ஸ்ரீ முதல் திருவந்தாதி–அவதாரிகை -ஸ்ரீ ஸூதர்சன ஸ்தாபகர் கீர்த்தி மூர்த்தி ஸ்ரீ உ வே ஸ்ரீ நிவாஸ ஐயங்கார் ஸ்வாமிகள் –

ஸ்ரீமத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூநவே
யத் கடாஷைக லஷ்யானாம் ஸூ லபஸ் ஸ்ரீ தரஸ் சதா —

யத் கடாஷா தயம் ஜந்துர் புனர் ஜென்மதாம் கத-வாதி கேஸரி அழகிய மணவாள ஜீயர்

கலிவைரி க்ருபா பாத்ரம் காருண்யைக மஹா ததிம்
ஸ்ரீ கிருஷ்ண பிரவணம் வந்தே க்ருஷ்ண ஸூரி மஹா குரும்-

கலி வைரி தாஸர் -நம்பிள்ளை கருணைக்குப் பாத்ரபூதர்
காருண்யத்துக்கு ஒரே கடல்
ஸ்ரீ கிருஷ்ணனிடம் ஈடுபட்ட ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகளை வணங்குகிறேன் –

தன்மை சிங்கம் ரோகிணி நாள் தழைக்க வந்தோன் வாழியே
தாரணியில் சங்க நல்லூர் தானுடையோன் வாழியே
புன்மை தவிர் திருவரங்கர் புகழ் உரைப்பான் வாழியே
பூதூர் எதிராசர் தாள் புகழுமவன் வாழியே
மன் புகழ் சேர் சடகோபர் வளம் உரைப்பான் வாழியே
மறை நாலின் பொருள் தன்னைப் பகுத்து உரைத்தான் வாழியே
அன்புடன் உலகாரியர் தம் அடி யிணையோன் வாழியே
அபய பிரத ராசர் தாள் அனவரதம் வாழியே –

————————————————————–

துலாயாம் ஸ்ராவணே ஜாதம் காஞ்ச்யாம் காஞ்சன வாரி ஜாத்
த்வாபரே பாஞ்ச ஜன்ய அம்சம் ஸரோ யோகி நமாஸ்ரயே

செய்ய துலா ஓணத்தில் செகத்து உதித்தான் வாழியே
திருக்கச்சி மா நகரம் செழிக்க வந்தான் வாழியே
வையம் தகளி நூறும் வகுத்து உரைத்தான் வாழியே
வநச மலர்க் கருவதனில் வந்த மைந்தன் வாழியே
வெய்ய கதிரோன் தன்னை விளக்கிட்டான் வாழியே
வேங்கடவர் திருமலையை விரும்புமவன் வாழியே
பொய்கை முனி வடிவழகும் பொற் பதமும் வாழியே
பொன் முடியும் திரு முகமும் பூதலத்தில் வாழியே

முக்தி தரும் நகர் எழில் முக்யமாம் கச்சி
காசி முதலாய நன்னகரி எல்லாம் கார் மேனி அருளாளர் கச்சி நகருக்கு ஒவ்வா
ஸத்ய விரத ஷேத்ரத்தில் சொன்ன வண்ணம் செய்த -யதோத்தகாரீ ஸந்நிதியில் பொற்றாமரைக் குளத்திலே பதும மலரில் ஸ்ரீ பாஞ்ச ஜன்ய அம்சமாக
ஐப்பசி திருவோணத் திரு நாளில் திரு அவதரித்தவர்

எம்பெருமானும் அவனுடைய பாரி ஷதர்களும் வருவதை படை போர் புக்கு முழங்கும் அப்பாஞ்ச ஜன்யம் போல் மற்ற ஆழ்வார்கள் திரு அவதரித்து அருளப் போவதைக் காட்டி அருளினார்

ஸ கோஷா தார்த்ரஷ்டாராணாம்

ஹ்ருதயாநி வயதாரயத் -பர மதஸ்தர்களின் ஹ்ருதயங்களைப் பேதித்து பரத்வ நிர்ணயம் செய்து அருளினார்

யோ ப்ராஹ்மாணம் விததாதி பூர்வம் யோ வை வேதாம்ஸ் ச ப்ரஹ்ணோதி தஸ்மை -பத்மத்தில் அவதரிப்பித்து -தமிழ் மறைகளை உபதேசித்து அருள

பரகால கலியினால் –செந்தமிழ் பாடுவார் –
உலகம் படைத்தான் கவி -(திருவாய் -3-9-10-)படைத்தான் கவியாகிய நம்மாழ்வாரால் –செஞ்சொற் கவிகாள் -என்றும்
இன் கவி பாடும் பரம கவிகள் என்றும் பாடப்பட்ட பெருமையும்
முதல் ஆழ்வார்கள் மூவரில் முதல்வரான பெருமையும்

(முதலாவார் மூவரே -அம்மூவருள்ளும் முதலாவான் மூரி நீர் வண்ணன் போலவே பொய்கையை நிரூபகமாக உடையவர்)
திரு வோணத்தான் உலகு ஆளும் என்பார்களே -பெரியாழ்வார் -பெருமையும் கொண்டவர் –

ஓடித் திரியும் பரம யோகி –யோக அப்யாஸத்தால் நீண்ட காலம் எழுந்து அருளி –

மண்ணுய்ய -மண்ணுலகில் மனுஷர் உய்ய -வன் பெரு வானகமும் உய்ய -அமரர் உய்ய
ஸ்ரீ வைஷ்ணவ தர்மத்தை பரவச் செய்து -ஞான பிரதமரான ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் போலவே ஞானச் சுடர் விளக்கு ஏற்றி வாழ்வித்து அருளினார்

அடியார் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ என்று பாரித்து புலவர் நெருக்கு உகந்த அச்சுதன் திருமகளும் தானுமாகக் கூடி இருந்த பொழுது
அவர்கள் முன்னிலையிலே திருப் பல்லாண்டு போலவே பாடப் பெற்ற முதல் திவ்ய பிரபந்தம் அன்றோ

வருத்தும் புற விருள் மாற்ற எம் பொய்கைப் பிரான் மறையின் பொருளையும் செந்தமிழ் தன்னையும் கூட்டி ஒன்றத் திரித்து அன்று எரித்த திரு விளக்கு
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டிய சொல் மாலை என்ற பெருமை -ஆராயும் சீர்மைத்தோ –
புற மதஸ்தர் பிடறியைப் பிடித்துத் தள்ளி ஜந்மாத் யஸ்ய யத -ஸர்வஞ்ஞத்வ ஸர்வ சக்தித்வ குண பூர்ணன்
வையம் வார் கடல் இத்யாதியால் லீலா விபூதியும்
சுடர் ஆழியான் -இத்யாதியால் நித்ய விபூதியும் அசாதாரண திவ்ய மங்கள விக்ரஹத்வமும்
பா மாலை பாடிக் கைங்கர்யம் செய்வதே பரம புருஷார்த்தம்
நெறி வாசல் தானேயாய் நின்றான் -உபாய உபேயமும் அவனே
இறையும் நிலனும் இரு விசும்பும் காற்றும் அறை புனலும் செந்தீயுமாவான் -ஸர்வ ஸரீரியாய் இருப்பவனே பரம புருஷோத்தமன் –
வாய் அவனை அல்லாதது வாழ்த்தாது —காணா கண் கேளா செவி -என்றும்
திருமாலை அல்லது தெய்வம் என்று ஏத்தேன் -என்றும்
மறந்தும் புறம் தொழாமை யாகிய ஸ்ரீ வைஷ்ணவ லக்ஷணம்

ஸ்ரீ மன் நாராயணன் பெருமையையும் அதற்கு எதிர்த்தட்டாக எடுக்கப் படும் எருத்துக் கொடியானுடைய எளிமையையும்
அரன் நாரணன் நாமம் ஆன் விடை புள் ஊர்தி உரை நூல் மறை உறையும் கோயில்
வரை நீர் கருமம் அழிப்பு அளிப்பு கையது வேல் நேமி உருவம் எரி கார் மேனி ஓன்று -என்று
ரூபமே வாஸ்யை தன் மஹிமா நம் வ்யாஸஷ்டே –உண்மையை உருவமே உணர்த்துமே
காணிலும் உருப்பொலார் -போல் அன்றே-

ரூபமே வாஸ்யை தன் மஹிமா நாம் வ்யாசஷ்டே -உண்மை மகிமைகளை உருவமே உணர்த்துமே
பச்சை மா மலை போல் மேனி இத்யாதி –விக்ரஹ வைலக்ஷண்யம்

கலி வைரி கிருபா பாத்ரம் காருண்ய ஏக மஹோ ததிம்
ஸ்ரீ கிருஷ்ண ப்ரவணம் வந்தே கிருஷ்ண ஸூரிம் மஹா குரும்

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளையே இதுக்கு இரண்டு வியாக்கியானங்கள் அருளிச் செய்துள்ளார் –

வையம் தகளியா -என்று தொடங்கி ஞானம் பிறந்த நிலையை வெளியிட்டு அருள
அன்பே தகளியா-என்று அந்த ஞானமே முற்றி பகுதியாகும் நிலையை அருளி –
அதுவே முற்றி அவனை விட்டு தரியாத பரமபக்தி விளைந்து இருக்கும் நிலையை வெளியிட்டு அருளினான்
மூன்றும் ஞான பக்தி சாஷாத்காரங்களை சொன்னவாறு –

——————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஸூதர்சன ஸ்தாபகர் கீர்த்தி மூர்த்தி ஸ்ரீ உ வே ஸ்ரீ நிவாஸ ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ முதலியாண்டான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading