ஸ்ரீ வால்மீகீய ஆதிகாவ்யே -ஸ்ரீ யுத்த காண்டம் – –6.119–ஹுதாச–ன ப்ரவேச: (அக்னி பிரவேசம்)

puShkaraakSha mahaabaaho mahaavakShaH parantapa |
diShTyaa kR^itamidaM karma tvayaa shastrabhR^itaaM vara || 6-119-2

2. puShkaraakSha = O lotus eyed; mahaabaaho = long armed; mahaavakShaH = broad chested; paramtapa = the annihilator of adversaries; vara = and excellent; dharma bhR^itaam = among those upholding the cause of virtue!; idam karma = this task; kR^itam = was accomplished; tvaya = by you;diShTyaa = thank heaven!.

“O lotus-eyed, long-armed, broad-chested, annihilator of enemies and excellent among those upholding the cause of virtue! Thank heaven! You accomplished this task.”

eSha raajaa vimaanasthaH pitaa dasharathastava |
kaakutstha maanuShe loke gurustava mahaayashaaH || 6-119-7

7. eShaH = this; raajaa = king; dasharathaH = Dasaratha; tava = your; pitaa = father; maanuShe loke = in this mortal world; mahaayashaaH guruH= the highly glorious and venerable person; vimaanasthaH = is seated in an aerial car; kaakutthsa = O Rama!

“This king Dasaratha, your father in this mortal world and the highly glorious as well as the venerable person, is seated in an aerial car, O Rama!”

diipyamaanaM svayAM lakShmyaa virajoambaradhaariNam |
lakShmaNena saha bhraatraa dadarsha pitaraM prabhuH || 6-119-10

10. prabhuH = the lord Rama; bhraatraa lakShmaNena = along with lakshmana his brother; dadarsha = saw; pitaram = their father; diipyamaanam= who was lazing; svayaa lakShmyaa = with his own splendour; viraajo.ambara dhaariNam = and clad in brilliant garments.

The lord Rama along with Lakshmana his brother saw their father, who was blazing with his own splendour and clad in brilliant garments.

adya tvaaM nihataamitraM dR^iShTvaa saMpuurNamaanasam |
nistiirNavanavaasaM cha priitiraasiitparaa mama| 6-119-14

14. adya = today; priitiaasiit = there is a great joy; mama = for me; dR^iShTvaa = for having seen; tvaam = you; nihitaamitram = by whom the enemies have been destroyed; sampuurNa maanasam = fully satisfied in your mind; vistiirNavana vaasam = and having fully gone through the period of your exile.

“Today, there is a great joy for me, for having seen you, fully satisfied in your mind, now that your enemies have been destroyed and you have fully gone through the period of exile.”

idaaniiM cha vijaanaami yathaa saumya sureshvaraiH |
vadhaarthaM raavaNasyeha vihitaM puruShottamam || 6-119-18

18. saumya = O gentle one! vijaanaami = I recognize you; idaaniim cha = now; puruShottama = to be the Supreme person; yathaa vihitam = duly enjoined; iha = here; sureshvaraiH = by the rulers of gods; raavaNasya vadhaartham = for the destruction of Ravana.

“O gently one! I recognize you now to be the Supreme person, duly enjoined here by the rulers of gods, for the destruction of Ravana.”

anuraktena balinaa shuchinaa dharmachaariNaa |
ichchheyaM tvaamahaM draShTuM bharatena samaagatam || 6-119-21

21. aham = I; ichchheyam = desire; draShTum = to see; tvaam = you; samaagatam = re united; bharatena = with Bharata; anuraktena = who has affection towards you; balinaa = who is strong; shuchinaa = who is honest; dharmachaariNaa = and virtuous.

“I desire to see you, re-united with the mighty Bharata, who is affectionate towards you, honest and virtuous.”

iti bruvaaNaM raajaanaM raamaH praa~njalirabraviit |
kuru prasaadaM dharmaGYa kaikeyyaa bharatasya cha || 6-119-25

25. raamaH = Rama; praaN^jaliH = with joined palms in salutation; abraviit = spoke; raajaanam = to dasaratha; bruvaaNam = who was speaking;iti = thus; kuru prasaadam = be gracious; kaikeyyaaH = to kaikeyi; bharatasya = and Bharata; dharmaJNa = O the knower of virtues!

To Dasaratha, who was thus speaking, Rama with joined palms in salutation, submitted (as follows): “Be gracious to Kaikeyi and Bharata, O the knower of virtues!”

raamaM shushrUShataa bhaktyaa vaidehyaa saha siitayaa |
kR^itaa mama mahaapriitiH praaptaM dharmaphalaM cha te || 6-119-28

28. shushruShataa = by doing service; bhaktyaa = with devotion; raamam = to Rama; siitayaa saha = and Seetha; vaidehyaa = the princess of Videha kingdom; mahaapriitiH = a great gratification; kR^itaa = has been brought; mama = to me; dharma phalam cha = a religious merit too; praaptam= has been obtained; te = to you.

“A great gratification has been rendered to me and reward in the form of religious merit earned by you in that you served Rama and Seetha, the princess of Videha kingdom, with devotion.”

etattaduktamavyaktamakSharaM brahmanirmitam |
devaanaaM hR^idayaM saumya guhyaM raamaH parantapaH || 6-119-32

32. saumya = O gentle one!; paramtapa = O the destroyer of adversaries!; raamaH = Rama; uktam = has been spoken of; avyaktam = as the unmanifest; akSharam = and the imperishable; brahma = Brahama; nirmitam tat etat = established by the Vedas; hR^idayam = te heart; devaanaam = of gods; guhyam = and the secret (of all gods).

“O great one! O the destroyer of adversaries! Rama has been spoken of as the unmanifest and the imperishable Brahama (the absolute), established by the Vedas, the heart of gods and the secret of all gods.”

kartavyo na tu vaidehi manyustyaagamimaM prati |
raameNa tvadvishuddhyarthaM kR^itametaddhitaiShiNaa || 6-119-35

35. na manyuH = no wrath; tu = indeed; kartavyaH = should be rendered; imam tyaagam prati = towards Rama; for having repudiated you; itam kR^itam = this has been done; raameNa = by Rama; tvaddhitaiShiNaa = desiring your welfare; vishuddhyartham = and for the purpose of showing you purification.

“No wrath indeed should be rendered by you towards Rama, for having repudiated you. This has been done by him, wishing for your welfare and in order to demostrate your purity.”

vimaanamaasthaaya mahaanubhaavaH |
shriyaa cha saMhR^iShTatanurnR^ipottamaH |
aamantyra putrau saha siitayaa cha |
jagaama devapravarasya lokam| 6-119-39

39. samtuShTa tanuh = with a satisfied self; nR^ipottama = Dasaratha; the excellent king; mahaanubhaavaH = of noble- mindedness; shriyaa = endowed with splendour; aamantrya = taking leave; putrau = of his sons; siitayaa saha = and Seetha; aasthaaya = and ascending; vimaanam = the aerial car; jagaama = went; devapravarasya lokam = to the abode of Indra; the chief of gods.

With a satisfied self, Dasaratha the excellent king of noble-mindedness endowed with splendour, taking leave of his sons and Seetha and mounting the aerial car, went to the abode of Indra, the chief of gods.

——————————————————————————

அத்தியாயம் 119 (526) ஹுதாசன ப்ரவேச: (அக்னி பிரவேசம்)

மயிர்கூச்செரியும் வண்ணம் கொடுமையான இந்த வார்த்தைகளைக் கேட்ட மைதிலி, ராகவனின் முகத்திலிருந்து
வெளிப்பட்ட ஆத்திரத்தையும் கண்டு மிகவும் வேதனையை அடைந்தாள். கூட்டத்தின் நடுவில் நின்ற மைதிலி,
கணவனின் கடும் சொல்லால், வெட்கம் பிடுங்கித் தின்ன, வாட்டமடைந்தாள்.
தன் உடலுக்குள்ளேயே நுழைந்து விடுவது போல அவமானம் அவளை வருத்த, ஜனகாத்மஜா,
வாக்கு அம்புகளால் மிக அதிகமாக அடிபட்டவளாக, பெரிதும் வருந்தி அழுதாள்.
பின் தன் கைகளால் கண்ணீரைத் துடைத்தபடி, மெதுவாக குரல் தழ தழக்க பதில் கொடுத்தாள்.

ஏன் என்னிடம் இப்படி தகாத வார்த்தைகளை, செவிக்கு பயங்கரமான கடும் சொற்களை சொல்லி வதைக்கிறாய்.
வீரனே, ப்ராக்ருதமான கிராமத்து ஆண் மகன், ப்ராக்ருத, கிராமத்து ஸ்த்ரீயிடம் பேசுவது போல பேசினாய்.
நீ நினைப்பது போல அல்ல நான், தெரிந்து கொள். நீ சொல்லும் சரித்திரத்தில், என் நடத்தையின் பேரில் ஆணையாக சொல்கிறேன்.
ஏதோ தனிப்பட்ட சில ஸ்திரீகளின் துர்நடத்தையை மனதில் கொண்டு ஸ்திரீ ஜாதியையே தூஷிக்கிறாயே.

நீ என்னை முற்றிலும் அறிந்தவனாக இருக்கும் பொழுது இந்த சந்தேகம் எப்படி வரும்? அதை இப்பொழுதாவது விடு.
ப்ரபோ4 (ராவண) உடல் ஸ்பரிசம் என் மேல் பட்டது என்றால் அச்சமயம் நான் என் வசத்தில் இல்லை.
வேண்டும் என்று விரும்பிச் செய்த செயலா அது? விதி தான் இதற்கு காரணம். காலத்தின் குற்றம்.
என் அதீனத்தில் உள்ள என் மனம் உன்னையே நாடுகிறது. உன்னையே நினைத்து வந்திருக்கிறது.
பராதீனமான என் சரீரத்தில் எனக்கு என்ன அதிகாரம் இருந்தது. நீயும் இல்லாமல் தனியாக இருந்தேன்.

மானத, (எனக்கு சம்மானமும் கௌரவமும் தந்தவனே) கூடவே வளர்ந்து உணர்ந்து கொண்ட பாவங்களாலும் (உணர்வுகளாலும்),
இணைந்தே இருந்ததாலும் என்னை புரிந்து கொண்டது இவ்வளவு தான் என்றால், நான் சாஸ்வதமாக அழிந்ததாகவே கொள்ளலாம்.
ஹனுமான் என்ற வீரன் என்னைத் தேடி உன்னால் அனுப்பட்டு வந்த பொழுதே, லங்கையில் இருந்த என்னை ஏன் கை கழுவி விட வில்லை.
வானர வீரனின் முன்னால் இந்த வாக்யத்தை கேட்டவுடனே நானே உயிரை விட்டிருப்பேன்.
இந்த நாள் வரை நான் சந்தேகமும் பயமும் அலைக்கழிக்க வாழ்ந்திருக்கவே மாட்டேன்.
நண்பர்கள் எல்லோருமாக சேர்ந்து உனக்கு உதவி செய்தது பலனளிக்காமல் போகாது.

நரசார்தூலா| கோபத்தை மட்டும் மனதில் கொண்டு, சாதாரண மனிதனாக, ஸ்திரீத்வம் என்பதையே அவமதித்து இருக்கிறாய்.
ஜனகன் என்ற அரசனை மையமாகக் கொண்டு, வசுதா தலத்திலிருந்து உதித்தவள் நான்.
என் நடத்தையைப் பற்றி நீ நன்றாக அறிந்திருந்தும், அவமதித்திருக்கிறாய்.
பாலனாக என்னை கைப் பற்றி மணந்து கொண்டது உனக்கு பொருட்டாக இல்லை.
நான் உன்னிடம் கொண்டிருந்த பக்தியும், என் சீலமும் அனைத்தையும் பின் தள்ளி விட்டாய். என்று சொல்லியபடி,
கண்களில் நீர் பார்வையை மறைக்க, லக்ஷ்மணனைப் பார்த்து சொன்னாள்.

சௌமித்ரே| எனக்கு சிதையை தயார் செய். இந்த கஷ்டத்துக்கு அது தான் மருந்து.
பொய்யாக அபவாதத்தை சுமந்து கொண்டு நான் உயிர் வாழ மாட்டேன். ஜன கூட்டத்தின் மத்தியில்
என்னிடம் அப்ரியமாக பேசும் இந்த கணவனுடன், இவனால் கை விடப்பட்டு வாழ, எனக்கு பொறுமை இல்லை.
அக்னி பிரவேசம் செய்து வாழ்வை முடித்துக் கொள்வேன். இவ்வாறு வைதேஹி சொல்லவும், வெகுண்டெழுந்தவன்,
ராகவன் முகத்தை ஏறிட்டு நோக்கினான். ராமருடைய நிலையிலிருந்து அவனுக்கு இது சம்மதமே என்று அறிந்து கொண்டு
சௌமித்ரி, சீதைக்கு சிதையை தயார் செய்தான். ராமருக்கும் இது உகந்ததாகவே இருந்தது.

தலை குனிந்தபடி ராமரை பிரதக்ஷிணம் செய்து வைதேஹி கொழுந்து விட்டெரியும் அக்னியை நோக்கி வந்தாள்.
தேவதைகளை வணங்கி, மைதிலி ப்ராம்மணர்களையும் வணங்கி, கை கூப்பி வணங்கியபடி அக்னியின்
அருகில் நின்றபடி சபதமிடுவது போல சொன்னாள். என் மனம் எப்பொழுதும் ராகவனை விட்டு விலகாது இருந்திருந்தால்,
உலகுக்கெல்லாம் சாக்ஷியான பாவகனான அக்னி என்னை காக்கட்டும். என்னை சுத்தமான நடத்தையுள்ளவளாக ராமன் உணர்ந்தால்,
உலகுக்கெல்லாம் சாக்ஷியான பாவகனான அக்னி என்னை காக்கட்டும். செயலால், மனதால், சொல்லால் நான் என் கடமையிலிருந்து மீறி,
ராகவனைத் தவிர, சர்வ தர்மங்களை அறிந்தவனான ராகவனைத் தவிர நான் நினைக்காமல் இருந்தது உண்மையானால்,
சர்வ லோக ரக்ஷகனான பாவகன், அக்னி என்னை பாதுகாக்கட்டும். என்னை நன்னடத்தையுள்ளவளாக,
ஆதித்யனும், பகவான் வாயுவும், திசைகளும், சந்திரனும், தினமும், சந்த்யா காலமும், இரவும், பூமியும்,
மற்றும் உள்ள பலரும் அறிந்திருந்தால், உலக ரக்ஷகனான பாவகன், அக்னி என்னைக் காக்கட்டும்.

இவ்வாறு சொல்லியபடி, வைதேஹி அக்னியை வலம் வந்து கொழுந்து விட்டெரியும் அக்னியில்
சற்றும் தன் உள்ளத்தில் களங்கம் இல்லாதவளாக நுழைந்தாள். எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே,
புடமிட்ட புது தங்கம் போன்று, புடமிட்ட தங்க ஆபரணங்களை அணிந்தவள் ஜ்வாலையினுள் குதித்து விட்டாள்.

அக்னியில் விழும் அவளை புண்யமான ஆஜ்யம், ஆஹுதியாக யாகாக்னியில் விழுவது போல மூவுலகத்தவரும் கண்டனர்.
ஸ்திரீகள் கூச்சலிட்டனர். அவளை ஹவ்யத்தை ஏந்திச் செல்வதால் ஹவ்ய வாஹனன் என்று பெயர் பெற்ற
அக்னி விழுங்குவதைக் கண்டனர். மந்திரங்களால் சம்ஸ்காரங்கள் செய்யப் பெற்று வஸோர்தாரா, என்று
யாக முடிவில் செய்யப் படும் இடைவிடாது தாரையாக வர்ஷிக்கப் படும் ஆஹுதி போல,
யாகாக்னியில் விழுவதைப் போல கந்தர்வ தானவர்களும், மூன்று உலகத்தாரும் கண்டனர்.
ஸ்வர்கத்திலிருந்து ஏதோ தேவதை சாப வசத்தால் விழுவது போல அக்னியில் பிரவேசித்தவளைக் கண்டு
ஹா ஹா என்று பெரும் சப்தம் உண்டாயிற்று. ராக்ஷஸர்களும், வானரங்களும், அத்புதமான இந்த காட்சியைக் கண்டு திகைத்தனர்.

————————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading