ஸ்ரீ பகவாநுவாச-
14 மனுக்கள் -71-3/7 சதுர் யுகங்கள் ஒவ்வொரு மனுவுக்கு ஆட்சி காலம்-
ஸ்ரீ பகவாநுவாச-
இமம் விவஸ்வதே யோகம் ப்ரோக்தவா நஹமவ்யயம்.-
விவஸ்வாந் மநவே ப்ராஹ மநுரிக்ஷ்வாகவேப்ரவீத்—৷৷4.1৷৷
முதல் மனு ஸ்வாயம்பு மனு
அடுத்து ஸ்வ ரோசிச மனு
அடுத்து உத்தம மனு
அடுத்து தாமஸ மனு
அடுத்து ரைவத மனு
அடுத்து சாஷுச மனு
அடுத்து வைவஸ்வத மனு
இரண்டாவது பாதியில் -ஏழாவது மனு வைசஸ்வத மன்வந்தரம் -27 சதுர் யுகங்கள் முடிந்து -அடுத்ததில் -28வது சதுர்யுகத்தில் – கலியுகத்தில் உள்ளோம்
தொடக்கத்தில் விவஸ்வானுக்கு உபதேசம் -பழைமையானது -நல்ல வழி காட்ட -தத் பேஷஜம் -மனுவின் சொல் மருந்து
எட்டாவது மன்வந்தரம் ஸா வர்ணி மன்வந்தரம்
அடுத்து தக்ஷ ஸாவர்ணி மன்வந்தரம்
அடுத்து பிரம்ம ஸாவர்ணி மன்வந்தரம்
அடுத்து தர்ம ஸாவர்ணி மன்வந்தரம்
அடுத்து ருத்ர ஸாவர்ணி மன்வந்தரம்
அடுத்து ரவ்ஸ்ய தேவ ஸாவர்ணி மன்வந்தரம்
கடைசியில் 14-இந்த்ர ஸாவர்ணி மன்வந்தரம்
————
இந்து சமய நூல்களில் கல்பகாலம் என்பது படைப்புக் கடவுள் பிரம்மனின் ஒரு பகலின் கால அளவைக் குறிக்கும்.
பகவத்கீதை ஆயிரம் யுகங்களின் கால அளவு பிரமனின் ஒரு பகல் அளவு’ என்று குறிப்பிடுகிறது. இங்கு ‘யுகம்’ என்பது ‘மகாயுகம்’ என்பதைக் குறிக்கிறது என்பதை உரையாசிரியர்கள் அனைவரும் சுட்டிக் காட்டுகிறர்கள். ஒரு மகாயுகம் என்பது தொடர்ந்து வரும் நான்கு யுகங்களின் கால அளவு. அதாவது வடமொழியில் ‘சதுர்யுகம்’ என்று வழக்கில் இருப்பது. இதன் அளவு கீழே காட்டியபடி:
ஆக ஒரு சதுர் யுகம்- மகாயுகம் என்பது 43,20,000 மானிட ஆண்டுகள் கொண்டது. ஆயிரம் மகாயுகங்கள் 432 கோடி மானுட ஆண்டுகளுக்குச் சமம்.
ஒரு கல்பகாலத்திற்குள் பதினான்கு ‘மனு’க்களும் பதினான்கு இந்திரர்களும் வந்து செல்கிறார்கள். ‘மனு’ என்பவர் பூமி அனைத்துக்கும் மன்னராவார். இந்திரன் தேவலோகத்திற்கு மன்னராவார். ஒரு மனுவின் காலம் 71 மகாயுகங்கள். இந்திரனின் கால அளவும் அவ்வளவே. இக்கால அளவிற்கு ‘மன்வந்தரம்‘ என்று பெயர். இரு மன்வந்தரங்களுக் கிடையில் ஒரு இடைவேளை (‘ஸந்தியா காலம்’) நான்கு கலியுககால அளவு கொண்டதாக இருக்கும். அதாவது 17,28,000 மானிட ஆண்டுகள். 14 மன்வந்தரங்களும் முடிந்தவுடன் ஒரு இடைவேளை இருக்கும். ஆக, பிரமனின் ஒரு பகலில், 71 மகாயுகங்களும். 15 ஸந்தியாகாலங்களும் இருக்கும்.
14 மன்வந்தரங்கள் = 71 x 14 மகாயுகங்கள் = 994 மகாயுகங்கள்.-
-
- 15 ஸந்தியாகாலங்கள் = 15 x 17,28,000 ஆண்டுகள் = 6 x 43,20,000 ஆண்டுகள் = 6 மஹாயுகங்கள்.
- ஆக பிரமனின் ஒரு பகலில் ஆயிரம் மகாயுகங்கள்.
இன்றைய மன்வந்தரமான வைவஸ்வத மன்வந்தரத்தில் 27 மகாயுகங்கள் சென்றுவிட்டன. இப்பொழுது நடப்பது 28-வது மகாயுகம். இதனுள் மூன்று யுகங்கள் — அதாவது, கிருதயுகம், திரேதாயுகம், துவபரயுகம் — சென்றுவிட்டன. இப்பொழுது நடப்பது கலியுகம். இதனுள் கி.பி.2011க்குச்சரியான கலியுக ஆண்டு 5112-13.
பிரம்மாவின் இரவில் இந்திரனோ, மனுவோ, பூலோகமோ எதுவும் இருக்காது. பிரம்மாவும் தூங்கும் நிலையில் இருப்பார். பிரம்மாவின் அடுத்த நாள் காலையில் அவர் மறுபடியும் முன்போல் படைப்பைத் தொடங்குவார். அந்த நாள் முடிவில் ஊழிக்கால சம்பவங்கள் நடந்து எல்லாம் இறைவனிடத்தில் ஒடுங்கும். இப்படி ஒவ்வொரு கல்பத்திலும் நடக்கும். இதுதான் புராணங்களில் சொல்லப்பட்டிருக்கும் பிரம்மாவின் வாழ்க்கை. இவ்விதம் 360 நாட்கள் கொண்ட ஆண்டுகளாக, நூறு ஆண்டுகள் இந்த பிரம்மா இருப்பார். அவர் ஆயுள் முடியும்போது, இன்னும் பெரிய பிரளயம் ஏற்பட்டு அவரும் இறைவனிடம் ஒடுங்குவார்.
பிரம்மாவின் ஆயுட்காலம் 100 பிரம்ம ஆண்டுகள். அந்தக் காலத்தை இரண்டாகப் பிரித்து இரண்டு ‘பரார்த்தங்கள்’ என்று புராணங்களில் சொல்லப்படுகின்றன. இப்பொழுது முதல் பரார்த்தம் முடிந்து இரண்டாவது பரார்த்தத்தின் முதல் கல்பம் சென்றுகொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதற்குமுன் முடிந்து போன முதல் பரார்த்தத்தின் கடைசி நாள் ‘பாத்ம’ கல்பம் எனப்படும். முதல் பரார்த்தத்தின் முதல் நாள் ‘பிராம்ம’ கல்பம் எனப்படும். இவையிரண்டு கல்பத்தைப் பற்றியும் புராணங்களில் சில சம்பவங்கள் சொல்லப் பட்டிருக்கின்றன.
‘பரார்த்தம்’ என்ற சொல் கணிதத்தில் 1017 என்ற எண்ணைக் குறிக்கும். பிரம்மாவின் ஆயுட்காலத்தின் பாதியிலும் ஏறக்குறைய அத்தனை மனித ஆண்டுகளே எனப் புராணங்கள் கொள்கின்றன.ஆனாலும் கணக்கிட்டுப் பார்க்கும்போது இதில் வேறுபாடு தெரிகின்றது.
ஒரு மகாயுகம் = 432 x 104 மனித ஆண்டுகள்.
ஒரு கல்பம் அல்லது பிரம்மாவின் ஒரு பகல் = 432 x 107 மனித ஆண்டுகள்.
ஒரு பகலும் ஓரிரவும் சேர்ந்தது = 864 x 107 மனித ஆண்டுகள்
இப்படி 360 நாட்கள் கொண்ட பிரம்மனின் ஓர் ஆண்டு = 360 x 864 x107 மனித ஆண்டுகள்
- இப்படி 50 பிரம்ம-ஆண்டுகள் = 50 x 360 x 864 x 107 .
- இது ஏறக்குறைய 1014 x 1.5 மனித ஆண்டுகளாகின்றது. இது கணிதப்படி பரார்த்தம் ஆகாவிட்டாலும் இதையே பிரம்மனின் பரார்த்தம் என்று புராணங்கள் சொல்கின்றன.
- ஸ்ரீமத் பாகவத மகாபுராணம், எட்டாவது ஸ்கந்தம், அத்தியாயம் 13, 14.
- ஸஹஸ்ரயுகபர்யந்தம் அஹர்யத் பிரம்மணோ விது: — பகவத் கீதை 8 – 17
- ஸஹஸ்ர யுகபர்யந்த மஹர்யத் ப்ரஹ்மணோ விது–ராத்ரிம் யுக ஸஹஸ்ராந்தாம் தேஹோராத்ர விதோ ஜநா–৷৷8.17৷৷
- குந்தீ புத்திரனே மனிதன் தொடக்கமான நான்முகன் ஈறாக உள்ள அனைவருக்கும் இரவு பகல்களை அறியும்-அறிவாளிகள் எவர்கள் உளரோ -அவர்கள் பிரமனின் பகலை ஆயிரம் சதுர் யுகம் காலத்தில் முடிவதாக அறிகின்றனர்-பிரமனின் இரவையும் ஆயிரம் சதுர் யுகம் காலத்தில் முடிவதாக அறிகின்றனர்-பிரமனின் பகல் தொடங்கும் போது உலகில் உள்ள எல்லா பொருள்களும் பிரமனின் தேஹமானஅவ்யக்தத்தின் நின்றும் உண்டாகின்றன -பிரமனின் இரவு தொடங்கும் போது அவ்யக்தம் எனப்படும் அந்த பிரமனின் தேகத்திலேயே அவை ஒடுங்குகின்றன
கர்மத்துக்கு வசப்பட்ட அத்தகைய இந்த ஜீவ ஸமூஹம் ஒவ் ஒரு பகலின் தொடக்கத்திலும் உண்டாகி உண்டாகி–இரவின் தொடக்கத்தில் லயத்தை அடைகிறது -மறுபடியும் பகலின் தொடக்கத்தில் உண்டாகிறது - ——————————–
- மனு என்பது ஒரு பட்டம். ராஜா, பெரியவர், சிறந்தவர், மனிதருள் மாணிக்கம் என்று பொருள்
- மன்வந்திரம் மனு இந்திரர்-1 சுயம்பு, இந்திரன்-2 . ச்வாரோசிஷன், ரோசன்-3 . உத்தமன், சத்யஜித்-4 . தபாசன், திரிசிகன்-5 . ரைவதன், விபு-6. சாசூசன், மந்திரதுருமன்
- 7 . வைவஸ்த மனு, புரந்தரன்
- 8 . சாவர்ணி, மகா பலி-9 . தசாசாவர்ணி, சுரதன்-10 . பிரம்மா சாவர்ணி, சம்பு-11 . தர்மசாவர்ணி, வைதிருதி-12 . ருத்ர சாவர்ணி, ருது சாமவே-13 . தேவ சாவர்ணி, திவஸ்பதி-14 . இந்திரசாவர்ணி, சுகி
- ————————–
1. ப்ரபஞ்சம் என்பது அழியக்கூடியது. ஒரு முறை உருவாகும், மறு முறை அழியும். ஆக இது ஒரு சுழற்சியே.ப்ரம்மாவிற்கும் அழிவுண்டு. ப்ரம்மாவின் பிறப்பு, இறப்பு போன்ற காலத்தின் நடுவே வருவது “மஹாகல்பம்”;; ப்ரம்மாவின் இறப்பிற்குப் பிறகு வரும் ப்ரளயம்தான் “மஹாப்ரளயம்”. ப்ரம்மாவின் ஒரு வாழ் நாளை “கல்பம்” என்று அழைப்பர் ;; இந்தக் கல்பம் 14 மந்வந்திரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த ஒவ்வொரு பிரிவிற்கும் ஒவ்வொரு மனு உண்டு. அந்த மனுவின் வாழ்நாள் ஒரு “மன்வந்திரம்”. என்று அழைக்கப் படுகிறது.இந்த மன்வந்திரத்தில் 72 சதுர் யுகங்கள் உள்ளன. ஒரு சதுர் யுகம் என்பது நான்கு யுகங்கள் கொண்டது. அவை—க்ருதயுகம் , த்ரேதாயுகம்,த்வாபரயுகம்,கல்கியுகம் என நான்கு யுகங்கள் ஆகும் . ஒவ்வொரு கல்ப காலம் முடிந்ததும் உலகம் அழிந்துவிடுகிறது.. அதைச் சிறிய ப்ரளயம் என்று கூறுவர். ப்ரம்மாவின் ஆயுட்காலம் 120 வருடங்கள் ஆகும் . ஆக ஒவ்வொரு ப்ரம்மாவின் காலத்திலும் 42,200 ப்ரளயங்கள் (120X360).உருவாகின்றன.
2. மனுஷ்ய வருஷம் : இரண்டு இலைகளை ஒரு ஊசி துளைக்கும் நேரம் “அல்பகாலம்” எனப்படும் . .30 அல்பகாலம்- 1த்ருதி:30 த்ருதி– 1 காலம்;30 காலம்–1 கஸ்தா;30 காஸ்தா–1நிமிஷம்(மாத்ரை);4நிமிஷம் —1 கணித;10 கணித–நெடுவீர்ப்பூ;6 நெடுவீர்ப்பு–1 விநாழிகை;;
60 விநாழிகை–1 கடிகை;60 கடிகை —1 நாள்;15நாள்–1 பக்ஷம்;2 பக்ஷம் —1 மாதம்;இந்த ஒரு மாதம் பித்ருக்களுக்கு ஒரு நாள்:12 மாதம் –ஒரு வருஷம்;இந்த ஒருவருஷம் தேவர்களுக்கு ஒருநாள் (அஹோராத்ரம்) ;300வருஷம்– 1 தேவ வருஷம்;4800 தேவ வருஷம்–க்ருத யுகம்;3600 தேவ வருஷம்.–த்ரேதாயுகம்;2400 தேவ.வருஷம்—துவாபரயுகம்;1200 தேவ.வருஷம்–கலியுகம்;71 சதுர்யுகங்கள் முடிந்ததும் ஒரு மனு முடிவடைகிறது.அத்தோடு அந்தக் கடவுள் , தேவர்கள் அழிகின்றனர். அக்காலம் ப்ரம்மாவின் ஒரு பகல். இரவில் படைப்பு கிடையாது. 120 ஆண்டுகள் வாழ்ந்ததும் ப்ரம்மாவும் அழிந்துவிடுகிறார்
ஆக ஒரு ப்ரம்மாவின் வயது–முப்பது கோடியே,ஒன்பது லட்சத்து,பதினேழாயிரத்து,முன்னூற்று எழுபத்திஆறு மனித ஆண்டுகள். ஒரு மனுவின் வயது– 4,32,000 மனித வருடங்கள்.
ஒவ்வொரு சதுர் யுகத்திலும் வேதங்கள் அழியும். ஸப்த ரிஷிகள் கிழே வந்து வேதங்களை புதுப்பிப்பர். க்ருத யுகத்தில்மறுபடியும் மனு உருவாவான்.ஆக ஒவ்வொரு மன்வந்திரத்திற்கும் மனு, தேவர்கள்,ஸப்த ரிஷிகள், இந்திரன் புதிதாக உருவாவார்கள். கல்பகாலத்தின் முடிவில் விஷ்ணு பாற்கடலில் பள்ளி கொள்கிறார். பிறகு மறுபடியும் படைப்பு துவங்குகிறது.க்ருத யுகத்தில் அவர் கபிலராக வந்து “பரமஞானத்தை” போதிக்கிறார். த்ரேதாயுகத்தில் பேரரசனாக வ்ந்து கொடியவர்களை அழிக்கிறார்.துவாபர யுகத்தில் வ்யாசராக வந்து வேதங்களை உருவாக்குகிறார், கலியுகத்தில் நேர்மையை நிலை நாட்டுகிறார். ஒவ்வொரு மன்வந்திரத்திற்கும் மனு, இந்திரன், சப்தரிஷிகள்போன்றவர்கள் இருப்பர்;; மனுவின் மகன்களும் ஒத்துழைப்பார்கள்;14 மன்வந்திரங்கள்–ஸ்வாயம்பு; ஸ்வரோசிச; உத்தம; தாமஸ; ரைவத; சக்ஷூச; வைவஸ்வத; ஸாவர்ணி; தக்ஷ ஸாவ்ர்ணி; ப்ரம்ம ஸாவர்ணி; தர்ம ஸாவர்ணி; ருத்ர ஸாவர்ணி; ரௌச்ய ஸாவர்ணி; இந்திர ஸாவர்ணி.
1) ஸ்வாயம்பு மனு; ப்ரம்மாவின் மனதில் உதித்தவர்.தேவி சடரூபியை(ப்ரம்மாவின் மகள்) மணந்தார்;நூறு ஆண்டுகள் வாக்பவ மந்திரத்தை உச்சரித்து, தேவியை நோக்கித் தவமிருந்து பல வரங்கள் பெற்றான்; மனுஸ்ம்ருதியை உருவாக்கினான்; ஸப்த ரிஷிகள்: மரீசி, ஆங்கிரஸ்,அத்ரி,புலஹ,க்ரௌது, புலஸ்தய, வசிஷ்ட. தேவர்கள் எமன் என்ற பெயர் உடையவர்கள்
மனுவின் மகன்கள்; அகனிதாரா,அக்னிபாஹு,மேதா,மேதாதிதி,வஸு,ஜ்யோதிஷ்மான், த்யுதிமான், ஹவ்ய, ஸாவன, புத்ர. இவர்கள் உலகை ஆண்டனர்.(ஹரிவம்ச்ம்-7). இந்த மனுவை “ப்ரஜாபதி” மனு என்று அழைப்பர்.இவன் விராட அண்ட/புருஷனிலிருந்து வந்தவன் என்பர்;; முனிவர் ஸ்யாவநர் இவனின் மகளை மணந்தான். மனுவின் மனைவியின் பெயர் சரஸ்வதி(ப்ரம்மாவின் சரஸ்வதி அல்ல);.
2) ஸ்வரோசிச மனு;; ஸ்வயம்பு மனுவின் மகன்கள் ப்ரியவ்ருதன், உத்தானபாதன். ப்ரியவ்ரதனின் மகனே இம்மனு. தாரிணி தேவியை ஆராதித்தவன். ஸப்தரிஷிகள்; ஊர்ஜ்ஜ, ஸ்தம்ப, ப்ரான, ராம, ரிஷப, நிராய, பரீவான். மகன்கள்;; சைத்ர, கிம்புருஷ,ஸங்கவதன
இந்திரன்;; விபஸ்சித்.: தேவர்கள்:- பாராவதர்கள், துசிதர்கள் . ப்ரம்மா இம்மனுவிற்கு ஸாத்வத தர்மத்தை சொல்லிக் கொடுத்தார்.இவன் அதை தன் மகன்களுக்கு சொல்லி கொடுத்தான். ( விஷ்ணு புரா-1-3; ஹரிவம்சம்–7; சாந்தி–348)
3)உத்தம (ஔத்தமி); உத்தமனும் ப்ரியவர்தனின் மகன். இவனும் வாக்பீஜ மந்திரம் கூறி தேவியின் அருள் பெற்றான். (தேவி பாக-10) ஸப்தரிஷிகள்;; வசிஷ்டரின் ஏழு மகன்களே–ரஜஸ், கோத்ர, ஊர்தவபாஹு, ஸாவன, அநங்க, ஸுடாபஸ், சுக்ர; மகன்கள்;;; அஜ, பரஸுதீப்த. என்று மற்றும் பலர். இந்திரன்;;; ஸுசாந்தி;;தேவர்கள்:- ஸுதாமன், ஸத்யர், ஜபஸ்,ப்ரதர்தன, சிவ;; ஒவ்வொரு பகுதியிலும் 12 தேவர்கள்.
4) தாமஸ;; இவனும் ப்ரியவர்தனின் மகனே. இவன் காமராஜ மந்திரம் ஜபித்து தேவியின் அருள் பெற்றான். ஸ்பத்ரிஷிகள்;;;ஜோதிர்மான், ப்ருது, காவ்ய, சைத்ர, அக்னிவனக, பிவர, நர;;
இந்திரன்;; சிபி;; தேவர்கள்:-ஸுபார,ஹரி, ஸத்ய, ஸுதீ; ஒவ்வொரு கூட்டத்திலும் 27 தேவர்கள்.
மகன்கள்;;; க்யாதி, கேதுரூப, ஜானுஜங்க என்று பலர் உண்டு
5) ரைவத;;இவன் தாமஸனின் கடைசி தம்பி.இவன் காமபீஜ மந்திரம் ஜபித்து தேவி அருள் பெற்ரான். ஸப்தரிஷிகள்;;;ஹிரண்யரோம, வேதஸ்ரீ, ஊர்தவபாஹு, வேதபாஹு, ஸுதாம, பரஞ்சய, மஹாமுனி;; இந்திரன்;;;விபு;; தேவர்கள்:-அமீதாபர்கள், பூதரயஸ், வைகுந்த, ஸுமேத– ஒவ்வொரு கூட்டத்திலும் 14 தேவர்கள்; மகன்கள்;;;; பாலபந்து, ஸம்பாவ்ய, ஸத்யக, என்று பலர்.சிறந்த அரசர்களாக இருந்தனர்;;
6)சாக்ஷுச;;; அங்கனின் மகன். ராஜரிஷி புலஹரின் உபதேசத்தால், தேவியை உபாசித்து மனு பதவி பெற்றான். ஸப்தரிஷிகள்;; ஸுமேத, விரஜஸ், ஹவிஸ்மான், உத்தம, மது, அதிநாமன், ஸஹிஷ்னு, இந்திரன்;; மனோஜவ;; தேவர்கள்:-ஆக்யர், ப்ரஸுதர், பாவ்ய, ப்ருதுக, லேக;; ஒவ்வொரு கூட்டத்திலும் 8 தேவர்கள். வம்சாவளி ;; துருவன் அவன் மனைவி ஸாம்பு இருவருக்கும் இரண்டு மகன்கள்;; ஸிஸ்டி, பாவ்ய;; ஸிஸ்டியின் மனைவி சுச்சயாவிற்கு ஐந்து மகன்கள்; ரிபு, ரிபுஞ்சயன், விப்ர, வ்ர்கல, வ்ர்கதேஜஸ்;;ரிபுவின் மனவி ப்ரகதியின் மகன் சாக்ஷுச;;விரான ப்ராஜபதியின் மகள் புஷ்கரணி இவனின் மனைவி; இவர்களின் மகன் மனு; இவன் வைராஜ ப்ரஜாபதியின் மகள் நட்வலாவை மணந்தான். இவர்களுக்கு குரு, புரு, ஸதத்யும்னன், தபஸ்வி, ஸத்யவான், ஸுசி, அக்னிஸ்தோமன், அதிராத்ர, ஸுத்யும்னன், அபிமன்யு , என10 மகன்கள்;;ஆக்னேயி (குருவின் மனைவி)க்கு அங்(ம்)க, ஸுமனஸ், க்யாதி, க்ரௌது, ஆங்கிரஸ்,சிபி என 6 மகன்கள்; சுனிதா(அம்கனின் ம்னைவி) வேனாவை பெற்றெடுத்தாள்.ப்ருது வேனாவின் மகன்;; வைன்ய எனவுமழைப்பர்;; இம்மனுவின் மகன்கள் “வரிஷ்டர்கள்” என புகழப்பட்டனர்.
7) வைவஸ்வத;; சூர்யனின் மகன். இவனே நமது மனு. ஸத்யவ்ருத மனுவே போன ப்ரளயத்திலிருந்து விஷ்ணுவால்( மத்ஸ்யாவதாரம்)
காப்பாற்றப்பட்டு. வைவஸ்வத மனுவானார்.இவனே சூர்ய வம்சத்தின் முதல் அரசன். இவனும் தேவி உபாசகன். ஸப்தரிஷிகள்;;வசிஷ்ட, கஸ்யபர், அத்ரி, ஜமதக்னி, கௌதம, விஸ்வாமித்ர, பாரத்வாஜ;; இந்திரன்;;; புரந்தர;;;; தேவர்கள்:-ஆதித்யர், வஸு, ருத்ர–; மகன்கள்;;; தார்மீக புத்திரர்கள்;;இக்ஷவாஹு, ந்ருக, த்ருஷ்ட,ஸர்யாதி, நரிஸ்யந்த, நாபாக, அரிஸ்ட, கரூஸ, ப்ரஸ்த்ர;;(யாவரும் மனுக்கள்); பிறந்தவர்கள்;;வேனா, த்ருஷ்ணு, நரிஸ்யந்த, நாபாக, இக்ஷவாஹு, கரூச, ஸர்யாதி, இலா, ப்ரஸ்த்ர, நாபாகாரிஷ்ட; த்ரேதாயுகத்தில் சூர்யன் இம்மனுவிற்கு “ஸாத்வத தர்மம்” போதித்தான். இவன் அதை இக்ஷவாஹுவிற்கு உபதேசித்தான்.
8) ஸாவர்னி;; முற்பிறவியிலேயே இவன் தேவி பக்தன். முற்பிறவியில் சைத்ர வம்சத்தில் பிறந்த சுரதாவே ஸாவர்னிமனு. ப்ரம்மாவின் மகன் அத்ரி; அத்ரியின் மகன்நிஸாகரன்;ராஜசூய யாகம் செய்தவன். இவனின் மகன் புதன்; புதனின் மகன் சைத்ர( சைத்ர வம்சத்தின் முதல் அரசன்). இவனின் மகன் சுரத;இவன் போரில் தோற்று காட்டில் அலைய, முனிவர் ஸுமேதஸி உபதேசத்தால் தேவி அருள் பெற்று அரசை மீட்டதோடு, மறு பிறவியில் மனுவானான். சூர்ய வம்சத்தில் பிறந்தவன்.
சூர்யனுக்கு ஸ்மஞா மூலம் யமா, யமி,மனு என மூன்று மகன்கள். சூர்யனுக்கு சாயா மூலம்–ச்னீஸ்சர,ஸாவர்னி, தபதீ என மூன்று குழந்தைகள். ஸப்தரிஷிகள்;;; தீப்திமான், காலவ, ராம, க்ருப, அஸ்வத்தாம, வ்யாஸ, ரிஷ்யஸ்ருங்கர்,;; இந்திரன்;;;மஹாபலி;; ஸுடாபஸ், அமீதாபர், முக்ய என தேவர்கள்–ஒவ்வொரு கூட்டத்திலும்12 தேவர்கள்;;
மகன்கள்;;; விரஜஸ், உர்வரீயான், நிர்மோக, என பலர்;
9) தக்ஷஸாவர்னி;;; ஸப்தரிஷிகள்;; ஸாவன, த்யுதிமான், பாவ்ய, வஸு, மேதாதிதி, ஜ்யோதிஸ்மான், ஸத்ய;; இந்திரன்;;அத்பூத;;தேவர்கள்:- பாரஸ், மரீசிகர்ப, ஸுதர்மன்;; இக்கூட்டத்தில் 12 தேவர்கள் (ஒவ்வொன்றிலும்); மகன்கள்;;; த்ருதகேது, தீப்திகேது, பஞ்சஹஸ்த, நிராமய, ப்ருதுஸ்ரவஸ்,
10) ப்ரம்ம ஸாவர்னி;; ஸப்தரிஷிகள்;; ஹவிஸ்மான், ஸுக்ருத, ஸத்ய, தபோமூர்த்தி, நாபாக,அப்ரதிமௌஜஸ், ஸத்யகேது இந்திரன்;;; ஸாந்தி;; தேவர்கள்:-ஸுதமன், விஸுத்தாஸ். ஒவ்வொரு கூட்டத்திலும் 100தேவர்கள். மகன்கள்;; பத்து பேர். அதில் ஸுக்சேத்ர, உத்தமௌஜஸ், பூதிஸேன இவர்களே அரசர் ஆவார்கள்.
11) தர்ம ஸாவர்னி;; சப்தரிஷிகள்;;; வ்ரஜ, அகனிதேஜஸ், வப்ஸ்மான், க்ருணி, ஆருனி, ஹவிஸ்மான், அநக;; இந்திரன்;;;; –; விகங்கமஸ், காமக, நிர்வானரதி –ஒவ்வொரு கூட்டத்திலும் 30 தேவர்கள். மகன்கள்;;;; ஸர்வத்ரக, ஸுதர்மா, தேவானிக, என பலர்;
12)ருத்ர ஸாவர்னி;; இவன் ருத்ரனின் மகன். ஸப்தரிஷிகள்;; தபஸ்வி, ஸுடாபஸ், தபோமூர்த்தி, தபோரதி, தபோத்ருதி, தபோத்யுதி, தபோதன;; இந்திரன்;; ருதுதாமன்;;தேவர்கள்:-ஹரித, ரோஹித, ஸுமனஸ், சுக்ரமன், சுபார–ஒவ்வொரு கூட்டத்திலும்10 தேவர்கள்.
மகன்கள்;;; தேவவான், உபதேவ, தேவஸ்ரேஷ்ட, என பலர்.
13) ரௌச்ய தேவ ஸாவர்னி (ருசி);;; ஸப்தரிஷிகள்;; நிர்மோக, தத்வதர்ஸி, நிஸ்ப்ரகம்ய, நிருத்ஸக, த்ருதிமான், அவ்யய, ஸுடாபஸ்;; இந்திரன்;;; திவஸ்பதி;;தேவர்கள்:- ஸுத்ராமன், சுகர்மன், ஸுதர்மன்; ஒவ்வொரு கூட்டத்திலும் 33 தேவர்கள் மகன்கள்;;; சித்ரஸேனன், விசித்ரன் என பலர்.
14) இந்திர ஸாவர்னி (பௌமி);; சப்தரிஷிகள்;; அக்னிபாஹு, சுசி, சுக்ர, மாகத, அக்னிதார, யுக்த, ஜித;; இந்திரன்;; சுசி;;தேவர்கள்:- சாக்ஷுச, பவித்ர, கனிஸ்த, ப்ராஜக, வாசவ்ர்த்த;; இவர்களே தேவர்கள்; மகன்கள்;;; உரூ, கம்பீரபுத்தி, என பலர் மற்றவைகள்:-ஒன்பதாவது மனுவிலிருந்து கடைசி மனுவரை உள்ள மனுக்கள், வைவஸ்வத மனுவின் மகன்களான கரூச, ப்ரஸ்தர, நாபாக, திஸ்த, ஸார்யதி, த்ரிசங்கு., இவர்களின் மறு பிறப்பே.”ப்ரமராம்பிகாவின் ” அருளால் இவர்கள் மனு பட்டம் பெற்றனர். விஷ்ணுவின் சக்திகளாகிய ஆபூதி, அஜீத, ஸ்த்ய,ஹரி, மாநஸ, ஸம்பூதி, ரைவத,வாமன என்பவைகளே,மன்வந்திரங்களை ஆளுகின்றன————————————————————-ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply