ஸ்ரீ வால்மீகீய ஆதிகாவ்யே -ஸ்ரீ உத்தர காண்டம்–64–சத்ருக்ன ப்ரஸ்தானம். (சத்ருக்னன் கிளம்புதல்)

அத்தியாயம் 64 (601) சத்ருக்ன ப்ரஸ்தானம். (சத்ருக்னன் கிளம்புதல்)

இவ்வளவும் சொல்லி, அவனுக்கு தைரியம் ஊட்டி, உயர்வாக பேசி அவன் மனோ பலத்தைக் கூட்டி, மேலும் சொன்னார்.
இதோ ஆயிரம் உயர் ஜாதி குதிரைகள். இரண்டாயிரம் ரதங்கள். நூற்றுக் கணக்கான யானைகள்.
நமது கடை வீதிகளையும் ராஜ மார்க்கங்களையும் அலங்கரிக்கப் பயன் பட்டவை, சத்ருக்னனுடன் செல்லட்டும்.

நட நர்த்தகர்களும் உடன் செல்லுங்கள். போதுமான அளவு தங்கம் வெள்ளி எடுத்துக் கொண்டு போ.
இந்த பெரிய படையை, உன் பேச்சினாலும் பொருள் தந்தும், ரஞ்சகமாக வைத்திரு.
அவர்கள் உன்னிடம் பிரியமாக இருக்கும்படி நடந்து கொள்.

தங்கள் மனைவி மக்களை பிரிந்து வந்த துக்கத்தை கூட உணராதபடி வைத்துக் கொள்.
தன் கீழ் உள்ளவர்களிடம் அன்புடன் நடந்து கொள்பவன் தான் அவர்களிடம் வேலை வாங்க முடியும்.
அதனால் உன் பெரும் படையைச் சார்ந்த வீரர்களை உற்சாகமாக வைத்திரு.

நீ ஒருவன் மட்டுமே வில்லை ஏந்தி மதுவனம் செல். நீ யுத்தம் செய்ய வந்திருப்பதாக சந்தேகமே வராது.
லவணன் அறியாதபடி கோட்டை முற்றுகையை செய். அவன் ஆகாரம் தேடி வெளியில் சென்று திரும்பும் பொழுது தாக்கு.

வேறு வழியில்லை சத்ருக்னா. எதிரில் நின்று போர் புரிபவர்கள் அழிவது உறுதி.
வெய்யில் காலம் முடிந்து மழைக் காலம் ஆரம்பிக்கும் சமயம் துர்மதியான லவணனை வதம் செய்.
அதுதான் அவனுக்கு சரியான நேரம். உன் படை வீரர்கள் முன்னால் மகரிஷிகளை வைத்துக் கொண்டு முன்னேறட்டும்.

வேணில் காலத்தில் நீர் குறைந்து கங்கைக் கரையில் மணல் நிறைந்து இருக்கும்.
அங்கு உன் சேனையை நிறுத்தி வை. சாதாரண போர் வீரன் போல நீ மட்டும் முன்னால் வில்லை ஏந்தியவனாகச் செல்.
யாரும் சந்தேகிக்க முடியாதபடி.

இவ்வாறு ராமர் உபதேசித்ததைக் கேட்டு புரிந்து கொண்ட சத்ருக்னன்,
தன் படையின் முக்கிய தலைவர்களை அழைத்து விவரங்கள் சொல்லி, யாருக்கும் எந்த தொந்தரவும் தராதபடி,
தங்கி இருந்து நீங்கள் செயல் பட வேண்டும்.

அந்த பெரிய படையை பகுதிகளாக பிரித்து தனித் தனியே தங்க ஏற்பாடுகள் செய்து,
தேவையான வசதிகளும் செய்து கொடுத்து விட்டு, தாய் மார்கள் மூவரையும் வணங்கி விடை பெற்றுக் கொண்டான்.

ராமரை பிரதக்ஷிண நமஸ்காரங்கள் செய்து விடை பெற்றான்.
பரத, லக்ஷ்மணர்களை கை கூப்பி வணங்கி விடை பெற்றான்.
புரோகிதரான வசிஷ்டரையும் வணங்கி ஆசி பெற்றான். பின் தன் படையுடன் போருக்குப் புறப்பட்டான்.

————————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading