இன்றோ திரு ஆடி பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் –குன்றாத
வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளாராய்-22-
அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்
பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்
வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து -24-
“கர்க்கடே பூர்வ பல்குந்யாம் துளஸீகாநநோத்பவாம் ||
பாண்ட்யே விச்வம்பராம்கோதாம் வந்தே ஸ்ரீரங்கநாயகீம் ||”
ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் நந்தவனத்தில் துளஸி மலரில் கலி-98-ஆவதான தனவருடம் ஆடி மாதம், ஸுக்லபக்ஷத்தில் சதுர்த்தசி செவ்வாய்க்கிழமை கூடின பூர நக்ஷத்திரத்தில் பூமிப்பிராட்டியின் அம்சமாய், மனித இயற்கைப்பிறவி போல் அல்லாமல், ஆண்டாள் திருவவதரித்து அருளினாள்.
————
அவதாரிகை –
ஸ்வர்க்கார்த்தமாக யஜிக்குமவனுக்கு -ஸ்வர்க்கம் பிரதானமான பலமாய் இருக்கச் செய்தேயும் –ஆயுராஸ்தே-என்கிறபடி-ஆயுஸ்ஸூ புத்ரன் என்று அவாந்தர பலமாய் இருப்பன சில உண்டாய் இருக்கும் –
இவர்களுக்கு அங்கனம் ஒன்றும் இன்றிக்கே
சர்வ லாபாய கேசவ —
மாதா பிதா பிராதா —
சேலேய் கண்ணியரும்-என்றும் எல்லாம் அவன் தானே யாகையாலே
தங்களுடைய நோன்புக்கு அனுமதி பண்ணினார்க்கு வரக் கடவதான பலம் இருக்கும் படியைச் சொல்லுகிறார்கள் –
அநஸூயவே –என்று அஸூயையைப் பண்ணாது ஒழிய வமையும் இறே-அதிகாரிகள் ஆகைக்கு-
யத்ர அஷ்டாக்ஷர சம்சித்த இத்யாதியாலே ஒருத்தனைச் சொல்லக் கடவது –
ஆன பின்பு இவர்கள் இத்தனை பேர் இருந்தால் நாடு வாழச் சொல்ல வேண்டா இறே –
இவர்கள் முதலிலே தொடங்கி நாராயணன் என்று உபய விபூதி யோகத்தைச் சொல்லி
பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் -என்று திருவவதார அர்த்தமாக பள்ளி கொண்டருளின படியைச் சொல்லி- அங்கு நின்றும் போந்து அவதரித்த அளவும் வர அடி ஒற்றுகிறார்கள்-
சேதனர் ஜ்யோதிஷ்டோமேன ஸ்வர்க்க காமோ யஜேதே-என்று பிரதான பலம் ஸ்வர்க்கம் என்று இருப்பார்கள் –இனி ஆயுராசாஸ்தே -என்று தம் தாமுக்கு நன்மை வேண்டி இருக்கையாலே அவாந்தர பலம் புத்திரர்கள் க்ருஹ ஷேத்ரங்கள் த்ருஷ்டாதிகள் என்று இருப்பர்கள் –இவர்களுக்கு இரண்டுமே த்யாஜ்யம் இறே –உன் தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட் செய்வோம் -என்னுமிதே இவர்கள் பிரதான பலமாக நினைத்து இருப்பது-
இனி அவாந்தர பலமாக நினைத்து இருப்பது தான் தங்கள் இருந்த நாடு சம்ருத்தமாய் இருக்கை – ஆகையால் இனி அதுக்கு அனுமதி பண்ணினார்க்கு ஆசைப்படும் அத்தனை இறே–ப்ரவஷ்யாம் யநஸூயவே (9-1)என்றான் இறே – அதிர்ந்து இருந்திராத மாத்திரமே இறே வேண்டுவது-அவன் உகப்பை பின் செல்லுகை ஸ்வரூபம் என்று இருக்குமவர்களே இவர்களும் –அவனும் பர சம்ருத்தயேக ப்ரயோஜனனே –(அதே போலும் தடுக்காமல் ஆபி முக்யம் செய்யாமல் இருந்தார்களே )
(யத்ராஷ்டாக்ஷரஸம் ஸித்தோ மஹா பாகோ மஹீயதே –
ந தத்ர ஸஞ்சரிஷ்யந்தி வ்யாதி துர்ப்பிக்ஷ தஸ்கரா; என்று-திருவெட்டெழுத்து வல்லனொருவனிருந்த நாடு ஸம்ருத்தமாயிருக்கும் –நோய் பஞ்சம் திருடர் -மூன்றுமே இருக்காதே-ஓம் அர்த்தம் புரிந்தால் திருட்டு போகும் –அநந்யார்ஹ சேஷ பூதன் அறிந்தால் பிறர் நன் பொருளை அபகரிக்க மாட்டோம்-நமஸ் அர்த்தம் புரிந்தால் பஞ்சம் தொலையும் -அநந்ய சரண்யத்வம்-நாராயாணாயா அர்த்தம் புரிந்தால் வியாதி தொலையும் -அநந்ய போக்யத்வம்-மூன்று பத அர்த்தங்களை ஸூ சகம் -மூன்று அடிகள் -திரிவிக்ரமன் –
முதலில் ஏஷ நாராயணன் -அடுத்து ஷீராப்தி நிகேதன் -பின்பு தானே ஆகதோ மதுரா நிலையன் –நேராக சொல்லாமல் த்ரிவிக்ரமன் -ராமன் -கிருஷ்ணன் -இப்படி மூன்று பாசுரங்கள் –-இது முதல் பேர் பாடுதல் தொடக்கம் -)
இப் பாட்டில் தங்கள் நோன்புக்கு அனுமதி தானம் பண்ணினாருக்கு வரக் கடவ-
த்ருஷ்ட பலத்தை சொல்லுகிறார்கள்-
தங்கள் நோன்பாலே லோகத்துக்குப் பலிக்கும் பலம் சொல்லுகிறது –
சாது கோட்டியுள் கொள்ளப்படுவாரே-(பெரியாழ்வார் -3-6)என்று தங்களோடு ஒரு கோவையாகக் கூடுகை பரம புருஷார்த்தம் –அதில்லாத பின்பு ஐஹிக போக்யத்தை யாகிலும் இழவாதே பெற்றிடுவர்கள் என்கை —
நம்மார்த்தி தீர நாம் குளிக்க- நாடு வாழப் பெறுவதே -என்கிறார்கள் –
ருஷ்யருங்கன் திருவாயோத்த்யையிலே –அங்க தேசத்திலே ?-புகுந்த பின்பு
அநா வ்ருஷடி நீங்கி ஸம்ருத்தமானால் போலே –
ஸ்ரீ பரத ஆழ்வான் வியசனம் தீர -நாடு ப்வ்ரஹ்ருஷ்டம் உதித-ஆய்த்து இறே-
இவர்களும் கிருஷ்ணனும் கூடின பின்பு நாட்டுக்கு வ்ருஷ ஸம்ருத்தி இறே –
இவர்கள் விஸ்லேஷமே இறே நாட்டுக்கு அநா வ்ருஷடி —
பகவத் ஸமாச்ரயண பலமான கைங்கர்யம் ஒழியவே-ஆயுர் ஆசாஸ்தே -என்கிறபடியே
ஐஹிக பலன்களும் ஆநுஷங்கிக ஸித்தமாய்க் கொண்டு ஸித்திக்கும்-என்கிறது –
அஷ்டாக்ஷரம் -மார்கழி
த்வயம் வையத்து –
சரம ஸ்லோகம் ஓங்கி
புருஷோத்தமன் -பேர் பாடி -திருமந்த்ரார்த்தம் -வெளிப்படுத்திய உத்தமன் –
மகாபலி அதமன்–
இந்த்ரன் மத்யமன்–
இவன் அழிய மாறி உத்தமன்
அது தன் பேறாய் இருக்கையும் –
ஈஸ்வரர்களும் அகப்பட இவன் காலிலே வணங்கப் புகுகையாலே இவனே பரதத்வம்
தன் திருவடிகளை கிருபையால் தன் பேறாகத் தலைகளில் வைக்கையாலே -ப்ராப்யமும் ப்ராபகமும் தானே –
ஓங்கி உலகளந்த உத்தமன் -திருக் கோவலூர் அனுபவம்-
உத் -உத்தர –உத்தமன் –இத்தால் பர வ்யூஹங்களை கழித்து விபவம் –
அதிலும் -திருவிக்ரம -ராம -அவதாரங்களைக் கழித்து -வட மதுரை யில் -ஒருத்தி மகனாய் பிறந்த கோவிந்தன்
உலகளந்த உத்தமன் -பாற் கடல் துயின்ற பரமன் உத்தரன்-நாராயணன் -உத்-தஸ்ய உத் நாம-ஸ்ரீ வைகுண்டம்-உத்தர-தேவர்களுக்கு கருணையால் -வீட்டு மாப்பிள்ளை அவமானம் பொறுத்த உயர்ந்தவன் –உத்தமன் -விபவம் -உலகு அளந்த -அனைத்து ஜீவ ராசிகளில் தலையிலும் திருவடி ஸ்பர்சம்
நாராயணனே- பரம் தத்வம் -பரம் ஜோதி -பரம் ஆத்மா -பரம் ப்ரஹ்மம் –
இத்தையே நாராயணன் -பையத்துயின்ற பரமன் -உத்தமன் –
உத்க்ருஷ்ட -உத் -விவரணம் திருவாய்மொழி -தாரதம்யம் -தர தமம்
உயர்வற உயர்நலம் உடையவன் -குணங்களில் முதலில் இழிந்தார் நம்மாழ்வார் –
திவ்ய மங்கள விக்ரஹ அழகில் இழிந்தார் திருமங்கை ஆழ்வார்
ஸ்ரீ வால்மீகியும் கோன் வஸ்மி குணவான் என்று உபக்ரமித்து
ஆண்டாளுக்கு ஸ்வரூப ரூப குணம் சேஷ்டிதங்கள் அனைத்தும் வேண்டுமே –
மந்த்ரத்தை மந்தரத்தால் -என்று மந்தரத்தை சொல்லி
அனந்தரத்தில் —அதில் உக்தமான வ்யாப்த்திக்கு பிஜ்ஞ்ஞாகரமான
த்ரைவிக்ரம அபதானத்தை–அநந்தரம் பாட்டிலே அருளிச் செய்தார் இறே
மார்கழி வையத்து ஓங்கி –பக்தி யோக பிரபத்தி –ஞான கர்மம் அங்கங்கள் -பக்திக்கு -பிரபத்திக்கு ஐந்து அங்கங்கள் -பிரபத்தியே ஓங்கிய மார்க்கம் –
பகவத் அனுபவ சஹகாரிகள் பக்கல் உபகார ஸ்ம்ருதி அதிசயத்தாலே-
அவர்களுக்கு யாவை யாவை சில அபேஷிதங்கள்-அந்த சம்ருதிகள் அடைய அபேஷிக்கக் கடவது -என்றது-
———–
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம் பாவைக்கு சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெரும் செந்நெலூடு கயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத
தேங்காதே புக்கிருந்து தீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய் –3-
வியாக்யானம்
ஓங்கி –
ஜகத் ரஷண அர்த்தமாக திருப் பாற் கடலிலே சாய்ந்து அருளின போது ஆர்த்த ரஷணம் பண்ணப் பெறாமையாலே- பனிப்பட்டு சாய்ந்த மூங்கில் போலேயாய் அது ஆதித்ய கிரணம் பட்டு கிளம்புமா போலே-மகா பலியாலே நோவு பட்ட தேவர்கள் ஆர்த்த த்வனி கேட்ட பின்பு பேர்ந்து வளர்ந்தபடி –பிறர் கார்யம் செய்யப் பெருகையால் வளர்ந்தபடி -என்னவுமாம் –
உவந்த உள்ளத்தனாய் -என்னக் கடவது இறே
அங்கன் இன்றிக்கே
இரப்பு பெறுவதற்கு முன்பு வாமனன் ஆனவன் இரப்பு-வாய்ந்த ப்ரீதியாலே வளர்ந்த படி ஆகவுமாம்-கையிலே நீர் விழுந்த பின்பு வளர்ந்த கடுமை-ப்ரஹ்மா திருவடிகள் விளக்கின நீரும் கூட விழுந்த படி-தாரா ஜலமும் ஸ்ரீ பாத தீர்த்தமும் கூட விழும்படியான வேகம் சொல்லிற்று-
ஓங்கி –
கீழில் பாட்டாலே –பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் -என்றார்கள் –
ஆர்த்த ரக்ஷணத்துக்காக இறே இக்கிடை-இந்த்ராதிகள் ஆர்த்த த்வனி கேட்டு ஸ்ரீ வாமனனாய் வந்து அவதரித்து அவர்கள் கார்யம் செய்த படி-ஓங்கி –என்கையாலே இவ் வளர்த்திக்கு பூர்வ தசையில் வாமனத்வம் தோற்றுகிறது-(தசாவதாரங்களில் வாமனன் சொல்வதால் திரி விக்ரம அவதாரமும் ஸூசகம் ஆவது போல் இங்கும் )
இந்திரன் கண்ணீர் கொண்டு சிறாம்பின படியும்-மஹா பலி நீர் வார்த்தவாறே வளர்ந்த படியும் –பனி பட்டுச் சாய்ந்த மூங்கில் ஆதித்ய கிரணம் பட்டவாறே வளருமா போலே அபேக்ஷிதம் பெற்று வளர்ந்த படி-
சதைக ரூப ரூபாய -என்கிற தத்வம் இறே-சிறுப்பது பெருப்பதாகிறது–சம்சாரிகளுடைய வ்ருத்தி ஹ்ராசாதிகள் கர்ம அனுகுணம் ஆகையாலும்- ஸ்வார்த்தமாகையாலும் – தோஷாய ஆகா நிற்கும் –ஸர்வேஸ்வரன் செயல் பரார்த்தமாகையாலும் கிருபையால் யாகையாலும் குணாயாவாம் அத்தனை இறே –
ஸ்ரீ வைகுண்டத்தில் இருக்கும் போது சம்சாரிகளுடைய இழவுக்கு திரு உள்ளம் நொந்து இருக்கும் -என்று பட்டர் அருளிச் செய்ய – சிலர் அத்தைக் கேட்டு அவாப்த ஸமஸ்த காமனாய் – நிரதிசய ஆனந்த யுக்தனாய் இருக்கிற சர்வேஸ்வரனுக்கு ஓர் இழவு உண்டோ திரு உள்ளத்தில் என்ன-வியசநேஷூ மனுஷ்யாணாம்-என்கிறது குண பிரகரணமோ -தோஷ பிரகரணமோ -என்று அருளிச் செய்தார் –
துக்கித-என்னா நிற்கச் செய்தே குணம் ஆகிறது இறே-ப்ருசம்-இவர்கள் அளவல்ல திரு உள்ளம் நொந்து இருக்கிற படி –இவன் தன் காவல் சோர்வாலே அன்றே படுகிறது
பவத் விஷய வாஸின –என்று எல்லைக்கு உள்ளே கிடக்கும் அத்தனை இறே இவனுக்கு வேண்டுவது –
பவதி -இவன் வியஸனம் கழிந்த வாறே உண்டு புடைவை உடுத்தி வெற்றிலையும் தின்று ஸூகித்துப் போம் –ரிணம் ப்ரவ்ருத்தம் இவம் மே -என்று உள்ளதனையும் இழவு பட்டு இருக்கும் அவன் –இங்கனம் இருப்பது திவ்ய அந்தப்புரத்துக்கோ என்னில்-மனுஷ்யாணாம்-ஜெனிதர்மாக்கள் எல்லார்க்கும் –
மாறனேரியில் -ராமானுஜ தாஸன் என்பார் ஒருவர் –அவன் வருகிற படியைக் கண்டு கடக்கப் போ என்பதே –நாலடி விலங்கிப் போதல் -இல்லையாகில் ஒரு முழுக்கு இட்டுக் கொள்ளுதல் செய்ய நன்றி அடுப்பது என்ன-சண்டாளனானே யாகிலும் ஆர்த்தனான சமயத்தில் ( த்விஜர்) அல்லாதார் விலங்கிப் போவார் –த்விஜனாகில் அவன் விலங்குவான் -என்று விதி விசேஷித்த அம்சம் அழிந்ததே-என்று அவர்கள் சொல்ல – கெடுவிகாள்-விதி பூர்வகமாயோ கிருபை இருப்பது -என்று அருளிச் செய்தார் –
பாபா நாம் வா சுபா நாம் வா -என்றாள் இறே பிராட்டி –இவர்களுடைய பூர்வ வ்ருத்தம் கிடக் கிடாய் –உன் கையிலே அகப்பட்டு வத ப்ராப்த்தைகளாய் நிற்கிறமை மெய்யே என்கிறார்கள் –ஆகையால் ஸர்வேஸ்வரன் செயல்களுக்கு எல்லாம் குணாதிக்யம் உண்டு அத்தனை இறே-ஏகதா பவதி -த்விதா பாவதி -என்று முக்தரும் பரார்த்தமாக பல வடிவு கொள்ளா நின்றார்கள் இறே –அதுவும் குணத்திலே செருகா நின்றது இறே –
சம்சார சேதன உஜ்ஜீவன அர்த்தமாக-பரம பதத்தின் நின்றும் திருப் பாற்கடலிலே சாய்ந்து அருளி-ரஷ்ய அபேஷாம் ப்ரதீஷனாய் இருக்கிற காலத்தில்-ஒருவனுக்கு ஆகஸ்மிக ஸ்வ கடாஷத்தாலே-சத்வ உத்ரேகம் பிறந்து-அஹங்கார அபிபூதரான நமக்கு ரஷகன் ஆவான் ஆர் -என்று- ரஷக அபேஷை பிறந்தவாறே-அதுவே விளை நீராக அபி விருத்தனாய்
ஓங்கி –பிறர் கார்யம் செய்ய -என்றால் பணைக்கும் இறே –உவந்த உள்ளதனாய் யுலகமளந்து அண்டமுற நீண் முடியன்-பனியில் சாய்ந்த மூங்கில் ஆதித்யனைக் கண்டால் எழுமா போலே பிறர் கார்யம் செய்கை சத்தா ப்ரயுக்தம் -என்கை –
ஓங்குகைக்கு அடியான வெய்யில் அங்கு –இங்கு ஆர்த்த நாதம் –வளர்ந்த சடக்கு –
கையில் விழுந்த நீரும் ப்ரஹ்மா திருவடி விளக்கினை நீரும் ஓக்க விழும் படியாகை –
ஓங்கி – வளர்ந்து-என்றும் நிமிர்ந்து என்றும் உகந்து என்றும் விரைந்து என்றும்-ஓங்கி உயர்ந்த -குணங்களால் உயர்ந்து என்றும்-ஓங்கி பேர் பாடி என்றுமாம்
விஸ்வரூபம் எடுத்துக் எல்லோரும் வீடு பெற்றால் உலகில்லையே -உலகு வேத சாஸ்திரம் -கீதா சாஸ்திரம் எழுவதற்காக ஏழு நூறு ஸ்லோகங்கள் –ஓங்கி பலம் அளிப்பவன் -கண்ணனே ஓங்கி உலகளந்த உத்தமன் -ஓங்கி மத்ஸ்யம் dolphin என்றுமாம் –பாண்டியர் மீன் கொடி -உலகளந்த உத்தமன் –ஓங்கி உயர்ந்த -குணங்களால் உயர்ந்து உலகங்களை ஜெயித்தவன் ராமன் -சத்யேன லோகான் ஜெயதி -புருஷோத்தமன்- ஓங்கி -உறுதியாக தெளிவாக கம்பீரமாக உபதேசிக்கும் ஆச்சார்யர் -உலகளந்த -ஸாஸ்த்ர ஞானம் -ஸ்திர தீ –
—————–
உலகு அளந்த-
குணாகுணம் நிரூபணம் பண்ணாதே சர்வ பிராணிகள் பக்கலிலும் திருவடிகளை வைத்த படி –வ்யாப்தியில் வரைதல் இல்லாதாப் போல் ஆய்த்து இதுவும்-
வ்யாப்திக்கு கருத்து
இவற்றின் உடைய சத்தையை உண்டாக்குகைகாக –
இங்கு இவற்றோட்டை ஸ்பர்சம் தனக்கு தாரகமாக இறே நினைத்து இருப்பது
இவற்றுக்கு அபேஷிதம் இன்றிக்கே இருக்கச் செய்தேயும்-
உறங்குகிற பிரஜையை அணைத்துக் கொண்டு கிடக்கும் மாதாவைப் போலே
இவற்றோடு ஸ்பர்சம் தனக்குத் தான் உகக்கிறான் இறே-
வரையாமையும் –
அதி மானுஷ சேஷ்டிதங்களும்-
வடிவு அழகும்-
கிருஷ்ணாவதாரத்தொடு ஒத்து இருக்கையாலே
ஸ்ரீ வாமன அவதாரத்தை அனுபவிக்கிறார்கள்
உலகளந்த-
எதிர்த்தலை அறிந்து அபேக்ஷிக்கப் பெற்றது இல்லை கிடீர் –
என்னிது மாயம் -என்னப்பன் அறிந்திலேன் -என்ற நமுசிப் பிரப்ருதிகளைப் போலே
விலக்குகை இல்லாமையே பற்றாசாக செய்தது அத்தனை கிடீர் –
அடிச்சியோம் தலை மிசை நீ அணியாய்-என்று ஆசைப்பட்டு மடல் எடுக்க வேண்டும் படியான அத் திருவடிகளைக் கொண்டு கிடீர் காடும் மோடையும் அளந்தது –
பொல்லாக் குறள் உருவாய் பொற் கையில் நீர் ஏற்று -என்றும் –
நீ அணியாய் -என்றும்
இரந்து பெற வேண்டும் கையைக் கொண்டு கிடீர் இரந்தது –
கொண்டானை அல்லால் கொடுத்தாரை யார் பழிப்பார்–
ஈஸ்வரன் உடைமையை -என்னது என்று இருந்தவன் பக்கலிலே குணம் கொண்டு –
தன்னுடைமையை -தன்னது என்று எல்லை நடந்து கொண்டவன் பக்கலிலே குற்றம் கொள்வதே –
நீள்வான் குறள் உருவாய் (திருமங்கை )-வளருகைக்கு நரிப் (கள்ளப் ) பூணூல் இட்டது அத்தனை –
தக்கணைக்கும் மிக்கானை -பூஜ்ய தமன் ஆனவனை -கேளாச் செவிகள் செவியல்ல கேட்டோமே-(பெரிய திருமொழி -7-2 )
எறும்புப் புற்றிலும் பாம்பு புற்றிலும் துளை போல் இவை –
பிலேபதோ ருக்ரம-சர்ப்பங்கள் புகும் பிலத்தோடு-அச் செவிகளோடு வாசி இல்லை –
இருக்க ஸ்ரீ வாமனாவதாரம் பிரசங்கிப்பான் என் என்னில்
செய்யும் ஆனைத் தொழில்களும் —
ஆஸ்ரித பக்ஷ பாதமும் –
வடிவு அழகும் –
வாத்சல்யமும் –
அவன் ஒரு வூருக்குக் கை யாளானால் போலே
இவன் ஒரு நாட்டுக்காக எளியனான படியாலுமாக-அணைந்து இருக்கையாலே சொல்லுகிறார்கள் –
ஆபிமுக்யம் உடைய சேதனனை மாத்ரம் அன்றிக்கே
எமர் –கீழ் மேல் – ஏழ் ஏழ் பிறப்பும் -கேசவன் தமர் என்கிறபடியே
அவனோடு சம்பந்தம் உடைய அனைவரையும் தன் திருவடிகளாலே அளந்து தனக்கு சேஷமாக்கிக் கொண்ட
இத்தால்
அஹங்கார க்ரஸ்தர் ஆனவர்களை
மகா பலி அபிமானத்தின் நின்றும் பூமியை மீட்டு தன் திருவடிகளாலே அளந்து
தனக்கு சேஷம் ஆக்கிக் கொண்டால் போலே இத்தால்
தனக்கு சேஷம் ஆக்கிக் கொண்டமையை சொல்லுகிறது
————–
உத்தமன் –
இத்தை இவர்களுக்கு ஒரு உபகாரம் பண்ணினான் ஆக அன்றிக்கே
தன் பேறாக நினைத்து இருக்கிறபடி-
பிறரை ஹிம்சித்து தான் வாழ வேண்டும் என்று இருக்குமவன் அதமன்
பிறரும் ஜீவிக்க வேணும் தானும் ஜீவிக்க வேணும் என்று இருக்குமவன் மத்யமன்
தன்னை அழிய மாறி யாகிலும் பிறர் ஜீவிக்க வேணும் என்னுமவன் உத்தமன் —
உத்தமன் ஆகிறான் —
அப்யஹம் ஜீவிதம் ஜஹ்யாம் -என்கிறபடியே-என்னையும் என்னுடைமையையும் நேர்ந்தாகிலும் ஆஸ்ரிதற்கு ஓரம் கொடுத்துச் செய்யக் கடவோம் -என்று இருக்குமவனே –அன்று கரு மாணியாய்(இரந்த கள்வனை -இரண்டாம் திரு )-உனக்கு வேண்டிச் செய்தாயோ –உன்னுடையார்க்கு வைத்த சந்தான சாபம் இறே
உத்தமன்
தன்னை அழிய மாறி ஆகிலும் பிறர் கார்யம் செய்யுமவன் ஆகையாலே உத்தமன் என்கிறது-தனக்காய் இருத்தல் செய்யாதே- தென்றலும் நிலாவும் போலே பிறர்க்கேயாய் இருத்தல் –ந தே ரூபம் ந சாகார–நிஷேதம் தன்னது என்கையைத் தவிர்க்கிறது
நமக்கு -அஹமபி ந மம பாகவத ஏவாஹமஸ்மி போலே இவனுக்கும் ந தே ரூபம் –பக்தா நாம் -என்கை
உத்தமன்
சர்வாதிகன் -என்கை –
தான் நிர்ஹேதுகமாக ரஷிக்கையும்–அது தன் பேறாய் இருக்கையும் –-ஈஸ்வரர்களும் அகப்பட இவன் காலிலே வணங்கப் புகுகையாலே-இவனே பரதத்வம்
தன் திருவடிகளை கிருபையால் தன் பேறாகத் தலைகளில் வைக்கையாலே –
ப்ராப்யமும் ப்ராபகமும் தானே –( பர கத ஸ்வீ காரம் )
———-
பேர் பாடி –
இக் குணங்களுக்கு வாசகமான திரு நாமங்களை ப்ரீதி பூர்வகமாக பாடி –
பேர் பாடி
திருநாம சங்கீர்த்தனம் இதிலிருந்து 18 தடவை
உத்தமன் பேர் என்கிறது திருமந்த்ரத்தை –
முதல் பாட்டில் நாராயணன் என்கையாலும் -சப்தம் சொல்லி-
இரண்டாம் பாட்டில் பரமன் -என்று அந்த மந்த்ரார்தமான குண பூர்த்தியை சொல்லுகையாலும்-
இதில் மந்த்ரோக்த வ்யாப்திக்கு ப்ரத்யா பிஜ்ஞ்ஞாகரமான-த்ரைவிக்ரம அபதானத்தை சொல்லுகையாலும் திருமந்த்ரத்தைச் சொல்லுகிறது –
திருமங்கை ஆழ்வார் மந்த்ரத்தை மந்தரத்தால் -என்று மந்தரத்தை சொல்லி அனந்தரத்தில் –
அதில் உக்தமான வ்யாப்த்திக்கு அபிஜ்ஞ்ஞாகரமான–த்ரைவிக்ரம அபதானத்தை-அநந்தரம் பாட்டிலே அருளிச் செய்தார் இறே
உத்தமன் பேர் –
அவன் தனக்கும் அல்லாதாருக்கும் உண்டான வாசி போரும்–அவனுக்கும் திரு நாமத்துக்கும்-–கட்டிப் பொன் போலே அவன்-பணிப் பொன் ஆபரண பொன் -போலே திருநாமம் – அவன் தன்னை இல்லை செய்கிறவர்களும் திரு நாமத்தை-கொண்டு கார்யம் கொள்ளா நிற்பர்–அதாவது வியாதி பரிகார அர்த்தமாக திரு நாம சங்கீ ர்தனத்தை விதித்தால்- அத்தை அப்போதே செய்யா நிற்பர்கள்-
இனி மாத்ரு காதுகனுக்கும் கை நொந்தால் அம்மே -என்ன பிராப்தி உண்டாம் போலே
திரு நாமம் சொல்லுகைக்கு எல்லாருக்கும் பிராப்தி உண்டாய் இருக்கும்
திரு நாமம் சொல்லுகைக்கு யோக்யதை சம்பாதிக்க வேண்டா இது தானே யோக்யதையை பண்ணிக் கொடுக்க வற்று-
பேர் பாடி –
கழஞ்சு மண் பெறுவாரும்–இழப்பாருமாய்- அதில் லாபம் அலாபம் இறே அவர்களுக்கு உள்ளது –அங்கன் இன்றிக்கே பேர் பாடுகையே எங்களுக்கு உத்தேச்யம் என்கிறார்கள் –வாஸ்ய பூதனானவன் சத்தியை உண்டாக்கும் –
அவனுக்கு வாசகமான திரு நாமங்களாலே இறே அனுபவிப்பது –
திரு நாமம் சொல்லுகைக்கு அதிகார ஸம்பத்தி வேண்டாவோ -என்று நஞ்சீயர் பட்டரை கேட்டருள- யோக்யனாகில் இருந்தபடியே சொல்கிறான் அயோக்யனாகில் யோக்யதை சம்பாதிக்க வேண்டா -என்று அருளிச் செய்தார் —
எங்கனே என்ன-மேல் உள்ள நன்மைகளை தரக் கடவதாக விஸ்வசித்தவனுக்கு
கீழ் உள்ள விரோதிகளையும் போக்கா மாட்டாதோ-என்று அருளிச் செய்தார் – கங்கையாடப் போமவனுக்கு வேறொரு குழியிலே முழுகிப் போக வேணுமோ – மாத்ருகாதனுக்கும் கை நொந்தால் அம்மே -என்ன -பிராப்தி உள்ளவோபாதி பகவத் விஷயத்தில் விரோதித்தார்க்கும் திருநாமம் சொல்லப் பிராப்தி உண்டு –
விரோதியைப் போக்கி திரு நாமம் சொல்ல வேணும் என்னும் விளம்பம் பொறாதவன் இறே இதுக்கு அதிகாரி –-கிருஷ்ண அநு ஸ்மரணம் பரம் -கிருஷ்ணனுக்குத் தன்னை தநுவாக ஸ்மரிப்பான்- பிரகாரமாக ஸ்மரிப்பான் -என்றபடி –
பரம் –
அவனில் மேற்பட்டார் ஒரு சேஷி உண்டாகில் இறே தனக்கு பிராயச்சித்தம் பண்ண வேண்டுவது –
பேர் பாடி –
ப்ரீதி பூர்வகமாகப் பாடுகை -ஆர்வத்தால் பாடாதார் (11-7-4)-என்னுமா போலே –
(ஆர்வம் பெருகிக் குனிப்பார் அமரர் தொழப்படுவாரே -நம்மாழ்வார் )
உத்தமன் பேர் பாடி
உத்தமன் பேர் உண்டு -அவனுடைய-வாத்சல்ய பிரகாசகமான திரு மந்த்ரம்-
அத்தை ஸ்வயம் புருஷார்தமாகப் பாடி
பேர்
பிறர்க்கும் அவனுக்கும் உள்ள வாசி போரும்-திருநாமத்துக்கும் அவனுக்கும் உள்ள வாசி –
ஒருவன் திரு நாமத்தைச் செவியில் சொல்லி உறவை அறிவித்துத் தலையிலே திருவடிகளை வையாமையாலே யன்றோ-எனக்கு உன் திருவடிகள் சம்பந்தம் அந்தராத்மத்தையோடு ஒத்து நிலையில்லாதே போய்த்து
(நாமம் நாமியாலும் அறிவிக்க முடியாத சம்பந்தம் உணர்த்துமே-தன் சரண் தந்திலன் தான் அது தந்து -இது தானே எல்லா ஸூத்தியையும் பிறப்பிக்கும்(பூதாஸ்மி ரகு நந்தன -சபரி சத்தை பெற்றாளே )
எம்பெருமானை ஒழிந்த ஸூத்திகள் இவனுக்கு துரபிமானத்தைப் பிறப்பித்து எம்பெருமானை அகலப் பண்ணும்-அவன் பண்ணும் ஸூத்தியே ஸூத்தியாக தான் அஸூத்தன் என்று இருக்குமவனுக்கு –தானும் தன்னை விட்டு -பிறரும் தன்னைக் கை விட்டு எம்பெருமான் பரிக்ரஹிக்கைக்கு உடலாகி விடும்
(அக்ருத்ரிம த்வச்சரணாரவிந்த
ப்ரேம ப்ரகர்ஷாவதிம் ஆத்மவந்தம் |
பிதாமஹம் நாதமுநிம் விலோக்ய
ப்ரஸீத மத்வ்ருத்தம் அசிந்தயித்வா ||-ஶ்லோகம் 65 –எம்பெருமானே! என்னுடைய நடத்தையைக் கருதாமல், உன் திருவடிகளில் இயற்கையான அன்பில் சிறந்தவரான, தன் ஸ்வரூபத்தை உணர்ந்தவரான, என்னுடைய பாட்டனாரான ஸ்ரீமந் நாதமுனிகளைப் பார்த்து என்னை மன்னித்தருள வேண்டும்.)
கர்ம யோகிக்கு விரோதி போகைக்கும் கர்மம் செய்து தலைக் கட்டுகைக்கும் திரு நாமம் வேணும்
ஞான யோகிக்கு ஞானம் விசதமாகைக்கும் விரோதி போகைக்கும்
பக்திமானுக்கு விரோதி போகைக்கும் பக்தி வர்த்திகைக்கும்
பிரபன்னனுக்கு சோறும் தண்ணீரும் போலே தேஹ யாத்ரைக்கும் வேணும்
இப்படி எல்லார்க்கும் திரு நாமம் வேணும் -வேறே ஒன்றும் இது போல் இல்லை
பாடி
ஆர்வத்தால் பாடாதார் பாட்டு என்றும் பாடல்ல -(பெரிய திருமொழி-11-7-4 )–என்று இறே பாட்டுக்கு லக்ஷணம் –
(கூடா விரணியனைக் கூருகிரால் மார்விடந்த
ஓடா வடலரியை யும்பரார் கோமானைத்
தோடார் நறுந்துழாய் மார்வனை யார்வத்தால்
பாடாதார் பாட்டு என்றும் பாட்டல்ல கேட்டாமோ -11-7-4-)
உத்தமனை விட உயர்ந்த பேர் -கார்மேனி முதலில் அதை விட உயர்ந்த -பரமன் அடி -அதை விட உயர்ந்த -இங்கு பேர் –
————
நாங்கள்
திரு நாமத்தை வாயால் சொல்லா விடில் தரிக்க மாட்டாத நாங்கள்-
நெஞ்சு காவல் இடுகிற ஊரிலே இது நமக்கு சித்திப்பதே என்று ப்ரீதைகளாய்-
தங்களை ஸ்லாக்கிக்கிறார்கள் என்னவுமாம்
நாங்கள்
பாடி மடி கோலாதே-
இது தானே பிரயோஜனமாக யுடைய நாங்கள் ––பாடி நெய் உண்ணோம் -என்றவர்கள் பாட்டு இறே-இன்று வந்து இத்தனையும் அமுது செய்திடப் பெறில்-என்று இருக்குமவர்கள் இறே-என்னையும் கொடுத்து என்னுடைமையும் கொடுத்து என்கிறார்கள்-பேர் பாடா விடில் தரியாத நாங்கள் -உபாய அம்சம் அவனேயானால் தாரகமும் அவனேயாம் அத்தனை இறே
——-
நம் பாவைக்கு
ப்ராபகதயா வன்றிக்கே பிராப்ய ருசி இருந்த இடத்தில் இருக்க ஒட்டாமல் செய்கிற நோன்புக்கு
பாவைக்கு சாற்றி நீராடினால் –
நாட்டார்க்கு நோன்பு என்று ஒரு வியாஜ்யத்தை இட்டு நம்முடைய-விரஹ தாபம் போக நாம் குளித்தால்-நோன்பு என்ற ஒரு வியாஜ்யத்தை இட்டு கிருஷ்ண சம்ச்லேஷத்தைப் பண்ணினால் -என்றுமாம்
பேர் பாடி -நீராடினால் –
சம்பந்த ஜ்ஞான பூர்வகமாக-கிருஷ்ண சம்ஸ்லேஷம் பண்ணினால்-பலமும்-பல பிரதாதாவான உலகு அளந்தவன் படியாகை-
நம் பாவைக்குச் சாற்றி
நாட்டார்க்கு நோன்பு என்று ஓர் பேரை இட்டு
நீராடினால்
விரஹ தாபம் போகக் குளித்தால்
நாங்கள் நம் பாவைக்கு சாற்றி
அநந்ய உபாயரான நாங்கள்-ஸ்வயம் பிரயோஜனமான நோன்பை-உத்தேசித்து
வ்யாஜ்யமாக்கி-
நீராடினால்-
பகவத் அனுபவத்தைப் பண்ணினால்
நம் பாவைக்கு
அனுஷ்டானமும் அநநுஷ்டானமும் விகல்பிக்கலாம் படி இருக்கை —
அனுஷ்டித்ததாகில் சாதனம் என்று கொள்ள ஒண்ணாதே ப்ராப்ய ருசியால் வந்தது என்கை அனுஷ்டித்தது இல்லையாகில்-அவனே உபாயம் என்கையாலே பலத்தில் அழிவில்லாமை
பெறுமதுவும் கிருஷணனேயாய்-பெறுவிப்பவனும் கிருஷ்ணனேயான நோன்பு -என்றுமாம் (நோன்பு -உபாயம் அல்லவே -பெறு வித்தவனுக்கு கைங்கர்ய மாத்திரமே)
சாற்றி நீராடினால்
நாட்டுக்கு புண்யம் -நமக்கு விரஹ சமனம்-
வ்ருத்த ப்ரக்ருதிபிர் நித்யம் ப்ரயாதி சரயூம் நதீம் -ஸ்ரீ பரத ஆழ்வானைப் போலே என்கை –
ந மே ஸ்நானம் பஹுமதம் -இத்யாதியால் சொல்லுகிறபடியே அவனுடைய விரஹ தாபம் தீரும்
சாற்றி -சாற்றுமுறை -வெளியில் சம்ருத்தம் -மனசில் கிருஷ்ண அனுபவம் -அஸ்வத்தாமா குஞ்சர போல் -அனைத்துக்கும் அளிப்பவன் அன்றோ- நீங்காத செல்வம் -அவள் மூலம் அன்றோ இவர்கள் பெறுவார்கள் -செல்வத் திருமாலால் எங்கும் நிறையும் –
————-
தீங்கின்றி நாடெல்லாம்
நாட்டில் வியாதி துர்பிஷ்யாதி அமங்களங்கள் எல்லாம் போய் சம்ருதமாய்-
தம்தாமுடைய ஸூக்ருதம் அனுபவிக்கில் இறே அவ்வளவில் நன்மை யாவது
தம்தாமுடைய புண்ய அனுகுணமாக வன்றிக்கே-
பெருமாள் உடைய பாக்யத்தாலே என்று ராஜ்ஜியம் சென்றாப் போலே-
இவ் ஊரே அன்றிக்கே இவ் ஊருடன் சம்பாத்தித நாடெல்லாம் மங்களம் ஆகை
தீங்கின்றி நாடு எல்லாம்
யத்ர அஷ்டாக்ஷர ஸம்ஸித்தோ-மஹாபாகோ -மஹீயதே -ந தத்ர சஞ்சரிஷ்யந்தி வியாதி துர்பிக்ஷ தஸ்கரா –அவித்யாதி சகல துரிதங்களும் போய்-
இவர்கள் தாங்களும் முதல் தன்னிலே நாராயணனே -என்று துணிந்து இறே இழிந்து –
நாடு எல்லாம் –
இத் திரளிலே உண்டாய்ப் போகிறது அன்றே பகவத் சம்பந்தம் – அசல் தாக்கும் இறே
தேவப் பிள்ளைக்கு -லோக ஹிதார்த்தமாகக் காண் நீ போகிறது -என்று அருளிச் செய்த வார்த்தை-(ஸ்ரீ முதலியாண்டான் வம்சத்தவரான ஸ்ரீ குமார அண்ணாவிலப்பன் ஸ்வாமிகளை
ஸ்ரீ மா முனிகள் ஆச்சார்யரான தமது திரு விக்ரஹம் கொடுத்து அருளி தம்மை விட்டுப் பிரிந்து ஸ்ரீ காஞ்சிபுரம் சென்று லோக ஷேம அர்த்தமாக இருக்க நியமித்து அருளினார் அன்றோ )
ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே ஆக்கிக் கொண்டே இறே இருப்பது
தீதில் நன்னெறி காட்டித் (பெருமாள் திருமொழி )
தீர்த்த கரராமின் திரிந்து (இரண்டாம் )இறே
கலியும் கெடும் -என்னும் படி இறே –
தீங்கின்றி நாடு எல்லாம் –
ராமே ராஜ்ஜியம் பிரசாஸதி -என்கிற நாடு போலே –
நகராணி ச ராஷ்ட்ராணி தநதான்ய யுதா நிச
தம் தாம் புண்ய பாப அநு குணமாக அன்றிக்கே பெருமாள் சென்ற நிலையால் நாடு வாழ்தல் போலே –
தீங்கின்றி-
தேகாத்மா அபிமானாதி தோஷங்கள் ஒன்றும் இன்றிக்கே
தீங்கின்றி நாடெல்லாம் –
எல்லாப் பொல்லாங்குகளும் போகை–-தந்தாம் பண்ணின புண்ய பலமென்றே அனுபவிக்கிறது -சேஸ்வரமான ஜகத்தடைய வாழ –
————-
திங்கள் மும்மாரி பெய்து –
வெள்ளக் கேடும் வறட்சி கேடும் இன்றிக்கே ஊற எண்ணெய் வெண்ணெய் விட்டாப் போலே இருக்கை –அபேக்ஷிதா சமயங்களில் வர்ஷிக்கை-ஒன்பது நாள் வெய்யிலும் ஒரு நாள் மழையுமாய்-அபேஷித்த காலத்தில் உண்டாய் இருக்கை–
மும்மாரி பெய்து –
ரஹஸ்ய த்ரயம்- தத்வத்ரய -தத்வ ஹித புருஷார்த்த ஞானங்கள் –ஆகார த்ரய ஜ்ஞானம்-அநந்யார்ஹ சேஷத்வம் -அநந்ய சரண்யார்த்வம் -அநந்ய போக்யத்வம் என்றுமாம்
திங்கள் மும்மாரி பெய்து-
சத்வோத்தரமான காலத்திலே-
அனன்யார்ஹ சேஷத்வ-
அநந்ய சரணத்வ
அநந்ய போக்யத்வங்கள் ஆகிற-ஆகார த்ரய ஜ்ஞானம் உண்டாய்-
அத்தாலே அபிவிருதங்களாய்-ஓர் ஊருக்கு ஒருவரே போரும்படியான சேதனர் உடைய நடுவிலே தத் சம்பந்திகளாய்த்த தேக தாரகரான ஆத்ம வர்க்கங்கள்-களிப்பிலே துள்ளா நிற்க–
யத்ர அஷ்டாக்ஷர ஸம்ஸித்தோ மஹா பாகோ மஹியதே-ந தத்ர சஞ்சரிஷ்யந்தி வியாதி துர்பிக்ஷ தஸ்கரா -என்றும் நாட்டிலுள்ள பாவமெல்லாம் சும்மெனாதே கைவிட்டு ஓடித் தூறுகள் பாய்ந்தனவே -என்றும் சொல்லுகிறபடியே –
(நம்பினேன் பிறர் நன் பொருள் -திருமந்திரம் அறியாமல் களவு -நம்பினேன் மடவாரையும் முன்னெல்லாம் -நாராயணாய -சப்தம் அறியாமல் -விஷயாந்தர வியாதி -நம்பிக்கு அன்பனாய் -நம அர்த்தம் –
மும்மாரி -ஸ்வரூபம் விளக்கி -பிராபகம் விளக்கி -அறம் செய்யும் உலகளந்த உம்பர் கோமான் -ப்ராப்யம் -உலகந்தான் அடி போற்றி
ஸ்லோக த்ரயம் –17-18-19–போக்யம் தாரகம் துர்லபம் -வருத்தம் தீரநம்மாழ்வார்
ஸ்தான த்ரயம் -8-22–பக்தியால் மட்டுமே அடையப்படுவான் பரபக்தி 11-54–அறியவும் அடையவும் காணவும் பக்தி பரஞானம் 18-54–பரமபக்தி போல் இங்கும் ஒரே பாசுரத்திலேயே இவை மூன்றும் உண்டு)
மும்மாரி
மூன்று சோகங்கள் அர்ஜுனனுக்கு
ப்ரக்ருதி ஆத்ம பிராந்தி ஜெனித சோகம் -பூத உடல் -பஞ்ச பூத உடல் –
தேவ அசுரர் விபாக ஸ்ரவண ஜெனித சோகம்
முடிவு எடுக்க முடியாத பரதந்த்ரன் அறிவால் மூன்றாம் சோகம்
மூன்று மாஸூக
மூவாறு மாசம் மோகம் ஆழ்வாருக்கு-தர்ம வீர்ய ஞானத்தால் தெளிந்து வால்மீகி –-இவரோ அருளின பக்தியால் உள் கலங்கி -சோகித்து மூவாறு மாசம் மோகித்து-
பத்துடை அடியவர்க்கு எளியவன்-
அவாப்த ஸமஸ்த காமன் வெண்ணெய் திருடி ஆப்புண்டு – -1-3—
பிறந்தவாறும்-அகர்மவஸ்யன் பிறக்கவோ-
பரஞ்சுடர் உடம்பாய் அழுக்கு பதிந்த உடம்பு ஏறிட்டுக் கொண்டு -5-10–
மாயக் கூத்தனின் கண்கள் வாயும் சோர்ந்து- இருத்தும் வியந்து –
வீற்று இருந்தான் கண்டு கொண்டே –கண்கள் சிவந்து -8-6–
மூன்று தீர்த்தம் -தேக மனஸ் ஆத்ம சுத்தி –
கிண்டி தீர்த்தம் -மேல் சென்று விழுவதால் கங்கையை போல் புனிதம் -சேஷ தீர்த்தம் -உள்ளே வரும் வழியும் வெளியில் வரும் வழியும் வெவ்வேறு இருக்கும் –
————–
ஓங்கு பெரும் செந்நெலூடு கயல் உகள –
கீழ் சொன்ன திரு உலகு அளந்த சர்வேஸ்வரனோடு ஒத்து இருக்கை –
விடுவோரே நட்டு நாயிறு பட்டபோது வந்து பார்த்தால்-கை கவித்துப் பார்க்க வேண்டும்படி இருக்கை-மாரீசன் பெருமாளை -சீதா ராம பிரபாபாவம் சொன்னால் போலே ஆயிற்று
இவர்களுக்கும் வாமன நிமித்தமாக இருக்கிறபடி
ஓங்கு பெரும் செந்நெல்-
ஒரு முதலே ஒரு செய்யை விளாக்குலை கொண்டு அங்கன்-ஒரு வரம்பு இல்லாமையாலே-
ஆகாச அவகாசம் உள்ள அளவும் வளர்ந்து இருக்கை
ஊடு கயல் உகள –
செருக்காலே யானைக் கன்று போலே வளர்ந்த கயல்கள் ஆனவை செந்நெல் களின் உள்ளே புக்கு–போக இடம் பொறாமையாலே துள்ளா நிற்கும்
விழுக்காடு அறியாமே அகப்பட்ட படி திரு உலகு அளந்து அருளின சர்வேஸ்வரனை
கண்ட அனுகூலர் பட்டது-படா நிற்குமாய்த்து இவை
ஓங்கு பெரும் செந்நெல்
குனிந்து நின்று முதலிட்டு மேலே நோக்கிப் பார்த்தால் ஆகாசத்தை வெளியடைப்பது காணும் –ஆகாசத்தில் வரம்பில்லையே –-திரு உலகு அளந்து அருளினவனைப் போலே
பெரும் செந்நெல் –
சுற்றிலே பணைக்கை-செய் கொள் செந்நெல் உயர் -என்னுமா போலே
ஊடு கயலுகளப்
வைரத் தூண் போலே நெல் நிற்கையாலே நேரே சஞ்சரிக்கப் பெறாது – ஒருக்கடித்து உலாவும் அத்தனை யாய்த்து –-ஜல சர தத்துவங்களும் நீரிலும் நிழலிலும் கிடந்து வளர்ந்த செருக்கால் களித்து மேல் நோக்கிப் பாயா நிற்குமாய்த்து
பள்ளச் செருவில் கயல் உகள (புள்ளு பிள்ளைக்கு இரை தேடும் )-என்னுமா போலே –
சலம் கொண்டு மலர் சொரியும் (பெரிய திருமொழி -மூன்றாம் பத்து )-இத்யாதி
ஓங்கு பெரும் செந்நெல்
வ்ருஷே வ்ருஷே(மாரீசன் எங்கு பார்த்தாலும் ராமனாகவே பார்த்தால் போல் )
ஊடு கயலுகளப்
பயிர் நெருக்கித் தனையும் ஆணைக் கன்று போலே செருக்கித் திரிகிற
கயல்களுக்குத் தாவித் திரியலாம் என்கை –
திரு யுலகு அளந்து அருளின எம்பெருமானைக் கண்டு அனுகூலர் செருக்கி ப்ரீதிக்குப் போக்கு விட்டு சஞ்சரிக்குமா போலே கயல்கள் திரிகிற படி –(ஆழி எழ சங்கும் வில்லும் எழ -ஜாம்பவான் பறை கொட்டி ஆர்பரித்தால் போல் இங்கு கயல்களும்)
————
பூம் குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்ப-
பூத்த குவளை -என்னுதல்-காலத்திலே என்னுதல் தர்ச நீயமான குவளைப் பூவிலே என்னுதல் –
பொறி வண்டு கண் படுப்ப –
மது பானத்தாலும்-அன்யோன்ய சம்ஸ்லேஷத்தாலும்-பிறந்த புகரை உடைய வடிவிலே தொடை கொள்ளலாம் படி இருக்கிற வண்டுகள்-தன்னில் தான் ஒரு மகா பாரதத்தைப் பாரித்துக் கொண்டு புக்கு-புஷ்பத்திலே ஸ்பர்ச சௌக்யத்தாலே-நஞ்சு உண்டாரைப் போலே கிடந்தது உறங்கி உணர்ந்து–எழுந்து இருக்கும் பொழுது- என்னை நீ எழுப்பிற்று இல்லை என்னை நீ எழுப்பிற்று இல்லை-என்று ஒன்றுக்கு ஓன்று சீறு பாறு என்னா நிற்கும்-
பள்ளிக் கமத்திடைப் பட்ட பகுவாய் அலவன் முகம் நோக்கி –நள்ளி ஊடும் -என்னக் கடவது இறே-
பகுவாய் அலவன் -பெரிய வாயை உடைய புருஷ நண்டு-நள்ளி பெண் நண்டு
ஊடு கயல் உகள –பூம் குவளைப் போதில் பொறி வண்டு-
குவளைப் பூவிலே வண்டு-மது பானம் பண்ண என்று படிந்த தசையிலே
கயல் ஊடே உகள
செந்நெலும் குவளையும் ஒக்க அசைந்து-தூங்கு மெத்தையில் உறங்கும் ராஜ புத்ரர்கள் போலே-
வாயில் மதுவோடு வண்டுகள் கண் படுப்ப -என்றபடி-
இது வயலின் சம்ருத்தி
பூங்குவளைப் போதில்-அழகிய குவளைப் பூவிலே – குவளைப் பூ அலர்ந்த போதிலே -என்று கால பரமாகவுமாம்
பொறி வண்டு-
மது பானத்தாலே இளகிப் பதித்து இறே வண்டு இருப்பது –
கண் படுப்ப-
அலருகிற செவ்வியில் -மது பானம் பண்ண என்று இழிந்து -படுக்கை வாய்ப்பாலே மயங்கிக் கிடந்து –நீ எழுப்பிற்றிலை நீ எழுப்பிற்றிலை என்று பெடையும் தானும் விடிவோறே -சீறு பாறு -என்னுமாய்த்து –
வயலில் ஸம்ருத்தி சொல்லி ஊரில் ஸம்ருத்தி சொல்கிறது
பூங்குவளை இத்யாதி-
ஸும்ய ரூப -என்கிறபடியே –
ஜ்ஞாநிகளோடு ஒக்க வளர்ந்து அத்தாலே தர்ச நீயரான ஞானாதிகர்-இடங்களிலே
ஸ்வாமித்வ ஸூசகமான திரு அபிஷேகம் உடையனாய்-
பரஞ் ஜோதிஸ்ஸான சர்வேஸ்வரன் லஷ்மி சனாதனாய்-
ஜ்ஞான லப்தனாய் வந்து அவர்கள் உடைய ஹிருதயங்களிலே-ஸூகஸ் ஸ்பர்சத்தாலே கண் வளர –
இது சேதன சம்ருத்தி
இனி சைதன்ய சம்ருதியைச் சொல்லுகிறது
இது சிஷ்ய சம்ருதியைச் சொல்லிற்று ஆகவுமாம்
பூங்குவளைப் போதில்
அழகிய குவளை பூவிலே –
போது என்று கால பரமாகவுமாம்
கயல்களுடைய சஞ்சாரத்தால் பூக்கள் கட்டு நெகிழ்கிற படி
பொறி வண்டு
ரசாயன சேவை பண்ணினாரைப் போலே நரைதிரை மாறி இளகிப் பதித்து இருக்கை
இவர்களுக்கு அங்குள்ளது எல்லாம் உத்தேசியமாய் இருக்கை
(வள்ளி கொழு நன் முதலாய மக்களோடு முக் கணான்
வெள்கியோடே விறல் வாணன் வியன் தோள் வனத்தைத் துணிந்து உகுந்தான்
பள்ளி கமலத்திடைப் பட்ட பகுவாய் அலவன் முகம் நோக்கி
நள்ளி யூடும் வயல் சூழ்ந்த நறையூர் நின்ற நம்பியே—-6-7-6-)
பூம் குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்ப-
ஜ்ஞாநிகளோடு ஒக்க வளர்ந்து அத்தாலே தர்ச நீயரான ஞானாதிகர்–இடங்களிலே
ஸ்வாமித்வ ஸூசகமான திரு அபிஷேகம் உடையனாய்-
பரஞ் ஜோதிஸ்ஸான சர்வேஸ்வரன் லஷ்மி சனாதனாய்–
ஜ்ஞான லப்தனாய் வந்து அவர்கள் உடைய ஹிருதயங்களிலே-
சுகஸ் ஸ்பர்சத்தாலே கண் வளர ––
ஹ்ருதயத்தில் நின்று இருந்து சயனித்து -சுருதி சொல்லுமே -சரணாகதனாக்கிய பின்பு க்ருதக்ருத்யனானான் -கண் வளர்கிறான்-வள்ளல் -காருண்யம் உதாரம் – பெரும் ஞான அனுஷ்டானங்கள் பூர்த்தி -பசுக்கள் ஆச்சார்யர்
இது சேதன சம்ருத்தி–இனி சைதன்ய சம்ருதியைச் சொல்லுகிறது-
இது சிஷ்ய சம்ருதியைச் சொல்லிற்று ஆகவுமாம்-
——–
இனி ஊரில் சம்ருத்தி இருக்கும்படி சொல்லுகிறது-
தேங்காதே புக்கிருந்து –
எத்தனையேனும் முன்கை யுரவியராய் இருப்பார்-இழிய வேணும் யாய்த்து பசு கறக்கப் புகும் போது-
இதுக்கு அடி –
பால் மாறாமையாலே எழுந்து இருக்கப் போகாது-
இத்தால்
பால் போரும் பெருமையை அனுசந்தித்த வாறே-கறக்க ஒருப்படுவார் இல்லை
திருவடி சமுத்ரம் கடக்க ஒருப்பட்டாப் போலே-ஒருப்பட்டுக் கொண்டு இழிய வேண்டும்படி யாய்த்து இருப்பது-
இருந்து –
பால் மாறில் இறே எழுந்து இருக்கலாவது-
ஸ்தாவர பிரதிஷ்டை போலே இருந்து
தேங்காதே புக்கிருந்து-
பால் வெள்ளம் தான் -கறக்கப் புக்கவர்கள் அஞ்சி பிற்காலிக்கும் படி இறே இருப்பது
திருவடி சமுத்திர தரணத்துக்கு அஞ்சாதே இழிந்தால் போலே இழிய வேணுமாய்த்து –
முத்துக்கு முக்குமவர் கடலுக்கு அஞ்சாதாப் போலே –
நனைத்தில்லம் சேறாக்கும் இறே
இருந்து –
ஸ்தாவர ப்ரதிஷ்டையாக-இருந்து-பால் ஸம்ருத்தி யாலே தேங்கும் அத்தனை –
பால் வற்றி எழுந்து இருக்க விரகில்லை-
தேங்காதே புக்கிருந்து
இனி ஊரில் ஸம்ருத்தி சொல்கிறது
தேங்காதே புக்கு
யதோ வாசோ நிவர்த்தந்தே -என்னும் விஷயத்தை –
அத் தலையை உண்டாக்குகைக்காக தம் குற்றம் பார்த்து இறாயாதே ஸ்வீ கரிக்குமா போலே(நைச்யம் பாவித்து நீங்கக் கூடாதே )
இருந்து –
பால் மாறில் இறே எழுந்து இருக்கலாவது–ஸ்தாவர பிரதிஷ்டை போலே இருந்து-
பிற்காலியாமல் குருகுலத்திலே பிரவேசித்து–-ஸூஸ்த்ரனாய் இருந்து தன்னைப் பற்றினார்க்கு-பரம பத நாதனோடு–பரம சாம்யா-பத்தியைப் பண்ணிக் கொடுக்கும் சீர்மை உடையனாய்–பிரஜைக்கு முலை போலே சிஷ்யனுக்கு தாரகமான திருவடிகளைப் பற்றி பிரார்த்திக்க-உபதேச பாத்ர பூதரான சிஷ்யரை பரி பூர்ண–ஜ்ஞானிகள் ஆக்குமவர்களாய்–சிஷ்ய விதேயராய்– நிரந்தர பகவத் குணானுபவத்தாலே-பரிபுஷ்டரான ஆசார்யர்கள் உடைய–அவிச்சின்னமான சம்பத்து பரிபூர்ணம் ஆய்த்து
யாதோ வாசோ நிவர்த்தந்தே -என்னும் விஷயத்தை –
அத் தலையை உண்டாக்குகைக்காக தம் குற்றம் பார்த்து இறாயாதே ஸ்வீ கரிக்குமா போலே
———-
சீர்த்த முலை-
விரலிட்டு சுற்றிப் பிடிக்க ஒண்ணாது-பால் விம்மி இரண்டு கையாலும் பற்ற வேண்டும் படி இருக்கை-இரண்டு கையாலும் அணைத்து கறக்க வேண்டும்படி கனத்து இருக்கை
பற்றி வாங்கக் குடம் நிறைக்கும் –
வாங்குகை -வலிக்கையாய்-பற்றிக் கறக்க குடம் நிறைக்கும் என்னுதல்
முலையைப் பற்றி கை வாங்க தானே நின்று பால் சொரியும் என்னுதல்
இட்ட குடங்கள் வாங்க வாங்க நிறைக்கும் என்னுதல்
குடமிடாதார் இழக்கிறது பசுவின் குற்றம் அன்றே
இச்சை உடையார் ஈஸ்வரனைப் பற்றி க்ருதக்ருத்யராம் போலே யாய்த்து இவையும்
பற்றி-வாங்கக் குடம் நிறைக்கும்-பற்றி வலிக்க -தொட்டு விட குடங்களை நிறையா நிற்குமாய்த்து – பற்றிப் பற்றி வாங்கக் குடங்களை நிறைக்கும் என்றுமாம் –பற்றி வாங்க
தொட்டு விட அமையும்
வாங்கக் குடம் நிறைக்கும்
ஒரு கால் பற்றி வலிக்க இட்ட குடங்கள் நிறைக்கை-
வைப்பார் தாழ்வே –
வைத்த குடம் எல்லாம் நிறைக்கும் என்றுமாம்
————-
வள்ளல் –
கீழே பால் போரும் பெருமையை சொல்லிற்று ஆகில்
இனி வள்ளல் தனமாவது என் என்னில்-
கிருஷ்ணன் படி இவற்றுக்கும் உண்டாய் இருக்கை-
ஆரேனும் இவன் கழுத்தில் ஓலை கட்டி தூது போ என்றால்-போமாப் போலே யாய்த்து
இவையும்-சிறு பிரஜைகளும் கூட கட்டவும் அடிக்கவும் ஆம்படி-தன்னைக் கொடுத்துக் கொண்டு நிற்கை
———
பெரும் பசுக்கள்
புல்லும் தண்ணீரும் தாரகமாக வளர்ந்தவை அன்றிக்கே-
கிருஷ்ண ஸ்பர்சமே தாரகமாக வளர்ந்தவை ஆகையாலே-
ஸ்ரீ சத்ருஞ்ஜயனைப் போலே யாய்த்து இருப்பது–புல்லாலே வளருகை அன்றே –
தீம் குழல் ஓசை அசை இட்டு இறே வளருவது –
கானகம் படி இத்யாதி –
அவன் கணிசியாதே நடக்க –அவர்கள் கருதி ஆடுகிற கூத்தை மறந்தார்கள் –
நடைச் சக்கரவத்து பிடிக்கலாம் படி இறே நடப்பது –
அவன் குழலூத இவர்கள் பாட்டு மறந்தார்கள்
சிறு விரல்கள் தடவிப் பரிமாற-இவருக்கு சிறு விரலில் கண் செல்லுகிற படி
செங்கண் கோட -துளை தோறும் கண் ஓடுகிற படி
செய்ய வாய் கொப்பளிப்ப -ஸுகுமார்யத்தாலே திருப் பவளம் கொப்பளிப்ப
குறு வியர்ப் புருவம் கூடலிப்ப -வேர்த்துப் புருவம் வளைய
கோவிந்தன் குழல் கொடு ஊதின போது -பசுக்கள் மேய்த்து அவற்றின் வயிறு நிறைந்த ஹர்ஷத்தாலே தான் குழலூதா நிற்குமாய்த்து
வள்ளல் –
சிறு பிள்ளைகளுக்கும் கட்டி விடலாய் கழுத்தைக் கட்டிக் கொண்டு நாலலாம் படி இருக்கை –
பெரும் பசுக்கள்
கண்ணன் குழலோசையை அசையிட்டு வளருகையாலும் –
அவனோட்டை ஸ்பர்சம் உண்டாகையாலும் ஸ்ரீ சத்ருஞ்சயனைப் போலே இருக்கை
எம்பெருமான் நியமனம் ஒரு முலை–
சிஷ்யர் பிரார்த்தனை சமித் பாணி ஒரு முலை —
துர்கதி கண்டு வருந்தியாவது -காருண்யத்தால் -தரித்து இருந்தேன் ஆகவே -நான்காவது முலை-
கீதாசார்யன் -அர்ஜுனன்–நாரதர் -வால்மீகி–பராசர பகவான் -மைத்ரேயர்
தேங்காதே -ஆசார்யர் இடம் புக்கு -இருந்து –
சீர்த்த முலை-
ஸ்ருதி ஸ்ம்ருதி இதிஹாச புராணங்கள் அருளிச் செயல்கள்-
குடம்
தயா பாத்ரம் -நிறைக்கும் ஆத்ம குணங்களால் -தன்னைப் போலே ஆக்கும் ஆசார்யர் –
இது தான் நீங்காத செல்வம்
வள்ளல் பெரும் பசுக்கள் –
கிருபாமாத்ரா பிரசன்னாசார்யர்கள் –
புள்ளு பாஷ்யகாரர் பிள்ளை நாம் -வேதாந்தங்கள் அநந்தம்-நமக்கு தேடிக் கொடுத்து –
பசுக்கள் –
பெரும் பசுக்கள் –
வள்ளல் பெரும் பசுக்கள் –
குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் –
பஞ்சம உபாயம் -ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் அன்றோ
———
நீங்காத செல்வம் நிறைந்து-
அழிவில்லாத சம்பத்து நிரவதிமாம்படி-சேதனர் உடைய புண்ய பாப அனுரூபமாக படி விடும்-சர்வேஸ்வரன் அடியாக வந்த சம்பத்தாகில் இறே அளவு பட்டு இருப்பது
பகவத் ஸ்பர்சத்தால் வந்த சம்பத் ஊற்று உடைத்தாய் இருக்கும் இறே
ஆகையால் நீங்காத செல்வம் -என்கிறது-
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்
ந கச்சின் ந பராத்யதி -என்னும்
அவள் அடியாக வந்த சம்பத் ஆகையால் ஊற்று மாறாத சம்பத்து இறே –
தேங்காதே புக்கிருந்து தீர்த்த முலை பற்றி-வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்–நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்- பிற் காலியாமல் குருகுலத்திலே பிரவேசித்து ஸூத்த ஸத்வராய் இருந்து தன்னைப் பற்றினார்க்கு பரம பத நாதனோடு
பரம சாம்யா பத்தியைப் பண்ணிக் கொடுக்கும் சீர்மை உடையனாய்
பிரஜைக்கு முலை போலே சிஷ்யனுக்கு தாரகமான திருவடிகளைப் பற்றி பிரார்த்திக்க
உபதேச பாத்ர பூதரான சிஷ்யரை பரி பூர்ணஜ்ஞானிகள் ஆக்குமவர்களாய்
சிஷ்ய விதேயராய்-நிரந்தர பகவத் குணானுபவத்தாலே-பரிபுஷ்டரான ஆசார்யர்கள் உடைய-அவிச்சின்னமான சம்பத்து பரிபூர்ணம் ஆய்த்து –
நீங்காத செல்வம் –
ஈஸ்வரன் பார்த்த இடம் போலே சாவதி அன்று இறே இவர்கள் பார்த்த இடம் –
புண்யம் அடியாக வருதல் ஈஸ்வர கடாக்ஷம் அடியாக வருதல் செய்யுமவை போல் அன்று
அவனுடைய ஐஸ்வர்யத்துக்கு அடியான கடாக்ஷம் உள்ளவர்கள் இறே இவ்வைஸ்வர்யத்துக்கு அடி
(இவர்கள் -கடி மலர்ப் பாவைக்கு ஒப்பு உள்ளவர்கள் அன்றோ)
நிறைந்தேலோ ரெம்பாவாய் —
உத்தமன் –
பட்டர் அருளிச் செய்த வார்த்தை –
கரு மணியாய் இரந்த கள்வனே உன்னைப் பிரமாணித்தார் பெற்ற பேறு-(இரண்டாம் திருவந்தாதி -61 )என்று
சிறு காலைக் காட்டி இரந்து பெரிய காலைக் கொண்டு அளந்து
நீ பண்ணின ஓரம் உன்னை ஆஸ்ரயித்தார் நிர்ப்பரராகைக்கு அவர்களுக்கு நீ வைத்த சந்தானச் சாபம் இறே –
(ஒரு சந்தானம் வைத்து வளர்ப்பது போல் விஸ்வாஸம் ஒன்றாலே உஜ்ஜீவனம்)
இவ்வாந்தராளிக த்ருஷ்டா த்ருஷ்டங்களில் ஒருவர்க்கு அஞ்சாதே
யமாதிகளுக்கு முழங்கை காட்டிச் செருக்கராய் இவர்கள் திரிகைக்கு அடி என் என்னில் அறிந்தோம் –
ஒரு பரம தார்மிகன் செவியிலே துரப்பலரான நம்மால் நம் கார்யம் நிர்வஹித்துக் கொண்டு கரையிலே ஏற ஒண்ணாது –
உன்னுடைய ரக்ஷணத்துக்கு ஒரு பிரபலனை அண்டை கொண்டு
த்ருஷ்டா அதிருஷ்ட விஷயமான உன்னுடைய யத்னங்களை யடைய அவன் வசத்திலே பொகட்டு நிர்ப்பயனாய் இரு என்று சொல்லிப் போம் –
இவனும் அத்தையே விஸ்வஸித்து அப்படியே என்று இருக்கும் –
எம்பெருமான் கழுத்திலே ஓலை காட்டித் தூது போயும் மார்பிலே அம்பேற்றும் சாரத்யம் பண்ணியும்
பகலை இரவாக்கியும் சத்ய ப்ரதிஞ்ஞனாயும் அசத்ய ப்ரதிஞ்ஞனாயும் பொய் சொல்லியும் மெய் சொல்லியும்
வார்க்கொத்துக் (கொல்லா மாக்கோல )குத்தியும் எல்லை நடந்தும் – இங்கன் ஒத்த செயல்களை செய்து இவர்கள் காரியமே நிர்வஹியா நிற்கும் -என்றார் –
மந்திரத்தால் மறவாது என்றும் வாழுதியில் வாழலாம் மட நெஞ்சமே -என்று திருமந்த்ரத்துக்கு அர்த்தமாக
மண் முழுதும் அகப்படுத்து நின்ற வெந்தை மலர் புரையும் திருவடியே வணங்கினேன் என்று அனுசந்தித்தால் போலே
இவளும்-
ஓங்கி உலகளந்த உத்தமன் -என்று திரு நாமத்தினுடைய அர்த்தத்தை முந்துற அனுசந்தித்து
பின்னை அதுக்கு வாசகமான -திரு மந்த்ரத்தை பாடி -என்கிறாள் –
(மந்த்ரத்திலும் மூன்று பதம் -இவனும் கண்ணால் மூன்று பதம் காட்டினானே)
(மூன்று எழுத்து அதனை மூன்று எழுத்து அதனால் மூன்று எழுத்தாக்கி மூன்று எழுத்தை
ஏன்று கொண்டு இருப்பார்க்கு இரக்க நன்குடைய வெம் புருடோத்தமன் இருக்கை
மூன்றடி நிமிர்த்து மூன்றினில் தோன்றி மூன்றினில் மூன்றுரு ஆனான்
கான் தடம் பொழில் சூழ் கங்கையின் கரைமேல் கண்டம் என்னும் கடி நகரே –பெரியாழ்வார் -4-7-10-)
——–
பெரும் செந்நெல் -சரணாகதர்கள் – வரம்புற்ற கதிர் செந்நெல் -தலை சாய்த்து –
தாள் சாய்க்கும் தென்னரங்கம் -உரம் பெற்ற மலர்க்கமலம்-உலகு அளந்த சேவடி போல் உயர்ந்து காட்ட –
சரணாகதி இங்கும் நடக்கிறது-
குவளை புஷ்பம் தாமரை தஹார புண்டரீகம் -ஆத்ம யாத்ரை சித்தம்-தேக யாத்ரைக்கு கரைய வேண்டாம்
கரைந்தால் நாஸ்திகன்-ஆத்ம யாத்ரைக்கும் கரைய வேண்டா கரைந்தான் ஆகில் சரணாகதன் ஆகான்
பொறி வண்டு –
தெய்வ வண்டு –
வாமனன் -போலே ஆச்சார்யர்கள் மனுஷ்ய சஜாதீயனாக்கிக் கொண்டு மஹாபலி போன்ற சம்சாரிகளுக்கு
ரஹஸ்ய த்ரயம் -ஷட்க த்ரயம் -தத்வ த்ரயம் -மூன்றையும் கேளுங்கோள் என்று இரப்பாளனாகி
அவன் கொள்ள கொண்ட வேஷம் -இவர்கள் கொடுக்கக் கொண்ட வேஷம் -வாசி உண்டே
ஸ்ரீ பாத தீர்த்தம் சாதித்து சிஷ்யர்களை உஜ்ஜீவிப்பார்கள் அவனைப் போலவே
அதம குரு -புலையறமாகி நின்ற புத்தோடு சமணம் எல்லாம் –ஜைன புத்தாதி மதங்களை போதிப்பவர்
அனுவர்த்தித்தாலும் ஒன்றுமே உபதேசியாதாரும் அதம குரு
ஞானம் அனுஷ்டானம் ஏதும் இல்லாமல் எத்தையோ உபதேசிப்பவர் அதம குரு
மத்யம குரு -சாமான்ய ஸாஸ்த்ர ப்ரவர்த்தகர் –
அனுவ்ருத்தி நிர்பந்தங்கள் நிபபந்தனமாக வருந்தி உபதேசிப்பவர்களும் மத்யம குரு
ஞானம் அனுஷ்டானம் ஒன்றை மட்டும் இருந்து உபதேசிப்பவர் மத்யம குரு
பயன் நன்றாகிலும் பங்கு அல்லராகிலும் செயல் நன்றாகத் திருத்திப் பனி கொண்டு
சாத்விக மஹார்த்தங்களை உபதேசித்து அருளுபவர் உத்தம குரு –
ஞானம் அனுஷ்டானம் இவை நன்டயராகவே கொண்டு உபதேசித்து அருளுபவர் உத்தமர் என்றுமாம் –
ஓங்கி உலகளந்த உத்தமன் –
மண் மிசை யோனிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவன் கண்ணுற நிற்கிலும் காணகில்லா —
அண்ணல் இராமானுசன் வந்து தோன்றிய அப்பொழுதே –நாரணற்கு ஆயினேரே –
ஞானம் கனிந்த நலம் கொண்டு -இராமானுசன் தன்னை எய்தினர்க்கு அத்தானம் கொடுப்பது
தன் தகவு என்னும் சரண் கொடுத்தே
எம்பெருமானை விட ஓங்கி அதிசயித்து –
தம் கருணையால் தாமே சென்று அருளி உத்தமர் –
உலகத்தை எல்லாம் ஸ்வ அதீனமாக ஆக்கிக் கொண்ட உத்தமர் அன்றோ –
ஓராண் – வழியாய் உபதேசித்தார்-முன்னோர் –
ஆசை உடையார்க்கு உபதேசிக்க -வரம்பு அறுத்த உத்தமர் அன்றோ –
மற்றொரு பேறு மதியாது அரங்கன் மலர் அடிக்கு ஆளுற்றவரே தனக்கு உற்றவராகக் கொள்ளும் உத்தமன் –
நற்றவர் போற்றும் இராமானுசன் அன்றோ –
இப்பாசுரத்தில், “உத்தமன் பேர் பாடி” என்று கூறுவது, பெருமாளின் புகழைப் பாடுவதை விட,
அவனது திருநாமத்தைப் (அஷ்டாட்சர மந்திரம்) பாடுதல் தான் சிறந்தது என்ற உள்ளர்த்தத்தை உடையது!
அஷ்டாட்சரம், த்வயம், சரம் சுலோகம் ஆகிய மூன்றும் முறையே தாரகம், போக்யம், போஷகம் என்பதாகச் சொல்லலாம்.
சரீர நோக்கில் பார்க்கையில்,
தாரகம் – உணவு
போக்யம் – பால், நெய்
போஷகம் – வெற்றிலை, சந்தனம் (தாம்பூலம்)
ஆக, அஷ்டாட்சரம், த்வயம், சரம் சுலோகம் என்ற மூன்று மட்டுமே அடியாரின் ஆத்மசுத்திக்கு போதுமானவை;
பரமனின் கல்யாண குணங்களை அனுபவிப்பதற்கு, மோட்ச சித்திக்கும் ஆதாரமானவை.
ஆக,கர்ம ஞான யோகங்களைக் காட்டிலும், பக்தி யோகமே சிறந்ததாக நாச்சியார் குறிப்பிலுணர்த்துகிறார்.
சாற்றி நீராடினால்’ என்பது சரணாகதி உபதேசத்தை உட்பொருளாகக் குறிக்கிறது.
‘மும்மாரி’ என்பது மூன்று வகைப்பட்ட பகவத் காரியங்கள் வாயிலாக, நோன்பின் சரணாகதிப் பலனை
பெற முடியும் என்பதை வலியுறுத்துகிறது. அதாவது,
அ) ஆச்சார்ய உபதேசம்
ஆ) திவ்யப் பிரபந்தப் பாசுரங்களைப் பாடுதல்
இ) திவ்ய தேசங்களுக்கு சென்று பரந்தாமனை வழிபடுதல்
“ஓங்கு பெருஞ்செல்நெல் ஊடுகயல் உகள” — செந்நெல் வயல்களில் துள்ளி விளையாடும் மீன்கள்,
தங்கள் உபதேசங்கள் பலனளிப்பதைக் கண்டு மகிழ்வுறும் ஆச்சாரியர்களை உட்பொருளாகக் குறிக்கிறது.
“பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப” என்பதில் சுட்டப்படும் வண்டு,
அடியவர் நெஞ்சத்தில் (யோக நித்திரையில்) உறைந்திருக்கும் வைகுந்தப் பெருமானைக் குறிக்கிறது.
“தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி வாங்க” என்பது ஆச்சார்யனின் வாத்சல்யத்தால்
ஈர்க்கப்பட்ட சீடர்களை உட்பொருளாகக் கொண்டுள்ளது.
“வள்ளல் பெரும்பசுக்கள்” தயாள குணம் உடைய, பிரதிபலனாக எதையும் எதிர்பார்க்காத ஆச்சார்யர்களைக் குறிக்கிறது.
“நீங்காத செல்வம்” என்பது (திருமகளின் பரிந்துரையின் பேரில், அடியவர்க்கு பெருமாள் அருளும்!) பூவுலகில் வாழும் காலத்தில்,
குன்றாத ஞானத்தையும், அதன் பலனால் கிட்டிய மோட்ச சித்தியையும் குறிக்கிறது.
ஏனெனில், மற்ற எல்லா செல்வங்களும் நீங்கக் கூடிய செல்வங்கள் ஆதலால் !
இதற்கு உள்ளுறை பொருள் வருமாறு:-
பகவந் நாம ஸங்கீர்த்தநம் பண்ணிப் பகவதநுபவம் பண்ணினால் இவ்வுலகமெங்கும்
தேஹாத்மாபிமாநம் முதலிய தோஷங்களொன்று மின்றியே யொழியும்.
ஸத்வோத்தரமான காலத்தில்,
அநந்யார்ஹசேஷத்வம்,
அநந்யசரணத்வம்,
அநந்யபோக்யத்வமாகிற
ஆகார த்ரய ஜ்ஞானமுண்டாம்; (இது மூன்றாமடிக்கு)
பிரகிருதி மண்டலத்திலும் ஆத்ம வர்க்கங்கள் களித்துத் துள்ளும்; (இது நான்காமடிக்கு)
ஞானிகளுடைய போதிற்கமலவன்னெஞ்சினுள் தெய்வ வண்டெனப்படும்;
எம்பெருமான் வந்து புகுந்து சுகமாகக் கண் வளர்ந் தருள்வன்; (இஃது ஐந்தாமடிக்கு)
(தீரச் சரண முபகத:) என்றபடி –
சிஷ்யன் பிற்காலியாதே குருகுலத்திற் புக்கு நிலைத்திருந்து தனக்குத் தாரகங்களான ஆசிரியன்
பொற்பதங்களைப் பற்றிப் பிரார்த்திக்க,
உபதேச பாத்ர பூதரான சிஷ்யரைப் பரிபூரண ஞானிகளாக்குமவர்களாய்,
சிஷ்ய ஸுலபராய், இடைவிடாத பகவத் குணாநுபவத்தினால் பரிபுஷ்டரான ஆசார்யர்களுடைய
அவிச்சிந்நமான ஸம்பத்து மல்கும்படியைக் கூறுவன மற்ற மூன்றடிகள்.
——–
ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —
————————————————————————————————————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஒண்ணான வான மா மலை ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply