ஸ்ரீ வால்மீகீய ஆதிகாவ்யே -ஸ்ரீ உத்தர காண்டம்–63–லவண வதோபாய கதனம். (லவணனை வதம் செய்ய வழி சொல்லுதல்)–

அத்தியாயம் 63 (600) லவண வதோபாய கதனம். (லவணனை வதம் செய்ய வழி சொல்லுதல்)

இதைக் கேட்டு சத்ருக்னன் வெட்கம் அடைந்தான். காகுத்ஸா, நான் ராஜ்யத்தை விரும்பியதாக பொருள் கொள்ள வேண்டாம்.
நான், அதர்மமாக, பெரியவர்கள் இருக்கும் பொழுது ராஜ்யத்தை ஏற்றுக் கொள்வேனா?
உன் கட்டளையை மேற்கொண்டு கண்டிப்பாக செய்வேன்.

யாராக இருந்தாலும், ராஜ சாஸனம் நிறைவேற்ற வேண்டிய ஒன்று என்பதை அறிவேன்.
இளையவன் சபையில் பேசக் கூடாது என்பதை வேத சாஸ்திரங்களில் படித்து தெரிந்து கொண்டிருக்கிறேன்.
பலரும் சொல்லி கேள்விப் பட்டிருக்கிறேன். தாங்களே சொல்லி பல முறை கேட்டிருக்கிறேன். நான் பேசியது தவறு தான்.

நிச்சயம் அந்த லவணனால் கொல்லப் படுவேன். என் தவற்றுக்கு அது தான் தண்டனை.
மூத்தவன் இருக்கையில் சபையில் பேசிய தவறு – அதற்கு தண்டனை நீங்களே கொடுங்கள்.
வேறு யாரும் எனக்கு தண்டனை கொடுப்பதை நான் பெற மாட்டேன்.

இவ்வாறு சத்ருக்னன் சொல்லவும் ராமர், பரதன், லக்ஷ்மணனைப் பார்த்து சொன்னார்.
அபிஷேக சாமான்களை கொண்டு வாருங்கள்.
இந்த ராகவனை, புருஷ வ்யாக்ரனை முடி மூசூட்டி அபிஷேகம் செய்து வைக்கிறேன்.
புரோகிதர்களையும், நிகமம் அறிந்த ரிஷிகளையும், மந்திரிகளையும் என் கட்டளை என்று சொல்லி அழைத்து வாருங்கள்.

அப்படியே என்று சொல்லி அபிஷேகத்திற்கான பொருட்களை சேகரித்துக் கொண்டு,
மந்திரி வர்க்கங்களையும் அழைத்துக் கொண்டு அவ்விருவரும் வந்து சேர்ந்தனர்.
இதன் பின் சத்ருக்னனுக்கு முடி சூட்டும் வைபவம் நடந்தது.
முடி சூட்டப் பெற்ற சத்ருக்னன் ஆதித்யன் போல பிரகாசித்தான்.

மருத் கணங்கள் சூழ, முன்பு இந்திரன், ஸ்கந்தனுக்கு அபிஷேகம் செய்து வைத்தது போல இருந்தது.
ஊர் ஜனங்கள் மகிழ்ச்சியடைந்தனர். வேதம் அறிந்த பலரும் மகிழ்ந்து வாழ்த்தினர்.
கௌசல்யை, சுமித்ரா, கைகேயி மூவரும் மங்களாசாஸனம் செய்தனர்.
ராஜ பவனத்தில் இருந்த மற்றவர்களும் கலந்து கொண்டனர்.

யமுனா தீரத்திலிருந்து வந்திருந்த ரிஷிகளும், கலந்து கொண்டனர்.
லவணன் இறந்தான் என்று நம்பிக்கை கொண்டனர்.

முடி சூட்டப் பெற்ற சத்ருக்னனை அணைத்து ராமர் மதுரமாகச் சொன்னார்.
இதோ விசேஷ சக்தியடைய சரங்கள். திவ்யமானவை. எதிரிகளை அழிக்க வல்லவை.
இதைக் கொண்டு லவணனை வதைப்பாய்.
இதை ஸ்வயம்பூவான ப்ரும்மா, பகவான் பாற்கடலில் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது ஸ்ருஷ்டி செய்தார்.
யாரும் கவனிக்கவில்லை. யார் கண்ணுக்கும் இது புலப்படாது. அதனாலேயே அமோகம் எனப்படும்.

துராத்மாக்களான மது கைடபர்களை வதைக்க கோபத்துடன் தயார் செய்யப் பட்டது.
இந்த அரக்கர்கள் மூவுலகையும் தாங்களே ஸ்ருஷ்டி செய்வதாக கிளம்பினர். உலகை ஆட்டி வைத்தனர்.
இந்த ஆயுதத்தால் தான் அவர்களை வதைத்து பின் உலகங்களை ஸ்ருஷ்டி செய்ய ஆரம்பித்தார்.

இது உலகில் உள்ள ஜீவன்களுக்கு பெரும் பயத்தைக் கொடுக்கும் என்பதால் நான் ராவண வதத்தில் இதை உபயோகிக்கவில்லை.
மதுவின் கையில் த்ரயம்பகன் கொடுத்த உயர்ந்த சூலம் இருப்பதால் அதற்கு சமமான ஆயுதம்
உனக்கும் வேண்டும் என்பதால் இதை உனக்குத் தருகிறேன்.

சூலத்தை வீட்டில் வைத்து பூஜை செய்தபடி மூவுலகையும் பயமுறுத்தி வருகிறான்.
நினைத்தபடி கொன்று குவித்து வருகிறான்.
யாராவது யுத்தம் செய்ய வந்தால் தான், எதிரியை பஸ்மமாக ஆக்கக் கூடிய இந்த ஆயுதத்தை எடுப்பான்.

அதனால் அவன் கோட்டை வாயிலில் நில். அவன் கையில் ஆயுதம் இல்லாமல் வரும் பொழுது,
ஊருக்குள் நுழையும் முன் யுத்தத்துக்கு அழை. இப்படிச் செய்தால் தான் அவனை வெல்ல முடியும்.
மற்றபடி அவனை கொல்ல முடியாது. சிதிகண்டனான சிவபெருமான் சூலம் சக்தி வாய்ந்தது.
தவிர அவரே தந்துள்ள வரம். அதையும் மீற முடியாது.

————————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading