ஸ்ரீ திருப்பாவை வியாக்கியான சார ஸ்ரீ ஸூக்திகள் —ஆழி மழைக் கண்ணா —

இன்றோ திரு ஆடி பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் –குன்றாத
வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளாராய்-22-

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்
பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்
வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து -24-

கர்க்கடே பூர்வ பல்குந்யாம் துளஸீகாநநோத்பவாம் ||
பாண்ட்யே விச்வம்பராம்கோதாம் வந்தே ஸ்ரீரங்கநாயகீம் ||”

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் நந்தவனத்தில் துளஸி மலரில் கலி-98-ஆவதான தனவருடம் ஆடி மாதம், ஸுக்லபக்ஷத்தில் சதுர்த்தசி செவ்வாய்க்கிழமை கூடின பூர நக்ஷத்திரத்தில் பூமிப்பிராட்டியின் அம்சமாய், மனித இயற்கைப்பிறவி போல் அல்லாமல், ஆண்டாள் திருவவதரித்து அருளினாள்.

——–

ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —

———

அவதாரிகை –

உபய விபூதி உக்தனான சர்வேஸ்வரன் இங்கே ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து –
தன்னைத் தாழ விட்டு- பெண்கள் சொல்லிற்று செய்ய்ம்படிக்கு ஈடாக தான் கையாளாய் –
அவர்களுடைய அபேஷித சம்விதானம் பண்ணிப் போருகிறபடியைக் கண்டால்
இதர தேவதைகளுக்கு சொல்ல வேண்டா விறே-இவர்களும் அவனுடைய சேர்த்தியிலே கிஞ்சித் கரித்து அத்தாலே ஸ்வரூப லாபமாய் இருக்கும் இறே பகவத் சமாஸ்ரயணம் பண்ணினாருக்கு தேவதைகள் தாங்களே வந்து உபவஸ்தித்ராகக் கடவர் இறே-(உபஸ்திதர் -சேஷபூதர்-)

ஆக இப்படி பகவத் சமாஸ்ரயணம் பண்ணினாரை இதர தேவதைகள் அனுவர்த்திக்க கடவர் ஆகையாலே- வர்ஷ தேவதையான பர்ஜன்யன்-நாம் இச் சேர்த்தியிலே கிஞ்சித் கரித்து-ஸ்வரூபம் பெற வேணும் -என்று வந்து-
நான் இங்குத்தைக்கு செய்யும் அடிமையை நியமிக்க வேணும் -என்ன-
செய்யக் கடவ படியை – இன்ன படியும் இன்ன படியும் -என்று- எங்களை எல்லாரும் கொண்டாடும் படியே வர்ஷிக்க வேணும் அவன் செய்யும் அடிமைகளை கையோலை செய்து கொடுக்கிறார்கள்-

(சங்காரிதம் கல்லைப் பொழியும் மழை -நீல வர்ணம் நெருப்பைப் பொழியும் மழை போன்ற பல மழைகள் உண்டே-ஒவ்வொன்றுக்கும் ஒரு தேவன் உண்டாம் -பர்ஜன்ய தேவன் இவற்றுக்கு எல்லாம் தலைவன்)

திறம்பேன்மின் -திருமழிசைப் பிரான் அருளிச் செய்த படி –
திருவடி தன் நாமம் மறந்தும் புறம் தொழா மாந்தர்-
பர்த்த்ரந்தர ஸம்ஸ்லேஷம் உண்டானால் பார்யைக்கு யோக்யதை கெடும் இறே-
நமனும் தன் தூதுவரை -செவிக்கு -இறைஞ்சியும் சாதுவராய்ப் போதுமின்கள் -என்றான் இறே

த்ரவந்தி தைத்யா பிரணமந்தி தேவதா நச்யந்தி ரக்ஷாம்ஸி அபயாந்தி சாரய:
யத் கீர்த்தநாத் ஸோ த்புத ரூப கேஸரீ மமாஸ்து மாங்கல்ய வ்ருத்தயே ஹரி-தர்மோத்தர புராணம்  -என்கிறபடியே பகவத் ஸமாச்ரயணம் பண்ணுவார்க்கு தேவதைகள் வந்து குட நீர் வார்க்கக் கடவது இறே  –

(ஸ்வ புருஷம்- அபீவீஷ்ய-பாச ஹஸ்தம்-வததியம் அகில யமகில தஸ்ய கர்ண மூலே
பரிகர மது ஸூதன ப்ரபந்நான் -ப்ரபுரஹம் அந்நிய நிரூணாம் ந வைஷ்ணவா நாம்-ஸ்ரீ விஷ்ணு புராண ஸ்லோகம் –3-7-15–அஜாமிளோ வ்யாக்யானம் )

ஸ்வ புருஷம்-ஓலக்கத்திலே சொல்லுகை அன்றிக்கே தன் மனிசராய் தனக்கு பரிவரானவர்களுக்கு –

அபீவீஷ்ய-தன்னது நாலைந்து சிறு முறி மறுக்கும் படி அவர்களுக்குத் தரம் செய்து கொடுத்து வைக்கும் படி –மெய்யே அழைக்கிறான் -என்று தோற்றும்படி சாதரமாகப் பார்க்கிறான் –

பாச ஹஸ்தம் –அவன் முன்பு கொண்ட கோலம் குலையாதே நின்றபடி

வததியம் அகில -நீங்கள் இப்படியே அவர்கள் முன் செல்லில் என் தலையும் இவ் விருப்பும் நிலை நில்லாது –

யமகில-ஸர்வேஸ்வரன் அவன் என்று தோற்றும் படி கூறாக விட்டவன்

தஸ்ய கர்ண மூலே-ராஜ தார ப்ராவண்ய நிஷேதமும் பிறர் அறியில் பொல்லாதே-

பரிகர மது ஸூதன ப்ரபந்நான் –ஆஸ்ரித விரோதிகளைக் கண்டால் தன்னைப் பேணாதே மேல் விழுமவன் பக்கலிலே ந்யஸ்த பரராய் இருக்கும் அவர்கள் இறே -நான் அவன் கையில் மது பட்டது படாமே கிடிகோள்

ப்ரபுரஹம் அந்நிய நிரூணாம் ந வைஷ்ணவா நாம் -நீயோ பிரபு என்று இருந்தோம் -உன்னை ஒழியவும் சிலர் உண்டோ என்ன-சோறும் தண்ணீரும் தாரகம் என்று இருப்பார்க்கு நான் பிரபு –ஸ்ரீ வைஷ்ணவர்கள் தான் எனக்கு பிரபுக்கள் –என்கிறான்

திறம்பேல்மின் கண்டீர் திருவடி தன் நாமம்
மறந்தும் புறம் தொழா மாந்தரை -இறைஞ்சியும்
சாதுவராய் போதுமின்கள் என்றான் நமனும் தன்
தூதுவரைக் கூவிச் செவிக்கு–-நான்முகன் திருவந்தாதி -68-

திறம்பேல் மின் கண்டீர் -திறம்பவும் தானே கொடுத்து வைத்தான் போலே –
திருவடி தன் நாமம் மறந்தும் -வகுத்தவனுடைய திரு நாமத்தை மறக்கவுமாம் –பவ சரணம் -என்கிறதுவும் கழியுண்கிறது(தாத பாத -அப்பாவைச் சொல்லுவது போல் திருவடி என்றது ஸ்வாமி என்றவாறு )
மறந்தும் புறம் தொழா மாந்தர் -தேவதாந்த்ர ஸ்பர்சம் இன்றிக்கே இருக்குமவர்களை -பர்த்தாவோடு பார்யைக்கு பொருத்தம் இல்லையே யாகிலும் ருசி உண்டானவன்று கூடலாம் – பர்த்தந்த்ர சம்ஸ்லேஷம் உண்டானால் யோக்கியதையும் கெடும் இறே

(பகவத் சேஷத்வத்திலும் அந்நிய சேஷத்வம் கழிகையே பிரதானம் என்றவாறு )

இறைஞ்சியும் சாதுவராய் போதுமின்கள் என்றான் –வணங்கி அநு கூல வேஷத்தோடு போருங்கோள்-
நமனும் தன் தூதுவரை கூவிச் செவிக்கு-ஸ்வ புருஷம் என்றால் போலேயும் -கர்ண மூலே -என்றால் போலேயும்

அவன் தமர் எவ்வினையராகிலும் எங்கோன்
அவன் தமரே என்று ஒழிவது அல்லால் நமன் தமரால்
ஆராயப் பட்டு அறியார் கண்டீர் அரவணை மேல்
பேராயற்கு ஆட்பட்டார் பேர் ——முதல் திருவந்தாதி–55-

அவன் தமர் எவ் வினையர்-இத்யாதி –
அரவணை மேல் பேராயர்க்கு ஆட் பட்டார் பேர் ஆராயப் பட்டு அறியார் கண்டீர்-
ஒரு பாகவதன் பேரை ஒரு அபாகவதன் தரிப்பது அவனையும் எமன் கோஷ்ட்டியில் பட்டோலை பார்க்கப் பெறாது

மாறு செய்த வாளரக்கர் நாள் உலப்ப அன்று இலங்கை
நீறு செய்து சென்று கொன்று வென்றி கொண்ட வீரனார்
வேறு செய்து தம்முள் என்னை வைதிடாமையால் நமன்
கூறு செய்து கொண்டு இறந்த குற்றம் எண்ண வல்லனே -ஸ்ரீ திருச்சந்த விருத்தம்-116-

மாறு செய்த வாள் அரக்கன் -கண்டால் ஜிதம் -என்று விழ இறே அடுப்பது
வாள் அரக்கன் நாள் உலப்ப-கொண்ட வரமும் ஆயுஸ் ஸூம் கூட முடிய

அன்று இத்யாதி -வர பல புஜ பலங்களாலே பூண் கட்டின வூரை வர பொர இருக்கை அன்றிக்கே –அவர்கள் இருந்த இடங்களிலே சென்று முடித்து

வென்றி கொண்ட -சக்கரவர்த்தி திரு மகனோடு ஒரு பேரிலே இருப்பான பின்பு இனி
அவர் குற்றம் உண்டாகில் பார்க்கும் அத்தனை என்கிறார்

வெள்ளை நீர் வெள்ளத்து அளைந்த அரவணை மேல்
துள்ளு நீர் மெள்ளத் துயின்ற பெருமானே
வள்ளலே யுன் தமர்க்கு என்றும் நமன் தமர்
கள்ளர் போல் கண்ண புரத்துறை யம்மானே—-ஸ்ரீ பெரிய திருமொழி-8-10-7-

வள்ளலே யுன் தமர்க்கு என்றும் நமன் தமர் கள்ளர் போல் -என்னும் படி இறே
தேவதைகள் அஞ்சி வர்த்திக்கும் படி-ஆகையால் பர்ஜன்யனும் நான் செய்ய வேண்டும் அடிமை என் என்று கேட்க அவனை நியமிக்கிறார்களாய் இருக்கிறது –

ஸ்ரீ பாகவத சம்ச்லேஷம் –
ஸ்ரீ பகவத் சம்ஸ்லேஷத்தையும் பிறப்பித்து
அபாகவாத விஸ்லேஷத்தையும் பிறப்பித்து-( பிறப்பித்து )
இவனையும் கரை மரம் சேர்த்து விடும் -என்று இறே ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்திற்று –சத் சங்காத் பவதி ஹி சாதுதாகிலா நாம் -என்னக் கடவது இறே –
(ஸத் சங்கம் நிஸ் சங்கம் -ஸத் சங்கமே விஷயாந்தர ப்ராவண்யம் கழிக்குமே )-வேதக பொன் போலே இவர்களோட்டை சம்பந்தம்-சூரணை -221

நல்ல மணம் உள்ள ஒன்றை நண்ணி இருப்பதற்கு
நல்ல மணம் யுண்டாம் நலமது போல் -நல்ல
குணமுடையோர் தங்களுடன் கூடி இருப்பார்க்குக்
குணமதுவே யாம் சேர்த்தி கொண்டு—69-

(இப்பாசுரம் நமஸ்ஸூ பதார்த்தம்
ஊழி முதல்வன்-அத்வாரக ஸ்ருஷ்டி
பற்பநாபன்-சத்வாரக ஸ்ருஷ்டி
இரண்டுமே இப்பாசுரத்தில்
ஆழி போல் மின்னி-வலம்புரி போல் நின்று அதிர்ந்து–-ஒளியும் ஒலியும் – இரண்டுமே இப்பாசுரத்தில் )

இப் பாட்டில் இவர்களை வர்ஷ தேவதை-அடியேனுக்கு ஒரு கிஞ்சித் காரம் நியமித்து அருள வேணும்- என்று பிரார்த்திக்க-
இவர்கள் அவனுக்கு கைங்கர்யம் நியமித்த படியைச் சொல்லுகிறது –

 ராவண வத அநந்தரம் முன்பு மறந்த இந்திரன் தன் பதம் பெறுகைக்காக ஒரு வரம் கொள்ள வேணும் -என்றான் –(இறந்த வானர முதலிகளுக்கு மீண்டும் உயிர் அளித்த வ்ருத்தாந்தம் )
அங்கு தப்பினார்க்கு இவர்கள் உளராக அஞ்ச வேண்டா –
இங்கு தப்பினார்க்கு விநாசமே இறே யுள்ளது –

இப்படி தேவதைகள் வந்து இவர்களுக்குச் சொல்லிற்றுச் செய்வார்களோ -என்னில் –
நாவலிட்டு உழி தருகின்றோம் நமன் தமர் தலைகள் மீதே
உன் தன் தமருக்கு என்றும் நமன் தமர் கள்ளர் போல் -என்றும் உண்டு இறே

இந்த ஆக்கரான தேவதைகள் அன்றிக்கே சாஷாத் தேவதைகளான அயர்வறும் அமரர்களும் இவர்களைத் தொழா நிற்பார்கள் -எங்கனே என்னில்
ஆர்வம் பெருகிக் குனிப்பார் அமரர் தொழப் படுவார்(திருவாய் 3-5-அன்பிலா மூடரை ஆழ்வார் நிந்திக்க நித்யர் அன்புள்ளவரைக் கொண்டாடுவார்கள் )
மலி புகழ் வானவர்க்காவர் நற்கோவையே
விரும்புவர் அமரர் மொய்த்தே
விண்ணுளாரிலும் சீரியர் –என்று சொல்லுகையாலே –

ஆழ்வானை ஒரு பட்டன் -தேவதாந்த்ரங்களை நீங்கள் கண்டால் பண்ணும் ஆசாரம் என் -என்று கேட்க-சாஸ்த்ர விரோதமாகக் கேளாதே கொள்ளாய் –-தேவதாந்த்ரங்கள் உங்களைக் கண்டால் பண்ணும் ஆசாரம் என் என்று கேளாய் -என்றார்

சர்வேஸ்மை தேவா பலிமா வஹந்தி(தைத்ரியம் சிஷா வல்லி -இவர்கள் ஆராதிக்கிறார்கள் )தஸ்ய யஞ்ஞவராஹஸ்ய –தேஷாமபி நமோ நம-எம்பெருமானுக்குப் பண்ணும் அஞ்சலியே இறே இவர்களும் பண்ணுவது-இவர்கள் பெருமைக்கு இடைவிடாதே பண்ணுகிறேன் -எம்பெருமானுக்கு ஒருகால் அமையும் – ப்ராப்யரான இவர்களுக்கு சர்வ ஸ்வதானமாகத் தன்னைக் கொடுக்கும் அத்தனை இறே-

அநந்ய பிரயோஜனனாய் பகவத் ஸமாச்ரயணம் பண்ணுமவனுக்கு
இந்த்ராதி தேவதைகள் நியாம்யராவார்கள் -என்று
இவ் வதிகாரிகளுடைய உத்கர்ஷம் சொல்லுகிறது –

இத்தால் பல ஸ்வரூபம் -ஆச்சார்ய சமாஸ்ரயணம் -அந்தர்யாமித்வ நிஷ்டையைச் சொன்னபடி-

தேவதாந்தர ஸ்பர்ச ரஹிதராய்-இப்படி அநந்ய பிரயோஜனராய்-பகவத் ஏக பிரவணராய்-
பகவத் அனுபவ உபகரணமானவற்றிலே இழிந்தவர்களுக்கு
அந்த தேவதாந்தரங்களும் ஏவல் செய்யும் என்னும் இடம் சொல்லிற்று-

கண்ணனே ஆஸ்ரித பாரதந்தர்யம் காட்ட திருவவதரித்து இவர்கள் கட்டவும் அடிக்கவும் இவர்கள் ஸ்பர்சம் பட்ட த்ரவ்யத்துக்கு அலமந்து இருக்க இவர்கள் இப்படி இருக்கச் சொல்லவும் வேண்டுமோ-

——

ஆழி மழைக் கண்ணா ஓன்று நீ கை கரவேல்
ஆழி யுட்புக்கு முகந்து கொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப்
பாழியம் தோளுடைப் பற்பநாபன் கையில்
ஆழி போல் மின்னி வலம் புரி போல் நின்று அதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சர மழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்–4–

வியாக்யானம் –
ஆழி மழைக் கண்ணா –
கம்பீர ஸ்வபாவத்தை உடையவனாய்-வர்ஷத்துக்கு நிர்வாஹகன் ஆனவனே –
சிருஷ்டி சம்ஹாரங்களை ப்ரஹ்ம ருத்ரர் தலையிலே பொகட்டு-
ஸ்வரூபத்துக்கு சேர்த்த பாலன விதியை தானே நடத்துமா போலே-தஹ பேச -என்னும் காரியத்தை –நாட்டாரைக் கட்டுவது விடுவது ஆகிற க்ரௌரய வியாபாரத்தை-யமாதிகள் தலையிலே ஏறிட்டு- ப்ரக்ருத்யா உன்னுடைய நீர்மையைக் கண்டு நம்மோபாதி ஜகத்தை ஈரக் கையால் தடவி நோக்க வல்லன்-என்று ஈஸ்வரனாலே மதிக்கப் பட்டவன் அன்றோ நீ –

ஆழி மழைக் கண்ணா –
ஆழி -என்று சமுத்திரமாய் -அத்தால் -நினைக்கிறது –
காம்பீர்யத்தையும் –
இடமுடைமையுமாய் –
ஸர்வேஸ்வரன் தன் கார்யம் செய்கைக்கு அளவுடையவன் இவன் என்று
திரு உள்ளத்திலே தோற்றி நியமிக்கும் படி பிறந்தவன் அன்றோ நீ –
சமுத்திர இவ காம்பீர்யே-என்னக் கடவது இறே –

இத்தால் நாட்டார் சிறுமை பாராதே-உன் பெருமைக்கு ஈடாக வர்ஷி -என்கை

ஆழி மழை -என்று
மண்டல வர்ஷமாக்கி -ஆழி -வட்டம் -சுழித்து வர்ஷிக்கை –மண்டல வர்ஷத்துக்கு நிர்வாஹகன் ஆனவனே -என்னவுமாம் –

ஸூஹ்ருதம் பண்ணினார் இருந்த இடத்தே வர்ஷித்தும்-
பாபம் பண்ணினார் இருந்த இடத்தே வர்ஷியாதும்-போருவது ஓன்று உண்டு இறே
எங்கள் பாக்யத்தை நினைத்து புஜிக்கும் நாடு ஆகையாலே-நீ அங்கன் புதைத்துப் பார்க்க ஒண்ணாது- எங்கள் கோடியிலே நீயும் ஆக வேணும்

நாட்டுக்கு இட்ட நினைவைக் கொண்டு படுக்கைப் பற்றிலே செல்லாதே கொள்
இவனை இங்கனே சொல்லுவான் என் என்னில்
இப்பெண்கள் பாலைகள் ஆகையாலே இவன் பேர் சொல்ல அறியார்கள்
ஆகையால்-இன்னது பிடித்தான் என்பது போலே –- இவன் அதிகரித்த கார்யம் தன்னை இட்டே சொல்கிறார்கள்-

ஆழி -என்று வட்டமாய் -அத்தாலே நினைக்கிறது -மண்டலத்தையாய் –ஒரோ இடங்களில் சுழித்து வர்ஷிக்கையும்-மண்டல வருஷத்துக்கு நிர்வாஹகன் ஆனவன் என்றுமாம் –பிராட்டி பிலவங்கம்-என்னுமா போலே –(அதே போல் இங்கும் குத்திப் பேசும் சொல்
பாகவத சேஷத்வம் சொல்லாமல் அதிகாரி தேவனே என்பது )

இவர்கள் தான் யாரேயேனும் அழைக்கையிலும்
கண்ணா என்று ஒழிய அழையார்கள் கிருஷ்ணனோட்டை வாசனையால்

பீஷாஸ்மாத் வாத பவத-
நெற்றி பெற்ற கண்ணன் -என்று தேவதைகள் அநு வர்த்திப்பதாக சொல்லப்படுகிற ஸர்வேஸ்வரன் அவதரித்து நோன்புக்கு சொல்லிற்று செய்யக் கடவனான பின்பு
பர்ஜன்யன் கிஞ்சித் கரித்து சத்தை பெறக் கடவன் இறே

(நெற்றி பெற்ற கண்ணன் விண்ணின் நாதனோடு போதின் மேல்
நல் தவத்த நாதனோடு மற்றும் உள்ள வானவர்
கற்ற பெற்றியால் வணங்கு பாத நாத வேத நின்
பற்று அலால் ஓர் பற்று மற்ற துற்றிலேன் உரைக்கிலே –திருச்சந்த–87- )

ஈஸ்வரன் பக்கல் கிஞ்சித் கரித்தவர்களுக்கு பல சித்தி இவர்களாலே யானால்
இங்கு கிஞ்சித் கரித்தவர்களுக்கு சொல்ல வேண்டா விறே

ஆழி-
அபரிச்சேத்யமான ஜ்ஞான வைபவத்தை உடையையாய்

மழைக் கண்ணா –
பகவத் காருண்ய வர்ஷ நிர்வாஹகனானவனே-என்னுதல்
பூமிப் பரப்பில் உள்ள சேதனர் அடைய பகவத் காருண்யத்துக்கு விஷயமாம்படி பண்ண வல்லவனே -என்னுதல்
பகவத் குணாம்ருத வர்ஷிகளான ஆசார்யர்களுக்கும் ஆசார்ய பதம் நிர்வஹிக்குமவன் -என்னுதல்

சம இதி லோக ஹிதாஹிதே நீ யுக்த -என்று யமனை அக் காரியத்துக்கு இட்டால் போலே
புண்ய பாப அனுரூபமாக வேண்டும் அளவிலே வர்ஷிப்பிக்கைக்கு சர்வேஸ்வரனாலே நியமிக்கப் பட்டுப் பேர் அளவுடையையாய் வர்ஷத்துக்கு நிர்வாஹகனானவனே

தேவதை அப்ரஸித்தம் ஆனமையாலும் தங்கள் ராஜ குலத்தாலும்
இன்ன பணிக்குக் கடவன் -என்பாரைப் போலே தொழிலை இட்டுச் சொல்லுகிறார்கள் –

தந்தாம் பாகத்து (புண்ணியத்துக்கு )அளவிலே கார்யம் செய்யும் போதைக்கு அன்றோ புதைத்து (குறைத்து )விட வேண்டியது எங்களுடைய பாக்ய பலமன்றோ எல்லாரும் புஜிக்கப் புகுகிறது சேதனனுடைய நன்மை தீமை கணக்கிட்டுப் படி வைக்கும் குசாண்டுள்ள ஈஸ்வர கோஷ்ட்டியின் படி அன்றியே வரையாதே பாபமே பச்சையாக ரஷிக்கும் எங்கள் (பிராட்டி சமர் )கோஷ்ட்டியில் படியே நடத்தித் தர வேணும்

மித்ர மவ்பயிகம் க்ருத்தம் –விதிதஸ் ச ஹி தர்மஞ்ஞா –
ஏவ முக்தா ஹநுமதா–இத்யாதி-பாபா நாம் வா –
ராஜ ஸம்ஸ்ரய வஸ்யா நாம் –(ராஜா ஆணைப்படி செய்த ராக்ஷஸிகள் எய்தவன் இருக்க அம்பைச் சொல்வதோ )
அலமேஷா –(த்ரிஜடை வார்த்தை )இத்யாதி
மஹா பாரதம் தூது போனவன் ஏற்றமான நீர்மையைச் சொல்லுகிறது –
ஸ்ரீ ராமாயணம் பிராட்டி நீர்மையைச் சொல்லுகிறது-

ஸந்நிதிகளில் கைங்கர்ய பரர்களை அருளிப் பாடிடும் போது,
“குடை தூக்குவான்!, சாமரை வீசுவான்!, திருச்சின்ன மூதுவான் !” என்றிங்ஙனே அவரவர்கள் அதிகரித்த காரியத்தை யிட்டு அருளிப் பாடிடுவது ஸம்ப்ரதாய மாதலால்
இவர்களும் அந் நடையை அடி யொற்றி “ஆழி மழைக் கண்ணா!” என்று
அவன் அதிகரித்த காரியத்தையிட்டு அழைக்கின்றனரென்க.

(நீராழி வண்ணனைப் பாலாழி நாதனை நின்மலனைச்
சீராழி யங்கைத் திருமகள் கேள்வனைத் தெய்வப்புள்ளூர்
கூராழி மாயனை மாலலங் காரனைக் கொற்றவெய்யோன்
ஓராழித் தேர் மறைத் தானை யெஞ் ஞான்று முரைநெஞ்சமே.  -திருமாலிருஞ்சோலைமலை அழகரந்தாதி-  1–)

———–

ஓன்று நீ கை கரவேல் –
உன்னுடைய ஔதார்யத்தில் ஒன்றும் மாறாத படி தோற்ற வேணும்-
கை -என்று கொடை
கரக்கை -மாறுகை
சேதனனுடைய நன்மை தீமைகளை கணக்கிட்டுப் படி வைக்கும்
குசாண்டுள்ள ஈஸ்வர கோஷ்டியைப் பார்த்து விஷமமாக வர்ஷியாதே
பாபமே பச்சையாக -ரஷிக்கும் எங்கள் படியைப் பார்த்து எங்கும் ஒக்க வர்ஷிக்க வேணும்

ஓன்று நீ கை கரவேல்
அர்த்திகள்-கொடுக்குமவனை -கை பெரியன் என்று சொல்லுகையாலே
உன் கொடையில் ஒன்றும் வஞ்சியாது ஒழிய வேணும் –

புண்ணியம் பண்ணினார் இருந்த இடத்தே வர்ஷிக்கவும் –
பாபம் பண்ணினார் இருந்த இடத்தே வர்ஷியாது ஒழியவும் அன்றோ
ஈஸ்வரன் எங்களை நியமித்து விட்டது என்ன

ஈஸ்வரன் அதிகரித்த கார்யத்திலே அன்றோ புதைத்து விடுவது –
நல்லாரைக் கைக் கொண்டு தீயாரைக் கழித்தும் இருக்கும் ராம கோஷ்ட்டியில் பழக்கத்தை விட்டு –
மித்ர மௌபயிகம் கர்த்தும்-என்றும்
தேன மைத்ரீ பவது -என்றும்
பாபாநாம் வா சுபாநாம் வா -என்றும் நசை அற்ற
ராக்ஷஸிகளுக்கும் ஹிதம் சொல்ல அதிகரித்த எங்கள் கோஷ்ட்டியில் பரிமாறுமா போலே பரிமாற வேணும் –
(சீதா பிராட்டி கோஷ்டி தானே இவர்கள் )

கை கரக்கை யாவது -கொடை மாறுகை

ஒன்றும் நீ கை கரவேல் –
ஏக தேசமும் ஸ்வ சம்பந்தமே ஹேதுவாக அனைவரையும் பகவத் காருண்யத்துக்கு விஷயம் ஆக்கவல்ல நீ-
வர்ஷியா விட்டால் உடம்பு வெளுக்கும் நீ-பகவத் குண வர்ஷத்திலே சோராதே கொள்ளாய்

ஆர்த்திகள் கை பெரியன் என்று கொண்டாடுமா போலே
உன் படிகள் ஒன்றும் குறையாதபடி வந்து தோற்ற வேணும் என்கிறாள்
என்னை ஸ்தோத்ரம் பண்ணுகிறது என் -உங்களுக்கு வர்ஷிக்கைக்கு நீருண்டோ என்னில்

———–

ஆழி யுட்புக்கு –
சகரர் கல்லின சிறு குழியில் அன்றிக்கே-சமுத்ரத்திலே போய் புக்க வேணும்
அதிலும் வாய்கரையிலே ஆக ஒண்ணாது -நடுவே சென்று இழிய வேணும் –

ஆழி யுட் புக்கு –
கண்ட ஜலா சயங்களிலும் ஒண்ணாது –
சகரர் கல்லின குழியிலும் ஒண்ணாது –
மஹார்ணவத்திலே புக்கு –
அதிலும்
வாய் கரையிலும் ஒண்ணாது –
உள்ளே புக வேணும்-

————

முகந்து கொடு-
இழிந்தால் மேற்பட்ட ஜலம் கொண்டு போர ஒண்ணாது-
கடலை மணலே சேஷிக்கும்படி கிரஹிக்க வேணும்

முகந்து கொடு
அங்குத்தை நீரை மணல் பற்றோடு வாங்கி –
இலங்கு ஒலி நீர் பெரும் பவ்வம் மண்டி யுண்ட -என்கிறபடியே –
மேல் எழ ஒண்ணாது –
அடி மண் அடியோடு தட்டப் பருகி

இரு கையில் சங் கிவை நில்லா எல்லே பாவம் இலங்கொலி நீர் பெரும் பெளவம் மண்டி யுண்ட,
பெரு வயிற்ற கருமுகிலே யொப்பர் வண்ணம் பெருந் தவத்தர் அருந் தவத்து முனிவர் சூழ
ஒரு கையில் சங் கொரு கை மற் றாழி யேந்தி உலகுண்ட பெரு வாயர் இங்கே வந்து, என்
பொரு கயல் கண்ணீர் அரும்பப் புலவி தந்து புனலரங்க மூர் என்று போயினாரே–திரு நெடும் தாண்டகம்–24

பகவத் குணாம்ருத சாகரத்திலே உள்ளே அவஹாகித்து யாவத் குணங்களையும் புத்தி ஸ்தமாம் படி அகஞ்சுரிப்படுததிக் கொண்டு –
அதாவது
எப்பேர்பட்ட அபாரதிகள் ஆகிலும் தாம் அபிமானத்த வர்களில்-காருண்யத்தைப் பண்ணும்படி எம்பெருமான் விதேயமாம்படி-பண்ணிக் கொள்ளுகை

இந்த முன் வாயில் சகரர் கல்லின உப்புக் குழி ஒழிய பெரும் கடலிலே புக்கு
முகந்து கொண்டு பாதாளம் கிடக்க மணலோடே பருக வேணும்

————–

ஆர்த்து –
இரா மடம் ஊட்டுவாரைப் போலே-முகம் தோற்றாமல் வந்து ரஷிக்கும் ஈஸ்வரனைப் போலே-ஆக ஒண்ணாது –
அனசநத்திலே தீஷித்த முதலிகள் அடைய திருவடி வரவாலே சத்தை பெற்று சம்ப்ரமித்தால் போலே நாடு அடைய உங்கள் உடைய த்வனி கேட்டு வாழும்படி மின்னி முழங்கி வில்லிலிட்டுக் கொண்டு பெரிய சம்ப்ரமத்தோடு வந்து தோற்ற வேணும்-

ஆர்த்து
நாட்டார் விடாயும் எங்கள் விடாயும் கெடும்படி மின்னி முழங்கி
வில் விட்டுத் துளித்துக் கொடு வர வேணும்

அநசனத்திலே தீஷித்த முதலிகள் தளிர்க்கும் படி திருவடி பிராட்டியைக் கண்ட ஹர்ஷத்தாலே சப்த்தித்துக் கொண்டு வந்தால் போலேயும்
ஓக மேகஸ் வன க்ருஷ்ண -என்று கிருஷ்ணன் முழங்கின வார்த்தை கேட்டு நாங்கள் தரிக்குமா போலேயும் – நாடு தளிர்க்கும் படியாக

ஆர்த்து
முதலிகள் அநசனத்திலே தீஷித்துக் கிடந்தவர்கள் த்வனி கேட்ட போதே
எழுந்து இருந்து ஆடும் படி திருவடி பிராட்டியைத்
திருவடி தொழுத ப்ரீதி ப்ரகர்ஷத்தாலே ஆர்த்துக் கொண்டு
வந்தால் போலே வர வேணும் –

———

ஏறி-
ஆகாச அவகாசம் இடமடையும் படி உங்கள் வடிவைக் கொண்டு பாரிக்க வேணும்
விண்ணீல மேலாப்பு விரித்தாப் போலே -என்றும்
மத யானை போல் எழுந்த மா முகில்காள் -என்றும்-சொல்லுகிறபடியே

ஏறி –
ஈஸ்வரனைப் போலே முகம் தோற்றாதே நின்று கார்யம் செய்ய ஒண்ணாது –
விண்ணீல மேலாப்பு விரித்தால் போலே -என்கிறபடியே
ஆகாச அவகாசம் எல்லாம் வெளியடையும் படி உங்கள் வடிவைப் பாரித்து காட்ட வேணும்

காட்டேல் மின் நும் உரு (திருவாய் -9-5-7)என்றும் –
காணும் தோறும் தொலைவன் நான் -என்றும்
இவற்றின் த்வனியும் வடிவும் பாதகம் ஆவது அநபேஷ தசையில் இறே

ஏறி
விஸ்ரம்ய விஸ்ரம்ய புன ப்ரயாந்தி-என்னுமா போலே
கர்ப்பிணிகள் சுரம் ஏறுமாப் போலே மெள்ள மெள்ள ஏறி

ஸ சம்ப்ரமமாக ஆசார்ய பதத்திலே ஏறி

நாங்களும் ஜகத்தும் கண்ட காட்சியாலே தளிரும் முறியுமாம் படி மின்னி
முழங்கி வில்லிட்டுக் கொண்டு வர வேணும்
விஸ்ரம்ய விஸ்ரம்ய புன ப்ரயாந்தி–
கர்ப்பிணிகள் நகர்ந்து நகர்ந்து பெரிய ஏற்றம் ஏறுமா போலே ஏற வேணும்
மத யானை போல் எழுந்த மா முகில்காள்
விண்ணீல மேலாப்பு விரித்தால் போலே ஆகாச அவகாசம் அத்தனையும் நிறையும்படி பாரித்துக் கொண்டு வர வேணும்

——–

ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப்-
ஜகத் காரண பூதன் ஆனவனுடைய வடிவு போல் இருக்க வேணும்
இந் நிர்தேசத்துக்கு கருத்து என் என்னில்-

நெடுநாள் தம் பக்கலிலே சம்ஹ்ருதமாய்க் கிடந்த ஜகத்தை-உண்டாக்குவதாக சங்கல்பித்தவாறே
பண்டு போல் அன்றிக்கே கரு வடைந்த பயிர் போலே
நிறத்திலே வருவது ஒரு வேறுபாடு உண்டு -அத்தை நினைக்கிறார்கள் –

காலோபலஷித சகல பதார்த்தங்களையும் உண்டாக்கின வனுடைய வடிவு
உங்களுக்கு உண்டாக வேணும்

மெய் கறுத்து-
அகவாயில் நீர்மை உங்களால் உண்டாக்க ஒண்ணாது இறே-வர்ஷித்தால் அநந்தரம் வெளுத்துப் போமவை இறே இவை

(வெய்யோனொளி தன்மேனியி(ன்) விரிசோதியி(ன்) மறையப்
பொய்யோ வெனு மிடையாளடு மிளையாளடு போனான்
மையோமர கதமோமறி கடலோ மழை முகிலோ
ஐயோ விவ(ன்) வடிவென்பதொ ரழியாவழ குடையான்-உருவம் போல் தான் பர்ஜன்யன் இருக்க முடியும்)

ஊழி முதல்வன் உருவம் போல்-
கால உபலஷித சகல பதார்த்தங்களும் நிர்வாஹகனாய்
ஸ்ருஷ்ட்டி உன்முகனான சர்வேஸ்வரனுடைய திரு மேனி போலே –
அதாவது
இவர்கள் புண்ய பாப அனுகுணமாக அன்றிக்கே –
தன்னுடைய கேவல கிருபையால் இவற்றுக்கு உபகரணங்களைக் கொடுத்து –
நாமும் இவர்களுமாய்க் கலக்க வேணும் என்று திரு உள்ளத்திலே நினைக்கையாலே
தன் பேறாக இவற்றை உண்டாக்கும் போது
அவன் திரு நிறம் புகர் பெற்று இருக்குமாய்த்து -சிருஷ்ட்டியில்

யவ்க பத்யம் அனுக்ரஹ கார்யம் என்று இறே ஆழ்வார்கள் ஈடுபட்டு –
முந்நீர் ஞாலம் படைத்த -என்றும்
பாமரு மூ உலகம் படைத்த – என்றும் குணமாகக் கொண்டாடிற்று –

ஊழி முதல்வன்-
சகல பதார்த்தங்களையும் உண்டாக்க வேணும் -என்று
திரு உள்ளத்திலே நினைக்கையாலே கருவடைந்த பயிர் போலே
திரு மேனியும் கறுத்து இருக்கும் –
அப்படியே இருக்க வேணும் உன்னுடைய நிறமும்

உருவம் போல் மெய் கறுத்துப்-
அவன் அகவாயில் தண்ணளி இதுக்குத் தேட ஒண்ணாதே –
இதினுடைய அகவாயும் நீர் அன்றோ என்னில்
அவன் நீர்மையைப் பார்த்தால் இது நெருப்பு என்னலாம் படி யன்றோ இருப்பது –

உருவம் போல் –
நாச்சியார் விழி விழிக்க ஒண்ணாதாப் போலே
அவனுடைய அகவாயில் நீர்மையை உங்களால் உண்டாக்கப் போகாது இறே
தன் நோயாசையாலே அவ் வடிவுக்கு போலி கண்டு தரிக்கப் பார்க்கிறாள் இறே

சர்வேஸ்வரனுடைய வியாவ்ருத்தி அறியச் செய்தேயும் அன்னலும் துன்னலும் நீரும் நெருப்புமான இத்தை ஒக்கும் அம்மான் உருவம் (8-5-8)-என்றார்கள் இறே -ஆற்றாமை இருந்த படி

ஒக்கும் அம்மான் உருவம்என்று* உள்ளம் குழைந்து நாள்நாளும்*
தொக்க மேகப் பல்குழாங்கள்* காணும்தோறும் தொலைவன்நான்*
தக்க ஐவர் தமக்காய் அன்று* ஈர்ஐம்பதின்மர் தாள் சாயப்*
புக்க நல் தேர்த் தனிப்பாகா!* வாராய் இதுவோ பொருத்தமே?-திருவாய் 8-5-8-

உள்ளம் குழைந்து தோல் புரையே போம் அன்றிக்கே அகவாய் சிதிலமாய்
நாள் நாளும் -நாள் தோறும்
தொக்க மேக்கப் பல் குழாங்கள் -திரண்ட மேகங்களினுடைய பல திரள்களை காணக் காண சோகியா நிற்பன்
தக்க ஐவர் -உன்னைக் கடகாக விட்டு மார்பிலே அம்பேற்கப் பார்ப்பார் விரோதியோ போக்கலாவது-நூற்றுவராய் அளவுபடிலோ உதவலாவது – இத்தனை திரள் உண்டானால் உதவலாகாதோ

ஈரைம்பதின்மர் தாள் சாய-நூற்றுவர் கால் சந்ததி –அறும் படி பிரவேசித்த இம்மேகத்திலே ஒரு மயிர் மானத்துக்கு வாட்டம் வரில் ஆகாதோ –

புக்க -பீஷ்மாதிகள் சர வர்ஷத்தாலே நூக்க மதியாதே தேரை நடத்தின படி –

நல் தேர் தனிப் பாகா -ரதியைக் காண்கிறிலர் –
வாராய் -அத்தேரை இம்மேகத் திரளில் திரிய விட்டாலாகாதோ –
இதுவோ பொருத்தமே -அவர்களுக்கு கார்யம் செய்த படியும் இதுவோ —
ரிஷிகளுக்குக் கைக்கூலி கொடுத்து எழுது வித்துக் கொண்ட இத்தனை யாகாதே

சிருஷ்டி உன்முகனான ஈஸ்வரன் உடைய திரு மேனியைப் போலே-
காருண்ய சிருஷ்டி உன்முகனான உன் திரு மேனியிலும் வேறுபாடு உண்டாய்

ஸ்ருஷ்ட்டித்தால் இவை பண்ணும் நன்மை தீமைக்குத் தக்கபடி பார்க்கும் பார்வை அன்றிக்கே-
ஸ்ருஷ்டிக்கு முன்பு
எல்லாரையும் ஐயோ என்று ஓக்கப் பார்க்குமா போலே
நீயும் இங்குத்தைக்கு ஒத்து இருக்கப் பார்க்க வேணும் என்று கருத்து-
முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணன் இறே

அகவாயில் நீர்மை உங்களால் தேடப் போகாது நிறத்தை யாகிலும் கொள்ளுங்கோள்
நாச்சியார் விழி விழிக்கச் சொல்லுகிறார்கள் –
ஈஸ்வரனைப் போல் முகம் தோற்றாமல் நின்று உபகரிக்க ஒண்ணாது
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து கால உபலஷிதமான சர்வ பதார்த்தங்களையும் உண்டாக்க வேணும் என்று திரு உள்ளத்தில் கொண்டதாகையாலே
கருவடைந்த பயிர் போலே இருக்கும் திரு நிறம் -என்கை –

மெய் கறுத்து
அகவாயில் நீர்மை அவனுடைய நீர்மைக்கு நெருப்பு என்னலாம்-

முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணன்-( 3-2-1-) இறே –

(முகில் வண்ணன் மேக வண்ணன் -மற்ற கவிகள் –
ஆண்டாளோ மேகத்தை அவனைப் போல் -இது அன்றோ யதாவஸ்திதம் -)

———-

பாழியம் தோளுடைப்–
உபய விபூதியும் ஒதுங்கினாலும் ஒதுங்கிய ரஷ்ய வர்க்கம் அளவு பட்டு-ரஷகனுடைய காவல் துடிப்பே மிக்கு இருக்கை –

பாழித் தோள் –
வலி உடைய தோள் என்னுதல்
இடம் உடைய தோள் என்னுதல்

அம் தோள்-
அழகிய தோள்

அங்கன் இன்றிக்கே
குழைச் சரக்கே யாகிலும் விட ஒண்ணாத போக்யதை மிக்கு இருக்கை –
ரஷகமுமாய் அது தானே போக்யமுமாய் இருக்கை –

பாழியம் தோளுடைப் பற்பநாபன் –
பிள்ளைகளே தொட்டிலே வளர்த்தி-புற்பா இட்டுப் பூரித்து ஆயுதம் கொண்டு நோக்கி இருப்பாரைப் போலே-
திரு நாபீ கமலத்திலே வ்யஷ்டி சிருஷ்டிக்கு காரண பூதனான ப்ரஹ்மாவை பெற்று வைத்து-
திருத் தோள்களாலே காத்துக் கொண்டு இருக்கிறவன்

பாழி-
இடமுடைமை –
பஹுஸ் ஸ்யாம் வஷ்டப்த-ஒதுங்கின ரஷ்ய வர்க்கம் பொருந்தும் படி நிழல் மிக்கு இருக்கை
நிவாஸ வ்ருஷஸ் ஸாதூ நாம் –

புத்ரஸ் தே ஜாத -என்று ப்ரஹ்மாவை உண்டாக்கின அநந்தரம் பிறந்த ஒளி
கொப்பூழில் எழு கமலப் பூ வழகர் எம்மனார் -என்று கொப்பூழ் அழகைக் கண்டு கிடக்குமவள் இறே

யம் தோள் –
உழறு பால் -ரக்ஷகமும் தானேயாய் -போக்யமும் தானேயாகை-
சுந்தரத் தோளுடையான் இறே -படவடித்தாலும் விட ஒண்ணாது-

பற்பநாபன் -கையில் -ஆழி போல் மின்னி –
சிருஷ்டிக்கு முதலான ப்ரஹ்மாவை சிருஷ்டித்த திரு நாபீ கமலத்தை உடைய-சர்வேஸ்வரன் கையில்-திரு ஆழியோ பாதி மின்ன வேணும்-இந் நிர்பந்தத்துக்கு கருத்து என் என்னில் –

பிள்ளை பெற்ற ஹர்ஷம் விஞ்சி இருக்கச் செய்தேயும்-காம்பீர்யத்தாலே அது தோற்றாது இருப்பர்கள்-
அவ்வவர்க்கு உரிய அகம்படியரானவர்கள் அந்த ப்ரீதிக்கு போக்கு விட்டு நெய்யாடல்-போற்றிக் கொண்டு திரியுமா போலே
பிரதம ஜனானான ப்ரஹ்மா உண்டான பின்பு-
சர்வேஸ்வரனுக்கு பிறந்த ஹர்ஷத்துக்கு போக்கு விட்டுக் கொண்டு ஆடினான் திரு ஆழி ஆழ்வான் –
ஆகையாலே அவனை ஒப்பாக சொல்லுகிறது –

பாழியம் தோளுடைப் பற்பநாபன் கையில்-
பாழி-
இடமுடைமை என்னுதல்-
வலி என்னுதல் –

பஹுச்சாயா மவஷ்டப்தோ யஸ்ய லோகோ மஹாத்மன
ரஷ்ய வர்க்கம் அடையத் தோள் நிழலிலே ஒதுங்கினாலும் -ஆள் சுருங்கி நிழல் பெருத்து இருக்கை –

அம் தோள் –
நோக்காதே படு குலை யடிக்கிலும் விடப் போகாதே தோள் –
உழுது பால் -ரக்ஷகமானது தான் போக்யமாய் இருக்கை –
சுந்தரத் தோளுடையான் இறே

பற்ப நாபன் –
கொப்பூழில் எழு கமலப் பூ வழகர் -என்று தான் தோற்று இருக்கும் துறை
பற்ப நாபா ஓ -நம்மாழ்வாரைக் கூப்பிடப் பண்ணிற்று இறே

பற்ப நாபன் கையில் ஆழி போல் மின்னி-
புத்ரஸ் தே ஜாத -என்று பிதாவானவன் அளவுடைமையாலே பேசாது இருந்தாலும்
உரிய அடியார் பக்கலிலே இறே உகப்புக் காணலாவது –

அங்கைத் தலத்திடை யாழி கொண்டான் -என்று
வெறும் புறத்திலே ஆலத்தி வழிக்க வேண்டும்படியான அழகிய கையிலே பிடித்த திருவாழி போலே மின்னி –

ஆழி யோடும் -என்று
வெளிச் சிறப்பிக்கைக்கும் –
மதி கெடுக்கைக்கும் பரிகரம் அதுவே இறே

பலிஷ்டமாய்-சர்வ அபாஸ்ரயமாய்-அதி சுந்தரமான புஜங்களை உடையனாய்
சமஷ்டி சிருஷ்டிக்கு கடவனாய் பிரம்மாவுக்கு உத்பத்தி ஸ்தானமான திரு நாபீ கமலத்தை உடைய-
எம்பெருமான் உடைய திருக் கையிலே இருக்கிற திரு ஆழி ஆழ்வானைப் போலே-
காருண்யா சிருஷ்டிக்கு கடவரான எம்பெருமானை
யோக பலத்தாலே-சாஷாத் கரிக்கையால் வந்த மிக்க புகரை உடையராய்-

வெறும் புறமே அமையும் -அதுக்கு மேலே திருவாழி-
ராஜாக்களுக்கு பிள்ளை பிறந்தால் காம்பீர்யத்தால் அவர்கள் தங்கள் பேசாது இருக்க
உரிய வடியார் நெய்யாடல் போற்றுமா போலே திருவாழி நின்று ஜ்வலியா நிற்கும்
ஆழியோடும் பொன்னார் சாரங்கமுடைய அடிகளை இன்னார் என்று அறியேன்
வெளிச் செறிப்பிப்கைக்கும் அழிக்கைக்கும் பரிகரம் அதுவே

பஹுஸ் ஸ்யாம் அவஷ்டப்த யஸ்ய லோகாத் மஹாத்மன –
(திருவடி முதல் வார்த்தை -பெருமாளைக் கண்டவுடன் )
ஒதுங்கின ரஷ்ய வர்க்கம் பொருந்தும் படி நிழல் மிக்கு இருக்கை
நிவாஸ வ்ருஷஸ் ஸாதூ நாம் –
(தாரை வாக்கியம் -நாமி பலம் இது -அங்கு நாம பலம் )

———-

வலம் புரி போல் நின்று அதிர்ந்து-
பாரத சமரத்தில் ஸ்ரீ பாஞ்ச ஜன்ய த்வனி போலே இருக்க வேணும்-
அனுகூலர் வாழவும் பிரதி கூலர் முடியவும் ஆக வேணும் -நின்று அதிர்ந்து –
அது போல் ஒரு கால் முழங்கி விட ஒண்ணாது-மாறாதே நின்று அதிர வேணும் –

வலம் புரி போல் -நின்று அதிர்ந்து-
சுடர் ஆழியும் பல்லாண்டு -என்னா –
அப்பாஞ்ச சன்னியமும் பல்லாண்டு -என்னுமவர்கள் இறே –
பூங்கொள் திரு முகத்து மடுத்தூதிய சங்கு ஒலியும்-என்று செவி மடுத்துக் கிடக்குமது இறே உண்பது சொல்லில் ஒண்ணாது மாறாதே நின்று அதிர வேணும்

இவ் விடத்திலும் பற்ப நாபன் கையில் என்று அநு ஷங்கிக்க வேணும்
அவன் கையில் வர்த்திக்கும் ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் போல் இடைவிடாமல் த்வநித்து
அதாவது-
பிரணவ அர்த்தத்தை அனைவரும் அறியும்படி திருவாய்மொழி முகத்தாலே வெளி இட்டு அருளிச் செய்கை –

பாரத சமரத்தில் பாஞ்ச ஜன்யம் போலே முழங்கித் தோற்ற வேணும்
ச கோஷா தார்த்தாஷ்ட்ராணாம்
பூங்கொள் திரு முகத்து மடுத்தூதிய சங்கொலியும்-
கை கழலா நேமியான் –இத்யாதி
ஸ்த்ரீத்வத்துக்கு முலை போலே அவனுடைய பும்ஸத்வத்துக்குத் திருவாழி

வலம் புரி
உண்பது சொல்லில் உலகலந்தான் வாயமுதம் –
பொதுவாக உண்பதனைப் புக்கு நீ யுண்டக் கால் -என்று தம் துறையில் உள்ளது இறே
தேவதாந்த்ர பஜனம் பண்ணினாரைப் போலே யன்றிக்கே
பகவத் சமாஸ்ரயணம் பண்ணினார் பெறுமா போலே பெற வேணும்
தேவ மாத்ருகம் போல் அன்றிக்கே பகவத் சமாஸ்ரயணம் நதி மாத்ருகம் போலே சரதம் என்கை

வலம் புரி போல் நின்று அதிர்ந்து –
இவ்விடத்திலும் பற்ப நாபன் கையில் என்று அநு ஷங்கிக்க வேணும்
அவன் கையில் வர்த்திக்கும் ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் போல் இடைவிடாமல் த்வநித்து
அதாவது-
பிரணவ அர்த்தத்தை அனைவரும் அறியும்படி திருவாய்மொழி முகத்தாலே வெளி இட்டு அருளிச் செய்கை –

தாழாதே சார்ங்கம் உதைத்த சர மழை போல் —
அவிச்சின்னமாக சார்ங்கம் வர்ஷித்த பாண வர்ஷம் போலே
பிரணவத்தில் சேஷ சேஷி பாவ சம்பந்த பிரயுக்தமான–பகவத் காருண்ய வர்ஷத்தை

வாழ —-
லௌகிகர் எல்லாம் ஸ்வரூப ஜ்ஞானம் பிறந்து வாழும்படி
உலகினில்–லௌகிகர் இடங்களில்–பெய்திடாய்–பகவத் குண கதாம்ருதத்தை வர்ஷிக்கக் கடவாய்

———

தாழாதே –
நோன்பிலே நின்று உபக்ரமித்து-
உபவாச க்ருசைகளாய் இருந்த எங்கள் வடிவு இருந்தபடி கண்டாய் இறே
அத்தனை கால விளம்பத்தோடே ஆக ஒண்ணாதே
ஆர்த்திக்கு முற்பாடனாய் ரஷிக்கும் ஈஸ்வரனைப் போல் ஆக வேணும்
தேவ மாத்ருகம் -வானம் பார்த்த நிலம் -போல் அன்றிகே
பகவத் சமாஸ்ரயணம் நதீ மாத்ருகம் போலே -சரதம் -என்கை –

தாழாதே –
நோன்பிலே நின்று உபக்ரமித்து உபவாச க்ருசைகளாய் இருந்த –
பொதுவாக உண்பதனை -என்று தான் சீறு பாறு என்னுமவர்கள் இறே –

நின்று அதிர்ந்து –
பாரத சமரத்தில் போலே ஒருகால் அதிர்ந்து விட ஒண்ணாது –
ஹர்தயா நிவ்யதாரயத்–என்று எதிரிகள் நெஞ்சு பிளக்கும் படி சப்திக்க ஒண்ணாது –
நாங்கள் வாழும்படி நின்று முழங்க வேணும் –

ஆழி போல் மின்னி வலம் புரி போல் நின்று அதிர்ந்து –
இவளுடைய ஸ்த்ரீத்வத்துக்கு முலைகள் போலே இறே அவனுடைய பும்ஸத்வத்துக்கு திவ்யாயுதங்கள் –

தாழாதே –
தம் தாமை ஆஸ்ரயித்தார் நோவு பட ஆறி இருக்கும் தேவதாந்த்ரங்களைப் போல் அன்றிக்கே –
மித்ர பாவமே அமையும்-விளம்பம் பொறேன்-என்ற சக்கரவர்த்தி திரு மகனைப் போலே யாக வேணும் –

(கீழே உலகு அளந்த உத்தமன் ஸ்பஷ்டம் -இதில் சக்ரவர்த்தி திருமகன் ஸூ சகம் -அடுத்து மதுரை மைந்தன் )

தேவதாந்த்ர பஜனம் பண்ணினாரைப் போலே அன்றிக்கே
பகவத் ஸமாச்ரயணம் பண்ணினாரைப் போலே பெற வேணும் –

கர்ம அனுகுணமாக வரும் பலத்துக்கு இறே தேவமாத்ருகம் போலே விளம்பம் உள்ளது –
பகவத் ஸமாச்ரயணீயம் நதீ மாத்ருகம் போலே
சரதமுமாய்
நிச்சயமுமாய் – தாழ்ப்பதும் செய்யாதே ஒழியும் இறே

தசாரதாத்மஜன் -சரணம் என்று புகுந்தவர்களைக் கொண்டு அல்லது தரியாதாப் போலே வர வேணும் என்கை

——

சார்ங்கம் உதைத்த சர மழை போல்-
இரை பெறாத பாம்பு போலே-முன்பு விஷயம் இல்லாமையாலே அடங்கி இருந்த ஸ்ரீ சார்ங்கம்-சக்கரவர்த்தி திருமகன் கடைக் கணித்த வாறே நூறாயிரம் சர வ்ருஷ்டியைத் தானே பண்ணிற்று –
எய் வண்ண வெஞ்சிலை இறே -உடையவன் அம்பு பெருக்கி இடுகை –

சார்ங்கம் உதைத்த –
அகம்படியர் -சேஷ பூதர் -கிளர்ந்தால் அரசனாலும் அடக்கப் போகாது இறே
அது போல் பெருமாள் கடைக் கணித்த பின்பு பெருமாளாலும்-விலக்க ஒண்ணாதாய் இருக்கை-அகம்படியர் கோபித்தால் பின்னை அரசனால் மீட்கப் போகாது இறே
அவஷ்டப்யமஹத் தநு -பெருமாளால் அமைக்கப் போகாமை பற்றிக் கொண்டு நின்றார் அத்தனை –
சார்ங்கம் என்னும் வில்லாண்டான் -என்னக் கடவது இறே

சர மழை போல்
சர வர்ஷம் வவர்ஷ ஹ

அவிச்சின்னமாக சார்ங்கம் வர்ஷித்த பாண வர்ஷம் போலே-
பிரணவத்தில் சேஷ சேஷி பாவ சம்பந்த பிரயுக்தமான-
பகவத் காருண்ய வர்ஷத்தை

பெருமாள் கடைக் கணிக்கும் போதும் பெருமாளைப் பார்த்துப் பின்னைத் தானே பராக்ரமிக்கும் என்கை
பின்னை தானே பராக்ரமிக்கும் -அகம்படி கிளர்ந்தால் அரசனால் விலக்கப் போகாது இறே –
அவஷ்டப்ய மஹத் தநு–பெருமாள் தம்மால் அமைக்க ஒண்ணாம் பிடித்துக் கொண்டு நின்று ஊசலாடினார்
சார்ங்கம் என்னும் வில்லாண்டான் –

ஆழி மழை -வார்த்தை முறைப்பட்டது
சர வர்ஷம் வவர்ஷ ஹ -என்று தானே சர வ்ருஷடி பண்ண வற்று

———-

வாழ உலகினில் பெய்திடாய் –
த்ருஷ்டாந்தமான சர வர்ஷத்திலே ராஷச ஜாதி அடங்க முடிந்தது -அங்கன் ஒண்ணாது
அனுகூல பிரதிகூல விபாகம் இன்றிக்கே லோகமாக வாழ வேணும்-
அழகிது -ஈஸ்வர ஆஞ்ஞையாலே நான் முன்பே அதிகரித்த தொரு கார்யம் அன்றோ –
இங்குத்தைக்கு நான் கிஞ்சித் கரித்தவனாம்படி என் என்ன –

வாழ உலகினில் பெய்திடாய்
சரம் போலே முடிக்க ஒண்ணாது –
அங்கு எதிரிகளான ராக்ஷசர் மேல் விட்டால் போலே அன்றிக்கே ஜகத்தடைய வாழ வேணும் லௌகிகர் எல்லாம் ஸ்வரூப ஜ்ஞானம் பிறந்து வாழும்படி–லௌகிகர் இடங்களில்-பகவத் குண கதாம்ருதத்தை வர்ஷிக்கக் கடவாய்

———

நாங்களும் மார்கழி நீராட –
நாங்கள் காலத்திலே போய் மார்கழி நீராடக் கடவோம்-
அதுவும் முன்பே ஊராக நிச்சயித்த தொன்று அன்றோ –
இப்போது வந்த தன்னேற்றம் என் என்ன –

மகிழ்ந்து –
நாங்களும் நோன்பு நோற்றோமாய்
அந்த நோன்புக்கு பலமான வர்ஷமும் உண்டாய்த்தாய்-
கிருஷ்ணனோட்டை சம்ச்லேஷத்தால் மகிழ்ந்து நீராடக் கடவோம்

மகிழ்ந்து-
ஊரார்க்கு மார்கழி நீராடுகைக்கு மேலே ப்ரீதி பூர்வகமாக-குளிக்க வேண்டுவதொரு நிர்பந்தமும் இல்லையே-
உனக்கு பிரிய கரமாக புருஷார்த்தமாக – கிருஷ்ணனும் நாங்களும் மகிழ்ந்து குளிக்கிறோம் -என்கிறார்கள்-

ஈஸ்வரனாலே வர்ஷார்த்தமாக நியமிக்கப் பட்ட எனக்கு அடைத்த பணி யன்றோ நடத்துகிறது –
நீங்கள் இப்போது இரக்கிறது என் என்ன

நாங்களும்-மார்கழி நீராட -மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்-என்கிறார்கள் –
நாங்களும் கிருஷ்ணனும் சேரக் குளிக்கை உனக்கு கிடைப்பது ஒன்றோ –
நாங்கள் உன் வடிவைக் கண்டு த்வனியைக் கேட்டு எங்களுடைய தாபத்தை ஆற்றி
ப்ரீதிகளாய்க் கொண்டு மார்கழி நீராடுகிறோம் –
இவர்களை யுகப்பிக்கை இறே இவனுக்கு ஸ்வரூபம்
ப்ரகர்ஷ இஷ்யாமி யிலே இறே அந்வயம்
என்னுயிர்க்கு அது காலன்-என்ன வேண்டாவே கிருஷ்ணன் கூட நீராடுகையாலே –

பகவத் கைங்கர்ய ஏக போகரான நாங்களும் -நோன்பு -என்கிற-வ்யாஜ்யத்தாலே-
பகவத் சம்ஸ்லேஷத்தைப் பண்ணி மகிழக் கடவோம்-அதாவது-
பகவத் அனுபவ சஹகாரிகள் இத்தனை பேர் உண்டாவதே
என்று அவர்களோடு கலந்து-பகவத் அனுபவத்தைப் பண்ணி ஆனந்திக்கை

இப் பாட்டில்
வர்ஷ தேவதைக்கு அவன் அதிகரித்த கார்யத்தையே-தங்களுக்கு இஷ்டமாக நியமிக்கையாலே-
பகவத் பாகவத இஷ்டத்வேன-நித்ய நைமித்திகாதி தர்மங்களை
யதாவாக அனுஷ்டிக்கை-
பிரபன்ன அதிகாரிகளுக்கு அவசியம் என்றது ஆய்த்து  —

நாங்களும் கிருஷ்ணனும் மகிழ்ந்து குளித்துத் தருகிறோம் என்கிறார்கள் –
ப்ரஹர்ஷயிஷ்யாமி
நாங்கள் வியக்க இன்புறுதும் –
இவர்களுக்கு காட்டேன்மின் நும்முரு என்னுயிர்க்கது காலன்-என்ன வேண்டாவே –
கிருஷ்ணனைக் கண்டால் போலே இருக்க அமையும் –
ஏவமுக்தா ஹநுமதா மைதிலீ ஜனகாத்மஜா உவாச தர்மஸஹிதம் ஹநூமந்தம் யசஸ்வி நீ –
தஹ பச -என்றும் –
கொள்ளை- கூத்து என்றும்
ராம கோஷ்ட்டியில் சொல்லும் வார்த்தையைச் சொல்லாதே
எங்கள் குடிப் பிறப்புக்கும்
பிறந்த மண் பாட்டுக்கும் தக்கபடி சத்ருக்களும் வாழ வேணும்
எங்கள் கோஷ்ட்டியில் வார்த்தையைச் சொல் என்று அருளிச் செய்தார் –

ஏல் ஓர் எம்பாவாய்-

———-

ஊழி முதல்வன் –
பொன்னை மெழுகொற்றி தேற்றுமா போலேயாய்
தன்னைக் கொடு தரணி எல்லாமும் — முன்னை போல்
தான் தோற்று மஃது சம நோக்கே! ஊன் உயிர்
கண் ஏற்றல் ஆம் தனி நோக்கு.

நாராயணனே நமக்கே பறை – தண்டுழாய் நமகன்றி நல்கான் – தனி நோக்கு – (விஷம) வியஷ்டி ஸ்ருஷ்டி
நாமும்-நாங்கள்-நாங்களும் மார்கழி நீராட – பொது நோக்கு – ஸமஷ்டி ஸ்ருஷ்டி.

—————

இப் பிரபந்தத்திலே –
ஊழி முதல்வன் -பற்ப நாபன் -என்று -சேஷத்வ பிரதிசம்பந்தியான சேஷித்வத்தையும் –
உனக்கே -என்கையாலே -உகாரத்தில் அநந்யார்ஹ சேஷத்வத்தையும் –
நாம்-என்றும் –
யாம் -என்றும் –
மகார வாச்யனான ப்ரக்ருதே பரனாய் பகவத் சேஷ பூதனாய் இருக்கிற
ஆத்மாவின் ஸ்வரூபத்தையும் சொல்லுகையாலே
ப்ரணவார்த்தம் சங்க்ரஹீதம் ஆயிற்று –

(பாராசர்யா வச ஸூதாம் உபநிஷத் துக்தாபிதி மத் யோத்த்ருதாம்
சம்சாராக்நி விதீபந வ்யபகத ப்ராணா த்ம சஞ்ஜீவநீம்
பூர்வாச்சார்ய ஸூ ரஷிதாம் பஹூ மதி வ்யாகாத தூரஸ்திதாம்
ஆநீதாம் து நிஜா ஷரை ஸூ மநசோ பௌமா பிபந்து அந்வஹம்
ஷீரம்-சாரமானது–அப்தி – சமுத்ரம் போல அனந்தங்கள் உபநிஷத் என்கிறார்
மத்யே முக்யார்த்தம் -சார தமம்-உத்த்ருத –ஆழமான ப்ரஹ்ம பரம்)

நாத அத்ரவ் அப்யஷிஞ்சத் -தத் அநு ரகுவராம்போஜ சஷுர்ஜ்ஜராப்யாம்
கத்வா தாம் யாமுனாக்க்யாம் சரிதம் அத யதீந்த்ராக்க்ய பத்மகரேந்த்ரம்
சம்பூர்ய பிராணிச சயே ப்ரவஹதி சததம் தேசிகேந்த்ர ப்ரமவ்கை

ஸ்ரீ நம்மாழ்வாரை -ஆழி மழைக் கண்ணா-என்று விளித்து–ஆச்சார்ய பரம்பரையில் பிராப்தமான அர்த்தங்களை
உள் புக்கு முகந்து கொண்டு தேவபிரானுடைய கரிய கோலத் திரு உருவை உள்ளே விளங்கும்படி காட்டி அருளி–
திரு ஆழி ஆழ்வானைப் போலே விரோதி நிராசனம் செய்து கொண்டும் –
ஸ்ரீ பாஞ்ச ஜன்ய ஆழ்வானைப் போலே கம்பீரமான மிடற்று ஓசையைக் காட்டிக் கொண்டு
ஸ்ரீ ஸூக்திகளைப் பெய்து உஜ்ஜீவிப்பிக்க பிரார்த்தனை

ஸ்ரீ லஷ்மீ நாதஸ்ய ஸிந்தோ –சடாரி -காருண்ய நீரம் -ராம மிஸ்ரர் புண்டரீகாஷர்-அருவிகள் மூலம் –
ஆளவந்தார் பெருக்காறு வழியாக
எம்பெருமானார் தடாகம் -நிறைத்து–74 மதகுகள் -–திக் கஜங்கள்-பயிருக்கு பாய்கிறது -நம் இடம்–நமக்கு
எம்பெருமானார் மேகம் -ஆழி மழைக் கண்ணா -செழும் கொண்டலே –
மறைப்பால் கடலை -தொண்டர்க்கு அமுது உண்ண —திரு நாவின் மந்தரத்தால் கடைந்து-துறைப்பால் படுத்தி–
தமிழ் ஆயிரத்தின் சுவை இன்பம் தவிர -சென்மம் விடாய்க்கு நிழல் இல்லை –

ஆச்சார்யர்கள் -வள்ளல் பெரும் பசுக்கள் -சிஷ்யர்களுக்கு -ஆத்ம ஞானம் -பால் ஊட்டி பொழிவதை ஓங்கி
இங்கு கருணா கடாக்ஷம் -ஞான வருக்ஷம்-பொழிந்து- தத்வ ஹித புருஷார்த்த சார தமம் –
வேத இதிஹாச புராண அருளிச் செயல் சாகரத்தில் –
ஆழி-கூர்மையான ஞானம் -பிரதிபந்தகங்கள் நிரசிக்கும் ஸாமர்த்யம்
அண்ணா -ஸ்வாமி -அபி நவ தசாவதாரம் -ஆழ்வார்கள் –
குண கண ஆர்ணவம் அன்றோ அருளிச் செயல்கள்
முகர்ந்து -சாத்மிக்க–புள்ளு பிள்ளைக்கு இறை தேடும் -அர்த்த விசேஷங்கள்
ஆர்த்து -ஏறி -சிம்ம கர்ஜனை -பர மத நிரசனங்கள் -களைகளை அகற்றி பயிரை விளைக்கும்-போஷிக்கும் – க்ருஷிகன்
பயிரில் களை போல் அசுரரை களைந்தான் -தேசிகன் –

முதல் மூன்று பாசுரங்களால் ரஹஸ்ய த்ரயங்களும் -இதில் ஆச்சார்ய உபதேசமும் -என்றவாறு –
உபதேச திரு வாக்கு -ஓங்கார த்வனியும் -ஆழி போன்ற பிரகாசமும் உண்டே நம் ஆச்சார்யர்களுக்கு –
பஞ்ச சம்ஸ்காரம் -லாஞ்சனை உண்டே –

பகவதோஸ்ய தயையைக சிந்த்யோ -ஏரார் எதிராசர் இன் அருளால் –
ஆசை உடையார்க்கு எல்லாம் –
தாய்க்கும் மகனுக்கும் –இவர்க்கும் இவர் அடி பணிந்தோர்க்குமே இவை உள்ளது-
பஞ்ச ஆயுதங்களையும் சொல்லி -அடையார் –இந்த பூதலம் காப்பதற்கு இடையே ராமானுச முனி ஆயின–
கலியும் கெடும் கண்டு கொண்மின் -–பொலிக பொலிக பொலிக –தொல்லை வாதியருக்கு-வாழ்வு அற்றது
சார்ங்கம் உதைத்த சர மழை-போல்–வாழ உலகினில் பெய்திடாய் அடியார்கள் வாழ –
ஆசார்ய அபிமானம் தளைத்து ஓங்க

முதலாழ்வார் திருமழிசை பிரான் திருமங்கை ஆழ்வார் எம்பெருமானார் -மேகம் –கருணா ரச வர்ஷிகள்-
திருமால் சீர்க் கடலை உட் பொதிந்த சிந்தனையேன்
கல்யாண குணங்களை பருகி–திருமால் திருமேனி ஒக்கும்–உயிர் அளிப்பான் மாகங்கள் எல்லாம் திரிந்து
தீர்த்த கரராமின் திரிந்து–தீதில் நன்னெறி காட்டி எங்கும் திரிந்து–

தீங்கின்றி
அநர்த்த கந்தமும் இல்லாமல்-
இன்னமும் உபகரிக்கப் பெற்றிலோமே என்று வெள்கி–சிஷ்யர்கள் உஜ்ஜீவனம் தங்கள் பேறாக நினைத்து இருக்கும்-
ஆங்கு அரும்பிக் கண்ணீர் சோர்ந்து அன்பு கூறும் அடியவர் ஆகிய முதல் ஆழ்வார்கள்-
உருவின வாளை உறையில் இடாது- அடியிலும் இடையிலும் முடிவிலும் தேவதாந்திர அப்ரத்வத்தையும்–
பகவத் பரத்வத்தையும் உபபாதிக்கும் திரு மழிசை பிரானும்
காரார் புயல் கை கலிகன்றி -அருள் மாரி ஔதார்யத்தில்–
மேகத்தை ஒத்து கருணையை வர்ஷிக்கும் திருமங்கை ஆழ்வார்
குணம் திகழ் கொண்டல் எம்பெருமானார்-

ஏறி
ஆச்சார்ய பதவியிலே ஏறி–
வலம்புரி போல்
பிரணவம் போல்–நின்று அதிர்ந்து வெளியிட்டு அருளி-

நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்து–நீராட்டம் -ஐந்து பாசுரங்களில்
நீராடப் போதுவீர்–
நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்து–
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே–
உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை இப்போதே எம்மை நீராட்டு–
மாலே மணி வண்ணா மார்கழி நீராடுவான்
கிருஷ்ண சம்ச்லேஷம் -ஏஷ ப்ரஹ்ம பிரவிஷ்டோச்மி க்ரீஷ்மே சீதமிவ ஹ்ர்தம்
காலை நல் ஞானத் துறை படிந்தாடி -திருவிருத்தம்
தயரதன் பெற்ற மரகத மணித்தடம்
அப்பன் திருவருள் மூழ்கினாள்-

ஆச்சார்யர் =மேகம்
உப்புக்கடல் -மழை –வேத சாகரம் -திரு நா வீறு கொண்டு பரம போக்யமாக சாரார்த்தம்
உயிர் அளிப்பான் மாகங்கள் எல்லாம் திரிந்து நன்னீர்கள் சுமந்து -போலே
எண் திசையும் பேர்த்தகர நான்குடையான் பேரோதி பேதைகாள் தீர்த்தகரராமின் திரிந்து –
திவ்ய தேசங்கள் எங்கும் எழுந்து அருளி ஆத்ம உஜ்ஜீவார்த்தமாக சார அர்த்த விசேஷங்களை பொழிவார்கள்
பள்ளத்தில் பொழியும் மழை போலே நீசர்களையும் உஜ்ஜீவிப்பார்கள்
மழை பொழியாமல் வாடுவது போலே உபதேசம் இல்லாமல் அல்வழக்குகள் மலியுமே
எவ்வளவு பொழிந்தாலும் திருப்தி இல்லாமல் -கைம்மாறு கருதாமல்
ஒன்றும் கை கரவாமல் -ஆசை உடையார்க்கு எல்லாம் ஆரியர்கள் கூறும் என்ற கட்டளை –
சர்வேஸ்வரனுக்கும் அன்றோ கை கொடுப்பார்கள் ஆச்சார்யர்கள் -பாஹ்ய குத்ருஷ்டிகளை நிரசித்து –
குத்ருஷ்ட்டி குஹநா முகே நிபாதத பர ப்ரஹ்மண கரக்ரஹ விசேஷண –

மார்க்க சீர்ஷம் -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம்
ஸ்வ அபிமானத்தாலே ஈஸ்வர அபிமானத்தைக் குலைத்துக் கொண்ட இவனுக்கு
ஆச்சார்ய அபிமானம் ஒழிய கதி இல்லை-என்று
பிள்ளை பலகாலும் அருளிச் செய்ய கேட்டிருக்கையாய் இருக்கும்

ஸ்வ ஸ்வா தந்த்ர்ய பயத்தாலே பக்தி நழுவிற்று–
பகவத் ஸ்வா தந்த்ர்ய பயத்தாலே பிரபத்தி நழுவிற்று
ஆச்சார்யனைத் தான் பற்றும் பற்று அஹங்கார கர்ப்பம் ஆகையாலே காலன் கொண்டு மோதிரம் இடுமோபாதி
ஆச்சார்யா அபிமானமே உத்தாரகம் –

ஆழி மழைக் கண்ணார் என்கிற மேகம் நம்மாழ்வார்–
உய்யக் கொண்டார் மணக்கால் நம்பி அருவிகள் –
ஆளவந்தார் ஆறு -எம்பெருமானார் ஏரி –
74 சிம்ஹாசானாதிபதிகள் மூலம் -நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்து-என்றவாறு –

லஷ்மீ நாதாக்ய சிந்தவ் -ஸடரிபு ஜலத -ப்ராப்ய காருண்ய நீரம் -நாதாத்ரா வப்ய ஷிஞ்சித் -ததனு ரகுவர அம்போஜ சஷுர் ஜராப்யாம் -கத்வா தாம் யாமுநாக்யாம் ஸரிதம் அத யதீந்த்ராக்ய பத்மாகரேந்த்ரம் -ஸம் பூர்ய ப்ராணி ஸஸ்யே ப்ரவஹதி -பாஹுதா தேசிகேந்த்ர பிரமவ்கவ்-எம்பார் அருளிச் செய்த முக்த ஸ்லோகம்)

(ஸ்ரீ பெரிய பெருமாள் ஆகிற பெரும்கடலிலே ஆழ்வார் ஆகிற காளமேகம் படிந்து –
கிருபை யாகிற அமிர்த ஜலத்தை பானம் பண்ணி
ஸ்ரீ நாதமுனி யாகிற மஹா மேருவிலே வர்ஷித்து
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் ஆகிற அருவிகளாலே போந்து
ஸ்ரீ எம்பெருமானார் ஆகிற ஏரியிலே தேங்கி
நம் ஆச்சார்யர்கள் ஆகிற மதகுகளாலே புறப்பட்டு
சம்சாரம் ஆகிற கழனிக்கு ஏறப் பாய்கிறது –

————

ஆழி மழைக் கண்ணா

கோவிந்தன் வருகின்ற கூட்டம் கண்டு மழை கொலோ வருகின்றதென்று சொல்லி (பெரியாழ்வார் திருமொழி 3.4.1)

வானத்தெழுந்த மழை முகில் போல் எங்கும் கானத்து மேய்ந்து களித்து விளையாடி (பெரியாழ்வார் திருமொழி 2.10.9)

திரண்டெழுந்த மழை முகில் வண்ணன் செங்கமல மலர் சூழ் வண்டினம் போலே (பெரியாழ்வார் திருமொழி 3.6. 9)

ஒன்றிய திங்களைக் காட்டி ‘ஒளிமணி வண்ணனே’ என்னும்
நின்ற குன்றத்தினை நோக்கி ‘நெடுமாலே! வா! என்று கூவும்,
நன்றுபெய் யும்மழை காணில் ‘நாரணன் வந்தான்’ என் றாலும்,
என்றின மையல்கள் செய்தார் என்னுடைக் கோமளத் தையே. [திருவாய்மொழி 4.4.4]

கோவை வாய் துடிப்ப மழைக் கண்ணொடென் செய் யுங்கொலோ? [திருவாய்மொழி 6.7.3]

கோல மா மழைக் கண் பனி மல்க இருக்கும் என்னுடைக் கோமளக் கொழுந்தே! [திருவாய்மொழி 7.2.7] .

பேரா யிரமுடைய பேராளன்……நீரார் மழை முகிலே நீள்வரையே ஒக்குமால் என்கின் றாளால்…(பெரிய திருமொழி 8.1.6)

தருமான ‘மழை முகிலை’ப் பிரியாது தன்னடைந்தார், திருமாலை யம்மானை அமுதத்தைக் கடற்கிடந்த பெருமானை (பெரிய திருமொழி 8.9.2)

மன்னும் மழை தழும் வாலா நீண் மதி தோய், மின்னின் ஒளி சேர் விசும்பூரும் மாளிகை மேல்,
மன்னும் மணி விளக்கை மாட்டி- மழைக் கண்ணார் பன்னு விசித்திரமாப் பாப் படுத்த பள்ளி மேல்…….[பெரிய திருமடல் ]

அழைக்கும் கருங்கடல் வெண் திரைக் கை கொண்டு போய் அலர் வாய்
மழைக் கண் மடந்தை அரவணை யேற மண் மாதர் விண் வாய்
அழைத்துப் புலம்பி முலை மலை மேல் நின்றும்
ஆறுகளாய் மழைக் கண்ண நீர் திருமால் கொடியான் என்று வார்கின்றதே! [திருவிருத்தம்-52]

————

இப் பாசுரத்தில் அந்தர்யாமித்துவம் வெளிப்பட்டுள்ளது. மேகத்தில் நீர் மறைந்திருப்பது போல அனைத்துப் பொருட்களிலும்,
பரமனே அந்தர்யாமியாக உறைந்துள்ளான் என்பதைக் குறிக்கிறது.

ஆழி மழைக் கண்ணா -பகவத் அனுபவம் வாயிலாக பெருமழை ஒத்த ஞானத்தைக் கொண்டிருக்கும் ஆச்சார்யர்கள்

ஒன்று நீ கை கரவேல் – மூன்று மகா மந்திர ரகசியங்களின் அர்த்தத்தை எங்களுக்கு அருளவும்

ஆழியுட் புக்கு – வேத உபநிடதங்கள் ஆகிய பெருங்கடலில் ஆழ்ந்து

முகந்து கொடு – அவற்றை தெளிவாக கற்று, அர்த்தங்களை உணர்ந்து

ஆர்த்தேறி – கம்பீரமாக எழுந்து

ஊழிமுதல்வ னுருவம் போல் மெய் கருத்து – கருமேனியனான பரமனை சதா சர்வ காலமும் சிந்தையில் நிறுத்தியதால்,
ஆச்சார்யரும் பரமன் போலவே கருநிறமும், தயாள குணமும் பெற்றவராகி விடுகின்றனர்!
(பரந்தாமனின் எல்லையற்ற கருணையாக ஆச்சார்யர் உருவகம் பெறுகின்றனர்!)

இங்கே “மேகம்” என்பது ஆழ்வார்களையும், ஆச்சார்யர்களையும் உள்ளர்த்தமாகக் கொண்டுள்ளது.
மேகம் போலவே ஆச்சார்யர்கள் எந்த பிரதிபலனையும் எதிர்ப்பார்க்காமல், ஞானத்தை வழங்குகின்றனர்!

எவ்வாறெனில், மேகமானது, கடல் நீரை உட்கொண்டு, பூவுகலகிற்கு நன்மை பயப்பது போல,
இவ்வடியார்களும், பகவத் அனுபவத்தில் (பரமன் துயில் கொண்டுள்ள கடலாகிய உருவகம்!) திளைத்து
அதன் வாயிலாக கிட்டிய ஞானத்தை (மழையாகிய உருவகம்!) இப்பூவுலகில் நிறைத்திருக்கிறார்கள்!

கடலில் கலந்திருக்கும் உப்பைப் போன்ற, புரிந்து கொள்ள கடினமான விஷயங்களையும் எளிமையாக
(உப்பு சுவையில்லாத மழை நீர் போல) அளிக்க வல்லவர்கள் ஆச்சார்யர்கள்!

ஆழி போல் மின்னி – திவ்ய ஞானத்தால் விளைந்த பேரொளியுடன் பிரகாசிக்கின்ற

ஆச்சார்யர்கள் (ஞானத்தால் ஒளி பெற்றதால்!) திருச் சக்கரமாகவும் உருவகப் படுத்தப் பட்டிருப்பதாகவும் கொள்ளலாம்!

வலம்புரி போல் நின்றதிர்ந்து – ஹயக்ரீவ கோஷத்தின் உருவகம்

தாழாதே சார்ங்க முதைத்த சர மழை போல் – ஞானத்தை மழை போல் பொழிந்து

நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய் – (மோட்ச சித்தியை அருளவல்ல) ஆசார்ய திருவடிகளில்
நாங்கள் சரண் புகுந்தோம் (“மார்கழி நீராட” என்பது, ஆச்சார்ய சரணாகதியை குறிக்கிறது)

தமிழ் இலக்கணம் இங்கு நின்று விளையாடுகிறது –
“ஊழிமுதல்வ னுருவம் போல் மெய் கருத்து” எனும்போது மெய் உவமையும், உரு உவமையும்,
“ஆழிபோல் மின்னி வலம்புரி போல் நின்றதிர்ந்து” எனும்போது வினை உவமையும்,
“சரமழை போல்” எனும்போது பயன் உவமையும் வெளிப்படுவதைக் காணலாம்.

இப்பாசுரத்தில், தமிழுக்கே சொந்தமான “ழ” என்ற எழுத்து
“ஆழி (3 தடவை) மழை (2 தடவை), ஊழி, பாழியம், தாழாதே, வாழ, மார்கழி, மகிழ்ந்து” என்று
பதினோரு முறை வருவதைக் காணலாம்.

இதன் மூலம், சூடிக் கொடுத்த நாச்சியார், தனது தந்தையான பெரியாழ்வாரை மிஞ்சி விடுகிறார் !
பெரியாழ்வாரின் “குழல் இருண்டு” என்று தொடங்கும் 285-வது பாசுரத்தில் “ழ” பத்து முறை வரும் என்பது குறிப்பிடத்தக்கது –

குழல் இருண்டு சுருண்டு ஏறிய குஞ்சி கோவிந்தனுடைய கோமள வாயில்
குழல் முழஞ்சுகளினூடு குமிழ்த்துக் கொழித்து எழுந்த அமுதப் புனல் தன்னை
குழல் முழவம் விளம்பும் புதுவைக் கோன் விட்டு சித்தன் விரித்த தமிழ் வல்லார்
குழலை வென்ற குளிர் வாயினராகி சாதி கோட்டியில் கொள்ளப் படுவாரே -3-6-11 – –

————

ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —

————————————————————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஒண்ணான வான மா மலை ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading