ஸ்ரீ வால்மீகீய ஆதிகாவ்யே -ஸ்ரீ யுத்த காண்டம் – –6.106–சாரதி விஞே-யம் (சாரதியின் விண்ணப்பம்)

tadapramaadamaatiShTha pratyudgachchha rathan ripoH|
vidhvansayitumichchhaami vaayurmeghamivotthitam || 6-106-11

11. tat = therefore; aatiShTha apramaadam = take care; pratyudgachchha = and go opposite to; ripoH ratham = the chariot of the enemy;ichchhaami = I wish; vidhvamsayitum = to destroy (it); vaayuH iva = even as the wind; utthitam = would blow; megham = a cloud.

“Therefore, take care and march forward, facing the chariot of the enemy I wish to destroy it, even as the wind would blow a cloud.”

apasavyan tataH kurvanraavaNasya mahaaratham |
chakrotkShiptena rajasaa raavaNan vyavadhUnayat || 6-106-15

15. kurvan = passing; mahaa ratham = the huge chariot; raavaNasya = of Ravana; apasavyam = on the right; tataH = (the charioteer) then;raavaNam = (set) Ravana; vyavadhuunayam = shaking; chakra sambhuuta rajasaa = by the dust risen from the wheels (of his own chariot).

Passing the huge chariot of Ravana on the right, the charioteer then set Ravana shaking, by the dust risen from the wheels of his own chariot.

tato devaaH sagandharvaaH siddhaashcha paramarShayaH || 6-106-19
samIyurdvairathan draShTun raavaNakShayakaa~NkShiNaH |

19. tataH = then; devaah = the gods; sagandharvaaH = along with Gandharvas the celestial musicians; siddhaashcha = Siddhas; the demigods;paramarShayaH = and great sages; raavaNa kShayakaaNkShiNaiH = desirous of Ravana’s ruin; samiiyuH = arrived; draShTum = to see; dvairatham = the battle of both the chariot-warriors.

Then, the gods along with the Gandharvas the celestial musicians, Siddhas the demigods and great sages, desirous of Ravana’s ruin, arrived to see the battle of both the chariot-warrriors.

raavaNashcha yatastatra prachachaala vasundharaa || 6-106-25
rakShasaan cha praharataaM gR^ihItaa iva baahavaH |

25. vasumdharaa = the earth; yataH = on which; raavaNaH = Ravana; tatra = was there; prachachaala = trembled; baahavaH = the arms;rakShasaamcha = of demons; praharataam = who were fighting; gR^ihiitaa iva = were like as if they were clasped.

The earth on which Ravana was there, trembled. The arms of fighting demons looked as if they were clasped.

kurvantyaH kalahan ghoran saarikaastadrathaM prati || 6-106-31
nipetuH shatashastatra daaruNaa daaruNasvanaaH |

31. shatashaH = hundreds of; daaruNaah = dreadful; saarikaaH* = Sarika birds; daaruNaarutaaH = with awful howls; kurvantyaH kalaham = fighting; ghoram = terribly; tatra = there; nipetuH = fell; tadratham prati = down upon Ravana’s chariot.

Hundreds of dreadful Sarika* birds, with their awful howls, terribly fighting there, fell down upon Ravana’s chariot.

raamasyaapi nimittaani saumyaani cha shivaani cha || 6-106-34
babhUvurjayashansIni praadurbhUtaani sarvashaH |

34. saumyaani shivaani cha = pleasant and auspicious; jaya shamsiini = depicting victory; raamasya = of Rama; babhuuvuH = arose;praadurbhuutaani = and appeared; sarvashaH = on all sides.

Pleasant and auspicious omens, depicting victory of Rama appeared on all sides, before Rama.

tato nirIkShyaatmagataani raaghavo |
raNe nimittaani nimittakovidaH |
jagaama harShan cha paraaM cha nirvR^itiM |
chakaara yuddheabhyadhikan cha vikramam || 6-106-36

36. tataH = then; raaghavaH = Rama; nimitta kovidaH = having a knowledge of the omens; niriikShya = having seen; nimittaani = the portents;aatmagatani = in his own way; raNe = in the battle-field; jagaama = got; harShamcha = rejoice; paraam nirvR^itim = and extreme happiness; chakaara adhikam vikramamcha = as also shown enhanced prowess; yuddhe = in combat.

Then Rama, with the knowledge of all omens, having seen those portents in his own way in the battle-field, obtained rejoice as well as extreme happiness and shown enhanced prowess in combat.

———————————————————————

அத்தியாயம் 106 (513) சாரதி விஞேயம் (சாரதியின் விண்ணப்பம்)

காலன் பிடியில் இருந்ததாலோ என்னவோ, சாரதியின் இச்செயல் ராவணனுக்கு உவப்பாக இல்லை.
கோபத்துடன் அவனைப் பார்த்து விழித்து கத்தினான். சக்தி இல்லாதவன் போலவும், வீரமற்ற கோழை போலவும்,
பௌருஷம் இல்லாதவன் போலவும் பயந்தவன், அல்பன் போல ஆற்றல் சற்றும் இல்லாதவன் போலவும்,
தேஜஸ் இல்லாதவன் போலவும், என்னைக் காட்டிக் கொடுத்து விட்டாயே.

என் அஸ்திரங்கள் என்னை கை விட்டு விட்டனவா? என் மாயா யுத்த தந்திரங்கள் என்னை விட்டு விலகி போய் விட்டனவா?
துர்புத்தியே | என்னை அவமதித்து விட்டாயே. உன் அல்ப புத்தியால் என்னை ரண பூமியிலிருந்து
விலக்கி கொண்டு வந்து மாசு படுத்தி விட்டாய். எதற்காக என் கட்டளையை எதிர் பார்க்காமல் என்னை
அவமானம் செய்வது போல எதிரிகள் முன்னிலையில் ரதத்தை திருப்பி ஓட்டிக் கொண்டு வந்தாய்.

பண்பற்றவனே| வெகு காலமாக நான் சேர்த்து வைத்திருந்த என் மதிப்பும், பெருமையும்,
என் வீர்யம் பற்றிய நம்பிக்கையும் ஒரே சமயத்தில் நாசமாக்கப் பட்டன. எதிரிகளாலேயே பாராட்டப் பெற்ற வீர்யம் என் வீர்யம்.
என்னுடன் போர் புரிவதையே ஒரு இனிய அனுபவமாக மாற்றான் நினைக்கும் படி போர் புரிபவன் நான்.
எல்லோரும் பார்க்க, கோழை, பேடியைப் போல ரண பூமியிலிருந்து என்னை விலக்கி, ஓட்டி வந்து விட்டாயே.
உன் மோகத்தால் புத்தி இல்லாமல் இந்த செயலை நீ செய்திருக்கவில்லையென்றால், என் சந்தேகம், வேறு யாரோ,
உனக்கு பரிசுகள் கொடுத்து தூண்டி விட்டார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

இது நண்பர்கள் செய்யும் காரியம் அல்ல. நலம் விரும்பும் பந்துக்கள் இப்படி செய்ய மாட்டார்கள்.
எதிரிகள் செய்யும் காரியம் தான் இது. என்னை தலை குனிய வைத்து விட்டாயே.
சீக்கிரம் ரதத்தை திருப்பி ஓட்டு. என் சத்ருக்கள் நான் எங்கே என்று தேட ஆரம்பிக்கும் முன்
என்னை ரண பூமியில் முன் வரிசையில் கொண்டு நிறுத்து. என்னுடன் நீ சேர்ந்து இருந்தது உண்மையானால்,
என் குணங்களை நினைவில் வைத்திருப்பாயானால் சீக்கிரம் ரதத்தை ரண பூமிக்கே கொண்டு செல் என்று
மிக கடுமையாக வசை மாரி பொழியவும், அரசனின் எண்ணத்தை தெரிந்து கொள்ளாமல்,
தானாக நன்மையை விரும்பிச் செய்த செயல், ராவணனுக்கு இவ்வளவு ஆத்திரத்தை கிளப்பி விடும்
என்று அறியாத சாரதி, மெதுவாக சமாதானம் செய்வது போல சொன்னான்.

அரசனே| நான் பயப்படவில்லை. நான் மூடனும் அல்ல. சத்ருக்கள் ஆசை காட்டி என்னை தூண்டி விடவும் இல்லை.
எனக்கு உங்களிடம் உள்ள அன்பு குறையவும் இல்லை. மனம் மயங்கி புத்தி பேதலித்த நிலையிலும் நான் இல்லை.
தாங்கள் செய்த உயர்ந்த நற்காரியங்களை நான் மறந்து போகவும் இலலை.
உங்கள் நன்மைக்காக, போரில் தோல்வியை தழுவக் கூடாதே, அதனால் உங்கள் புகழுக்கு பங்கம் வரக் கூடாதே
என்ற நல்லெண்ணம் மட்டுமே என் மனதில் இருந்தது. உங்களுக்கு நன்மை என்று நினைத்து செய்தேன்.

பிடிக்காமல் போகும் என்று நினைக்கவே இல்லை. ராஜன், என்னை தவறாக எண்ண வேண்டாம்.
என் விஸ்வாசத்தில் அவ நம்பிக்கை கொள்ள வேண்டாம். உங்கள் நலம் விரும்பும் உண்மையான ஊழியன் தான் நான்.
அறியாமல் செய்த தவற்றை, பெரிதாக்காமல் மன்னித்து விடுங்கள். இதோ திரும்ப ரண பூமியில் சேர்க்கிறேன்.
கேளுங்கள். நான் ஏன் ரதத்தை திருப்பி ஓட்டி வந்தேன் என்ற காரணம் சொல்கிறேன்.
நதி ஜலத்தில் சமுத்திர ஜலம் பெருகி எதிர்த்து வந்தது போல யுத்த பூமியிலிருந்து ரதத்தை திருப்பி ஓட்டி வந்தேன்.
(சமுத்திர ஜலம் பெருகி, எதிர்த்து நதியில் பிரவகித்தது போல என்று திலகர் உரை).

பெரும் யுத்தம் செய்து தாங்கள் களைத்து இருந்தீர்கள். உங்கள் முகத்திலும் மகிழ்ச்சியோ, நிதானமோ காணப்படவில்லை.
இந்த குதிரைகளும் களைத்து இருந்தன. வெய்யிலில் வாடி நிற்கும் பசு மாடுகள் போல இருந்தன.
துர்நிமித்தங்களும் ஏராளமாக தெரிந்தன. நமக்கு விபரீதமான நிமித்தங்கள். அதனால் தான் அப்ரதக்ஷிணமாக ஓட்டி வந்தேன்.
தேச காலங்களை அனுசரித்து தான் நாம் நடக்க வேண்டும். லக்ஷணங்கள், இங்கிதங்கள், மறை முகமான சில குறிப்புகள்
இவைகளையும் நாம் அவ்வப்பொழுது கண்டு நடக்கப் போவதையும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

தீனமாக இருப்பதையும், உடல் வருத்தத்தையும், ரதத்தில் இருப்பவனின் பலாபலத்தையும்,
பூமியில் பள்ளம், மேடு இவற்றையும் சமமாக இருப்பதோ, மேடும் பள்ளமுமாக நேர் பாதையின்றி இருப்பதையும்,
யுத்த காலத்தையும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். எதிரியின் உள் நோக்கையும் ஊகித்துக் கொள்ள வேண்டும்.
நேராக எதிர்த்து நின்றும், சற்று விலகி நின்றும், தன்னிடத்தில் நிலைத்து நின்றும்,
பின்னடைந்தும் யுத்தம் செய்வது ரதத்தை ஓட்டும் சாரதிகள் கவனித்து செய்ய வேண்டிய செயல்களாகும்.

தங்கள் சிரம பரிகாரம் செய்து கொள்ளும் அவசியத்தாலும், குதிரைகளின் களைப்பையும் பார்த்து இதை நான் செய்தேன்.
கோபம் கொள்ளாமல் பொறுத்துக் கொள்ளுங்கள். நான் தன்னிச்சையாக இதை செய்து விட்டேன்
என்று கோபம் கொள்ள வேண்டாம். எஜமான விசுவாசம் தான் என்னை இச்செயலை செய்யத் தூண்டியது.
இப்பொழுது கட்டளையிடுங்கள். எதிரிகளை நாசம் செய்ய வல்ல தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று உறுதியாக சொல்லுங்கள்,

வீரனே | நான் அப்படியே செய்கிறேன். தங்கள் மனதில் எள்ளிவும் சந்தேகமோ, மனத் தாங்கலோ இருக்கக் கூடாது.
மகிழ்ச்சியோடு ஆணையிடுங்கள். ராவணனும் மன அமைதி அடைந்தவனாக சாரதியை புகழ்ந்து,
மேலும் யுத்தம் செய்வதிலேயே குறியாக, சாரதியே | சீக்கிரம் என் ரதத்தை ராகவனின் எதிரில் கொண்டு போய் நிறுத்து என்றான்.

சத்ருக்களை வதம் செய்யாமல் ரண பூமியிலிருந்து புற முதுகு காட்டி ஓட மாட்டான், ராவணன் என்றான்.
தன் கை ஆபரணங்களில் ஒன்றை சாரதிக்கு பரிசாக கொடுத்து சமாதானம் செய்து ராவண ராஜா, மன நிறைவுடன் புறப்பட்டான்,
சாரதியும் அவ்வாறே ரதத்தை திருப்பி, குதிரைகளை தட்டிக் கொடுத்து,
க்ஷண நேரத்தில் ராமன் முன்னால் ரதத்தை கொண்டு வந்து நிறுத்தி விட்டான்.

————————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading