ஸ்ரீ பாஷ்யார்த்த தீபிகை — நான்காம் அத்யாயம் — நான்காம் பாதம் —

ஸ்ரீ பாஷ்யம் -மங்கள ஸ்லோகம்

அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூத வ்ராத ரக்ஷைக தீஷே
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ருஹ்மணி ஸ்ரீ நிவாஸே
பவது மம பரஸ்மின் சேமுஷீ பக்தி ரூபா –

பாராசார்ய வச ஸூதாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத் த்ருதாம்
சம்சாராக்னி விதீபன வ்யபகாத ப்ராணாத்மா சஞ்சீவி நீம்
பூர்வாச்சார்ய ஸூரஷிதாம் பஹூ மதி வ்யாகாத தூரஸ்தி தாம்
ஆ நீதாம் து நிஷாஷரை ஸூ மனஸோ பௌமா பிபந்து அந்வஹம்–

—————————

முதல் பாதம் -ஆவ்ருத்தி பாதம் -உபாசகனின் கடைசி சரீரத்தில் புண்ய பாபங்கள் ஓட்டுவது இல்லை என்பதும் -பக்தியும் -ஆராயப்படுகின்றன –
இரண்டாம் பாதம் –உத்க்ராந்தி பாதம் -முக்தி பெரும் ஜீவன் சரீரத்தில் இருந்து கிளம்பும் விதம் ஆராயப்படுகிறது
கதி பாதம் -பரம பததுக்கு அழைத்துச் செல்லப்படும் வித்யா பலம் கூறப்படுகிறது
முக்தி பாதம் -ப்ரஹ்மத்தை அடைந்த முக்தன் பெரும் ஐஸ்வர்யம் கூறப் படுகிறது

இப்படி இவ் வத்தியாயத்தில் முதல் பாதத்தில்
பாபத்தின் அஸ்லேஷ விநாஸ ரூபமான ப்ரஹ்ம வித்யா பலத்தை நிரூபித்து

இரண்டாம் பாதத்தில்
ஸ்தூல தேஹ ஹானி ரூபமான வித்யா பலத்தையும்

மூன்றாம் பாதத்தில்
அர்ச்சிராதி மார்க்கத்தால் ப்ரக்ருதி மண்டலத்தை அதி க்ரமித்து -விரஜையைத் தாண்டிய பிற்பாடு –
ஸூஷ்ம தேஹ தியாக ரூபமான வித்யாஸத்தையும்
நிரூபித்தார்

இனி நான்காம் பாதத்தில்
ப்ரக்ருதி மண்டலத்தைக் கடந்த வித்வானுக்கு ஸ்ரீ வைகுண்டத்தில் ஆனந்த மய திவ்ய ரத்ன மண்டபத்திலே
திவ்ய ஸூரிகளின் குழாத்தில் பராங்குசாதி பூர்வாச்சார்யர் முன்னிலையில் திரு வனந்தாழ்வான் எனும் பர்யந்தத்தில்
எழுந்து அருளி இருக்கும் ஸ்ரீ யபதியான ஸ்ரீ மன் நாராயணனின் ஸாமீப்யம் ஸாலோக்யம் ஸாரூப்யம் ஸாயுஜ்யம்
முதலியவற்றை அடைந்து பரிபூர்ண ப்ரஹ்ம அனுபவம் என்னும் ஆனந்த பரிவாஹ மாகிய
ஸர்வ தேச ஸர்வ கால ஸர்வ அவஸ்தைகளுக்கும் ஏற்ற ஸகல கைங்கர்யங்களையும்
நிரூபிக்கிறார் என்று பாத சங்கதி –

———————————————————————————————————————————-

அதிகரணம் -1- சம்பத்ய ஆவிர்பாவாதி கரணம் -3 ஸூத்ரங்கள் –
முக்தாத்மா ஸ்வரூபத்தின் விளக்கத்தை அடைகிறான் எனபது நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -2-அவிபாகே ந த்ருஷ்டவாதிகரணம் -1 ஸூத்ரம்-
முக்தன் பர ப்ரஹ்மத்தை விட்டு பிரியாதவன் என்று எண்ணிய படியே அனுபவிக்கிறான் என்று நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -3-ப்ரஹ்மாதிகரணம்—3 ஸூத்ரங்கள் –
ஸ்வேன ரூபேண ஸ்வரூபம் பெறுவது அல்லாமல் -அபஹதபாப்மா போன்ற எட்டு வித தன்மைகளையும்
முக்தாத்மா அடைகிறான் என்று நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -4-சங்கல்பாதி கரணம் – 2 ஸூத்ரங்கள்-
தனது சங்கல்பத்தினால் மட்டுமே முக்தி நிலையில் ஜீவன் தன விருப்பங்களை அடைகிறான் என்று நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -5-அபாவாதி கரணம் –7 ஸூத்ரங்கள்-
முக்தன் சில கட்டங்களில் சரீரம் உள்ளவனாயும் சில கட்டங்களில் சரீரம் அற்றவானாகவும் உள்ளான் என்று கூறப்படுகிறது –

அதிகரணம் -6-ஜகத் வ்யாபார வர்ஜாதி கரணம் -6 ஸூத்ரங்கள்-
ஸ்ருஷ்டியாதி செயல்பாடுகள் முக்தனுக்கு இல்லை -போகத்திலே மட்டுமே சாம்யம் –
சம்சாரத்துக்கு முக்தன் திரும்புவது இல்லை -என்பது போன்றவை நிரூபிக்கப் படுகின்றன-

———————————————————————————————————————————–

அதிகரணம் -1- சம்பத்ய ஆவிர்பாவாதி கரணம் –

முக்தாத்மா ஸ்வரூபத்தின் விளக்கத்தை அடைகிறான் எனபது நிரூபிக்கப் படுகிறது-

4-4-1-சம்பத்ய ஆவிர்பாவ -ஸ்வேந சப்தாத் —

சாந்தோக்யம் -8-112-3-ஏவ மே விஷ சம்ப்ரசாத அஸ்மாத் சரீராத் சமுத்தாய பரஞ்சோதி ரூப சம்பத்ய
ஸ்வேந ரூபேண அபி நிஷ்பத்யதே -இயல்பான நிலை-

பரம் ஜ்யோதிஸ்ஸை அடைந்த ஜீவனுக்கு ஸ்வ ஸ்வரூப ஆவிர்பாவம் விளக்கப் படுகிறதா
ஸாதிக்கப்படும் வேறு ரூபத்தோடு சம்பந்தம் விளக்கப் படுகிறதா
என்று சம்ஸயம்

ஸ்வரூபத்திற்கு ஸூஷுப்த்யாதி தசையில் ஆனந்த அனுபவம் இல்லாமையாலும்
ஸ்வரூபம் மட்டும் எப்போதும் ஆவிர்பூதமாகையாலும்
ஸ்வர்க்காதிகள் போல் ஸாத்யமாயும் ஸூ கத்திற்கே உறைவிடமாயும் உள்ள தேகத்தோடு சம்பந்தம் விளக்கப் படுகிறது –
அதனால் அபி நிஷ் பத்யதே என்ற ஸப்தம் முக்ய அர்த்தம் உள்ளதாகும்
என்பது பூர்வ பஷி
புதிதான ரூபம் என்பர் –
துக்கத்தின் நீக்கம் என்பதே புருஷார்த்தம் ஆகாது என்பர் –

இத்தை நிரஸிக்கிறார் –

முக்தி பெரும் ஜீவனுக்கு அதிக சுக அனுபவம் உண்டு என்பதை
சாந்தோக்யம் -2-8–ச ஏகோ ப்ராஹ்மண ஆனந்த ச்ரோத்ரி யஸ்ய ச அகா மஹதச்ய-

அது மட்டுமே ப்ரஹ்மத்தின் ஆனந்தம் -வேதங்களில் வல்ல அந்தணன் போகங்களுக்கு ஏங்குவது இல்லை என்றும்

தைத்ரியம் -2-7-ரசம் ஹி ஏவாயம் லப்த்வா ஆனந்தீ பவதி -என்றும் சொல்லிற்றே

சித்தாந்தம் –
ஸ்வரூபத்தின் விளக்கமே –
ஸ்வேன ரூபேண –ரூப பதத்துக்கு ஸ்வ விசேஷணம்-
ஞானம் விரிவு பெற்ற நிலையே -ஸ்வரூப விளக்கம் என்றது –

சம்பத்ய -பரம் ஜ்யோதிஸ்ஸை அடைந்து ஸ்ரீ வைகுண்டத்தில் ஆனந்தமய திவ்ய மணி மண்டபத்தில்
திருவநந்தாழ்வான் ஆகிற திவ்ய பர்யங்கத்தின் நடுவே எழுந்து அருளி இருக்கும்
பரம புருஷனை ஸ்ரீ தேவியுடன் நெருங்கி
ஆவிர்பாவ -அபஹத பாப்மத்வாதி குண விசிஷ்டமான ஜீவன் ஸ்வ ஸ்வரூபத்துக்கு கர்ம க்ருத
தேஹ சம்பந்தம் மூலமாக திரோதானம் அற்று சுருக்கம் அற்ற ஞான குணகனாய்த் தோன்றுவர் என்று ஸ்ருதியால்
ப்ரதிபாதிக்கப் படுமே தவிர ஸாத்யமான தேகத்தின் சம்பந்தம் அன்று
ஏன் எனில்
ஸ்வேந சப்தாத்-ஸ்வேந ரூபேண அபி நிஷ்பத்யதே-என்ற இடத்தில் –
ஸ்வேந-என்ற விசேஷண வாசக ஸப்தம் இருப்பதால் என்றபடி

இதனால் இங்கு ஸாத்யமாக ரூப சம்பந்தம் கருதப்பட்டதால் -அந்த ரூபமும் தனக்கு அசாதாரணம் ஆகையாலே –
ஸ்வேந-என்று விசேஷிப்பதால் பயனில்லை என்ற நிலை ஏற்படும் என்று கருத்து
ஆத்மாவுக்கு ஸ்வபாவ ஸித்தமான ரூபமே ஸ்வ ஸப்தார்த்தம் என்று கருத்து
இவ்வர்த்தத்தை மேல் இரு ஸூத்ரங்களும் விளக்கும்

ஸ்வ ஸ்வரூபம் மட்டும் -அஹம் ஜானாமி -என்று நித்யமாய் ஆவீர் பூதமாகையாலே
பரம் ஜ்யோதிஸ்ஸை அடைந்த பிறகு ஸ்வ ஸ்வரூப பிராப்தி என்பது பொருந்தாதே
என்று சங்கித்துப்
பரிஹரிக்கிறார் –

———————————————————

4-4-2-முக்த பிரதிஜ்ஞா நாத் —

விடு பட்ட ஸ்வரூபமே -இப்படியே உறுதியாகிறது –
ஸ்வேன ரூபேண அபிநிஷ்பத்யதே என்று
கர்மத்தின் தொடர்பு காரணமாக மறைவாக இருந்த ஸ்வரூபம் வெளிப்பட்டது
என்று உறுதி படக் கூறியது –

யதா -நிகில ஹேய ப்ரத்ய நீக கல்யாணை கதான ஜென்மாதி காரணம்
ஸமஸ்த வஸ்து விலக்ஷண -சர்வஞ்ஞ -ஸத்ய சங்கல்ப-ஆஸ்ரித வாத்சல்யைக ஜலதி –
பரம காருணிக -நிரஸ்த சமாப்யதிக சம்பாவன பர ப்ரஹ்மா பிதாவ பரம புருஷோஸ் தீதி சப்தாத் வகம்யதே-

முக்த -கர்ம சம்பந்தத்தாலான தேகத்தில் இருந்து விடுபட்ட ஜீவனே -ஸ்வேன ரூபேண அபிநிஷ்பத்யதே-
என்று சொல்லப்படுகிறான் -தேஹியான ஸம்ஸாரி ஜீவன் அல்லன்
பிரதிஜ்ஞா நாத் —ஏதம் த்வேவ தே பூயோனு வ்யாக்யாஸ் யாமி -என்று கர்ம சம்பந்தத்தாலான
தேஹ சம்பந்த க்ருதமான ஜாக்ரதாதி தசைகளில் இருந்தும் விடுபட்ட ஸ்வரூபமுள்ள ஜீவனே
இங்கு பேச வேண்டியவனாக ப்ரதிஜ்ஜை செய்ததால் என்றவாறு

இங்கு அவன் ஜீவ ஸ்வரூபம் நித்ய ப்ராப்தமானாலும் கர்மம் என்னும் அவித்யையால் மறைக்கப் பட்டவனுக்கு
மறைவின் நீக்கமே-அபிநிஷ்பத்தி – எனப்படுகிறது என்பதாம்

இப்படி ஸ்வரூப ஆவிர் பாவத்திலும் யுக்தியால் இவ்வர்த்தம் அபிநிஷ்பன்னம் ஆகிறது –
அபிநிஷ்பத்யதே -என்னும் இடத்தில் போலே அபிநிஷ்பத்தி -என்ற சொல்லின் பிரயோகத்தினைக் காணலாம்
ஆனாலும் ஸ்வரூப மாத்ர ஆவிர்பாவத்திற்கு புருஷார்த்தம் எப்படிக் கூடும் என்பதற்கு விடை அளிக்கிறார் –

——————————————————————————-

4-4-3-ஆத்மா ப்ரகரணாத்

சாந்தோக்யம் -8-7-1-ய ஆத்மா அபஹதபாப்மா -விஜர-விம்ருத்யு விசோக விஜிகத்ச அபிபாச சத்யகாம சத்ய சங்கல்ப -என்றது
பரமாத்மாவை குறித்து அல்ல ஜீவாத்மாவைக் குறித்தே -என்று
ப்ரஹ்ம ஸூத்ரம் -1-3-18-உத்தராச் சேத் ஆவிர்பூத ஸ்வரூப வஸ்து -விளக்கத்திலே பார்த்தோம்

இதனையே சௌநக பகவான் –
யதா ந க்ரியதே ஜ்யோத்ஸ்நா மலப்ரஷாள நாத்மணே
தோஷ ப்ரஹாணான் ந ஜ்ஞான மாத்மந க்ரியதா ததா
யதோதபா ந காணாத் க்ரியதே ந ஜலாம்பராம்
ஸ்வேத நீயதே வ்யக்திம் அசத சம்பவ குத
ததா ஹேய குணத் வம்சாத் அவ போத தயோ குணா
பிரகாச்யந்தே ந ஜ்ஞாயந்தே நித்யா ஏவ ஆத்மா நோ ஹி தே -என்று

வைரம் அழுக்கு நீக்கி புதிதான ஒளி வராதே
கிணறு வெட்டி நீரை விட வேண்டாமே
தாழ்வான குணங்கள் நீங்க இயல்பான ஆத்மா ஸ்வரூபம் வெளிப்படும்
எனவே பரமாத்மாவை அடைந்து புதிதான ஸ்வரூபம் அடையாமல் தன்னுடைய ஸ்வரூபம் விளங்கப் பெறுகிறான் –

ஆத்மா -தேஹாதிகளை விட்ட ஸ்வரூபத்தோடு உள்ள ஆத்மா ஸ்வரூபத்தால் அபஹத பாப்மாத்வாதிகளான
எட்டு குணங்கள் உள்ளவனாக பிரஜாபதி வாக்யத்தால் சொல்லப் படுகிறான்
அத்தகைய ஆத்மாவுக்கு இங்கு ஆவிர்பாவம் கூறப்படுகிறது
ப்ரகரணாத் -அத்தகைய ஆத்மாவையே-ஏதம் த்வேவ தே பூயோனு வ்யாக்யாஸ் யாமி-என்று
ஏதம் என்று சொல்லும் பிரகரணத்தால் என்றபடி

ஆகையால் தானே குண அஷ்டகம் உடையவனானாலும் கர்மம் என்னும் அவித்யையால் மூடப்பட்ட
ஸ்வரூபத்தைக் கொண்டவனாகையாலே பரஞ்சோதியை அடைந்தே மறைவு நீங்கப் பெறுகிறான் –
ஆகவே ஆவிர்பாவம் என்று இங்கே சொல்கிறது என்றவாறு –

ஞான சுருக்கம் என்னும் அசுத்தம் விலகிப் பெற்ற ஸித்த ஸ்வரூபமே -ஸாத்யமான முக்தி
எப்படி – ஸித்தமான வ்ரீஹீ போல்வன ப்ரோஷணத்தால் சாத்யமாகிறதோ அதே போல் இங்கும்
ஆனால் அபி நிஷ் பத்தி சப்தத்துக்கு அர்த்தமாவது -முதலில் ஒரு பொருள் அனுகூலமாகவும்
பின்பு அனுபவத்தால் மிகவும் அனுகூலமாகவும் ஆவது போல்
ஸூக ஸ்வரூபனான ஆத்மா முக்தி தசையில் மிக்க அனுகூலமாகத் தோன்றுகிறான் என்று கருத்து

ஞானச் சுருக்கம் நீங்கி ஞான மலர்ச்சியை அபி வ்யக்தி யாகும் –
இந்த ஞானம் மீண்டும் சுருங்க ஹேதுவே இல்லை யாகையால் இந்த ஞான மலர்ச்சி நித்யம்
இப்படி தர்ம பூத ஞான மலர்ச்சியை இட்டு தர்மியைச் சொல்வதில் குறை இல்லை –

———————————————————————————————————————

அதிகரணம் -2-அவி பாகேந த்ருஷ்டவாதிகரணம் –

முக்தி தசையில் எல்லா பந்தங்களில் நின்றும் விடுபட்ட ஜீவன் தன்னை
பரமாத்மாவை விட வேறுபட்டவனாக அனுபவிக்கிறானா
அல்லது அஹம் ப்ரஹ்மாஸ்மி -என்றா -என்று சம்சயம்
இதுவே சங்கதி –

முக்தன் பர ப்ரஹ்மத்தை விட்டு பிரியாதவன் என்று எண்ணிய படியே அனுபவிக்கிறான்
என்று நிரூபிக்கப் படுகிறது

4-4-4-அபி பாகேந த்ருஷ்டத்வாத் –

வேறுபடாமல் உள்ளதாகவே காணப் படுகிறது –
அவனுக்கு பிரகாரமாக உள்ளதால் தன்னைத் தனிப்படாமல் உள்ளதாகவே அனுபவிக்கிறான்

தைத்ரியம் -ஸோ அஸ்நுதே சர்வான் காமான் சஹ ப்ரஹ்மணா விபச்சிதா –
முக்தன் சர்வஜ்ஞனான ப்ரஹ்மத்துடன் இருந்து அனைத்து குணங்களையும் அனுபவிக்கிறான் –

முண்டக -3-1-3-யதா பச்ய பச்யதே ருக்ம வர்ணம் கர்த்தாரேசம் புருஷம் ப்ரஹ்ம யோநிம்
ததா வித்வான் புண்ய பாபே விதூய நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி -என்று
பொன் போன்ற அழகிய திருமேனி கொண்டவனும் இந்த உலகின் காரணமானவனும் –
அனைத்தையும் நியமிப்பவனும் -புருஷன் என்று அழைக்கப் படுபவனும்
எப்போதும் அனைத்துக்கும் காரணமாக உள்ளவனும் ஆகிய பரமாத்மாவை முக்தாத்மா எப்பொழுது காண்கிறானோ
அப்போதே தனது புண்ய பாபங்களை விடுகிறான்
தோஷம் அற்றவனாக பாபங்கள் இல்லாத உள்ளிட்ட எட்டு குணங்கள் நிறையப் பெற்றவனாக மாறுகிறான் –
ப்ரஹ்மத்துடன் ஒற்றுமை அடைகிறான் –

ஸ்ரீ கீதை -14-2- இதம் ஜ்ஞானம் அபாஸ்ரித்ய மம சாதர்ம்யம் ஆகதா-சர்க்கே அபி நோபஜாயந்தே பிரளயே ந வ்யதந்தி ச -என்று
இப்படிப்பட்ட அறிவைப் பெற்றவர்கள் என்னை ஒத்த குணங்களை அடைகின்றார்கள் –
அவர்கள் சிருஷ்டியின் போது தோன்றுவதும் இல்லை -பிரளயத்தின் போது துன்பம் அடைவதும் இல்லை

நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி-என்றும்
மம சாதர்ம்யம் ஆகதா-என்றும் ஸ்ருதி ஸ்ம்ருதிகள்
பிரித்துச் சொல்வதால் முக்தன் தன்னைத் தனிப் பட்டவ்வனாகவே அனுபவிக்கிறான்
என்பர் பூர்வ பஷி

அப்படி அல்ல –
முக்தன் தன்னைத் தனிப் படாதனாகவே அனுபவிக்கிறான் –
தனது ஆத்மாவை உள்ளபடி காண்கிறான் –

அபி பாகேந -முக்தன் தன் ஆத்மாவுக்கும் ஆத்மாவாய் -ஸர்வ அந்தர்யாமியாய் உள்ள பரமாத்மாவை
அஹம் ப்ரஹ்மாஸ்மி என்று தன்னோடு இரண்டற சேர்ந்தவனாகவே அனுபவிக்கிறான்
த்ருஷ்டத்வாத் –ஆத்மேதி தூப கச்சந்தி க்ராஹ யந்திச -என்ற நியாயப்படி
உபாஸன தசையில் உள்ளது உள்ளவாறு பரமாத்மாவை ஆத்மாவாகக் கொண்ட
ஸ்வ ஆத்மாவை ஸாஷாத் கரிப்பதால் என்றபடி

ஆகவே உபாசனம் செய்தபடியே பலன் ஆகையால் பல திசையிலும் முக்தன் அஹம் ப்ரஹ்மாஸ்மி
என்று அனுபவிக்கக் குறையில்லை
தத் த்வம் அஸி
அயமாத்மா ப்ரஹ்ம -என்று ஜீவனுடன் சாமானாதி கரண்யமும் -விசேஷண விசேஷ்ய பாவம் –
ய ஆத்மனி திஷ்டன்
யஸ்ய ஆத்மா சரீரம் -என்று சொல்லப்பட்ட சரீராத்மா பாவத்தை அடிப்படையாகக் கொண்டது

இங்கு ஸ்வரூப ஐக்யம் பொருள் அல்ல
ஸாம்யத்தையே சொல்கிறது
பிரகார பூதனாய் இருந்தே ஸகல கல்யாண குண விசிஷ்டனாய் அனுபவிக்கிறான்
என்று அர்த்தத்தைச் சொல்கிறது –

ப்ரஹ்மத்துடன் ஜீவனுக்கு உள்ள ஒற்றுமை
சாந்தோக்யம் -6-8-7-தத் த்வம் அஸி–அந்த பரம் பொருள் நீயே -என்றும் –

ப்ருஹத் -2-5-19-அயம் ஆத்மா ப்ரஹ்ம -இந்த ஆத்மா ப்ரஹ்மம் -என்றும்

சாந்தோக்யம் -6-8-7-ஜகத் ஆத்ம்யமிதம் சர்வம் -அனைத்தும் ஆத்மாவை பிரகாரமாகக் கொண்டது -என்றும் –

சாந்தோக்யம் -3-14-1-சர்வம் கல்மிதம் ப்ரஹ்ம -இவை அனைத்தும் ப்ரஹ்மம் -என்றும்

அவனது பிரகாரமாகவே -அவனை ஆத்மா என்றும் தன்னை சரீரமாகவும் உணர்கிறான் –

சதபத ப்ரஹ்மணம்-ய ஆத்மநி திஷ்டன் ஆத்மநி அந்தரோ யமாத்மா ந வேத யஸ்ய ஆத்மா சரீரம்
ய ஆத்மா நமந்தரோ யமயதி ச த ஆத்மா அந்தர்யாம்ருத -என்று
எந்த பரம் பொருள் ஜீவனின் உள்ளும் புறமும் பரவி உள்ளானோ -யார் இப்படி உள்ளதை ஜீவன் அறியாமல் உள்ளானோ
யாருக்கு இந்த ஜீவன் சரீரமோ -யார் ஜீவனின் உள்ளே புகுந்து நியமிக்கிறானோ-
அழிவு இல்லாத அந்தப் பரம் பொருளே உனக்கு அந்தர்யாமி -என்றது

தைத்ரிய ஆனந்த வல்லி-அந்த ப்ரவிஷ்ட சாஸ்தா ஜநா நாம் சர்வாத்மா -என்று
அனைவருக்கும் ஆத்மாவாக உள்ள பரம் பொருள் ஜீவனின் உள்ளே புகுந்து நியமிக்கிறான் -என்றும்

இதையே ப்ரஹ்ம ஸூத்ரம் -1-4-22-அவஸ்தி தேரிதி காச க்ருதஸ்ந -என்று முன்பே பார்த்தோம் –

ஆகவே முக்தி பெற்றவன் -அஹம் பிரஹ்மாஸ்மி–நான் ப்ரஹ்மமாகவே உள்ளேன் என்ற எண்ணத்துடன்
ப்ரஹ்மத்தை விட்டு அகலாமல் அனுபவிக்கிறான்

ப்ரஹ்ம ஸூத்ரம் –
4-4-8-சங்கல்பா தேவதத் ஸ்ருதே -என்றும்

2-1-2-அதிகம் து பேத நிர்த்தேசாத் -என்றும் –

3-4-8-அதிகோப தேசாத்-என்றும்

ஜீவனைக் காட்டிலும் ப்ரஹ்மம் வேறு பட்டவனே -என்று பார்த்தோம் –

—————————————————————————————————-

அதிகரணம் -3-ப்ரஹ்மாதிகரணம்-

அவித்யை நீங்கி ஸ்வரூபம் ஆவிர்பாவம் சொல்லிற்று
எந்த ஸ்வரூப ஆவிர்பாவம் -இரு வகை சுருதிகள் -இரு வகை விளக்கம் உண்டே -என்று சங்கதி
இந்த ஜீவனின் ஸ்வரூபம் அபஹத பாப்மாத் வாதி அஷ்ட குணங்களுடன் கூடிய சைதன்ய மாத்ரமா
அல்லது இவ்விரண்டும் ஸ்வபாவ ஸித்தமா என்று சம்சயம்
குண விஸிஷ்ட பக்ஷத்தை முதலில் காட்டுகிறார் –

ஸ்வேன ரூபேண ஸ்வரூபம் பெறுவது அல்லாமல் –
அபஹதபாப்மா போன்ற எட்டு வித தன்மைகளையும் முக்தாத்மா அடைகிறான்
என்று நிரூபிக்கப் படுகிறது –

4-4-5-ப்ராஹ்மேண ஜைமினி உபன்யாசாதிப்ய-

ப்ரஹ்மத்தின் குணங்களால் என்று உபன்யாசம் காணப் படுவதால் -இப்படியே ஜைமினி கருதுகிறார்
பாவங்கள் அற்ற தன்மை போன்றவை உண்டு என்று தஹர வித்யை சொல்லும்

சாந்தோக்யம் -8-7-1-ய ஆத்மா அபஹதபாப்மா –சத்ய சங்கல்ப -என்று சொல்லிற்று

உபன்யாசாதிப்ய -ஆதி சப்தம் -உண்ணுதல் போன்ற செயல்களை சொல்லும்

இத்தையே சாந்தோக்யம் -2-12-3-ஜஷன் கிரீடன் ரமமாண –
உண்ணுதல் விளையாடுதல் மகிழ்தல் -என்றது-

இதனால் அறிவு மாத்ரம் உள்ள ஸ்வரூபம் அல்ல –
இதுவே ஜைமினி கருத்தாகும் –

ப்ராஹ்மேண ஜைமினி -குண விஸிஷ்ட முக்த ஸ்வரூப ஆவிர்பாவம் என்று ஜைமினி திரு உள்ளம்
ஏன் எனில்
உபன்யாசாதிப்ய-பிரஜாபதி வாக்கியத்தில் ஜீவனுக்கும் இந்த குணங்கள் உபந்யஸிக்கப் படுவதால் என்றபடி
ஆதி -பதத்தால் -ஜஷன் கிரீடன் ரமமாண-என்பது போன்ற ஸ்ருதிகளாலும்
முக்தனுக்கு ஸத்ய சங்கல்பாதிகள் தோன்றுகின்றன -என்று கருத்து

இரண்டாவது பக்ஷத்தை உபந்யஸிக்கிறார்

—————————————————————————————————————

4-4-6-சிதி தந்மாத்ரேன ததாத்மகத்வாத் இதி ஔடுலொமி —

குணங்கள் இல்லாத ஞான மயமாக -மட்டுமே ஓதப்படுதலால் -ஔடுலொமி இப்படியே கருதுகிறார் –
பிரத்யகாத்மா ஜ்ஞான மாத்ர ஸ்வரூபம்

ப்ருஹத் -4-5-13-ச யதா சைந்தவகதந அனந்தர அபாஹ்ய க்ருத்சன ரசகன ஏவ ஏவம் வா அரே
அயம் ஆத்மா அந்தர -அபாஹ்ய க்ருத்சன ப்ரஜ்ஞாநகந ஏவ -என்று
உப்புக்கட்டி எவ்ப்படி உள்ளும் புறமும் நடுவிலும் உப்பாகவே உள்ளது போன்றே ஆத்மாவும் ஞான மயமாகவே உள்ளும் புறமும் நடுவிலும் -என்றும்

ப்ருஹத் -2-4-12-விஜ்ஞான கந ஏவ -என்று
ஆத்மா முழுவதும் ஞான மயமாகவே உள்ளது என்றும் சொல்லிற்றே

அபஹதபாப்மா மூலம் மாற்றம் மூப்பு வருத்தம் பசி தாகம் போன்றவை இல்லை என்றே சொல்லப்பட்டது ஒழிய
எட்டு தன்மைகள் உண்டு என்று கூறப்பட வில்லை –

எனவே ஞான மாத்ரமே என்பர் ஔடுலோமி-

சிதி தந்மாத்ரேன -ஜீவனுக்கு சைதன்யம் மாத்ரமே ஸ்வரூபமாதலின் அந்த ரூபத்துடன் ஆவிர்பாவம்
இதி ஔடுலொமி — என்று இவர் திரு உள்ளம்
ததாத்மகத்வாத் -விஞ்ஞான கன ஏவ -என்று விஞ்ஞான ஸ்வரூபத்வம் தவிர
வேறு குணங்கள் தடுக்கப்பட்டு இருப்பதால்

இவ்விரு மதங்களையும் நிரஸித்து ஸ்வ மதத்தை ஸ்தாபிக்கிறார் –

—————————————————————————

4-4-7-ஏவம் அபி உபன்யாசாத் பூர்வ பாவாத் அவிரோதம் பாதாராயண –

ஞான மாத்ரம் என்பதை ஏற்றாலும் மற்ற தன்மைகள் உள்ளதாகக் கொள்வதில் முரண்பாடு இல்லை –
இப்படியே பாதராயணர் எண்ணுகிறார் –

ஏவம் அபி உபன்யாசாத் -ஆத்மா சித் ஸ்வரூபனே ஆனாலும் பிரஜாபதி வாக்கியத்தில்
குணங்களை உபந்யஸித்து இருப்பதால்
பூர்வபாவாத் -முன் உள்ள எட்டு குணங்களும் உள்ளவை என்று தோன்றுவதால்
இரண்டு ஸ்வரூபங்களுக்கும்
அவிரோதம் பாதாராயண –விரோதம் இல்லை என்பதே இவர் திரு உள்ளம்

விஞ்ஞான கன ஏவ -என்ற சுருதியில் ஏவ -வேறு ஸ்ருதிகளில் காட்டிய குணங்களைத் தடுக்காது
சைந்தவ ரஸ கன ஏவ என்பதில் லவணம் என்ற பொருளையும் ஸ்பர்சம் போன்ற குணங்களையும் காட்டுமா போலே
இங்கு ஏவ காரம் -மாம்பழம் ஒரு பக்கம் இனிப்பாயும் புளிப்பாயும் போல் இல்லாமல் ஒரே மாதிரி சுவை என்பது போலே
இங்கும் ஆத்ம ஸ்வரூபம் முழுவதும் ஸ்வயம் ப்ரகாசமாதலால் ஜடம் போல் இல்லாமல் ஞானமே வடிவானது என்று
அயோக வியச்சேதமே பொருள்

ஆகவே இரு ஸ்ருதிகளுக்கும் விரோதம் வாராமல் இரு ஸ்வரூபமும் உண்டு என்று ஒப்புக் கொண்டு
முக்தி தசையில் இவ்விரு ஸ்வரூபங்களுடனே ஆவிர்பாவம் என்று ஸாதிக்கிறார் –

இதுவே வாக்யத்தில் கூறப்பட்டதாலும்
முன்னரே உள்ளதாலும் –
இரண்டு பிரமாணாங்களும் சமம் –
ஞான மாத்ரமே வேறு ஏதும் இல்லை என்பதை உபநிஷத் வாக்கியம் ஏற்க வில்லை

விஜ்ஞான கந ஏவ என்பதில் -ஏவ என்பது
ஆத்மாவின் முழு பாகமும் ஜட தொடர்பு இல்லாமல் தானாகவே பிரகாசிக்க வல்லது என்றும்
இந்த பிரகாசத்தின் சிறிய பாகம் கூட மற்றவற்றை சார்ந்தது இல்லை என்பதையே காட்டும் –

ச யதா என்று ப்ருஹத் -4-5-13- இத்தையே காட்டுகிறது –

—————————————————————-

அதிகரணம் -4-சங்கல்பாதி கரணம் –

ஞான ஸ்வரூபனாயும் குண விசிஷ்டனாயும் முக்தன் ப்ரஹ்மத்தை அடைகிறான் என்றது கீழ்
இப்போது முக்தனைக் குறித்து சொல்லப்பட்ட ஸத்ய ஸங்கல்பத்வம்
ப்ரயத்னம் எதையும் எதிர்பாராமல் செயலாற்றல் என்று ஸ்தாபிக்கப் படுகிறது
என்று சங்கதி –

முக்தனுக்கு விரும்பும் ஞாதிகள் போன்றோர் எதிர்வரக் கிடைப்பது வெறும் சங்கல்பத்தாலேயா
அல்லது வேறு ப்ரயத்னத்தை அபேக்ஷிக்குமா
என்று சம்சயம்

உலகில் பிரயத்தனாந்தரத்தை எதிர்பார்த்தே கார்யகரம் பார்க்கிறோம்
அதே போல் இங்கும் வேறு சிறிய முயற்சியை எதிர்பார்த்தே ஸங்கல்பத்தால் கார்ய சித்தி –
விஞ்ஞான கன ஏவ போல் ஸங்கல்பாத் ஏவ -என்பர் பூர்வ பக்ஷி

அதனை நிரஸிக்கிறார்

தனது சங்கல்பத்தினால் மட்டுமே முக்தி நிலையில் ஜீவன் தன் விருப்பங்களை அடைகிறான்
என்று நிரூபிக்கப் படுகிறது –

4-4-8-சங்கல்பாத் ஏவ தத்ஸ்ருதே –

சங்கல்பத்தால் மட்டுமே -என்கிறது
சாந்தோக்யம் -8-2-1-
ச யதி பித்ரு லோகே காமோ பவதி சங்கல்பாதேவ பிதர -அஸ்ய சமுத்திஷ்டந்தி -என்று
முக்தன் பித்ருக்களை காண வேண்டும் என்று விரும்பினால்
அவனது சங்கல்பத்தால் பித்ருக்கள் காட்சி அளிப்பார்கள் என்றது

சங்கல்பாத் ஏவ -சங்கல்பத்தினால் மட்டுமே என்றபடி –

சங்கல்பாத் ஏவ தத்ஸ்ருதே –சங்கல்பத்தாலேயே பித்ரு தேவதைகள் இவன் எதிரில்
வந்து விடுகிறார்கள் என்று ஸ்ருதி சொல்வதால்
விஞ்ஞான கன ஏவ போல் சுருக்கத்தைப் பொறுக்காது இங்கு ஏவ ஸப்தம்
ஏன் எனில்
அங்கு வேறே ஸ்ருதியால் வரும் குண விசிஷ்டத்தை தடுக்க சாமர்த்தியம் இல்லை
இங்கு வேறு எதையும் அபேக்ஷித்து இருக்க பிரமாணம் இல்லை
பரம புருஷன் ஸத்ய ஸங்கல்பன் -அவன் அருளால் பெற்ற சமயத்தால் முக்தனும் ஸத்ய சங்கல்பன் -என்றவாறு –

————————————————————————————–

4-4-9-அத ஏவ ச அநந்ய அதிபதி

சர்வேஸ்வரனைத் தவிர முக்தன் யாருக்கும் வசப் பட்டவன் அல்லன் –
மற்றவருக்கு வசப்பட்டால் சத்ய சங்கல்பத்வம் தடைப்படும்

அத ஏவ ச -அபஹத பாப்மா -இத்யாதி ஸ்ருதியாலே
அநந்ய அதிபதி-பகவானைத் தவிர்ந்து வேறு கர்மா போல்வாரை அதிபதியாகக் கொண்டவன் ஆலன்
இதுக்கு இந்த ஸ்ருதியே பிரமாணம்

கர்ம வசப்பட்டவன் அல்லன் என்பதை
சாந்தோக்யம் -7-25-2-ச ஸ்வராட் பவதி -கட்டுப் படாதவன் -என்றது –

———————————————————————————–

அதிகரணம் -5-அபாவாதி கரணம் –

முக்தனுக்கு தேஹ இந்திரியங்கள் உண்டா இல்லையா என்ற சம்சயம் வந்தால்
விருப்பப்படி சரீரம் எடுத்துக் கொள்ளலாம் என்று இங்கு சாதிக்கிறார்
என்று சங்கதி
இவை உண்டா -இல்லையா -சங்கல்பத்துக்கு ஏற்ப அவை அநியதங்களா -என்று சம்சயம்

சரீராதிகள் இல்லை என்பது முதல் பக்ஷம்
உண்டு என்பது இரண்டாவது பக்ஷம்
அநியதம் என்று மூன்றாவது பக்ஷம்

முக்தன் சில கட்டங்களில் சரீரம் உள்ளவனாயும்
சில கட்டங்களில் சரீரம் அற்றவானாகவும் உள்ளான் என்று கூறப்படுகிறது —

4-4-10-அபாவம் பாதரி -ஆஹா ஹி ஏவம் –

சரீரம் போன்றவை முக்தாத்மாவுக்கு இல்லை என்று பாதரி கூறுகிறார் –
வேதங்களும் இப்படியே ஒதுகின்றன –

சாந்தோக்யம் -8-12-1-ந ஹ வை ஸ சரீரஸ்ய சத் ப்ரியாப்ரியயோ அபஹதிரஸ்தி அசரீரம் வாவ
சந்தம் ந ப்ரியாப்ரியே ஸ்ப்ருசத -என்று
ஒருவன் சரீரத்துடன் இருந்தால் இவ்வுலக இன்ப துன்பங்கள் அவனை விட்டு விலகவில்லை –
சரீரம் இல்லாமல் உள்ளவனை மட்டுமே இவை அண்டுவதில்லை -என்றது

மேலும் சாந்தோக்யம் -8-12-3-அஸ்மாத் சரீராத் சமுத்தாயா பரஞ்சோதி ரூப சம்பத்ய ஸ்வேன ரூபேண அபி நிஷ்பத்யதே –என்று
இந்த சரீரத்தை விட்டு வெளியேறி பரஞ்சோதி யான பரமாத்வை முக்தன் அடைந்து தனது ஸ்வரூபம் விளங்கப் பெறுகிறான் –
என்றதால் சரீரம் முக்தனுக்கு இல்லை
என்பர் பூர்வ பஷி

சரீராதிகள் முக்தனுக்கு இல்லை என்பர் பாதிரி

அடுத்து உண்டு என்ற பக்ஷம்

———————————————————————————–

4-4-11-பாவம் ஜைமினி விகல்பாமந நாத் –

முக்தாத்மாவுக்கு சரீரம் மற்றும் இந்த்ரியங்கள் உண்டு என்று ஜைமினி கருதுகிறார் –
அவன் பலவிதமாக உள்ளதால்

சாந்தோக்யம் -7-26-2- ஸ ஏகதா பவதி த்ரிதா பவதி பஞ்சதா சப்ததா -என்பதால் –
கர்மம் அடியாக இல்லை –
கர்மம் தொடர்பற்ற சரீரத்தை முக்தாத்மா எடுத்துக் கொள்கிறான் என்கிறார்-

பாவம் ஜைமினி –முக்தனுக்கு சரீராதிகள் உண்டு என்பர் ஜைமினி
விகல்பாமந நாத்-விவித கல்ப விகல்ப -பலவகையாக கூறப்படுவதால் என்கிறார்
ஒரே ரூபத்துடன் பிணைக்க முடியாத முக்த ஸ்வரூபத்தை பல ரூபங்கள் எடுத்துக் கொள்ளலாம்
என்று ஸ்ருதி உண்டே
எனவே தேஹாதிகள் முக்தனுக்கு நியதம் என்பர் ஜைமினி –

———————————————————————————-

4-4-12-த்வா தசா ஹவத் உபயவிதம் பாதராயண அத –

முன்பு இரண்டு பூர்வ பஷ ஸூத்ரங்களுக்கு
சித்தாந்த ஸூத்ரம் இது

அத -என்றது சங்கல்பாத் ஏவ -சங்கல்பம் காரணமாக மட்டும் என்கிறது

இரண்டு வாக்யங்களும் பொருந்த இருவிதமாகவும் உள்ளான் என்கிறார்

த்வாதசாஹம் -என்ற யாகத்தில் உள்ள விதி வாக்கியம் போலே

த்வாதசாஹம் ருத்திகாமா உபேயு-என்று
செழிப்பை விரும்புவர்கள் த்வா தசாஹம் யாகத்தை இயற்ற வேண்டும் என்றும்

த்வா தசா ஹே ந பிரஜாகாமம் யாஜயேத்-
குழந்தையை விரும்பும் ஒருவனுக்கு த்வா தசாஹம் யாகம் செய்விக்க வேண்டும் என்று

முதல் வாக்கியம் மூலம் பல எஜமானர்கள் செய்யும் யாக ரூபமும் –
இரண்டாம் வாக்கியம் மூலம் ஒரு யஜமான் செய்யும் யாக ரூபமும் கூறப் பட்டது போலே –

அத –இருவித ஸ்ருதிகளும் இருப்பதால்
மனத்திலே அந்த லோகத்தில் எல்லாக் காமங்களையும் கண்டு மகிழ்கிறான் என்று ஒரு ஸ்ருதி
ஒன்றோ இரண்டோ மூன்றோ பல சரீரங்களை எடுத்துக் கொள்கிறான் என்பது மற்ற ஒரு ஸ்ருதி
உபயவிதம் பாதராயண -இதனால் முகத்தனை சரீரகனாகவும் அசரீரிகனாகவும் என்பர்

இதற்கு உதாஹரணமாக
த்வா தசா ஹவத் -ஒரே யாகம் -12 நாள் செய்யும் யாகம் சத்திரம் என்றும் அஹீனம் என்று பெயர் பெறுவது போல்
சங்கல்பத்துக்கு ஏற்ப இரண்டும் பொருந்தும் என்கிறார்

உபைதி என்ற வினைச் சொல்லால் விதிக்கப்படுவது ஸத்ரம் என்றும்
யஜதி -என்ற வினைச் சொல்லால் அஹீனம் என்றும் வேறுபாடு கூறுவதும் உண்டு

மேல் முக்தனுக்குச் சொன்ன சரீராதி சித்தியும் முக்தனுடைய சங்கல்பத்தால் மட்டும்
ஏற்படுவது அல்ல என்கிறார் –

———————————————————————————————————————————————–

4-4-13-தன்வ பாவே சந்த்யவத் உபபத்தே —

முக்தன் எப்போது சர்வேஸ்வரனை அனுபவிக்கத் தக்க சரீரம் தேவை என்று எண்ணுகிறானோ
அப்போது அந்த சரீரம் முக்தனால் படைக்கப் படுகிறது என்ற விதி முறை இல்லை என்கிறார்

சரீரம் இல்லை என்றால் கனவு போன்று பொருந்தும் –
பரமாத்மா மூலமாகப் படைக்கப் பட்ட சரீரம் போன்றவை மூலமாக பகவத் அனுபவம் கிட்டும்

ப்ருஹத் -4-3-10-அத ரதான் ரத யோகன் பத ஸ்ருஜதே -என்று
கனவு நிலையில் தேர்கள் மற்றும் அவற்றில் பூட்டப் பட்ட குதிரைகள் அந்த தேர்கள் செல்லும் வழிகள்
ஆகியவற்றை பரமாத்மா படைக்கிறான் என்று தொடங்கி

அத வேசாந்தான் புஷ்கரிண்ய ஸ்ரவந்த்ய ஸ்ருஜதே ஸ ஹி கர்த்தா -என்று
குளங்கள் நதிகள் ஆகியவற்றை பரமாத்மா படைக்கிறான் -காரணம் அவனே படைக்கிறான் என்றது

மேலும் கட உபநிஷத் -2-2-8-ய ஏஷ ஸூ ப்தேஷூ ஜாகர்த்தி காமம் காமம் புருஷோ நிர்மிமாண ததேவ சுக்ரம்
தத் ப்ரஹ்ம ததேவாம்ருத முச்யதே தஸ்மின் லோகா ச்ரிதா சர்வே தது நாத்யேதி கச்சன -என்று
யார் ஒருத்தன் அனைத்தும் உறங்கிய நிலையில் உள்ள போது தான் விழித்த படி இருந்து சங்கல்பித்து
சங்கல்பித்துப் படைக்கிறானோ அவனை அமிர்தம் என்றே கூறுகின்றனர் –
அவனையே அனைவரும் அண்டி உள்ளனர் -என்றது

அது போன்று தனது விளையாட்டுக்காகப் படைக்கப் பட்ட பித்ரு லோகம் போன்றவை மூலம்
முக்தாத்மா அனுபவித்த படி உள்ளான் என்கிறது –

தன்வ பாவே -தன்னால் படைக்கப்பட்ட சரீராதிகள் இல்லாவிட்டாலும் பரமபுருஷனால் படைக்கப்பட்ட
சரீரத்தால் பொருத்தம் ஏற்படுவதால் போகம் உசிதமானதே
எவ்வாறு எனில்
சந்த்யவத் உபபத்தே-ஸ்வப்னத்தில் போலே

ஸ்வப்னத்தில் பரம புருஷன் படைக்கும் ரதாதி உபகரணங்களைக் கொண்டு ஜீவன் இன்ப துன்பங்களை அனுபவிப்பது போல்
முக்தனும் லீலையில் ஈடுபட்ட பரமபுருஷனால் ஸ்ருஷ்ட்டிக்கப் பட்ட பித்ரு லோகாதிகளாலே போகத்தை அனுபவிக்கிறான் –

——————————————————————————————————————————–

4-4-14-பாவே ஜாக்ரவத் –

சரீரம் உள்ள போது விழித்து இருக்கும் ஜீவன் போன்றே –
பித்ரு லோகம் போன்றவற்றை அனுபவிப்பது விழித்து இருக்கும் ஜீவன் போலே என்றும் –
தனது சங்கல்பத்தாலும் லீலைகள் அடங்கிய பித்ரு லோகத்தை தாங்களே சிருஷ்டித்து அனுபவிப்பார்கள்

ஆகவே இரண்டும் பொருந்தும்-

பாவே -தன் சங்கல்பத்தால் படைக்கப்பட்ட அனைத்தும் இருக்குமாகில்
ஜாக்ரவத் –விழித்து இருக்கும் அரசர் போன்றோர் தன் சங்கல்பத்தால் தேடிய ஐஸ்வர்யத்தால் போகத்தை அனுபவிப்பது போல்
முக்தனும் தன் சங்கல்பத்தால் கிடைத்த பித்ரு லோகாதிகளைக் கொண்டு போகத்தை அனுபவிக்கிறான்
போகமானது லீலா ரஸம்

தனது லீலைக்காக தசரத வஸூ தேவாதிகளைப் படைத்து தானும் மனிதனாய் அவதரித்து லீலா ரஸத்தை அனுபவிப்பது போலே
முக்தர்களுக்கும் தன் லீலை சித்திக்கவே பித்ரு லோகாதிகளை ஸ்ருஷ்டித்து அனுபவிக்கச் செய்கிறான்

ஒரு சமயம் முக்தனும் ஸத்ய ஸங்கல்பனாக ஸ்வ பித்ரு லோகாதிகளைத் தானே ஸ்ருஷ்டித்து மகிழ்கிறான்

இதனால் ப்ரஹ்ம அனுபவ ஏகதானத்வம் கெடாது என்பாதாம்

முக்தனுக்கு சரீரவத்வம் தோன்றுவதால் ஸ சரீரம் என்று கூறும் ஸ்ருதி
கர்மக்ருத சரீரம் இல்லை என்ற கருத்துடையதாகும் என்று கருத்து –

ஆமாம் -ஆத்மா அணு என்று கூறப்பட்டது
அப்படியானால் ஒரே ஆத்மாவுக்கு பல சரீரங்களில் ஆத்மாவாய் ஒரே காலத்தில் இருப்பு எப்படிப் பொருந்தும் –
அவற்றில் ஆத்மாபிமானம் எப்படிப் பொருந்தும்
என்ற சங்கைக்கு உத்தரம் அருளிச் செய்கிறார் –

————————————————————————–

4-4-15-ப்ரதீபவத் ஆவேச ததா ஹி தர்சயதி-

ஆத்மா அணு அளவே என்பதால் பல சாரீரங்கள் உள்ளதாக எண்ணுவது
எப்படி -பூர்வ பஷி

விளக்கு போன்று ஆத்மா பரவி இருப்பதால் -வேதம் இப்படியே கூறுவதால்
தர்ம பூத ஞானம் மூலம் பல சரீரங்களிலும் பரவலாமே
முக்தி பெறாத நிலையில் கர்ம வசத்தால் பல சரீரங்களில் பரவ முடியாது –
முக்தனுக்கு தடை இல்லையே

ஸ்வேதாஸ்வதர -5-9- வாலாக்ர சதபாகச்ய சததா கல்பி தஸ்ய ச பாகோ ஜீவ ச விஜ்ஞேய ச சா நந்த்யாய கல்பதே-என்றது
ஜீவனின் அணுத்வம் பற்றி நெல்லின் நுனியை நேராக வெட்டி அதில் ஒரு பாகத்தை நூறாக்கி -அந்த அளவு என்றது –

பூர்வ பஷி –
பர ப்ரஹ்மத்தை அடைந்த முக்தன் உள்ளும் புறமும் உள்ள விஷயங்களை அறியாத
ஞான ஸூன்யனாக உள்ளான் என்பர்

ப்ருஹத் -4-3-21-ப்ராஜ்ஞேந ஆத்மநா ஸம்பரிஷ் வக்தோ ந பாஹ்யம் கிஞ்சஞ வேதநாந்தரம் -என்று
ஸ்ருதி உள்ளதால்
முக்தன் பல சரீரங்களில் வியாபித்து எங்கனம் செயல் படுவான் என்பர் –

ப்ரதீபவத் ஆவேச -விளக்கு ஒளி போல் தர்மபூத ஞான பிரகாசம் -வியாப்தி —
தேகாந்தரங்களுக்கும் கூடலாம் என்று கருத்து
ததா ஹி தர்சயதி-இவ்வாறே ஸ்ருதி காண்பிக்கிறது –

நாணு ரதத் ஸ்ருதே -என்ற ஸூத்ரத்திலே பர ப்ரஹ்மத்துக்கே மஹத்வம் சொல்லுகையாலே
ப்ரத்யகாத்மாவுக்கு அணுத்வமே ஸ்வரூபம் என்பதே ஸூத்ரகாரர் திரு உள்ளம் –

ஆமாம் -பர ப்ரஹ்மத்தை அடைந்தவருக்கு உள் -வெளி ஞானம் எல்லாம் அற்றுப் போவதாகச் சொல்வதால்
அவனுக்கு ஞானத்தின் ஆனந்த்யம் எவ்வாறு கூறலாம்
என்ற சங்கைக்கு உத்தரம் அருளிச் செய்கிறார் –

———————————————————————————–

4-4-16-ஸ்வாப்யய சம்பத்யோ ரன்யதராபேஷம் ஆவிஷ்க்ருதம் ஹி

அந்த ஸ்ருதி வாக்கியம் உறக்க நிலை அல்லது மரண நிலை இரண்டில் ஒன்றை மட்டும் கூறுகிறது

ஸ்வாப்யய -என்றது ஆழ்ந்த உறக்கம் –சம்பத்தி -மரணம் –
சாந்தோக்யம் -6-8-6-வாங்க மனஸூ சம்பத்த்யதே –என்று தொடங்கி –
தேஜ பரஸ்யாம் தேவதா யாம் -என்று மரண காலத்தில் ஜீவன் பரமாத்மா உடன் சேர்ந்து உள்ளான் -என்று முடித்தது –
இந்த நிலைகளில் ஞானம் என்பதே கூறப்பட்டது
முக்தனுக்கு இரண்டு நிலைகளிலும் அறிவும்
முக்தி அற்றவனுக்கு இரண்டு நிலைகளிலும் அறிவு அற்று போவதும் உண்டே

சாந்தோக்யம் -8-11-1-நாஹ கல்வயம் சம்ப்ரத்யாத்மானம் ஜா நாதி அயமஹமச்மீதி நோ ஏவேமா நி பூதா நி
வி நாசமே வாபீதோ பவதி நாஹம் அத்ர போக்யம் பஸ்யாமி-என்றும்

முக்தாத்மாவைக் குறித்து -8-12-5-6- ஸ வா ஏஷ திவ்யேந சஷூஷா மனசைதான் காமான் பஸ்யன்
ரமதே ய ஏதே ப்ரஹ்ம லோகே -என்று மோஷ நிலையில் அனைத்தும் அறிந்த தன்மை சொல்லப் பட்டது –

சாந்தோக்யம் -7-26-2-சர்வம் ஹ பச்ய பச்யதி சர்வம் ஆப் நோதி சர்வச -என்று முக்தன் அறியும் நிலையும்

ப்ருஹத் -2-4-12- ஏதேப்ய பூதேப்ய சமுத்தாய தான்யேவா நுவி நச்யதி-
ஞானச் சுருக்கம் அடைந்து எதனையும் காண்பதில்லை -என்றது –

ஆகையால் அணுவான முக்தனுக்கு தர்மபூத ஞான வ்யாப்தியாலே ஆனந்த்யம் கூறியது உக்தமே

சங்கல்ப ஏவ என்னும் அதிகரணத்தில் முக்தன் தனது ஸங்கல்பத்தினால் அனைத்தும் அடைகிறான் என்று கூறப்பட்டது
இப்போது இந்த அபவாதிகரணத்திலும் ஸங்கல்பத்தாலேயே தேஹத்தைக் கொள்கிறான் எனப்படுகிறது
இது கூறியது கூறியதாகாதா என்ன
இதில் முக்தன் ஒரு சமயம் தனது சங்கல்பத்தால் பெறலாம் என்றும்
வேறு ஒரு சமயத்தில் பரமபுருஷன் சங்கல்பத்தால் பெறலாம் என்று அர்த்த பேதம் இருப்பதால்
கூறியது கூறவில்லை என்பது ஸூத்ர காரரின் திரு உள்ளம்

———————————————————————————————————————————————————–

அதிகரணம் -6-ஜகத் வ்யாபார வர்ஜாதி கரணம் –

இனி ஜகத் ஸ்ருஷ்டியாதி உடைய சர்வேஸ்வரனாகவும் ஆகக்  கூடுமா
அல்லது இவை அற்று ப்ரஹ்ம அனுபவ மாத்திரத்திலான சாம்யமா
என்ற சம்சயம் சங்கதி

ஸ்ருஷ்டியாதி செயல்பாடுகள் முக்தனுக்கு இல்லை -போகத்திலே மட்டுமே சாம்யம் –
சம்சாரத்துக்கு முக்தன் திரும்புவது இல்லை -எனபது போன்றவை நிரூபிக்கப் படுகின்றன –

4-4-17-ஜகத் வ்யாபார வர்ஜம் ப்ரகரணாத் அசந்நிஹிதத்வாத் ச —

நிரஞ்சன பரமம் சாம்யமுபைதி -முண்டகம் -3-1-3- என்றதாலும்
சத்ய சங்கல்பத்வம் உள்ளவன் என்றதாலும்
சர்வேஸ்வரத்வம் முக்தனுக்கும் உண்டு
என்பர் பூர்வ பஷி
எனவே உலகை படைத்தல் என்னும் ஐஸ்வர் யமும் உண்டு என்பர்-

அப்படி அல்ல
தைத்ரியம்–3-1–யதோ வா இமானி ஜீவந்தி யத் பிரயந்த்யபி சம்விசசந்தி தத் விஜிஜாஞஸஸ்வ தத் ப்ரஹ்ம -என்று
ப்ரஹ்மத்துக்கே உரிய சர்வேஸ்வரத்வ லஷணம் பொருந்த வேண்டுமே

இன்னும் அநேக ஸ்ருதி வாக்யங்கள் –
சாந்தோக்யம் -6-2-2/3-சதேவ சோம்யே தமக்ர ஆஸீத் ஏகம் ஏவ அத்விதீயம் தத் ஐஷத
பஹூச்யாம் பிரஜா யேயேதி தத் தேஜ அஸ்ருஜத-என்றும்

ப்ருஹத் -1-4-11-ப்ரஹ்ம வா இதம் ஏவம் ஏவ அக்ர ஆஸீத் தத் ஏகம் சன்ன வ்யபவத் தச்ச்ரேயோ ரூபமத்ய
ஸ்ருஜத ஷத்ரம் யான்யேதானி தேவத்ரா ஷத்ராணீந்த்ரோ வருண சோமோ ருத்ர பர்ஜன்யோ யமோ ம்ருத்யு ரிசாந–என்றும்

ஐதரேயம் -1-1/2–ஆத்ம வா இதம் ஏக ஏவ அத்ர ஆஸீத் நாந்யத் கிஞ்சன மிஷத் ச ஈஷத
லோகாந்து ஸ்ருஜ இதி ச இமான் லோகா ந ஸ்ருஜத -என்றும்

மஹா நாராயண உபநிஷத் ஏகோ ஹை வை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா ந ஈசாந நேமே த்யாவா ப்ருதிவீ
ந நஷத்ராணீ ந ஆப ந அக்னீ ந சோம ந ஸூ ர்ய ச ஏகாகீ ந ரமதே தஸ்ய
த்யாநாந்தஸ் தஸ்ய ஏகா கன்யா தசேந்த்ரியாணி -என்றும்

சதபத ப்ராஹ்மணம் -14-6-7-7-ய ப்ருதிவ்யாம் திஷ்டன் ப்ருதிவ்யா அந்தர -என்றும் –

14-7-7-30-ய ஆத்மநி திஷ்டன் -என்றும் பரம் பொருளுக்கே என்றது –

ஜகத் வ்யாபார வர்ஜம்–முக்தனுக்கு ஜகத்தின் ஸ்ருஷ்ட்டி நியமனம் முதலிய லீலைகளைத் தவிர
பரிபூர்ண ப்ரஹ்ம அனுபவ மாத்ரத்திலே பரம ஸாம்யம் உள்ளது
ப்ரகரணாத் -யதோ வா இமானி ஜீவந்தி யத் பிரயந்த்யபி சம்விசசந்தி தத் விஜிஜாஞஸஸ்வ தத் ப்ரஹ்ம-இத்யாதி
ஸ்ருதிகளால் பர ப்ரஹ்மத்தை மட்டும் உத்தேசித்து ஜகத் வியாபாரம் ஸ்ருதம் ஆகையால் என்றபடி
அசந்நிஹிதத்வாத் ச-அந்தந்த ப்ரகரணத்தில் முக்தனுக்கு இடம் இல்லாமையாலும்
ஜகத் வியாபாரம் நீங்கலாகவே ப்ரஹ்ம அனுபவ மாத்திரத்திலேயே பரம ஸாம்யம் என்று ஸித்தம் –

——————————————————————————————————————————————————————-

4-4-18-பிரத்யஷோ பதேசாத் இதி சேத் ந அதிகாரிக மண்டல ஸ்தோக்தே

முக்தனுக்கு நான்முகன் போன்றவர்களின் உலக போகங்களும் கூறப்பட்டதே என்பதால்
ஸ்ருஷ்டியாதி வியாபாரங்கள் உண்டு
என்பர் பூர்வ பஷி

அப்படி அல்ல –
சாந்தோக்யம் -7-25-2-ஸ ஸ்வராட் பவதி தஸ்ய சர்வேஷூ லோகேஷூ காமசாரோ பவதி -என்று
எங்கும் சஞ்சரிக்கலாம் என்றும்

தைத்ரியம் -3-10-5-இமான் லோகன் காமான்நீ காமரூப்ய நுசஞ்சரன் -என்று
விரும்பிய லோகங்களில் விரும்பிய உருவம் எடுக்கலாம் என்றதே என்பர்

அப்படி அல்ல
கர்ம தொடர்பு நீங்கியதால் தடைபடாத ஞானம் கொண்ட முக்தனுக்கு
அனைத்து செல்வங்களும் அனுபவிக்கக் கிட்டும் என்பதே கருத்து

ஜகத் வியாபாரம் போன்றவை இல்லாமல் இருத்தலே இவனது ஐஸ்வர்யம் என்றும்
ஜகத் வியாபாரம் இல்லை என்றும் தெளிவாகிறது –

பிரத்யஷ உபதேசாத் –ஸ்ருதி -தஸ்ய சர்வேஷூ லோகேஷூ காமசாரோ பவதி -என்றும்
இமான் லோகன் காமான்நீ காமரூப்ய நுசஞ்சரன்-என்றும்
உள்ள ஸ்ருதிகளால் முக்தனுக்கும் ஜகத் வியாபாரம் உபதிஷ்ட்டமாகையாலே
இதி சேத் ந -ஜகத் வியாபாரம் இல்லை என்றால் அது தவறு –

ஏன் எனில்
அதிகாரிக -பரமபுருஷனால் லோகத்தை நியமனம் செய்ய ஏற்படுத்தப் பட்டுள்ள ஹிரண்ய கர்ப்பாதிகளில்
மண்டல ஸ்தோக்தே-லோகங்களில் உள்ள போகங்களில் முக்தனுக்கு இச்சை இருக்குமாகில்
அங்கங்கே இச்சா அனுகுணமாக பரம புருஷ அனுக்ருஹீதனாயக் கொண்டு அங்கு உள்ள போகங்களை
முக்தன் அனுபவிக்கிறான் என்று அந்த ஸ்ருதியால் கூறப்பட்டதால் படி
காமான்நீ என்றும் காம சரோ பவதி என்றும் காம போகாதிகள் மாத்ரமே ஸ்ருதி சித்தங்களே தவிர
நியுங்க்தே என்ற ஸ்ருதி இல்லாமையால் முக்தனுக்குக் கிடையாது என்பதாம் –

உத்பத்தி யாதிகளான விகாரங்களுக்கு உரியதாதலின் தோஷங்கள் கலந்ததும் அதி யல்பமுமான
சதுர்முக லோகத்தின் போகங்கள் முக்தனுக்கு எப்படிக் கூடும்
என்ற சங்கைக்கு உத்தரம் அருளிச் செய்கிறார் –

———————————————————————————————————————–

4-4-19-விகாராவர்த்தி ஸ ததா ஹி சிததிமாஹ-

மாற்றங்கள் உள்ள அல்ப இன்பம் அனுபவிக்கிறான் என்றால்
முக்தனின் செல்வமும் அல்பம் என்றது ஆகுமோ என்னில்
மாற்றம் இல்லாத பர ப்ரஹ்மத்தையும் அனுபவிக்கிறான் என்கிறது

தைத்ரியம் -2-7-யதா ஹி ஏவ ஏஷ ஏதஸ்மின் அத்ருச்யே அநாத்ம்யே அநிக்ருதே அநிலயநே அபயம்
பிரதிஷ்டாம் விந்ததே அத ச அபயம் கதோ பவதி -என்றும்

ரசோவை வை ச ரசம் ரசம் ஹி ஏவ அயம் லப்த்வா ஆனந்தி பவதி என்றும்

கட -தஸ்மின் லோகா ச்ரிதா சர்வே தது நாத்யேதி கச்சந-என்றும்

சாந்தோக்யம் -7-25-2- சர்வேஷூ லோகேஷூ காம சார -என்றும்

அனைத்து செல்வங்களுடன் கூடிய பர ப்ரஹ்மத்தை அனுபவிக்கும் பொழுது
அனைத்தையும் அனுபவிப்பதாகவே கூறப்பட்டது

இதனை விடுத்து ஜகத் வியாபாரம் போன்ற எதுவும் அங்கே கூறப் பட வில்லையே

ஸ-ஸப்தம் உறுதிப் பொருளைக் காட்டுவது
விகாராவர்த்தி ஸ -உத்பத்தியாதி விகாரங்கள் இல்லாத பர ப்ரஹ்மமே தான் முக்தர்களுக்குப் போக்யம்
ஏன் எனில்
ததா ஹி சிததிமாஹ-நிர்விகாரமாயும் -அனவதிக அதிசய ஆனந்த ரூபமாயும் உள்ள பர ப்ரஹ்மத்தில்
முக்தனுக்கு அனுபவிப்பவனாக இருப்பைக் கூறுவதும் ஸ்ருதி என்ற காரணத்தால் என்பதாம்
யதா ஹி ஏவ ஏஷ ஏதஸ்மின் அத்ருச்யே -என்ற வாக்யப்படி
ரசோவை வை ச ரசம் ரசம் ஹி ஏவ அயம் லப்த்வா ஆனந்தி பவதி -என்றும்
ஸ்ருதிகளிலே இவ்வாறு கூறப்படுகிறது என்பதாம்

முக்தனுக்கு இதனால் சதுர்முக லோகாதிகளில் மிக அற்பமான ஸூக போகாததால்
வர இருந்த தோஷத்துக்குப் பரிஹாரம் எப்படி எனில்
தஸ்மின் லோகா ச்ரிதா சர்வே தது நாத்யேதி கச்சந-என்று ஸ்ருதி சொல்லுகிறபடி
உபய விபூதிகளுக்கும் ஆதாரமான ப்ரஹ்மமே முக்த ப்ராப்யமாகையாலே
பூர்வம் கர்ம வசத்தால் ஹேயமாய்த் தோன்றிய லீலா விபூதியில் உள்ள பதார்த்தங்கள்
அடியோடு கர்மாக்கள் அழியப் பெற்ற முக்தனுக்கு ப்ரஹ்மத்தின் விபூதியாக
மிக்க அனுகூலமாய்த் தோன்றுவதால்
ப்ரஹ்மத்தின் விபூதியில் உள்ளடங்கிய சதுர்முக லோகாதிகளில் உள்ள பதார்த்தங்களின் போகத்தையும்
ப்ரஹ்ம அனுபவத்தைச் சார்ந்ததாகவே முக்தன் அனுபவிக்கிறான் என்று இவ்வர்த்தத்தையே கூறுகிறது
சர்வேஷு லோகேஷு காம சாரோ பவதி என்னும் ஸ்ருதி
ஆகையால் தோஷம் இல்லை என்று கருத்து –

—————————————————————————————-

4-4-20-தர்சயத ச ஏவம் ப்ரத்யஷாநுமாநே-

ப்ரத்யஷம் -ஸ்ருதி
அநுமாநே-ஸ்ம்ருதி
இவைகள் இவ்வாறு
தர்சயத ச ஏவம் -ஜகத் வியாபாராதிகள் பகவானுக்கே உரியவை -முக்தனுக்குக் கிடையாது -என்றும்
பரிபூர்ண ப்ரஹ்ம அனுபவமே அவனுக்கு உள்ளது என்றும்
இத்தகைய அர்த்தங்களைக் காட்டுகின்றன

ஜகத் வியாபாரம் பரம புருஷனுக்கே உரியவை என்று ஸ்ருதிகள் கூறுமே

தைத்ரியம் -2-8- பீஷாச்மாத்வாத பவதே பீஷோதேதி ஸூ ர்ய பீஷாஹ்மாத் அக்னிச்ச இந்த்ரச்ச ம்ருத்யுர்தாவதி பஞ்சமா இதி -என்றும்

ப்ருஹத் -3-8-9-ஏதஸ்ய வா அஷரச்ய பிரசாசநே கார்க்கி ஸூர்யா சந்திர மசௌ வித்ருதௌ திஷ்டத -என்றும்

ப்ருஹத் -2-4-22-ஏஷ சர்வேஸ்வர ஏஷ பூதாதிபதி ஏஷ பூதபால ஏஷ சேதுர்விதரண ஏஷாம் லோகா நாம் அசம்பேதாய -என்றும்

ஸ்ரீ கீதை –
9-10-மாயத்யஷேண பிரகிருதி ஸூ யதே ச சராசரம் ஹேது நாகேன கௌந்தேய ஜகத்தி பரிவர்த்ததே -என்றும்

10-42-விஷ்டாப்யாஹமிதம் க்ருத்ச்னம் ஏகாம் சேன ஸ்திதோ ஜகத் -என்றும்

இது போலே முக்தனின் சங்கல்பம் ஆனந்தம் அனைத்துக்கும் பர ப்ரஹ்மமே காரணம் என்று ஸ்ருதிகள் முழங்கும்

தைத்ரியம் -2-7-ஏஷ ஹி ஏவ ஆனந்தயாதி -என்றும்

ஸ்ரீ கீதை –
14-26-மாம் ச யோ அவ்யபிசாரேண பக்தி யோகேன சேவதே ச குணான் சமதீத்ய ஏதான் ப்ரஹ்ம பூபாய கல்பதே -என்றும்

14-27-ப்ரஹ்மணோஹி பிரதிஷ்டாஹம் அம்ருதச்ய அவ்யயச்ய ச சாச்வதச்ய ச தர்மஸ்ய ஸூ கஸ்ய ஏகாந்தி கஸ்ய ச -என்றும்

அனைத்தும் அவன் இச்சை சங்கல்பம் அடியாகவே என்றதாயிற்று

—————————————————————————————

4-4-21-போக மாத்ர சாம்ய லிங்காச்ச

ப்ரஹ்ம அனுபவம் என்னும் போகம் மூலமாகவே முக்தனுக்கு ப்ரஹ்மத்துடன் சாம்யம் கூறுவதால்
ஜகத் வியாபாரம் இல்லாமல் உள்ளதே முக்தனின் ஐஸ்வர்யம் என்றதாயிற்று

ப்ரஹ்மத்துடன் கூடி இருந்தே முக்தன் அனுபவிக்கிறான் என்கிறது

தைத்ரியம் -2-1- சோஸ்நுதே சர்வான் காமான் சஹ ப்ரஹ்மணா விபச்சிதா -என்கிறது –

———————————————————————————-

4-4-22-அநாவ்ருத்தி சப்தாத் அநாவ்ருத்தி சப்தாத் —

ஜகத் காரணத்வம் -ஜகன் நியந்த்ருத்வம் முதலியவை பரம புருஷனுக்கே அசாதாரணமானவை என்றால்
இவ்வாறு ஸ்வ தந்த்ர குண ஸர்வேஸ்வரன்
முக்தனை மீண்டும் ஒரு கால் சம்சாரி யாக்கக் கூடுமே என்கிற
சங்கைக்கு உத்தரம் அருளிச் செய்கிறார் –

பரமாத்மாவாலே முக்தனின் ஐஸ்வர்யம் என்றால் அவன் ஸ்வ தந்த்ரன் அன்றோ –
சம்சாரத்துக்கு தனது சங்கல்பத்தினால் அனுப்புவானோ என்னில்

அகில ஹேய ப்ரத்ய நீகன்
சமஸ்த கல்யாண குணகன்
ஆதி ஸ்வாமி எங்கும் வியாபித்து உள்ளவன் சத்ய சங்கல்பன்
சர்வஜ்ஞன் வாத்சல்யம் மிக்கவன் பரம காருணிகன்
ஒப்பார் மிக்கார் இல்லாதவன்
தானே கர்ம பலன்களை நீக்கி தன்னை அனுபவிக்கப் பண்ணுபவன்
இவற்றை எல்லாம் ஸ்ருதி மூலமே அறிகிறோம்

அதே ஸ்ருதி மீண்டும் அனுப்புவது இல்லை என்கிறதே-

அநாவ்ருத்தி சப்தாத்
இங்கு ஆவ்ருத்தி யாவது பரிபூர்ண ப்ரஹ்ம அனுபவத்தை விட்டு சம்சாரி ஆதல்
அநாவ்ருத்தி -ஒரு காலும் அவ்வாறு சம்சாரத்துக்குத் திரும்பாமை
பரி பூர்ண ப்ரஹ்ம அனுபவத்துக்கு இடையூறு இல்லாது இருக்கை
சப்தாத் -இது முக்தனுக்கு சப்தத்தால் தெரிகிறது

பகவானுக்கு ஸ்ரஷ்டத்வம்-நியந்த்ருத்வம் முதலியவை ஸ்ருதியால் தெரிவது போலவே
ஏதேந ப்ரதிபத்ய மாநா இமாம் மாநவ மா வர்த்தம் நா வர்த்தந்தே என்றும்
ச கல்வேவம் வரத்தயன் யாவதாயுஷம் ப்ரஹ்ம லோகம் அபி சம்பத்யதே ந புனராவர்த்ததே-என்றும் ஸ்ருதியிலும்
இதம் ஞானம் உபாச்ரித்ய மம சாதர்ம்யம் ஆகதா சர்க்கேபி நோப ஜாயந்தே பிரளயே நவ்ய சந்திச-என்று ஸ்ம்ருதிகளாலும்
முக்தனுக்கு ஆவ்ருத்தி இல்லை என்று தெரிகிறதே –

சாந்தோக்யம் -8-12-1-ச கல்வேவம் வரத்தயன் யாவதாயுஷம் ப்ரஹ்ம லோகம் அபி சம்பத்யதே ந புனராவர்த்ததே -என்றும்

ஸ்ரீ கீதை –
8-15-மாமுபேத்ய புனர்ஜன்ம துக்காலய சாஸ்வதம் நாப் நுவந்தி மஹாத்மன சம்சித்திம் பரமாம் கதா -என்றும்

8-16-ஆ ப்ரஹ்ம புவனால்லோகே புனராவர்த்தின அர்ஜுன மாமுபேத்ய து கௌந்தேய புனர் ஜன்ம ந வித்யதே -என்றும்
சொல்வதால் அவன் அனுப்ப மாட்டான்

பர ப்ரஹ்மத்தையே அனுபவிக்கும் சுருக்கம் இல்லாத ஞானம் கொண்ட முக்தன்
வேறு ஒன்றிலும் விருப்பம் இல்லாமல் இருக்க மீண்டும் பிறப்பான் என்ற அச்சம் தேவை இல்லை

தனக்கு மிகவும் பிரியமான ஞானி
ஸ்ரீ கீதை –
7-17-ப்ரியோ ஹி ஜ்ஞாநின அத்யர்த்தம் அஹம் ச ச மம்ப்ரிய -என்றும்

‘7-18-உதாராஸ் சர்வே ஏதைவி ஜ்ஞாநீ த்வாத்மைவ மே மதம் ஆஸ்தி தஸ் சஹி யுக்தாத்மா மாமேவா நுத்தமாம் கதிம் -என்றும்

7-19- பஹூ நாம் ஜன்மந்தே ஜ்ஞானவான் மாம் ப்ரபத்யதே வாஸூதேவஸ் சர்வம் இதி ச மஹாத்மா ஸூ துர்லப

இப்படி கிடைப்பதற்கு மிகவும் அரியவன் நான் விடுவேனோ

ஸ்ரீ பாஷ்யம் நியமிக்கப் படுவதால் இரண்டு தடவை -அநாவ்ருத்தி சப்தாத் –அநாவ்ருத்தி சப்தாத் —

இங்கு பாஷ்யத்தில் அபிமதமான நான்கு வகை சங்கைகளுக்கும் பரிஹாரம் வருமாறு

1-பரமபுருஷன் ஓத்தார் மிக்கார் இல்லாதவன்
ஆதலால் அவனை விட உயர்ந்த புருஷனால் ஆவ்ருத்திக்கு சங்கை இல்லை
2-அநவதிக அதிசய ஆனந்த ரூபமான ப்ரஹ்மத்தை அனுபவிப்பவனுக்கு அந்ய அபேக்ஷை இல்லாததாலே
ஸ்வ இச்சையாலும் புநர் ஆவ்ருத்தி சங்கிக்க இயலாது
3-இவனுக்கு வாஸனையோடே கர்ம சமுதாயம் நசித்த படியாலே கர்ம மூலமாகவும் புநர் ஆவ்ருத்தி சங்கிக்க இயலாது
4-பரம புருஷன் ஸ்வ தந்திரனானாலும் ஸத்ய ஸங்கல்பனாகவும் இருப்பதால் முக்தனைத் தான்
திரும்பி அனுப்ப மாட்டேன் என்ற ஸங்கல்பம் மீற மாட்டாதவன் ஆகையால் புநர் ஆவ்ருத்தி சங்கிக்க இயலாது

ஆகையால் காலதத்வம் உள்ளவரையும் முக்த ஐஸ்வர்யம் நிலை பெற்றதாகிறது –

ஸ்ரீ பாஷ்ய ஸ்ரீ ஸூக்திகள்
யதா–நிகில ஹேய ப்ரத்ய நீக –கல்யாணை கதான–
ஜகஜ் ஜன்மாதிகாரணம் -சமஸ்த வஸ்து விலஷணம் — சர்வஜ்ஞ– சத்யசங்கல்ப –ஆஸ்ரித வாத்சல்யை கஜலதி–
நிரஸ்த சமாப்யதிக –சம்பாவன பரம காருணிக –பர ப்ரஹ்ம அபிதான –பரம புருஷ
நச பரமபுருஷ சத்யசங்கல்ப அத்யர்த்தப்ரியம் ஜஞாநினம் லப்த்வா கதாசிதாவர்த்தயிஷ்யதி

சேதனலாபம் எம்பெருமானுக்கு பரமபுருஷார்தம் அன்றோ

வாரிக் கொண்டு என்னை விழுங்குவன் காணில் என்று
ஆர்வுற்ற என்னை ஒழிய என்னில் முன்னம்
பாரித்து தான் என்னை முற்றப் பருகினான்
கார் ஒக்கும் காட்கரை யப்பான் கடியனே -9-6-10-

எல்லாம் மிகவும் ஸமஞ்சஸம்

இந்த கடைசி ஸூத்ரத்தை தனி அதிகாரணமாக சிலர் கொள்கிறார்கள்
ஸ்ரீ பாஷ்யகாரருக்கு அது திரு உள்ளம் அன்று
இது பூர்வ அதிகரண சேஷமாகவே கொள்ளத் தக்கது

ஆகவே
ஸர்வ ஸ்வாமியான பரம புருஷனுக்கு அசாதாரண சிஹ்ன மான
ஜகத் காரணத்வம்
மோக்ஷ ப்ரதத்வம்
ஸ்ரீ யபதித்தவம்
சேஷ ஸாயித்த்வம்
முதலியவற்றுடன்
ஸர்வ தேச ஸர்வ கால ஸர்வ அவஸ்தைகளிலும்
ஸர்வ வித கைங்கர்யமே முக்தனுக்கு உரியது
என்று இந்த அதிகரணத்தின் அர்த்தம் நிலை பெற்றது –

————–

ஆறு அதிகரணங்களின் சாரம் –

அதிகரணம் -1- சம்பத்ய ஆவிர்பாவாதி கரணம் -அபஹத பாபமத்வாதி த்ருஷ்டி விஸிஷ்டமாக ஸ்வரூப ஆவிர்பாவம் என்றும்
அதிகரணம் -2-அவிபாகே நத்ருஷ்டவாதிகரணம் -ஸ்வ பிரகாரியாய் பரம புருஷ பர்யந்தமாக அஹம் ப்ரஹ்மாஸ்மி -என்கிற அனுபவம் உண்டு என்றும்
அதிகரணம் -3-ப்ரஹ்மாதிகரணம்—ஞான ஸ்வரூபமாக சுருதியில் கூறப்பட்ட முக்தனுக்கு
அபஹத பாபமத்வாதி குணங்களாகிற பிரகாரங்களுடன் ஸ்வ அனுபவமும்
அதிகரணம் -4-சங்கல்பாதி கரணம் –தன் சங்கல்பத்தாலே ஞாத்யாதிகளை அடைதலும்
அதிகரணம் -5-அபாவாதி கரணம் –முக்தனுக்கும் தேஹ பரிக்ரஹத்தில் நியமம் இன்மையும்
அதிகரணம் -6-ஜகத் வ்யாபார வர்ஜாதி கரணம் -ப்ரஹ்ம சாம்ய ப்ரபத்தியில் ஜகத் காரணத்வாதிகளான ப்ரஹ்ம லக்ஷண வர்ஜனமும்

ஆகியவை விளக்கப் பட்டன

மங்களம் ஸ்ரீ பாஷ்காராய மஹநீய குணாப்தயே
மங்களம் பூர்வ பாச்சாத்ய குருப்யோ அஸ்து நிரந்தரம் –

————————————————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading