ஸ்ரீ ஜெகந்நாதர் கோயில், இந்தியாவின், கிழக்கு கடற்கரையில், ஒடிசா மாநிலத்தில், புரி அல்லது பூரி கடற்கரை நகரத்தில் அமைந்த ஸ்ரீ வைணவத் திருக்கோயில் ஆகும். இக்கோயில் ஸ்ரீ ஜெகன்நாதர், ஸ்ரீ பலபத்திரர் மற்றும் ஸ்ரீ சுபத்திரைக்கு அர்பணிக்கப்பட்ட கோயிலாகும். முகம் மற்றும் கைகள் மட்டுமே காணும் வகையில் அமைந்த இக்கோயிலின் மூலவர்களான ஜெகன்நாதர், பலபத்திரர் மற்றும் சுபத்திரையின் திருமேனிகள் மரத்தால் ஆனவை. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இம்மூலத் திருமேனிகள் உரிய சடங்குகளுடன், புதிய மரத்தால் செதுக்கி அமைக்கப்படும்.
இக்கோயில் 12ஆம் நூற்றாண்டில் கீழைக் கங்கர் குல அரசன் ஆனந்தவர்மன் சோடகங்கனால் கட்டப்பட்டது. இக்கோயிலின் மூலவர்களான ஜெகந்நாதர், பலபத்திரர், சுபத்திரை தனித் தனியாக மூன்று தேர்களில் ஏறி ஊரை ஊர்வலம் வரும் நிகழ்வான ரத யாத்திரை திருவிழா ஆண்டிற்கு ஒரு முறை, ஆடி பௌர்ணமி அன்று துவங்கி ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது.
சைதன்ய பிரபு, புரி ஜெகந்தாதரால் கவரப்பட்டு பல ஆண்டுகள் புரியில் வாழ்ந்தவர். ஜெயதேவர் மற்றும் சாது ராமானந்தரும் இக்கோயிலுடன் தொடர்புடையவர்..
மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசாவில் வைணவ பக்தி நெறியைப் பரப்பிய இவர் ‘ஸ்ரீசைதன்ய மகா பிரபு’ என்று அழைக்கப்பட்டார்.இவரது இயற்பெயர் கௌரங்கன் என்பதாகும். இல்வாழ்வில் ஈடுபட்ட இவர் தம் 25ம் வயதில் இல்வாழ்வைத் துறந்து இறைவன் திருப்பணிக்கு தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். கிருஷ்ணன் அல்லது ஹரி என அழைக்கப்படும் புருஷோத்தமன் மேல் ஆழ்ந்த நம்பிக்கையும் அன்பும் கொள்ள வேண்டும் என்பது இவரது கருத்து. சடங்குகளிலிருந்து விடுபட்டு, ஆடிப்பாடி உணர்வுப் பிழம்பாய் இறைவனின் அருள் வெள்ளத்தில் திளைக்க வேண்டும். கண்ணனை வழிபட்டு, குருவைப் பணிந்து பணிபுரிந்து வந்தால் மாயையில் இருந்து விடுபட்டு இறைவனின் திருவடிகளை அடையலாம் என்றார்.
சைதன்யர் புரி ஜெகன்நாதர் மீது ஆழ்ந்த பக்தி கொண்டிருந்தார்.
உலகப் புகழ் வாய்ந்த பூரி ஜெகநாதர் கோயில் தேரோட்டத் திருவிழா ஆண்டு தோறும் 9 நாட்கள் நடைபெறும். தேரோட்டத் திருவிழாவில், இலட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் நாடு முழுவதிலிருந்து கலந்து கொள்கிறார்கள்.
தேரோட்டத் திருவிழாவை முன்னிட்டு, 16 சக்கரங்களைக் கொண்ட சிவப்பு, மஞ்சள் நிறத் தேரில் உற்சவ மூர்த்தியான பூரி ஜெகன்நாதரும், 14 சக்கரங்களை கொண்ட சிவப்பு, பச்சை நிறமுடைய தேரில் பலபத்திரரும் 12 சக்கரங்கள் கொண்ட சிவப்பு, கறுப்பு நிறத் தேரில் சுபத்ரா தேவியும் எழுந்தருள்வர்.
பாரம்பரிய வழக்கப்படி, தேரோடும் ‘ரத்ன வீதி’யைத் தங்கத் துடைப்பத்தால் பூரி நகர மன்னர் கஜபதி பெருக்கிச் சுத்தம் செய்வார். முதலில் பலபத்திரர் தேரும், அதன் பின்னர் சுபத்ரா தேவி எழுந்தருளிய தேர்கள் புறப்பட்ட பின்பு, இறுதியாக ஜெகன்நாதர் எழுந்தருளிய தேர் புறப்படும்.
குண்டிச்சா கோவில் நோக்கிச் செல்லும் ரத யாத்திரியின் ஒரு பகுதியாக, வழியில் உள்ள மவுசிமா கோவிலில் ஜெகன்நாதர் ஓய்வு எடுப்பார். அங்கிருந்து மீண்டும் தேர்கள் புறப்பட்டு புரி ஜெகன்நாதர் கோயிலை வந்தடையும்.-
தேரோட்டத்திற்காக ஆண்டுதோறும் 45 அடி உயரமும் 35 அடி அகலமும் கொண்ட புதிய தேர் மரத்தால் கட்டப்படுகிறது.
ஜரா என்ற வேடன் எய்த அம்பு பட்டு கிருஷ்ணர் மரணத்தை தழுவினார், பின்னர் அவரது உடல் ஒரு பெரிய மரக்கட்டை போல ஆனது. புரியை ஆண்டு வந்த இந்திரத்துய்மன் எனும் அரசனின் கனவில் கிருஷ்ணன் கூறியவாறு, புரி கடலில் மிதந்து வரும் ஒரு பொருளைக் கொண்டு சிலையை செதுக்குமாறு பெருமாள் கூறினார். ஒரு அந்த பெரிய மரக்கட்டை கடலில் மிதந்து வந்தது. அதைக் கொண்டு காவலர்கள் எடுத்துச் சென்று அரசனிடம் ஒப்படைத்தனர். அரசன் அந்த மரக்கட்டைக்கு பெரிய பூஜைகள் நடத்தி தச்சர்களை அழைத்து பெருமாள் சிலை செய்யும்படி கூறினார். தச்சர்களின் தலைவர் சிலை செய்வதற்காக அந்த மரத்தில் உளியை வைத்தவுடன் உளி உடைந்துவிட்டது. அப்போது அவர் முன்பு பெருமாள் ஒரு முதிய தச்சனைப் போல வேடமணிந்து தோன்றினார். அரசனிடம் 21 நாட்களில் இந்த வேலையை முடித்து தருவதாகவும், அதுவரை தான் வேலைசெய்யும் அறையை யாரும் திறக்கக் கூடாது என்றும் கூறினார். அதற்கு அரசனும் ஒப்புக்கொண்டார். 15 நாட்கள் அந்த அறையின் உள்ளிருந்து உளிச்சத்தம் கேட்டது. எனவே அரசன் வேலை மும்முரமாக நடக்கிறது என எண்ணி அந்த அறைப்பக்கம் போகவில்லை. அதையடுத்து மூன்று நாட்கள் சத்தமே இல்லை. இதனால் தச்சர் தூங்கிவிட்டாரோ என எண்ணி, அரசன் அவசரப்பட்டு கதவைத் திறந்து விட்டான். உடனே தச்சர் கோபமடைந்தார். மூன்று நாட்கள் சத்தம் வரவில்லை என்றதும் எனது அறைக்கதவை திறந்துவிட்டாய். எனவே இந்தக் கோயிலில் நீ ஸ்தாபிக்கும் சிலைகள் அரைகுறையாகவே இருக்கும். அப்படி இருந்தாலும் பரவாயில்லை. அப்படியே பிரதிஷ்டை செய்துவிடு. இந்த கோயிலுக்கு வருபவர்கள் சிலையைப் பார்த்துவிட்டு பொறுமையை கடைபிடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செல்வார்கள் என்று அருள்பாலித்தார். அந்த அறையில் வேலை முடியாத நிலையில் ஜெகந்நாதர், பலராமன், சுபத்திரா ஆகியோரின் சிலைகள் இருந்தன. அந்த சிலைகளையே அரசர் பிரதிஷ்டை செய்தார்.
இந்திர தையுமாவின் காலத்திற்கு பிறகு அவர் கட்டிய பழைய கோயில் பாழடைந்து விட்டது. அதன்பிறகும் அந்த இடத்தில் பல கோயில்கள் கட்டப்பட்டன. அவற்றையும் கடல் மூழ்கடித்து விட்டது. தற்போதைய கோயில் ஏறக்குறைய கி.பி. 1135இல் அரசர் அனந்தவர்மனால் துவக்கப்பட்டு, 1200ம் ஆண்டில் இவரது பேரன் அனங்காபி மாதேவ் என்ற அரசனால் முடிக்கப்பட்டது. இது பஞ்சரத முறைப்படி அமைக்கப்பட்ட ஆலயமாகும். இவ்வாலயத்தின் மேற்கில் எட்டு உலோகக் கலவையால் செய்யப்பட்ட நீலச்சக்கரம் உள்ளது. ஆலயக் கொடிமரம் ஏழைகளுக்கு அருள்பவன் என்னும் பொருளில் பதீதபவன் பாவனா என்று அழைக்கப்படுகிறது. இவை இரண்டையும் வணங்கினாலே ஜெகந்நாதரின் அருளைப் பூரணமாகப் பெறலாம் என்கிறார்கள். இராமாயணத்தில் இராமபிரானும், மகாபாரத்தில் பாண்டவர்களும் இங்கே வந்து வேண்டிக்கொண்டதாக புராணங்கள் கூறுகிறது.
பூரியில் கருமாபாய் என்ற பக்தை வசித்தாள். அவளுக்கு சோதனைகள் பல இருந்தும் தினமும் அதிகாலையில் கோயிலுக்குச் சென்று ஜெகந்நாதப்பெருமாளை தரிசனம் செய்த பின்னே, வேலைகளைத் தொடங்குவாள். பாண்டுரங்க பக்தர் ஒருவர் கருமாபாயின் வீட்டிற்கு வந்தார். அவருக்கு அன்னமிடும் பாக்கியம் தனக்குக் கிடைத்ததை எண்ணி அவள் மகிழ்ந்தாள். உங்களுக்கு நேர்ந்த துன்பம் என்ன என்பதைக் கூறுங்கள், என்றார் வந்தவர். கருமாபாய், எனக்கு திருமணமாகி குழந்தை பிறந்தது. ஆனால், தாய்மை அடைந்த சில மாதங்களிலேயே என் கணவர் இறந்து விட்டார். இருந்தாலும், வைராக்கியத்துடன் அவனை வளர்த்து ஆளாக்கினேன். அவனுக்கு திருமணம் செய்து வைத்தேன். என் மகனும் ஒரு குழந்தைக்கு தந்தையானான். ஆனால், அப்போதும் என் வாழ்வில் விதி விளையாடியது. பேரன் பிறந்த சில மாதங்களிலேயே என் மகனும், மருமகளும் விபத்தில் சிக்கி இறந்து விட்டனர். தலையில் இடி விழுந்தது போல அதிர்ந்து போனேன். மிகுந்த சிரமத்திற்கிடையே என் பேரனை வளர்த்து வந்தேன். அப்போது பாழாய்ப் போன விதி என்னை விடுவதாக இல்லை. அவனும் நோய் வாய்ப்பட்டு இறைவனிடமே சென்று விட்டான். செய்வதறியாமல் நடை பிணமாகி விட்டேன். இதுவே, என் மன வேதனைக்கு காரணம், என்று கூறி அழுதாள். இந்த துக்க சம்பவங்களைக் கேட்ட பாண்டுரங்க பக்தர் மவுனமானார்.
அவர், இம்மண்ணில் பிறந்த உயிர் ஒருநாள் இறந்து தான் ஆகவேண்டும் என்பது விதி. இதிலிருந்து ஒருவரும் தப்பிக்க முடியாது. கடவுள் கொடுத்த இப்பிறவியைப் பயனுள்ளதாக்க வேண்டியது நம் கடமை. அதனால், பாண்டுரங்கனைத்தவிர வேறெந்த சிந்தனைக்கும் இடம் தராதீர்கள். உங்கள் கைகள் இரண்டும் அவனுக்கே பணி செய்யட்டும். கால்கள் அவன் திருக்கோயிலையே நாடட்டும். மனம் அந்த ரங்கனின் திருவடித் தாமரைகளையே சிந்தித்திருக்கட்டும், என்று ஆறுதல் வார்த்தை கூறினார். தான் கொண்டு வந்திருந்த பாலகிருஷ்ணன் விக்ரஹத்தை அவளிடம் கொடுத்த பக்தர், அம்மா! இந்த உலகில் நம்மோடு வரும் உறவுகளெல்லாம் தற்காலிகமானவையே. இந்த நீலமேக சியாமள வண்ணனே நமது நிரந்தர உறவினன். அவனே தாயாக, தந்தையாக, பிள்ளையாக, நண்பனாக இருந்து எப்போதும் காத்து நம்மைக் கரைசேர்ப்பவன், என்றவர், ஒரு மந்திரத்தையும் உபதேசம் செய்து, அதை தினமும் ஓதி மனச்சாந்தி பெறும்படி கூறி புறப்பட்டார்.
அன்றுமுதல் கருமாபாயும் சின்னக் கண்ணனின் நினைப்பிலேயே மூழ்கினாள். பாசம் மிக்க தாயாக, அந்தக் கண்ணன் சிலையை மடியில் வைத்துக் கொள்வாள். காலையில் துயில் எழுந்ததும் கண்ணனை நீராட்டுவாள். பட்டுச் சட்டை அணிந்து அலங்காரம் செய்வாள். கன்னத்தில் அன்போடு முத்தமிடுவாள். பால், அன்னம் வைத்து பாட்டுப் பாடி ஆராதனை செய்வாள். இதுவே அவளின் அன்றாடப் பணியாக மாறியது. ஒருநாள், அவள் பொழுது புலர்ந்தது தெரியாமல் ஏதோ அசதியில் அயர்ந்து தூங்கிவிட்டாள். கண் விழித்ததும் கண்ணன் ஞாபகம் வந்துவிட்டது. குளிக்காமலேயே அடுப்படிக்கு சென்று, பால் காய்ச்ச ஆயத்தமானாள். அப்போது, கருமாபாய்க்குத் தெரிந்த பெரியவர் ஒருவர் தற்செயலாக வந்தார். அவள் குளிக்காமல் அடுப்படியில் பால் காய்ச்சுவதைப் பார்த்து, பக்திக்கு ஆச்சாரம் மிக முக்கியம் என்பது தெரியாதா? காலையில் குளித்த பின் தான் பகவானுக்குப் பிரசாதம் செய்ய வேண்டும் என்பது கூட தெரியாமல் பாவம் செய்கிறாயே! என்றார்.
ஐயா! எங்கள் வீட்டுக் குட்டிக்கண்ணன் எழும் நேரமாகி விட்டது. பாவம்! குழந்தைக்குப் பசிக்குமே என்று குளிக்காமலேயே அடுப்படிக்கு வந்து விட்டேன், என்றாள். கருமாபாயின் பக்தியை உலகுக்கு உணர்த்த ஜெகந்நாதர் திருவுள்ளம் கொண்டார். அன்றிரவு கோயில் அர்ச்சகர் கனவில் தோன்றிய அவர், இவ்வூரில் கருமாபாய் என்னும் பரம பக்தை ஒருத்தி இருக்கிறாள். அவளிடம்சென்று, ஆச்சாரத்தை விட பக்தி தான் முக்கியம். குளிக்காமல் செய்தாலும், அவள் படைக்கும் பால் பிரசாதத்தை விருப்பத்தோடு நான் ஏற்று மகிழ்கிறேன், என்று தெரிவிக்கும்படி ஆணையிட்டார். பொழுது புலர்ந்ததும் கருமாபாயின் வீட்டுக்கு அர்ச்சகர் புறப்பட்டார். தான் கனவில் கண்ட காட்சியை அவளிடம் தெரிவித்தார். இவ்விஷயத்தைக் கேட்டதும் அவள் கண்கள் குளமானது. பூஜை அறைக்குச் சென்று, கண்ணனின் விக்ரஹத்தை மார்போடு அணைத்துக் கொண்டாள். அப்போது, ஜெகந்நாதப் பெருமான் சங்கு, சக்கரத்தோடு காட்சியளித்தார்.
புரி ஜகந்நாதர் கோவில் வளாகத்தில் தென்மேற்கு மூலையில் ரோஹிணி குண்ட் அருகே விமலா தேவி (பிமலா தேவி) சக்தி பீட சன்னதி உள்ளது. இது சார் சக்தி தாம்கள் என்றும் ஆதி சக்தி பீடங்கள் என்றும் அழைக்கப்படும் நான்கு முக்கியமான சக்தி பீடங்களில் ஒன்றாகும். புரி செல்வோர் தவறாமல் இந்த தேவியையும் வழிபடுகிறார்கள்.
ஆதி சங்கரர் நிறுவிய நான்கு பீடங்களில் ஒன்றான கோவர்தன பீடம் புரியில் அமைந்துள்ளது.
புவனேசுவரத்திலிருந்து 60 கி.மீ தொலைவில் புரியில் உள்ள இவ்வாலயத்திற்குச் செல்ல மும்பை, தில்லி, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, அகமதாபாத், ஹைதராபாத் போன்ற முக்கிய நகரங்களிலிருந்து தொடருந்து வசதிகள் உள்ளன.
———-
ஸ்ரீ ஜெகதாச்சார்ய ஸ்ரீராமாநுஜ அநு யாத்திரை – -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் / திருப் புல்லாணி ஸ்ரீ ஸூந்தரராஜ ஸ்வாமிகள் -தொகுத்து அருளிச் செய்தது –ஐந்தாம் பாகம் —ஸ்ரீ பூரி ஜெகந்நாத க்ஷேத்ர மஹிமை —
வர்ஷாணாம் பாரத சிரேஷ்ட தேஸாநாம் த்கால ஸ்ம்ருத
உத்கலஸ்ய சமோ தேச நாஸ்தி மஹீ தலே –வர்ஷன்களுக்குள் பாரதமும் தேசங்களில் உதகளமும் -ஒடிஷா -ஒப்பு உயர்வற்றவை –
உத்கல க்ஷேத்ரம் –சங்க க்ஷேத்ரம் –பூரி / பத்ம க்ஷேத்ரம் -கோனாரக் /சக்ர க்ஷேத்ரம் -புவனேஸ்வரம் /கதா க்ஷேத்ரம் -ஜாஜபுரா -ஆகியவற்றை உள்ளடக்கியது
இவை அனைத்தும் -100-சதுரமைல் பரப்பு -/பூரி -5-க்ரோசங்கள் -10-சதுரமைல் பரப்பு /
-6-சதுரமைல் கடலுக்குள்ளும் -4-சதுரமைல் நிலத்திலும் சக்ர வடிவத்தில் உள்ளது –20-கிலோ மீட்டர் சுற்றளவு –
சங்கம் தோன்றிய நாள் -மார்கழி தேய்பிறை பஞ்சமி -அன்று வளம் வருவது மரபு –
பாத்ம ப்ரஹ்ம ஸ்கந்த புராணங்கள் இதில் மஹாத்ம்யம் கூறும் –
சார்தாம் –ஸ்ரீ பத்ரீ/ஸ்ரீ பூரி/ ஸ்ரீரங்கம்/ஸ்ரீ த்வாராகா /நான்கு எல்லைகளில் -உள்ள புண்ய ஷேத்ரங்கள் /பரம பாவனம் இங்கு யாத்திரை செல்வது
ஸ்ரீ மன் நாராயணன் விடியற்காலையில் ஸ்ரீ பதரியில் நீராடி -ஸ்ரீ த்வாராகாவில் திருவஸ்த்ரம் தரித்து /ஸ்ரீ புரியில் திரு அமுது செய்து திருவரங்கத்தில் கண் வளர்ந்து அருளுகிறார் –
ஸ்ரீ பூரி -பல பெயர்களுடன் விளங்குகின்றது –
1–ஸ்ரீ க்ஷேத்ரம் –ஸ்ரீ மஹா லஷ்மியின் கேள்வன் ஸ்ரீ புருஷோத்தமன் உறையும் தேசம் –
2–சங்க க்ஷேத்ரம் -சங்க வடிவில் இருப்பதால்
3—புருஷோத்தம க்ஷேத்ரம் -அபுருஷன் -அசேதனங்கள்-/புருஷன் பத்த -கட்டுண்ட ஜீவர்கள் /உத்புருஷன் -முக்த ஜீவர்கள் /உத்தர புருஷன் நித்ய ஸூ ரிகள்/
இவர்களை விட வ்யாவருத்தமானவன் புருஷோத்தமன் உத்தம புருஷன் -ஸ்ரீ கீதை -15-புருஷோத்தம வித்யை விளக்கும் –
4–நீலாஸலம் -நீலமலையில் உள்ளபடியால் இப்பெயர் -இதுவே புராதானப் பெயர்
5–பூஸ்வர்கம்–ஸ்வர்க்கம் போலெ மிதமான தட்ப வெப்பமும் இன்பமும் இங்கு எப்போதும் இருக்கிறபடியால் பூ லோக ஸ்வர்க்கம் –
6—நரஸிம்ஹ க்ஷேத்ரம் -இத் திருக் கோயில் கட்டிய பின்பு ப்ரஹ்மா ஒரு யாகம் செய்ய ஸ்ரீ நரஸிம்ஹர் உக்ர வடிவுடன் தோன்றி பின்பு சாந்தம் அடைந்ததால் இப்பெயர் –
ஸ்தல புராணம் –
க்ருத யுகத்தில் இந்த்ரத்யும்னன் என்னும் அரசன் — அவந்தி நகரை தலைநகரமாக கொண்ட மலேயா தேச அரசன் -தனது குல குருவினிடம்
பகவானை நேருக்கு நேர் தரிசிக்கும் பெருமையையுடைய புண்ய க்ஷேத்ரம் கண்டுபிடித்து கூற பிரார்த்திக்க -குருவும் ஷேத்ராடனம் போய்வரும் யாத்ரீகர்கள் இடம் வினவ
அதில் ஒருவர் -நான் அனைத்து புண்ய ஷேத்ரங்களையும் தரிசிக்கும் பாக்யம் பெற்றவன் –
பாரத வர்ஷத்தில் உத்கல-ஒடிஷா தேசத்தில் கடலுக்கு வடக்கே இருப்பது புருஷோத்தம க்ஷேத்ரம் -அங்கு அடர்ந்த கானகத்தின் நடுவே நீலமலை உள்ளது –
அங்கு இருக்கும் கல்பவிடம் என்னும் ஆலமரத்தின் மேற்கே ரோஹிணி குண்டம் புண்ய தீர்த்தம் உள்ளது -அதின் கிழக்கே ஒளிவிடும் நீல மணியால் ஆன
ஸ்ரீ வாசுதேவர் கோயில் கொண்டுள்ளார் -தீர்த்தத்துக்கு மேற்கே சைபர் தீபக் என்னும் ஆஸ்ரமத்தில் இருந்து சற்று தொலைவில் ஜகந்நாதர் கோயில் கொண்டுள்ளார்
ஒரு முழு ஆண்டு கைங்கர்யம் செய்யும் பாக்யம் பெற்றேன் -மன்னா தங்கள் அங்கு சென்றால் பகவானை நேரே தரிசிக்கலாம் -என்று கூறி மறைந்தார் –
அரசன் குலகுருவிடம் நீலாசலம் சென்று ஜெகந்நாதனை தரிசித்து மோக்ஷம் பெற உதவ வேண்ட –
குருவும் தன தம்பி வித்யாபதியை முதலில் அங்கு சென்று விபரம் அறிந்து வராகி சொன்னார் –
வித்யாபதியும் விரைவில் மஹா நதியை அடைந்து அனுஷ்டானங்களை முடித்து ஏகாம்பர கானனம் என்ற புவனேஸ்வரத்தை தாண்டி
நீலாத்ரியைக் கண்டு -மலை உச்சியில் கல்பவடத்தை தரிசித்தார் -இரவாகிவிட்ட படியால் இருட்டில் அடர்ந்த காட்டில் தங்கினார் –
சிலரின் குரல் கேட்டு தொடர்ந்து சென்ற பொது ஸபர் தீபக் –மலைவாசி -ஆஸ்ரமத்தை அடைந்தார் -அங்கு இருந்த விச்வா வசூ-இவரை வரவேற்று பிரசாதம் அளித்தார் –
இந்த்ரத்யும்னன் இங்கு வந்து தங்குவார் என்று கோபி பட்டு இருக்கிறேன் -போவோம் வாரும் என்று சொல்லி கூட்டிப் போக பாதை குறுகி முள் நிறைந்து இருக்க
விடியலில் புண்யமான ரோஹிணி குண்டத்தை தரிசித்தனர் -பின் கல்பவடத்தை வணங்கி இவ்விரண்டுக்கும் நடுவே உள்ள தோப்பின் உள்ளே சென்று பேர் ஒளியுடன் உள்ள
பகவானை வியந்து வணங்கினார் -பின் வேகமாக மலை இரங்கி ஆஸ்ரமத்தை அடைந்து விச்வாவசூ அளித்த அமானுஷ்யமான சுவை கொண்ட மஹா பிரசாதத்தை உண்டார் –
இந்திரன் சமைத்து ஜெகந்நாதனை ஆராதித்து சேஷமான பிரசாதம் -இதை உண்டால் பாபங்கள் எல்லாம் தொலையும்-என்று ஜெகந்நாதனின் பிரசாத பெருமையை உரைக்க
வித்யாபதி -எங்கள் மன்னர் இங்கு வந்து நீல மாதவனை தரிசித்து ஒரு பெரிய கோயிலை எழுப்பி சிறப்பான பூஜை முறைகளையும் ஏற்படுத்துவார் -என்றார் –
ஆனால் விச்வாவசூ -மன்னார் வருவார் -ஆனால் இப்போது இருக்கும் பெருமான் அவர் கண்ணுக்கு புலப்படாமல் மறைந்து விடுவார் -மன்னர் உபவாசம் இருக்க
பகவான் வேறு மர உருவத்தில் தோன்றி ப்ரஹ்மாவால் ஸ்தாபிக்கப் பட்டு பின் நெடும் காலம் காட்சி கொடுப்பார் -ஆனால் இவற்றை மன்னன் இடம் அறிவிக்க வேண்டாம் என்றார் –
வித்யாபதியும் விடை பெற்று மீளவும் அவந்தி புரியை அடைந்து பிரசாதத்தை மன்னனுக்கு கொடுக்க உடனே அங்கு செல்ல விருப்பம் கொண்டான்
தெய்வ சங்கல்பத்தால் நாரத ரிஷி அங்கு வந்து மன்னனின் விருப்பம் ஈடேறும் என்று ஆசீர்வதித்தார் -ஜ்யேஷ்ட மாத பஞ்சமி திதி அன்று
நாரதர் ராணி பிரஜைகள் புடை சூழ தேரில் புறப்பட்டு மஹா நதி கரையை அடைந்து இருக்க உத்கல மன்னன் காண வர -இருவரும் ஒருவரை ஒருவர் நமஸ்கரிக்க
சூறாவளியால் நீல மாதவன் மண்ணால் மூடப்பட்டதை தெரிவிக்க -நாரதர் அனைத்தும் ப்ரஹ்மா கூறியபடியே நடக்கிறது –
பகவான் நான்கு உருவங்களோடு உனக்குத் தோன்றுவார் -நல்லதே நடக்கும் -என்று சொல்லி நீலாசலத்தை அனைவரும் அடைய
உக்ரமான நரஸிம்ஹ விக்ரஹத்தை கண்டனர் -நீல மாதவன் மண்ணால் மூடப் பட்டு இருப்பதையும் கண்டனர் -நரசிம்ஹ பெருமானை மேற்கு முகமாக எழுந்து அருள பண்ணி
யாக சாலை அமைத்து ஆயிரம் அஸ்வமேத யாகங்களை செய்ய
மன்னன் தியானத்தால் – -ஸ்வேத த்வீபத்தை கண்டு -அது ஸ்படிகக் கல்லால் ஆக்கப்பட்டு பாற் கடலால் சோள பட்டுள்ளதை கண்டான்
அங்கு ஆதிசேஷ பீடத்தில் ஸ்ரீ மன் நாராயணன் சதுர்புஜனாய் எழுந்து அருளி இருந்தான் -மன்னன் இந்த கனவை கூற நாரதர் –
பெருமாள் எழுந்து அருளும் தருணம் நெருங்கி விட்டது -அவர் தாரு-உரு விடுக்க இருக்கிறார் -கடற்கரைக்கு செல்வோம்-என்றார்
கிழக்கு கடலில் ஒளிவிடும் ஒரு மரம் உருவாக்கி மிதந்து வர -அவ்விடம் சக்ர தீர்த்தம் -எனப்படுகிறது -அதை ராஜா ராணி பக்தியுடன் பெற்றுக் கொண்டனர்
அசரீரி வாக்கு -இதை வஸ்த்ரத்தில் சுற்றி வையும் -ஒரு தச்சன் வந்து செதுக்குவார் -யாரும் உள்ளே செல்லக் கூடாது –
செதுக்கும் ஒலி வெளியில் கேட்க்காதபடி வாத்தியங்கள் முழங்க வேண்டும் -என்று சொல்ல
அரசனும் அதன் படியே செய்ய -தச்சன் வந்து செதுக்க -15-நாட்கள் கழிய ஒலி நிற்க -ராணி குண்டீஸா கதவைத் திறந்து பார்க்க விரும்ப அரசன் தடுத்தும் கேளாமல்
ராணி அறையைத் திறக்க ஆணை இட-திறந்த பொது தச்சன் அங்கு இல்லை -விக்ரஹங்கள் பாதி நிலையில் இருக்க -அசரீரி வாக்கியம் –
இந்த எளிய நிலையிலேயே தர்சனம் கொடுப்பார் என்று கூற -அன்று முதல் ஜெகந்நாதப் பெருமான் அவ்வண்ணமே இங்கு கோயில் கொண்டுள்ளார் –
ஸ்ரீ புருஷோத்தமன் இவ்வுருவத்தில் இருக்கும் ரஹஸ்யம் –
கண்ணன் ஸ்ரீ மத் துவாரகையில் அஷ்ட மஹிஷிகளுடன் ஆனந்தமாக ராஜ்ஜியம் ஆண்ட போதும் -கோகுல பெண்டிர்களையே திரு உள்ளத்தில் நிறைந்து இருக்க
அஷ்ட மஹிஷிகளும் ரோஹிணி தேவியை வினவ -ரசமான லீலைகளே காரணம் -என்று சொல்ல அவற்றை மஹிஷிகள் கேட்க விருப்பம் கொள்ள
ரோஹிணி மாதா -கூறுகிறேன் ஆனால் கண்ணனும் நம்பி மூத்த பிரானும் வராமல் பார்த்துக் கொள்ளுங்கோள் -என்றார் –
காவலுக்கு ஸ்ரீ ஸூபத்ரா தேவியை நிறுத்தி விட்டு
அனைவரும் கதை கேட்டு லயித்து இருக்க
அருகில் இருவர் வந்து நிற்பதை உணராமல் இருக்க -கதை கேட்டு மூவரும் மெய் மறந்து கை கால்கள் சுருங்கி விழிகள் விரிய நின்று கொண்டு இருக்க
நாரதர் அந்த சேவையைக் கண்டு ஆனந்த கூத்தாட -மூவரும் உணர்ந்து இயல்வு நிலையை அடைய முயல நாரதர் தடுத்து
தேவர்ர்ர் ஆனந்தத்தில் மயங்கி நிற்கும் இந்நிலையை தரிசித்தால் பக்தர்கள் பாபங்கள் தொலைந்து முக்தி அடைவார்கள் –
இந்த எளிய திருக் கோலத்துடன் கோயில் கொண்டு அருள வேண்டும் என்று பிரார்த்திக்க
அதன் படியே பத்துடை அடியவர்க்கு எளியனான எம்பெருமான் இங்கே சேவை சாதித்து அருளுகிறார் –
கடைத் தலை சீய்த்த அரசன் –
கடைத்தலை சீய்க்கப் பெற்றால் கடுவினை களையலாமே–ரத்த யாத்திரைக்கு முன் பெருக்கிய அத்தேசத்து அரசன் புருஷோத்தமனுக்கு கல்யாணமே நடந்த ஐதீகம் –
தங்கத் துடைப்பத்தால் பெருக்குவது மரபு –காஞ்சிபுரம் சென்று ஸ்ரீ வராத ராஜனை தரிசித்த மன்னன் காஞ்சி மன்னன் மகளைக் கண்டு மையல் கொண்டான் –
இரு மன்னர்களும் சம்மதிக்க புருஷோத்தமன் ஸ்ரீ பூரி திரும்ப -முறையாக பேச காஞ்சி மன்னன் மந்திரியை அனுப்ப
அன்று ரத்த யாத்ரையாய் இருக்க -மன்னன் துப்புரவு செய்ய பொறுக்காத மந்திரி திரும்பி மன்னன் இடம் கூற பெண் கொடுப்பதில் தடை ஏற்பட்டது –
இதனை தனக்கு நேர்ந்த அவமானமாக கருதி பூரி மன்னன் காஞ்சீ நகரின் மேல் படை எடுத்தான் -ஆனால் அவன் படை சிறியது –
இரு மன்னர்களும் பூரி படை தோற்றால் ஜகந்நாதர் பலபத்ரர் ஸூ பத்ரா மற்றும் ஸூ தர்சனர் விக்ரகங்களை காஞ்சிக்கு கொடுத்து விட வேண்டும் என்றும்
காஞ்சி படை தோற்றால் அவர்கள் ஆராதிக்கும் விநாயகர் விக்ரஹத்தை புரிக்கு கொடுத்து விட வேண்டும் என்றும் சபதம் செய்தனர் –
புருஷோத்தமன் ஜகந்நாதர் இடம் தேவரீரது அருளால் அடியேனது சிறிய படை வெற்றி பெற வேணும் -என்று பிரார்த்தித்தான் –
அரசன் புறப்பட்ட போது ஜகந்நாதர் கருப்புப் பிறவியிலும் பலராமர் வெள்ளைப் பிறவியிலும் ஆரோஹணித்து -இரு வீரர்கள் போல் காஞ்சிக்கு சென்று
வழியில் ஒரு கிராமத்தில் தாக்கத்துக்காக ஒரு முதிய இடைப்பெண்ணிடம் மோர் வாங்கிக் குடித்தனர் –
கையில் காசு இல்லாமல் மோதிரத்தை காட்டி பணம் பெற்றுக் கொள்ளச் சொன்னார்கள் –
புருஷோத்தமன் படையோடு அவ்வழியே வர முதியவள் கொடுத்த மோதிரத்தைக் கண்டு வியந்து உருகினான்-
இரு வீரர்கள் உதவியால் வெற்றி பெட்ரா மன்னன் காஞ்சி இளவரசியை சிறையெடுத்து வந்து புரியில் துப்புரவு செய்யும் ஒருவனுக்கு மனம் முடிக்க சொன்னான் –
பக்தரான மந்திரி இளவரசியிடம் தனிமையில் பேசி -அவளின் பக்தியையும் மன்னனிடம் அவள் கொண்ட காதலையும் அறிந்து
அவர்களை சேர்த்து வைக்கும் தருணத்துக்கு காத்து இருந்து அடுத்த ரத்த யாத்திரையின் போது இளவரசியை மணக்க கோலத்தில் தயார் செய்து
மன்னன் தங்கத் துடைப்பத்தால் பெருக்க -மன்னா இவளுக்கு ஏற்ற பேருக்கும் மணமகனைத் தேடினேன் -அப்படிப்பட்டவர் நீர் ஒருவரே -எனக் கண்டு கொண்டேன் –
ஆகவே ஸ்ரீ ஜெகந்நாத பெருமாள் முன் நீரே மனம் செய்ய வேண்டும் என்று வேண்டிக் கொள்ள –
அரசனும் மந்திரியின் சமயோசித புத்தியைப் பாராட்டி கல்யாணம் செய்து கொண்டான் –
ஆகவே கடைத்தலை சீய்க்கப் பெற்றால் கடு வினையும் களையலாம் -கல்யாணமும் செய்து கொள்ளலாம் –
புண்ய தீர்த்தங்கள் —
1–மஹா நதி -கிழக்கு சமுத்திரம் -ஸ்ரீ கண்ணன் ஸ்ரீ கீதையில் ஸரஸாம் அஸ்மி சாகரம் -என்கிறான் –
அதன்படி இங்குள்ள கிழக்கு கடலே சக்ர தீர்த்தம் என்று கொண்டாடப் படுகிறது –
இங்கு தான் தாரு ப்ரஹ்மம் -சக்ர முத்திரையோடு தோன்றினார்
க்ருத யுகத்தில் பார்கவி என்னும் நதி கடலில் கலக்கும் இவ்விடத்தில் தான் பாங்கி முஹானா -பங்குனி சுக்ல துவாதசி அன்று தாரு ப்ரஹ்மம் தோன்றினார்
கடலில் இவ்விடத்தில் தான் இந்த்ரத்யும்னன் -ராஜா ராணி தாரு ப்ரஹ்மத்தைப் பெற்று பெருமானின் பிம்பத்தை வடிவு அமைக்க வேண்டினார்
கங்கா யமுனா கோதாவரி காவேரி தாமிரபரணி ஆகியவை இக்கடலிலே கலக்கின்றன –
2—இந்த்ரத்யும்ன சரோவரம் –இந்த்ரத்யும்ன மன்னன் பகவத் பிரதிஷ்டை செய்யும் போது ஆயிரம் பசுக்களை தானம் செய்தான் –
அவற்றின் குளம்பு பட்டு பள்ளம் ஏற்பட்டு மன்னம் தானம் கொடுத்த போது விழுந்த தீர்த்தத்தால் அது நிரம்பி இந்தக் குளம் ஏற்பட்டது
3–மார்க்கண்டேய சரோவரம் -ரிஷியின் வேண்டுகோளின் படி பகவான் பிரளய கடலில் ஆலிலைத் தளிரில் சயனித்து இருப்பதைக் காட்டி அருள
அன்று முதல் அந்த தீர்த்தத்தின் கரையிலேயே ரிஷி தவம் செய்து வந்தார் –
4—ஸ்வேத கங்கா –இங்கு ஸ்வேதா மாதவன் மற்றும் மத்ஸ்ய மூர்த்தியின் கோயில் உள்ளது -இது த்ரேதா யுகத்தில் வாழ்ந்த ஸ்வேத மன்னனால் தோற்றுவிக்கப் பட்டது –
5—ரோஹிணி குண்டம் -இது கோயிலுக்கு உள்ளே உள்ளது -கடந்த பிரளயத்தின் சிறிதளவு தீர்த்தம் இங்கு உள்ளது -அடுத்த பிரளயமும் இந்த தீர்த்தத்தில் இருந்தே உருவாகுமாம்
ப்ரஹ்மா இங்கே வந்த போது ஒரு காக்கை இதில் விழுந்து நான்கு கைகளோடு விஷ்ணு ஸ்வரூபம் பெற்று முக்தி அடைந்தத்தைக் கண்டார் –
ஜெகன்நாத் பூரி கோயிலின் அமைப்பு
இப்போது உள்ள கோயில் சோட கங்க தேவனால் கட்ட ஆரம்பிக்கப் பட்டு அநங்க பீமா தேவனால் -1200-ஆண்டு முடிக்கப் பட்டது
நில மட்டத்தில் இருந்து -214-அடி உயரத்தில் நீலாசலம் மலையில் உள்ள திருக் கோயில் –
-10.7-ஏக்கர் நிலப்பரப்பில் -20-அடி உயரமுள்ள செவ்வக வடிவில் -15-நூற்றாண்டில் கட்டப் பட்டு இரண்டு நீண்ட மதிள் சுவர்களால் சூழப் பட்டுள்ளது –
வெளி மதிள் -மற்றும் பிரகாரத்துக்கு மேக நந்த ப்ராசீரம் -665-.-640-அடி /உள் சுற்றுக்கு கூர்மபேதம் -420-.-315-அடி –
பிரதான கிழக்கு வாசல் -சிம்ம சிங்கம் துவாரம் / தெற்கு வாசல் அஸ்வ துவாரம் /மேற்கு வாசல் வ்யாக்ர துவாரம் /வடக்கு வாசல் ஹஸ்தி துவாரம் /
அந்த அந்த வாசல்களில் அவ்வவற்றின் உருவங்கள் பொறிக்கப் பட்டுள்ளன
கிழக்கு வாசலுக்கு வெளியே -36-அடி உயர அருணா ஸ்தம்பம் உள்ளது –
18-நூற்றாண்டில் கோனாராக்கில் இருந்து கொண்டு வந்து பிரதிஷடை செய்யப்பட இதன் உச்சியில் ஸூ ர்யனின் தேரோட்டியாக அருணன் அமர்ந்துள்ளார்
இத் திருக் கோயில் நான்கு பகுதிகளாக உள்ளது
1–போக மண்டபம் -பிரசாதம் கண்டு அருள பண்ணும் பெரிய மண்டபம் -60-/.-57-அடி -இதில் ஸ்ரீ கிருஷ்ண லீலைகள் அழகான சித்திரங்களாக வரைய பட்டுள்ளன
2–நட மண்டபம் -பெருமாளை உகப்பிக்க இசை நாட்டியம் நடக்கும் -70-/67-அடி மண்டபம்
3–ஜெகன் மோஹன மண்டபம் -முக சாலா –இங்கு தான் பக்தர்கள் நின்று கொண்டு தரிசிக்கும் இடம் -இதில் கருட ஸ்தம்பம் உள்ளது –
4–விமான மண்டபம் -இதுவே கர்ப்பகிரகம் -ரத்ன சிம்ஹாசனத்தில் -16–13–4-அடி / பலதேவர் -6-அடி உயரம் வெள்ளை நிறம்
ஸூபத்ரா -4-அடி உயரம் மஞ்சள் நிறம் / ஜகந்நாதர் -5-அடி உயரம் கருப்பு நிறம் / ஸூ தர்சனர் லஷ்மீ நீல மாதவர் சரஸ்வதி ஆகியோர் எழுந்து அருளி உள்ளனர்
குறிப்பிட்ட நேரத்தில் ரத்ன வேதிகையில் ஏறி இவ்வனைவரையும் வலம் வரலாம் –
திருக் கோயிலின் கைங்கர்ய பூஜாரிகள் –சுமார் -1000-பேர் உள்ளனர் -36-வகையான கைங்கர்யங்களை செய்கின்றனர் –
திருக் கோயிலுக்குள் இருக்கும் மற்ற தரிசன ஸ்தலங்கள்
1–பைசா பஹாசா -கிழக்கு வாசலில் இருந்து உள்ளே எரிச் செல்லும் -22-படிகள் பக்தர்களின் பாத தூளிபட்டுப் புனிதமானது –
யமதர்மராஜனும் கூட சாஷ்டாங்கமாக பிராணாயாமம் செய்யும் பெருமை பெற்றது
2–கல்பவடம்-அபீஷ்டங்களை வழங்கும் ஆலமரம்
3–முத்தி மண்டபம் -வேத விற்பன்னர்களின் த்யான மண்டபம் -16-கால் மண்டபம் -ப்ரஹ்ம சபா என்றும் வழங்கப்படும்
4–நரஸிம்ஹர் சன்னதி -முத்தி மண்டபத்துக்கு அருகே உள்ளது –
5–ஸ்ரீ தேவி பூ தேவி சந்நிதிகள் -இங்கு இருக்கும் மூலிகைச் சாற்றினால் வரைய பெட்ரா சித்திரங்களில் அனைத்து ஆழ்வார்கள் மற்றும் பகவத் ராமானுஜர் ஆகியோர் உள்ளனர்
6–கோய்லா மண்டபம் –ஸ்ரீ ஜெகந்நாதராது திருமேனி -12-ஆண்டுகளுக்கு ஒரு முறை புது தருவாள் செய்யப்படும் –
இந்த உத்சவம் நவ கலேவரம் எனப்படும் -பழைய திருமேனி இவ்விடத்தில் பூமிக்கு கீழே எழுந்து அருள பண்ணப் படும் –
7–ஆனந்த பஜார் -மஹா பிரசாதம் விநியோகிக்கப் படும் இடம் –
திருக் கோயிலுக்கு வெளியே இருக்கும் சந்நிதிகள் –
1–குண்டீஸா மந்திர -ராணி குண்டீஸாவின் பெயரால் -படா தாண்டா சாலையின் -க்ராண்ட் ரோட் –
ஒரு கோடியில் ஸ்ரீ ஜகந்நாதர் திருக் கோயிலும் மறு முனையில் குண்டீஸா மந்திரம் உள்ளது -ஆசியாவிலேயே மிகப் பெரிய சாலை இது தான் –
இந்த கோயிலில் தான் முதலில் தாரு ப்ரஹ்மத்தில் இருந்து விக்ரஹங்கள் செதுக்கப் பட்டன -ஆகவே பகவானின் பிறப்பிடம் இதுவே –
இவ்வளாகத்தில் தான் அரசன் ஆயிரம் அஸ்வமேத யாகங்கள் செய்தார் -ரத்த உத்சவத்தின் போது ஸ்ரீ ஜகன்னாநாதர் பலதேவர் ஸூ பத்ரா ஸ்ரீ ஸூ தர்சனர் ஆகியோர்
இங்கு தான் எழுந்து அருளி இருப்பர் –
2–யஜ்ஞ நரஸிம்ஹ தேவர் -குண்டீஸா மந்தரில் இருந்து இந்த்ரத்யும்ன சரோவர் போகும் வழியில் மஹாவேதி என்னும் இடத்தில் எழுந்து அருளி உள்ளார்
இங்கு தான் இந்த்ரத்யும்னன் மன்னன் இவரை பிரதிஷ்டை செய்து ஆயிரம் அஸ்வமேத யாகம் செய்த பின்னரே ஜகந்நாதர் தோன்றினார் –
இவருடைய திருமுகம் முன்னர் தரிசிக்க சாந்தமாகவும் மற்றொரு புறம் உக்ரமாகவும் இருக்கும் –
3–அலர்நாத் -20-மில் தூரத்தில் உள்ளது -ஆலால நாதன் -பெயருடன் -இவரே ஆழ்வார் நாதன் -ஆலங்கால் பட்டோர்க்கு ஆட்படுபவர்
ஸ்ரீ கேதன் என்பவர் தனது மகனான மது என்னும் சிறுவனிடம் கொதிக்கும் சக்கரைப் பொங்கலைத் தந்து அதனை உண்மையான அன்புடன்
பெருமானுக்கு அமுது செய்யச் சொல்ல அந்த சிறுவனும் செய்ய பெருமானின் திரு விரல்கள் சிவந்து இருப்பதை இன்றும் காணலாம்
இங்கு சைதன்ய பிரபு தரிசிக்க வந்த போது ஆச்ரித பாரதந்தர்யத்தை கேட்டு உருகி மயங்கி விழுந்து கிடந்த சுவடே இன்றும் காணலாம் –
4–சாக்ஷி கோபால் -15-மைல் தொலைவில் உள்ள சந்நிதி -கண்ணனின் கொள்ளுப் பேரன் வஜ்ரநாபரால் பிரதிஷ்டை -வ்ருந்தாவனத்தில் உள்ள மத மோஹனர் போலே-
ஐவரும் முதலில் பிரதான கோயிலில் இருக்க அனைத்து பிரசாதங்களை முன்னமேயே உண்டு முடிக்க -லீலா ரசமாக பிணக்கு ஏற்பட
பின்பு ஒரு முடிவுக்கு வந்து வெளியே கோயில் கொண்டுள்ளதாக ஐதிஹ்யம்
ஒரு அந்த இளைஞ்சனுக்கு பெண் கொடுக்க இசைந்த முதியவர் ஒருவர் பின்பு பானா வ்யவஹாரத்தால் மறுக்க அப்போது தன பக்தனுக்காக மக்கள் மன்றத்தில் சாக்ஷி சொல்லி
கல்யாணத்தை நடத்தி வைத்த படியால் அன்று முதல் சாக்ஷி கோபால் என்று அழைக்கப் பட்டதாக வரலாறு-
ஸ்ரீ ராமானுஜ சம்பந்தம் –இங்கே தரிசிக்க வர -இங்குள்ள பூஜா முறைகள் ஆகமத்தின் படி இல்லாததைக் கண்டு சரிப்படுத்த எண்ண
ஸ்ரீ ஜகந்நாதர் இங்கு தொண்டு புரியும் பூஜாரிகளை வீட்டுக் கொடுக்க திரு உள்ளம் இல்லாமல் அவர் அறியா வண்ணம் ஸ்ரீ கூர்மத்தில் கொண்டு போய் விட்டார்
ஆச்ரித பக்ஷபாதத்தை உணர்ந்து பல்லாண்டு பாடினார் -அவர் தங்கிய மடம் மற்றும் எம்பார் மேடம் ஆகியவை உள்ளன –
இங்கு உள்ள சன்யாசிகளுக்கு இத் திருக் கோயிலில் பரம்பரையாகப் பெறப்பட்ட கைங்கர்யமும் உள்ளது –
ஸ்ரீ ஜெகந்நாதரின் மஹா பிரசாத மஹிமை –
முதலில் பிரசாதம் யாருக்குமே கிடைக்காமல் இருக்க -ஸ்ரீ மஹா லஷ்மியிடம் நாரதர் பிரார்த்திக்க -பிரசாதம் பெற்று ஆனந்தத்தின் எல்லைக்கு சென்று கூத்தாடினார் –
இதனைக் கண்டா பரமசிவனும் வேண்டி பெற்று ஆனந்த நர்த்தனம் ஆட மேருவும் கைலாசமும் நடுங்கின –
பார்வதி தேவி இனி உலகில் ஸ்ரீ ஜகந்நாதர் பிரசாதம் அனைவருக்கும் கிடைக்கும் படி செய்வேன் என்று சபதம் செய்ய அவள் பக்தியை பாராட்டி
இனி அன்ன ப்ரஹ்மமாகவே இருப்பேன் என்று ஸ்ரீ ஜகந்நாதர் அருளினார் –
பிரசாதம் உண்பதாலேயே பாபங்கள் அனைத்தும் விலகி நன்மைகளே விளையும் –
இங்கே அமர்ந்தே உண்ண வேண்டும் -விநியோகத்துக்கு கரண்டிகள் உபயோகிக்க கூடாது -இலைகளை உபயோகிக்கலாம் –
உண்டு முடித்து முதல் வாய் கொப்பளித்து துப்பாமல் விழுங்க வேண்டும் -அடுத்தவாய் மண்ணில் துப்ப வேண்டும் -சாப்பிட்ட இடத்தை கைகளால் சுத்தம் செய்ய வேண்டும் –
திரு மடப்பள்ளி மஹாத்ம்யம்
உலகிலேயே மிகப் பெரிய சமையல் கூடம் -தென் கிழக்கு மூலையில் ஒரு ஏக்கர் பரப்பளவில் திரு மடப் பள்ளி -752-அடுப்புக்கள் ஒவ் ஒன்றும் -3–4-அடி அளவு கொண்டவை
சட்டிப்பானைகள் தவிர வேறே யந்திரமோ உலகமோ இல்லை
20-படிக்கட்டுக்கள் இறங்கி கேணியில் இருந்து தாம்புக் கயிற்றால் கைகளால் இழுக்கப் பட்ட சுத்தமான தண்ணீரை -30-தொண்டர்கள் இடைவிடாமல் கொண்டு வந்து கொட்டுகிறார்கள்
மிளகாய் வெங்காயம் பூண்டு காரட் உருளை தக்காளி போன்ற நிஷித்தமான பல காய்கறிகள் உபயோகப் படுவதில்லை
-400-கைங்கர்ய பரர்கள் -மேலும் -400-உதவியாளர்கள் –
ஒரு நாளைக்கு -72-குவிண்டல் –(சுமார் -5000 படி பிரசாதம் )/ விசேஷ நாட்களில் -92-குவிண்டல் –
-60-கைங்கர்ய பரர்கள் தொழில் சுமந்து பெருமாளுக்கு சமர்ப்பிக்கிறார்கள்
ஒவ் ஒரு நாளும் -56-வகையான பிரசாதங்கள் -சப்பன் போக் -செய்யப் படுகின்றன /-9-வகை சித்தரான்னம் -14-வகை கறியமுது-9-வகை பால் பாயாசம்
-11-வகை இனிப்புக்கள் -13-வகை திருப்பி பணியாரங்கள்
காலை -8-மணி கோபால் வல்லப போகம்
காலை -10-மணி சகல போகம்
பகல் -11-மணி -போக மண்டப விநியோக போகம்
மதியம் -12–30-மத்யாஹ்ன போகம்
மாலை -7-மணி சயன போகம் –
இரவு -11-15-மஹா சிருங்கார போகம் –
தினம் நிகழும் கொடி ஏற்றம்
விமானம் -214-அடி உயரம் –அதன் மேலே நீல சக்ரம் ஸ்ரீ ஸூ தரிசன சக்ரம் பொருத்தப் பட்டுள்ளது -எட்டு உலோகங்களால் செய்யப்பட்டது -36-அடி சுற்றளவு கொண்டது
இதில் மேல் மஞ்சள் சிகப்பு வெள்ளை ஆகிய நிறம் கொண்ட கொடிகள் தினமும் மாலை-6–30- மணி அளவில் ஏற்றப்படுகின்றன
கருட சேவகர்கள் என்று அலைக்கும் தொண்டர்களில் ஒருவர் அனைத்து கொடிகளையும் சுமந்து -15-நிமிடங்களில் சர சர என ஏறி -10-நிமிடங்களில் கொடிகளை கட்டுகிறார்கள்
இப்பரம்பரையில் வந்தவர்களுக்கு கருட பகவானின் அருளால் -8-வயது முதலே இத்தொண்டில் பழக்கம் ஏற்படுகிறது –
நவ கலேவர -புது திருமேனி உத்சவம் –
எந்த ஆண்டில் அதிக மாசமாய் ஆணி மாதத்தில் இரண்டு பவ்ர்ணமிகள் வருமோ அந்த ஆண்டு இந்த உத்சவத்துக்கு என்றே நியமனம் பெட்ரா பூஜாரிகள்
சுமார் -40-மில் தூரத்தில் ப்ராஸீ நதிக் கரையில் இருக்கும் காகாத்புர் எனும் உரின் காடுகளில் தகுந்த வேப்ப மரங்களைத் தேடுவர்
சில விசேஷ அடையாளங்கள் உடன் இருக்கும் மரத்தை எடுத்து வந்து பூஜித்து அதை கோய்லா வைகுண்டத்தில் இருக்கும் மண்டபத்தில் தச்சர்கள் செதுக்குவார்கள் –
புதுத் திருமேனிகள் உருவானவுடன் அமாவாசை இரவு அவர்களை எழுந்து அருள பண்ணிக்க கொண்டு வந்து கர்ப்பக்கிருகத்தில் உள்ள பழைய திருமேனிகளை அருகே வைப்பர் –
அன்று ஊர் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப் படும் -பூஜாரிகளில் மூத்தவர் கண்களைக் கட்டிக் கொண்டு கைகளிலும் துணி சுற்றிக் கொண்டு
இடையே நின்று பழைய திருமேனியின் நாபியில் இருக்கும் ப்ரஹ்ம பதார்த்தத்தை எடுத்து புதுத் திரு மேனியில் பொறுத்துவார்
பின்பு பழைய திரு மேனிகள் கோய்லா வைகுண்டத்தில் பூமிக்கு கீழே எழுந்து அருள பண்ணப் படுபவர் –
சுமார் நான்கு மாதங்கள் நடக்கும் இந்த உத்சவம் -பரம ரஹஸ்யமாக நடத்தப்படும் -பழைய திருமேனிக்காக தாயாதிகள் -தயிதர்கள் -13-நாட்கள் துக்கம் அனுஷ்ட்டிப்பார் –
கடந்த நவ கலேவர – உத்சவங்கள் நடந்த ஆண்டுகள் –1912-/-1931-/–1950 -/-1969-/-1977-/-1996-ஆகியவை –
ஜகம் புகழும் ரத யாத்திரை –
ராணி குண்டீஸாவின் வேண்டுகோளுக்கு இணங்கி பல்லாயிரம் ஆண்டுகளாக மூன்று மூர்த்திகளும் மூன்று தேர்களில் -2-மைல் பவனி வந்து
குண்டீஸா மந்திர அடைவர் -ஆனி மாதம் பவ்ர்ணமியில் -ஸ்நான பூர்ணிமா தொடங்கி ஆடி மாதம் சுக்ல சதுர்த்தசி அன்று நீலாத்ரியிலே முடியும் இத்தேர் திரு விழா –
ரத யாத்ரா குண்டீஸா யாத்ரா கோஷா யாத்ரா என்று அழைக்கப் படும் –10-திரு நக்ஷத்திரத்தில் ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்ரீ வடமதுரை வந்ததை நினைவு கூறும்
தேர்களின் அமைப்பு
மூன்றுமே மரத்தால் கைகளாலேயே செய்யப்பட்டவை -இரண்டு மாதங்களுக்கு முன்பு புதியதாகவே –125-தச்சர்கள் -2188-மறதி துண்டுகள் இணைத்து செய்வர்
ஸ்ரீ ஜகந்நாதர் தேர் -நந்தி கோஷ் என்ற பெயருடன் -7-அடி உயரமுள்ள -16-சக்கரங்கள் -கலைகள் பொருத்தப்பட்ட இதன் உயரம் -45-அடி –
தேர்ச் சீலைகள் வர்ணம் மஞ்சள் –/சங்கிகா ரேஸிகா மோஷிகா மற்றும் த்வாலினி என்ற பெயர்கள் கொண்ட நான்கு குதிரைகள் பூட்டி இருக்கும் அடி நீளம் –
சக்கரங்கள் மன்வந்த்ரங்கள் பொருத்தப்பட்டு -இதன் உயரம் -44-அடி /தேர்ச் சீலைகள் வர்ணம் நீலம்
ருக் யஜுஸ் சாம அதர்வணம் பெயர்களுடன் நான்கு குதிரைகள் -மாதலி தேரோட்டி -வாஸூகி தெற்கை கயிறு
ஸூபத்ராவின் தேரின் பெயர் பத்மத்வஜம் -தேவதாலனம் /-12-சக்கரங்கள் பொருத்தப்பட்டு -மாதங்களின் கணக்கு /உயரம் -43-அடி
தேர்ச் சீலைகள் வர்ணம் சிவப்பு /ப்ரஜ்ஞ்ஞா -அநுபா -கோஷா -அக்ரி -நான்கு குதிரைகள் அர்ஜுனன் தேரோட்டி -ஸ்வர்ண சூடன் தேர்க் கயிறு –
இத்தேரில் ஸ்ரீ ஸூதர்சனரும் எழுந்து அருளி இருப்பர் –
உத்சவத்தில் முக்கிய நாட்கள்
1 -ஆனி பவ்ர்ணமி -ஸ்நான யாத்ரா -தாரு ப்ரஹ்மத்தில் இருந்து ஸ்ரீ ஜகந்நாதர் தோன்றிய நாள் –
இன்று -108-குடம் பன்னீரால் திரு மஞ்சனம் -அதனால் ஜலதோஷம் பிடிக்க அடுத்த -15-நாட்கள் தனிமை -தர்சனம் இல்லை –
2-ஆனி சுக்ல த்விதீயை -முதலில் பலராமர்-அடுத்து ஸூ பத்ரா -கடைசியாக ஜகந்நாதர் -அலங்காரத்துடன் தேரில் எழுந்து அருள்வார்கள்
அரசன் தங்க துடைப்பத்தால் பெருக்க தேர்கள் புறப்பட்டு குண்டீஸா மந்திர் சென்று அடைவர் –
மூர்த்திகள் உள்ளே சென்று அடுத்த ஒன்பது நாள்கள் இங்கேயே எழுந்து அருளி இருப்பர் -பிரசாதங்களை இங்கேயே தளிகை பண்ணப் படும்
3-ஆனி சுக்ல பஞ்சமி -ஹோரா பஞ்சமி –தன்னை விட்டுச் சென்றதற்காகக் கோபம் கொண்ட மஹா லஷ்மீ பிரதான கோயிலில் இருந்து
பல்லக்கில் குண்டீஸா மந்திர் வந்து ஜகந்நாதர் தேரின் ஒரு சிறு பகுதியை உடைப்பதாக லீலா ரசம்
4—ஆனி சுக்ல தசமி -உல்டா ரத்தம் –மூர்த்திகள் திரும்ப எழுந்து அருள்வார் –
பிரணய கலகம் -மட்டையடி உத்சவம் -பிரதான கோயில் மூடப்பட்டு பெருமாள் வாசலிலேயே காத்து இருப்பர் –
5–ஆனி சுக்ல ஏகாதசி -ஸூனா வேஷ தர்சனம் –ஸ்வர்ண திரு ஆபரணங்கள் மூர்த்திகள் சாத்திக் கொள்வார்கள் –
மூலை மூட்டுக்களில் இருந்து மக்கள் வெள்ளம் பெருகி வருவர்
6—ஆனி சுக்ல துவாதசி -இன்று இரவு பெருமாள் உள்ளே எழுந்து அருள்வார் -வீதியில் தேரில் இருக்கும் போது மட்டும்
பக்தர்கள் அனைவரும் தேரில் ஏறி பெருமானைத் தொட்டு தரிசிக்கலாம் –
ஜெய் ஜெகன்நாத் புரி புருஷோத்தம் தாம் கீ ஜெய்
நீலாசல நிவாசாயா நித்யாய பரமாத்மனே ஸூபத்ரா ப்ராண நாதாயா ஜெகந்நாதாய மங்களம்
————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply