ஸ்ரீ வால்மீகீய ஆதிகாவ்யே -ஸ்ரீ யுத்த காண்டம் – –6.109–ராவண த்4வஜோன்மத2னம் (ராவணன் கொடியை விழச் செய்தல்) —

viira vikraanta vikhyaata praviiNa nayakovida |
mahaarhashayanopeta kiM sheShe nihato bhuvi || 6-109-2

2. kim = why; sheShe = are you lying; nihataH = killed; bhuvi = on the ground?; viira = O hero!; vikraanta = the valiant one!; vikhyaata = the celebrated one!; praviiNa = O the skillful one; nayakovida = prudent in polity!; mahaarhashayanopeta = though the highly worthy of turning towards lofty beds.

“Why are you lying killed on the ground, though you are highly worthy of turning towards lofty beds, O hero! The valiant one, the celebrated one, prudent in polity?”

yanna darpaat prahasto vaa nendrajinnaapare janaaH |
na kumbhakarNo.atiratho naatikaayo naraantakaH || 6-109-5
na svayaM tvamamanyethaastasyodarko.ayamaagataH |

5. yat = for that which; darpaat = because of arrogance; na prahato vaa = netither prahasta; indrajit na apare janaaH = nor Indrajit and others; na kumbhakarNaH = nor kumbhakarna; atirathaH = nor Atiratha; atikaayaH = nr Atikaya; na naraantakaH = nor Narantaka; na tvam svayam = nor you yourself; amanyethaaH = has agreed; tasya ayan udarkaH = this consequence of it; aagataH = has come.

“For that which, because of arrogance, neither Prahasta nor Indrajit and others, nor Kumbhakarna nor Atiratha nor Narantaka nor you yourself has agreed to my counsel, the consequence of it has come now.”

dhR^itipravaalaH prasahaagryapuShpa |
stapobalaH shauryanibaddhamuulaH |
raNe mahaan raakShasaraajavR^ikShaH |
saMmardito raaghavamaarutena || 6-109-10

10. tejoviShaNaH = with sharpness for its tusks; kula vamshavamshaH = the line of ancesters for its back-bone; kopa prasaadaapara gaatrahastaH= anger for its lower parts and graciousness for its proboscis; raavaNagandhahastii = the elephant in rut in the shape of suptaH = is lying asleep; kShitau= on the ground; ikShvaaku simhaavagR^ihiita dehaH = its body having been overthrown by a lion in the shape of Rama.

“With sharpness for its tusks, the line of ancestors for its back-bone, anger for its lower parts and graciousness for its proboscis, the elephant in rut in the shape of Ravana is lying asleep on the ground, its body having been overthrown by a lion in the shape of Rama.”

vadantaM hetumadvaakyaM paridR^iShTarthanishchayam |
raamaH shokasamaaviShTamityuvaacha vibhiiShaNam || 6-109-14

14. ayam = He (Ravana); na vinaShTaH = did not die; samare = in battle; nishcheShTaH = without making an effort; ayam patitaH = He has fallen (in combat); chaN^Da vikramaH = eventhough he was endowed with terrible prowess; atyunnatamahotsaahaH = and exhibited extra ordinary enthusiasm of a very exalted type; ashaNkitaH = and remained confident (throughout).

“Ravana did not die in battle, without making an effort. He has fallen in combat, eventhough he was endowed with terrible prowess and exhibited extra ordinary enthusiasm of a very exalted type and remained confident throughout.”

naikaantavijayo yuddhe bhuutapuurvaH kadaachana |
parairvaa hanyate viiraH paraanvaa hanti saMyuge || 6-109-18

18. iyam gatiH = such is the destiny; samdiShTaa = proclaimed; puurvaiH = by the ancients; kShatriyasammataa = as highly esteemed for a warrior; kShatriyaH = a warrior; nihataH = killed; samkhye = in battle; na shochyaH = does not deserve to be mourned; iti nishchayaH = such is the ascertainment of the sacred scriptures.

“Such is the destiny proclaimed by the ancients, as highly esteemed for a warrior. A warrior killed in battle, does not deserve to be mourned. Such is the ascertainment of the sacred scriptures.”

eShohitaagnishcha mahaatapaashcha |
vedantagaH karmasu chaagryashuuraH |
etasya yatpretagatasya kR^ityaM |
tatkartumichchhaami tava prasaadaat || 6-109-23

23. eShaH = he; hitaagniH = (maintained) perpetually sacred fire; mahaatapaashcha = He practised great religious austerities; vedaantagaH = He completely mastered the Vedas; the sacred scriptures; agrashuuraH = he was highly proficient; karmasucha = in even the ritual acts; ichchhaami = i desire; kartum = to do; yat = that; tava prasaadaat = with your graciousness which; kR^itya = is to be done; pretagatasya etasya = to him; who has departed to the other world.

“He maintained a perpetually sacred fire. he practised great religious austerities. He completely mastered Vedas, the sacred scriptures. He was highly proficient even in the ritual acts. I desire to do, with you graciousness, that which is to be performed to him, who has departed to the other world.”

maraNaantaani vairaaNi nirvR^ittaM naH prayojanam |
kriyataamasya saMskaaro mamaapyeSha yathaa tava || 6-109-25

25. vairaani = hostilities; maraNaantaani = end with death; naH = our; prayojanam = purpose; nirvR^ittam = has been accomplished; asya samskaaraH = let his funeral rites; kriyataam = be performed; eShaH = he; mamaapi = is as good mine even; yathaa tava = as yours.

“Hostilities end with death. Our purpose has been accomplished. Let his funeral rites be performed. He is even as good mine, as yours.”

————————————————————

அத்தியாயம் 109 (516) ராவண த்4வஜோன்மத2னம் (ராவணன் கொடியை விழச் செய்தல்)

இதன் பின் நடந்த யுத்தம் மகா பயங்கரமானது. காணக் கிடைக்காத அரிய யுத்தம்.
ஸர்வ லோகத்தையும், பயத்தில் ஆழ்த்தி, இரு ரதங்களில் இரு வீரர்களும் ஏறி நின்று,
மகா பயங்கரமாக யுத்தம் செய்த காட்சி. ராக்ஷஸ சைன்யமும், வானரங்களின் பெரும் படையும்,
கையில் ஆயுதங்களுடன் செயலற்று நின்றன. ப3லவான்களான நர, ராக்ஷஸர்கள் தங்களுக்குள்
மோதிக் கொள்ளும் பொழுது, மற்றவர்களுக்கு என்ன வேலை? ஆச்சர்யத்தோடு,
உயிரை கையில் பிடித்துக் கொண்டு நடப்பதை கவனிக்கலாயினர்.

ஒருவரையொருவர் தாங்கள் அடித்துக் கொள்வதை நிறுத்தி விட்டு, பல விதமான ஆயுதங்களுடன்,
தோள் உயர்த்தி துடிப்பாக நின்ற இருவரையும், அவர்களின் பல பரீக்ஷையாக நடக்கப் போகும்
யுத்தத்தையும் காண ஆவலுடன், அதிசயமுமாக நின்றனர். ராவணனை வானரங்களும்,
ராமனை ராக்ஷஸர்களும் கண்களில் ஆச்சர்யம் ததும்ப பார்த்துக் கொண்டு நின்றதே
ஒரு அத்புதமான சித்ரம் போல காட்சியளித்தது. இருவரும் நிமித்தங்களையும் பார்த்து புரிந்து கொண்டு,
வெகு காலமாக அடக்கி வைத்திருந்த ஆத்திரம் வெளிப்பட யுத்தம் செய்ய ஆரம்பித்தனர்.

ஜயிக்க வேண்டும் என்று காகுத்ஸனும், மடிய வேண்டும் என்று ராவணனும் போர்க் களத்தில் இறங்கியது போல இருந்தது.
தங்களுடைய வீர்யம் அனைத்தையும் இந்த யுத்தத்தில் காட்டி விட துடிப்பவர்கள் போல இருந்தனர்.
இதன் பின் தசக்ரீவன் தன் சரங்களைக் கோர்த்து, வில்லிலிருந்து எய்தான்.
ராகவனுடைய ரதத்தின் உச்சியில் கட்டப் பெற்றிருந்த த்வஜத்தை குறி வைத்து அடித்தான்.
அந்த அம்புகள், புரந்தரனின் த்வஜத்துக்கு சமமானவை ஆனதால், த்வஜம் வரை எட்டாமலே விழுந்து நாசமாயின.
ரதத்தை தொட்டு விட்டு கீழே பூமியில் விழுந்து மறைந்தன. ராமரும் தன் வில்லை இழுத்து இதற்கு
பதில் சொல்வது போல மனதால் நினைத்து, ராவணனுடைய த்வஜத்தை நோக்கி கூர்மையான சரத்தை விட்டார்.

கொடிய நாகம் போன்று தாங்க முடியாத சக்தியோடு, தன் சக்தியால் தானே பிரகாசமாகத் தெரிந்த அந்த சரம்
தசக்ரீவனின் த்வஜத்தை அடித்து தள்ளியது. ராவணனுடைய ரணத்வஜம், வேரறுந்த மரம் போல
அடியோடு பெயர்க்கப் பட்டதையறிந்து தசக்ரீவ மகா ராஜா, கோபத்தால் தகித்துக் கொண்டிருக்கும் நிலையை அடைந்தான்.
ஆத்திரம் அவனை சுட்டெரிப்பது போல இருந்தது. மேலும் கோபத்தின் வசத்தில் சரங்களை மழையாக பொழியலானான்.
ராமனுடைய குதிரைகளை தன் கூரிய பாணங்களால் துளைத்து எடுத்தான்.

இந்த பாணங்கள் தைத்த பின்னும் குதிரைகள் தடுமாறவும் இல்லை, பரபரப்பும் அடையவில்லை.
பத்ம நாளத்தால் அடி பட்டது போல சுகமாக, தன்னிலை தவறாது நின்றன.
குதிரைகள் சற்றும் பதட்டமடையாமல் நிற்பதைக் கண்டு தசக்ரீவன் மேலும் ஆத்திரத்துடன் இடைவிடாது அம்புகளை பொழிந்தான்.
க3தை4களும், பரிகங்களும், சக்ரங்களும், முஸலங்களும், மலை சிகரங்களும், மரங்களும், மேலும் சூலங்களும்,
பரஸ்வதங்களும் இந்த சஸ்திரங்களோடு, மாயா ஜாலம் போல வந்து விழுந்தன.

பயத்தை உண்டாக்கியபடி பயங்கரமாக எதிரொலிக்கும் மகா கோரமான சப்தத்துடன் வந்து விழுந்தன.
இந்த அம்பு மழையால் உலகமே சரங்கள் மயமாக ஆயிற்று.
ராவணன், எதிரில் இருந்த ராகவ ரதத்தின் பேரில் சஸ்திரங்களை பிரயோகம் செய்து விட்டு,
அதே வேகத்தில் வானர சைன்யத்தின் மேலும் அந்தரிக்ஷத்திலும் தன் வில்லின் வன்மையால் அம்புகளால் நிரப்பி விட்டான்.
சற்றும் களைப்படையாத மனதுடன், ஆயிரக் கணக்கான சஸ்திரங்களை இடை விடாது எய்த வண்ணம் இருந்தான்.
சற்றும் தயக்கமோ, சந்தேகமோ இன்றி, தசக்ரீவனின் கைகள் சரங்களைப் பொழிந்த வண்ணம் இருந்தன.

யுத்தத்திலேயே தத்பரனாக, தன் ஒரே குறிக்கோளாக யுத்தம் செய்து கொண்டு நிற்கும் ராவணனைப் பார்த்து
ராகவனும் சிரித்துக் கொண்டே, இதோ பார் என்று சொல்லி பதிலடி கொடுப்பது போல
தன் வில்லிலும் கூர்மையான பாணங்களைப் பூட்டி, நூற்றுக் கணக்காக, ஆயிரக் கணக்காக எய்யலானார்.
இதைக் கண்டு ராவணன் தன் அம்புகளால் நிரந்தரமாக நிற்கும் சர ஜாலத்தைக் கட்டினான்.
ஆகாயத்தை மறைத்தபடி அவை நின்றன. இருவருடைய அம்புகளாலும் ஒளி மயமாகிப் போன ஆகாயம்,
இரண்டாவது சூரியனைக் கொண்ட ஆகாயமாகவே விளங்கியது.

எந்த ஒரு பாணமும், நிமித்தம் இல்லாமல் எய்யப் படவில்லை. எதுவும் பலனின்றியும் போகவில்லை.
எதுவும் அளவுக்கதிகமான சேதம் விளைவிப்பதுமாகவும் இல்லை. ஒன்றையொன்று தாக்கி அவை பூமியை சரணடைந்தன.
இவ்வாறாக யுத்தத்தில், ராம, ராவணர்கள் ரண பூமியில் நின்றபடி அம்புகளை விடும் பொழுது,
இடை விடாது இடது, வலது மாறி மாறி அடிக்கும் சமயம், சரங்களின் பெரும் எண்ணிக்கையால்
ஆகாயம் மூச்சு விடத் திணருவது போல திணறச் செய்தனர்.

ராவணனுடைய குதிரைகளை ராமனும், ராமனுடைய குதிரைகளை ராவணனும் அடித்து வீழ்த்தினர்.
செய்த செயலுக்கு பிரதியாக, அடிக்கு பதிலடியாக இருவரும் தளராது போர் செய்தனர்.
இந்த யுத்தம் அத்புதமாக நடந்தது. ஒப்பிட முடியாத இந்த யுத்தம் முஹுர்த்த காலம் நீடித்தது.
ராவணனும், லக்ஷ்மணாக்ரஜனும் கூர்மையான பாணங்களைக் கொண்டு சமமாக போர் செய்து கொண்டிருந்தாலும்,
ராவணன் மனதில் ராமன் த்வஜத்தை அடித்து தள்ளியது பெரும் ஆத்திரத்தை கிளப்பி விட்டபடி இருந்தது.
மனதினுள் ஆத்திரம் புகைந்து கொண்டேயிருந்தது. இதை பெரும் அவமானமாக எண்ணி,
ரகு குலோத்தமனான ராமனிடத்தில் மேலும் அதிக விரோதம் கொண்டான்.

————————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading