ஸ்ரீ வால்மீகீய ஆதிகாவ்யே -ஸ்ரீ யுத்த காண்டம் – –6.110–ராவணைக சத சிரச் சே2த3னம் (ராவணனின் நூற்றியொரு தலையை கொய்தல்)–

dadR^ishustaa mahaakaayaM mahaaviiryaM mahadyutim |
raavaNaM nihataM bhuumau niilaaJNjanachayopamam || 6-110-6

6. taaH = those women; dadR^ishuH = saw; raavaNam mahaakaayam = the gigantic Ravana; mahaaviiryam = who was endowed with a great strength; mahaadyutim = and invested with a great splendour; nihatam = lying killed; bhuumau = on the ground; niilaaN^janachayopamam = like a heap of black collyrium.

Those women saw the gigantic Ravana, who was endowed with a great strength and invested with a great splendour, lying killed on the ground, like a heap of black collyrium.

avadhyo devataanaaM yastathaa daanavarakShasaam |
hataH so.ayaM raNe shete maanuSheNa padaatinaa || 6-110-15

15. shete = here lies; raNe = in the battle field; saH ayam = that Ravana; yaH avadhyaH = who was incapable of being killed; devataanaam = by gods; tathaa = and; daanava raakShasaanaam = devils and demons; hataH = but who was killed; padaatinaa maanuSheNa = by a pedestrian man.

“Here lies killed in battle, by a pedestrian man coming from Ayodhya, that Ravana, who was incapable of being killed by gods and even so by devils and demons too.”

yadi niryaatitaa te svaatsiitaa raamaaya maithilii || 6-110-20
na naH syaadvyasanaM ghoramidaM muulaharaM mahat |

20. yadi syaat te niryaatitaa = if you had restored; siitaa = Seetha; maithilii = a princess of Mithila; raamaaya = to Rama; idam = this; mahat ghoram = this appallingly terrific; vyasanam = disaster; na muula haram = which has robbed us of every root; nasyaat = would not have befallen us.

“If you had restored Seetha a princess of Mithila to Rama, this appallingly terrific disaster, which has robbed us of every root, would not have befallen us.”

vilepurevaM diinaastaa raakShasaadhipayoShitaH |
kurarya iva duHkhaartaa baaShpaparyaakulekShaNaaH || 6-110-26

taaH = those; raakShasaadhipa yoShitaH = consorts of Ravana; diinaaH = depressed as they were; duHkhaartaaH = and afflicted with grief;baaShpa paryaakulekShaNaaH = with their eyes full of tears; vilepuH = lamented; evam = thus; kuravyaH iva = like female ospreys.

Those consorts of Ravana, depressed as they were and afflicted with grief, with their eyes full of tears, thus lamented like female ospreys.

—————————————————————————

அத்தியாயம் 110 (517) ராவணைக சத சிரச் சே2த3னம் (ராவணனின் நூற்றியொரு தலையை கொய்தல்)

இவ்வாறு இருவரும் ஒரே கவனமாக யுத்தத்தை ஒரே சீராக நடத்திக் கொண்டிருந்த சமயம்,
மிகுந்த ஆவலுடன் உலகில் சகல ஜீவ ராசிகளும் யுத்தத்தைக் கண்டபடி திகைத்து நின்றிருந்தனர்.
அவர்களிடையே சமமாக இருந்த பல விஷயங்களை ஆச்சர்யத்துடன் கவனித்தனர்.
இருவரது ரதங்களும் உத்தமமானவை. ஒன்றையொன்று தாக்கின. பரஸ்பரம் கோபம் மிகுந்தவர்களாக,
பரஸ்பரம் துரத்திக் கொள்பவர்களாக, பரஸ்பரம் வதம் செய்வதே குறிக்கோளாக,
காணவே அச்சுறுத்தும் உருவைக் கொண்டவர்களாக இருந்தனர்.

மண்டலங்களாகவும், (வட்டமிட்டும்), நேர் வழியாகவும், போக வர இருந்த பாதைகளிலும்,
சாரதிகளின் பல விதமான சாமர்த்யங்களை காட்டுவது போல இருவரது ரதமும் முன்னும் பின்னுமாக ஓடின.
ராவணனை ராமர் அடித்தார் எனில்., ராவணனும் ராமனை அடித்தான். முன் சென்று அடிப்பதிலும், பின் வாங்குவதிலும்
இருவரும் சளைக்காது, தாக்குவதில் கவனமாக இருந்தனர். இருவருடைய ரதங்களும் நல்ல வேகமுடையவை.
அதில் இருந்தபடி அம்புகளை இடை விடாது ஜாலங்களாக ஒருவர் மேல் ஒருவர் பிரயோகித்துக் கொண்டனர்.

மழை மேகம் போல இருவரும் சக்தியை உள்ளடக்கியவர்களாக, பல விதமாக தங்கள் ஆற்றலை வெளிப்படுத்திக்கொண்டு,
யுத்தம் செய்தனர். ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் நின்று தாக்கினர். ரதத்தின் முன் பக்கம் குதிரைகளை
இழுத்து பிடிக்கும் துரம்-(அச்சு) எனும் பகுதிகள் ஒன்றோடொன்று முட்டிக் கொண்டன.
குதிரைகள் முகத்தோடு முகம் மோதின. நின்று கொண்டிருக்கும் பொழுது பதாகங்கள் இடித்துக் கொண்டன.
ராமன், நான்கு கூர்மையான அம்புகளை எய்து, குதிரைகளை விரட்டினான்.
தன் குதிரைகளை இடம் பெயரச் செய்ததைக் கண்டு ஆத்திரத்துடன் ராவணனும் அதே போன்ற
கூர்மையான பாணங்களை ராமன் மேல் பிரயோகித்தான். நல்ல அடி.

உடலைத் துளைத்து காயங்கள் உண்டானாலும் ராமன் அசையவில்லை. வருந்தவும் இல்லை.
திரும்பவும் வஜ்ரத்தின் அடி போன்று பலமாக தாக்கும் ஆயுதங்களை பிரயோகம் செய்தார்.
ராவணனும் அதே போல ஆயுதங்களை எடுத்து மாதலியை குறி வைத்து அடித்தான்.
மாதலியின் உடலில் ஆழமாக பதிந்த அம்புகளால் அவனுக்கு எந்த விதமான தீங்கும் இழைக்க முடியவில்லை.
தன்னை அடித்தால் கூட பொறுத்துக் கொள்பவன், மாதலியின் மேல் பட்ட அம்பினால் ராகவன் கோபம் கொண்டு
எதிரியின் முகம் தெரியாதபடி சரங்களை சேர்த்து அடிக்கலானார்.

இருபது, முப்பது, அறுபது , நூறு என்று அம்புகள் வில்லிலிருந்து புறப்பட்டன.
நுற்றுக் கணக்காக, ஆயிரக்கணக்காக பாணங்கள் வெளி வந்த வண்ணம் இருந்தன.
எதிரியின் ரதத்தின் மேல் ராகவன் ஏராளமான பாணங்களை எய்து சேதப்படுத்தினார்.
ராவணனும் ரதத்தில் நின்றபடி க3தைகளையும், முஸலங்கள் (உலக்கைகள்) இவற்றை மழையாக பொழிந்தான்.
இதன் பின் நடந்த யுத்தம் மயிர் கூச்செரியச் செய்தது. இரு தரப்பிலும் சமமான பலமும், சேதமும் ஒன்றாகவே இருந்தன.
க3தை4கள், முஸலங்கள் வீசப் படும் ஓசையாலும், சரங்கள் நேர் முகமாக வந்து தாக்கியதாலும், சமுத்திரம் வற்றலாயிற்று.

ஏழு சாகரங்களும் உலர்ந்தன. சாகரங்கள் வற்றவும், பாதாள தளத்தில் வசிக்கும் பலரும்,
நாகங்களும், தானவர்களும், ராக்ஷஸர்களும் ஆயிரக்கணக்கானவர்கள் வருந்தினர். மலைகளும்,
கானனங்களும் உள்ளிட்ட மேதினி, பூமி நடுங்கியது. சூரியனின் ஒளி குன்றியது. காற்று அசையவில்லை.
இதன் பின் தேவர்களும், கந்தர்வர்களும், சித்தர்களும், பரம ரிஷிகளும், பெரும் சிந்தனை வயப்பட்டனர்.
கின்னரர்களும், மகோரர்களும், இவர்களுடன் சேர்ந்து பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தனர்.

கோ, ப்ராம்மணர்களுக்கு மங்களம் உண்டாகட்டும். உலகங்கள் சாஸ்வதமாக நிலைத்து நிற்கட்டும்.
ராகவன் யுத்தத்தில் ராக்ஷஸேஸ்வரனான ராவணனை ஜெயிக்கட்டும். என்று ஜபம் செய்தனர்.
இந்த ரிஷிகணங்களும், தேவர்களும் ராம ராவண யுத்தத்தையும் பார்த்தபடி இருந்தனர்.
மிகவும் பயங்கரமான யுத்தம். உடலில் ரோமங்கள் பயத்தால் குத்திட்டு நிற்க, கந்தர்வ, அப்ஸரஸ கூட்டங்களும்,
அத்புதமான யுத்தத்தைக் காண கூடி விட்டனர். வானத்திற்கு இணை வானமே. கடலுக்கு உவமை கடலே தான்.
அது போல ராம ராவண யுத்தம் ராம ராவண யுத்தமே.
இது போல என்று உவமை சொல்ல முடியாதது என்று சொல்லிக் கொண்டே வேடிக்கைப் பார்த்தனர்.

ரகு குலத்தின் புகழை வளர்க்க என்றே உதித்தவன், நீண்ட கைகளையுடைய ராமன், இனியும் தாமதம் செய்யலாகாது
என்று க்ஷுரம் என்ற ஆயுதத்தை கையில் எடுத்தார்.
ஆலகால விஷம் போன்ற அந்த ஆயுதத்தை வீசி, மணி குண்டலங்களை அணிந்திருந்த ராவணனின் தலையை
துண்டித்து கீழே விழச் செய்தார். லக்ஷ்மீகரமான ராவணன் தலை பூமியில் விழுந்ததை மூன்று உலகத்தினரும் கண்டனர்.
திரும்பி பார்த்தால் அதே போல மற்றொரு தலை முளைக்க ராவணன் தலையுடன் முழுமையாக நின்றான்.

வேகமாக செயல் படும் வீரரான ராமர், திரும்பவும் அதே வேகத்தில் இந்த தலையை துண்டிக்க,
துண்டித்த மாத்திரத்தில் ராவணன் புது தலை, முகம் பெற்று நின்றான்.
திரும்பவும் ராமன் ராவணன் தலையைத் தன் கை ஆயுதத்தால் வெட்டி சாய்க்கவும், புது தலை முளைத்து
ராவணன் விகாரமின்றி நிற்கவுமாக, நூற்றி ஒரு தலைகள் ஒரே விதமாக காட்சியளித்து,
ராமன் கையால் துண்டிக்கப் பெற்று விழுந்தன.
ராவணனின் முடிவு என்பது இன்னமும் கைக்கெட்டாத தொலைவிலேயெ இருப்பதாகத் தோன்றியது.

எல்லா விதமான அஸ்திரங்களையும், அவைகளை பிரயோகிக்கும் விதி முறைகளையும் கற்று அறிந்திருந்த ராமர்,
கவலையுடன் யோசித்தார். மாரீசன் எந்த ஆயுதத்தைக் கொண்டு வீழ்த்தப் பட்டானோ, கரனை அழித்த ஆயுதம் எதுவோ,
தூஷணனை வதைத்த ஆயுதம் எதுவோ, க்ரௌஞ்சாரண்யத்தில் விராதனையும்,
தண்டகா வனத்தில் கபந்தனையும் வதம் செய்ய பயன் பட்ட ஆயுதம் எதுவோ,
மலை மேல் ஏழு சால மரங்களையும் ஒன்றாக சாய்க்க பயன் பட்ட ஆயுதம் எதுவோ,
வாலியை வதம் செய்ததும், சமுத்திரத்தை வற்றச் செய்ததுமான தன் பாணங்கள்,
ராவணனிடத்தில் பலம் குன்றி, தேஜஸ் இழந்து போவது ஏன் ? என்று யோசித்தார்.

குழம்பிய மனதுடனேயே ராவணன் பேரில் ஆயிரக் கணக்கான அம்புகளை விட்டார்.
ராவணனும் ரதத்தில் நின்றபடி பதிலடி கொடுத்தான். க3தை3களும், முஸலங்களுமாக ராமன் பேரில்
வந்து விழுந்து திக்கு முக்காடச் செய்தன. திரும்பவும் அதே போல பயங்கரமான யுத்தம்.
சமமான பலம், சமமான தேஜஸ், அஸ்திரங்கள். மயிர் கூச்செரியச் செய்யும் பயங்கரமான யுத்தம்.
அந்தரிக்ஷத்திலும் பூமியிலும், திரும்பவும் மலை உச்சியிலும் தேவ, தானவ யக்ஷர்களின், பிசாசங்கள், உரக ,
பன்னகங்கள், ராக்ஷஸர்கள் இவர்கள் பார்த்துக் கொண்டு நிற்கையிலேயே, இரவு முழுவதும் யுத்தம் நடந்தது.

பகலா, இரவா, முஹுர்த்தமா, க்ஷணமா, ராம ராவண யுத்தம் இடைவெளியே காணவில்லை.
தசரதன் மகனும், ராக்ஷஸ ராஜனும் இடை விடாது போர் புரியும் பொழுது,
யாருக்கு ஜயம் என்பதும் தெளிவாக சொல்ல முடியாத நிலையில் ராகவன் தான் வெற்றி பெற வேண்டும்
என்று விரும்பிய சாரதியான மாதலி ராமனுக்கு ஒரு விஷயம் தெரியப் படுத்தினான்.

————————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading