ஸ்ரீ திருப்பாவை வியாக்கியான சார ஸ்ரீ ஸூக்திகள் —மாயனை மன்னு வடமதுரை மைந்தனை —

இன்றோ திரு ஆடிப் பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் –குன்றாத
வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளாராய்-22-

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்
பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்
வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து -24-

“கர்க்கடே பூர்வ பல்குந்யாம் துளஸீகாநநோத்பவாம் ||
பாண்ட்யே விச்வம்பராம்கோதாம் வந்தே ஸ்ரீரங்கநாயகீம் ||”

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் நந்தவனத்தில் துளஸி மலரில் கலி-98-ஆவதான தனவருடம் ஆடி மாதம், ஸுக்லபக்ஷத்தில் சதுர்த்தசி செவ்வாய்க்கிழமை கூடின பூர நக்ஷத்திரத்தில் பூமிப்பிராட்டியின் அம்சமாய், மனித இயற்கைப்பிறவி போல் அல்லாமல், ஆண்டாள் திருவவதரித்து அருளினாள்.

ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —

——–

அவதாரிகை –

பெண் பிள்ளைகளில் ஒருத்தி –
நாம் இப்படியே கனக்கப் பாரித்துக் கொண்டி இழியா நின்றோம் –
நமக்குத் தான் இது தலைக் கட்டுகைக்கு விஸ்வாசம் என் –
அநாதி கால சஞ்சிதமான கர்மங்கள் இதுக்கு விரோதத்தைப் பண்ணாதோ
பஹூ விக்நாநி அன்றோ -என்று பிரச்சனம் பண்ண-

அவர்களிலே வேதாந்த ஜ்ஞானம் உடையவள் ஒருத்தி –
நாம் நம்முடைய விரோதிகளைப் போக்கிக் கொண்டு வந்து இதிலே இழிகை என்று ஒரு பொருள் இல்லை –
நமக்கு அடைத்த பகவத் அனுபவத்தைப் பண்ணா நின்றால்-
சேர்பால் போக ரூபமாக பருகுமவனுக்கு தன்னடையே பித்தம் போமா போலே-
இவை தன்னடையே விட்டு ஓடிப் போம்-
ஆன பின்பு இனி அயோக்யதையைப் பார்த்து அகல வேண்டா -என்கிறாள்-

மாயனை -மன்னு வட மதுரை மைந்தனை- தூய பெருநீர் யமுனைத் துறைவனை –
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கை -தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை –
செப்பு –
போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் –என்கிறாள் .

முதல் பாட்டிலே -நாராயணனே -என்று உபய விபூதி யோகத்தை சொல்லிற்று –
(கார் மேனி செங்கண் -நித்ய விபூதி கதிர் மதியம் போல் முகத்தான் லீலா விபூதி )

அநந்தரம் -பாற் கடலில் பையத் துயின்ற பரமன் -என்று
அவதாரார்த்தமாக திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளின படியைச் சொல்லிற்று –

அநந்தரம் இந்திரன் குறை தீர ஸ்ரீ வாமனனாய் வந்து அவதரித்து –
ஒரு நாடாக வாசி வையாதே திருவடிகளைக் கொண்டு தீண்டின படியைச் சொல்லிற்று –

அநந்தரம் யோக்யராய் ஆச்சார பிரதானரான வசிஷ்டாதிகள் நியமிக்கும் படி
சக்கரவர்த்தி திரு மகனாய் வந்து அவதரித்து வாசி வைத்து உடம்பு கொடுத்த படி சொல்லிற்று –

இப் பாட்டில் வரையாதே எல்லார்க்கும் கட்டவும் அடிக்கவுமாம் படி கிருஷ்ணனாய் வந்து அவதரித்து ஒரு ஊருக்காக தன்னை முற்றூட்டாக கொடுத்த படி சொல்லுகிறது –

நோற்கின்ற பெண்களில் ஒருத்தி நாம் அனுபவிக்க இலை யகலப் படா நின்றோம் –
ஸ்ரேயாம்சி பஹு விக்நாநி என்று பெரியவர்களுக்கும் ஸ்ரேயஸ்ஸூக்கு விக்நம் உண்டாம் என்று சொல்லிற்று

பெருமாள் திரு அபிஷேகத்துக்கு ஸம்ப்ராந்தகனான தசரதன் பாரிக்கிறான்-
ராஜரிஷியை ப்ரஹ்ம ரிஷியாக்கிய வசிஷ்டன் முஹூர்த்த விதாநம் பண்ணுகிறான் –
ராமோ விக்ரஹவான் தர்ம -என்று பாக்யாதிகரான பெருமாள் முடி சூட்டுகிறார் –
சக பத்ந்யா விசாலாட்ஷயா நாராயணம் உபாகமத் -என்று
பெருமாள் பிராட்டியாரோடே கூட பெரிய பெருமாளை ஆஸ்ரயிக்கிறது –
இச்சாம என்று நாடு அடங்க அபிஷேக மங்களத்தை பிரார்த்தித்து இதுக்கு மங்களா சாசனம் பண்ணுகிறது –
இப்படி இருக்க இதுக்கும் அன்றோ விக்நம் வந்தது –

நாம் அநாதி காலம் பண்ணின பாபம் கிடக்க இது கூடுமோ என்று கேட்க —

நாம் அவனுடைய அனுபவத்தில் இழியவே-
உத்தர பூர்வாகங்களுக்கு
அஸ்லேஷ
விநாசம் உண்டு என்று பரிஹரிக்கிறார்கள் –

ஈஸ்வரன் தான் சங்கல்ப்பித்தது குலைந்தாலும்
ததீயர் சங்கல்பம் தன்னை
தன்னை அழிய மாறியும் தலைக் கட்டிக் கொடுக்கும் –

அவர் தாமும் முடி தவிர்ந்து –
மஹா ராஜர்க்கும் –
ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கும் முடி சூட்டுக்கைக்கு இறே –

அர்ஜுனன் ஜெயத்ரனை அஸ்தமிக்கைக்கு முன்னே கொல்லக் கடவேன் -என்று சங்கல்ப்பிக்க-
ஆயுதம் எடேன் என்றவன் ஆயுதம் எடுத்தும் –
பொய் சொல்லியும் –
பகலை இரவாக்கியும் –
அர்ஜுனன் சங்கல்பத்தை இறே தலைக் கட்டிக் கொடுத்தது –

பற்றப் புகுகிற விஷயத்தினுடைய நன்மை ஏது –
பற்றப் புகுகிற நாம் எவ்வளவிலோம் –
பற்றுகையாவது தான் ஏது என்று
அயோக்யதா அநு சந்தானம் பண்ண

நோவு மிக்கதனையும் நாலைந்து குடி நீர் எழக் குடிக்குமா போலே
நாம் திரு நாம சங்கீர்த்தனத்திலே அதிகரிக்கவே இதுக்கு
விரோதி கர்மங்கள் அடைய நசிக்கும் என்கிறார்கள் –

மாயனைத் தாமோதரனைச் செப்பு –
1-மாயனைச் செப்பு –
2-மன்னு வட மதுரை மைந்தனைச் செப்பு
3-தூய பெருநீர் யமுனைத் துறைவனைச் செப்பு
4-ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைச் செப்பு
5-தாயைக் குடல் விளக்கம் செய்தவனைச் செப்பு
6-தாமோதரனைச் செப்பு
குடிக்கிற குடி நீர்கள் (ஓவ்ஷதம் ) இவை –

இப்படி பகவத் பஜன அனுபவம் பண்ணுமவனுக்கு
உத்தர பூர்வாகயோ ரஸ்லேஷ விநாசவ்-என்கிறபடியே
பகவத் அனுபவ மஹாத்ம்யத்தாலே சகல துரிதங்களும் போம் என்று சொல்லுகிறது –

முதல் பாட்டில் –
பகவத் சம்ஸ்லேஷமே பிராப்யம் -அநந்ய சாத்தியமான இதுக்கு சாதனமும் அவனே –
அந்த சாதனத்தில் அன்வயிக்கைக்கு அதிகாரிகளும் அந்த பிராப்யத்தில் இச்சை உடையவர்களே -என்று
சாத்ய ஸ்வரூபத்தையும்-சாதன ஸ்வரூபத்தையும்-அதிகாரி ஸ்வரூபத்தையும் சாதித்து —

இரண்டாம் பாட்டில் –
பிராப்ய பிராபகங்கள் இரண்டும் ஈஸ்வரனே என்று இருக்கும்-இச்சா திகாரிகளுக்கு சம்பாவிதமாய்
குர்வத் ரூபமான கரணங்களுக்கு-வகுத்த வ்யாபாரங்களைக் காட்டிக் கொடுக்க வேண்டிய படியாலும்-
கால ஷேபத்துக்காகவும்-ராக ப்ரேரிதமாக அனுஷ்டேயமான கர்தவ்யாம்சத்தை சொல்லிற்று

மூன்றாம் பாட்டில் –
பகவத் அனுபவ சஹகாரிகள் பக்கல் உபகார ஸ்ம்ருதி அதிசயத்தாலே-
அவர்களுக்கு யாவை யாவை சில அபேஷிதங்கள்-அந்த சம்ருதிகள் அடைய அபேஷிக்கக் கடவது -என்றது-

நாலாம் பாட்டில்
தேவதாந்தர ஸ்பர்ச ரஹிதராய்-இப்படி அநந்ய பிரயோஜனராய்-பகவத் ஏக பிரவணராய்-
பகவத் அனுபவ உபகரணமானவற்றிலே இழிந்தவர்களுக்கு
அந்த தேவதாந்தரங்களும் ஏவல் செய்யும் என்னும் இடம் சொல்லிற்று-

ஐந்தாம் பாட்டில்
இப்படியே பகவத் அனுபவத்தில் இழிந்தவருக்கு வரும் அனுபவ விரோதிகளை
அவ் வநுபவம் தானே நிரோதிக்கும் என்னும் இடம் சொல்லிற்று-

ஆக-இப்படி கீழ் ஐஞ்சு பாட்டாலே –
பிராப்யமான கிருஷ்ண அனுபவத்துக்கு-ஏகாந்தமான உபகரணங்களைச் சொல்லிற்று-

முதல் பாட்டில் பிராப்ய ஸ்வரூபத்தையும் பிராபக ஸ்வரூபத்தையும் அதிகாரி ஸ்வரூபத்தையும்-சங்க்ரஹேன அருளிச் செய்து
இரண்டாம்பாட்டில் -அவ்வதிகாரிக்கு சம்பாவிதமான ஸ்வரூப தர்மங்களை அருளிச் செய்து மூன்றாம் பாட்டில் -அவ்வதிகாரிகள் அனுஷ்டானத்தாலே அவர்கள் இருக்கும் நாட்டில் பிறக்கும் சம்ருத்தியைச் சொல்லி –
நாலாம் பாட்டில் -அவ்வதிகாரிகளுக்கு பகவத் அனுகூலரானவர்கள் கிஞ்சித் கரிக்கும் படியைச் சொல்லி-
அஞ்சாம் பாட்டில் -அவ்வதிகாரிகளுக்கு பூர்வாக உத்தராகங்கள்-சித்தோ உபாய பலத்தாலே நெருப்பில் இட்ட பஞ்சு போலே தன்னடையே நசித்துப் போம்படியைச் சொல்லிற்று-

————————–

மார்கழி -1-முதல் -மாயனை -5-என்னும் அளவும்
நாராயணனே -1-என்று தொடங்கி-
பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் -2-என்றும்
ஓங்கி உலகளந்த உத்தமன் -3-என்றும்
சார்ங்கம் உதைத்த சர மழை 4-என்றும்
மாயனை மன்னு வடமதுரை மைந்தனை -5-என்றும்
அடி பாட்டு சொல்கிறது

ஸ்ரேயாம் சிபஹூவிக்நானி -என்கிறபடி
நோன்புக்கு விக்னங்கள் சம்பவியாதோ என்னில் –
மநோ வாக் காயங்களாலே கிருஷ்ணனையே அனுசந்திக்க அவை போம் -என்கிறார்கள் –

இத்தால்
பகவத் குண அனுபவம் பண்ணுமவனுக்கு
உத்தர பூர்வாக யோரஸ் லேக்ஷவிநாசவ்-என்கிறபடியே
பகவத் அனுபவ மஹாத்ம்யத்தாலே சகல துரிதங்களும் போம் என்கிறது –

———–

மாயனை மன்னு வட மதுரை மைந்தனை
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கை
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூ மலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்–5-

வியாக்யானம்-
மாயனை-
பரம பதத்திலே -அயர்வறும் அமரரர்கள் அதிபதியாய்க் கொண்டு
தன் ஐஸ்வர்ய வ்யாவ்ருத்தி தோற்ற இருக்கும் இருப்பை நினைத்து
அது தான் வாசாம் அகோசரம் ஆகையாலே -மாயன் -என்கிறது –

கிருஷ்ண அவதாரத்தில் நீர்மை தங்களுக்கு நீர்மை இல்லாமையாலே
பரம பதத்திலே அனுபவிக்கக் கோலி அது தானும் நிலம் அல்லாமையாலே
எத்திறம் -என்கிறார்கள் –

மாயனை –
ஒரூருக்கு தன்னைக் கொடுத்த நீர்மை இறே இது-
ஒரு நாட்டுக்காக தன்னைக் கொடுத்துக் கொண்டு இருக்கிற நீர்மை யாகையாலே
ஏற்றம் உண்டே அங்குத்தைக்கு-

அன்றிக்கே
நித்ய ஸூரிகளும் நேர் நின்று பார்க்க ஒண்ணாத நிரந்குச ஐஸ்வர்யத்தை உடையவன் கிடீர்-
அவதரித்தான் என்று-
அவதார சௌலப்யத்தை அனுசந்தித்து-
அந்த ஆச்சர்யத்தை சொல்லுவதற்கு முன்பே-ஆழம் கால் பட்டு –
எத்திறம் -என்கிறார்கள் -ஆகவுமாம் –

ஜாதோசி-
தேவகி வயிற்றில் பன்னிரண்டு மாசம் குடி இருந்து-பிறந்த பிள்ளைத் தனத்தில்
குறைவறப் பிறந்தவனுக்கும் இல்லை செய்ய ஒண்ணாத படி-மூதலித்து கொடுக்கலாய் இருக்கை-
ஆக இப்படி இருக்கிறவன் ஆர் என்னில் –
ஒரு காலத்திலும் கர்ம ஸ்பர்சம் இல்லாத நித்ய ஸூரி பரிஷன-நிர்வாஹகன் ஆனவன் –
அயர்வறும் அமரரர்கள் அதி பதி என்கை-

அது அறிந்த படி என் என்னில்-
பரமபத நிலையனுமுமாய்-
ஸூரி நிர்வாஹகமுமான வஸ்துவுக்கு அசாதாராணமான-சிஹ்னமான ஆழ்வார்களோடே அவதரிக்கையாலே –

மாயனை –
ஸமஸ்த கல்யாண குணாத்மகனாய் –
நிரதிசய ஆனந்த பரிபூர்ணனாய் –
உபய விபூதி உக்தனாய் –
ஸ்ரீ யபதியாய்
ஏகார்ணவம் போலே -நித்ய விபூதியில் இருக்கும் இருப்பைச் சொல்கிறது –

யாதோ வாசோ நிவர்த்தந்தே–
யஸ்ய அமதம் தஸ்ய மதம்-
அவ்விஞ்ஞாதம் விஜா நதாம்–
பண் கடந்த தேசம் (திருச்சந்த-25 ) -என்றும்
வேதங்கள் மனசோடு வாக்குக்கு நிலம் அன்று என்று மீண்ட பரத்வம் –
இவளுக்குப் பேசலாம் படி கை வந்த படி –

(மலக்கு நாவுடையேர்க்கு மாறு உளதோ இம் மண்ணின் மிசையே -என்று
சொல்லிக் கொள்பவர்கள் அன்றோ-அவாக்ய அநாதரனாக இருப்பவனை தென்னா தென்னா என்னப் பண்ணுவார்கள் அன்றோ )

வைகுந்தன் என்பதோர் தோணி பெறாது உழல்கின்றேன் -என்று இவ் விடத்திலும் அவ் விடம் தனக்கு நிலமாய் இருக்கிறது என்னும் இடத்தைத் தானே அருளிச் செய்தாள் இறே

தோணி என்றது –
தன்னுடைய அபி நிவேசத்துக்கு ஒரு தோணி ஸ்தாநீயனாய் ஸ்ரீ வைகுண்ட நாதன் இருந்தபடி –

ஞானம் விசதம் ஆனால்-
அவ்விடம் அணித்தாய் –
இவ்விடம் தூரமாய் இருக்குமே –
உன் பேர் அருளால் இக்கரை ஏறி என்றார் இறே தமப்பனாரும் –

அவன் அபிமானத்திலே கிடக்கும் பேரே அங்குள்ளார் –
மனை அடைவே ஈஸ்வரோஹம் -என்று இருக்கும் அவர்கள் இறே இங்குள்ளார் –

மாயனை –
கிருஷ்ணாவதாரத்தில் அனுபவித்து -எத்திறம் -என்ற நம்மாழ்வாரைப் போலே
அங்குத்தை குணத்தை அனுசந்தித்து -எத்திறம் -என்கிறாள் –
இங்கு ஒரு ஊராக உடம்பு கொடுத்தமையைச் சொல்ல நினையா –
ஒரு நாட்டுக்காக உடம்பு கொடுத்தமையைச் சொல்லுகிறாள் –

(அங்கே இருந்து இங்கு இறங்க வந்த குணம் –
நதி மூலம் ரிஷி மூலம் -திரு நாட்டுக்காக -அங்கு -கோகுலத்துக்காக இங்கு
அவர்களுக்கும் எட்டாத மேன்மை உண்டே -ஆகவே அங்கும் ஸுலப்யம் உண்டே )

இங்குள்ளாருக்கு தன்னை அமைத்துக் கொடுக்குமா போலே காணும்
அங்குள்ளார்க்குத் தன்னை அமைத்துக் கொடுக்கும் படி –

அவனுடைய ஸ்வரூப வை லக்ஷண்யத்தைப் பார்த்தால்
இங்குள்ளாரோடு அங்குள்ளோரோடு வாசி இல்லை இறே
இவ் வெளிமைக்கு அடியான இடம் இறே இவ்விடம் –
ஒருத்தி தாம்பாலே பந்தித்த படியை சொல்ல நினையா
சதா பஸ்யந்தி -என்று ஒரு நாடாக த்ருஷ்டிகளாலே பந்திக்கும் படியைச் சொல்லுகிறது

மாயனை
அப்படி பெரிய ஸர்வேஸ்வரன் –
கிருஷ்ணனாய் வந்து அவதரித்து –
இடையர்களுக்கும் பசுக்களுக்கும் தன்னை அணையலாம் படி நியமித்து
நவ நீத ஸுர்ய நகர ஷோபாதிகளால் உண்டான ஆச்சர்யத்தை நினைத்து
எத்திறம் என்கிறது ஆகவுமாம் –
சூட்டு நன் மாலைகள் இத்யாதி –

(சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி வானோர்கள் நன்னீர்
ஆட்டி அம் தூபம் தரா நிற்கவே அங்கு ஓர் மாயையினால்
ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ண போந்தி மிலேற்றுவன் கூன்
கூட்டிடை ஆடின கூத்து அடல் ஆயர் தம் கொம்பினுக்கே -திரு விருத்தம்–21-
அங்கு உள்ள நிலைக்கும் இங்கு கூத்து அடித்ததுக்கும் சரியான பாசுரம் அன்றோ இது
மாயையினால் அங்கு நம்மாழ்வார் -இங்கு மாயனை -ஆண்டாள்
ஆயன் ஆகி ஆயர்-மங்கை வேய தோள் விரும்பினாய்
ஆய நின்னை யாவர் வல்லர் அம்பரத்தொடு இம்பராய்?
மாய மாய மாயை கொல்? அது அன்றி நீ வகுத்தலும்
மாய மாயம் ஆக்கினாய் உன் மாயம் முற்றும் மாயமே -திருச்சந்த விருத்தம் (41)
எல்லா தசைகளிலும் மாயம் உண்டே )

மாயனை -விஸ்ருங்கல ஜ்ஞாநிகளான நித்ய ஸூரிகளாலும்-கறை காண ஒண்ணாத பரத்வத்தை உடையவனை –

—————

மன்னு வட மதுரை –
பகவத் சம்பந்தம் மாறாத தேசம் –
முன்பு சித்தாஸ்ரமமாய் ஸ்ரீ வாமனன் நெடும் காலம் தபஸு-பண்ணி-
சத்ருக்ன ஆழ்வான் வன்னிய மறுத்து படை வீடு செய்து-
சர்வேஸ்வரன் எப்போதும் அவதரித்து போருவதொரு தேசம்-

மல்லை  மூதூர் வடமதுரை -ஆழ்வாரும் ஈடு பட்டு அருளுகிறார் இறே –

மன்னும் மதுரை வசுதேவர் வாழ் முதலை – 6-8-10-நாலாயி:1527/1 –சித்தாஸ்ரமமாய் ஸ்ரீ வாமனன் இருந்து தபஸ்ஸூ பண்ணி ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வான் வன்னியம் அறுத்து படை வீடு செய்து சர்வேஸ்வரன் தான் உகந்து வந்து அவதரித்து ஆனை படும் அடவி ( காடு ) போலே
பகவத் சம்பந்தம் மாறாத தேசம் –ஸ்ரீ வசுதேவர் உடைய சத்தைக்கு நிமித்த பூதனாய் உள்ளவனை  –இவனைக் கண்டு அத்தாலே உளராய்த்துத் திரிவது –

மல்லை மூதூர் வடமதுரை ––9-1-6-நிறைவை உடையதாய்-அவனுக்கு என்றும் ஒக்க கலவிருக்கையாய் போருகிற-சித்தாஸ்ரமமாய்-ஸ்ரீ வாமனன் எழுந்து அருளி இருந்தும்-
ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வான் படை வீடு செய்தும்- ஸ்ரீ கிருஷ்ணன் வந்து அவதரித்ததும்-
இப்படி பகவானுடைய சம்பந்தம் மாறாதே போருகிற-தேசம் ஆதலால் -மல்லை-என்கிறார்
மல்லை -நிறைவு-பழையதாய் வருகிற ஊர் ஆதலின் –மூதூர் -என்கிறார் –ஆழ்வார் இங்கேயே இருக்கிறாய் போலே ஆழ்ந்து அனுபவிக்கிறார் –

வட மதுரை-
நலமந்தம் இல்லதோர் நாடு -என்றாப் போலே-
பரம பதம் போலே போக்யதையால் பிரசித்தமான ஊர் –
பரம பதம் கலவிருக்கை என்னும்படி-பிறந்து விரும்பின படை வீடு –
அவனைத் தருகைக்கு உபாயமாகை –
விரோதி நிரசனத்துக்கும் தானே யாகை-
பிராப்யமும் தானே யாகை-

இத்தனைக்கும் அடி திரு அவதரித்து அருளுகை –
தன் பிரஜைகள் பட்ட ஆபத்தை நீக்குகைக்கு-அவர்களை இழக்க மாட்டாமல் பிறந்தபடி –

அங்கு வைத்து இங்குப் பிறந்த -என்னுமா போலே-
அஜஹத் ஸ்வபாவனாய் கொண்டு-நித்யனானவன்-
ஆஸ்ரித சஜாதீயனாய் பிறந்த மெய்ப்பாடு

மன்னு வட மதுரை மைந்தனை –
சதைக ரூப ரூபாய என்கிறபடியே –
அங்கு ஏக ரூபனாய் நின்று உடம்பு கொடுத்த படியைச் சொல்லிற்று
இங்கு ப்ரவாஹ ரூபேண உடம்பு கொடுக்கும் படி சொல்லுகிறது –

மன்னு வட மதுரை –
ஆனை படும் ஆகரம் போலே அவதாரம் மாறாத வூர் –
சித்தாஸ்ரமத்தில் ஸ்ரீ வாமனனாய் தபஸ்ஸூ பண்ணி வர்த்தித்ததும்
ஸ்ரீ சத்ருக்ந ஆழ்வான் வன்னியம் அறுத்து தனக்கு படைவீடாகப் பெற்று நெடு நாள் இருந்து ராஜ்ஜியம் பண்ணியும்
ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து அவதரித்ததும் –
இப்படி பகவத் சம்பந்தம் மாறாத தேசம் –

வடமதுரை –
மல்லை மூதூர் வடமதுரை (9-10-6 )என்று நம்மாழ்வார் ஈடுபட்ட தேசம் இறே –
அப்படி இறே மஹரிஷிகள் ஈடுபட்டது –
மதுரா நாம நகரீ புண்யா பாப ஹரீ சுபா யஸ்யாம் ஜாதவ் ஜெகந்நாத-
(மதுரையார் மன்னன் என்பதில் ஆசை மிக்கவன் அன்றோ )

மதுரா நாம –
பரம பதத்திலும் காட்டில் இவ்வூர் பிரசித்தம் போலே –
கலங்கா பெரு  நகரம் ஆகையால் கலங்காது இருக்கிறது அங்கு –
கலங்கும் தேசத்திலே கலங்காதே இருக்கிறது இங்கு –

நகரீ -விட்டுப் போந்த இடமோ -பிறந்து படைத்து விரும்பின விடமோ படை வீடாவது –
புண்யா -அபிமத லாபத்தை யுண்டாக்க வற்றாய் இருக்கை-அவனைப் பெறுகைக்கு உபாயமும் தானே –
பாப ஹரீ-அப் பேற்றுக்கு பிரதிபந்தக நிரசனமும் பண்ண வற்றாய் இருக்கை –
சுபா -ஒன்றைப் போக்கவும் ஒன்றைத் தரவும் வேண்டா -பரம பதம் போலே ப்ராப்யமும் தானேயாய் இருக்கும் –
யஸ்யாம் ஜாதவ் ஜெகந்நாத -யாதொன்றிலே ஜகந்நாதன் ஆனவன் ஜாதனானான் –
சம்சாரிகளுடைய குறை தீர்க்கைக்காக நியாந்தாவானவன் நியாம்ய கோடியிலே பிறந்தான் –(செங்கோலும் சிறு கோலும் )

சாஷாத் -ஆதி யஞ்சோதி யுருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த -என்றும் –
பிரக்ருதிம் ஸ்வாம் அதிஷ்டாயா -என்னும் படியே
மாயை -என்று ஞானமாய் -தன்னுடைய இச்சையால் அவதரித்தான் என்கிறது
விஷ்ணு -வியாபக வஸ்து -வியாப்பிய ஏக தேசத்திலே வந்து பிறந்தான் என்கை
எங்கும் உளனானவன் ஓர் இடத்திலே தோன்றின படி
சனாதன -என்றும் உளனானவன் ஒரு நாளிலே தோன்றின படி –

வட பத்ர ஸாயி -வட ஆல மரம் போல் ஸ்திரமாக மன்னி என்றுமாம்

————

மைந்தனை
மிடுக்கனை-
தந்தை காலில் பெரு விலங்கு தாள விழ நள்ளிருட் கண் வந்த எந்தை -என்று-
மாதா பிதாக்கள் காலில் விலங்கு கழல வந்து-திரு அவதரித்த படி -பிள்ளை -என்றுமாம்-

திரு அவதரித்து எனக்கு உபகரித்த பின்பு
இளகிப் பதித்த படியாததால் -ராஜா என்றுமாம் –
தன் அழகைக் காட்டி-இருந்ததே குடியாக தன் வசம் ஆக்கின படி-

மைந்தனை -தந்தை காலில் பெரு விலங்கு தாழ் அவிழ-என்று பிறந்த போதே
ஸ்ரீ வாஸூ தேவர் காலில் விலங்கு தானே விடும்படியான மிடுக்கைச் சொல்கிறது –
பருவம் நிரப்புவதற்கு முன்னே கம்சனை கொன்ற மிடுக்கைச் சொல்லிற்று ஆகவுமாம்

மைந்தன் -என்று
பிள்ளையாகவுமுமாம் –
ராஜா வாகவுமுமாம் –
வடமதுரையார் மன்னன் என்றாள் இறே –

பகவத் சம்பந்தம் மாறாத-வடமதுரையில் இருக்கிற ராஜாவாய்-மிடுக்கனாய்
யுவா வானவனை

————

தூய பெரு நீர் யமுனைத் துறைவனை –
விரஜை போலே போந்த இடத்துக்கு ஒரு ஆறு உண்டானபடி –

தூய-
1-ஸ்ரீ வசுதேவர் எழுந்து அருளுவித்துக் கொண்டு போகிற போது பாங்காக வற்றிக் கொடுத்த படி –
2-ஸ்ரீ கிருஷ்ணனும் பெண்களும் மாறி மாறிப் கொப்பளிக்கையால் வந்த தூய்மை ஆகவுமாம் –
3-நீரில் தெளிவை சொல்லிற்று ஆகவுமாம்

பெரு நீர் –
அத்ய காதமான ஆறு பாங்காக வற்றிக் கொடுத்தது –
மநோதரம் ஆகையாலும்-
பாவனம் ஆகையாலும்-
ஸ்லாக்யதையை சொல்லிற்று ஆகவுமாம்

யமுனைத் துறைவனை –
திருக் குரவை ஸ்தானம் ஆகையாலே-பெண்கள் படும் துறையை உடையவன்-

தூய பெரு நீர் யமுனை –
விட்ட வற்றை (நாட்டை -பரம பதத்தை -நதியை -விரஜையை ) மறக்கும் படியான ஆறு –
பரம பதத்தில் நின்றும் வந்து அவதரிக்கைக்கு இவ் வூர் உண்டானால் போலே
பரம பதத்துக்கு விரஜை போலே இவ்வூருக்கு இவ்வாறு –

அடி அறிவார் கூடப் போந்து கருத்து அறிந்து கார்யம் நடத்துமா போலே –
திருவடி திருவனந்த ஆழ்வான் போலே கருத்து அறிந்து
அவ் விருளிலே கிருஷ்ணனை எழுந்து அருளுவித்துக் கொண்டு போக
முழங்கால் மட்டாக வற்றிக் கொடுத்த சுத்தியைச் சொல்கிறது

யமுனாஞ்சாதி கம்பீராம் நானாவர்த்த சஷாகுலாம் வஸூ தேவோ வஹான் கிருஷ்ணம் ஜானு மாத்ரோத கோயயவ்-என்ற ஸ்ரீவிஷ்ணுபுராண வசநம்
பிராட்டி சரணம் புகவும் ராவண பயத்தால் அஞ்சி இருந்த கோதாவரி போல் அன்றிக்கே
கம்சன் மாளிகை நிழல் கீழே வற்றிக் கொடுத்த படி

தூய்மை யாகிறது
பகவத் ஸ்பர்சம் இறே (கீழே கைங்கர்யம் )
வல்லவீ வதன உச்சிஷ்ட பவித்ர அதர வித்ரும -என்னுமா போலே
(இதனால் அவனுக்கே ஆனந்தம் பாவானத்வமாம் -இந்த பிரமாணம் ஆகாரம் தெரியவில்லை _
கிருஷ்ணனும் பெண்களுமாக ஜல க்ரீடை பண்ணி
ஒருவருக்கு ஒருவர் கொப்பளித்ததால் வந்த சுத்தி யாகவுமாம் –

தூய
பிரசாதம் நிம் நகா யாதா -என்று நீர் தெளிவைச் சொல்லிற்று ஆகவுமாம் –
(ரமணீயம் ப்ரஸானந்தம் -தமஸா நதி தெளிவு –
அதே போல் கறுமையாக இருந்தாலும் தெளிவு உண்டே இங்கு )

ஸ்ரீ வசுதேவர் கண்ணனை எழுந்து அருளப் பண்ணிக் கொண்டு
திருவாய்ப்பாடிக்கு எழுந்து அருளுகிற போது
ஜாநு மாத்ர உதாகரா – எழுந்து அருளலாம் படி பாங்காக வற்றிக் கொடுத்த
தூய்மையை ஆகவுமாம்

ஜலக் க்ரீடையிலே பெண்களும் அவனுமாக கொப்பளிக்கையால்
வந்த தூய்மை ஆகவுமாம்

(ப்ராயேண தேவி பவ தீவ்யபதேச யோகாத்
கோதாவரி ஜகதிதம் பயஸா புநீதே|
யஸ்யாம் ஸமேத்ய ஸமயேஷு சிரம் நிவாஸாத்
பாகீரதி ப்ரப்ருதயோபி பவந்தி புண்யா: || .-ஸ்ரீ கோதா ஸ்துதி -12.

அம்மா கோதா தேவியே! உன் பெயரை வஹித்த ஸம்பந்தத்தாலும், பாக்யத்தாலும் கோதாவரீ நதி
இவ்வுலகத்தைத் தன் தீர்த்தத்தால் மிகவும் புண்யமாக(சுத்தமாக)ச் செய்கிறாள்.)

——

பெரு நீர் –
கிருஷ்ணனும் பெண்களும் ஜலக்ரீடை பண்ணுகைக்கு போரும் படி –
சம்ருத்தமான ஜலம்-பெண்களுடைய விரஹ தாபம் கெட குளிக்கப் போரும் நீர் என்றுமாம் –
அன்றியே
நீரினுடைய ஸ்லாக்யதையை சொல்லிற்று ஆகவுமாம் –

மகா ஜலத்தை உடைத்தாகையாலே அத்யகாதமான

———-

யமுனைத் துறைவனை –
கவி பாடுவாருக்கு
ஊரும்
பேரும்
ஆறும் வேண்டக் கடவது இறே

யமுனைத் துறைவனை-
முத்துப் படும் துறை என்பாரைப் போலேயும் –
சங்கணித் துறை என்னுமா போலேயும் –
கிருஷ்ணனுக்கு பெண்கள் படும் துறை –

கவிபாடுவார்க்கு ஊர், பேர், ஆறு முதலியவை வேண்டுமாகையால்,
“வடமதுரை மைந்தனை” என்று ஊரும்,
“தாமோதரனை” என்று பேரும்,
“யமுனைத்துறைவனை” என்று ஆறுங் கூறப்பட்டன.

“முத்துப்படுந்துறை, நவமணி படுந்துறை” என்னுமாபோலே,
கண்ணபிரானுக்கு எமுனையாறு பெண்கள் படுந்துறையாகையால் “யமுனைத்துறைவனை” எனப்பட்டது.

நற்சரக்கு படுவது நீரிலே யாகாதே –
அமுதில் வரும் பெண்ணமுது என்னுமா போலே

துறைவன்
கம்ச பயத்துக்கு அஞ்சி ஒளிக்க வந்து சேர்ந்தாரை சொல்லுமா போலே சொன்னபடி பாரீர் -என்பர் பட்டர்

யமுனையினுடைய துறையை தனக்கு நிரூபகமாக உடையவனை

—————

ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கை –
பரம பதத்தில் காட்டில் குணங்கள்-இடைச் சேரியிலே அத்யுஜ்ஜ்வலம் ஆனபடி
அந்த காரத்தில் தீபம் போலே-தோன்றும் –
கர்ப்பத்தில் தொற்று இல்லாமை-
கீழைத் திக்குக்கு ஆதித்யனோடு உள்ள சம்பந்தம் இவளோடு அவனுக்கு உள்ளது –
ஸ்ரீ மதுரையிலே திரு அவதரித்து இருக்க செய்தே-
திரு அவதார பிரகாசம் திரு ஆய்ப்பாடியிலே சென்றது என்றுமாம் –

அணி விளக்கை-
திரு ஆய்ப்பாடிக்கு மங்கள தீபம் என்றுமாம் –

ஆயர் குலத்தினில் தோன்றும் –
பிறவாத பரம பதத்தோ பாதி ஸ்ரீ மதுரையில் பிறப்பும் –
முலைப்பால் குடித்து அழுத இடம் இறே பிறந்த இடமாவது

தோன்றும் –
ஆவீர் பூதம் மஹாத்மநா –
கிழக்கே உதிக்கிற ஆதித்யனுக்கு ஸ்பர்சம் உண்டாகில் இவள் வயிற்றில் ஸ்பர்சம் உண்டாவது என்றான் ரிஷி –
பிறந்தது குணமாகைக்காக -பிறந்தவாறு -என்று ஈடுபட்டார் ஆழ்வார்

“தேவகீ பூர்வ ஸந்த்யாயா மாவிர்ப்பூதம் மஹாத்மநா,” என்ற புராண நடையை அடி யொற்றி யென்க:

அணி விளக்கை –
ஸ்ரீ வைகுண்டத்திலும்
ஸ்ரீ மதுரையிலும் அனுஜ்ஜ்வலனாய் போலே இருப்பது –

ஆயர் பாடிக்கு அணி விளக்கு -என்கிறபடியே
இவர்களுக்கு கண் காட்டியாய் இருக்கை –
அந்தகாரத்தில் தீபம் போலே தாழ்ந்தார் பக்கலில் இறே குணம் பிரகாசிப்பது –
பிறப்பாய் ஒளி வரு முழு நலம் ( 1-3-2 )இறே
(ஸு ஸ்ரேயான் பவதி ஜாயமான )

மணி விளக்கு என்ற போது –
இங்கே புகுந்த பின்பு பரமபதத்தில் அழுக்கற்ற படி
(மாயன் அங்கு இங்கு வந்து விளக்கு ஆனான் அவன் அழுக்கு போந்ததாம் )

திரு ஆய்ப்பாடியிலே வாரா நின்று கொண்டு-அக்குலத்துக்கு மங்கள தீபமாய் உள்ளவனை

ஸம்ஸாரிகள் பத்து மாதம் கர்ப்ப வாஸம் பண்ணினால்,
“பன்னிரு திங்கள் வயிற்றில் கொண்ட வப்பாங்கினால்” என்றபடி
தான் பன்னிரண்டு மாதம் கர்ப்ப வாஸம் பண்ணுகையாலும்,
பெற்ற தாய்க்கு முலை சுரக்கையாலும்,
முலை பெறாவிடில் இவன் தான் நோவுபடுகையாலும்,
தன்னைக் கட்டவு மடிக்கவுமாம்படி எளியனாக்கி வைக்கையாலும் அங்ஙன் கூறப்படுகின்றதெனக் கொள்க.

இனி, வடமதுரையிற் பிறந்த கண்ணபிரானை ஆயர் குலத்தினிற் பிறந்தனனாகக் கூறுவானென்னெனில்;
முலைப்பால் குடித்து அழுதவிடமே பிறந்த இடமாதல் பற்றி யென்க.
அன்றி, மதுரையில் மறைந்திருந்து ஆய்க் குலத்தில் வெளிப்பட்டமை பற்றியுமாம்.

தோன்றும் -தோன்றிய இறந்த காலமில்லாமல் -எப்பொழுதும் மேல் மேல் பிரகாசித்திக் கொண்டே இருப்பான் அன்றோ -திருவாவதரித்துத் தன்னுடைச் சோதிக்குப் போன பின்பும் ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் ஸ்ரீ ஸூக்திகளாலே மேல் மேல் பிரகாசிப்பவன் என்றபடி

———-

தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை –
வயிற்றில் தழும்பாலே யசோதைப் பிராட்டி விளங்கப் பண்ணினவனை –

தாயைக் குடல் விளக்கம் செய்த-
என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறு உடையாள்-என்று
நாட்டார் புகழ்ச்சியாலே பெற்ற வயிற்ருக்கு பட்டம் கட்டினவனை –

பெற்ற தாயான தேவகிப் பிராட்டியையும் வளர்த்த தாயான யசோதாப் பிராட்டியையும் சொன்னபடி –

தாமோதரனை –
தன்னுடைய பவ்யதையாலும்-அவளை நாட்டார் கொண்டாடும்படி பண்ணினவனை –
நம்முடைய பந்தம் நம்மால் அறுக்கப் போகாதது போலே-அவனுடைய பந்தமும் அவனால் அறுக்க ஒண்ணாதே –
இப் பந்தத்தை அனுசந்தித்தால் ஆஸ்ரிதர் உடைய சம்சார பந்தம் போம் என்கை –

தாயைக் குடல் விளக்கம் செய்த
வயிற்றிலே கட்டின தழும்பாலே ஒருத்திக்கு ஒரு பிள்ளை கட்டலாம் படி பவ்யனாவதே என்று
யசோதை பிராட்டியை விளங்கப் பண்ணினவனை –
கௌசல்யா சுசுபே-
இவனைப் பெற்ற வயிறுடையாள்-என்ன நோன்பு நோற்றாள் கொலோ -(பெரியாழ்வார் -2-2)

தாமோதரனை-
நம்முடைய பந்தம் நம்மால் அறுக்க ஒண்ணாதாப் போலே –
அவனுடைய பந்தமும் அனுக்ரஹத்தாலே யாகையாலே அவனாலும் அறுக்க ஒண்ணாது –
நம்முடைய பந்தம் அவன் காலிலே விழத் தீரும் –
அவனுடைய அனுக்ரஹ கார்யம் ஆகையால் அனுபவித்தே அற வேணும் –
அவனுடைய பந்தத்தை அனுசந்திக்க சம்சார பந்தம் அறும் -என்னா நின்றது இறே
இவன் வயிற்றில் தழும்பைக் கொண்டாடுகை —
அவள் வயிற்றுக்குப் பட்டம் கட்டுகை –

பணைகளிலே தாவினவாறே உடை நழுவ தழும்பைக் கண்டு இடைச்சிகள் சிரித்தார்கள் –
அத் தழும்பு தோன்றாமைக்கு இறே
நம் பெருமாள் கணையம் மேல் சாத்து சாத்துகிறது -என்பர் நஞ்சீயர்

கண்ணிக் குறும் கயிற்றால் உரலோடு கட்டுண்டு-பெற்ற தாயான யசோதை பிராட்டி உடைய
ஹிருதயதுக்கு-பிரகாசகன் ஆனவனே

————

தூயோமாய் வந்து நாம் –
அங்குத்தைக்கு நாம் யோக்யரோ அயோக்யரோ என்று பாராதே-
இருந்தபடியே வந்து –
இருந்தபடியே-வருகைக்கு மேற்பட சுத்தி தேட வேண்டா இறே-
ஸ்ரீ மான் என்றது இறே இருந்த படியே வந்த ஸ்ரீ விபீஷண ஆழ்வானை

வந்த நாம்-
அவன் வர இருக்கக் கடவ நாம் வந்து-
முறை கெட வருவான் என் என்னில்-
உபாயத்தில் துணிவு புறப்பட ஒட்டாதது போலே-
உபேயத்தில் த்வரை முறை பார்த்து இருக்க ஒட்டாது இறே-

அவனே உபாயம் என்று இருக்கிற நாம்

தூயோமாய்
இடைச்சிகள் தூய்மை இறே –
தலை  இருக்க உடம்பு கழுவியும் -உடம்பு இருக்க தலை  கழுவியும் போருவர்கள் இறே
பகவத் சம்பந்தம் ஒழிய தனக்கு ஒரு சுத்தி சம்பதிக்கையாவது அசுத்தனாய் விடுகை இறே –
அவனுடைய சம்பந்தத்தை அனுசந்திக்கை ஒழிய தனக்கு ஒரு சுத்தி இல்லையே –
(தன்னால் வரும் நன்மை விலைப்பால் போலே -அவனால் வரும் நன்மை முலைப்பால் போல் அன்றோ )
விபீஷணன் கடலிலே ஒரு முழுக்கு இட்டு இன்று இறே வந்தது –
அர்ஜுனன் யுத்தத்தின் நடுவே முழுக்கு இட்டு இன்று இறே சரம ஸ்லோகம் கேட்டது –
திரௌபதி முழுகி யன்றே பிரபத்தி பண்ணிற்று

ஆகையால் பிரபத்திக்கு ஒரு சுத்தியும் தேட வேண்டா –
அசத்தி சம்பாதிக்கவும் வேண்டா –
நின்ற நிலையில் அதிகாரம் அமையும் –

மமஸாபி-கடல் கலங்கித் தெளித்தால் போலே ராம பக்தியால் கலங்கின என் நெஞ்சும் தெளிந்தது –
சம்சார பந்தத்தால் வந்த கலக்கம் தெளிகைக்கு பகவத் குணங்கள் உண்டு –
அந்த குணங்களால் வந்த கலக்கத்தை எத்தாலே தெளிய பண்ணுவது
(சுக்ரீவன் பொங்கும் பரிவால் கலங்கி என்ன ஆகுமோ என்று அன்றோ தடுத்தான்)

சுத்தம் வேத்தி விபீஷணம்-
வந்தவனுடைய சுத்தி அடங்கலும் வடிவிலே தெரியா நின்றது —
அவனுக்கு சுத்தியாக நினைக்கிறது ராம சம்பந்தத்தை இறே –
பாவநஸ் சர்வ லோகாநாம் த்வமேவ ரகு நந்தன
(பூதராக்கும் நெடும் நோக்கு அன்றோ )

தூயோமாய்
அநந்ய பிரயோஜனத்தை சொல்லிற்று ஆகவுமாம்

வந்து –
வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய் -என்று
அவன் வரவை நாம் செய்யக் கடவோம் –
உபஸ்தேயை ரூபஸ்தித-என்றும் –
பத்ம்யாமபி கமாச்சைவ-என்றும்
இட்ட நாலடிக்கும் புண் பட்டு இருக்குமவன் இறே

உபாயத்தில் துணிவு புறப்பட ஒட்டாது –
உபேயத்தில் துணிவு புறப்படாது இருக்க ஒட்டாது

பிராப்ய ருசி இருந்த இடத்தில் இருக்க ஒட்டாமல் வந்து

சென்று இல்லாமல் வந்து -அக்கரை சம்சாரம் – இக்கரை பரமபதம் போல் இங்கும்

நாம்
க்ரம பிராப்தி பற்றாத நாம்

————-

தூ மலர் –
மிக்க சீர் தொண்டர் இட்ட பூம் துளவம்-என்றும்
சூட்டு நன் மாலைகள் தூயன வேந்தி -என்றும்-
அநந்ய பிரயோஜனமான பூ விறே

மலர் –
யோக்கியம் என்றும் அயோக்கியம் என்றும் பாராதே-
கண்ணுக்கு தோற்றின மலர் என்றுமாம் –

தூ மலர்
பிரயோஜனத்தை கணிசியாது இட்ட மலர்
மிக்க சீர் தொண்டர் இட்ட பூ –
கள்ளார் துழாயும் -கணவலர்-அலரி விஜாதீயங்களையும் சொல்லுகிறது
அநந்ய பிரயோஜனர் தொட்டது ஏதேனுமாம்

புள்ளாய் ஓர் ஏனமாய்
இவன் ஏதேனும் இடிலும் கொள்ளுகைக்கு தன்னை அமைத்த படி –
ஸ்ரீ வராஹ கல்பத்தில் முத்தக்காசை அமுது செய்விக்கச் சொல்லிற்று

பத்ரம் புஷ்ப்பம்-த்ரவ்ய தார தம்யம் பார்ப்பது இல்லை –
இடுகிறவன் நெஞ்சிலே ஈரமே பார்ப்பது –
எல்லாம் கூட அஸ்நாமி இறே

யோக்யமோ அயோக்யமோ என்று தேடப் படாத மலர்களை

——–

தூவி
அடைவு கெட பரிமாறி-
பிரேமம் அடைவு பார்க்க ஒட்டாது இறே

தூவி
யதா ததா வாபி-என்கிறபடியே –
க்ரம விவிஷை அன்றிக்கே அடைவு கெட்டு இருக்கை

அக்ரமாக அவன் திருவடிகளிலே பரிமாறி –

——–

தொழுது
அவனுக்கு பொறுக்க ஒண்ணாத படி அஞ்சலியைப் பண்ணி-
அவனைத் தொழுவித்துக் கொள்ளும் அவர்கள் இறே தொழுகிறார்கள்-
பித்ராதிகளுக்கு அடைவு கேடு என்று தோற்றாதபடி அஞ்சலி பண்ணுகிறார்கள் -என்றுமாம்-

தொழுது –
விரோதிகள் கண்டால் முறை தப்பாமைக்கு —
கை படைத்த பிரயோஜனம் பெறுகை-

———-

வாயினால் பாடி –
வாய் படைத்த லாபம் பெற்றோம் என்று திரு நாமத்தைச் சொல்லி –
மனஸ் சஹகாரம் இன்றிக்கே -என்றுமாம்
வருவதற்கு மேலே-சொல்லுவதும் செய்தோம் -என்னவுமாம் –

வாயினால் பாடி –
வாக்குப் படைத்த பிரயோஜனம் பெறுகை —

உவாச ச மஹா ப்ரஞ்ஞா -என்று
வருகைக்கு மேலே வார்த்தையும் சொல்லுவதே -என்று
அவனை நோவு படுத்துகை –

———

மனத்தினால் சிந்திக்க –
மனஸ்ஸைப் பெற்ற லாபம் பெற்றோம் என்று –
மனஸ் அடியாக வரக் கடவ
உக்தியும்
வ்ருத்தியும் தவிர்ந்து

தொழுது-
வாயினால் பாடி-
மனத்தினால் சிந்திக்க -என்று
தனித் தனியே கரணங்கள் மேல் விழுந்த படியை சொல்லுகிறது –

ஸ்ருதி கிரமேண் அன்றிக்கே மனஸ்ஸூக்கு முன்பே
தொழுகையும்
பாடுகையும்

மனத்தினால் சிந்திக்கை –
மனசாதி கச்சதி -வாக்குத்தர என்கிற நிலை குலைந்து-
மனஸ்ஸூக்கு முன்பே தொழுகையும்
பாடுகையும்
முற்படுகையாலே ஆற்றாமையின் மிகுதி சொல்லிற்று –

மநோ வாக் காயங்கள் மூன்றும் அங்கே பிரவணமாம் படி –
உபாயம் ஆகில் இறே ஒன்றே அமைவது –

அவன் கொடுத்த கரணத்தால் அவனை ஆஸ்ரயிக்கப் பெற்றோம் -என்று

————

போய பிழையும் புகுதருவான் நின்றனவும் –
உத்தர-பூர்வாகங்கள்-தீயினில் தூசாகும் –
நெருப்பில் இட்ட பஞ்சே போலே ஆம்

தூசு -பஞ்சு-பாலும் கண்ட சக்கரையும் குடிக்க பித்தம் தன்னடையே போம் போலே
பகவத் அனுபவம் பண்ண நெருப்பில் இட்ட பஞ்சுக் குவை போலே-உரு மாய்ந்து போம்

போய பிழையும் புகு தருவான் நின்றனவும்
உத்தர பூர்வாகக்ங்கள்-பால் குடித்து வியாதி போக்குமா போலே –
இனியது அனுபவிக்க இன்னாதது குலையும்

பூர்வமாகிறது –
ஞானம் பிறப்பதற்கு முன்பு புத்தி பூர்வகமாக பண்ணின பாவம்

உத்தாரகம் ஆவது –
பகவத் ஸமாஸ்ரயணத்துக்கு பின்பு பிரகிருதி வாசனையால் பிராமாதிகமாகச் செய்யுமது –

தீயினில் தூசாகும்
நெருப்பில் பட்ட பஞ்சு போலேயாம் –
இஷீக தூல மக்நவ் ப்ரோதம் ப்ரதூயேத-என்ற வேதத்தில் சொன்ன அர்த்தம்
பெரியாழ்வார் மகள் ஆகையால்
இடைச்சியான பின்பும் பின்னாட்டுகிற படி –

———

செப்பு –
சொல்ல அமையும் என்கை-
பூர்வாகம் ஆவது
அநாதி காலம் புத்தி பூர்வகமாக பண்ணிப் போந்தவை

உத்தராகமாவது –
பகவத் ஞானம் பிறந்தால் பிரகிருதி வாசனையாலே ப்ராமாதிகமாக பிறந்தவை –

செப்பு –
வாக்கு மனஸ் காயங்களால் அனுபவிக்க வேணும் என்கிறது மிகை –
விரோதி போகைக்கு உக்திக்கு மேலே வேண்டா என்கை
அவன் இவன் அனுகூலித்த வாறே பூர்வாகத்தை விஸ்மரிக்கும் –
உத்தராகத்துக்கு அவ்விஞ்ஞாதாவாம் –
இனி யார் அனுபவிப்பார்
புண்ய பாபங்கள் ஆகின்றன அவனுடைய அனுக்ரஹ நிக்ரஹங்கள் இறே –
அவன் பொறுத்தேன் என்ன அனைத்தும் போம் –

தூயோமாய் வந்து நாம் தூ மலர் தூவித் தொழுது-வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்-
போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் –
மாயனை –
மன்னு வட மதுரை மைந்தனை-
தூய பெருநீர் யமுனைத் துறைவனை –
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கை
தாயைக் குடல் விளக்கம் செய்த
தாமோதரனை –
செப்பு –
என்று அந்வயம் –

—————————

தூயோமாய் வந்து தூய பெருநீர் தூமலர் தூய் :

தன் கை கால் மெய் வாயும் கொடு அளைந்த காளிந்தி
போன் கரணம் மூன்றும் கொடு கண்ணன் — தன் நினைவால்
எண்ணம் மொழி செய்கை ஒன்றிச் செய் கிரியை
வண்ணம் அழகிய பூ நாறு.

——————

நாராயணன் -என்றும் –
பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் -என்றும் –
ஓங்கி உலகு அளந்த உத்தமன் -என்றும் –
ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்ய ஹயாகதோ மதுராம் புரீம் -என்கிறபடியே
ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்துக்கு அடியான அடிப்பாட்டை அடைவே சொல்லி –

ஏவம் விதமானவன்
மாயனை மன்னு இத்யாதிப்படியே ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து திருவவதரித்து –
ஒருத்தி மகனாய் பிறந்து ஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளருகிற இடத்தே
பேய் முலை நஞ்சுண்டு -கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி -என்று பூதனை சகட நிராகரணம் சொல்லி –
அதுக்கு மேலே
தாமோதரன் -என்று வெண்ணெய் களவு காண்கையாலே கட்டவும் அடிக்கவும் எளியனாம் இருந்தபடி சொல்லி
மதுரையிலே மல்லரை மாட்டி வல்லானை கொன்றபடியைச் சொல்லி
அநந்தரம் தான் தீங்கு நினைத்த கருத்தைப் பிழைப்பித்து
கஞ்சன் வயிற்றில் நெருப்பாய்-அவனைப் போக்கின அளவும் அருளிச் செய்தார் இறே –

இது சரம ஸ்லோக விவரணம் –

———–

ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —

————————————————————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஒண்ணான வான மா மலை ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading