பராவரன் -நூல் வாசியும் கால் வாசியும் –ஸ்ரீ உ வே வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் –

பரப் ப்ரஹ்மம் .–முழுதுண்ட பரபரன் ( திருவாய்.1, 1, 8)

ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன்-

தன் ஒப்பார் இல்லப்பன் -முனியப்பன் முத்தப்பன் —

பித்யதே ஹ்ருதய க்ரந்தி சித்யந்தே ஸர்வ சம்சயா
ஷீயந்தே சாஸ்ய கர்மாணி தஸ்மிந் த்ருஷ்டே பராவரே -முண்டக -2-2-9-
பகவானைப் பராவரன் என்று கொண்டாடுகிறது
தத்வ டீகையில் வேதாந்த தேசிகன் இதற்கு நான்கு அர்த்தங்கள் அனுக்ரஹித்துள்ளார்-

பராவர -என்பதை -பர என்றும் அவர என்றும் இரண்டாகப்பிரித்து
பரத்வ ஸுலபயங்களைச் சொல்லுகிறது -பரத்வ ஸுலப்ய பரிபூர்ணன் என்றபடி

லோகத்தில் பரர்களாகக் காணக்கூடியவர்களும் இவனைக் குறித்து தாழ்ந்தவர்களாவாரே
மனிசர்க்குத் தேவர் போலே தேவருக்கும் தேவனாக விளங்குபவனே பராவரனான ஸர்வேஸ்வரன்

பர -ஞான விசிஷ்ட ஜீவாத்மா
அவர =ஞான சூன்யமான அசித்
இரண்டையும் சரீரமாகக் கொண்டவன் பராவரனான பகவான் -பராவர சரீரிகன் -இது மூன்றாவது வியாக்யானம் –
ஜகத் ஸரீரி விஷ்ணு -உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன் –
நமது ஸித்தாந்த பிரதான பிரதிதந்தர அர்த்தம் இதுவே –
தஸ்யைஷ ஏவ சாரீர ஆத்மா
யஸ்ய ஆத்மா சரீரம் –யஸ்ய ப்ருத்வீ சரீரம் –
ஜகத் ஸர்வம் சரீரம் தே
ச ஈஸ்வர வயஷ்டி சமஷ்டி ரூப -ஸ்ரீ விஷ்ணு புராணம்
அவஸ்தி தேரிதி காஸ க்ருத்ஸந -வேத வியாசர்
ய தண்டம் –பராத்பரம் ப்ரஹ்ம ச தே விபூதயே-ஸ்தோத்ர ரத்னம் -17-

நான்காவது வியாக்யானம்
தஸ்மிந் த்ருஷ்டே அபராவரே என்று கொண்டு பகவான் அபராவரன் -பர அவர விலக்ஷணன் -சேதன அசேதன விலக்ஷணன் என்றபடி
இவனே புருஷோத்தமன்
ப்ரஹ்ம சப்தேந ச ஸ்வ பாவதோ நிரஸ்த நிகில தோஷ அனவதிக அதிசய அஸங்க்யேய கல்யாண குண புருஷோத்தம அபிதீயதே -ஸ்ரீ பாஷ்யம் –

அபுருஷ -புருஷ -உத்புருஷ -உத்தர புருஷ – விலக்ஷனான் அன்றோ புருஷோத்தமன் –
ஸ்வ இதர ஸமஸ்த வாஸ்து விலக்ஷணன்
அசித் தத்வ -சம்சாரி ஜீவாத்ம -முக்த ஜீவாத்ம -நித்ய ஜீவாத்ம விலக்ஷனான் என்றபடி –
நித்ய ஸங்கல்ப அனுகுணத்தாலே நித்யர்கள் –


வார்த்தை -பெரு வார்த்தை -மெய்ம்மைப் பெரு வார்த்தை -என்று நாச்சியார் கொண்டாடும் சரம ஸ்லோகம்
மாம் -அஹம் -இரண்டாலும் ஸுலப்ய பரத்வ பரிபூர்ணன்

மாம் -கண்ணன் கழல்கள் நினைமினோ -4-1-3-
அஹம் -பனைத்தாள் மத களிறு அட்டவன் பாதம் பணிமினோ -4-1-4-
விற் பெரு விழவும் கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் வீழச் செற்றவன் தன்னை -திருவல்லிக்கேணிக் கண்டேனே
கவள மால் யானை கொன்ற கண்ணனை -திருமாலை -45-
வார்கடா வருவி யானை மா மலையின் மருப்பிணைக் குவடு இறுத்து உருட்டி ஊர் கொள் திண் பாகனுயிர் செங்குத்து -8-4-1-

ஸுலபயத்தையே இரண்டாக பிரித்து அனுபவிப்பர் -அவதார ஸுலப்யம்-அதுக்கும் மேலாக தேர் முன் நின்று காட்டிய ஸுலப்யம்
மாம் -உனக்கு சாரதியான என்னை

தனக்காகக் கொண்ட சாரதியை வேஷத்தை அவனை இட்டுப் பாராதே தன்னை இட்டுப் பார்த்து அஞ்சின அர்ஜுனனுடைய
அச்சம் தீரத் தானான தன்மையை அஹம் என்று காட்டுகிறான் –

எளிமையாக நினைத்து அஞ்சுகிறவன் தேறும்படி -அந்தமில் -ஆதியம் -பகவானான தன் நிலையை –

நான் -என்று வெளியிடுகிறேன் -அருளிச் செயல் ரஹஸ்யம் -நாயனார் –

சர்வாதிகனான அவன் இப்படித் தாள நின்றது தனது குணத்தாலே இறே என்று அவனை இட்டுப் பாராதே
நமக்கு இழி தொழில் செய்து சாரதியாய் நிற்கிற வன்றோ என்று தன்னை இட்டுப் பார்த்து
சர்வ தர்மங்களையும் விட்டு எண்ணெய் பற்று என்னா நின்றான்
இது என்னாகக் கடவதோ என்று அஞ்சின அச்சம் தீர
ஸ்வா தீன த்ரிவித சேதன அசேதன ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்திகனாய்க் கொண்டு
நிரங்குச ஸ்வ தந்திரனாய் இருக்கிற தன்னுடைய யதாவஸ்தித வேஷத்தை அஹம் என்று தர்சிப்பிக்கிறான் -என்கை -மா முனிகள்

மாம் -ஆஸ்ரய ஸுகர்ய ஆபாதக கல்யாண குண விசிஷ்டன்
அஹம் -ஆஸ்ரய கார்ய ஆபாதக கல்யாண குண விசிஷ்டன்
கார்யம் -அநிஷ்ட நிவ்ருத்தியும் இஷ்ட பிராப்தியும்
ஸர்வஞ்ஞத்வம்-ஸர்வ சக்தித்வம் -பிராப்தி- பூர்த்தி –

பரத்வ ஸுலப்ய பரிபூர்ணனான பகவானை இக்காரணத்தாலேயே வேதாந்தம் பராவரன் என்று கொண்டாடுகிறது –
இப்படி ஸங்க்ரஹமாக அறியப்பட்ட வைபவத்தை
பின்பு விஸ்தாரமாக அனுபவித்து ஆனந்திக்க வேண்டும் –

————-

நூல் வாசியும் கால் வாசியும் –

அவன் திருவடிகளே ஆறும் பேறும்
அறிவினால் குறைவில்லா அகல் ஞாலத்தவர் அறிய நெறி எல்லாம் எடுத்து உரைத்த
நிறை ஞானத்து ஒரு மூர்த்தியான கீதாச்சார்யனுடைய கீதா நிஷ்கர்ஷமும் இதுவே யாகும்
உறுவதாவது -நீள் குடல் கூத்தனுக்கு ஆட் செய்வதே -4-10-10-
ஆட் செய்வதே உறுவதாவது -உறுவதுவும் இது -ஆவதும் இது -சீரியதும் இது -ஸூ சகமும் இது –

அருள் கொண்டாடும் அடியவர் -என்பதுக்கு நாயனார் வியாக்யானத்தில்
கைங்கர்யம் புருஷார்த்தம் -கருணை சாதனம் என்று இருக்கும் அவர்கள் –
சரணாகதி செய்து அபேக்ஷிக்க வேண்டியது கைங்கர்யம் தானே இதுவே சீரிய பலன்

சரணாகதிக்கு பல நியமம் இல்லை -தர்ம புத்ராதிகளுக்கு பலம் ராஜ்ஜியம் –

திரௌபதிக்கு பலம் வஸ்திரம் –

பெருமாளுக்குப் பலம் சமுத்திர தரணம்

இவ்வர்த்தமாக பிரபத்தி பண்ணுகையாலே -மா முனிகள்
ஸித்தித்த பலம் என்ற அர்த்தம் சொல்லில் வைகளையம் வரும் –
பிராபத்தாக்களுக்கு தத் தத் உத்தேஸ் யத்தவம்-என்றே அர்த்தமாகக் கடவது –

திரௌபதி வஸ்திரம் உத்தேசித்து சரணாகதி செய்தமையை

அந்தகன் சிறுவன் அரசர் தமரசற் கிளையவன் அணி யிழையைச் சென்று
எந்தமக்குரிமை செய்யெனத் தரியாது எம்பெருமான் அருள் என்ன
சந்தமில் குழலாள் அலக் கண் நூற்றுவர் தம் பெண்டிரும் எய்தி நூல் இழப்ப
இந்திரன் சிறுவன் தேர் முன் நின்றானைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே –2-3-6-

தூது சாரத்யங்கள் பண்ணிற்றும் திரௌபதி உடைய மங்கள ஸூத்ரத் தக்காகவே -பிரதான ஹேது –

கோவிந்த புண்டரீகாஷ ரஷமாம் சரணாகதம் –
பாண்டவர் தம்முடைய பாஞ்சாலி மறுக்கம் எல்லாம் ஆண்டங்கு நூற்றுவர் தம் பெண்டிர் மேல் வைத்த அப்பன் -பெரியாழ்வார் -4-3-6-
துரியோதனன் ராஜாதிராஜன் என்று அஹங்காரம் கொண்டு இருந்ததால்  அரசர்தம் அரசன் -என்கிறார் –
எம்தமக்கு உரிமை செய் -துச்சாச நச்சாபி சமீஷ்ய கிருஷ்ணாம் அவேஷமாணான் க்ருபணான் பதீம்ஸ்தான்
ஆதூய வேகேன விசம்ஜ்ஞ கல்பாம் உவாச தாஹீதீ ஹசன் ச சப்தம் –சபா பருவ   ஸ்லோகம் -89-56
ரஜஸ்வலையாய் இருக்கும் தன்மையையும் கணிசியாமல் தலை மயிரைப் பிடித்து மான பங்கம் செய்தானே
சந்தம் அல் குழலாள் -அழகு இருள்
அலக்கண் -மன வருத்தம்
இந்த்ரன் சிறுவன் -அர்ஜுனன் -யுதிஷ்ட்ரன் -யம தர்ம ராஜ புத்திரன் -பீமசேனன் -வாய் தேவ புத்திரன்-

அந்தகன் சிறுவன்
குருடன் பெற்ற பிள்ளை யாயிற்று
இத்தால் அறிவு  கேடு வழி வழி வருகிறது என்கை –
பிதாவானவன் கண் அஞ்ச வளர்க்க வளருகை அன்றிக்கே
தான் கண்டபடி மூலையடையே திரிந்தவன் –

அரசர் தமரசற் கிளையவன்
ராஷச ராஜாவான துரி யோதனனுக்கு பின் பிறந்தவன் –
துச்சாதனன் -என்றபடி –
அவன் கொண்டாடி வளர்க்க -செருக்காலே வளர்ந்தவன் என்று
தீம்புக்கு உறுப்பாக சொல்லுகிறது –
(யவ்வனம் -தன சம்பத்- பிரபுத்வம் – அவி விவேகம் நான்கும் இருந்தால் கேட்க வேண்டுமோ )

அணி யிழையைச் சென்று —
மஹோ உத்சவம் ஆகையாலே
ஆபரணங்களாலே அலங்க்ருதையாய் நின்றவள்
பக்கலிலே கிட்டி –

எந்தமக்குரிமை செய்யென-
சூதிலே உன்னையும் தோற்றார்கள்
நீ போந்து எங்களுக்கு இழி தொழில் செய் -என்ன –

தரியாது –
அவள் அந்ய சேஷத்வத்தை பொறுத்து இலள் ஆயிற்று –
இவ்வளவில் ஸ்வாமி யான நீ என் பக்கல் கிருபை பண்ண -வேணும் என்ன

ஆண் பிள்ளைகளான பர்த்தாக்கள் சந்நிதிஹிராய் இருக்க
தூரஸ்தனான கிருஷ்ணன் பேரைச் சொல்லுவான் என் என்று
எம்பாரைக் கேட்க
அறிந்தோமே -முன்பே சில ஸூரு ஸூரூ கேட்டு வைத்தாள் -போலும்
மஹத்யாபதி யம்ப்ராப்தே ஸ்மர்தவ்யோ பகவான் ஹரி –என்று
(வசிஷ்டர் சொல்ல கேட்டு இருக்கிறாளே )

இது தன்னைப் பட்டரைக் கேட்க
பர்த்தாவின் கையைப் பிடித்துப் போகா நின்றாலும்
இடறினால் அம்மே -என்னக் கடவது காண் -என்று அருளிச் -செய்தார்
அர்த்தம் அதாய் இருக்கச் செய்தே
விசைப்பு கிடந்தபடி காணும் -விசைப்பு -ஸ்நேஹாதிக்யம்
(எவ்வுயிர்க்கும் தாயாய் இருக்கும் வண்ணமே )

சந்தமல் குழலாள் –
சந்தம் என்று நிறம்
அல் -என்கிற இத்தால் இருளை லஷித்து ( அல்லும் பகலும் இருளும் பகலும் )
நிறம் இருண்ட குழலை உடையவள் என்னுதல் –
அன்றிக்கே
சந்தமல் குழலாள் –
சந்தனப் பூ மாறாத குழலை உடையவள் என்னுதல்

அவள் பட்ட அல்லல் உண்டு –துக்கம் அத்தை
துர் யோதாநாதிகள் உடைய ஸ்திரீகள் பட்டு –
அதில் தன்னேற்றமாக நூலும் இழந்தார்கள் ஆயிற்று –
அவர்களுக்கு துக்கம் நிலை நிற்கும்படி பண்ணினான் ஆயிற்று –

இந்திரன் -இத்யாதி -(ஸ்வாபதேசம் )
வலியார் சிலரை அபாஸ்ரயமாக பற்றினாலும்
தானே தாழ நின்று ரஷகனாக வல்லன் என்னும் இடத்தை சொல்லுகிறது–
த்ரௌபதிக்கு பர்த்தாகள் உதவிற்று இலர்-
அர்ஜுனனுக்கு இந்த்ரன் உதவிற்று இலன் –

————————————————————————–

பாண்டவர் தம்முடைய பாஞ்சாலி மறுக்கம் எல்லாம்
ஆண்டு அங்கு நூற்றுவர் தம் பெண்டிர் மேல் வைத்த அப்பன் மலை
பாண் தகு வண்டு இனங்கள் பண்கள் பாடி மது பருகத்
தோண்டல் உடைய   மலை தொல்லை மால் இரும் சோலை அதுவே –ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி–4- 3-6 –

பதவுரை

பாண்டவர் தம்முடைய–பஞ்சபாண்டவர்களுடைய (மனைவியாகிய)
பாஞ்சாலி–த்ரௌபதியினுடைய
மறுக்கமெல்லாம்–மனக் குழப்பத்தை யெல்லாம்
ஆண்டு–(தன்) திருவுள்ளத்திற்கொண்டு,
அங்கு–(அவள் பரிபவப்பட்ட) அப்போது (அத் துன்பங்களை யெல்லாம்)
நூற்றுவர் தம்–(துரியோதநாதிகள்) தூற்றுவருடைய
பெண்டிர் மேல்–மனைவியர்களின் மேல்
வைத்த–சுமத்தின
அப்பன்–ஸ்வாமியான கண்ண பிரான் (எழுந்தருளி யிருக்கிற)
மலை–மலையானது :
பாண் தரு–பாட்டுக்குத் தகுதியான (ஜன்மத்தை யுடைய)
வண்டு இனங்கள்–வண்டு திரளானவை
பண்கள்–ராகங்களை
பாடி–பாடிக் கொண்டு
மது–தேனை
பருக–குடிப்பதற்குப் பாங்காக (ச் சோலைகள் வாடாமல் வளர)
தோண்டல்–ஊற்றுக்களை யுடைய மலையாகிய
தொல்லை மாலிருஞ் சோலை அதே–அநாதியான அந்த மாலிருஞ் சோலையேயாம்.

பாண்டவர் தம்முடைய பாஞ்சாலி மறுக்கம் எல்லாம்
இவர்களைப் பாண்டவர்கள் என்கையாலே
அவளையும் பாஞ்சாலி என்று
ஆபி ஜாத்யம் சொல்லுகிறது –

தம்முடைய -என்கையாலே
இவர்களுடைய அபிமானத்திலே அவள் ஒதுங்கி
புருஷணாம் அபாவேந ஸர்வா நார்யா பதி வ்ரதா -என்கிற
பட்டாங்கில் பார தந்தர்யமும் ஸஹ தர்ம சாரித்வமும் தோற்றுகிறது

மறுக்கம் எல்லாம்
துரியோத நாதிகள் ஸபா மத்யத்திலே கொடு போய் துஸ் ஸாதனன் பரிபவிக்க
அத்தாலே ஈடுபட்டு க்ருத்யக்ருத்ய விவேக ஸூன்யையாய்
நெஞ்சு மறுகி அந்த சபையில் இருந்தவர்கள் எல்லாரையும் தனித்தனி முறைமை சொல்லி
சரணம் புக்க அளவிலும்

இவன் சோற்றை யுண்டோமே -என்று வயிற்றைப் பார்ப்பார்
துரியோதனுடைய மாத்சர்யத்தைப் பார்ப்பார்
தர்ம புத்ரனுடைய தர்ம ஆபாச ப்ரதிஜ்ஜையைப் பார்ப்பார்
மற்றும் தம் தாம் கார்யம் போலே தோற்றுகிற அஞ்ஞான பிரகாசத்தை ஞானமாக நினைத்து நிலம் பார்ப்பாராய்

இவளை அபிஜாதை யானாள் ஒரு ஸ்த்ரீ என்றும்
பதி வ்ரதை -என்றும்
ஸஹ தர்ம ஸாரி -என்றும் பாராமல்
துஸ்ஸாதனன் நலிவதைப் பார்த்து இருக்க

இவளும் தன்னுடைய அகதித்வத்தை அனுசந்தித்து
சங்க சக்ர கதா பாணே –நீயும் என்னைப் போலவோ –
துவாரகா நிலயா -பெண் பிறந்தார் வருத்தம் அறிந்து ரஷித்த பிரகாரங்களை மிகையோ
அச்யுத -ஆஸ்ரிதர் தங்கள் நழுவிலும் கை விடான் என்கிறது -வடயஷ ப்ரசித்தியோ
கோவிந்த -ஸர்வஞ்ஞராய் ஸர்வ ஸக்தர்களையோ ரஷித்தது
புண்டரீகாக்ஷ –அக வாயில் கிருபை காணலாம் படியாய் யன்றோ திருக் கண்களில் விகாஸம் இருப்பது –
உனக்கும் ஏதேனும் ஸ்வப்னம் முதலான சங்கோசங்களும் உண்டோ என்றால் போலே சொல்லி
ரக்ஷமாம் சரணாம் கத -ரஷக அபேக்ஷை பண்ணின அளவிலும்

ருணம் ப்ரவ்ருத்தம் இவ -என்றால் போலே
சில கண் அழிவுகளோடே ஸ்ரீ கஜேந்த்ரனுடைய ரக்ஷக அபேக்ஷையை நினைத்து வந்தால் போலே
வந்து முகம் காட்ட ஒரு வழியும் காணாமல்

அவன் பட்ட மறுக்கம் அறியாதே
அவனும் இவர்களைப் போலே கை விட்டான் ஆகாதே என்று
இவள் நினைத்து முன்பு கேட்டு வைத்த சுருசுருப்பையும் காற்கடைக் கொண்டு
லஜ்ஜா நிபந்தனமான சக்தியால் வந்த அசக்தியையும்
அந்த லஜ்ஜையையும் மிடுக்கலோடே கை விட்ட அளவிலே
(இரு கையும் விட்டேனோ திரௌபதியைப் போலே )

எல்லா அவஸ்தையிலும் தியாக விசிஷ்ட ஸ்வீகாரம் ஆகையால்
கழித்து உடுத்தமை தோன்றாமல் உடுத்துக் கழித்தால் போலே நிற்கும்படி
திரு நாம பிரபாவம் உதவும்படியான
சங்கல்ப மாத்ரத்தாலே வஸ்திரம் மாளாமல்
மறுக்கம் எல்லாம் மாண்டு –(துச்சானாதிகளும் )மாண்டு இவளை மயிர் முடிப்பித்து
வதார் ஹரையும் கரிக் கட்டையையும் மன்னரும் பிள்ளையும் ஆக்கும் அளவாக நினைத்து இறே
எல்லா மாண்டு -என்கிறது

ஆண்டு அங்கு நூற்றுவர் தம் பெண்டிர் மேல் வைத்த
இவ்வளவிலும் பர்யவசியாமல் நூற்றுவர் தம் பெண்டிர் மேலே இம்மறுக்கம் எல்லாம்
வாங்கி வைத்தால் இறே இவள் மறுக்கம் மாண்டது என்னாலாவது

அன்றியே
இவள் மறுக்கம் எல்லாம் தான் ஏறிட்டுக் கொண்டு ருணம் ப்ரவ்ருத்தம் என்று தான் மறுகையாலே
வ்யாதி யுடையவனை வியாதியாளன் என்னுமா போல் இன்றிக்கே
தானே பூண்டு கொள்கையாலே ஆண்டு என்கிறது
அந்த ஆட்சி முடிவது அவர்கள் மேல் வைத்தால் இறே என்னவுமாம்

(நோய் உடையவன் நோயாளி போல் மறுக்கம் ஆளி ஆண்டு என்கிறது )

அன்றிக்கே
மாண்டு அங்கு என்றது
மாண் தங்கு என்று என்று பதமாய்
மாட்சிமை தகுகிற ஸ்த்ரீகள் என்னுதல் –

ஆண் தங்கு -என்று பதமாய்
ஆண்மை அமர்ந்த நூற்றுவர் என்னவுமாம்
யுத்த உன்முகராய் படுகையாலே ஆண்மை அமருகையும் குறை இல்லை இறே
அங்கு அங்கு வைத்த என்னவுமாம்

அப்பன் மலை
ஸ்வ ஸங்கல்பத்தாலே அந்யோன்ய தர்சனம் இன்றிக்கே இருக்கச் செய்து இறே இது எல்லாம் செய்தது
இது எல்லாம் திரு நாமம் தானே இறே செய்தது
இவ் வுபகாரம் எல்லாம் தோற்ற அப்பன் என்கிறார் –
திரு நாம பிரபாவம் தானே அவனையும் ஸ்வ ஸங்கல்ப பரதந்த்ரன் ஆக்கும் போலே காணும்
தூத்ய ஸாரத்யங்கள் பண்ணிற்றும் இவள் சொன்ன திரு நாமத்துக்காகவே என்னுதல்
திரு நாமம் சொன்ன இவள் தனக்காக என்னுதல் –

பாண் தகு வண்டு இனங்கள் பண்கள் பாடி மது பருகத்
பண்ணைப் பாண் என்று பண்ணிலே பாடத் தகுதியான வண்டினங்கள் என்னுதல்
திருப் பாண் ஆழ்வார் போல் பண்ணிலே பாடுபவர் போல் என்னுதல்

பருக என்றது
வர்த்தமானமாய்
பருகப் பருக ஊற்று மாறாதே செல்லும் நீர் நிலமாய்
பூக்களை யுடைத்தான சோலையே நிரூபகமான மலை

தோண்டல் உடைய   மலை தொல்லை மால் இரும் சோலை அதுவே
தோண்டல் உடைய-ஊற்று மாறாதே
இம் மலைக்குப் பழைமை யாவது

அநாதியான திருமலை ஆழ்வார் தாமே திருவனந்த ஆழ்வான் என்னும் இடம் தோற்றுகிறது –

—————–

அந்தகன் சிறுவன் -அறிவு கேடு வழி வழியாக வந்தது என்பதைக் காட்ட
அரசர் தம் அரசன் -அஹங்காரம் தலை மண்டின படி

ஆண்பிள்ளைகளான பார்த்தாக்கால் சந்நிஹிதராய் இருக்க தூரஸ்தனான கிருஷ்ணனைச் சொல்லுவான் என் என்று எம்பாரைக் கேட்க
முன்பே வசிஷ்டர் மஹத்யாபதி ஸம் ப்ராப்தே ஸ்மர்த்தவ்யோ பகவான் ஹரி -சபா பர்வம் -90-41–என்று அருளிச் செய்தார்

இது தன்னை பட்டரைக் கேட்க
நாயகன் கைபிடித்து நாயகி செல்லும் கால் இடறினால் அம்மே -என்னக் கடவது காண் -என்று அருளிச் செய்தார்
அவ்வண்ணமே எவ்வுயிர்க்கும் தாயாய் இருக்கும் கண்ணனான பகவானைப் பற்றினாள்

இத்தால் சொல்லிற்று ஆயிற்று
திரௌபதி நூல் தங்கினபடியும்
மற்றையோர் நூல் இழந்த படியும்
இவள் நூலுக்கு -மங்கள ஸூ த்ரத்துக்கு வாசி என் என்னில்
கோவிந்தா என்று நாக்கு வேரூன்றின கழுத்துக்கு ஒரு குண ஹானி இன்றிக்கே

ப்ரதிஜ்ஜையாலே குழல் விரித்து இருந்த இவள் குழலை முடிப்பித்தவாறே அவர்கள் குழல் விரித்தார்கள்

நூல் வாசி இவளுக்கு உண்டாய்த்து -கால் வாசி இருந்தபடியால் என்றபடி
அவன் காலைப்பற்றி இறே இவள் நூல் கழுத்திலே தங்கியது என்றபடி
இந்திரன் சிறுவன் -திரௌபதிக்கு பர்த்தாக்கள் ரக்ஷகர் அல்லாதாப் போல் அர்ஜுனனுக்கு இந்திரன் ரக்ஷகன் ஆக வில்லையே
ஸர்வ ரக்ஷகனான அகார வாஸ்யனான கிருஷ்ணனே ரக்ஷகன் ஆனான் இருவருக்கும் –

நூல் என்று ஸாஸ்த்ரமாய் -அதற்கு வாசி -அவன் கால் வாசியே -சரணாகதியே -இதுவே பரம தர்மம்-சகல ஸாஸ்த்ர ஸம்மதம்

ஆக
திருவல்லிக்கேணியான் ப்ரமேய பூதன்
ஆழ்வார் ப்ரமாதா
அருளிச் செயல் பிரமாணம்
இம்மூன்றுக்கும் பல்லாண்டு பாடுவதே ஸ்ரீ வைஷ்ணவ கிருத்யம்

ஆழ்வார்கள் வாழி அருளிச் செயல் வாழி
தாழ்வதும் இல் குரவர் தாம் வாழி ஏழ் பாரும்
உய்ய அவர்கள் உரைத்தவைகள் தாம் வாழி
செய்ய மறை தன்னுடனே சேர்ந்து –


———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ உ வே வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading