ஸ்ரீ ப்ரஹ்ம வித்யைகள் – ஸ்ரீ கௌஷீகித உபநிஷத் –

ஸ்ரீ நாராயண பரப்ரஹ்ம ! தத்வம் நாராயண பர: !
நாராயண பரஞ்சோதி ! ஆத்ம நாராயண பர: !
நாராயணனே பரப்ரஹ்மம் ! நாராயணனே பரதத்வம் !
நாராயணனே மேலான ஜோதி ! நாராயணனே பரமாத்மா !

ஸ்ரீ கௌஷீதாகி உபநிஷத் – ருக் வேத,

நான்கு அத்தியாயங்கள் –
முதல் அத்யாயம் பர்யங்க வித்யை
மூன்றாம் பிரஸர்தன வித்யை -இந்ரானால் ப்ரசாதனனுக்கு உபதேசம்
நான்காம் பாலாகி வித்யை -பாலாகிக்கு உபதேசம்

யாதும் ,த்ரஷ்டும் ,பிரவேஷ்டும் என பகவானை அடையும் வழிகளான -அறிவது ,காண்பது – த்யானிப்பது -, அடைவது என மூன்று வழிகள் .
அதை கௌஷிகி உபநிஷத் மூலம் – பரியங்க வித்யா : -. அர்ச்சராதி மார்க்கம் மூலம் பிரம்மத்தை அடைவது .
பிரதத்தனை வித்யா :-. பிரததனுக்கு இந்திரன் உபதேசித்தது –
அனைத்து ஜீவாதமாவுக்குள் உள்ளே இருந்து நியமிப்பவன் – பரமாத்மாவான பரப்ரஹ்மமே என அந்தர்யாமித்துவதை அத்புதமாய் சாதித்தீர் .
இதற்கு திருஷ்டாந்தமாக ரதத்தின் வட்டம் உதாகரித்தது அத்புதம் .
ரதத்தின் வட்டம் – அசேதன பதார்த்தம்
ரதத்தின் குச்சிகள் – ஜீவாத்மாக்கள்
குச்சிகள் சேரும் மையம் – நாபி பரமாத்மா

பர்யங்க வித்யை
சித்ரன் அரசன் -ஆருணி இடம் சென்று யாகம்
பிள்ளை ஸ்வேதகேதுவை அனுப்பி
கௌதமர் என்ற பெயரும் ஆருணிக்கு உண்டு
சம்வ்ருத்தம் லோகே -ரஹஸ்யம் -அத்வா -வழி காட்டு -அர்ச்சிராதி மார்க்கம் பற்றிய ரஹஸ்யம் கேட்டு –
பாரிப்பு இருக்க வேண்டுமே
தந்தை இடம் கேட்க -அஹம் அபி -நானும் அறியேன் -இருவருமாக சென்று கேட்ப்போம் -சித்ரன் அரசன் இடமே கேட்க
சொல்லத் தொடங்கும் முன்பு -இவர்களை போற்றிப் புகழ்ந்து -ப்ரஹ்ம வித்யையில் ஆசை இருந்தால் போஷித்து வளர்க்க வேண்டுமே
பஞ்ச ஹவிஸ் -மழை -தான்யம் -ஆண் -இத்யாதி
ஸ்தாவரம் ஜங்கமம் -மனிதன் -தேவர் -சதுர்வித தேகம்

சந்திரன் இடம் பிரார்த்தித்து மிருத்யு இடம் அனுப்பாதே -சம்சாரமே மிருத்யு –
நரகத்தை நகு நெஞ்சே
தேவயானம் -அர்ச்சிராதி கதி
ஆத்மாவை உள்ளபடி அறிந்து -அக்னி லோகம் வாயு வருண லோகம் இந்திரா லோகம் பிரஜாபதி லோகம் –
சாந்தோக்யத்திலும் உண்டு -இரண்டையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் -ப்ரஹ்ம ஸூத்ரத்தில் சமன்வயப்படுத்தி அருளுகிறார்
அர்ச்சிஸ் முதல் -பகல் -சுக்ல பக்ஷம்-உத்தராயணம் –இத்யாதி
விரஜா –விஜரா -ரஜோ குணம் அற்றது -மூப்பு அற்றது –

சத்யம் -அந்தர்யாமி -உணர்ந்து த்யானம் -இப்படி மார்க்க சிந்தனையும் -கேள்வி பதிலையும் உணர்ந்து –
அயோத்யா -அபராஜிதா -அந்தமில் பேர் இன்பம் -அயம் தே லோகம் -விண்ணோர் நாடு ஆகும்

—————–

ப்ரதர்த்தன வித்யை -அடுத்து –
சுவர்க்கம் அடைந்து -இந்திரன் வரம் கேட்க -ஹித தமம்-நீரே உபதேசிக்க வேண்டும் -ஹிதம் -ஹித தரம் -ஹித தமம்-பரம புருஷார்த்தம் –
மாம் ஏவ -த்யானம் -மாம் உபாஸ்வா -அந்தர்யாமியாக இருக்கும் பர ப்ரஹ்ம உபாசனம் –
ஏஷ லோக பாலக -சர்வ சேஷி -அந்தர்யாமி உபாசனம் இது
அநுகாரத்தில் இந்திரன் சொன்னவாறு –

————–

பாலாகி வித்யை -நான்காம் அத்யாயம் -அஜாத சத்ரு என்னும் அரசன் இடம் ப்ரஹ்ம வித்யை அறிந்த பாலாகி சென்று –
உபதேசிக்கிறேன் என்றதுக்கு 1000 கோ தானம் செய்தான் –
அந்தர்யாமித்வம் -இது மட்டும் அல்ல -ஸூ ர்யனுக்கும் உள்ளே இருக்கும் புருஷன் அல்ல -அவனையும் இயக்கம் ப்ரஹ்மம் –
இவருக்கு அரசனே உபாஸிக்க -இவர்களை படைத்து காத்து நியமிக்கும் அவனே ப்ரஹ்மம் –
இவர்களை மட்டும் அல்ல அகில ஜகத் -ஏதத் கர்ம -நீ காணும் அனைத்துக்குமே –
கர்மம் உடையது ஜீவனே பூர்வ பக்ஷம் –
ஜகத் வாசித்வாத் -கர்மம் -கார்ய வாசகம் -செய்யப்பட்டவை என்றவாறு –
அவனே அகல் ஞாலம் படைத்து இடந்தான் அவனே அஃது உண்டு உமிழ்ந்து அளந்தான்
அவனே அவனும் அவனும் அவனும் அவனும் -ச ப்ரம்மா ச ஈஸா -இத்யாதி –
கூட்டி -பெரிய ஒருவர் இடம் கூட்டிச் சென்று -அழைத்ததும் எழுந்து இருக்க வில்லை -தட்டியதும் எழுந்தார்
தூங்கும் பொழுது -மனஸ் இந்திரியங்கள் -ஆத்மா -கார்யம் -இல்லை பிராணன் மட்டும் இருக்குமே -அதுவோ ப்ரஹ்மம் –
அழைத்தாலும் எழுந்து இருக்க வில்லையே -பிராணனும் இல்லை
ஸ்வப்னம் -ஆழ்ந்த உறக்கம் -எங்கு இருந்து ஆத்மா மீள்கிறார் -மூன்று கேள்விகள் –
ஹ்ருதயம் புரீதத் –ஹிதா நாடியில்–பிராணன் உடன் ஏகதா பவத் -சொப்பனம் –
நானே பரமாத்மா நானே பிராணன் -பரமாத்மாவையே குறிக்கும் -கீழே இந்திரன் சொன்னதை பார்த்தோம் –
யாதும் எவர்க்கும் முன்னோனை-தேனும் பாலும் கன்னலும் அமுதமுமாகி தித்தித்தது
ஊனில் உணர்வில் நின்ற ஒன்றை உணர்ந்தேன் –
அறிந்து உபாசிப்பவன் பாபங்களை போக்கி -சத்ய சங்கல்பம் பெறுகிறான் பலன் சொல்லி தலைக்கட்டுகிறது

————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading