6-அப்ரமேயோ ஹ்ருஶீகேஶ: பத்மநாபோS(அ)மரப்ரபு: |விஶ்வகர்மா மனுஸ்த்வஶ்டா ஸ்தவிஶ்ட: ஸ்தவிரோ த்ருவ: ||
இந்த ஆறாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன:
- அப்ரமேய:, 47. ஹ்ருஶீகேஶ:, 48. பத்மநாப:, 49. அமரப்ரபு: |
- விஶ்வகர்மா, 51. மனு:, 52. த்வஶ்டா, 53. ஸ்தவிஶ்ட: 54. ஸ்தவிரோ த்ருவ: ||
—————–
- அக்ராஹ்ய: ஶாஶ்வத: க்ருஶ்ணோ லோஹிதாக்ஷ: ப்ரதர்தன:|
ப்ரபூதஸ்த்ரிககுப்தாம பவித்ரம் மங்களம் பரம் ||
இந்த ஏழாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன:
- அக்ராஹ்ய:, 56. ஶாஶ்வத:, 57. க்ருஷ்ண:, 58. லோஹிதாக்ஷ:, 59. ப்ரதர்தன:|
60.ப்ரபூத:, 61.த்ரிககுப்தாம:, 62.பவித்ர:, 63. மங்களம் பரம் ||
———–
- ஈஶான: ப்ராணத: ப்ராணோ ஜ்யேஷ்ட: ஸ்ரேஷ்ட: ப்ரஜாபதி: |
ஹிரண்யகர்ப்போ பூகர்ப்போ மாதவோ மதுஸுதன: ||
இந்த எட்டாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன:
- 64.ஈஶான:, ப்ராணத:, 66. ப்ராண:, 67. ஜ்யேஷ்ட, 68.ஸ்ரேஷ்ட:, 69.ப்ரஜாபதி: |
- ஹிரண்யகர்ப்ப:, 71. பூகர்ப்ப:, 72. மாதவ:, 73. மதுஸுதன: ||
—————
9. ஈஶ்வரோ விக்ரமீ தன்வீ மேதாவீ விக்ரம: க்ரம: |
அனுத்தமோ துராதர்ஶ: க்ருதஞ்ய: க்ருதிராத்மவான் ||
இந்த ஒன்பதாவது ஸ்லோகத்தில் 11 திருநாமங்கள் உள்ளன. அவையாவன:
- ஈஶ்வர:, 75. விக்ரமீ, 76. தன்வீ, 77. மேதாவீ, 78. விக்ரம:, 79. க்ரம: |
- அனுத்தம:, 81. துராதர்ஶ:, 82. க்ருதஞ்ய:, 83. க்ருதி:, 84. ஆத்மவான் ||
—————
10. ஸுரேஶ: ஶரணம் ஶர்ம விஶ்வரேதா: ப்ரஜாபவ: |
அஹ: ஸம்வத்ஸரோ வ்யால: ப்ரத்யய: ஸர்வதர்ஶன: ||
இந்த பத்தாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன:
- ஸுரேஶ:, 86.ஶரணம், 87. ஶர்ம, 88. விஶ்வரேதா:, 89. ப்ரஜாபவ: |
- அஹ:, 91.ஸம்வத்ஸர:, 92. வ்யால:, 93. ப்ரத்யய:, 94. ஸர்வதர்ஶன: ||
——————–
11. அஜ: ஸர்வேஶ்வர: ஸித்த: ஸித்தி: ஸர்வாதிரச்யுத: |
வ்ருஶாகபிரமேயாத்மா ஸர்வயோகவிநி:ஸ்ருத: ||
இந்த பதினோராவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன:
- அஜ:, 96. ஸர்வேஶ்வர:, 97. ஸித்த:, 98. ஸித்தி:, 99. ஸர்வாதி:, 100. அச்யுத: 101-வ்ருஶாகபி:, 102. அமேயாத்மா, 103. ஸர்வயோகவிநி:ஸ்ருத: ||
————–
6-அப்ரமேயோ ஹ்ருஶீகேஶ: பத்மநாபோS(அ)மரப்ரபு: |விஶ்வகர்மா மனுஸ்த்வஶ்டா ஸ்தவிஶ்ட: ஸ்தவிரோ த்ருவ: ||
இந்த ஆறாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன:
- அப்ரமேய:, 47. ஹ்ருஶீகேஶ:, 48. பத்மநாப:, 49. அமரப்ரபு: |
- விஶ்வகர்மா, 51. மனு:, 52. த்வஶ்டா, 53. ஸ்தவிஶ்ட: 54. ஸ்தவிரோ த்ருவ: ||
52-ஓம் த்வஶ்ட்ரே நம:
ஸம்ஹாரஸமயே ஸர்வபூத தனூகாரணத்வாத் த்வஶ்டா:
ஸம்ஹாரஸமயே அழிக்கும் காலத்தில் ஸர்வபூத அனைத்து ஜீவராசிகளையும் தனூகாரணத்வாத் குன்றச் செய்வதால் (அழியச் செய்வதால்) த்வஶ்டா: பகவான் ‘த்வஶ்டா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
இந்தப் ப்ரபஞ்சம் அனைத்தும் அழியப்படும் காலத்தில், அனைத்து ஜீவராசிகளையும் (அழிப்பதன் மூலம்) குன்றச் செய்வதால், பகவான் ‘த்வஶ்டா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
த்வக்ஷதேஸ் இங்கு, ‘த்வக்ஷ்’ எனும் வேர்ச்சொல் தனூகரண குன்ற செய்வது அல்லது அழிப்பது அர்தாத் என்ற பொருளில் வருகிறது த்ருச் ப்ரத்யய: அதனுடன் ‘த்ருச்’ என்ற விகுதி சேர்ந்து ‘த்வஷ்டா’ என்ற திருநாமம் அமைகிறது.
—————–
- ஓம் ஸ்தவிஶ்டாய நம:
அதிஶயேன ஸ்தூல ஸ்தவிஶ்ட:
அதிஶயேன மிகுந்த ஸ்தூல பருத்திருப்பதால் ஸ்தவிஶ்ட: பகவான் ‘ஸ்தவிஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
மிகவும் பருத்துப் பெருத்திருப்பதால் பகவான் ‘ஸ்தவிஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அனைத்தும் அவரே, அனைத்தையும் உள்ளடக்கி வைத்திருப்பவரும் அவரே. அவரைக் காட்டிலும் பருத்தப் பொருள் வேறொன்றுமில்லை என்ற கருத்தில் இந்த திருநாமம் அமைக்கப்பட்டுள்ளது.
———————-
54.ஓம் ஸ்தவிராய த்ருவாய நம:
புராண: ஸ்தவிர: வயோவசனோ வா ஸ்திரத்வாத் த்ருவ: ஸ்தவிரோ த்ருவ இத்யேகமிதம் நாம ஸவிஶேஶணம்
புராண: ஸ்தவிர: ‘ஸ்தவிர:’ என்றால் மிகப்பழமையானது என்று பொருள்.
‘த்வேகம் ஹ்யஸ்ய ஸ்தவிரஸ்ய நாம’ இதி பஹ்வ்ருசா
பஹ்வ்ருசரின் கூற்றின்படி: இந்தப் பழமையானதற்கு ஒரே திருநாமம் உள்ளது.
வயோவசனோ வா (அல்லது ஸ்தவிர என்றால்) வயது முதிர்ந்த என்ற பொருளும் கொள்ளலாம் ஸ்திரத்வாத் த்ருவ: நிலைபெற்றுள்ளதால் ‘த்ருவ:’ ஸ்தவிரோ த்ருவ இத்யேகமிதம் நாம ஸவிஶேஶணம் பகவானின் இவ்விரு பண்புகளையும் ஒன்று சேர்த்து ‘ஸ்தவிரோ த்ருவ:’ என்று ஒரே திருநாமமாக வழங்கப்படுகிறது.
மிகவும் பழமையானவரும் (வயதானவரும்), அதே சமயம் எக்காலத்திலும் நிலையானவராய் இருத்தலாலும் பகவான் ‘ஸ்தவிரோ த்ருவ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
———————–
- அக்ராஹ்ய: ஶாஶ்வத: க்ருஶ்ணோ லோஹிதாக்ஷ: ப்ரதர்தன:|
ப்ரபூதஸ்த்ரிககுப்தாம பவித்ரம் மங்களம் பரம் ||
இந்த ஏழாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன:
- அக்ராஹ்ய:, 56. ஶாஶ்வத:, 57. க்ருஷ்ண:, 58. லோஹிதாக்ஷ:, 59. ப்ரதர்தன:|
60.ப்ரபூத:, 61.த்ரிககுப்தாம:, 62.பவித்ர:, 63. மங்களம் பரம் ||
55.ஓம் அக்ராஹ்யாய நம:
கர்மேந்த்ரியைர் ந க்ருஹ்யதே இதி அக்ராஹ்ய:
கர்மேந்த்ரியைர் வாக்கு, கை, கால் முதலிய செயற்புலன்களால் ந க்ருஹ்யதே அறிந்துகொள்ளவோ (உணரவோ) இயலாததால் இதி அக்ராஹ்ய: பகவான் ‘அக்ராஹ்ய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
வாக்கு, கை, கால் முதலிய செயற்புலன்களால் அறியமுடியாதவராய் இருப்பதால் பகவான் ‘அக்ராஹ்ய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
‘யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ’ (தைத்ரீய உபநிஶத் 2.9)
தைத்ரீய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:
எதனிடமிருந்து மனதுடன் சொற்கள் அடைய முடியாமல் திரும்புகின்றனவோ…
இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.
——–
56.ஓம் ஶாஶ்வதாய நம:
ஶஷ்வத் ஸர்வேஶு காலேஶு பவதீதி ஶாஶ்வத:
ஶஷ்வத் ஸர்வேஶு காலேஶு ‘ஶஷ்வத்’ என்றால் அனைத்து காலங்களிலும் பவதீதி தோன்றுவதால் (அல்லது, இருப்பதால்) ஶாஶ்வத: பகவான் ‘ஶாஶ்வத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அனைத்துக் காலங்களிலும் தோன்றுவதால் (அல்லது, இருப்பதால்) பகவான் ‘ஶாஶ்வத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
‘ஶாஶ்வதம் ஶிவம் அச்யுதம்’ (நாராயண உபநிஶத் 13.1)
நாராயண உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:
எக்காலத்திலும் உள்ளவர், மங்களமானவர், தன்னிலையினின்று வழுவாதவர்…
இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.
———–
57.ஓம் க்ருஶ்ணாய நம:
க்ருஶிர்பூவாசக: ஶப்தோ ணஸ்ச நிர்வ்ருதிவாசக: |
விஶ்ணுஸ்தத்பாவயோகாஸ்ச க்ருஶ்ணோ பவதி ஶாஶ்வத: || (மஹாபாரதம் உத்யோக பர்வம் 70.5)
மஹாபாரதம் உத்யோக பர்வத்தில் கூறப்பட்டுள்ளது:
“க்ருஶி” என்றால் இருத்தல் (என்றும் இருத்தல்) என்று பொருள், ‘ண’ ஆனந்தத்தைக் குறிக்கும். பகவான் விஶ்ணுவிடம் இந்த இரண்டு குணங்களும் ஒருங்கிணைந்து இருப்பதால் அவர் ‘க்ருஶ்ணன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
இதி வ்யாஸ வசனாத் ஸச்சிதானந்தாத்மக: க்ருஶ்ண:
இதி வ்யாஸ வசனாத் ஸ்ரீவ்யாஸரின் இந்தக் (மஹாபாரதத்தில் உள்ள) கூற்றின்படி ஸச்சிதானந்தாத்மக: ஸச்சிதானந்த சொரூபனான (அறிவும், இன்பமும் என்றும் நிலைபெற்றுள்ள) பகவான் விஶ்ணுவே க்ருஶ்ண: ‘க்ருஶ்ண’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் என்றும் ஆனந்தத்துடன் கூடியுள்ளார்; ஆனந்தத்துடன் என்றும் நிலைபெற்றுள்ளார். எனவே, அவர் ‘க்ருஶ்ணன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் க்ருஶ்ணரின் திருநாமமே ஆனந்தம்; அவரது திருநாமத்தை உச்சரிப்பதும் ஆனந்தம்; அதை அன்றாடம் உச்சரிப்போரின் வாழ்க்கையிலும் ஆனந்தமே; அவரது சரித்திரமும், லீலைகளும் அவரது பெயருக்கேற்ப ஆனந்தமே உருவாக உள்ளது. அவரது சரித்திரமே ஆனந்தம், படிப்பவருக்கும் ஆனந்தம், கேட்பவருக்கும் ஆனந்தம். க்ருஶ்ணனே ‘ஆனந்த மயன்’ என்றால் அது மிகையாகாது.
க்ருஶ்ணவர்ணாத்மகத்வாத்வா க்ருஶ்ண:
க்ருஶ்ணவர்ணாத்மகத்வாத்வா பகவான் கருமை நிறமானத் திருமேனியை உடையவராதலால் க்ருஶ்ண: ‘க்ருஷ்ண’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
(அல்லது) கருமை நிறமானத் திருமேனியை உடையவராதலால் பகவான் ‘க்ருஶ்ண’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
‘க்ருஶாமி ப்ருதிவீம் பார்த்த பூத்வா கார்ஶ்ணாயஸோ ஹல: |
க்ருஶ்ணோ வர்ணஸ்ச மே யஸ்மாத்தஸ்மாத் க்ருஶ்ணோSஹமர்ஜுன’ || (மஹாபாரதம் ஶாந்தி பர்வம் 342.79)
மஹாபாரதம் ஶாந்தி பர்வத்தில் பகவான் கூறுகிறார்:
ஒ அர்ஜுனனே (பார்த்தனே)!!! நான் கரிய நுனி கொண்ட கலப்பையைப் போல பூமியை உழுகிறேன். மற்றும், கருமையான திருமேனியைக் கொண்டிருக்கிறேன். எனவே, நான் ‘க்ருஶ்ணன்’ என்று அழைக்கப்படுகிறேன்.
இதி மஹாபாரதே | இவ்வாறு மஹாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது.
————
58.ஓம் லோஹிதாக்ஷாய நம:
லோஹிதே அக்ஷிணீ யஸ்யேதி லோஹிதாக்ஷ:
லோஹிதே சிவந்த அக்ஷிணீ திருக்கண்கள் யஸ்யேதி உடையவர் ஆதலால் லோஹிதாக்ஷ: பகவான் ‘லோஹிதாக்ஷ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
சிவந்த திருக்கண்களைக் கொண்டிருப்பதால் பகவான் ‘லோஹிதாக்ஷ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
‘அஸாவ்ருஶபௌ லோஹிதாக்ஷ:‘
அவர் உயர்ந்தவர்; சிவந்த திருக்கண்களை உடையவர்.
இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.
———–
59.ஓம் ப்ரதர்தனாய நம:
ப்ரளயே பூதானி ப்ரதர்தயதி ஹினஸ்தீதி ப்ரதர்தன:
ப்ரளயே ப்ரபஞ்சத்தின் அழிவுக் காலத்தில் (ப்ரளயம்) பூதானி ஜீவராசிகளை ப்ரதர்தயதி ஹினஸ்தீதி அழிப்பதால் (ப்ரதர்தன என்றால் அழிப்பது என்று பொருள்) ப்ரதர்தன: பகவான் ‘ப்ரதர்தன’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
இந்தப் ப்ரபஞ்சம் அனைத்தும் (நான்முகரின் நாள் முடிவிலும், அவரது ஆயுள் முடிவிலும்) அழிக்கப்படும் காலத்தில் பகவான் அனைத்து ஜீவராசிகளையும் அழிப்பதால் அவர் ‘ப்ரதர்தன’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
———-
60.ஓம் ப்ரபூதாய நம:
ஞான ஐஶ்வர்யாதி குணை: ஸம்பன்ன: ப்ரபூத:
ஞான ஐஶ்வர்யாதி குணை: ஞானம், செல்வம் முதலிய குணங்கள் ஸம்பன்ன: நிரம்பியவராதலால் ப்ரபூத: பகவான் ‘ப்ரபூத’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் ஞானம், செல்வம் முதலிய குணங்கள் நிரம்பியவர். எனவே, அவர் ‘ப்ரபூத’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
—————
61.ஓம் த்ரிககுப்தாம்னே நம:
ஊர்த்வாதோமத்யபேதேன திஸ்ருணாம் ககுபாமபி தாமேதி த்ரிககுப்தாம இத்யேகமிதம் நாம
ஊர்த்வாதோமத்யபேதேன மேல், நடு, கீழ் என்று பிரிக்கப்படும் திஸ்ருணாம் மூன்று ககுபாமபி இடங்களையும் தாமேதி தமது இருப்பிடமாகக் கொண்டிருப்பதால் த்ரிககுப்தாம பகவான் ‘த்ரிககுப்தாம’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார் இத்யேகமிதம் நாம (த்ரிககுப், தாம என்று இரண்டாகப் பிரிக்காமல் ‘த்ரிககுப்தாம’ என்ற) இது ஒரே திருநாமமாகும்.
ஸ்வர்க்கம் முதலான மேல் உலகங்களையும், பூமி முதலான மத்திய உலகங்களையும், அதலம் முதலான கீழ் உலகங்களையும், ஆகிய இந்த மூன்று உலகங்களையும் தனக்கு இருப்பிடமாகக் கொண்டிருப்பதால் பகவான் ‘த்ரிககுப்தாம’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
———
62.ஓம் பவித்ரே நம:
யேன புனாதி யோ வா புனாதி ரிஶிர்தேவதா வா தத் பவித்ரம்
யேன புனாதி எவர் மூலமாக (அனைத்தும், அனைவரும்) தூய்மை படுத்தப்படுகின்றனரோ யோ வா புனாதி (அல்லது) எவர் அனைத்தையும் தூய்மையாக்க வல்லவரோ ரிஶிர்தேவதா வா தத் அந்த முனிவரையோ, தேவதையையோ பவித்ரம் ’பவித்ரம்’ என்று அழைப்பர். பகவான் தானும் தூய்மையாய் இருந்து, அனைவரையும் தூய்மையாக்குவதால் அவர் ‘பவித்ர’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
‘புவ: சம்ஞாயாம்’ (பாணினி சூத்ரம் 3.2.185)
பாணினி சூத்திரத்தில் கூறப்பட்டுள்ளது:
‘பூ’ (புனிதம்) என்ற வேர்ச்சொல்லுடன் ‘இத்ர’ என்ற விகுதி சேர்ந்து, தூய்மையாக்கவல்ல என்ற பொருளில் (அந்த செயலின் காரணியைக் குறிக்கும் வகையில்), பவித்ர என்ற சொல்லாக உருவெடுக்கிறது.
‘கர்தரி சர்ஶிதேவதயோ’ (பாணினி ஸூத்ரம் 3.2.186)
பாணினி ஸூத்திரத்தில் கூறப்பட்டுள்ளது:
‘பூ’ (புனிதம்) என்ற வேர்ச்சொல்லுடன் ‘இத்ர’ என்ற விகுதி சேர்ந்து, தூய்மையாக்கவல்ல ஒரு ரிஷியையோ அல்லது தேவதையையோ குறிக்கும் வகையில், பவித்ர என்ற சொல்லாக உருவெடுக்கிறது.
இதி பகவத்பாணினிஸ்மரணாத் இத்ரப்ரத்யய: | இந்த பாணினி சூத்திரங்களின் படி ‘பூ’ (புனிதம்) என்ற சொல்லுடன் இத்ர என்ற விகுதி சேர்ந்து ‘பவித்ர’ என்ற சொல்லாக உருவெடுக்கிறது.
இந்த இரு சூத்திரங்களின் படியும், பவித்ர என்ற சொல் பகவானைக் குறிக்கும். அவர் தூய்மைபடுத்தும் காரணியாகவும் இருக்கிறார், தானே அனைவரையும் தூய்மை படுத்துபவராகவும் இருக்கிறார்.
பகவான் தானும் தூய்மையாய் இருந்து, அனைவரையும் தூய்மையாக்குவதால் அவர் ‘பவித்ர’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
——————
63.ஓம் மங்களாய பரஸ்மை நம:
‘அஶுபானி நிராசஷ்டே தனோதி ஶுபஸந்ததிம் |
ஸ்ம்ருதிமாத்ரேன யத் பும்ஸாம் ப்ரஹ்ம தன்மங்களம் விது: || (ஸ்ரீ விஶ்ணு புராணம்)
ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:
எவரொருவரை நினைத்த மாத்திரத்திலேயே (தன்னை நினைக்கும்) மனிதனின் அல்லனவற்றை நீக்கி, நல்லனவற்றை அதிகரிக்கிறாரோ, அந்த பரப்ரஹ்மத்தை “மங்களம்” என்று அழைக்கின்றனர்.
இதி விஶ்ணு புராண வசனாத் கல்யாணரூபத்வாத்வா மங்களம் பரம் ஸர்வபூதேப்ய: உத்க்ருஷ்டம் ப்ரஹ்ம மங்களம் பரம் இத்யேகமிதம் நாம ஸவிஶேஶணம்
இதி விஶ்ணுபுராண வசனாத் இந்த ஸ்ரீ விஶ்ணுபுராண வாக்கியத்தின்படி கல்யாணரூபத்வாத்வா அனைத்து நற்குணங்களும் நிறைந்திருப்பதால் மங்களம் பகவான் ‘மங்களம்’ என்று அழைக்கப்படுகிறார். பரம் ‘பரம்’ என்றால் ஸர்வபூதேப்ய: அனைத்து ஜீவராசிகளைக் காட்டிலும் உத்க்ருஷ்டம் ப்ரஹ்ம ப்ரஹ்மம் (பகவான்) உயர்ந்தவர் என்பதைக் குறிக்கிறது. மங்களம் பரம் ‘மங்களம் பரம்’ என்ற இத்யேகமிதம் நாம ஒரே திருநாமம் ஸவிஶேஶணம் இந்த இரண்டு கருத்தையும் ஒன்றிணைத்த சிறப்பான திருநாமமாகும்.
பகவான் விஶ்ணு தன்னை நினைத்த மாத்திரத்திலேயே, நினைப்பவர்களின் துன்பங்களைப் போக்கி, அவர்களுக்கு நன்மைகளையும், நல்லனவற்றையும் அதிகரிக்கிறார். இத்தகைய மங்களமான அனைவருக்குள்ளும் சிறந்தவராகவும் இருக்கிறார். எனவே, பகவான் ‘மங்களம் பரம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
——————
- ஈஶான: ப்ராணத: ப்ராணோ ஜ்யேஷ்ட: ஸ்ரேஷ்ட: ப்ரஜாபதி: |
ஹிரண்யகர்ப்போ பூகர்ப்போ மாதவோ மதுஸுதன: ||
இந்த எட்டாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன:
- 64.ஈஶான:, ப்ராணத:, 66. ப்ராண:, 67. ஜ்யேஷ்ட, 68.ஸ்ரேஷ்ட:, 69.ப்ரஜாபதி: |
- ஹிரண்யகர்ப்ப:, 71. பூகர்ப்ப:, 72. மாதவ:, 73. மதுஸுதன: ||
64.ஓம் ஈஶானாய நம:
ஸர்வபூத நியந்த்ருத்வாத் ஈஶான:
ஸர்வபூத அனைத்து ஜீவராசிகளையும் நியந்த்ருத்வாத் ஆட்சி செய்வதால் (அடக்கி ஆள்வதால்) ஈஶான: பகவான் ‘ஈஶான:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அனைத்து ஜீவராசிகளையும் அடக்கி ஆள்வதால், பகவான் ‘ஈஶான:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
—————
65.ஓம் ப்ராணதாய நம:
ப்ராணான் ததாதி சேஷ்ட்யதீதி ப்ராணத:
ப்ராணான் ததாதி ப்ராணனைத் தருவதால் சேஷ்ட்யதீதி நடமாட வைப்பதால் ப்ராணத: பகவான் ‘ப்ராணத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
‘கோ ஹ்யேவான்யாத் க: ப்ராணயாத்’ (தைத்ரீய உபநிஶத் 2.7)
தைத்ரீய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:
(ஹ்ருதய ஆகாசத்திற்குள் இந்த பரப்ரஹ்மம் இல்லையென்றால்) யார்தான் மூச்சை இழுப்பார். யார்தான் மூச்சை வெளியிடுவார்கள்.
அனைத்து ஜீவராசிகளுக்கும் மூச்சுக்காற்றான ப்ராணனை தந்து, அவர்களை நடமாட வைப்பதால், பகவான் ‘ப்ராணத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ப்ராண + ததாதி = ப்ராணத:
யத்வா, ப்ராணான் காலாத்மனா த்யதி கண்டயதீதி ப்ராணத:
யத்வா, அல்லது ப்ராணான் ப்ராணிகளை (ஜீவராசிகளை) காலாத்மனா காலத்தின் உருவில் த்யதி கண்டயதீதி (த்யதி என்ற சொல்லுக்கு கண்டயதி அதாவது) அழிப்பதால் ப்ராணத: பகவான் ‘ப்ராணத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அல்லது, காலத்தின் உருவில் அனைத்து ஜீவராசிகளையும் அழிப்பதால் பகவான் ‘ப்ராணத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ப்ராண + த்யதி = ப்ராணத:
ப்ராணான் தீபயதி ஷோதயதீதி வா ப்ராணத:
ப்ராணான் ப்ராணிகளை (ஜீவராசிகளை) தீபயதி ஷோதயதீதி வா (தீபயதி என்ற சொல்லுக்கு ஷோதயதி அதாவது) ஒளி கொடுத்துப் பிரகாசிக்கச் செய்வதால் ப்ராணத: பகவான் ‘ப்ராணத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அனைத்து ஜீவாராசிகளுக்கும் (அவற்றின் உள்ளுறைந்து) ஒளி கொடுத்து அவற்றை பிரகாசிக்கச் செய்வதால் பகவான் ‘ப்ராணத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ப்ராண + தீபயதி = ப்ராணத:
ப்ராணான் ததாதி லுனாதீதி வா ப்ராணத:
ப்ராணான் ப்ராணிகளை (ஜீவராசிகளை) ததாதி லுனாதீதி வா (ததாதி என்ற சொல்லுக்கு லுனாதி என்ற பொருள் கொண்டு அதாவது) வெட்டுவது அல்லது அழிப்பது ப்ராணத: பகவான் ‘ப்ராணத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அனைத்து ஜீவராசிகளையும் வெட்டி அழிப்பதால் பகவான் ‘ப்ராணத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ப்ராண + ததாதி (லுனாதி) = ப்ராணத:
————-
66.ஓம் ப்ராணாய நம:
ப்ராணிதீதி ப்ராண க்ஷேத்ரஞ்ய: பரமாத்மா
ப்ராணிதீதி மூச்சை ஸ்வாசிப்பவர் ப்ராண: ‘ப்ராண’ என்று அழைக்கபடுவர் க்ஷேத்ரஞ்ய: பரமாத்மா அனைத்து ஜீவராசிகளுக்குள்ளும் உறைந்து, அவற்றை அறியும் பரமாத்மாவே அவர்களை அவ்வாறு வழிநடத்துவதால், பகவான் ‘ப்ராண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
‘ப்ராணஸ்ய ப்ராணம்’ (ப்ருஹதாரண்யக உபநிஶத் 4.4.18)
ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:
(அந்த பரமாத்மா) ப்ராணனுக்கே ப்ராணனாய் இருப்பவர்.
அனைத்து ஜீவாராசிகளுக்குள்ளும் உறைந்து, அவைகள் மூச்சுக்காற்றை (உள்ளிழுத்து, வெளியிட்டு) ஸ்வாசிக்கச் செய்வதால் பகவான் ‘ப்ராண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.
முக்யப்ராணோ வா| பகவானே முக்கியமானவர். எனவே, அந்த முக்கியப் ப்ராணரையே ‘ப்ராண:’ என்று அழைக்கிறோம்.
காற்று இருந்தும், அதை உள்ளிழுத்து வெளியிடும் புலன் இருந்தும், பகவான் நமது அந்தர்யாமியாக இல்லாவிடில், நம்மால் ஸ்வாசிக்க முடியாது (அதாவது, உயிர் வாழ முடியாது) என்பது இதன் உட்பொருளாகும்.
—————
:67.ஒம்ஜ்யேஶ்டாய நம:
வ்ருத்ததமோ (வயதில்) மிகவும் பெரியவரை அல்லது மூத்தவரை ஜ்யேஶ்ட: ‘ஜ்யேஶ்ட’ என்று அழைக்கிறோம்.
‘ஜ்ய ச’ (பாணினி சூத்ரம் 5.3.61)
இத்யதிகாரே பாணினி ஸூத்ரத்தில் ‘ஜ்ய’ என்ற சொல்லை விளக்குகையில்
‘வ்ருத்தஸ்ய ச’ (பாணினி ஸூத்ரம் 5.3.62)
இதி வ்ருத்த ஶப்தஸ்ய இவ்வாறு ‘வயது முதிர்ந்தவர்’ என்ற பொருளில் ஜ்யாதேஶவிதானாத் ‘ஜ்ய’ என்ற சொல்லிற்கு பாணினி விளக்கம் அளிக்கிறார்.
அனைத்திற்கும் காரணமாய் இருப்பதால் பகவான் ‘ஜ்யேஷ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார் (அனைத்திற்கும் காரணமாய் இருக்குமவர், அனைவரைக்காட்டிலும் மூத்தவர்).
————-
68.ஒம் ஶ்ரேஶ்டாய நம:
ப்ரஶஸ்ய தம: மிகவும் புகழ்பெற்று விளங்குவதால் (அல்லது புகழ்பெற்று விளங்குவோர் அனைவரைக் காட்டிலும் மேம்பட்டவராக இருப்பதால்) ஶ்ரேஶ்ட: பகவான் ‘ஶ்ரேஶ்ட’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அனைவரைக்காட்டிலும் மேம்பட்டவராய், நிகரில்லாத புகழை உடையவராய் இருப்பதால் பகவான் ‘ஶ்ரேஷ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
‘ப்ரஶஸ்யஸ்ய ஶ்ர:’ (பாணினி சூத்ரம் 5.3.60)
இதி ஶ்ராதேஶவிதானாத் இவ்வாறு ‘ஶ்ர’ என்ற சொல்லிற்கு மேம்பட்ட புகழை உடையவர் என்று பாணினி விளக்கியுள்ளார்.
‘ப்ராணோ வாவ ஜ்யேஷ்டஸ்ய ஶ்ரேஷ்டஸ்ய’ (சாந்தோக்ய உபநிஶத் 5.1.1)
சாந்தோக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:
அந்த ப்ராணனே (முக்கிய ப்ராணனாக இருப்பவரே) அனைவரைக்காட்டிலும் வயது முதிர்ந்தவர். அனைவரைக்காட்டிலும் புகழிலும் மேம்பட்டவர்.
இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.
முக்யப்ராணோ வா, அந்த முக்கியப் ப்ராணரே ‘ஶ்ரேஶ்டஸ்ய’ (ப்ரஹ்ம ஸூத்ரம் 2.4.7) அனைவரைக்காட்டிலும் புகழிலும் மேம்பட்டவர் (என்று) இத்யதிகரண ஸித்தத்வாத் ப்ரஹ்ம ஸூத்ரத்தின் இந்த கூற்றின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஸர்வகாரணத்வாத்வா ஜ்யேஶ்ட:, ஸர்வாதிஶயத்வாத்வா ஶ்ரேஶ்ட:
அனைத்திற்கும் மூலகாரணமாய் இருப்பதால் பகவான் ‘ஜ்யேஶ்டர்’. அனைத்திலும் மேம்பட்டவராய், நிகரில்லாத புகழை உடையவராய் இருப்பதால் பகவான் ‘ஶ்ரேஶ்டர்’.
————-
69.ஒம் ப்ரஜாபதயே நம:
ஈஶ்வரத்வேன பகவான் அனைவருக்கும் அரசானாய் இருந்து ஸர்வாஸாம் அனைத்து ஜீவராசிகளையும் ஆள்வதால் ப்ரஜானாம் பதி: அவர் ப்ரஜைகளுக்குத் தலைவர், ‘ப்ரஜாபதி‘ என்று அழைக்கப்படுகிறார்.
அனைத்து ஜீவராசிகளும் பகவான் என்னும் அரசனின் குடிமக்கள் (ப்ரஜைகள்). பகவானே இந்த ப்ரஜைகளின் அரசன் (பதி). எனவே, பகவான் ‘ப்ரஜாபதி‘ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
————–
70.ஒம் ஹிரண்யகர்ப்பாய நம:
ஹிரண்மயாண்டர்வர்த்தித்வாத் இந்தப் ப்ரபஞ்சம் எதிலிருந்து உருவானதோ அந்த பொன்மயமான முட்டைக்குள் இருந்ததால் ஹிரண்யகர்ப்போ ப்ரஹ்மா விரிஞ்சி: நான்முகக்கடவுளான ப்ரஹ்மா ‘ஹிரண்யகர்ப்பர்‘ என்று அழைக்கப்படுகிறார். ததாத்மா, அந்த நான்முகக்கடவுளுக்கும் அந்தர்யாமியாக இருப்பதால் பகவான் ‘ஹிரண்யகர்ப்ப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அனைத்து ஜீவராசிகளையும் தாங்கும் இந்தப் ப்ரபஞ்சமானது ஒரு பொன்மயமான முட்டைக்குள்ளிருந்து பிறக்கிறது. அந்த பொன்மயமான முட்டையின் உள்ளே நான்முகக்கடவுளான ப்ரஹ்மா இருக்கிறார். எனவே, பொதுவாக அவர் ‘ஹிரண்யகர்ப்பர்‘ என்று அழைக்கப்படுகிறார். பகவானோ அந்த ப்ரஹ்மாவிற்கும் அந்த்ராத்மாவாக இருந்து அவரை வழிநடத்துகிறார். எனவே பகவான் ‘ஹிரண்யகர்ப்பர்‘ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
‘ஹிரண்யகர்ப்ப: ஸமவர்த்ததாக்ரே’ (ரிக் வேதம் 10.121.1)
முதன்முதலில் அந்த ஹிரண்யகர்ப்பர் மட்டுமே இருந்தார்
இதி ஶ்ருதே: | இவ்வாறு ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ளது.
—————-
71.ஒம் பூகர்ப்பாய நம:
பூகர்ப்பே யஸ்ய எவருடைய கர்ப்பத்தில் இந்த பூமியும் மற்றுமுண்டான ஸகல ஸ்ருஷ்டியும் உள்ளதோ ஸ பூகர்ப்ப: அந்த பகவான் ‘பூகர்ப்ப‘ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
இந்த பூமியையும், ப்ரபஞ்சத்தையும், மற்றுமுண்டான ஸகலவிதமான ஸ்ருஷ்டிகளையும் ப்ரளய காலத்தில் பகவான் தன் வயிற்றினுள் வைத்துக் காக்கிறார். இந்த பூமி (ப்ரபஞ்சம் மற்றும் அனைத்து ஸ்ருஷ்டியும்) பகவானின் கர்ப்பத்தில் உள்ளது எனக்கொள்ளலாம். எனவே பகவான் ‘பூகர்ப்ப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
————–
72.ஒம் மாதவாய நம:
மாயா: ‘மா’ என்ற சொல் ஶ்ரிய: மஹாலக்ஷ்மியைக் குறிக்கும் தவ: ‘தவ‘ என்ற சொல் பதி: கணவனைக் குறிக்கும் மாதவ: பகவான் மஹாலக்ஷ்மியின் கணவராதலால் அவர் ‘மாதவன்‘ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் ‘மா‘ என்றழைக்கப்படும் திருமகளின் (மஹாலக்ஷ்மியின்) கணவராதலால் அவர் ‘மாதவன்‘ என்று அழைக்கப்படுகிறார்.
மதுவித்யாவபோத்யத்வாத்வா மது வித்யையின் மூலம் அறியப் படக்கூடியவராதலால் மாதவ: பகவான் ‘மாதவன்‘ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
(ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் உரைக்கப்பட்டுள்ள) மது வித்யையின் மூலம் அறியப் படக்கூடியவராதலால் பகவான் ‘மாதவன்‘ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
‘மௌனாத்த்யானாஸ்ச யோகாஸ்ச வித்தி பாரத மாதவம் |’ (மஹாபாரதம் உத்யோக பர்வம் 70.4)
மஹாபாரதம் உத்யோக பர்வத்தில் சஞ்சயன் த்ருதராஷ்ட்ரரிடம் கூறியது:
மௌனத்தாலும் (கண்டவற்றைப் பற்றி பேசாது பகவானைப் பற்றி), த்யானத்தாலும், யோகத்தாலும் பகவான் மாதவரை நீங்கள் அறிந்துகொள்ளுங்கள்.
இதி வ்யாஸவசனாத்வா மாதவ: |
ஸ்ரீவ்யாஸ பகவானின் இந்தக் கூற்றின்படி பகவான் மாதவன் என்று அழைக்கப்படுகிறார்.
————–
73.ஒம் மதுஸூதனாய நம:
மதுநாமானமஸுரம் மது என்று பெயர் கொண்ட ஒரு அஸுரனை ஸூதிதவான் அழித்ததால் (வதம் செய்ததால்) இதி மதுஸூதன: பகவான் ‘மதுஸூதனன்‘ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
மது என்று பெயர் கொண்ட ஒரு அஸுரனை அழித்ததால் (வதம் செய்ததால்) பகவான் ‘மதுஸூதனன்‘ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
கர்ணமிஶ்ரோத்பவம் சாபி மதுநாமமஹாஸுரம் |
ப்ரஹ்மணோபசித்திம் குர்வன் ஜகான புருஷோத்தம: ||
தஸ்ய தாத வதாதேவ தேவதானவமானவா😐
மதுஸூதன இத்யாஹுர் ரிஷயஸ்ச ஜனார்தனம் || (மஹாபாரதம்)
(பகவானின்) காதிலிருந்த அழுக்கிலிருந்து ‘மது’ என்ற பெயர் கொண்ட ஒரு பெரிய அஸுரன் தோன்றினான். (அவனால் பீடிக்கப்பட்ட) ப்ரஹ்மாவிற்கு அடைக்கலம் தந்த பகவான் அந்த அஸுரனைக் கொன்றொழித்தார். ஓ தந்தையே! அந்த வதத்தின் காரணத்தால் ஜனார்த்தனராகிய பகவானை தேவர்கள், அஸுரர்கள், மானிடர் மற்றும் முனிவர்கள் ‘மதுஸூதனன்’ என்ற பெயரினால் அழைத்தனர்.
இதி மஹாபாரதே |
இவ்வாறு மஹாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது.
————–
9. ஈஶ்வரோ விக்ரமீ தன்வீ மேதாவீ விக்ரம: க்ரம: |
அனுத்தமோ துராதர்ஶ: க்ருதஞ்ய: க்ருதிராத்மவான் ||
இந்த ஒன்பதாவது ஸ்லோகத்தில் 11 திருநாமங்கள் உள்ளன. அவையாவன:
- ஈஶ்வர:, 75. விக்ரமீ, 76. தன்வீ, 77. மேதாவீ, 78. விக்ரம:, 79. க்ரம: |
- அனுத்தம:, 81. துராதர்ஶ:, 82. க்ருதஞ்ய:, 83. க்ருதி:, 84. ஆத்மவான் ||
74.ஓம் ஈஶ்வராய நம:
ஸர்வ ஶக்தி மத்தயா மிகுந்த சக்தி படைத்தவராக இருப்பதால் ஈஶ்வர: பகவான் ‘ஈஶ்வர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவானின் சக்திகளுக்கு எல்லைகளே கிடையாது. அவ்வாறு, மிகுந்த சக்தி படைத்தவராக இருப்பதால் பகவான் ‘ஈஶ்வர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
முன்பு 36-வது திருநாமத்தில் ‘ஈஶ்வர:’ என்பதற்கு ஐஸ்வர்யம் உடையவர் என்று பொருள். இங்கு, சக்திமிக்கவர் என்று பொருள்.
————-
75.ஓம் விக்ரமிணே நம:
விக்ரம: ‘விக்ரம’ என்றால் ஸௌர்யம் சூரத்தனம் என்று பொருள் தத்யோகாத் அத்தகைய சூரத்தனம் உடையவராதலால் விக்ரமீ பகவான் ‘விக்ரமீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
மிகுந்த சூரத்தனம் படைத்தவராக இருப்பதால் பகவான் ‘விக்ரமீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
நாம் பொதுவாக வீர, தீர, சூரன் என்று கூறுவது உண்டு. இவற்றின் பொருள் என்ன? வீரம் மிக்கவன் வீரன்; எதிரிகளிலும் வீரர்கள் இருப்பார்கள்; அவ்வாறு பல வீரர்கள் ஒன்றே திரண்டு வந்து எதிர்த்தாலும் தன் தைர்யத்தை இழக்காதவன் தீரன். அத்தகைய எதிரிகள் பலர் எதிர்ப்பினும், அவர்கள் அனைவரையும் வெல்பவன் சூரன். பகவான் சூரர்கள் அனைவரிலும் மிகச் சிறந்தவர்.
————
76.ஓம் தன்வினே நம:
தனுரஸ்யாஸ்தீதி (ஶார்ங்கம், அல்லது இராமாவதாரத்தில் கோதண்டம்) என்னும் வில்லை (தனுஸ் என்றால் வில் என்று பொருள், அதை) ஏந்தி இருப்பதால் தன்வீ பகவான் ‘தன்வீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
(ஶார்ங்கம், அல்லது இராமாவதாரத்தில் கோதண்டம்) என்னும் வில்லை (தனுஸ் என்றால் வில் என்று பொருள், அதை) ஏந்தி இருப்பதால் பகவான் ‘தன்வீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
வ்ரீஹ்யாதித்வாதினிப்ரத்யய: | (தனுஸ் என்ற இந்த சொல்), ‘வ்ரீஹ்யாதி’ சொற்றொடர்களில் வருவதால் இங்கு தனு என்ற சொல்லுடன் ‘இனி’ என்ற விகுதி சேர்கிறது (வ்ரீஹ்யாதிப்யஸ்ச – பாணினி ஸூத்ரம் 5.2.116).
ராம: ஶஸ்த்ரப்ருதாமஹம் (ஸ்ரீமத் பகவத்கீதை 10.31)
“படைதரித்தோரில் நான் இராமன்”
இதி பகவத்வசனாத் இது (ஸ்ரீமத் பகவத் கீதையில்) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கூற்றாகும்.
——-
77.ஓம் மேதாவினே நம:
மேதா ‘மேதா’ என்றால் பஹுக்ரந்ததாரணஸாமர்த்யம் பல நூல்களைக் கற்று அவற்றின் உண்மைப் பொருளை அறியக்கூடிய வல்லமை ஸா யஸ்யாஸ்தி ஸ பகவானிடம் இத்தகைய வல்லமை உள்ளதால் மேதாவீ பகவான் ‘மேதாவீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
‘அஸ்மாயாமேதாஸ்ரஜோ வினி:’ (பாணினி சூத்ரம் 5.2.121)
இந்தப் பாணினி ஸுத்ரத்தின்படி மேதா என்ற சொல்லுடன் வினி என்ற விகுதி சேர்ந்து ‘மேதாவீ’ என்றாகிறது.
பல நூல்களைக் கற்று அவற்றின் உண்மைப் பொருளை அறியக்கூடிய வல்லமை வல்லமை உள்ளவராதலால் பகவான் ‘மேதாவீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
———–
78.ஓம் விக்ரமாய நம:
விசக்ரமே தாவி (அளந்தார்) ஜகத் விஶ்வம் இந்தப் ப்ரபஞ்சத்தை (ஏழு உலகங்களையும்) தேன எனவே விக்ரம: பகவான் ‘விக்ரம’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஏழு உலகங்களையும் தாவி அளந்ததால் பகவான் ‘விக்ரம’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
மஹாபலி ப்ரஹ்லாதனின் பேரன். அவன், இந்த்ரனிடமிருந்து ஸுவர்க்கத்தை அபகரிக்க, பகவான் வாமனனாய்த் தோன்றி, மஹாபலியிடம் மூன்றடி மண் யாசித்து அனைத்து உலகங்களையும் தாவி அளந்தார் என்பது பிரசித்தம். வாமனன் என்று அழைக்கப்பட்ட அவரே, தாவி அளந்தபின் த்ரிவிக்ரமன் என்று அழைக்கப்பட்டார் என்பதும் அனைவரும் அறிந்ததே.
வினா கருடேன பக்ஷினா வினா என்றால் கருடப் பறவையைக் குறிக்கும் க்ரமாத்வா அதன் மீதேறி வருவதால் விக்ரம: பகவான் ‘விக்ரம’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
வினா என்னும் கருடன் மீதேறி வருவதால் பகவான் ‘விக்ரம’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
வி(வினா) + க்ரம(க்ரமாத்வா) = விக்ரம
——–
79.ஓம் க்ரமாய நம:
க்ரமனாத் (இங்கும், அங்கும்) நடக்கிறார், செல்கிறார் க்ரமஹேதுத்வாத் அனைத்து ஜீவராசிகளும் செல்வதற்கு (இயங்குவதற்கு) உதவி புரிகிறார் வா எனவே க்ரம: பகவான் ‘க்ரம’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
க்ராந்தே விஶ்ணும் (மனு ஸ்ம்ரிதி 12.121)
மனு ஸ்ம்ரிதியில் கூறப்பட்டுள்ளது:
விஶ்ணுவை (அவரது) இயக்கத்தினால் (அறியவும்)
அனைத்து இடங்களிலும் செல்வதாலும், அனைவரும் செல்வதற்கு (இயங்குவதற்கு) துணை புரிவதாலும், பகவான் ‘க்ரம’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
—————-
80.ஓம் அனுத்தமாய நம:
அவித்யமான அறியப்படவில்லை (காணவில்லை) உத்தமோ சிறந்தவர் யஸ்மாத் எவரைவிட ஸ: அவர் அனுத்தம: (அந்த பகவான்) ‘அனுத்தம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அவரை விட மேலானவர் எவரும் இல்லை; எனவே, பகவான் ‘அனுத்தம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அ – இல்லை + உத்தம – மேலானவர் = அனுத்தம
‘யஸ்மாத் பரம் நாபரமஸ்தி கிஞ்சித்’ (ஶ்வேதாஶ்வதர உபநிஶத் 3.9)
ஶ்வேதாஶ்வதர உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:
அவரை விட வேறானதோ, மேலானதோ வேறொன்றும் இல்லை.
இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.
ந த்வத்ஸமோSஸ்த்யப்யதிக: குதோன்ய: (ஸ்ரீமத் பகவத்கீதை 11.43)
ஸ்ரீமத் பகவத்கீதையில் (அர்ஜுனன் பகவான் ஸ்ரீக்ருஷ்ணரைப் பார்த்து கூறியது): உனக்கு நிகர் யாருமில்லை; எனில் உனக்கு மேல் வேறு யாவர்?
இதி ஸ்ம்ருதேஶ்ச | இவ்வாறு (ஸ்ரீமத் பகவத்கீதை முதலிய) ஸ்ம்ருதிகளிலும் கூறப்பட்டுள்ளது.
———-
81.ஓம் துராதர்ஶாய நம:
தைத்யாதிபிர்தர்ஶயிதும் அசுரர்கள் முதலிய தீயோரால் ந ஶக்யத இதி அடக்கமுடியாதவராக இருப்பதால் துராதர்ஶ: பகவான் ‘துராதர்ஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
தர்ஶ என்றால் அடக்குதல். துராதர்ஶ என்றால் அடக்கமுடியாதவர் என்று பொருள். பகவானை அசுரர் முதலிய தீயோரால் அடக்க இயலாது. எனவே, அவர் ‘துராதர்ஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
————
82.ஓம் க்ருதக்ஞாய நம:
ப்ராணினாம் அனைத்து ஜீவராசிகளின் புண்யாபுண்யாத்மகம் கர்ம நல்ல (புண்ய) மற்றும் தீய (பாப, அபுண்ய) வினைகளை க்ருதம் செய்கின்ற ஜானாதீதி (உள்ளதை உள்ளபடி) அறிகின்றபடியால் க்ருதக்ஞய பகவான் ‘க்ருதக்ஞய’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் அனைத்து ஜீவராசிகளின் நல்ல மற்றும் தீவினைகளை அனைத்தையும் உள்ளபடி அறிகிறார். எனவே, பகவான் ‘க்ருதக்ஞய’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
க்ருத (செய்த நல், தீவினைகள்) + ஜானாதி = க்ருதக்ஞய
பத்ரபுஶ்பாத்யல்பமபி (துளசி முதலிய) இலை, பூக்கள் போன்ற எளிய பொருட்களை ப்ரயச்சதாம் (அவருக்கு) அர்ப்பணிப்போருக்கு மோக்ஷம் (அதற்கு ப்ரதியாக) முக்தியையே ததாதீதி வா தந்தருள்வதால் க்ருதக்ஞய பகவான் ‘க்ருதக்ஞய’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
(துளசி முதலிய) இலை, பூக்கள் போன்ற எளிய பொருட்களை தனக்கு பக்தியுடன் அர்ப்பணிப்போருக்கு (அதற்கு ப்ரதியாக) முக்தியையே தந்தருள்வதால் பகவான் ‘க்ருதக்ஞய’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
இங்கு க்ருதக்ஞய என்ற திருநாமத்திற்கு நன்றியுடையவர் என்று ஆதிசங்கரர் பொருள் உரைக்கிறார். எளிய பொருட்களை அவருக்கு அளித்தாலும், மிக்க நன்றியுடன் கிடைத்தற்கரிய முக்தியையே தந்தருள்கிறார் பகவான்.
——–
83.ஓம் க்ருதயே நம:
புருஶப்ரயத்ன: அனைவராலும் செய்யப்படும் முயற்சிகளுக்கு க்ருதி: ‘க்ருதி’ என்று பொருள் க்ரியா வா: செயல்களுக்கு ஸர்வாத்மகத்வாத் அனைவரின் உள்ளுறை ஆத்மாவாகவும் தத் ஆதாரதயா வா அனைத்து ஜீவராசிகளுக்கும் ஆதாரமாகவும் இருப்பதால் லக்ஷ்யதே க்ருத்யேதி வா ‘க்ருதி’ என்றால் பகவானையே குறிக்கும் க்ருதி: பகவான் ‘க்ருதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அனைவராலும் செய்யப்படும் முயற்சிகளுக்கு ‘க்ருதி’ என்று பொருள். அனைவரின் உள்ளுறை ஆத்மாவாகவும் அனைத்து ஜீவராசிகளுக்கும் ஆதாரமாகவும் இருந்து அனைவரையும் செயல் புரியத் தூண்டுவதால் உண்மையில் ‘க்ருதி’ என்ற இந்த சொல் பகவானையே குறிக்கிறது. எனவே, பகவான் ‘க்ருதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
————-
84.ஓம் ஆத்மவதே நம:
ஸ்வ மஹிமப்ரதிஶ்டிதத்வாத் தன்னுடைய மஹிமையிலேயே நிலைப்பெற்றிருப்பதால் ஆத்மவான் பகவான் ‘ஆத்மவான்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் எப்பொழுதும் தன்னுடைய மஹிமையிலேயே நிலைப்பெற்றிருப்பதால் அவர் ‘ஆத்மவான்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
‘ஸ பகவ: கஸ்மின்ப்ரதிஶ்டித இதி ஸ்வே மஹிம்னி’ (சாந்தோக்ய உபநிஶத் 7.24.1) சாந்தோக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:
அந்த பகவான் எங்கு நிலைக்கொண்டிருக்கிறார்? அவரது மஹிமையிலேயே.
இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.
———-
10. ஸுரேஶ: ஶரணம் ஶர்ம விஶ்வரேதா: ப்ரஜாபவ: |
அஹ: ஸம்வத்ஸரோ வ்யால: ப்ரத்யய: ஸர்வதர்ஶன: ||
இந்த பத்தாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன:
- ஸுரேஶ:, 86.ஶரணம், 87. ஶர்ம, 88. விஶ்வரேதா:, 89. ப்ரஜாபவ: |
- அஹ:, 91.ஸம்வத்ஸர:, 92. வ்யால:, 93. ப்ரத்யய:, 94. ஸர்வதர்ஶன: ||
85.ஓம் ஸுரேஶாய நம:
ஸுரானாம் தேவானாம் ஸுரர்கள் என்றால் தேவர்கள்
ஈஶ: அவர்களை ஆள்பவர்
ஸுரேஶ: பகவான் ‘ஸுரேஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஸுரர்கள் என்றழைக்கப்படும் தேவர்களையும் ஆள்பவராக இருப்பதால் பகவான் ‘ஸுரேஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஸூபபதோ வா (நன்மை என்ற பொருள்படும்) ‘ஸு’ என்ற பதத்தின் பின்னே
ராதாது: (வழங்குதல் என்ற பொருள்படும்) ‘ரா’ என்ற விகுதி சேர்ந்து
ஷோபனதாத்ருணாம் நன்மைகளைத் தருபவர்களுள்
ஈஶ: தலைசிறந்தவர்
ஸுரேஶ: (ஆதலால்) பகவான் ‘ஸுரேஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அல்லது, நன்மைகளை வாரி வழங்குபவர்களுக்குள் தலைசிறந்தவராக இருப்பதால் பகவான் ‘ஸுரேஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
——-
86.ஓம் ஶரணாய நம:
ஆர்த்தானாம் துன்புற்றிருப்போரின்
ஆர்த்தி ஹரணத்வாத் துன்பங்களைத் தீர்ப்பதால்
ஶரணம் பகவான் ‘ஶரணம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
துன்புற்றிருப்போரின் துன்பங்களைத் தீர்ப்பதால் பகவான் ‘ஶரணம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
இங்கு ஆதிசங்கர பகவத்பாதர் ‘பக்தர்களின் துயர்களைக் களைபவர்’ என்று கூறாது ‘துன்புற்றோரின் துன்பங்களைக் களைபவர் என்று கூறியுள்ளார்’. இதன் தாத்பர்யம் என்னவெனில், பக்தர்களோ, அல்லவோ, பகவான் அனைவரது துயரங்களையும் களைகிறார். அனைவரின் துயரங்களையும் போக்கும் அவர், தன் அடியவர்களுக்கு என்னவெல்லாம் செய்வார் என்று நாமே சற்று சிந்தித்துப் பார்த்து, பகவானிடம் தூய பக்தியை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
———-
87.ஓம் ஶர்மணே நம:
பரமானந்தரூபத்வாத் அளவிடற்கரியா, உயர்ந்த ஆனந்த வடிவினராய் இருப்பதால்
ஶர்ம: பகவான் ‘ஶர்ம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் ஆனந்தமே வடிவானவர். தன் அடியவர்களுக்கும் அளவிடற்கரியா ஆனந்தமாகிய முக்தியை அளிப்பவர். எனவே, அவர் ‘ஶர்ம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
————
88.ஓம் விஶ்வரேதஸே நம:
விஶ்வஸ்ய இந்தப் ப்ரபஞ்சம் உருவாவதற்கு
காரணத்வாத் காரணமாய் இருப்பதால்
விஶ்வரேதா: பகவான் ‘விஶ்வரேதா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
இந்தப் ப்ரபஞ்சம் உருவாவதற்கு காரணமாய் இருப்பதால் பகவான் ‘விஶ்வரேதா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
எவ்வாறு ஒரு குழந்தை தந்தையின் ரேதஸிலிருந்து (வீர்யத்திலிருந்து) உருவாகிறதோ, அவ்வாறே, இந்தப் ப்ரபஞ்சம் முழுவதும், பகவானின் சக்தியிலிருந்து தோன்றுகிறது. எனவே, பகவான், விஶ்வரேதா என்று அழைக்கப்படுகிறார்.
————–
89.ஓம் ப்ரஜாபவாய நம:
ஸர்வா: ப்ரஜா அனைத்து ஜீவராசிகளும்
யத்ஸகாஶாதுத்பவந்தி அவரிடமிருந்தே உருவாகின்றதால்
ஸ ப்ரஜாபவ: பகவான் ‘ப்ரஜாபவ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அனைத்து ஜீவராசிகளும் அவரிடமிருந்தே உருவாகின்றதால் பகவான் ‘ப்ரஜாபவ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
———
90.ஓம் அஹ்னே நம:
ப்ரகாஶரூபத்வாத் மிகுந்த ஒளி படைத்தவராக இருப்பதால்
அஹ: பகவான் ‘அஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
மிகுந்த ஒளி படைத்தவராக இருப்பதால் பகவான் ‘அஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
———–
91.ஓம் ஸம்வத்ஸராய நம:
காலாத்மனா ஸ்திதோ காலத்தின் உருவில்
விஶ்ணு: பகவான் விஶ்ணு இருப்பதால்
ஸம்வத்ஸர: அவர் ‘ஸம்வத்ஸர’ என்ற திருநாமத்தால்
இத்யுக்த: அழைக்கப்படுகிறார்.
பகவான் விஶ்ணு காலத்தின் உருவில் இருப்பதால் அவர் ‘ஸம்வத்ஸர’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
———
92.ஓம் வ்யாலாய நம:
வ்யாலவத் ஒரு பாம்பினைப்போல
க்ரஹீதும் அவரைப் பிடிப்பதற்கு
அஶக்யத்வாத் இயலாதவராக இருப்பதால்
வ்யால: பகவான் ‘வ்யால:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஒரு பாம்பு வளைந்து, நெளிந்து வேகமாக நம் பிடிக்குள் விழாது செல்வதைப்போல பகவானும் எவருக்கும் எளிதில் வசப்படுவதில்லை. எனவே, பகவான் ‘வ்யால:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
வ்யால என்ற சொல்லிற்கு பாம்பு என்பது நேரிடைப்பொருள். இங்கு, ஆச்சார்யர் பகவானுக்கு பாம்பைப் போன்று எவருக்கும் எளிதில் வசப்படாத குணத்தை வைத்துப் பொருள் உரைக்கிறார்.
—————-
93.ஓம் ப்ரத்யயாய நம:
ப்ரதி இதி: ‘ப்ரதி’ என்றால்
ப்ரக்ஞ்யா அறிவு மயமானவர் என்று பொருள்
ப்ரத்யய: அந்த அறிவு மயமான பரம்பொருள் ‘ப்ரத்யய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அறிவுமயமாகவே இருப்பதால் பகவான் ‘ப்ரத்யய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
‘ப்ரக்ஞானம் ப்ரஹ்ம’ (ஐத்ரேய உபநிஶத் 3.5.3)
ஐத்ரேய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:
அறிவே ப்ரஹ்மமாகும் (பரம்பொருளாகும்).
இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.
—————–
94.ஓம் ஸர்வதர்ஶனாய நம:
ஸர்வாணி அனைவரும்
தர்ஶனாத்மகானி அக்ஷிணி அவருடைய பார்ப்பதற்குரிய கண்களாக இருப்பதால்
யஸ்ய ஸ பகவான்
ஸர்வதர்ஶன: ‘ஸர்வதர்ஶன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்
ஸர்வாத்மகத்வாத் அவர் அனைவருக்குள்ளும் உறையும் அந்தராத்மாவானபடியால்.
பகவான் அனைவருக்குள்ளும் உறையும் அந்தராத்மாவாக இருக்கிறார். எனவே, அனைத்து ஜீவராசிகளின் மூலமாக அவர் அனைத்தையும் காண்கிறார். இவ்வாறு, அனைத்தும், அனைவரும் அவருக்கு கண்களாக இருப்பதால் பகவான் ‘ஸர்வதர்ஶன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
‘விஸ்வதஸ்சக்ஷு:’ (ஶ்வேதாஶ்வதர உபநிஶத் 4.4.19)
ஶ்வேதாஶ்வதர உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: (அந்த பரப்ரஹ்மத்திற்கு) எங்கும் கண்கள் இருக்கின்றன.
‘விஶ்வாக்ஷம்’ (நாராயண உபநிஶத் 13.1)
நாராயண உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: அனைத்துமே அவரது கண்கள்
இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.
————
11. அஜ: ஸர்வேஶ்வர: ஸித்த: ஸித்தி: ஸர்வாதிரச்யுத: |
வ்ருஶாகபிரமேயாத்மா ஸர்வயோகவிநி:ஸ்ருத: ||
இந்த பதினோராவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன:
- அஜ:, 96. ஸர்வேஶ்வர:, 97. ஸித்த:, 98. ஸித்தி:, 99. ஸர்வாதி:, 100. அச்யுத: 101-வ்ருஶாகபி:, 102. அமேயாத்மா, 103. ஸர்வயோகவிநி:ஸ்ருத: ||
95.ஓம் அஜாய நம:
ந ஜாயத எவர் பிறப்பதே இல்லையோ
இதி அஜ: அந்த பகவான் ‘அஜ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பரப்ரஹ்மமான பகவான் எப்பொழுதும் இருக்கிறார். எனவே, அவர் பிறப்பதில்லை. இவ்வாறு, பிறப்பே இல்லாத பகவான் ‘அஜ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
‘ந ஜாதோ ந ஜனிஶ்யதே’
(பரப்ரஹ்மம்) முன்னர் பிறந்ததுமில்லை; இனி பிறக்கப்போவதுமில்லை.
இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.
ந ஹி ஜாதோ ந ஜாயோSஹ ந ஜனிஶ்யே கதாசன |
க்ஷேத்ரக்ஞய: ஸர்வ பூதானா தஸ்மாதஹமஜ: ஸ்ம்ருத: ||
(ஶாந்தி பர்வம் 342.74)
நான் முன்பு பிறந்தேனுமல்ல; இப்பொழுது பிறக்கவுமில்லை; இனி ஒருகாலத்திலும் பிறக்கப்போவதுமில்லை. நான் அனைத்து ஜீவராசிகளுக்குள்ளும் உறைகிறேன். அவற்றை (அந்த ஜீவராசிகளை) அறிகிறேன். எனவே, என்னை ‘அஜ:’ (பிறப்பற்றவன்) என்று கூறுகிறார்கள்.
இதி மஹாபாரதே | இவ்வாறு மஹாபாரதத்தில் (ஶாந்தி பர்வத்தில்) கூறப்பட்டுள்ளது.
————
96.ஓம் ஸர்வேஶ்வராய நம:
ஸர்வேஶாம் அனைத்து
ஈஶ்வராணாம் ஈஶ்வரர்களுக்கும் (அனைவரையும் ஆள்பவர்களுக்கும்)
ஈஶ்வர: ஈஶ்வரனாக இருப்பதால் (அந்த ஈஶ்வரர்களையும் ஆள்பவராக இருப்பதால்)
ஸர்வேஶ்வர: பகவான் ‘ஸர்வேஶ்வர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
உலகில் சாதாரணமாக தலைவர்கள், அரசர்கள் முதலியோரைக் காண்கிறோம். இவர்கள் அனைவரும், தத்தம் ஆளுகைக்குட்பட்ட இடங்களுக்கு ஈஶ்வரர்கள் ஆவர். இவ்வாறு, ப்ரபஞ்சம் அனைத்திலும் கூட பல ஈஶ்வரர்கள் இருக்கிறார்கள். இத்தகைய ஈஶ்வரர்கள் அனைவரையும் அடக்கி ஆள்பவராக இருப்பதால், பகவான் ‘ஸர்வேஶ்வர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்
‘ஏஶ ஸர்வேஶ்வர:’ (மாண்டூக்ய உபநிஶத் 6)
இவர் (பரப்ரஹ்மம்) அனைத்தையும் ஆள்பவர்.
இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.
———–
97.ஓம் ஸித்தாய நம:
நித்ய எக்காலத்திலும் (என்றென்றும்)
நிஶ்பின்ன ரூபத்வாத் முழுமையானவராகவும், பூரணமானவராகவும், குறைபாடற்றவராகவும் இருப்பதால்
ஸித்த: பகவான் ‘ஸித்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் எக்காலத்திலும், எல்லாவற்றிலும் முழுமையானவராகவும், அனைத்தையும் அடையப்பெற்றவராகவும், குறைபாடுகள் அற்றவராகவும் இருப்பதால் அவர் ‘ஸித்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஸித்தி என்றால் அடையப்படக்கூடியவை. ஸித்தன் என்றால் அவை அனைத்தையும் அடைந்தவர் என்று பொருள். பகவான் அனைத்தையும் எல்லா காலங்களிலும், முழுமையாக அடைந்துள்ளதால் அவர் ஸித்த: என்று அழைக்கப்படுகிறார்.
———–
98.ஓம் ஸித்தயே நம:
ஸர்வவஸ்துஶு அனைத்துப் பொருட்களிலும் (அனைவருக்குள்ளும்)
ஸம்வித்ரூபத்வாத் ஞான வடிவாய் இருப்பதாலும்
நிரதிஶயரூபத்வாத் அனைத்திலும் சிறந்தவராய் இருப்பதாலும்
ஃபலரூபத்வாத் வா அனைவருக்கும் அவரவரது வினைப்பயங்களுக்கு ஏற்ப அடையப்படக்கூடிய பலனாயும் இருப்பதால்
ஸித்தி: பகவான் ‘ ஸித்தி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஸ்வர்காதீனாம் சுவர்க்கலோகம் முதலிய பலன்கள்
வினாஶித்வாத் நிரந்தரமானவை அல்ல; அவை (கல்பத்தின் முடிவில்) அழியக்கூடியவை
அஃபலத்வம் எனவே, அவை உண்மையில் பலன்களே அல்ல (பகவானே அடையத் தகுந்த, நிரந்தர பலனாவார். மற்றவை எல்லாம் அழியக்கூடியவை. அவற்றில் பற்றுக் கொள்ளுதல் கூடாது என்பதே இந்த வாக்கியத்தின் தாத்பர்யமாகும்).
பகவானே அனைத்து பொருட்களுக்குள்ளும் (அனைவருக்குள்ளும்) ஞான வடிவானவராய், அனைத்திலும் சிறந்தவராய், அனைவராலும் அவரவரது வினைகளுக்கேற்ப அடையக்கூடிய பலனாயும் இருக்கிறார். எனவே, அவர் ‘ஸித்தி:’ (அடையக்கூடிய இலக்கு) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். நாம் அனைவரும் அழியக்கூடிய சுவர்க்கம் முதலிய பலன்களில் பற்று வைக்காது, அழியாத, சிறந்த பலனாகிய பகவானிடமே பற்றுக் கொள்ள வேண்டும்.
———
99-ஓம் ஸர்வாதயே நம:
ஸர்வபூதானாம் அனைத்து ஜீவராசிகளின்
ஆதிகாரணத்வாத் மூலகாரணமாய் இருப்பதால்
ஸர்வாதி: பகவான் ‘ஸர்வாதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அனைத்து ஜீவராசிகளின் மூலகாரணமாய் இருப்பதால் பகவான் ‘ஸர்வாதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
———
100.ஓம் அச்யுதாய நம:
ஸ்வரூபஸாமர்த்யான் தன் இயற்கையான வலிமை (மற்றும் சக்தியிலிருந்து)
ந ச்யுதோ அவர் என்றும் நழுவியதில்லை
ந ச்யவதே அவர் இனி நழுவப்போவதுமில்லை
இதி அச்யுத: எனவே, பகவான் ‘அச்யுதன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் தன் இயற்கையான வலிமை (மற்றும் சக்தியிலிருந்து) முன்பு என்றும் நழுவியதில்லை, இனி நழுவப்போவதுமில்லை. எனவே, அவர் ‘அச்யுதன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
‘ஶாஶ்வதம் ஶிவமச்யுதம்’ (நாராயண உபநிஶத் 13.1)
நாராயண உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: அவர் (பரப்ரஹ்மம்) என்றும் மங்களமானவராகவும், வழுவாதவராகவும் இருக்கிறார்.
இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.
ததா ச பகவத்வசனம் | மேலும், பகவான் ஸ்ரீக்ருஷ்ணர் கூறுகிறார்:
‘யஸ்மான்னச்யுதபூர்வோSஹமச்யுதஸ்தேன கர்மணா’
நான் என் கடமைகளிலிருந்து முன்பு எப்பொழுதும் நழுவியதில்லை. எனவே, நான் “அச்யுதன்” ஆவேன்.
இதி | இவ்வாறு பகவான் ஸ்ரீக்ருஷ்ணர் கூறியுள்ளார்.
இதி நாம்னாம் ஶதமாத்யம் விவ்ருதம் | இத்துடன் (அச்யுத: என்னும் இந்த திருநாமம் வரையில்) முதல் நூறு திருநாமங்களின் விவரணம் முற்று பெறுகிறது.
———————
Leave a Reply