ஸ்ரீ வால்மீகீய ஆதிகாவ்யே -ஸ்ரீ யுத்த காண்டம் – –6.114–மந்தோ3த3ரீ விலாப|| (மந்தோதரி அழுது புலம்புதல்)–

saa hi shokasamaaviShTaa baaShpaparyaakulekShaNaa |
maithilI vijayaM shrutvaa tava harShamupaagamat || 6-114-3

3. shrutvaa = hearing; vijayam = the news of your victory; saa maithilii = that Seetha; shoka samaaviShTaa = stricken as she was with grief;abhikaaNkShati = is (now) longing; draShTum = to see; tvaam = you; baaShpa paryaakulekShaNaa = her eyes filled with tears of joy.

“Hearing the news of your victory, that Seetha, stricken as she was with grief, is now longing to see you, her eyes filled with tears of joy.”

divyaa~NgaraagaaM vaidehIM divyaabharaNabhUShitaam |
iha sItaaM shiraHsnaataamupasthaapaya maachiram || 6-114-7

7. upasthaapaya = bring; iha = here; siitaam = Seetha; shiraH snaanam = after she has bathed her head; divyaaN^garaagaam = has been anointed with charming cosmetics; divyaabharaNa bhuuShitaam = and adorned with beautiful jewels; maa chiram = let there be no delay.

“Bring here Seetha, after she has bathed her head, has been anointed with charming cosmetics and adorned with beautiful jewels. Let there be no delay.”

evamuktaa tu vaidehI pratyuvaacha vibhIShaNam |
asnaataa draShTumichchhaami bhartaaraM raakShasaadhipa || 6-114-11

11. evam = thus; uktaa = spoken; vaidehii = Seetha; pratyuvaacha = replied; vibhiiShaNam = to Vibhishana (as follows): raakShaseshvara = O king of demons!; ichchhaami = I wish; draShTum = to see; bhartaaram = my husband; asnaatvaa = even without taking the bath.

Hearing the words of Vibhishana, replied as follows: “O king of demons! I wish to see my husband, even without taking my bath.”

tasya tadvachanaM shrutvaa maithilI bhraatR^idevataa |
bhartR^ibhaktivrataa saadhvI tatheti pratyabhaaShata || 6-114-13

13. shrutvaa = hearing; tat rachanam = those words; tasya = of Vibhishana; saadhvii = the virtuous; maithilii = Seetha; patidevataa = regarding her husband as a divinity; vR^itaa = endowed as she was; bhartR^i bhaktyaa = with a devotion to her husband; pratyabhaaShata = replied; tatheti = “so it be!”

Hearing those words of Vibhishana, the virtuous Seetha, regarding her husband as a divinity, endowed as she was with a devotion to her husband, said in reply, “So t be!”

tataH paarshvagataM dR^iShTvaa savimarshaM vichaarayan |
vibhIShaNamidaM vaakyamahR^iShTo raaghavo.abravIt || 6-114-18

18. ahR^iShTaH = feeling unhappy; vichaarayan = on considering; savimarsham = with deep thought; (the question of Seetha having come in a palanquin; all the way); raaghavaH = Rama; tataH = then; abraviit = spoke; idam vachaH = the following words; dR^iShTvaa = looking at;vibhiiShaNam = Vibhishana; paarshvagatam = who was by his side.

Feeling unhappy on considering with deep thought, the question of Seetha having come in a palanquin, all the way, Rama then spoke the following words, looking at Vibhishana who was beside him.

teShaamutsaaryamaaNaanaaM sarveShaaM dhvanirutthitaH |
vaayunodvartamaanasya saagarasyeva nisvanaH || 6-114-23

23. teShaam utsaaryamaaNaanaam = while they were being dispersed (in that way); abhuut = there was; sumahaan svanaH = a very great sound;saagarasya niHsvanaH iva = resembling the roar of sea; uddhuuyamaanasya = lashed; vaayunaa = by a storm.

While those warriors were being driven away, there was a very great sound, resembling the roar of a sea, lashed by a storm.

kimarthaM maamanaadR^itya kR^ishyate.ayaM tvayaa janaH |
nivartayainamudyogaM jano.ayaM svajano mama || 6-114-26

26. kimartham = why; ayam janaH = these people; klishyate = are harassed; tvayaa = by you; anaadR^itya = disregarding; maam = me?; nivartaya= stop; udyogam = this exertion; ayam = these; janaH = people; svajanaH = are my own people.

“Why disregarding me, are these people harassed by you? Stop this exertion. They are my own people.”

saiShaa yuddhagataa chaiva kR^ichchhre mahati cha sthitaa |
darshane.asyaa na doShaH syaanmatsamIpe visheShataH || 6-114-29

29. saa eShaa = the yonder Seetha; vipadgataa chaiva = is in distress; sthitaa = and beset; mahati = with a great; kR^ichchhre = difficulty; naasti = there is no; doShaH = fault; ayaaH darshane = in her becoming visible in public; visheShaataH = particularly; matsamiipe = in my presence.

“The younder Seetha is in distress and beset with a great difficulty. There is no fault in her appearance in public, particularly in my presence.”

kalatranirapekShaishcha i~Ngitairasya daaruNaiH |
aprItamiva sItaayaaM tarkayanti sma raaghavam || 6-114-33

33. daaruNaiH iN^gitaiH = from the pitiless facial features; asya = of Rama; kalatra nirapekShaiH = showing indifference to his consort;tavkayanti sma = they conjectured; raaghavam iva = as if Rama; apriitam = had a displeasure; siitaayaam = towards Seetha.

From the pitiless facial features of Rama, showing indifference to his consort, they conjectured as if Rama had some displeasure towards Seetha.

atha samapanudanmanaHklamaM saa |
suchiramadR^iShTamudIkShya vai priyasya |
vadanamuditapUrNachandrakaantaM |
vimalashashaa~Nkanibhaananaa tadaasIt || 6-114-36

36. atha = then; saa = that Seetha; vimala shashaaN^kanibhaananaa = with her face resembling the bright moon; tadaaniim = at that time;udiikShya = seeing; vadanam = the face; priyasya = of her beloved husband; adR^iShTam = which had not been seen; suchiram = for a long time;uditachandra puurNa kaantam = and which was charming like the rising full-moon; apanudat = and dispelled; manaH klamam = her mental fatigue.

Seeing the face of her beloved husband, which had not been seen for a long time and which was charming like the rising full moon, she forth dispelled her mental fatigue.

————————————————————————

அத்தியாயம் 114 (521) மந்தோ3த3ரீ விலாப|| (மந்தோதரி அழுது புலம்புதல்)

இவ்வாறு புலம்பும் ராக்ஷஸ ஸ்திரீகளில் மூமூத்தவளான தர்ம பத்னி, ராவணனுக்கு பிரியமான மந்தோதரி
பதியை தீனமாக பார்த்து, தசக்ரீவனான தன் கணவனை, கற்பனைக்கெட்டாத தன் பராக்ரமத்தால்
ராமன் கொன்று விட்டான் என்பதை நம்பவும் முடியாதவளாக, இறந்து விட்ட தசக்ரீவன் முன்னால் வந்து நின்றாள்.
வருத்தத்துடன், வைஸ்ரவனன் தம்பியே, மகா பாக்யசாலி என்று புகழோடு வலம் வந்தாயே,
நீ கோபத்துடன் இருந்தால், புரந்தரன் என்ற இந்திரன் கூட எதிரில் நிற்க பயப்படுவான்.
ரிஷிகளும், பூமியை ஆளும் அரசர்களும், கந்தர்வர்களும், சாரணர்களும் உன் தொல்லை தாங்காமல்
திசைகள் தோறும் ஓடி ஒளியவில்லையா? மனிதனாக வந்த ராமனிடம் உன் சக்தி எடுபடவில்லையே.

இதில் உனக்கு வெட்கமாக இல்லையா? ராக்ஷஸ ராஜனே, எப்படி மூன்று உலகையும் ஆக்ரமித்து,
செல்வமும், வீரமும் வெளிப்பட வாழ்ந்த உன்னை, விஷம் கூட உன்னை எதுவும் செய்ய முடியாது என்ற நிலையில் மனிதன்,
அதுவும் காட்டில் திரிபவன் வீழ்த்தினான்? மனிதர்கள் எதிரில் விரும்பிய வண்ணம் உருவம் எடுக்க வல்ல உனக்கு,
யுத்தத்தில் ராமனால் மரணம் என்பது பொருத்தமாகவே இல்லையே. இந்த செயல் போர் முனையில் ராமன் செய்தானா?
மனிதன் தானா இந்த ராமன்? எல்லா விதங்களிலும் நிறைந்து நிற்கும் உன்னை ராமன் தாக்கி வதம் செய்தானா?
ஜனஸ்தானத்து ராக்ஷஸ கூட்டத்தோடு கரன் என்ற உன் சகோதரனை மாய்த்ததையும் வைத்து பார்க்கும் பொழுது,
இவன் சாதாரண மனிதன் அல்ல. எப்பொழுது யாரும் எளிதில் நுழைய முடியாத லங்கையின் உள்ளே,
தன் பலத்தால் ஹனுமான் நுழைந்தானோ, அப்பொழுதே நாம் அழிந்தோம்.

வானரங்களைக் கொண்டு சமுத்திரத்தை கடக்க சேது கட்டினான் என்று கேள்விப்பட்டோமே,
அப்பொழுதே நான் இந்த ராமன் சாதாரண மனிதன் இல்லை என்று சந்தேகப் பட்டேன்.
அல்லது ராம ரூபத்தில் க்ருதாந்தன் தானே வந்து நின்றிருக்கிறான். உன் விநாசத்திற்காக மாயையாக,
வேறு உருவம் எடுத்துக் கொண்டு எதிரில் வந்து நின்றிருக்கிறான்.
இல்லையெனில் இந்திரனையும், வீரனே, நீ தாக்கியிருக்கிறாய்.
இந்திரனுக்கே உன்னை நிமிர்ந்து பார்க்க கூட சக்தி இருந்ததில்லையே.

இந்த ராமன் மகா யோகி, சனாதனனான பரமாத்மா என்பது இதனால் வெளிப்படையாகத் தெரிகிறது.
ஆதியும், மத்தியும் அந்தமும் இல்லாத மகத்திலும் மகத்தான, (பெரியதிலும் பெரியதான), தமஸத்திற்கு அப்பாற்பட்ட ப்ரும்மா.
சங்க, சக்ர, க3தை4 இவற்றை தரித்தவன். ஸ்ரீ வத்ஸம் அலங்கரிக்கும் மார்புடையவன்.
நித்யமான, வெல்ல முடியாத, சாஸ்வதமான அழிவற்ற பரம் பொருளே இவன்.
மனித உருக் கொண்ட சாக்ஷாத் மஹா விஷ்ணுவே. சத்ய பராக்ரமன்.
வானர ரூபத்தை எடுத்துக் கொண்டு தேவர்கள் இவனை சூழ்ந்து வந்திருக்கின்றனர்.

சர்வ லோகேஸ்வரன், தானே, உலகின் நன்மைக்காக, ராக்ஷஸ பரிவாரங்களோடு உன்னை வதம் செய்திருக்கிறான்.
இந்திரியங்களை ஜயித்து தவம் செய்து முன்பு உன்னால் மூன்று உலகமும் ஜெயிக்கப் பட்டது.
அந்த வைரத்தை மனதில் கொண்டு அந்த இந்திரியங்களே உன்னை பழி வாங்கி விட்டன போலும்.
நானும் சொன்னேன். ராகவனோடு விரோதம் வேண்டாம், சமாதானமாக போகலாம் என்று எவ்வளவோ சொன்னேன்.
உனக்கு ஏற்கவில்லை. அதனால் தான் இந்த கஷ்டத்தை அனுபவிக்கிறோம்.

திடுமென, யதேச்சையாக கண்ணில் பட்ட சீதையிடம் ஏனோ இவ்வளவு ஆசை வைத்தாய். மோகம் கொண்டாய்.
ராக்ஷஸ ராஜனே, ஐஸ்வர்யம் அழியவும், தன் ஜனங்களின் நாசமும் உன் தேக வியோகமும் அதன் பலன்களே.
அருந்ததிக்கு ஒப்பான, ரோஹிணியை விட சிறந்தவளான, கௌரவம் மிகுந்த சீதையை அபகரித்து,
நீ செய்த செயல் மிகவும் கீழ்த்தரமானது. பூமியை விடச் சிறந்த பூதேவி, லக்ஷ்மிக்கும் லக்ஷ்மியான,
கணவனுக்கு பிரியமான பத்னியான சீதையை, அழகிய வடிவம் உடையவளை,
சுபமான லக்ஷணங்கள் பொருந்திய சீதையை காட்டில் தனியாக இருக்கும்பொழுது பலவந்தமாக அழைத்து வந்து,
நீ மறைமுகமாக உனக்கே தீங்கு இழைத்துக் கொண்டதைத் தவிர என்ன சுகத்தை அடைந்தாய்.

அவள் சரீரத்தை அனுபவிக்க நீ விரும்பியது கூட நடக்கவில்லை. ப்ரபோ, அந்த பதிவிரதையின் தவத்தால் தான்
நீ எரிந்து சாம்பலானாய். நிச்சயம் அவளைத் தொட்டு தூக்கிய பொழுதே தகிக்கப்படாமல் இருந்தது தான் அதிசயம்.
அக்னி முதலான தேவர்கள் உன்னிடம் நடுங்கி வணங்கி இருந்தனர். யாரிடமும் பயம் இல்லாமல் இருந்த நீ,
உன் பாபத்தின் பலனைத் தான் அடைந்திருக்கிறாய்.
ஒருவன் செய்யும் பாப கர்மா, சரியான சமயம் வரும் பொழுது தண்டிக்கும் என்பது உண்மையே.
சுப காரியம் செய்தவன் சௌக்யமாக இருப்பான், பாபத்தை செய்பவன் அதன் பலனை அடைவான் என்பதும் சரியே.

விபீஷணன் நல்ல நிலைமைக்கு வந்து விட்டான். நீ உன் பாப பலனை அனுபவிக்கிறாய்.
ரூபத்திலும், அழகிலும், இன்னும் அதிக மேன்மை வாய்ந்த பெண்கள் உன்னிடம், உன்னை அண்டி இருக்கும் பொழுது,
எல்லோரையும் விட்டு அனங்கன் வசமானாய். மோகம் கண்களை மறைக்க, தவறு செய்தாய். குலத்திலும், ரூபத்திலும்,
தாக்ஷிண்யத்திலும் மைதிலி, என்னை விட எந்த விதத்திலும் உயர்ந்தவளும் அல்ல, எனக்கு சமமானவளும் இல்லை.
இந்த ஒப்பிடலைக் கூட நீ செய்து பார்க்கவில்லை. மோகம் தான் கண்களை மறைத்ததே. தன் அறியாமையால் வீழ்ந்தாய்.
எல்லா ஜீவராசிகளுக்கும் ம்ருத்யு வர ஒரு காரணம் இருக்கும். உன்னை யமனிடம் சேர்க்க இந்த மைதிலி வந்து சேர்ந்தாள்.
வெகு தூரத்திலிருந்த உன் மரணத்தை, சீதா ரூபத்தில் நீயே அழைத்துக் கொண்டு வந்து அருகில் வைத்துக் கொண்டாய்.
இப்பொழுது என்ன? மைதிலி ராமனுடன் சௌக்யமாக இருந்து அனுபவிப்பாள், அவள் துக்கம் எல்லாம் மறைந்து விட்டது.

அவள் பாக்யசாலி. நான் தான் முடிவில்லா சோக சாகரத்தில் மூழ்கி கிடக்கப் போகிறேன். உன்னோடு கைலாசத்தில்,
மேரு மலையில், சித்ர ரதம் என்ற தேவ லோக உத்யான வனத்தில், எல்லா உத்யானங்களிலும் உன்னுடன்
உல்லாசமாக சுற்றி வந்த நான், தகுதியான விமானத்தில் அல்லது உன் செல்வத்துக்கு அனுரூபமான வழியில்
பல தேசங்களைக் கண்டு களித்தும், ஆங்காங்கு கிடைத்த விசித்திரமான மாலைகளையும் வஸ்திரங்களையும்
அணிந்து மகிழ்ந்தவளாக சுகமாக இருந்தேன். இந்த போகங்கள் எதுவும் இனி எனக்கு இல்லை என்று தள்ளப் பட்டு விட்டேன்.

உன் முடிவினால் நான் எதுவும் இல்லாத அபாக்யவதியாகி விட்டேன். தி4க், அரசர்கள் செல்வங்கள் இவ்வளவு சஞ்சலமானவையா?
ஹா ராஜன், ஹே ராஜனே, உன் சுகுமாரமான புருவங்கள், அழகிய உடல் நிறம், உயர்ந்த நாசி, உடலின் காந்தியும்,
லக்ஷ்மியும் (தேஜஸ்), சந்திரன் பத்மம், திவாகரனுடன் ஒப்பிடக் கூடியவை.
கிரீடம் அலங்கரிக்கும் தாமிர நிற முகம் குண்டலங்கள் ஒளி வீச, மதுவருந்தி அரை மயக்கத்திலிருக்கும் சிவந்த கண்கள்,
பான பூமிகளில் பல விதமான மாலைகளணிந்து அழகாக மென்னகை புரியும் வதனம்,
இன்று அதன் இயல்பான ஒளியுடன் இல்லையே. ப்ரபோ, ராம ஸாயக- ராமன் வில்லிலிருந்து வந்த அம்புகள்
ரத்தம் பெருகச் செய்து சேறாகிப் போன மண் உடலில் அப்பிக்கொள்ள, ரதம் ஓடி, கிளப்பி விட்ட புழுதியும்
சேர்ந்து முகத்தை மறைக்கின்றன. ஹா, கடைசி காலம் என்னை விதவையாக்கியபடி வந்து சேர்ந்ததே.

நான் சற்றும் எதிர் பாராத சமயம், என் மந்த புத்தி தான் காரணம். என் தந்தை தானவ ராஜன், கணவன் ராக்ஷஸேஸ்வரன்,
என் மகன் சக்ரனை இந்திரனை வெற்றி கொண்டு இந்திரஜித் என்று பெயர் பெற்றவன் என்று இதனால் கர்வமும்,
என் நாதன் இருக்க எனக்கு எங்கும் யாரிடமும் பயம் இல்லை என்று த்ருடமாக நம்பி,
என்னைச் சுற்றி சூரர்கள், எதிரிகளை அடக்கி ஆளும் வீரர்களே நிறைந்துள்ளனர் என்றும் நம்பியிருந்தேன்.
இப்படி ஒரு மனிதனிடம் இப்படி ஒரு ஆபத்து வந்து சேர்ந்ததே. சாதாரணமாக விஹார சமயங்களில்
இருப்பதை விட சங்க்ராம பூமியில் என் காந்தன் அதிக பிரகாசமாக, கம்பீரமாக நிற்பான்.

தானே நீல மலை போல கம்பீரமான பெருத்த சரீரம் உடையவன், கேயூர, அங்கத, வைமூடுரிய,
முக்தா மணிகளால் ஆன ஆபரணங்கள் அணிந்து அதன் மேல் ஜ்வலிக்கும் மாலையும் அணிந்திருப்பான்.
மின்னல் கரு மேகத்தினிடையில் மின்னுவது போல இந்த ஆபரணங்கள் அவன் மேனியில் எடுப்பாக இருக்கும்.
அந்த சரீரம், ஒன்றா, இரண்டா, பல தீக்ஷ்ணமான, கூரான அம்புகள் தைக்கப் பெற்று விழுந்து கிடக்கிறது.
தொடக் கூட முடியவில்லையே. எப்படி அணைத்துக் கொள்வேன். முள்ளம் பன்றி முதுகில் குத்திட்டு நிற்கும்
ரோமங்கள் போல உடல் முழுவதும் அம்புகள் . வஜ்ர அடியினால் சிதறி விழுந்த மலையின் பாகங்கள் போல
கீழே விழுந்து கிடக்கும் ராக்ஷஸ சரீரம். இது சத்யமாக ஸ்வப்னமே, கனவே.

நீ எப்படி ராமனால் கொல்லப் பட முடியும்? யமனுக்கும் யமனாக இருந்தவன். நீ எப்படி அவன் வசம் ஆவாய்?
மூவுலகங்களிலும் செல்வத்தை அனுபவிக்கவே பிறந்தவன். மூவுலகையும் நீ தூண்டி செயல் படக் கூடியவன்.
லோக பாலர்களையும் ஜெயித்தவன். சங்கரனையே ஆட்டி வைத்தாய். கர்வம் கொண்டு அலைபவர்களை பிடித்து அடக்குபவன்.
உன் பராக்ரமத்தால் மற்றவர்களை பணிய வைத்து பழகியவன். உலகையே வற்றிச் சுருங்கச் செய்பவன்.
உன் குரல் காதில் விழ, பூதங்கள் கூட அலறும் படி சத்ருக்களின் எதிரில் நீ கம்பீரமாக சொல்லும் சொல்லை மீறி
அவர்களால் எதுவும் செய்ய முடியாதபடி பேசுபவன். தன் படை வீரர்கள், வேலையாட்கள் இவர்களை பாதுகாப்பாக ரக்ஷிப்பவன்.

அவர்களை அரவணைத்துச் செல்லத் தக்க பயங்கரமான விக்ரமம் உடையவன். தானவேந்திரர்களை கொன்றவன்.
ஆயிரக்கணக்கான யக்ஷர்களை கவசம் அணிந்து வந்தவர்களை பிடித்துக் கொண்டு வந்த ஈஸ்வரன் நீ.
யாகங்கள் ஒன்றா, இரண்டா, தன் ஜனங்களை எப்பொழுதும் காப்பாற்றும் நல்ல அரசன்.
தர்மம் என்று பழமையிலே உழலாமல், யுத்தம் என்று வந்தால் மாயையால் ஸ்ருஷ்டி செய்து வென்றவன்.
அவ்வப்பொழுது, தேவ, அசுர, மனித கன்னிகளை அபகரித்துக் கொண்டு வந்திருக்கிறாய்.

சத்ருக்களின் ஸத்ரீகள் தான் சோகம், துக்கம் அனுபவிப்பார்கள். தன் ஜனங்களை எப்பொழுதும் பரிபாலித்து
வந்ததால் உன் பக்ஷத்து ஸ்த்ரீகள் துன்பம் அடைந்ததேயில்லை. லங்கை எனும் தீவை கவனமாக பாதுகாத்து வந்தாய்.
பெரும் பயங்கரமான அரிய செயல்களை செய்தவன் நீ. ரதம் ஓட்டுபவர்களில் சிறந்தவன் நீ.
எங்களுக்கு காம போகங்களைத் தருபவன் நீயே. இப்படி பெருமை வாய்ந்த என் கணவன் ராமனின்
அம்புகளால் கொல்லப் பட்டு கீழே விழுந்து கிடப்பதைக் கண்டும் என் மனம் சிதறவில்லையே.
உடலைத் தாங்கியபடி ஸ்திரமாக நிற்கிறேனே. உயர்தர படுக்கைகளில் படுத்து அனுபவித்த ராக்ஷஸேஸ்வரன்,
இந்த புழுதியில் ஏன் கிடந்து உறங்குகிறாய்? உன் மகன் இந்திரஜித் லக்ஷ்மணன் கையால் வதம் செய்யப் பட்ட பொழுதே
நான் பாதி அடிபட்டு நம்பிக்கையிழந்து விட்டேன். இப்பொழுது முழுவதுமாக விழுந்து விட்டேன்.

எனக்கு பந்து ஜனங்களுக்கு குறைவில்லை. நாதா, நாதனான நீ தான் இல்லை.
நீ இல்லாமல் நான் என்ன சுகத்தைக் காண்பேன். காலம் முழுவதும் எனக்கு சிந்தனைதான் மீதியாகும்.
அத்வானமாக நீண்ட வழி செல்லும் நீ என்னையும் அழைத்துச் செல். நான் இங்கு உயிர் வாழ மாட்டேன்.
என்னை அனாதரவாக விட்டு நீதான் எப்படி தனியாக செல்ல முடிந்தது. தீனமாக கதறுகிறேனே,
என்னுடன் பேச மாட்டாயா? நகரத்தை விட்டு கால் நடையாக வெளியே வந்து,
முகத்திரை எதுவும் இல்லாமல் வெட்ட வெளியில் கதறுவது பிடிக்கவில்லையா. இதோ பார்,
உன் மற்ற மனைவிகளும் வெட்கத்தை விட்டு ஓடி வந்து கதறுகிறார்களே, முகத்திரையின்றி வெளியே வந்து
நிற்கும் இவர்கள் எல்லோருமே, உன் விளையாட்டுகளுக்கு சகாயமாக இருந்தவர்கள்,
இப்பொழுது அனாதைகளாக புலம்புகிறார்கள். என்ன பிரமாதம் என்று அலட்சியம் செய்கிறாயா?

இவர்கள் ஒரு பொருட்டாகத் தெரியவில்லையா? இவர்கள் அனைவரும் குலஸ்த்ரீகள். உன்னைச் சார்ந்தே வாழ்ந்தவர்கள்.
நீயின்றி விதவையாக தவிக்கிறார்கள். பதிவிரதைகளாக தர்மபரர்களாக, குரு சுஸ்ரூஷையில் கவனமாக இருந்து
இவர்கள் தன் வசமின்றி சபித்தார்கள். நீ இவர்களுக்கு துரோகம் செய்தாய் அரசனே. உலகில் சொல்வதுண்டு.
பதிவிரதை ஸ்திரீகள் கண்ணீர் பூமியில் விழக் கூடாது. அது நிச்சயம் தண்டித்து விடும் என்று.
உன் விஷயத்தில் சரியாகி விட்டது. ராஜன், நீ உலகங்களை ஆக்ரமித்து, ஜயித்து,
உன் வீர்யத்தை காட்டுவதாக எண்ணி இந்த பெண்களை அபகரித்துக் கொண்டு வந்து சேர்த்தாய்.

திருட்டுத்தனமாக மாயா மான் என்று ஏமாற்றி அவன் நாதனை அகலச் செய்து, தனித்து இருந்தவளை,
ராமபத்னியை கொண்டு வந்தாயே, இது என்ன கோழைத்தனம்? இதில் உன் வீரம் எங்கே இருக்கிறது?
யுத்தத்தில் நீ என்றும் கோழையாக பின் வாங்கி நான் கண்டதில்லை. பாக்யம் விபரீதமாக இருக்கும் பொழுது,
நல்ல அறிவுரையும் பயனின்றி போகும் போலும். சாதாரணமாக நடந்தது, நடப்பது, நடக்கப் போவது என்று
யோசித்து தெரிந்து கொண்டு, கால் வைக்கும் வழக்கமுடைய என் மைத்துனன், மைதிலியை அபகரித்துக் கொண்டு வந்தாயே,
அப்பொழுதே உனக்கு நன்மையைச் சொன்னான். இந்த செயலைக் கண்டு யோசித்து, ஆழ சிந்தித்து
உனக்கு நன்மையைச் சொன்னான். அவன் வாக்கு சத்யமானதே. அதை நீ கேட்கவில்லையே.

அதனால் தான் ராக்ஷஸர்களின் விநாச காலம் முன் வந்து நின்று கொண்டது. காமமும், க்ரோதமும் சேர்ந்து
கஷ்டங்களை கொண்டு சேர்த்திருக்கிறது. வேரோடு அழிக்கும் மகா துக்கம் வந்து,
ராக்ஷஸ குலத்தை அனாதையாக ஆக்கியுள்ளது. அரசனே, இந்த நாசத்திற்கு நீயே தான் காரணம்,
இப்படி நான் உன் புகழ் பெற்ற பராக்ரமத்தை மறந்து பேசுவது கூட சரியல்ல. பெண் மனம், கருணையால் பேச வைக்கிறது.
சுக்ருதமோ, துஷ்க்ருதமோ, நீ உன் வழியில் சென்று விட்டாய். இனி நான் என்ன செய்வேன்?
என்னால் நினைத்து பார்க்க கூட முடியவில்லை. நன்மையைச் சொன்ன ஹிதகாரிகளான நண்பர்கள் சொல்லை நீ கேட்கவில்லை.
சகோதரன் என்று கூட ஏற்றுக் கொள்ளவில்லை. காரண காரியங்களோடு சொன்னான். முறைப்படி சொன்னான்.
ஸ்ரேயஸ்கரமான சொல்லைத் தான் சொன்னான். அந்த விபீஷணன் சொன்னது எதுவுமே உன் காதில் ஏறவில்லையே.

மாரீசன், கும்பகர்ணன், என் தந்தை இவர்களும் சொன்னார்கள். வீர்ய மதத்தில் (கர்வத்தில்) இருந்த
உனக்கு இவை ரசிக்கவில்லையே. அதன் பலன் தான் இது. நீல மேகம் போன்றவனே,
மஞ்சள் பட்டாடை அணிந்தவனே, சுபமான அங்கதம் அணிந்து ஏன் ரத்தச் சேறாகி இருக்கும் பூமியில் கிடக்கிறாய்?
தூங்குவது போல கிடக்கிறாயே, என்னுடன் பேச மாட்டாயா? மகா வீர்யவானான தக்ஷன்,
யுத்தத்தில் என்றும் புற முதுகு காட்டி அறியாதவன், யாதுதான-ராக்ஷஸ ராஜாவின் மகன் வழி பேரனாக வந்தவன்,
நீ இப்படி கிடக்கலாமா? எழுந்திரு, எழுந்திரு, ஏன் படுத்து உறங்குவது போல கிடக்கிறாய்?

புதிய அவமானம் தலை குனிவு வந்து சேர்ந்ததே என்று லஜ்ஜையா? இதோ பார், இன்று பயமின்றி சூரியனின்
கிரணங்கள் லங்கையில் பிரவேசிக்கின்றன. சூரியன் போன்ற தேஜஸுடன் யுத்தத்தில் எதிரிகளை வாட்டி வதைத்தாயே,
வஜ்ரத்தை வஜ்ரதரன் எப்பொழுதும் பூசிப்பது போல நீயும் சூரியனை பூசித்து வந்தாய்.
பொன்னால் இழைத்து அலங்கரிக்கப் பட்ட உன் பரிகம் இதோ சின்னா பின்னமாகி கிடக்கிறது.
இதையும் பிரியமான பத்னியை அணைப்பது போல அணைத்தபடி சமர பூமியில் கிடக்கிறாயே.
நான் பிரியமில்லாதவளாக ஆகி விட்டேனா? என்னுடன் பேச ஏன் இந்த தயக்கம். தி4க்,
என் ஹ்ருதயம் ஏன் நூறாக சிதறி விழவில்லை. நீயும் ஐந்தாவது கதியை
(பால்யம்,-சிசு பருவம், கௌமாரம்-குமாரனான பருவம், யௌவனம்- இளமை, வார்த்தக்யம்-முதுமை),
பஞ்சத்வம் இவைகளுக்கு அடுத்த நிலை, மரணம்) அடைந்தபின் எனக்கு இந்த வாழ்வில் என்ன பாக்கியிருக்கிறது
என்று இவ்வாறு புலம்பி வருந்தும் மந்தோதரி, தன் துக்கத்தைத் தாங்க மாட்டாமல் மூர்ச்சையானாள்.

அழுக்கு மண்டி கிடந்த ராவணன் மார்பில் முகம் பதித்து மூர்ச்சையாகி விழுந்தவள்,
சந்த்யா கால சிவந்த கிரணங்கள் பரவிய மேகத்தில், ஒளியின்றி மின்னல் தெரிவது போல கிடந்தாள்.
அவளை, சபத்னிகள், தங்கள் துயரை அடக்கிக் கொண்டு சமாதானம் செய்தனர். தேவி, உனக்குத் தெரியாததல்ல.
உலகில் ஸ்திரமற்ற இந்த நிலையைப் பற்றி நீ அறிவாய். காலம் மாறும் பொழுது, அரசர்களின்,
சஞ்சலமான செல்வ நிலையும் மாறும். இதைக் கேட்டு மேலும் உரக்க சப்தமிட்டு அழுதாள்.
கண்ணீர் பெருகி அவள் உடலை நனைத்தது. இது இப்படி இருக்க, இங்கு ராமன் விபீஷணனைப் பார்த்து சொன்னான்.

விபீஷணா, உன் சகோதரனுக்கு சம்ஸ்காரங்களை முறைப்படி செய். இந்த ஸ்த்ரீகளை சமாதானம் செய்து அனுப்பு.
இதைக் கேட்டு விபீஷணன் சற்று யோசித்து பதில் சொன்னான். தர்ம விரதத்தை கை விட்டவன்,
என் சகோதரன் தான். ஆனாலும் க்ரூரன், கருணையற்றவன், நேர்மையில்லாதவன்.
பிறன் மனைவியை தொட்டவனான இவனுக்கு நான் ஸம்ஸ்காரம் செய்ய தகுதியற்றவன்.
ப்ராத்ரு (சகோதர) ரூபத்தில் இருந்த சத்ரு இவன். எல்லோருக்கும் துன்பத்தையே இழைத்தான்.
எனக்கு மூத்தவன், குரு என்ற கௌரவத்தால் நான் பூஜிக்கத் தகுந்தவனே.
ஆனால், ராவணன் இந்த கௌரவத்திற்கு தகுதியுள்ளவனே அல்ல.
என்னையும் கொடியவன் என்றே உலகம் அழைக்கும். முதலில் அவன் செய்த கெட்ட காரியங்களை
சொல்லி விட்டுத் தான் ஏதாவது நன்மை செய்ததையும் சொல்வார்கள்.

இதைக் கேட்டு, அர்த்தம் செறிந்த, அழகிய வாக்யங்களையே பேசும் ராமர், தர்மத்தின் வழி நின்று பதில் சொன்னார்.
உன் பிரபாவத்தால் தான் நான் ஜயிக்க முடிந்தது. அதனால் நீ விரும்புவதையும் நான் செய்தே ஆக வேண்டும்.
நான் சொல்வதை கொஞ்சம் பொறுமையாக கேள். இந்த நிசாசரன் அதர்மம், நேர்மையின்மை இவைகளுக்கு
இருப்பிடமாக இருந்ததாகவே வைத்துக் கொள்வோம். தேஜஸ்வி, பலவான், யுத்த பூமியில் சூரனாக திகழ்ந்தவன்.
தேவர்கள், இந்திரன் உள்ளிட்ட யாரிடமும் தோற்றதில்லை என்று கேட்டு இருக்கிறோம்.

மகாத்மா, நல்ல பலம் உடையவன், உலகத்தையே வருத்தும் ராவணன், இவையணைத்தும் இருந்தாலும்.,
மரணம் வரை தான் விரோதம். நம் காரியம் ஆகி விட்டது. இவனுக்கு ஸம்ஸ்காரங்கள் செய்.
உனக்கு எப்படியோ அதே போலத்தான் எனக்கும்., உன் கையால் தசக்ரீவன், விதி முறைபடி ஸ்ம்ஸ்காரங்கள்
செய்யப்பட தகுதியுடையவனே. தர்மம் அறிந்தவனே, இதை செய்து நீ தான் புகழை அடைவாய்.

இதைக் கேட்டு விபீஷணன் மனம் தெளிந்து, வேகமாக செயல் பட ஆரம்பித்தான்.
ராவணனுக்கு செய்ய வேண்டிய இறுதிக் கடன்களை செய்தான். சந்தன கட்டைகளைக் கொண்டு சிதை அமைத்து,
பத்மத்தின் மகரந்தங்களைத் தூவி, ப்ராம்ம விதிபபடி, மான் தோலை விரித்து ஆசனம் அமைத்து அதன் மேல் கிடத்தினான்.
வேதங்கள் அறிந்த அரசனுக்கு இது கடைசி யாகம் என்றே சொல்லப்படுகிறது.
தென் திசை நோக்கி வேதியை அமைத்து, அக்னியை அதன் இடத்தில் வைத்து, பாலுடன் நெய்யை சேர்த்து
ஸ்ருவங்களில் (கரண்டிகளில்) நிரப்பி விட்டான். கால்களில் சக்கரம், தொடைகளில் உலுகலம் என்ற உரல்,
எல்லா விதமான தாரு பாத்திரங்கள், உத்தரணி, உலக்கை இவற்றைக் கொடுத்து, அந்தந்த இடத்தில் வைத்து,
விதி முறைகளை அறிந்த அறிஞர்கள் சொன்னபடி, சாஸ்திரங்களில் கண்டுள்ளபடி,
மகரிஷிகள் விதித்தபடியும் பசுவை பலி கொடுத்து (மேத்யம் எனும் பசு) நெய்யில் தோய்த்து பரத்தினர்.

கந்த மால்யங்களால் ராவணனை அலங்கரித்து, பல விதமான வஸ்திரங்கள் அணிவித்து
விபீஷணன் உதவியோடு பொரிகளை வாரியிறைத்து, கண்களில் நீர் ததும்ப அபர காரியங்களை செய்தனர்.
விபீஷணன் சிதைக்கு தீ மூமூட்டினான். பின் ஸ்நானம் செய்து ஈ.ர வஸ்திரங்களோடு, திலாஞ்சலி செய்தான்.
தண்ணீர், எள், தூர்வா இவற்றைக் கொண்டு நீர்க் கடன்களை செய்து, தலை வணங்கி நின்றான்.
ஸ்த்ரீ ஜனங்களை சமாதானப்படுத்தி, நகரத்தினுள் போகலாம் என்று அழைத்துக் கொண்டு சென்றான்.
விபீஷணன், ஸ்திரீ ஜனங்கள் நகரத்தினுள் நுழைந்ததும், திரும்பி வந்து ராமன் அருகில் வந்து நின்றான்.
ராமரும், சைன்யத்தோடு, சுக்ரீவனும், லக்ஷ்மணனும் உடன் வர, வ்ருத்திரனை வென்ற
சதக்ரது எனும் இந்திரன் மன நிறைவு பெற்றது போல மன நிறைவையடைந்தார்.

————————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading