ஸ்ரீ நாராயண பரப்ரஹ்ம ! தத்வம் நாராயண பர: !
நாராயண பரஞ்சோதி ! ஆத்ம நாராயண பர: !
நாராயணனே பரப்ரஹ்மம் ! நாராயணனே பரதத்வம் !
நாராயணனே மேலான ஜோதி ! நாராயணனே பரமாத்மா !
ஸ்ரீ ப்ருஹதாரண்ய -பெரிய காடு –ஐந்து வித்யைகள்
மைத்ரேய வித்யை நான்காம் அத்யாயம்
சர்வாந்தராத்மா வித்யை -ஐந்தாம் அத்யாயம்
மைத்ரேய வித்யை நான்காம் அத்யாயம் –
யாஜ்ஜ வல்க்யர் -மைத்ரேயி –
காத்யாயினி அடுத்த மனைவி -த்ரவ்யங்களைப் பிரித்து கொடுத்துப் போக நினைக்க
முக்திக்கு வழி -உயர்ந்த ஒன்றை கேட்க -ப்ரீதிக்கு பாத்திரம் -என்று உபதேசிக்க –
ஒருவர் மற்ற ஒருவருக்கு அன்பானவாக இருப்பது -ப்ரஹ்மத்தாலே -அவன் ஸங்கல்பத்தாலேயே -ஆதமநஸ்து காமாயா என்று -முதல் உபதேசம் –
த்ரஷ்டவ்ய ஸ்ரோதவ்ய மந்தவ்ய நிதித்யாஸி தவ்ய -நான்கு படிகள் -கேட்டு ஆலோசைத்து -தியானித்து -காண்பது –
தர்சன சாமாந ஆகார சாஷாத்காரம் அடைய -அவரை அறியவே சர்வமும் அறிந்தவனாகலாமே –
காரணந்து த்யேயா -அன்றோ கேள்விப்பட்டுள்ளோம்
ஒருவரா இல்லையா
சர்வமும் இவனே -ப்ரஹ்மம் -ஒன்றே -இவனை அண்டாமல் தனியாக எதுவுமோ எவருமோ இல்லையே
விஞ்ஞான கன ஏவ -ஞான வடிவு -ஞானம் உடையவர் –
————
சர்வாந்தராத்மா வித்யை -ஐந்தாம் அத்யாயம்
அடியேன் உள்ளான் அண்டத்து ஆகத்தான் -சர்வாந்தர
-யார் அது -உஷஸ்த்தர் கேட்க -உள்ளே -பிராணன் -இந்திரியங்கள் -ஜீவாத்மா -பல உண்டே
ப்ராணனுக்கும் பிராணன் –
யஜு பிரானோ வை யஜு ப்ராணே ஹீமானி ஸர்வாணி பூதாநி யுஜ்யந்தே யுஜ்யந்தே ஹாஸ்மை ஸர்வாணி பூதாநி
ஸ்ரைஸ்த்யாய யஜூஸ சாயுஜ்யம் சாலோகதாம் ஜயதி ய ஏவம் வேத -5-13-2-
கண்ணால் காணும் ஆத்மாவை சொல்லவில்லை -ஜீவாத்மா ப்ரஹ்மம் சங்கை அறுத்து -இவனே உலகு அனைத்துக்கும் அந்தராத்மா
சர்வ ஸமஸ்த ஆனந்த மயன் -சோகம் மோகம் பசி தாகம் மூப்பு மரணம் அற்றவன்
பாண்டித்யம் -அறிவு பெற்று -அதன் படி நடந்து -விவேக ஞானம் -வைராக்யம் -பால்யர் போல் இருக்க வேண்டும் –
முக்குறும்பு அறுத்து -பெருமையை வெளிப்படுத்தாமல் – மனனம் பண்ணி —
பாண்டித்யம் -பால்யம் -மனனம் -மூன்றுமே வேண்டுமே -ப்ரஹ்ம ஞானம் பரிபூர்ணமாக –
உஷஸ்த சகோளர் வித்யை -இவர்களுக்கு யாஜ்ஜ வல்க்யர் உபதேசித்ததால் சர்வாந்தராத்மா விதிக்கு பெயரும் உண்டு
——–
அந்தர்யாமி வித்யை
அக்ஷர வித்யை
ஜ்யோதிஷாம் ஜ்யோதிஷ் வித்யைகள் பார்ப்போம் -யாஜ்ஜ்வல்க்யர் சொன்னவையே
உத்தாலகர் -யாஜ்ஜ்வலக்கியரை பரீஷை பண்ண கேள்வி
அந்தர்யாமி வித்யை –
ஸூத்ரம் இவ -தாங்குபவன் அவனே –
செலுத்துபவனும் அவனே -அந்தர்யாமி
வாயு தான் தாங்கும் -முதலில் -பிராணன் இல்லா விடில் மரணம் –
பிருத்வியின் மேல் நின்று -உள்ளும் இருந்து நிலத்தால் அறியப்படாமல் பிருத்வியே சரீரம் -செலுத்துபவன் அந்தர்யாமி –
இப்படி ஒவ் ஒன்றுக்கும் -நிலம் நீர் நெருப்பு ஆகாசம் வாயு மேல் லோகங்கள் ஆதித்யன் திசை -சர்வேஷூ பிராணன்
வாயுஸ் ஸூ -ஆத்மாவுக்கும் இப்படியே –
விஞ்ஞான சப்தத்தால் ஆத்மாவைச் சொல்லும்
விண் மீது இருப்பாய்–பிருத்வியா திஷ்டன் – மலை மேல் –கடல் மேல் இருப்பாய்
பிருத்வியா அந்தரா -கரந்து எங்கும் பரந்துளன் -நீக்கமற நிறைந்து விபு
அறியா மா மாயம் -இவை அறியாதவன் அன்றோ
சரீரம் -த்ரவ்யம் தனக்காகவே தாங்கப்பட்டு -தனக்காகவே செலுத்தப்பட்டு -ஸ்வார்த்தே -சேஷதைக ஸ்வரூபம் -ஸ்ரக் சந்த நாதிகள் போல்
எண்ணக் கண்ட விரல்கள் – நீராய் நிலனாய் –பர்யவசாய அர்த்தம் சப்தங்களுக்கு -சரீர சரீரி சம்பந்தம் –
என்னாகியே தப்புதல் இன்றி தனக்கு கவி தான் சொல்லி -செலுத்தி நியமித்து -கருவியே –
ஆக ஐந்து விஷயங்கள் -பரக்க சொல்லி –
அவன் அனைத்தையும் கண்டு கேட்டு அறிந்து –மற்ற எவராலும் காணப்படாமல் –
அத்ருஷ்டா த்ருஷ்டா அவ்விஞ்ஞாதா விஞ்ஞாத -ந அந்நிய -ஓத்தார் மிக்கார் இலையா -ஏக்ஷதே ஆத்மா அந்தராத்மா –
—
அக்ஷர வித்யை
வாக் வன்மை உடைய கார்க்கி -ப்ரஹ்ம அறிய -பிரதம ப்ரஸ்னம் -த்விதீய ப்ரஸ்னம் -முதலில் –
துணி -நூல்களில் தாங்கப்பட்டு -ஓதம் ப்ரோதம் -இரண்டாலும் –
சர்வம் -நீரால் -அது எதால் தாங்கப்படுகிறது -வாயு -அந்தரிக்ஷ லோகம் கந்தர்வ லோகம் ஆதித்ய லோகம்
சந்த்ர நக்ஷத்ர தேவ இந்திரா பிரஜாபதி -ப்ரம்மா லோகம்
மேலே மேலே கேட்டு பதில் அதுக்கும் மேல் -கேட்க்காதே –
நிறுத்து யாஜ்ஜ வல்க்யர்-நிறுத்தினாள்
அப்புறம் உத்தாலகர் கேள்வி -முன்பு பார்த்த அந்தரயாமி வித்யை
மீண்டும் கார்க்கி தைரியத்துடன் கேட்க –
அவ்யக்தம் அறியாத நிலை கீழ் –
அவ்யக்த ஆகாசம் -அதை பரமாத்மா தாங்கும் என்று சொல்ல வேண்டும் –
அனைத்தையும் தாங்கும் அவனை ப்ரம்ம லோகம் தாங்கும் என்று சுருக்கி சொல்லக் கூடாதே –
முக்காலத்திலும் ஸமஸ்த வஸ்துக்களும் அனைத்துக்கும் ஆதாரம் யார் என்று கேள்வியை மாற்றி கேட்க
ஆகாசத்தில் ஓதம் ப்ரோக்தம் -பதில் சொல்லி -அத்தையும் தாங்குவது-பரமாத்மா -அக்ஷரம் -கார்க்கி –
அ ஸ்தூலம்-அணு அல்ல குறுகியது அல்ல நீண்டது அல்ல சிவந்தது அல்ல பசை உடையது அல்ல என்று
அமுகம்-அந்தர் பஹிஸ்ஸா நாராயணன் -அபாஹ்யா -அபாப்த ஸமஸ்த காமன்
நின்றனர் –என்னும் ஓர் இயல்வு -ஆண் அல்லன் -உளன் அல்லன்
சங்கல்ப லேசத்தாலே -ப்ரஸாஸனம் -ஸத்யஸங்கல்பன் –
சாஸ ப்ராசஸானாத் -ஸூத்ரம் -பரா அஸ்ய சக்தி -யுக்தன் -அந்தவத் -பலம் தேஷாம் -புனர் ஜனம் கிடையாது
ப்ராஹ்மணன் -ப்ரஹ்மம் அறிந்து அனுபவிப்பவன் ஆகிறான் –
அத்ருஷ்டா த்ருஷ்டா அவ்விஞ்ஞாதா விஞ்ஞாத -ந அந்நிய -ஓத்தார் மிக்கார் இலையா-இங்கு மீண்டும்
கட் கிலி உன்னைக் காணுமாறு அருளாய் -மிகு நரை இலனே -சாம அப்யதிக தரித்ரன்
———
ஜ்யோதிஷாம் ஜ்யோதிஷ் வித்யை
ஜனக மஹா ராஜருக்கு யாஜ்ஜ்வல்க்யர் -அழகான படிக்கட்டு வைத்துக் காட்டி அருளுகிறார்
ஜீவாத்மாவை பற்றி சொல்லி –
கிம் ஜ்யோதி அயம் புருஷ -எத்தைக் கொண்டு அறியலாம் -கேள்வி
ஆதித்யன் முதலில் சொல்லி -அஸ்தமித்த பின்பு சந்திரன் -இருவரும் இல்லாத -அன்று அக்னி -அதுவும் சாந்தி அணைந்த பின்பு
வாக்கு -சப்தம் கொண்டு அறியலாம் -ப்ரகாசகம் -காட்டிக் கொடுக்கும்
ஸ்வப்னம் – பொழுது -ஆத்மா தானே தர்மபூத ஞானம் கொண்டு –
ஆனந்த விஞ்ஞான மயன் -ஹ்ருதயத்துக்குள் அந்தர் ஜ்யோதியாக இருக்க -ச மான -அபிமானம் கர்வத்துடன் –
அஹங்காரம் -தானாகவே செய்வதாக நினைக்கிறான்
ஸ்வாபாவிக -கர்மம் இல்லாமல் -இயற்கை -ஸம்ஸார ப்ரக்ருதி -தியானிப்பது போலுண்பது போல் தானே செய்வதாக நினைக்கிறான் –
ஸ்வப்னம் பற்றி -அடுத்து -வெளிப்புலன்கள் வேலை செய்யாமல் -ஸ்வயம் நிர்மாத -தன்னுடைய ஞானம் கொண்டே -ஜ்யோதிஸ் ஸாக –
ஸ்வயம் நிர்மாத -தானே ஸ்ருஷ்ட்டி -என்பது இல்லை -தேர்கள் குதிரை மார்க்கம் போக பொருள்கள் இல்லாத
ஸ்வப்ன லோகம் -பரமாத் மாவே ஸ்ருஷ்டிக்கிறார்-
நாமே இப்பொழுது மட்டும் காணும் படி இருக்கும் பொருள்கள்-ஸஹி கர்த்தா – புண்ய பாபங்களுக்குத் தக்கபடி இவையும்
ஆழ்ந்த உறக்கம் -ப்ரஹ்மம் உடன் -அணைந்து -எதையும் அறியாமல் ஸூ ஷுப்தி -அவஸ்தை
ஜாக்ரதை அவஸ்தைக்கு வரும் பொழுது -நன்றாக ஸூ கமாக -தூங்கினேன் –
உதக்ரமணம் -மரணம் அடைந்த பின்பு அடுத்து விளக்குகிறார் –
பிராணன் -இந்திரிய – -கர்ம ருசி வாசனைகள் உடன் செல்கிறான்
யதா சாரி -அதே -சாது காரி சாது பவது -பாப காரி பாவி பவது –
இப்பொழுது நல்லது பண்ணுவது முன்னால் செய்த புண்ய கார்யம்-தவறு செய்வது பாப கார்யம் -என்றார்
காம மயத்தால் -இச்சையே முக்கிய பகுதி -விருப்பங்கள் அடியாகவே புண்ய பாபங்கள் செய்கிறோம்
ச யதா காம பவதி- முடிவு எடுத்து செய்து பலன் அனுபவிக்கிறோம் –
ப்ராப்ய அந்தம் -உலக விஷய விருப்பம் உள்ளவனுக்கு -மீண்டும் மீண்டும்
அகாம்ய பரனுக்கு -பற்று விட்டவர்களுக்கு ப்ரஹ்மம் அடைந்து -ப்ரஹ்மமாகவே ஆகிறான் -ஐக்யம் அல்ல –
அன்புடன் இடைவிடாமல் நிதித்யாசிதவ்யம் -சாஷாத் கார சமான ஆகாரம் –
நின் புகழில் வைக்கும் தம் சிந்தை -வைகுந்தத்தை விட இனியது அன்றோ -இங்கேயே ப்ரஹ்ம அனுபவம் –
சாதன தசையில் போகம் அனுபவம் பக்தியில் மட்டுமே உண்டு -அவனி தேவர் -வையத்தில் வாழ்வார்கள் –
ஜ்யோதிஷாம் ஜ்யோதி அவன் ஒருவனே –
யஜ்ஜம் தானம் தபஸ் வேத வசனம் -உபாஸிக்க ஆசைப்பட்டு –பக்தி ஆரம்ப விரோதி போக்கவே கர்ம யோகங்கள் -அங்கி அங்க பாவம் –
ஸமாஹித -ஒருமித்த த்யானம் அன்புடன் இடைவிடாமல் செய்வதே பக்தி யோகம் –
சமம் தமம் உபரத -விஷயாந்தரங்களில் இருந்து விலகி –
அவன் நம்மிடம் -அனைவரும் அவன் பிரகாரம் என்று உணர்ந்து -ஸாம்யா பத்தி அடைந்து -ஆனந்திப்போம்
யாவையும் எவரும் தானாய் ⋆ அவரவர் சமயம் தோறும் ⋆
தோய்விலன் புலன் ஐந்துக்கும் ⋆ சொலப்படான் உணர்வின் மூர்த்தி ⋆
ஆவிசேர் உயிரின் உள்ளால் ⋆ ஆதும் ஓர் பற்றிலாத ⋆
பாவனை அதனைக் கூடில் ⋆ அவனையும் கூடலாமே. (3-4-10)
————–
மீதி உள்ள –16- வித்யைகள் சாந்தோக்யம் -காட்டிக் கொடுக்கும் –
—————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply