ஸ்ரீ வால்மீகீய ஆதிகாவ்யே -ஸ்ரீ யுத்த காண்டம் – –6.118–ஸ்ரீ சீதா ப்ரத்யாதே3ச: (ஸ்ரீ சீதையை ஏற்க மறுத்து திருப்பி அனுப்புதல்)

etachchhrutvaa shubhaM vaakyaM pitaamahasamiiritam |
aN^kenaadaaya vaidehiimutpapaata vibhaavasuH || 6-118-1

1. shrutvaa = hearing; etat shubham vaakyam = these auspicious words; pitaamaha samiiritam = spoken by Brahma (creator); vibhaavasuH = the fire-god; utpapaata = came up; aadaaya = taking; vaidehiim = Seetha; aN^kena = in his arms.

Hearing the foregoing auspicious words of Brahma (the creator), the fire-god came up, taking Seetha in his arms.

abraviittu tadaa raamaM saakShii lokasya paavakaH |
eShaa te raama vaidehii paapamasyaaM na vidyate || 6-118-5

5. tadaa = then; paavakaH = the fire-god; lokasya saakShii = the witness of the world; abraviit tu = spoke; raamam = to Rama (as follows); eShaa= here; te vaidehii = is your Seetha; na vidyate paapam = no sin exists; asyaam = in her.

Then, the fire-god, the witness of the whole world, spoke to Rama as follows “Here is your Seetha. No sin exists in her.”

vishuddhabhaavaaM niShpaapaaM pratigR^ihNiiShva maithiliim |
na kiMchirabhidhaatavyaa ahamaajJNaapayaami te || 6-118-10

10. pratigR^ihNiiShva = take back; maithiliim = Seetha; niShpaapam = who is sinless; vishuddha bhaavaam = with a pure character; na abhidhaatavyaa = she should not be told; kimchit = anything (harsh); aham = I; aajJNaapayaami = (hereby) command; te = you.

“Take back Seetha, who is sinless, with a pure character. She should not be told anything harsh. I hereby command you.”

avashyaM chaapi lokeShu siitaa paavanamarhati |
diirghakaaloShitaa hiiyaM raavaNaantaHpure shubhaa || 6-118-13

13. siitaa = Seetha; avashyam = certainly; arhat = deserves; paavanam = this purefactory ordeal; lokeShu = in the eyes of the people; iyam shubhaa = (in as much as) this blessed woman; diirgha kaaloShitaa hi = had resided for a long time; raavaNaantaH pure hi = indeed in the gynaecium of Ravana.

“Seetha certainly deserves this pure factory ordeal in the eyes of the people in as much as this blessed woman had resided for a long time indeed in the gynaecium of Ravana.

ananyahR^idayaaM bhaktaaM machattaparivartiniim |
ahamapyavagachchhaami maithiliiM janakaatmajaam || 6-118-15

15. ahamapi = I also; avagachchhaami = know; maithiliim = (that) Seetha; janakaatmajaam = the daughter of Janaka; machchittaparivartiniim = who revolves in my mind; bhaktaam ananya hR^idayaam = is undivided in her affection to me.

“I also know that Seetha, the daughter of Janaka, who ever revolves in my mind, is undivided in her affection to me.”

neya marhati chaishvaryaM raavaNaantaHpure shubhaa |
ananyaa hi mayaa siitaa bhaaskareNa prabhaa yathaa || 6-118-19

19. iyam shubhaa = this auspicious woman; naarhati = could not (give way) aishvaryam = to the sovereignty; raavaNaantaH pure = existing in the gynaecium of Ravana; siitaa = in as much as Seetha; ananyaahi = is not different; mayaa = from me; prabhaa yathaa = even as sunlight; bhaaskareNa = (is not different) from the sun.

“This auspicious woman could not give way to the sovereignty, existing in the gynaecium of Ravana, in as much as Seetha is not different from me, even as sunlight is not different from the sun.”

ityevamuktvaa vijayii mahaabalaH |
prashasyamaanah svakR^itena karmaNaa |
sametya raamaH priyayaa mahaayashaaH |
sukhaM sukhaarho.anubabhuuva raaghavaH || 6-118-22

22. uktvaa = saying; ityevam = thus; sametya = and getting reunited; priyayaa = with her beloved (Seetha); vijayii = the victorious; mahaayashaaH= and highly illustrious; raamaH = Rama; raaghavaH = a scion of Raghu dynasty; mahaabalaH = who was endowed with a great strength; sukhaarhaH = and deserved with a great strength; sukhaarhaH = and deserved happiness; prashasyamaanaH = and was being glorified; karmaNaa = by his feats;svakR^itena = performed by own self; anubabhuuva = experienced; sukham = joy.

Saying thus and getting reunited with her beloved Seetha, the victorious and highly illustrious Rama, a scion of Raghu dynasty, who was endowed with a great strength and deserved happiness and was being glorified by his exploits, performed by his own self, experienced joy.

———————————————————————————

அத்தியாயம் 118 (525) சீதா ப்ரத்யாதே3ச: (சீதையை ஏற்க மறுத்து திருப்பி அனுப்புதல்)

அருகில் வந்து நின்ற சீதையை, லஜ்ஜையினால் உடல் குறுக நின்றவளைக் கூர்ந்து பார்த்து விட்டு,
ராமர் தன் மனதில் உள்ளதைச் சொல்ல ஆரம்பித்தார்.
ப4த்3ரே இதோ இருக்கும் நீ, என் வீர்யத்தால், பலத்தால் ஜயிக்கப் பட்டாய். சத்ருவை போர் முனையில் சந்தித்து,
வெற்றி கண்ட பின், நீ விடுவிக்கப் பட்டிருக்கிறாய். என் பௌருஷத்தால் சாதிக்க வேண்டியதை நான் சாதித்தேன்.
கோபத்தில் எல்லையில் இருந்தேன். இதனால் எனக்கு உண்டான அவமானம் துடைக்கப் பட்டு விட்டது.
என் சத்ருவையும், எனக்கு ஏற்பட்ட அவமானம் இரண்டையும் ஒரே சமயத்தில் நான் பிடுங்கித் தூர எறிந்து விட்டேன்.
இன்று என் பௌருஷத்தை உலகுக்கு காட்டி நிமிர்ந்து நிற்கிறேன். என் சிரமங்களுக்கு பலனும் கிடைத்து விட்டது.
என் பிரதிக்ஞையை நிறைவேற்றி என் மனதுள் பெருமிதம் பொங்குகிறது.

சஞ்சல புத்தியுள்ள ராக்ஷஸன், என்னை விட்டுப் பிரித்து உன்னை அழைத்துச் சென்றானே, இது விதியின் விளையாட்டே.
இந்த விதியையும், மனிதனாக நான் ஜயித்துக் காட்டி விட்டேன். என் தேஜஸால் அழிக்க முடியாத அவமானம் இது.
சாதாரணமான அவமானமா? யார் தான் இதை சாதித்திருக்க முடியும்?
அல்ப தேஜஸ் உடையவனாக இருந்தால் என்ன செய்திருப்பான்? இந்த அளவு புருஷார்த்தம் வேறு யாரிடம் இருக்கிறது?
சமுத்திரத்தைக் கடந்து வந்ததோ, லங்கையை முற்றுகையிட்டதோ, என்னைத் தவிர வேறு யாரால் செய்திருக்க முடியும்?
ஹனுமானுடைய அரிய சாகஸமும் பலனுடையதாக ஆயிற்று. சுக்ரீவனும், சைன்யத்தோடு வந்து,
யுத்தத்தில் தங்கள் விக்ரமத்தைக் காட்டியும், எது நன்மை தரும் என்று யோசித்து முடிவு செய்து, செயல் படுத்தி,
அவனும், அவன் கூட்டதினரும் இயன்ற வரை பாடு பட்டது நல்ல பலன் அளித்தது.

அவன் எடுத்துக் கொண்ட சிரமம் வீண் போகவில்லை, இவ்வாறாக பேசிக் கொண்டே போகும் ராமனைப் பார்த்து செய்வதறியாது,
குட்டி மான் போல கண்களில் நீர் வழிய நின்று கொண்டிருந்த சீதையைப் பார்த்து ராமனின் கோபம் அதிகமாயிற்று.
நெய் திடுமென நிறைய வார்க்கப் பட்டவுடன், யாகத்தீ குபீரென்று கொழுந்து விட்டெரிவது போல சினத்தின் ஜ்வாலை வீசியது.
குறுக்காக பார்த்துக் கொண்டு, புருவத்தை நெரித்தவாறு, வானர, ராக்ஷஸர்கள் மத்தியில் சீதையைப் பார்த்து கடுமையாக பேசலானார்.

மனிதன் தன் கடமையை புறக்கணிக்க முடியாது. தாங்க முடியாத அவமானத்தை துடைத்து எறிய வேண்டியது என் கடமையாயிற்று.
என் ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு, சத்ருவை ஜயித்து உன்னை மீட்டேன். அகஸ்திய ரிஷி,எதிர்த்து நிற்க முடியாத
தக்ஷிண திசையை தவத்தாலும், நிரந்தரமான முயற்சியாலும் வெற்றி கொண்டதைப் போல, உன்னை நான் ஜயித்தேன்.
இதையும் தெரிந்து கொள். இந்த ரண பரிஸ்ரமம் என் நண்பர்களின் உதவியால் செய்து முடிக்க முடிந்தது.
உனக்காக அல்ல. என் கௌரவத்தை, சரித்திரத்தை காப்பாற்றிக் கொள்ள என் மேல் வந்து விழுந்த அபவாதத்தை நீக்க
நான் எடுத்துக் கொண்ட முயற்சி தான் இது. புகழ் பெற்ற என் வம்சத்தில் விழுந்த களங்கம் துடைக்கப் பட்டது.

உன் சரித்திரத்தில் இப்பொழுது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. நீ என் முன் நிற்கிறாயே,
கண் வலி உடையவனுக்கு தீபம் போல எனக்கு உன்னைக் காணவே பிடிக்கவில்லை. எனக்கு பிரதிகூலமாக இருக்கிறாய்.
அதனால் போ. நான் அனுமதி அளிக்கிறேன். ஜனகன் மகளே, உன் இஷ்டம் போல போ.
இதோ பத்து திக்குகளில் எங்கு வேண்டுமானாலும் போ. உன்னால் எனக்கு ஆக வேண்டிய காரியம் எதுவும் இல்லை.
உத்தமமான குலத்தில் பிறந்த எந்த புருஷன், பிறர் வீட்டில் வசித்த ஸ்த்ரீயை ஏற்றுக் கொள்வான்?
தேஜஸ் உடையவனாக இருந்தால். கோபம் நிறைந்த ராவணன் மடியில் இருந்து விழுந்தவள் நீ,
அந்த துஷ்டனால் கெட்ட எண்ணத்தோடு பார்க்கப் பட்டவள் நீ, உன்னை எப்படி ஏற்றுக் கொள்வான்?

நான் நல்ல குலத்தில் பிறந்தவன். உன்னை எப்படி ஏற்றுக் கொள்வேன்? என் புகழைக் காத்துக் கொள்ளவே உன்னை மீட்டேன்.
எனக்கு இப்பொழுது உன்னிடத்தில் எந்த வித ஈடுபாடும் இல்லை. நீ போகலாம்.
இங்கிருந்து உன் இஷ்டப்படி எங்கு வேண்டுமானாலும் போகலாம். நான் யோசித்து தான் இந்த முடிவுக்கு வந்தேன்.
ப4த்3fரே, அபலையான ஸ்த்ரீ என்பதால் அடைக்கலம் தேடி, நீ லக்ஷ்மணனிடமோ, பரதனிடமோ, யாரிடம் வேண்டுமோ போய் இரு.
சுகமாக இரு. சுக்ரீவன் வானரேந்திரன் இதோ நிற்கிறான். ராக்ஷஸ ராஜன் விபீஷணனிடம் சௌகர்யமாக இருக்கலாம்.
யாரிடம் வேண்டுமானாலும் உன் மனதை செலுத்தி எப்படி சௌகர்யமோ செய்து கொள்.
மனோரம்யமான உன் திவ்ய ரூபத்தைப் பார்த்தும், தன் க்ருஹத்தில் கொண்டு வந்து வைத்த பின்னும்
ராவணன் தான் எவ்வளவு நாள் பொறுத்திருப்பான்.

மைதிலிஸ்ரீ தன் கணவன் பிரியமாக பேசப் போகிறான் என்று நினைத்து வந்தவள்,
இப்படி ஒரு கடுமையான சொல்லைக் கேட்டு கண்களில் நீர் ஆறாக பெருக,
க3ஜேந்திரன் கையில் அகப்பட்ட கொடி போல நடுங்கினாள்.

————————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading