிறப்பு இறப்பென்னும் இந்தப் பிறவி சுழற்சிகளால் உருவாகும்) அச்சங்களைப் போக்குகிறார். எனவே, அவர் ‘தார:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தாரயதி என்ற வடமொழி சொல்லிற்கு காத்தல், தாண்டுதல், தாண்டுவித்தல் ஆகிய பொருள்கள் உண்டு. இந்தத் திருநாமத்தில் காத்தல் என்ற பொருளில் வருகிறது.

—————-

  1. ஓம்ஶூராயநம:

விக்ரமணாத் மிகுந்த வீரமும், துணிவும் உடையவராதலால்

ஶூர: பகவான் ‘ஶூர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் மிகுந்த வீரமும், துணிவும் உடையவர். எனவே, அவர் ‘ஶுர: ‘ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————–

  1. ஓம்ஶௌரயேநம:

ஶூரஸ்யாபத்யம் ஸூரரின் மகனான

வஸுதேவஸ்ய வஸுதேவரின்

ஸுத: மகனாகப் பிறந்ததால்

ஶௌரி: பகவான் ‘ஶௌரி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் ஸூரரின் மகனான வஸுதேவருக்கு மகனாக (ஸூர வம்ஸத்தில்) பிறந்ததால் ‘ஶௌரி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வஸுதேவரின் தந்தையின் பெயர் ‘ஸூரர்’. அவரது பேரனாதலால் பகவான் ‘ஶௌரி:’ என்று அழைக்கபடுகிறார்.

————

  1. ஓம்ஜனேஶ்வராயநம:

ஜனானாம் ஜந்தூனாம் ‘ஜனங்கள்’ அதாவது அனைத்து உயிரினங்கள்

ஈஶ்வரோ அவை அனைத்தையும் ஆட்சி செய்பவராக இருப்பதால்

ஜனேஶ்வர: பகவான் ‘ஜனேஶ்வர:’ என்ற திருநாமத்தால் அழைக்கபடுகிறார்.

அனைத்து உயிரினங்களையும் ஆளும் ஈஶ்வரராய் இருப்பதால் பகவான் ‘ஜனேஶ்வர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

  1. ஓம்அனுகூலாயநம:

ஆத்மாவேன ஹி உள்ளுறை ஆன்மாவாக இருக்கிறார்

ஸர்வேஶாம் அனைவரின்

அனுகூல: எனவே, பகவான் ‘அனுகூல:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்,

ந ஹி ஸ்வஸ்மின் ப்ராதிகூல்யம் தனக்குக் கெடுதலை விளைவிக்கும் செயல்களை

ஸ்வயமாசரதி தானே எவரும் புரிவதில்லை.

பகவான் அனைவரின் உள்ளுறை ஆன்மாவாக இருக்கிறார். எவரும் தனக்கு தானே கெடுதல் தரும் செயல்களைப் புரிவதில்லை. எனவே, பகவானும் நமக்கு உள்ளுறை ஆன்மாவாக இருப்பதால் நமக்கு நன்மைகளையே செய்கிறார் (கெடுதல்களை அல்ல). எனவே, அவர் ‘அனுகூல:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————–

  1. ஓம்ஶதாவர்த்தாயநம:

தர்மத்ராணாய அறத்தைக் காக்கும் பொருட்டு (அல்லது அறத்தை நிலைநிறுத்தும் பொருட்டு)

ஶதம் நூற்றுக்கணக்கான

ஆவர்த்தனானி ப்ராதுர்பாவா அஸ்யேதி ‘ஆவர்த்தனங்கள்’ அதாவது அவதாரங்களை எடுக்கிறார்

ஶதாவர்த்த: எனவே பகவான் ‘ஶதாவர்த்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் அறத்தைக் காத்து, நிலைநிறுத்தும் பொருட்டு நூற்றுக்கணக்கான அவதாரங்களை எடுக்கிறார். எனவே, அவர் ‘ஶதாவர்த்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

  1. இங்கு ஆவர்த்தனம் என்ற சொல் ‘அவதாரம்’ என்ற பொருளில் விவரிக்கப்பட்டுள்ளது
  2. ஆதிசங்கர பகவத்பாதாள் பகவானுக்கு தசாவதாரம் என்றில்லை; நூற்றுக்கணக்கான அவதாரங்கள் உள்ளன என்று சூசகமாகத் தெரிவிக்கிறார்.
  3. நாமெல்லாம் நன்கறிந்த ஸ்ரீமத் பகவத் கீதை ஸ்லோகம் இது: “பரித்ராணாய ஸாதூனாம் வினாஶாய ச துஶ்க்ருதாம்தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே

நாடிஶதே நமக்குள் இருக்கும் நூற்றுக்கணக்கான நாடிகளில்

ப்ராணரூபேண ப்ராணவாயுவின் வடிவில்

வர்தத இதி வா வசிக்கிறார்

ஶதாவர்த்த: எனவே, பகவான் ‘ஶதாவர்த்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, பகவான் நமக்குள் இருக்கும் நூற்றுக்கணக்கான நாடிகளில் ப்ராணவாயுவின் வடிவில் வசிக்கிறார். எனவே, அவர் ‘ஶதாவர்த்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நமது உடலில் 72000 நாடிகள் இருப்பதாக கூறுகின்றனர். மரண காலத்தில் நமது ஆத்மா இவற்றுள் எந்த நாடியின் வழியாகவும் வெளியேறலாம். ஆனால், முக்தி அடைவோரின் ஆத்மா ஸுஶும்னா எனும் நாடியின் வழியே நமது உச்சந்தலையிலுள்ள ப்ரஹ்மரந்தரத்தின் வழியே புறப்பட்டு செல்லும்.

————

  1. ஓம்பத்மினேநம:

பத்மம் தாமரையை

ஹஸ்தே கைகளில்

வித்யத இதி ஏந்தியுள்ளார்

பத்மீ எனவே பகவான் ‘பத்மீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தனது கையில் தாமரையை ஏந்தியுள்ளார். எனவே அவர் ‘பத்மீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————-

  1. ஓம்பத்மநிபேக்ஷணாயநம:

பத்மநிபே தாமரையை ஒத்த

ஈக்ஷணே த்ருஶாவஸ்யேதி ‘ஈக்ஷணை’ அதாவது இரண்டு கண்களை உடையவராதலால்

பத்மநிபேக்ஷண: எனவே பகவான் ‘பத்மநிபேக்ஷண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தாமரையை (தாமரை இதழ்களை) ஒத்த இரு கண்களை உடையவராதலால் அவர் ‘பத்மநிபேக்ஷண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————-

  1. பத்மனாபோSரவிந்தாக்ஷ: பத்மகர்ப: ஶரீரப்ருத்|

மஹர்த்திருத்தோ வ்ருத்தாத்மா மஹாக்ஷோ கருடத்வஜ: ||

இந்த முப்பத்து எட்டாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. பத்மநாப:, 347. அரவிந்தாக்ஷ:, 348. பத்மகர்ப:, 349. ஶரீரப்ருத்|
  2. மஹர்த்தி:, 351. ருத்த:, 352. வ்ருத்தாத்மா, 353. மஹாக்ஷ:, 354. கருடத்வஜ:||

————–

  1. ஓம்பத்மநாபாயநம:

பத்மஸ்ய (இதயத்) தாமரையின்

நாபௌ மத்யே கர்ணிகாயாம் நாபிக்குள் அதாவது அதன் நடுவில் உள்ள கர்ணிகையில்

ஸ்தித இதி வீற்றிருக்கிறார்

பத்மநாப:  எனவே பகவான் ‘பத்மநாப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் நமது இதயத்தாமரையின் நடுவில் அதன் கர்ணிகையில் வீற்றிருக்கிறார் (தியானத்தின் உயர் நிலையில் அங்கு நமக்கு அவர் காட்சி தருகிறார்). எனவே, அவர் ‘பத்மநாப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

48வது திருநாமத்தில் தனது நாபியில் ஜகத் காரணமான தாமரையை உடையவர் என்று ஆச்சார்யர் உரை அளித்திருந்தார்

196வது திருநாமத்தில் தாமரையைப் போன்ற அழகிய நாபியை (தொப்புட்குழியை) உடையவர் என்று உரை அளித்திருந்தார் .

இங்கு, இதயத்தாமரையின் நடுவில் வீற்றிருக்கிறார் என்று பகவத்பாதாள் உரை அளித்துள்ளார்

———–

  1. ஓம்அரவிந்தாஷாயநம:

அரவிந்த தாமரையை

ஸத்ருஶே ஒத்த

அக்ஷிணீ அஸ்யேதி அழகிய இரு திருக்கண்களை உடையவர்

அரவிந்தாக்ஷ: எனவே பகவான் ‘அரவிந்தாக்ஷ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தாமரையை ஒத்த அழகிய இரு திருக்கண்களை உடையவராதலால் அவர் ‘அரவிந்தாக்ஷ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

“பத்மநிபேக்ஷண:” என்ற 345-வது திருநாமத்திற்கும் இதே பொருள்தான். ஆனால், நாமம் வெவ்வேறாக இருப்பதால்  புனர் யுக்தி தோஷம்  இல்லை.

————-

  1. ஓம்பத்மகர்பாயநம:

பத்மஸ்ய ஹ்ருதயாக்யஸ்ய உள்ளத் தாமரையின்

மத்யே நடுவில்

உபாஸ்யத்வாத் (ஞான மார்க்கத்தில் தேர்ச்சி பெற்றோரால்) வணங்கப்படுகிறார்

பத்மகர்ப: எனவே பகவான் ‘பத்மகர்ப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

(ஞான மார்க்கத்தில் தேர்ச்சி பெற்றோரால் தத்தம்) இதயத் தாமரையின் நடுவில் வழிபடப்படுகிறார். எனவே, பகவான் ‘பத்மகர்ப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நம் அனைவரின் இதய கமலத்திலும் பகவான் வீற்றிருந்தாலும், த்யானத்தில் தேர்ச்சி பெற்றோரால் மட்டுமே அவரை காண இயலும்.

———–

  1. ஓம்ஶரீரப்ருதேநம:

போஶயன் ஊட்டமளித்து வளர்க்கிறார்

அன்னரூபேண அன்னத்தின் (உணவின்) வடிவிலும்

ப்ராணரூபேண வா மூச்சுக்காற்றின் (ப்ரணவாயுவின்) வடிவிலும்

ஶரீரிணாம் ஶரீராணி உடல்படைத்த ஆத்மாக்களின் (உயிரினங்களின்) உடல்களை

தாரயதீதி தாங்குகிறார்

ஶரீரப்ருத் எனவே பகவான் ‘ஶரீரப்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் உணவாகவும், ப்ரணவாயுவாகவும் அனைத்து உயிரினங்களின் உடல்களையும் ஊட்டமளித்து, வளர்த்துத் தாங்குகிறார். எனவே அவர் ‘ஶரீரப்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸ்வமாயையா தனது ஆச்சர்யமான மாயையினால்

ஶரீராணி பற்பல உடல்களை (சரீரங்களை)

பிபர்தீதி வா ஏற்றுக் கொள்கிறார் (தரிக்கிறார்)

ஶரீரப்ருத் எனவே பகவான் ‘ஶரீரப்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, தனது மாயையினால் பற்பல சரீரங்களை (உடல்களை) ஏற்கிறார் (தரிக்கிறார்). எனவே, பகவான் ‘ஶரீரப்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————–

  1. ஓம்மஹர்த்தயேநம:

மஹதீ மிகச்சிறந்த

ருத்திர் விபூதிர் அஸ்யேதி ‘ருத்தி’ அதாவது செல்வச் செழிப்பு உடையவர்

மஹர்த்தி: எனவே பகவான் ‘மஹர்த்தி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானின் செல்வச் செழிப்பு அளவிடமுடியாதது, மிகச்சிறந்தது.  எனவே, அவர் ‘மஹர்த்தி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————–

  1. ஓம்ருத்தாயநம:

ப்ரபஞ்சரூபேண இந்தப் பிரபஞ்சத்தின் வடிவில்

வர்த்தமானத்வாத் இருப்பதனால்

ருத்த: பகவான் ‘ருத்த:’ என்ற  திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் இந்தப் பிரபஞ்சத்தின் வடிவில் இருப்பதனால் ‘ருத்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————–

  1. ஓம்வ்ருத்தாத்மனேநம:

வ்ருத்த: புராதன ‘வ்ருத்த:’ அதாவது மிகப் பழமையான

ஆத்மா யஸ்யேதி ஆத்மாவாக இருப்பதால்

வ்ருத்தாத்மா பகவான் ‘வ்ருத்தாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் ஒருவரே ஆதியானவர். அனைவருக்கும் முன்பே இருக்கும் அவரே மிகப் பழமையான ஆத்மாவாவார். எனவே அவர் ‘வ்ருத்தாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————–

  1. ஓம்மஹாக்ஷாயநம:

மஹதீ அக்ஷிணீ மிகச்சிறந்த திருக்கண்களை உடையவர்

மஹாந்த்யக்ஷீணி வா அஸ்யேதி  மிகப் பெரியதான திருக்கண்களை உடையவர்

மஹாக்ஷ: எனவே பகவான் ‘மஹாக்ஷ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் மிகச்சிறந்த, மிகப் பெரியதான திருக்கண்களை உடையவர். எனவே, அவர் ‘மஹாக்ஷ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————-

  1. ஓம்கருடத்வஜாயநம:

கருடாங்கோ கருடனின் உருவம் பொரித்த

த்வஜோ யஸ்யேதி கொடியை உடையவர் ஆதலால்

கருடத்வஜ: பகவான் ‘கருடத்வஜ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானின் கருடனின் உருவம் பொரித்த கொடியை கொண்டுள்ளார். எனவே, அவர் ‘கருடத்வஜ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கருடக் கொடி என்பது (ஸ்ரீவத்ஸம், மார்பில் திருமகள் போன்றே) பகவான் நாராயணருக்கே உரித்த அடையாளமாகும். பழமையான சங்க இலக்கிய நூலான பரிபாடலில் கூட இது குறிப்பிடப்பட்டுள்ளது (உதாரணமாக பாடல் எண். 1 – “சேவல் அம் கொடியோய்!”)

—————-

  1. அதுல: ஶரபோ பீம: ஸமயஜ்ஞோ ஹவிர்ஹரி:|

ஸர்வலக்ஷணலக்ஷண்யோ லக்ஷ்மீவான் ஸமிதிஞ்ஜய: ||

இந்த முப்பத்து ஒன்பதாவது ஸ்லோகத்தில் 8 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. அதுல:, 356. ஶரப:, 357. பீம: (அபீம:), 358. ஸமயஜ்ஞய:, 359. ஹவிர்ஹரி: |
  2. ஸர்வலக்ஷணலக்ஷண்ய:, 361. லக்ஷ்மீவான், 362. ஸமிதிஞ்ஜய:||

———

  1. ஓம்அதுலாயநம:

துலோபமானமஸ்ய  அவருக்கு ஈடிணையானவர் எவரும்

வித்யத இதி இல்லை

அதுல: எனவே, பகவான் ‘அதுல:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானுக்கு ஈடிணையானவர் எவருமில்லை. எனவே அவர் ‘அதுல:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ந தஸ்ய ப்ரதிமாஸ்தி யஸ்ய நாம மஹத்யஶ:’ (ஶ்வேதாஶ்வதர உபநிஶத் 4.19)

ஶ்வேதாஶ்வதர உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:

புகழ்பெற்ற திருநாமங்களை உடைய அந்த பரப்ரஹ்மத்திற்கு ஈடானவர் எவரும் இல்லை.

ந த்வத்ஸமோSஸ்த்யப்யதிக: குதோSன்ய:’ (ஸ்ரீமத் பகவத் கீதை 11.43)

ஸ்ரீமத் பகவத் கீதையில் பார்த்தன் பகவானைப் பார்த்துக் கூறுகிறான்: உனக்கு நிகர் யாருமில்லை. எனில், உனக்கு மேல் வேறுயாவர்?

——————

  1. ஓம்ஶரபாயநம:

ஶரா: ஶரீராணி உடலை “ஶரா” என்று அழைக்கின்றனர்

ஶீர்யமாணத்வாத்தேஶு அழியக்கூடியதால்

ப்ரத்யகாத்மதயா (அனைவரையும் காக்க வேண்டும் என்ற) தன்னலத்தோடு

பாதீதி அதனுட்புகுந்து (அனைத்து உடல்களுக்குள்ளும் புகுந்து) உறைவதால்

ஶரப: பகவான் ‘ஶரப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து உயிரினங்களின் உடல்களுமே அழியக்கூடியவை. எனவே அவற்றை ‘ஶர’ என்று அழைக்கின்றனர். அந்த ‘ஶரங்களுக்குள்’ புகுந்து ஆன்மாவாக உறைவதால் பகவான் ‘ஶரப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

  1. ஓம்பீமாயநம:

பிபேத்யஸ்மாத்ஸர்வமிதி அனைவரும் பகவானிடம் அச்சம் கொண்டுள்ளனர்

பீம: எனவே பகவான் ‘பீம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைவரும் பகவானிடம் (அவரது பராக்ரமம் மற்றும் மேன்மையினால்) அச்சம் கொண்டுள்ளனர். எனவே, பகவான் ‘பீம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘பீமாதயோSபாதானே’ (பாணினி ஸூத்ரம் 3.4.74)

இதி பாணினிஸ்ம்ருதே: இந்த பாணினி ஸூத்ரத்தை நினைவில் கொள்ளவேண்டும் (பீம என்ற பெயர் காரணத்தை விளக்க)

ஸன்மார்கவர்த்தினாம் நன்னெறியில் நடப்போர்

அபீம: அவரிடம் அச்சம் கொள்ளத் தேவையில்லை. எனவே, அவர் ‘அபீம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, நன்னெறியில் நடப்போருக்கு அவர் அச்சம் அளிப்பதில்லை. எனவே, அவர் ‘அபீம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இவ்வாறு இருவகையாய் பொருளுரைத்திருந்தாலும், ‘பீம:’ என்பதே ஆன்றோரால் திருநாம வரிசையில் கணக்கிடப்பட்டுள்ளது.

———-

  1. ஓம்ஸமயஜ்ஞாயநம:

ஸ்ருஶ்டிஸ்திதிஸம்ஹாரஸமயவித் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் புரிவதற்கான சரியான சமயத்தை (நேரத்தை) அறிந்துள்ளார்

ஸமயஜ்ஞய: எனவே பகவான் ‘ஸமயஜ்ஞய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

முத்தொழில்களான படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் ஆகியவற்றை புரிவதற்கான சரியான நேரத்தை அறிந்துள்ளபடியால் பகவான் ‘ஸமயஜ்ஞய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஶட்ஸமயாஜ்ஜானாதீதி வா ஆறு காலங்களையும் (இளவேனில், முதுவேனில், கார்காலம், கூதிர்காலம், முன்பனிக்காலம் மற்றும் பின்பனிக்காலம்) சரிவர அறிந்துள்ளபடியால்

ஸமயஜ்ஞய: எனவே பகவான் ‘ஸமயஜ்ஞய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் ஆறு ருதுக்களை (ஆறு காலங்களை) சரிவர அறிந்துள்ள படியால் ‘ஸமயஜ்ஞய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இங்கு ஆறு காலங்களை அறிதல் மட்டுமே பொருளன்று. ஆச்சார்யாள் நேரடியாய் குறிப்பிடாவிடினும் அந்த ஆறு காலங்களை தக்க நேரத்தில் வரும்படி செய்பவரும் பகவான்தான் என்ற உட்பொருளிலேயே இந்த விளக்கம் அளித்திருப்பார் என்று எண்ணுகிறேன்..

ஸர்வபூதேஶு அனைத்து உயிர்களிடத்தும்

ஸமத்வம் ஏற்றத்தாழ்வின்றி ஒரு நோக்கில் இருப்பது

யஜனம் பகவானின் வழிபாடு

ஸாத்வஸ்யேதி வா மிகச்சிறந்த

ஸமயஜ்ஞய: எனவே பகவான் ‘ஸமயஜ்ஞய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானுக்கு செய்யப்படும் வழிபாடுகளில் மிகச்சிறந்தது எதுவெனில், அனைத்து உயிர்களிடத்தும் ஏற்றத்தாழ்வு பாராட்டாது ஒரு நோக்கில் அவை அனைத்தையும் சமமாக நடுத்துவதேயாகும். எனவே பகவான் ‘ஸமயஜ்ஞய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்தையும் ‘ஸமமாக’ நடத்துவதே அவருக்கு செய்யப்படும் ‘யஜ்ஞம்’.

‘ஸமத்வமாராதனமச்யுதம்’ (ஸ்ரீவிஶ்ணு புராணம் 1.17.90)

ஸ்ரீவிஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: சமத்துவமே (அனைத்து உயிரினங்களையும், மனிதர்களையும் ஒன்றாக நடத்துவதே) பகவான் அச்சுதருக்கு செய்யப்படும் சிறந்த வழிபாடாகும்.

இதி ப்ரஹலாதவசனாத் | இது ஸ்ரீவிஶ்ணு புராணத்தில் பக்த ப்ரஹ்லாதனின் கூற்றாகும்.

——–

  1. ஓம்ஹவிர்ஹரயேநம:

யஜ்ஞேஶு வேள்விகளில்

ஹவிர்பாகம் ஆகுதி செய்யப்படும் பொருட்களை ஹரதீதி ஏற்றுக்கொள்வதால்

ஹவிர்ஹரி: பகவான் ‘ஹவிர்ஹரி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து வேள்விகளும் பகவானைக் குறித்தே செய்யப்படுகின்றன. அவர் அனைத்து வேள்விகளிலும் ஆகுதி செய்யப்படும் பொருட்களை ஏற்றுக்கொள்கிறார். எனவே அவர் ‘ஹவிர்ஹரி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘அஹம் ஹி ஸர்வ யஜ்ஞானாம் போக்தா ச ப்ரபுரேவ ச’ (ஸ்ரீமத் பகவத் கீதை 9.24)

ஸ்ரீமத் பகவத் கீதையில் பகவான் கூறுகிறார்: நானே வேள்விகளில் எல்லாம் உணவு உண்பவன்; நானே (வேள்விகளின்) தலைவன்.

ஹர என்ற சொல்லிற்கு கவர்தல், பெற்றுக்கொள்ளுதல் போன்ற பல பொருட்கள் உண்டு. இங்கு, கவர்கிறார் என்பதை விட வேள்வியின் நாயகனாய் இருந்து ஆகுதிகளைப் பெறுகிறார் என்பதே சிறந்த பொருளாக இருக்கும்.

இதி பகவத்வசனாத் இது (ஸ்ரீ பகவத் கீதையில்) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கூற்றாகும் 

இனி ஆச்சார்யாள், இந்த இரண்டு சொற்களையும் (ஹவி:, ஹரி:) தனித்தனியே பிரித்தும் பொருளுரைக்கிறார். இவ்வாறு, விளக்கியிருந்தாலும் திருநாமக் கணக்கில் ‘ஹவிர்ஹரி:’ என்று ஒரு திருநாமமாகவே ஆச்சார்யாள் கணக்கிட்டுள்ளார்.

அதவா அல்லது

ஹூயதே ஹவிஶேதி வேள்விகளில் ஆகுதி கொடுக்கப்படுவது

ஹவி: ‘ஹவிஸ்’ எனப்படும்.

அல்லது, பகவானே ஆகுதிப் பொருளாக இருப்பதால் அவர் ‘ஹவி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘அபத்னன் புருஶம் பஶும்’ (புருஶ ஸூக்தம் 1)

புருஶ ஸூக்தத்தில் கூறியுள்ளபடி:

(வேள்வியில்) புருஶ ரூபமான பசுவை (ஆகுதிப் பொருளை) கட்டி வைத்தனர்

இதி ஹவிஶ்டம் ஶ்ரூயதே இந்த புருஶ ஸூக்தத்தில் பரமபுருஶனே ஆகுதிப் பொருளாக கூறப்பட்டுள்ளது.

ஸ்ம்ருதி மாத்ரேண அவரை நினைத்த அளவிலேயே

பும்ஸாம் மனிதர்களின் பாபம் பாவங்களையும்

ஸம்ஸாரம் வா பிறவிச்சுழல்களையும்

ஹரதீதி அழிப்பதால்

ஹரி: பகவான் ‘ஹரி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அவரை நினைத்த அளவிலேயே மனிதர்களின் பாவங்களையும், பிறவிச்சுழல்களையும் நீக்குகிறார். எனவே பகவான் ‘ஹரி’ என்று அழைக்கப்படுகிறார்.

ஹரித்வர்ணத்வாத் வா பச்சை நிற மேனியனாய் இருப்பதால்

ஹரி: பகவான் ‘ஹரி’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, பச்சை நிற மேனியனாய் இருப்பதால் பகவான் ‘ஹரி’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஹராம்யகம் ச ஸ்மர்த்ருணாம் ஹவிர்பாகம் க்ரதுஶ்வஹம் |

வர்ணஸ்ச மே ஹரி: ஶ்ரேஶ்டஸ்தஸ்மாத் ஹரிர் அஹம் ஸ்ம்ருத: ||

என்னையே எண்ணுவோரின் பாபங்களை அழைக்கிறேன், வேள்விகளில் வழங்கப்படும் ஆகுதிகளை ஏற்கிறேன்,  மிகச்சிறந்த பச்சை வண்ணனாக இருக்கிறேன். எனவே, என்னை அனைவரும் ‘ஹரி’ என்று அழைக்கின்றனர்.

இதி பகவத்வசனாத் | இவ்வாறு பகவான் கூறியுள்ளார் (இந்த ஸ்லோகம் மஹாபாரதம் ஶாந்தி பர்வத்தில் இருப்பதாக கூறுகின்றனர்).

பச்சை மா மலைபோல் மேனி….(தொண்டரடிப்பொடி ஆழ்வார்)

ஹரிர் ஹரதி பாபானி (ப்ரஹலாதன் அருளிய ஹர்யஶ்டகம்)

————

  1. ஓம்ஸர்வலக்ஷணலக்ஷண்யாயநம:

ஸர்வைர்லக்ஷணை: அனைத்து குறியீடுகளிலும் (விளக்கங்கள்)

ப்ரமாணைர்லக்ஷணம் ஞானம் ஜாயதே மிகச்சிறந்தது ப்ரமாணங்களை (வேதங்கள் மற்றும் வேதாந்தங்கள்) அறிவதனால் பிறக்கும் உண்மையறிவாகும்

யத்தத்வினிர்திஶ்டம் அந்த அறிவால் விளக்கப்படும்

ஸர்வலக்ஷணலக்ஷணம் தத்ர ஸாது:  மேன்மையான பரம்பொருளே (பரமாத்மாவே) ‘ஸர்வலக்ஷணலக்ஷணம்’ ஆகும்

ஸர்வலக்ஷணலக்ஷண்ய: எனவே பகவான் ‘ஸர்வலக்ஷணலக்ஷண்ய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தஸ்யைவ பரமார்த்தத்வாத் ஏனெனில், பகவான் ஒருவரே அறியப்படுபொருளாவர்.

இந்தப் ப்ரபஞ்சத்திலுள்ள அனைத்து இலக்கணைகள் மற்றும் குறியீடுகளில், வேதங்கள் மற்றும் வேதாந்தங்களைக் கற்று அதன் விளைவான அறிவால் விளங்கும் பொருளே மிகச்சிறந்ததாகும். அவ்வாறு, நமது உண்மையறிவால் அறியப்படும் பொருட்களிலேயும் பரம்பொருளான பகவானே மிகச்சிறந்தவராவார். எனவே, அவர் ‘ஸர்வலக்ஷணலக்ஷண்ய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

—————

  1. ஓம்லக்ஷ்மீவதேநம:

லக்ஷ்மீரஸ்ய திருமகள்

வக்ஷஸி அவரது திருமார்பில்

நித்யம் வஸதீதி என்றும் இணைபிரியாது வசிப்பதால்

லக்ஷ்மீவான் பகவான் ‘லக்ஷ்மீவான்’ என்ற திருநாமதால் அழைக்கப்படுகிறார்.

திருமகள் பகவானது திருமார்பில் என்றும் இணைபிரியாது வசிப்பதால் அவர் ‘லக்ஷ்மீவான்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

  1. ஓம்ஸமிதிஞ்ஜயாயநம:

ஸமிதிம் யுத்தம் ‘ஸமிதி’ அதாவது போரில் (போர்களில்​)

ஜயதீதி என்றும் வெற்றி பெருவதால்

ஸமிதிஞ்ஜய: பகவான் ‘ஸமிதிஞ்ஜய:’ என்ற திருநாமதால் அழைக்கப்படுகிறார்.

பகவான் அனைத்து போர்களிலும் வெல்கிறார். எனவே அவர் ‘ஸமிதிஞ்ஜய’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

—————-

  1. விக்ஷரோ ரோஹிதோ மார்கோ ஹேதுர்தாமோதர: ஸஹ: |

மஹீதரோ மஹாபாஹோ வேகவானமிதாஶன: ||

இந்த நாற்பதாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. விக்ஷர:, 364. ரோஹித:, 365. மார்க்க:, 366. ஹேது:, 367. தாமோதர:, 368. ஸஹ: |
  2. மஹீதர:, 370. மஹாபாக:, 371. வேகவான், 372. அமிதாஶன: ||

————

  1. ஓம்விக்ஷராயநம:

விகத: இல்லை

க்ஷரோ நாஶோ ‘க்ஷரம்’ அதாவது அழிவு (அல்லது தேய்வு)

யஸ்யாஸௌ எவருக்கு

விக்ஷர: (அந்த) பகவான் ‘விக்ஷர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானுக்கு அழிவோ, தேய்வோ கிடையாதோ. எனவே அவர் ‘விக்ஷர’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

  1. ஓம்ரோஹிதாயநம:

ஸ்வச்சந்ததயா தன்னிச்சையால்

ரோஹிதாம் மூர்த்தி: சிவந்த வடிவானவராய்

மத்ஸ்யவிஶேஶமூர்த்தி: வா வஹன் ரோஹிதம் எனப்படும் ஒருவகை மீனாக அவதரித்ததால்

ரோஹித: பகவான் ‘ரோஹித:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தன்னிச்சையால் சிவந்த வடிவினராய் ரோஹிதம் என்ற ஒரு வகை மீனாக (தனது மச்சாவதாரத்தில்) தோன்றியமையால் அவர் ‘ரோஹித:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ரோஹிதம் என்றால் சிவப்பு என்றும் பொருள், ஒரு வகை மீன் என்றும் பொருள். இதை இரண்டு அர்த்தங்களாகவும் கொள்ளலாம் (சிவந்த வடிவினர் மற்றும் மீனாய்த் தோன்றியவர்). அல்லது இரண்டையும் ஒன்றிணைத்து சிவந்த வடிவான மீனாய்த் தோன்றியவர் என்றும் கொள்ளலாம்.

————-

  1. ஓம்மார்க்காயநம:

முமுக்ஷவஸ்தம் முக்தியை விழைவோர்

தேவம் பரமாத்மாவை (பகவானை)

மார்கயந்தி இதி தேடுகின்றனர்

மார்க்க: எனவே, பகவான் ‘மார்க்க:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பரமாத்மாவான பகவான் முக்தியை விழைவோரால் தேடப்படுகிறார். எனவே, அவர் ‘மார்க்க:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பரமானந்தோ மிக உயர்ந்ததான இன்பத்தை

யேன ப்ராப்யதே தரவல்லதான

ஸ மார்க்க இதி வா மார்க்கமாய் (வழியாக) இருப்பதால்

மார்க்க: பகவான் ‘மார்க்க:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, மிக உயர்ந்த இன்பத்தை (முக்தியை) தரவல்ல மார்க்கமாய் தானே இருப்பதால் பகவான் ‘மார்க்க:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————-

  1. ஓம்ஹேதவேநம:

உபாதானம் (இந்த ப்ரபஞ்சத்தின்) மூலப்பொருளாகவும்

நிமித்தம் ச காரணம் (அதை படைக்கவேண்டும் என்று எண்ணும்) நிமித்த காரணமாயும்

ஸ ஏவேதி அவரே இருப்பதால்

ஹேது: பகவான் ‘ஹேது:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்தப் ப்ரபஞ்சத்தை உருவாக்கும் மூலப்பொருளாயும், உருவாக்குபவராயும் தானே இருப்பதால் பகவான் ‘ஹேது:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மூலப்பொருள் உபாதான காரணமென்றும், அதை உருவாக்குபவர் நிமித்த காரணம் என்றும் அழைக்கப்படுவர். உதாரணமாக, மண், தங்கம், நூல், இரும்பு ஆகியவை உபாதான காரணங்கள். அதைக் கொண்டு பானை, சங்கிலி, சேலை, சுத்தியல் ஆகியவற்றை உருவாக்கவேண்டும் என்று எண்ணி (உழைக்கும்) குயவர், பொற்கொல்லர், நெசவாளி, கருமார் ஆகியோர் நிமித்த காரணங்கள். இந்தப் ப்ரபஞ்சத்திற்கு இரண்டுமே பகவான் தான்.

————-

  1. ஓம்தாமோதராயநம:

தமாதிஸாதனேனோதாரோத்க்ருஶ்டா புலனடக்கம் முதலிய முயற்சிகளால் ‘உதாரமாகும்’ அதாவது நமக்குள் தோன்றும்

மதிர்யா தயா அறிவால்

கம்யத இதி அறியப்படுவதால்

தாமோதர: பகவான் ‘தாமோதர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘தமம்’ என்ற புலனடக்கம் முதலிய முயற்சிகளால் நம்முள்ளே தோன்றும் அறிவால் (ஞானத்தால்) அறியப்படுவதால் பகவான் ‘தாமோதர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘தாம’ – தமத்தால் முதலான முயற்சிகள் + உதர – அவற்றால் மேலெழும் அறிவு. இதனால் அறியப்படுபவர் தாமோதரன்.

‘தமாத்தாமோதரோ விபு:’ (மஹாபாரதம் உத்யோக பர்வம் 70.8)

மஹாபாரதம் உத்யோக பர்வத்தில் சஞ்சயன் த்ருதராஷ்ட்ரரிடம் கூறியது:

புலனடக்கமும், பெரும் ஒளியும் கொண்டிருப்பதால் பகவான் தாமோதரன் என்று அழைக்கப்படுகிறார்.

இதி மஹாபாரதே – இவ்வாறு மஹாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது.

யஶோதயா யசோதையால்

தாம்னோதரே கயிற்றால் வயிற்றுப் பகுதியில்

பத்த இதி வா கட்டப்பட்டதால்

தாமோதர: பகவான் ‘தாமோதர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.


‘ததர்ஶ சால்பதந்தாஸ்யம் ஸ்மிதஹாஸம் சா பாலகம் |
(வெண்ணையைக் களவாடி பிடிபட்ட பொழுது, அவரது தாய்) யசோதை பகவானின் வயிற்றை சுற்றி கயிறால் கட்டி வைத்தாள். எனவே, பகவான் ‘தாமோதரன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தயோர்மத்யகதம் பத்தம் தாம்னா காடம் ததோதரே |

ததஸ்ச தாமோதரதாம் ஸ யயௌ தாமபந்தனாத் ||’ (ப்ரஹ்ம புராணம் 13-14)

ப்ரஹ்ம புராணத்தில் கூறப்பட்டுள்ளது:

ஆயர்குல மக்கள், தனது தெற்றுப்பல் தெரியும் புன்சிரிப்புடனும், இடையில் உரலுடன் கட்டிய கயிற்றுடனும் அந்த பாலகன் (பாலகிருஷ்ணன்) இரு மருத மரங்களுக்கிடையில் தவழ்ந்து செல்வதைக் கண்டனர். இடையில் கயிற்றால் கட்டப்பட்டிருந்ததால் பகவான் ‘தாமோதரன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கண்ணிநுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப்பண்ணிய பெருமாயன்…

‘தாமானி லோகநாமானி தானி யஸ்யோதராந்தரே |

தேன தாமோதரோ தேவ: ஸ்ரீதர: ஸ்ரீஸமாஶ்ரரித: ||’

அனைத்தும் உலகங்களையும் ‘தாமம்’ என்று அழைப்பர். அவை பகவானின் திருவயிற்றில் (உதரத்தில், ப்ரளய காலத்தில்) இருக்கின்றது. எனவே, ஸ்ரீதரன், திருமாமகள் கேள்வனான பகவான் ‘தாமோதரன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இதி வ்யாஸவசனாத்வா தாமோதர: |

ஸ்ரீவ்யாஸ பகவானின் இந்தக் கூற்றின்படி பகவான் ‘தாமோதரன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———-

  1. ஓம்ஸஹாயநம:

ஸர்வானபிபவதி அனைவரையும் அடக்கி, தனக்குக் கீழ்படியுமாறு வைக்கிறார்

க்ஷமத இதி வா  அனைவரையும் (அவர்களின் செய்கைகளை) பொறுத்துக் கொள்கிறார்

ஸஹ: எனவே, பகவான் ‘ஸஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் அனைவரையும் அடக்கி தனக்குக் கீழ்படியுமாறு வைக்கிறார். அனைவரின் (தவறான) செய்கைகளைப் பொறுத்துக் கொள்கிறார். எனவே அவர் ‘ஸஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———–

  1. ஓம்மஹீதராயநம:

மஹீம் இந்த பூமியை

கிரிரூபேண மலைகளின் வடிவில்

தரதீதி தாங்குவதால்

மஹீதர: பகவான் ‘மஹீதர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் இந்த பூமியை மலைகளின் வடிவில் தாங்குகிறார். எனவே, அவர் ‘மஹீதர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஆச்சார்யர், முன்பு மஹீதரா என்ற 317வது திருநாமத்தில் பூமிக்கும், பூஜைக்கும் ஆதாரமாக இருந்து தாங்குகிறார் என்று பொருளுரைத்திருந்தார்.

‘வனானி விஶ்ணுர்கிரயோ திஸஸ்ச’ (ஸ்ரீவிஶ்ணு புராணம் 2.12.38)

ஸ்ரீவிஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: காடுகள், மலைகள் மற்றும் திசைகளெல்லாம் பகவான் விஶ்ணுவே.

இதி பராஶரோக்தே | இது ஸ்ரீவிஶ்ணு புராணத்தில் பராசர மஹரிஷியின் கூற்றாகும்.

———–

  1. ஓம்மஹாபாகாயநம:

ஸ்வேச்சயா தன்னிச்சைப்படி

தாரயன் தேஹம் பல்வேறு உடல்களை எடுத்துக்கொண்டு

மஹாந்தி உத்க்ருஶ்டானி ‘மஹா’ அதாவது மிகச்சிறந்ததான

போஜனானி பாகஜன்யானி உணவுவகைகளை

புங்க்தே இதி உண்கிறார்

மஹாபாக: எனவே, பகவான் ‘மஹாபாக:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தன்னிச்சைப்படி வெவ்வேறு உடல்களை எடுத்துக்கொண்டு (அவருக்குப் படைக்கப்படும்) பல்வேறு சிறந்த உணவுகளை உட்கொள்கிறார். எனவே, அவர் ‘மஹாபாக:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மஹான் மிகவும்

பாக: பாக்யம் ‘பாக’ அதாவது சிறந்ததான

அஸ்ய அவதாரேஶு அவரது அவதாரங்கள்

இதி வா மஹாபாக: எனவே பகவான் ‘மஹாபாக:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் மிகச்சிறந்த (பெரும் பாக்கியம் படைத்த) அவதாரங்களை எடுக்கிறார். எனவே, அவர் ‘மஹாபாக:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———-

  1. ஓம்வேகவதேநம:

வேகோ ‘வேக’ என்றால்

ஜவ்ஸதத்வான் விரைவாகச்  செல்பவர்

வேகவான் எனவே, பகவான் ‘வேகவான்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மிக விரைவாகச் செல்பவராதலால் பகவான் ‘வேகவான்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘அனேஜதேகம் மனஸோ ஜவீய:’ (ஈசாவாஸ்ய உபநிஶத் 4)

ஈசாவாஸ்ய உபநிடதத்தில் கூறப்பட்டுள்ளது: அந்த ஆத்மாவானது சலனமற்றது. எனினும், மனதைக் காட்டிலும் விரைவாகச் செல்லக்கூடியது.

————

  1. ஓம்அமிதாஶணாய நம:

ஸம்ஹாரஸமயே அழிக்கும் காலத்தில்

விஶ்வமஶ்னாதீதி இந்தப் ப்ரபஞ்சத்தை  உண்கிறார்

அமிதாஶன: எனவே பகவான் ‘அமிதாஶன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

(ப்ரளயத்தின் பொழுது) அழிக்கும் காலத்தில் இந்தப் ப்ரபஞ்சத்தை  உண்கிறார். எனவே பகவான் ‘அமிதாஶன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———–

  1. உத்பவ: க்ஷோபணோ தேவ: ஸ்ரீகர்ப்ப: பரமேஶ்வர: |

கரணம் காரணம் கர்த்தா விகர்த்தா கஹனோ குஹ: ||

இந்த நாற்பத்தொன்றாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. உத்பவ:, 374. ஷோபண:, 375. தேவ:, 376. ஸ்ரீகர்ப்ப:, 377. பரமேஶ்வர: |
  2. கரணம், 379. காரணம், 380. கர்த்தா, 381. விகர்த்தா, 382. கஹன:, 383. குஹா: ||

—————-

373-ஓம்உத்பவாய நம:

ப்ரபஞ்சோத்பத்தி இந்தப் ப்ரபஞ்சம் உருவாவதற்கு

உபாதான காரணத்வாத் மூலப்பொருளாய் இருப்பதால்

உத்பவ: பகவான் ‘உத்பவ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

(குடத்திற்கு மண் போல) இந்தப் ப்ரபஞ்சம் உருவாவதற்கு மூலப்பொருளாய் (உபாதான காரணம்) இருப்பதால் பகவான் ‘உத்பவ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————-

  1. ஓம்ஷோபணாயநம:

ஸர்ககாலே ப்ரபஞ்சத்தின் தோற்றத்தில்

ப்ரக்ருதிம் புருஶம்  ப்ரக்ருதி மற்றும் புருஷனுக்குள்

ப்ரவிஶ்ய உட்புகுந்து

ஷோபயாமாஸேதி அந்த ப்ரக்ருதி, புருஷர்களை படைப்புத் தொழிலில் தூண்டி விடுகிறார்

ஷோபண: எனவே பகவான் ‘ஷோபண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் இந்தப் ப்ரபஞ்சத்தின் தொடக்கத்தில் ப்ரக்ருதியினுள்ளும் (மாறக்கூடிய இயற்கை), புருஷனுக்குள்ளும் (மாற்றமில்லாத ஜீவாத்மா) புகுந்து அவர்களை படைப்புத் தொழிலில் தூண்டி விடுகிறார். எனவே அவர் ‘ஷோபண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸாங்கிய யோகத்தின்படி இந்தப் ப்ரபஞ்சமானது ப்ரக்ருதி (மூலப்பொருள்) மற்றும் புருஷனின் இணைப்பால் உண்டாகிறது. இவை தனித்திருந்தால் பிரளயம், ஒன்றிணையும் பொழுது படைப்பு.

ப்ரக்ருதிம் புருஶம் சைவ ப்ரவிஶ்யாத்மேச்சயா ஹரி: |

ப்ரவிஶ்ய ஷோபயாமாஸ ஸர்க்ககாலே வ்யயாவ்யயௌ || (ஸ்ரீவிஶ்ணு புராணம் 1.2.29)

ஸ்ரீவிஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: அழிவற்றவரான பரமாத்மா ஹரி இந்தப் ப்ரபஞ்சத்தை படைக்கும் காலத்தில் தனது சுய விருப்பாலே மாறுதலை அடையக்கூடியதான ப்ரக்ருதிக்குள்ளும், மாறுதலற்ற ஆத்மாவிற்குள்ளும் (புருஷனுக்குள்ளும்) உட்புகுந்து அவர்களை (படைப்புத் தொழிலில் இயங்கும்படி) தூண்டினார்.

இதி விஶ்ணுபுராணே | இவ்வாறு ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

———–

  1. ஓம்தேவாயநம:

யதோ தீவ்யதி க்ரீடயதி ஸர்காதிபி: எவர் படைத்தல் முதலான தொழில்களை விளையாட்டாய் (லீலையாக) செய்கின்றாரோ

தேவ: அந்த பகவான் (ஸ்ரீ ஹரி) ‘தேவன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் படைத்தல் முதலிய செயல்களை விளையாட்டாக (லீலையாக) புரிகிறார். எனவே, அவர் ‘தேவன்’ என்று அழைக்கப்படுகிறார்.

‘அலகிலா விளையாட்டுடையார்…’ – கம்ப இராமாயணம் கடவுள் வாழ்த்துப் பாயிரம்

தேவ: என்ற சொல் ‘திவ்’ என்ற வேர்ச்சொல்லிலிருந்து பிறக்கிறது. ‘திவ்’ என்பதற்கு வடமொழியில் க்ரீடா (விளையாட்டு), விஜிகீஶ (வெற்றியை விழைதல்), வ்யவஹார (செயல்  புரிதல், இயக்குதல்), த்யுதி (ஒளி விடுதல்), ஸ்தூய (துதிக்கப்பெறுதல்) மற்றும் கச்சதி (செல்லுதல்) ஆகிய பல பொருள்கள் உண்டு. இவை ஒவ்வொன்றையும் வைத்து ஆச்சார்யாள் இந்த திருநாமத்திற்கு உரை எழுதியுள்ளார்.

விஜிகீஶதேS(அ)ஸுராதீன் அசுரர்களை வெற்றி கொள்கிறார்

தேவ: எனவே பகவான் ‘தேவன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் அசுரர்களை வெல்கிறார். எனவே, அவர் ‘தேவன்’ என்று அழைக்கப்படுகிறார்.

வ்யவஹரதி ஸர்வபூதேஶு அனைத்துயிர்களையும் இயக்குகிறார் (செயல் புரியத் தூண்டுகிறார்)

தேவ: எனவே பகவான் ‘தேவன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் அனைத்துயிர்களையும் இயக்குகிறார். எனவே, அவர் ‘தேவன்’ என்று அழைக்கப்படுகிறார்.

ஆத்மதயா த்யோததே அனைவரின் உள்ளுறை ஆன்மாவாக ஒளிவீசுகிறார்

தேவ: எனவே பகவான் ‘தேவன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைவரின் உள்ளுறை ஆன்மாவாக ஒளிவீசுகிறார். எனவே, அவர் ‘தேவன்’ என்று அழைக்கப்படுகிறார்.

ஸ்தூயதே ஸ்துத்யை: பிறரால் துதிக்கப்படுவோராலும் (ரிஷிகள், ஆன்றோர்கள் போல்வாரால்) தான் துதிக்கப்படுகிறார்

தேவ: எனவே பகவான் ‘தேவன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பிறரால் துதிக்கப்படுவோராலும் (ரிஷிகள், ஆன்றோர்கள் போல்வாரால்) தான் துதிக்கப்படுகிறார். எனவே, அவர் ‘தேவன்’ என்று அழைக்கப்படுகிறார்.

ஸர்வத்ர கச்சதி தஸ்மாத் எங்கும் (தங்குதடையின்றி) செல்கிறார்

தேவ: எனவே பகவான் ‘தேவன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

எங்கும் (தங்குதடையின்றி) செல்கிறார். எனவே, அவர் ‘தேவன்’ என்று அழைக்கப்படுகிறார்.

‘ஏகோ தேவ:’ (ஶ்வேதாஶ்வதர உபநிஶத் 6.11)

ஶ்வேதாஶ்வதர உபநிடதத்தில் கூறப்பட்டுள்ளது: அவர் ஒருவரே தேவனாவார்

இதி மந்த்ரவர்ணாத் இந்த மந்திரத்தின் படி (பகவான் ‘ தேவன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்).

———-

  1. ஓம்ஸ்ரீகர்ப்பாயநம:

ஸ்ரீர்விபூதிர் ‘ஸ்ரீ’ என்றால் செல்வம்

யஸ்யோதராந்தரே அவருடைய திருவயிற்றில்

ஜகத்ரூபா இந்தப் ப்ரபஞ்சமாகிய

யஸ்ய கர்ப்பே ஸ்திதா  கர்ப்பத்தினுள் இருக்கிறது

ஸ்ரீகர்ப்ப: எனவே பகவான் ‘ஸ்ரீகர்ப்ப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ஸ்ரீ’ எனப்படும் ப்ரபஞ்சமாகிய செல்வம் பகவானது திருவயிற்றில் கர்ப்பமாய் இருக்கிறது (ப்ரளய காலத்தில்). எனவே, பகவான் ‘ஸ்ரீகர்ப்ப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————–

  1. ஓம்பரமேஶ்வராயநம:

பரமஸ்சாஸா மிகவும் மேலானவர்

ஈஶானஶீலஸ்சேதி ஆளுமையுடையவர்

பரமேஶ்வர: எனவே பகவான் ‘பரமேஶ்வர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மிகவும் மேலானவர் மற்றும் ஆளுமையுடையவராதலால் பகவான் ‘பரமேஶ்வர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ஸமம் ஸர்வேஶு பூதேஶு திஶ்டந்தம் பரமேஶ்வரம்’ (ஸ்ரீமத் பகவத்கீதை 13.27)

ஸ்ரீமத் பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்: எல்லா பூதங்களிலும் சமமாக நிற்போன் பரமேஸ்வரன்.

இதி பகவத்வசனாத் இது (ஸ்ரீமத் பகவத் கீதையில்) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கூற்றாகும்.

———-

  1. ஓம்கரணாயநம:

ஜகதுத்பத்தௌ இந்தப் ப்ரபஞ்சம் உருவாவதற்கு

ஸாதகதமம் மிகச்சிறந்த சாதனமாய் (கருவியாய்) இருப்பதால்

கரணம் பகவான் ‘கரணம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்தப் ப்ரபஞ்சம் உருவாவதற்குக் மிகச்சிறந்த கருவியாய் இருப்பதால் பகவான் ‘கரணம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸாதகம் என்றால் கருவி. ஸாதக தமம் என்றால் மேலான (மிகச்சிறந்த) கருவி என்று பொருள்

———-

  1. ஓம்காரணாயநம:

உபாதானம் (இந்தப் ப்ரபஞ்சம் தோன்றுவதற்கு) மூலப்பொருளாயும்

நிமித்தம்  (அதை படைக்கவேண்டும் என்று எண்ணும்) நிமித்த காரணமாயும் இருப்பதால்

காரணம் பகவான் ‘காரணம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

(இந்தப் ப்ரபஞ்சம் தோன்றுவதற்கு) மூலப்பொருளாயும் (அதை படைக்கவேண்டும் என்று எண்ணும்) நிமித்த காரணமாயும் இருப்பதால் பகவான் ‘காரணம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஹேது என்ற திருநாமத்திற்கும் இதே பொருள்தான். ஆனால், திருநாமம் வெவ்வேறாயிருப்பதால் புனர் யுக்தி தோஷம் இல்லை.

———–

  1. ஓம்கர்த்ரேநம:

கர்த்தா பகவான் ‘கர்த்தா’ என்று அழைக்கப்படுகிறார்

ஸ்வதந்த்ர: ஏனெனில், அவர் (ப்ரபஞ்சத்தின் படைப்பு முதலான செயல்களை) தன்னிச்சையால் சுதந்திரமாய் புரிகிறார்.

பகவான் இந்தப் ப்ரபஞ்சத்தை படைத்தல், காத்தல் முதலிய செயல்களை தன்னிச்சையாய், சுதந்திரமாய் புரிகிறார். எனவே அவர் ‘கர்த்தா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———-

  1. ஓம்விகர்த்ரேநம:

விசித்ரம் பலவிதமான (ஆச்சர்யமான) புவனம் உலகங்களைப்

க்ரியதே இதி படைப்பதனால்

விகர்த்தா ‘விகர்த்தா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்

ஸ ஏவ பகவான் விஶ்ணு: அந்த பகவான் விஶ்ணு ஒருவரே.

பற்பல ஆச்சர்யமான உலகங்களைப் படைப்பதனால் பகவான் விஶ்ணுவே ‘விகர்த்தா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———-

  1. ஓம்கஹனாயநம:

ஸ்வரூபம் அவருடைய தன்மை

ஸாமர்த்யம் திறமை

சேஶ்டிதம் வா செயல்கள் ஆகியவற்றை

தஸ்ய ஞாதும் ந ஶக்யத இதி ஒருவராலும் அறிந்து கொள்ள இயலாது

கஹன: எனவே பகவான் ‘கஹன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானுடைய தன்மை, திறமை மற்றும் செயல்களை ஒருவராலும் அறிந்து கொள்ள இயலாது. எனவே அவர் ‘கஹன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———-

  1. ஓம்குஹாயநம:

கூஹதே ஸம்வ்ருணோதி ‘குஹ’ அதாவது மறைக்கிறார்

ஸ்வரூபாதி தன்னுடைய தன்மை முதலானவற்றை

நிஜமாயயேதி தன்னுடைய மாயையினால்

குஹ: எனவே பகவான் ‘குஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தன்னுடைய தன்மை முதலானவற்றை தன் மாயையினால் மறைத்து வைக்கிறார். எனவே அவர் ‘குஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘நாஹம் ப்ரகாஶ: ஸர்வஸ்ய யோகமாயாஸமாவ்ருத:’ (ஸ்ரீமத் பகவத்கீதை 7.25)

ஸ்ரீமத் பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்: யோகமாயையால் மறைக்கப்பட்டு நான் எல்லோருக்கும் காட்சி அளிப்பதில்லை.

இதி பகவத்வசனாத் இது (ஸ்ரீமத் பகவத் கீதையில்) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கூற்றாகும்.

———–

  1. வ்யவஸாயோ வயவஸ்தான: ஸம்ஸ்தான: ஸ்தானதோ த்ருவ:|

பரர்த்தி: பரமஸ்பஶ்டஸ்துஶ்ட: புஶ்ட: ஸுபேக்ஷண: ||

இந்த நாற்பத்திரெண்டாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. வ்யவஸாய:, 385. வ்யவஸ்தான:, 386. ஸம்ஸ்தான:, 387. ஸ்தானத:, 388. த்ருவ:|
  2. பரர்த்தி:, 390. பரமேஸ்பஶ்ட:, 391. துஶ்ட:, 392. புஶ்ட:, 393. ஸுபேக்ஷண: ||

————-

  1. ஓம்வ்யவஸாயாயநம:

ஸம்வின்மாத்ர ஞானமே ஸ்வரூபத்வாத் வடிவானவராய் இருப்பதால்

வ்யவஸாய: பகவான் ‘வ்யவஸாய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஞானமே வடிவானவராய் இருப்பதால் பகவான் ‘வ்யவஸாய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———–

  1. ஓம்வ்யவஸ்தானாயநம:

யஸ்மின் வ்யவஸ்திதி: எவர் ஒழுங்கு செய்பவரோ

ஸர்வஸ்யேதி அனைவரையும்

வ்யவஸ்தான: அந்த பகவான் ‘வ்யவஸ்தான:’ என்ற  திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் அனைவரையும் (அனைத்தையும்) அவரவரது தகுதிக்கேற்ப ஒழுங்கு படுத்துகிறார். எனவே அவர் ‘வ்யவஸ்தான:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் எவற்றையெல்லாம் ஒழுங்கு படுத்துகிறார்?

லோகபாலாத்யதிகார அனைத்து லோக பாலகர்களையும் (இந்த ப்ரபஞ்சத்தைக் காக்க பகவானால் நியமிக்கப்பட்டவர்கள்) அவரவரது அதிகாரங்களை வரையறுப்பதன் மூலம், (அனைத்து உயிரினங்களையும்)

ஜராயுஜ அதன் முழு உருவிலேயே பிறப்பவை (ஆங்கிலத்தில் இவற்றை Mammals என்கிறோம்),

அண்டஜ முட்டையிலிருந்து பிறப்பவை

உத்பிஜ்ஜ விதையிலிருந்து பிறப்பவை (என்று வரையறுக்கிறார்) (மனிதர்களை)

ப்ராஹ்மண அந்தணர்கள்

க்ஷத்ரிய மறவர்

வைஶ்ய வணிகர்

ஸூத்ர தொழிலாளிகள்

அவாந்தர வர்ண இவையனைத்திலும் சேராதவர் (என்று வரையறுக்கிறார்)

ப்ரஹ்மசாரி (வேதம் பயிலும்) மாணவன்

க்ருஹஸ்த இல்லறத்தோர்

வானப்ரஸ்த உலக வாழ்க்கையின் கடமைகளை முடித்து வனம் சென்றோர்

ஸந்யாஸ லக்ஷணாஶ்ரம துறவு பூண்டோர்

தத்தர்மாதிகான் (இத்தகைய நால்வகை வாழ்வு முறையினோரையும்) அவரவரது வாழ்க்கை முறைக்கேற்ற அறவொழுக்கத்தினாலும்

விபஜ்ய கரோதி இதி வா பிரித்து வைப்பதனால்

வ்யவஸ்தான: பகவான் ‘வ்யவஸ்தான:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் இந்த உலகத்தைக் காக்க அவரால் நியமிக்கப்பட்ட லோக பாலகர்களை அவரவரது அதிகாரங்களின் மூலமும், உயிரினங்களை கருப்பையிலிருந்து தோன்றுவது, முட்டையிலிருந்து தோன்றுவது மற்றும் விதையிலிருந்து தோன்றுவது என்று மூவகையாகவும், மனிதர்களை அந்தணர், மறவர், வணிகர், தொழிலாளி மற்றும் இவையெதிலும் சேராத ஐந்தாவது வகையினர் என்று அவரவரின் தொழில் மூலமும், மாணவர், இல்லறத்தோர், வனவாழ்வை மேற்கொண்டோர் மற்றும் துறவி ஆகியோரை அவரவரது வாழ்க்கை முறைக்கேற்ற அறவொழுக்கத்தாலும் ஒழுங்கு படுத்துகிறார். எனவே அவர் ‘வ்யவஸ்தான:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘க்ருத்யல்யுடோ பஹுலம்’ (பாணினி ஸூத்ரம் 3.3.223)

இதி பஹுலக்ரஹணாத் கர்த்தரி ல்யுட் ப்ரத்யய:

இந்த பாணினி ஸூத்ரத்தின் படி ‘வ்யவஸ்தான:’ என்ற இந்த திருநாமம் உருவாகிறது.

————-

  1. ஓம்ஸம்ஸ்தானாயநம:

அத்ர பூதானாம் அனைத்து உயிரினங்களும்

ஸம்ஸ்திதி: ப்ரளயாத்மிகா ப்ரளய (அழியும்) காலத்தில் அவரிடம் சென்று ஒன்றுகின்றன

ஸம்ஸ்தான: எனவே, பகவான் ‘ஸம்ஸ்தான:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அழியும் காலமான ப்ரளய காலத்தில் அனைத்து உயிரினங்களும் பகவானிடம் சென்று ஒன்றுகின்றன. எனவே , அவர் ‘ஸம்ஸ்தான:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸமீசீனம் மிகவும் சிறந்த

ஸ்தானமஸ்யேதி வா இருப்பிடமாதலால்

ஸம்ஸ்தான: பகவான் ‘ஸம்ஸ்தான:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானே அனைத்திலும் மிகச் சிறந்த இருப்பிடமாவார். எனவே, அவர் ‘ஸம்ஸ்தான:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————–

  1. ஓம்ஸ்தானதாயநம:

த்ருவாதீனாம் ‘துருவ’ பதம் முதலான

கர்மானுரூபம் அவரவரது செயல்களுக்கேற்ப

ஸ்தானம் பதவிகளை

ததாதீதி அளிக்கிறார்

ஸ்தானத: எனவே பகவான் ‘ஸ்தானத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அவரவரது செயல்களுக்கேற்ப துருவ பதம் முதலிய பதவிகளை வழங்குகிறார். எனவே, பகவான் ‘ஸ்தானத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———-

  1. ஓம்த்ருவாயநம:

அவினாஶித்வாத் அழிவற்றவராதலால்

த்ருவ: பகவான் ‘த்ருவ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அழிவற்றவராதலால் (நிலையானவராதலால்) பகவான் ‘த்ருவ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

——–

  1. ஓம்பரர்த்தயேநம:

பரா மேலான

ருத்திர்விபூதிர் ‘ருத்தி’ அதாவது செல்வம்

அஸ்யேதி பரர்த்தி: உடையவராதலால் பகவான் ‘பரர்த்தி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மேலான செல்வம் உடையவராதலால் பகவான் ‘பரர்த்தி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———-

  1. ஓம்பரமஸ்பஶ்டாயநம:

பரா மேலான

மா ஶோபா ‘மா’ அதாவது அழகு

அஸ்யேதி பரம: பகவான் ‘பரம:’

ஸர்வோத்க்ருஶ்டோ வா அனைவரிலும் மேலானவர்

அனன்யாதீனஸித்தித்வாத் எந்தவொரு காரியத்திற்கும் மற்றோரை அண்டாதவர்

ஸம்விதாத்மதயா பேரறிவே உருவாய் இருப்பதாலும்

ஸ்பஶ்ட: பகவான் ‘ஸ்பஶ்ட:’ என்று அழைக்கப்படுகிறார்

பரமஸ்பஶ்ட: இவ்விரண்டும் சேர்ந்திருப்பதால் பகவான் ‘பரமஸ்பஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் மேலான அழகு படைத்தவர், அனைவரைக் காட்டிலும் மேலானவர், எந்த ஒரு காரியத்திற்கும் வேறெவரையும் அண்டாதவர், பேரறிவே (ஞான) வடிவானவர். எனவே அவர் ‘பரமஸ்பஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

  1. ஓம்துஶ்டாயநம:

பரமானந்தைக பேரின்பமே

ரூபத்வாத் உருவானவராய் இருப்பதால்

துஶ்ட: பகவான் ‘துஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பேரின்ப வடிவானவராய் இருப்பதால் பகவான் ‘துஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்த திருநாமத்தின் ‘த’காரத்தை  ‘து’ (அதாவது வடமொழியில் உள்ள முதல் ‘த’) என்று உச்சரிக்கவேண்டும். துஶ்ட: என்றால் த்ருப்தியடைதல் என்று பொருள். பகவான் அனந்த வடிவினராய் இருப்பதால் அவர் எப்பொழுதும் திருப்தியுடன் இருக்கிறார் என்றும் கொள்ளலாம்.

—————

  1. ஓம்புஶ்டாயநம:

ஸர்வத்ர எங்கும், எப்பொழுதும், எதிலும்

ஸம்பூர்ணத்வாத் முழுமையானவராய் இருப்பதால்

புஶ்ட: பகவான் ‘புஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் எங்கும், எப்பொழுதும், எதிலும் முழுமையானவராய் இருப்பதால் அவர் ‘புஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

  1. ஓம்ஸுபேக்ஷணாயநம:

ஈக்ஷணம் தர்ஶனம் யஸ்ய பகவானின் ‘ஈக்ஷணை’ அதாவது அருட்பார்வையானது

ஶுபகரம் அனைத்து மங்களங்களையும் அளிக்கவல்லது

முமுக்ஷூணாம் மோக்ஷதம் முக்தியை விழைவோருக்கு முக்தியையும்

போகார்த்தினாம் போகதம் இன்பங்களை விழைவோருக்கு (அவர்கள் எண்ணியதற்கும் மேலான) இன்பங்களையும் அளிக்கவல்லது

ஸர்வஸந்தேஹவிச்சேதகாரணம் நம் அனைத்து ஐயங்களையும் தீர்க்கவல்லது

பாபினாம் பாவனம் பாவிகளின் பாவங்களைப் போக்கி அவர்களையும் தூய்மையாக்கவல்லது

ஹ்ருதயக்ரந்திர்விச்சேதகரம் நமது உள்ளத்தில் தோன்றும் ஐயமென்னும் அனைத்து முடிச்சுகளை அவிழ்க்கவல்லது

ஸர்வகர்மணாம் க்ஷபணம் அனைத்து வினைப்பயன்களையும் அழிக்கவல்லது

அவித்யாயாஸ்ச நிவர்த்தகம் நமது அறியாமையை போக்கவல்லது

ஸ ஸுபேக்ஷண: எனவே பகவான் ‘ஸுபேக்ஷண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானின் அருட்பார்வை அனைத்து மங்களங்களையும் அளிக்கவல்லது, முக்தியை விழைவோருக்கு முக்தியையும், இன்பங்களை விழைவோருக்கு (அவர்கள் எண்ணியதற்கும் மேலான) இன்பங்களையும் அளிக்கவல்லது, நமது ஐயங்கள் அனைத்தையும் தீர்க்கவல்லது, பாவிகளின் பாவங்களைப் போக்கி அவர்களையும் தூய்மையாக்கவல்லது, நம் உள்ளத்தில் தோன்றும் ஐயமென்னும் முடிச்சுக்களை அவிழ்க்கவல்லது, அனைத்து வினைப்பயன்களையும் அழிக்கவல்லது மற்றும் நமது அறியாமையை போக்கவல்லது. எனவே பகவான் ‘ஸுபேக்ஷண:’ (நற்பார்வை கொண்டவர்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

“பித்யதே ஹ்ருதயக்ரந்தி:’ (முண்டக உபநிஶத் 2.2.8)”

முண்டக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:

“(காரணமாகவும், கார்யமாகவும் விளங்குகின்ற அந்த ப்ரஹ்மத்தை அறிவதனால்) இதயத்திலுள்ள அறியாமை என்னும் முடிச்சானது அவிழ்க்கப்படுகிறது”

இத்யாதி ஶ்ருதே: || இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

————-

  1. ராமோ விராமோ விரதோ மார்கோ நேயோ நயோSநய:|

வீர: ஶக்திமதாம் ஶ்ரேஶ்டோ தர்மோ தர்மவிதுத்தம: ||

இந்த நாற்பத்து மூன்றாவது ஸ்லோகத்தில் 11 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. ராம:, 395. விராம:, 396. விரத:, 397. மார்க:, 398. நேய:, 399. நய:, 400. அனய:|
  2.             வீர:, 402. ஶக்திமதாம் ஶ்ரேஶ்ட:, 403. தர்ம:, 404. தர்மவிதுத்தம: ||

————–

  1. ஓம்ராமாயநம:

நித்யானந்தலக்ஷணேSஸ்மின் அந்தமில் பேரின்ப வடிவினராய்

யோகினோ யோகிகளை

ரமந்த இதி மனமகிழ செய்பவராதலால்

ராம: பகவான் ‘ராம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அந்தமில் பேரின்ப வடிவினராய், யோகிகளை மனமகிழச் செய்பவராதலால் பகவான் ‘ராம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ரமந்தே யோகிநோ யஸ்மின் நித்யானந்தே சிதாத்மனி |

இதி ராமபதேநைதத் பரம் ப்ரஹ்மாபிதீயதே  || (பத்ம புராணம்)

எந்த அந்தமில் பேரின்ப வடிவான, ஞான மயமான இறைவனில் யோகிகள் மனமகிழ்கின்றனரோ, அந்தப் பரம்பொருள் ‘ராம’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இதி பத்மபுராணே | இவ்வாறு பத்ம புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

ஸ்வேச்சயா தன்னிச்சைப்படி

ரமணீயம் மிக அழகிய

வபுர்வஹன்வா திருமேனி உடையவராய்

தாசரதி தயரதனின் திருமகனாய் (ஸ்ரீராமனாய்) அவதரித்ததால்

ராம: பகவான் ‘ராம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, தன்னிச்சையால் தயரதனின் திருமகனாய் (ஸ்ரீராமனாய்), அழகிய திருமேனி உடையவராய் அவதரித்ததால் பகவான் ‘ராம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸ்ரீராம நாமம் தாரக மந்திரமென்று அழைக்கப்படும். இந்த திருநாமத்தை உச்சரிப்போருக்கு அனைத்து நன்மைகளும் உண்டாகும். காசியில் மரிப்போரின் காதுகளில் (அவர்களின் கடைசி தருணத்தில்) பரமசிவனே ‘ராமநாமத்தை’ உச்சரிக்கிறார். எனவே தான் காசியில் மரிப்போருக்கு மறுபிறப்பென்பதில்லை.

நன்மையையும் செல்வமும் நாளும் நல்குமே

திண்மையும் பாவமும் சிதைந்து தேயுமே

சன்மமும் மரணமும் இன்றித் தீருமே

இம்மையே ராம வென்ற இரண்டெழுத்தினால் – கம்ப ராமாயணம்

கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ

புற்பா முதலா புல்லெறும்பாதி ஒன்றின்றியே

நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்

நற்பாலுக்குய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே (திருவாய்மொழி 7.5.1)

ராம நாமத்தை உச்சரிப்பது ஸஹஸ்ரநாமத்தை முழுமையாக பாராயணம் செய்த பலனைத் தரும் என்று பரமசிவன் பார்வதியிடம் கூறுகிறார் (ஸ்ரீ ராம ராம ராமேதி…

———-

  1. ஓம்விராமாயநம:

விராமோ அவஸானம் ‘விராம’ என்றால் முடிவாக தங்கும் இடம்

ப்ராணினாம் அஸ்மின் இதி அனைத்து உயிரினங்களுக்கும் அவரே ஆதலால்

விராம: பகவான் ‘விராம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானே அனைத்து உயிரினங்களும் முடிவில் சென்றடையும் இடமாக இருக்கிறார். எனவே அவர் ‘விராம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———

  1. ஓம்விரதாயநம:

விகதம் பற்றுதலின்றி (நாட்டமின்றி) இருக்கிறார்

ரதமஸ்ய விஶயசேவாயாமிதி ‘ரதம்’ அதாவது ஏனைய உலக இன்பங்களில் (புலனின்பங்களில்)

விரத: எனவே பகவான் ‘விரத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் ஏனைய உலக இன்பங்களில் (புலனின்பங்களில்) நாட்டமின்றி இருக்கிறார். எனவே அவர் ‘விரத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்த திருநாமத்தை துஶ்ட:, புஶ்ட: ஆகிய திருநாமங்களோடு கூட்டிப் பொருள் கொள்ளவேண்டும். பகவான் தானே பேரின்ப வடிவினராய் இருக்கிறார் (துஶ்ட:) மற்றும் எப்பொழுதும் எதிலும் த்ருப்தியோடு இருக்கிறார். அவருக்கு நிறைவேறாத ஆசைகள் என்று ஒன்றுமில்லை. எனவே, அவர் உலக இன்பங்களில் நாட்டம் கொள்வதில்லை.

ஒரு சில பதிப்புகளில் இந்த திருநாமம் ‘விரஜ:’ என்று வழங்கப்பட்டுள்ளது. பதம் வேறாயினும் பொருள் ஒன்றே.

———–

  1. ஓம்மார்காயநம:

யம் விதித்வா எவரை (எந்த பரம்பொருளை) அறிவதால்

அம்ருதத்வாய கல்பந்தே பிறவா நிலையை அடைகின்றனரோ

யோகினோ முமுக்ஷவ: முக்தியை விழையும் யோகிகள்

ஸ ஏவ பந்தா: அவர் (பகவான்) ஒருவரே (முக்தியை) அடையக்கூடிய வழியாவார்

மார்க: எனவே, பகவான் ‘மார்க:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானை அறிவதாலேயே யோகிகள் முக்தியை அடைகின்றனர். முக்தி அடைவதற்கு பகவான் ஒருவரே வழி. எனவே, பகவான் ‘மார்க:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘நான்ய: பந்தா வித்யதேSயனாய’ (ஶ்வேதாஶ்வதர உபநிஶத் 6.15)

ஶ்வேதாஶ்வதர உபநிடதத்தில் கூறப்பட்டுள்ளது: எவரை விடுத்து மனிதனுக்கு (முக்தி அடைய) மற்றொரு வழியில்லையோ.

இதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

————

  1. ஓம்நேயாயநம:

மார்கேன ஸம்யக்ஞானேன பேரறிவான ஞானத்தின் வழியாக

ஜீவ: ஜீவாத்மா

பரமாத்மதயா பரமாத்ம தன்மைக்கு

நீயத அழைத்துச் செல்லப்படுகிறான்

நேய: எனவே பகவான் ‘நேய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பேரறிவான ஞானத்தின் வழியே ஒரு ஜீவாத்மா பரமாத்ம தன்மையை அடைகிறான் (பகவானே அவனை அவ்வாறு அழைத்துச் செல்கிறார்). எனவே, பகவான் ‘நேய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானே ஜீவனை தன்னிடம் அழைத்துக்கொள்கிறார் என்பது அடுத்த திருநாமத்தால் விளங்கும். இந்த திருநாமம் ஜீவாத்மாவைக் குறித்தாலும், அதன் உட்பொருள் பரமாத்மாவின் செயல்பாடுகளை விளக்குவதே ஆகும். எனவே இந்த திருநாமம் மேலாக ஜீவாத்மாவைக் குறித்தாலும், அதன் உட்பொருள் பகவானையே குறிக்கிறது.

—————

  1. ஓம்நயாயநம:

நயதீதி அவ்வாறு ஞானம் முதிர்ந்த ஜீவாத்மாவை தன்னிடம் வந்து சேருமாறு வழிநடத்திச் செல்வதால்

நய: பகவான் ‘நய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்

நேதா தலைவராய் இருந்து.

(முன்திருநாமத்தில் குறிப்பிட்டவாறு) ஞானம் முதிர்ந்த ஜீவாத்மாவை பரமாத்ம தன்மை (தன்னிடம்) வந்தடையுமாறு தலைவராய் இருந்து வழி நடத்திச் செல்வதால் பகவான் ‘நய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மார்கோ வழியாகவும்

நேயோ வந்தடையும் ஞானம் முதிர்ந்த ஜீவாத்மாவாகவும்

நய வழிநடத்திச் செல்லும் தலைவராகவும்

இதி த்ரிரூப: இவ்வாறு மூன்று வடிவத்திலும்

பரிகல்ப்யதே பரம்பொருள் விளக்கப்படுகிறார்.

பரம்பொருளான பகவான் முக்தியை அளிக்கும் வழியாகவும், (அந்த முக்தியை அடையத்தகுந்த) ஞானம் முதிர்ந்த ஜீவாத்மாவாகவும், அந்த ஜீவாத்மாவை வழிநடத்திச் செல்லும் தலைவராகவும், மூன்று வடிவில் இந்த மூன்று திருநாமங்களால் விளக்கப்படுகிறார்.

————-

  1. ஓம்அநயாயநம:

நாஸ்ய நேதா வித்யத (இவ்வாறு அனைவரையும் வழிநடத்தும் பகவானை) தன்னை வழிநடத்தும் தலைவர் வேறவரும் இல்லை

இதி அனய: எனவே பகவான் ‘அனய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இவ்வாறு அனைவரையும் வழிநடத்தும் பகவானுக்கு (அவருக்கு) மேலான தலைவர் வேறொருவரும் இல்லை. எனவே அவர் ‘அனய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நமக்கு ஞானம் முதிர்ந்தால் பரமாத்ம தன்மையை அளிக்கிறார் பகவான். ஆனால், அவருடைய பரமாத்ம தன்மையை வேறெவரும் அவருக்கு அளித்தனரா என்ற கேள்வி நமக்குள் பிறக்கலாம். அதை போக்குவதற்காக, அவருக்கு வேறொரு தலைவர் இல்லை என்று விளக்குகிறது இந்த திருநாமம். பகவானின் அனைத்து சக்திகளும் அவருக்கு இயற்கையாக, என்றும் உள்ளது. அவருக்கு ஈடானவரோ, மேலானவரோ வேறெவரும் இல்லை.

இதி நாம்னாம் சதுர்த்தம் ஶதம் விவ்ருதம் | இத்துடன் (அனய: என்னும் இந்த திருநாமம் வரையில்) நானூறு திருநாமங்களின் விவரணம் முற்று பெறுகிறது.

———

  1. ஓம்வீராயநம:

விக்ரமஶாலித்வாத்  வீரமும், பராக்ரமும் நிறைந்தவராதலால்

வீர: பகவான் ‘ வீர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வீரமும், பராக்ரமும் நிறைந்தவராதலால் பகவான் ‘வீர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

  1. ஓம்ஶக்திமதாம் ஶ்ரேஶ்டாயநம:

விக்ரமஶாலித்வாத்  வீரமும், பராக்ரமும் நிறைந்தவராதலால்

வீர: பகவான் ‘ வீர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஶக்திமதாம் பலம்பொருந்தியோரான

விரிஞ்ச்யாதீனாமபி நான்முகக் கடவுளான ப்ரஹ்மா முதலானோரைக் காட்டிலும்

ஶக்திமத்வாத் மிகுந்த பலமுடையவராதலால்

ஶக்திமதாம் ஶ்ரேஶ்ட: பகவான் ‘ஶக்திமதாம் ஶ்ரேஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பலம்பொருந்தியோரான நான்முகக் கடவுளான ப்ரஹ்மா முதலானோரைக் காட்டிலும் மிகுந்த பலமுடையவராதலால் பகவான் ‘ஶக்திமதாம் ஶ்ரேஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

—————

  1. ஓம்தர்மாயநம:

ஸர்வபூதானாம் அனைத்து உயிரினங்களையும்

தாரணாத் தாங்குவதால்

தர்ம: பகவான் ‘தர்ம:’ என்ற திரு நாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து உயிரினங்களையும் தாங்குவதால் பகவான் ‘தர்ம:’ என்ற திரு நாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அணுரேவ தர்ம:’

வேதங்கள் மற்றும் உபநிடதங்களில் கூறப்பட்டுள்ளது: (அந்த) தர்மமானது மிகவும் நுண்ணியது.

இதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன

தர்மைர் தர்மத்தாலே

ஆராத்யத இதி வா வழிபடப்படுபவராதலால் (வணங்கப்படுபவராதலால்)

தர்ம: பகவான் ‘தர்ம:’ என்ற திரு.நாமத்தால் அழைக்கப்படுகிறார்.

(அல்லது) தர்மத்தாலே வழிபடப்படுபவராதலால் (வணங்கப்படுபவராதலால்) பகவான் ‘தர்ம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———–

  1. ஓம்தர்ம விதுத்தமாயநம:

ஶ்ருதய: ‘ஶ்ருதிகளான’ வேதங்களும்

ஸ்ம்ருதியஸ்ச அந்த வேதங்களின் பொருளை உணர்ந்து மற்றோரால் எழுதப்பட்ட ஸ்ம்ருதிகளும்

யஸ்யாஞாப்ருதா: எவரது ஆணைகளால் (கட்டளைகளால்) உருவானதோ

ஸ ஏவ அந்த பகவான் ஒருவரே

ஸர்வதர்மவிதாம் அனைத்து அறங்களையும் அறிந்தோருக்குள்

உத்தம: மிகச் சிறந்தவராக இருக்க முடியும்

இதி தர்மவிதுத்தம: எனவே, பகவான் ‘தர்மவிதுத்தம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸ்ருதிகளான வேதங்களும் ஸ்ம்ருதிகளும் பகவானின் ஆணைகளே. அவரே, அதில் குறிப்பிட்டுள்ள அறங்களை முழுமையாக அறிந்தவர்களுள் சிறந்தவராவார். எனவே, பகவான் ‘தர்மவிதுத்தம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———-

  1. வைகுண்ட: புருஶ: ப்ராண: ப்ராணத: ப்ரணவ: ப்ருது:|

ஹிரண்யகர்ப்ப: ஶத்ருக்னோ வ்யாப்தோ வாயுரதோக்ஷஜ: ||

இந்த நாற்பத்துநான்காவது ஸ்லோகத்தில் 11 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. வைகுண்ட:, 406. புருஶ:, 407. ப்ராண:, 408. ப்ராணத:, 409. ப்ரணவ:, 410. ப்ருது: |
  2. ஹிரண்யகர்ப்ப:, 412. ஶத்ருக்ன:, 413. வ்யாப்த:, 414. வாயு:, 415. அதோக்ஷஜ: ||

————–

  1. ஓம்வைகுண்டாயநம:

விவிதா வெவ்வேறு

குண்டா கதே: ‘குண்டா’ என்றால் போக்கு

ப்ரதிஹதி: (அவற்றை)  தடை செய்வது

விகுண்டா ‘விகுண்டா’ எனப்படும்

விகுண்டாயா: கர்த்தேதி அவ்வாறு தடை செய்பவராதலால்

வைகுண்ட: பகவான் ‘வைகுண்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஜகதாரம்பே இந்தப் ப்ரபஞ்சம் உருவானபொழுது (அதன் தொடக்கத்தில்)

விஶ்லிஶ்டானி (ஒன்றோடொன்று கலவாது) பிரிந்திருந்த

பூதானி (நீர், நிலம், நெருப்பு, காற்று, வான்வெளி ஆகிய) ஐம்பூதங்களை

பரஸ்பரம் ஒன்றோடொன்று

ஸம்ஸ்லேஶயன் கலக்கும்படி செய்து

தேஶாம் கதிம் அவற்றின் போக்கை

ப்ரதிபத்னாதீதி (பகவான்) தடை செய்தார் (எனவே அவர் ‘வைகுண்ட:’ என்ற திரு நாமத்தால் அழைக்கப்படுகிறார்).

பகவான் இந்தப் ப்ரபஞ்சத்தின் தொடக்கத்தில் ஒன்றோடொன்று கலவாதிருந்த ஐம்பூதங்களை அவை ஒன்றோடொன்று கலக்கும் படி செய்து அவற்றின் போக்கைத் தடுத்தார். இவ்வாறு வெவ்வேறு (விவித) போக்குகளை (குண்டா) தடுத்ததால் பகவான் ‘வைகுண்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மயா ஸம்ஸலேஶிதா பூமிரத்பிர்வ்யோம ச வாயுனா |

வாயுஸ்ச தேஜஸா ஸார்த்தம் வைகுண்டத்வம் ததோ மம ||

(மஹா பாரதம், ஶாந்தி பர்வம் 342.80)

மஹாபாரதம் ஶாந்திபர்வத்தில் கூறப்பட்டுள்ளது: (பகவான் கூறுகிறார்): நான் நிலத்தை நீரோடும், வான்வெளியை காற்றோடும் (வாயுவோடும்), காற்றை (வாயுவை) நெருப்போடும் கலந்தேன். எனவே, என்னிடத்தில் ‘வைகுண்டத்வம்’ இருக்கிறது.

இதி ஶாந்தி பர்வணி | இவ்வாறு மஹாபாரதம் ஶாந்தி பர்வத்தில் கூறப்பட்டுள்ளது.

————-

  1. ஓம்புருஶாயநம:

ஸர்வஸ்மாத்புரா ஸதனாத் அனைவருக்கும் முதன்மையாக தோன்றியவராதலால்

ஸர்வபாபஸ்ய ஸாதனாத்வா அனைத்து பாவங்களையும் போக்குவதாலும்

புருஶ: பகவான் ‘புருஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைவருக்கும் முதன்மையாக தோன்றியவராதலால் அனைத்து பாவங்களையும் போக்குவதாலும் பகவான் ‘புருஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸ யத்பூர்வோஸ்மாத்ஸர்வஸ்மாத்ஸர்வான்பாப்மன ஒளஷத் தஸ்மாத்புருஶ: (ப்ருஹதாரண்யக உபநிஶத் 1.4.1)

ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: அவர் (பரப்ரஹ்மம்) அனைவருக்கும் முதலானவர் (முதலாகத் தோன்றியவர்). அனைவரின் பாபங்களையும் அழிப்பவர். எனவே, அவர் ‘புருஶ’ என்றறியப்படுகிறார்.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

புரி ‘புரி’ என்றழைக்கப்படும் இந்த உடலுக்குள்

ஶயனாத்வா ஸயனிப்பதால் (உள்ளுறைந்து இருப்பதால்)

புருஶ: பகவான் ‘புருஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘புரி’ என்றழைக்கப்படும் இந்த உடலுக்குள் ஸயனிப்பதால் (உள்ளுறைந்து இருப்பதால்) பகவான் ‘புருஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸ வா அயம் புருஶ: ஸர்வாஸு பூர்ஶு புரிஶய: (ப்ருஹதாரண்யக உபநிஶத் 2.5.18)

ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: அனைத்து உடல்களுக்குள்ளும் உறைவதால் (பரப்ரஹ்மமான பகவான்) புருஶ: என்று அழைக்கப்படுகிறார்.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

———–

  1. ஓம்ப்ராணாயநம:

ப்ராணிதி உயிர்வாழ்கிறார்

க்ஷேத்ரக்ஞரூபேண க்ஷேத்ரக்ஞரின் வடிவில் (அனைவருக்குள்ளும்)

ப்ராண: எனவே பகவான் ‘ப்ராண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் அனைவருக்குள்ளும் (அனைத்தையும் அறியும் உள்ளுறை ஆத்மாவாக) க்ஷேத்ரக்ஞரின் வடிவில் உயிர்வாழ்கிறார். எனவே அவர் ‘ப்ராண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ப்ராணாத்மனா ப்ராண வாயுவின் வடிவில்

சேஶ்ட்யன்வா அனைவருக்குள்ளும் (எங்கும்) செல்கிறார்

ப்ராண: எனவே பகவான் ‘ப்ராண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, பகவான் ப்ராண வாயுவின் வடிவில் அனைவருக்குள்ளும் செல்கிறார் (அனைவரையும் செயல்பட வைக்கிறார்). எனவே அவர் ‘ப்ராண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘சேஶ்டாம் கரோதி ஸ்வஶனஸ்வரூபி’ (ஸ்ரீவிஶ்ணு புராணம்)

ஸ்ரீவிஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: மூச்சுக் காற்றின் வடிவில் அனைத்தையும் செயல்படுத்துகிறார் (அனைவருக்குள்ளும் செல்கிறார்).

இதி விஶ்ணுபுராணே | இவ்வாறு ஸ்ரீவிஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

————-

  1. ஓம்ப்ராணதாயநம:

கண்டயதி அழிக்கிறார்

ப்ராணினாம் உயிரினங்களின்

ப்ராணான் உயிரை (அல்லது உயிர்மூச்சை)

ப்ரளயாதிஶ்விதி ப்ரளயம் முதலிய அழிவுக்காலங்களில்

ப்ராணத: எனவே பகவான் ‘ப்ராணத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் ப்ரளயம் முதலான அழிவுக்காலங்களில் உயிரினங்களின் உயிரை அழிக்கிறார். எனவே, அவர் ‘ப்ராணத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———–

  1. ஓம்ப்ரணவாயநம:

ப்ரணௌதீதி ப்ரணவத்தை உச்சரிப்பதன் மூலம் வணங்கப்படுவதால்

ப்ரணவ: பகவான் ‘ப்ரணவ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ஓம்’ என்ற ப்ரணவத்தை உச்சரிப்பதன் மூலம் வணங்கப்படுவதால் பகவான் ‘ப்ரணவ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘தஸ்மாத் ஓம் இதி ப்ரணௌதீ’

‘ஓம்’ என்று கூறி வணங்கவேண்டும்.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

ப்ரணம்யதே வணங்கப்படுவதால்

இதி வா ப்ரணவ: பகவான் ‘ப்ரணவ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, (வேதங்களாலும், அனைத்து தேவர்களாலும்) வணங்கப்படுவதால் பகவான் ‘ப்ரணவ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ப்ரணமந்தீஹ யம் வேதாஸ்தஸ்மாத்ப்ரணவ உச்யதே’  

அவரை வேதங்கள் கைகூப்பி வணங்குகின்றன. எனவே அவர் ப்ரணவ என்று அழைக்கப்படுகிறார்..

இதி ஸனத்குமாரவசனான் | இது ஸனத்குமாரரின் கூற்றாகும்.

————

  1. ஓம்ப்ருதவேநம:

ப்ரபஞ்சரூபேண இந்த ப்ரபஞ்சத்தின் வடிவில்

விஸ்த்ருதத்வாத் விரிவடைந்து இருப்பதால்

ப்ருது: பகவான் ‘ப்ருது:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்த ப்ரபஞ்சத்தின் வடிவில் விரிவடைந்து இருப்பதால் பகவான் ‘ப்ருது:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ப்ருது என்ற சொல்லிற்கு மிகப்பெரிய, அகலமான என்ற பொருள்கள் உண்டு. இங்கு ப்ரபஞ்சத்தின் வடிவில் பரந்து, விரிந்துள்ளதால் பகவான் ப்ருது என்று ஆச்சார்யாள் உரை அளித்துள்ளார்.

———–

  1. ஓம்ஹிரண்யகர்ப்பாயநம:

ஹிரண்யகர்ப்பஸம்பூதிகாரணம் ஹிரண்யகர்ப்பர் என்று அழைக்கப்படும் நான்முகக் கடவுளான ப்ரஹ்மாவின் பிறப்பிடமான

ஹிரண்மயமண்டம் பொன்மயமான முட்டையானது

யத்வீர்யஸம்பூதம் எவருடைய சக்தியிலிருந்து தோன்றுகிறதோ

ததஸ்ய கர்ப்ப இதி (அந்த) பகவான் ப்ரஹ்மாவிற்கும் கர்ப்பமாகிறார்

ஹிரண்யகர்ப்ப: எனவே பகவான் ‘ஹிரண்யகர்ப்ப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நான்முகக் கடவுளான ப்ரஹ்மாவும் பகவானின் கர்ப்பத்திலிருந்து அவரது சக்தியால் உருவான பொன்மயமான முட்டையிலிருந்தே தோன்றுகிறார். எனவே, பகவான் ‘ஹிரண்யகர்ப்ப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———–

  1. ஓம்ஶத்ருக்னாயநம:

த்ரிதஶ (முப்பத்து முக்கோடி) தேவர்களின்

ஶத்ரூன் எதிரிகளான அஸுரர்களை

ஹந்தீதி கொல்வதால்

ஶத்ருக்ன: பகவான் ‘ஶத்ருக்ன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

(முப்பத்து முக்கோடி) தேவர்களின் எதிரிகளான அஸுரர்களை கொல்வதால் பகவான் ‘ஶத்ருக்ன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

  1. ஓம்வ்யாப்தாயநம:

காரணத்வேன (அனைத்திற்கும்) காரணமாய் இருப்பதன் மூலம்

ஸர்வகார்யாணாம் அனைத்து காரியங்களையும் (அதாவது விளைவுகளையும்)

வ்யாபனாத் பரவி இருப்பதால்

வ்யாப்த: பகவான் ‘வ்யாப்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

(அனைத்திற்கும்) காரணமாய் இருப்பதன் மூலம் அனைத்து காரியங்களையும் (அதாவது விளைவுகளையும்) பரவி இருப்பதால் பகவான் ‘வ்யாப்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வ்யாப்த என்றால் எங்கும் பரவி இருத்தல். இந்த ப்ரபஞ்சத்தில் நாம் காணும், கேட்கும், உணரும் அனைத்துமே காரியங்கள் (அதாவது செயல் விளைவுகள்). பகவானே அனைத்திற்கும் (இந்தப் ப்ரபஞ்சம் உருவாவதற்கும்) மூல காரணம். காரணமானது காரியத்தை முழுவதுமாய் பரவி இருக்கும். எனவே, பகவானும் அனைத்தையும் (அனைத்திலும்) பரவி இருக்கிறார் என்பது ஆச்சார்யாளின் உரையாகும்.

————–

  1. ஓம்வாயவேநம:

வாதி கந்தம் கரோதீதி ‘வாதி’ அதாவது மணத்தை உண்டாக்குகிறார்

வாயு: எனவே பகவான் ‘வாயு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மணத்தை உண்டாக்குவதால் பகவான் ‘வாயு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘புண்யோ கந்த: ப்ருதிவ்யாம் ச’ (ஸ்ரீமத் பகவத்கீதை 7.9)

ஸ்ரீமத் பகவத் கீதையில் பகவான் கூறுகிறார்மண்ணில் தூய நாற்றம் நான்

இதி பகவத்வசனாத் | இவ்வாறு, பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஸ்ரீமத் பகவத்கீதையில் கூறியுள்ளார்.

————–

  1. ஓம்அதோக்ஷஜாயநம:

அதோ ந க்ஷீயதே ஜாது யஸ்மாத்தஸ்மாத் அதோக்ஷஜ: (மஹாபாரதம் உத்யோக பர்வம் 70.10)

மஹாபாரதம் உத்யோக பர்வத்தில் கூறப்பட்டுள்ளது: எப்பொழுதும் தன்னிலையினின்று நழுவாதவராதலாலும், எவ்வித குறைகளுமற்று இருப்பதாலும் பகவான் ‘அதோக்ஷஜ:’ என்று அழைக்கப்படுகிறார்.

இதி உத்யோக பர்வணி | இவ்வாறு மஹாபாரதம் உத்யோக பர்வத்தில் கூறப்பட்டுள்ளது.

த்யௌரக்ஷம் ஆகாயம் (த்யௌ) அக்ஷம் என்று அழைக்கப்படுகிறது

ப்ருதிவீ சாத: பூமி (ப்ருதிவீ) அத என்று அழைக்கப்படுகிறது

தயோர்யஸ்மாத் அஜாயத மத்யே அவற்றிற்கு இடையே தோன்றுவதால்

வைராஜரூபேண இதி வா தனது விராட் ரூபத்தில்

அதோக்ஷஜ: பகவான் ‘அதோக்ஷஜ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அக்ஷம் என்றழைக்கப்படும் ஆகாயத்திற்கும், அத என்றழைக்கப்படும் பூமிக்கும் இடையே தனது விராட் ரூபத்தில் தோன்றுவதால் பகவான் ‘அதோக்ஷஜ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அத (பூமி) + அக்ஷ (ஆகாயம்) + ஜ (பிறத்தல்) = அதோக்ஷஜ

அதோப்ருதே உள்முகமாக, உயர்ந்ததை நோக்கி திருப்பும்போது

ப்ரத்யக் ப்ரவாஹிதே நுகர்ச்சியை நோக்கி ஓடுவதை தவிர்த்து அதன் எதிர்திசையில்

அக்ஷகணே இந்திரியங்களை

ஜாயத இதி வா தோன்றுகிறார்

அதோக்ஷஜ: எனவே, பகவான் ‘அதோக்ஷஜ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

எவரொருவர் தமது இந்திரியங்களை (புலன்களை) நுகர்ச்சியை நோக்கி அவை ஓடுவதை தவிர்த்து, அதன் எதிர்திசையான உள்முகமாய் உயர்ந்ததை நோக்கி திருப்புகிறாரோ, அவருக்கு பகவான் (அவர் உள்ளத்தில்) தோன்றுகிறார். எனவே, பகவான் ‘அதோக்ஷஜ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அத (அதோப்ருதே) + அக்ஷ (அக்ஷகணே) + ஜ (ஜாயதே) = அதோக்ஷஜ

————–

  1. ருது: ஸுதர்ஶன: கால: பரமேஶ்டீ பரிக்ரஹ:|

உக்ர: ஸம்வத்ஸரோ தக்ஷோ விஶ்ராமோ விஶ்வதக்ஷிண: ||

இந்த நாற்பத்தைந்தாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. ருது:, 417. ஸுதர்ஶன:, 418. கால:, 419. பரமேஶ்டீ, 420. பரிக்ரஹ: |
  2. உக்ர:, 422. ஸம்வத்ஸர:, 423. தக்ஷ:, 424. விஶ்ராம:, 425. விஶ்வதக்ஷிண: ||

—————

  1. ஓம்ருதவேநம:

காலாத்மனா பகவான் காலமே வடிவானவன்

ருதுஶப்தேன ‘ருது’ என்ற

லக்ஷ்யத இதி குறிக்கிறது

ருது: எனவே பகவான் ‘ருது’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ருது’ என்ற சொல் பகவான் கால வடிவினன் என்பதைக் குறிக்கிறது. எனவே அவர் ‘ருது’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————–

  1. ஓம்ஸுதர்ஶனாயநம:

ஶோபனம் மங்களமான

நிர்வாண ஃபலம் முக்தியை அளிக்கவல்லது

தர்ஶனம் ஞானமஸ்யேதி தர்ஶனம் அதாவது பகவானைப் பற்றிய ஞானம்

ஸுதர்ஶன: எனவே, பகவான் ‘ஸுதர்ஶன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானின் தர்ஶனம், அதாவது அவரைப் பற்றிய ஞானமானது மிகவும் மங்களகரமான முக்தியை அளிக்கவல்லது. எனவே பகவான் ‘ஸுதர்ஶன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஶுபே மங்களகரமான

தர்ஶனே ஈக்ஷணே ‘தர்ஶனம்’ அதாவது திருக்கண்களை உடையவராதலால்

பத்மபத்ராயதே அஸ்யேதி தாமரை இதழ்களைப் போன்ற

ஸுதர்ஶன: எனவே, பகவான் ‘ஸுதர்ஶன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தாமரை இதழ்களை போன்ற  அழகிய, மங்களகரமான திருக்கண்களை உடையவராதலால் ‘ஸுதர்ஶன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸுகேன இன்பமே (சுகமே) வடிவானவராய்

த்ருஶ்யதே காட்சி அளிக்கிறார் பக்தைரிதி வா தனது அடியவர்களுக்கு

ஸுதர்ஶன: எனவே, பகவான் ‘ஸுதர்ஶன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தனது அடியவர்களுக்கு என்றுமே இன்பமே வடிவானவராய் காட்சி அளிக்கிறார். எனவே பகவான் ‘ஸுதர்ஶன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது அவரது அடியவர்களுக்கு பகவானைக் காண்பதை போன்ற இன்பம் வேறொன்றுமில்லை என்றும் கொள்ளலாம்.

—————–

  1. ஓம்காலாயநம:

கலயதி இயங்குகிறார் (இயக்குகிறார்)

ஸர்வமிதி வா அனைத்தையும்

கால: எனவே, பகவான் ‘கால:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

எப்பொழுதும் இயங்குவதால், அனைத்தையும் இயக்குவதால் பகவான் ‘கால:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கால: கலயதாமஹம்’ (ஸ்ரீமத் பகவத்கீதை 10.30)

ஸ்ரீமத் பகவத் கீதையில் பகவான் கூறுகிறார்இயங்குனவற்றில் காலம் நான்.

இதி பகவத்வசனாத் | இவ்வாறு, பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஸ்ரீமத் பகவத்கீதையில் கூறியுள்ளார்.

கலயத என்ற சொல்லிற்கு எண்ணுதல் (கணக்கெடுத்தல்) என்றும்  பொருள் உள்ளது. இதுவும், இந்த திருநாமத்திற்கு பொருத்தமானதே. பகவான் காலத்தின் வடிவில் அனைவரின் வாழ்நாளையும் கணக்கிடுகிறார்.

————

  1. ஓம்பரமேஶ்டினேநம:

பரமே ப்ரக்ருஶ்டே ‘பரம’ அதாவது உயர்ந்ததான

ஸ்வே மஹிம்னி தன்னுடைய (இயற்கையான) மகிமையால்

ஹ்ருதயாகாஶே (ஒவ்வொருவரின்) இதய ஆகாயத்துள்

ஸ்தாதும் நிலைபெற்றிருக்கும்

ஶீலமஸ்யேதி தன்மையுடையவராதலால்

பரமேஶ்டி பகவான் ‘பரமேஶ்டி’ என்ற என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஒவ்வொருவரின் இதயத்துள்ளும் ஒரு சிறிய வெற்றிடம் இருக்கும். அதை இதய ஆகாயம் என்று கூறுவர். பகவான் அந்த இதய ஆகாயத்துள் தன்னுடைய இயற்கையான, மிகச்சிறந்த மகிமையால் என்றும் நிலைபெற்றிருக்கிறார். எனவே அவர் ‘பரமேஶ்டி’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அவர் அங்கே தனது இயற்கையான பெருமையினால் (மஹிமையினால்) வீற்றிருக்கிறார். அங்கு இருப்பது  அவரது இயல்பான தன்மையுமாகும் (ஶீலம்).

‘பரமேஶ்டி விப்ராஜதே’ – மிகச்சிறந்த தன்மையுடன் வீற்றிருக்கிறார்.

இதி மந்த்ரவர்ணாத் இந்த மந்திரத்தின் படி (பகவான் ‘பரமேஶ்டி’ என்று அழைக்கப்படுகிறார்).

———–

  1. ஓம்பரிக்ரஹாயநம:

ஶரணார்த்திபி: தம்மை சரணடைந்த அடியவர்களால்

பரிதோ எல்லாவிடங்களிலும்

க்ருஹ்யதே  அடையப்படுகிறார்

ஸர்வகதத்வாத் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளபடியால்

பரிக்ரஹ: எனவே பகவான் ‘பரிக்ரஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளபடியால் அவரை சரணடைந்த அடியவர்கள் அவரை எல்லாவிடங்களிலும் அடைகின்றனர் (கிரஹிக்கின்றனர்). எனவே, பகவான் ‘பரிக்ரஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பரிதோ எங்கும்

ஞாயதே இதி வா அறியப்படுகிறார்

பரிக்ரஹ: எனவே பகவான் ‘பரிக்ரஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் எங்கும் அறியப்படுகிறார் . எனவே, பகவான் ‘பரிக்ரஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பத்ரபுஶ்பாதிகம் இலைகளையோ (துளசி), பூக்களையோ

பக்தைரர்பிதம் தனது அடியவர்கள் பக்தியுடன் ஸமர்ப்பிக்கும்

பரிகிருஹ்ணாதீதி முழுமையாக ஏற்றுக்கொள்கிறார்

பரிக்ரஹ: எனவே பகவான் ‘பரிக்ரஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தனது அடியவர்கள் பக்தியுடன் ஸமர்ப்பிக்கும் இலை (துளசி), பூக்கள் முதலிய எளிய பொருட்களையும் பகவான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறார். எனவே அவர் ‘பரிக்ரஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———-

  1. ஓம்உக்ராயநம:

ஸூர்யாதீனாமபி கதிரவன் முதலானோருக்கும் கூட

பயஹேதுத்வாத் அச்சத்தை தருபவராக இருப்பதால்

உக்ர: பகவான் ‘உக்ர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கதிரவன் முதலானோருக்கும் கூட அச்சத்தை தருபவராக இருப்பதால் பகவான் ‘உக்ர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘பீஶாதேதி ஸூர்ய:’ (தைத்ரீய உபநிஶத் 2.8)

தைத்ரீய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: (இந்த பரப்ரஹ்மனிடத்திருந்து உருவான அச்சத்தினால்) கதிரவன் உதிக்கின்றான்.

இதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

———-

  1. ஓம்ஸம்வத்ஸராயநம:

ஸம்வஸந்தி வசிக்கின்றனர்

பூதாநி அனைத்து உயிரினங்களும் (ஜீவராசிகளும்)

யஸ்மின் இதி எவருக்குள்

ஸம்வத்ஸர: அந்த பகவான் ‘ஸம்வத்ஸர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து உயிரினங்களும் (ஜீவராசிகளும்) பகவானுக்குள் வசிக்கின்றன (இருக்கின்றன). எனவே அவர் ‘ஸம்வத்ஸர’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

  1. ஓம்தக்ஷாயநம:

ஜகத்ரூபேண இந்தப் ப்ரபஞ்சத்தின் வடிவில்

வர்த்தமானத்வாத் பரந்து, விரிந்து வளர்வதால்

தக்ஷ: பகவான் ‘தக்ஷ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்தப் ப்ரபஞ்சத்தின் வடிவில் பரந்து, விரிந்து வளர்வதால் பகவான் ‘தக்ஷ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸர்வகர்மாணி அனைத்து செயல்களையும்

க்ஷிப்ரம் கரோதி இதி வா விரைந்து முடிக்கும் தன்மையுடையவராதலால்

தக்ஷ: பகவான் ‘தக்ஷ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, அனைத்து செயல்களையும் விரைந்து முடிக்கும் தன்மையுடையவராதலால் பகவான் ‘தக்ஷ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தக்ஷ என்ற சொல்லிற்கு உள்ள பல பொருள்களில் விரைவாக செயல்படுதல், வளர்தல் (தக்ஷதே) ஆகியவையும் உள்ளன. ஆச்சார்யாள் இந்த இரு பொருள்களிலும் உரை அளித்துள்ளார்.

————

  1. ஓம்விஶ்ராமாயநம:

ஸம்ஸாரஸாகரே இந்தப் பிறவிப்பெருங்கடலில்

க்ஷுத்பிபாஸாதி பசி, தாகம் முதலிய

ஶடூர்மிபிஸ் ஆறு வகையான துன்பங்களால்

தரங்கிதே அலைக்கழிக்கப்பட்டும்

அவித்யாத்யைர்மஹாக்லேஶைர் அறியாமை முதலான பெருங்கேடுகளாலும்

மதாதிபிருபக்லேஶைஸ்ச (அந்த அறியாமையால் விளையும்) செருக்கு முதலிய இன்ன பிற கேடுகளாலும்

வஶீக்ருதானாம் பீடிக்கப்பட்டு துன்புறுகின்ற (ஆத்மாவானது)

விஶ்ராந்திம் (இவற்றலிருந்து விடுபடுவதான) அமைதியை

காங்க்ஷமானானாம் விரும்பும்பொழுது

விஶ்ராமம் மோக்ஷம் முக்தி என்னும் பேரின்பத்தை

கரோதீதி அளிப்பவராதலால்

விஶ்ராம: பகவான் ‘விஶ்ராம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்தப் பிறவிப்பெருங்கடலில் பசி, தாகம் முதலிய ஆறு வகையான துன்பங்களால் அலைக்கழிக்கப்பட்டும் அறியாமை முதலான பெருங்கேடுகளாலும் (அந்த அறியாமையால் விளையும்) செருக்கு முதலிய இன்ன பிற கேடுகளாலும் பீடிக்கப்பட்டு துன்புறுகின்ற ஆத்மாவானது அமைதியை விரும்பும்பொழுது முக்தி என்னும் பேரின்பத்தை அளிப்பவராதலால் பகவான் ‘விஶ்ராம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———–

  1. ஓம்விஶ்வதக்ஷிணாயநம:

விஶ்வஸ்மாத் இவ்வுலகிலுள்ள அனைவரைக் காட்டிலும்

தக்ஷிண: ஶக்த: ‘தக்ஷிண’ அதாவது (எக்காரியத்தை செய்வதிலும்) சமர்த்தர்

விஶ்வதக்ஷிண: ஆதலால் பகவான் ‘விஶ்வதக்ஷிண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இவ்வுலகிலுள்ள அனைவரைக் காட்டிலும் (எக்காரியத்தை செய்வதிலும்) சமர்த்தர் ஆதலால் பகவான் ‘விஶ்வதக்ஷிண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

விஶ்வேஶு இவ்வுலகிலுள்ள

கர்மஸு அனைத்துக் செயல்களையும்

தாக்ஷிண்யாத்வா விரைந்து முடிக்கும் திறமை உடையவராதலால்

விஶ்வதக்ஷிண: பகவான் ‘விஶ்வதக்ஷிண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இவ்வுலகிலுள்ள அனைத்துக் செயல்களையும் விரைந்து முடிக்கும் திறமை உடையவராதலால் பகவான் ‘விஶ்வதக்ஷிண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———————

One Response to “ஸ்ரீ விஶ்ணு ஸஹஸ்ரநாம பாஷ்யம் – ஸ்ரீ ஆதி ஶங்கர பகவத் பாதர் அருளியது – பாகம் 6-திருநாமங்கள்–308– -425- வரை –”

  1. ஸ்ரீ பகவத் குண தர்ப்பணம்–ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம வியாக்கியானங்கள் — ஸ்லோகம் –41– | Thiruvonum's Weblog Says:

    […] உருவாவதற்கு மூலப்பொருளாய் (உபாதான காரணம்) இருப்பதால் பகவான் ‘உத்பவ:’ என்ற […]

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading