ஸ்ரீ திருமலை நம்பி தனியன் –
பிதா மஹஸ் யாபி பிதா மஹாய ப்ராசேத–சாதேச பலப்ரதாய
ஸ்ரீ பாஷ்கர உத்தம தேசிகாய ஸ்ரீ சைல பூர்ணாய நமோ நமஸ்து —
ஸ்ரீ வைதேஹீ ஸஹிதம் ஸூரத்ரும -தலே ஹைமே மஹா மாண்டபே
மத்யே புஷ்ப்பக மாசநே மணி மயே வீராசநே ஸம்ஸ்திதம்
அக்ரே வாசயதி பிரபஞ்சன ஸூதே தத்வம் முனிப்ய பரம்
வ்யாக்யாந்தம் பராதிபி பரிவ்ருதம் ராமம் பஜே ஸ்யாமளம்
வீர ஆசனத்தில் ஸ்ரீ பெருமாள் -ஸ்ரீ வாயு குமாரர் ஸ்ரீ ராமாயணம் சாதித்து அருள –
ஸ்ரீ பெருமாள் வியாக்யானம் சாதித்து அருளி -இதுவே நம் பூர்வர்கள் ஸ்ரீ குரு பரம்பரை மூலம் பெற்ற நிதி
———–
நாடிய பொருள் கை கூடும் ஞானமும் புகழும் உண்டாம்
வீடியல் வழியாதாக்கும் வேரி யங் கமலை நோக்கும்
நீடிய அரக்கர் சேதன நீறு பட்டுழிய வாகை
சூடிய சிலை இராமன் தோள் வலி கூறுவோர்க்கு
நன்மையையும் செல்வமும் நாளும் நல்குமே
திண்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே ராம வென்ற இரண்டு எழுத்தினால்
ஆபதாம் அபஹர்தாரம் தாதாரம் ஸர்வ ஸம்பதாம்
லோகாபிராமம் ஸ்ரீ ராமம் பூயோ பூயோ நமாம்யஹம்
———–
ஸ்ரீ கூஜந்தம் ராம ராமேதி மதுரம் மதுராக்ஷரம்
ஆருஹ்ய கவிதா சாகாம் வந்தே வால்மீகி கோகிலம்
ஸ்ரீ வால்மீகேர் முனிஸிம்ஹஸ்ய கவிதா வனசாரிண:
ச்ருண்வன் ராமகதா நாதம் கோ ந யாதி பராங்கதிம்
ய: பிபன் ஸததம் ராம சரிதாம்ருத ஸாகரம்
அத்ருப்தஸ்தம் முனிம் வந்தே ப்ராசேதஸ மகல்மஷம்
கோஷ்பதீக்ருத வாராசிம் மசகீக்ருத ராக்ஷஸம்
ஸ்ரீ ராமாயண மஹாமாலா ரத்னம் வந்தே(அ) நிலாத்மஜம்
அஞ்ஜனா நந்தனம் வீரம் ஜானகீசோக நாசனம்
கபீச மக்ஷஹந்தாரம் வந்தே லங்கா பயங்கரம்
உல்லங்க்ய ஸிந்தோ: ஸலிலம் ய: சோகவஹ்னிம் ஜனகாத்மஜாயா:
ஆதாய தேனைவ ததாஹ லங்காம் நமாமி தம் ப்ராஞ்ஜலி ராஞ்சனேயம்8
ஆஞ்ஜனேய மதிபாடலாலனம் காஞ்சனாத்ரி கமனீய விக்ரஹம்
பாரிஜாத தருமூல வாஸினம் பாவயாமி பவமான நந்தனம்
யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம் தத்ர தத்ர க்ருத மஸ்தகாஞ்ஜலிம்
பாஷ்பவாரி பரிபூர்ணலோசனம் மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம்
மனோஜவம் மாருத துல்ய வேகம் ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம்
வாதாத்மஜம் வாநரயூத முக்யம் ஸ்ரீராமதூதம் சிரஸா நமாமி
புத்திர்பலம் யசோ தைர்யம் நிர்ப்பயத்வ மரோகதா
அஜாட்யம் வாக்படுத்வஞ்ச ஹனூமத் ஸ்மரணாத் பவேத்
க்யாத: ஸ்ரீராமதூத: பவனதனுபவ: பிங்கலாக்ஷ: சிகாவான்
ஸீதா சோகாபஹாரீ தசமுக விஜயீ லக்ஷ்மண: ப்ராணதாதா
ஆநேதா பேஷஜாத்ரேர் லவணஜலநிதேர் லங்கனே தீக்ஷிதோ ய:
வீர: ஸ்ரீமான் ஹனூமான் மம மனஸி வஸன் கார்யஸித்திம் தநோது
தூவரிக்ருத ஸீதார்த்தி: ப்ரகடீக்ருத ராம வைபவ ஸ்பூர்த்தி:
தாரித தசமுக கீர்த்தி: புரதோ மம பாது ஹனுமதோ மூர்த்தி:
ஸ்ரீ வால்மீகி கிரிஸம்பூதா ராமஸாகர காமினீ
புனாது புவனம் புண்யா ராமாயண மஹாநதீ
ஸ்ரீ வேதவேத்யே பரே பும்ஸி ஜாதே தசரதாத்மஜே
வேத: ப்ரசேதஸா தாஸீத் ஸாக்ஷாத் ராமாயணாத்மனா
வைதேஹீ ஸஹிதம் ஸுரத்ருமதலே ஹைமே மஹாமண்டபே
மத்த்யே புஷ்பகமாஸனே மணிமயே வீராஸனே ஸுஸ்திதம்
அக்ரே வாசயதி ப்ரபஞ்ஜன ஸுதே தத்வம் முனிப்ப்ய: பரம்
வ்யாக்க்யாந்தம் பரதாதிபி: பரிவ்ருதம் ராமம் பஜே ச்யாமளம்
நமோ(அ)ஸ்து ராமாய ஸலக்ஷ்மணாய
தேவ்யை ச தஸ்யை ஜனகாத்மஜாயை
நமோ(அ)ஸ்து ருத்ரேந்த்ர யமாநிலேப்ப்யோ
நமோ(அ)ஸ்து சந்த்ரார்க்க மருத்கணேப்ப்ய:
————
ஸுமுகஸ்ச ஏகதந்தஸ்ச கபிலோ கஜகர்ணக: |
லம்போதரஸ்ச விகட: விக்னராஜோ விநாயக: ||
தூம்ரகேது: கணாத்யக்ஷ: பாலசந்த்ரோ கஜானன: |
வக்ரதுண்ட: சூர்ப்பகர்ண: ஹேரம்ப: ஸ்கந்தபூர்வஜ: ||
————
வேத3 வேத்3யே பரே பும்ஸி ஜாதே த3ஸரதாத்மஜே |
வேத3 : ப்ராசேதஸா தா3ஸீத்3 ஸாக்ஷாத்3 ராமயணாத்மநா ||
வேதத்தினால் சூட்டப்படும் பரம்பொருள் பூமியிலே ஸ்ரீ ராமனாக அவதாரம் பண்ண உடனே,
வேதம், ஸ்ரீ வால்மீகி முனிவர் வழியாக ஸ்ரீ ராமாயணமாக வெளிவந்துவிட்டது
———
ஸ்ரீ ராமம் ரகு குல திலகம்
சிவ தனு சாக்ரிஹத ஸீதா ஹஸ்த கரம்
அங்குல்யா பரண ஸோபிதம்
சூடாமணி தர்சன கரம்
ஆஞ்சநேய ஆஸ்ரயம்
வைதேஹி மநோ ஹரம்
வானர ஸைன்ய ஸேவிதம்
சர்வ மங்கள கார்ய அநுகூலம்
ஸததம் ஸ்ரீ ராமசந்த்ர பாலயமாம்
—————-
ஸ்ரீ காயத்ரி -சந்தஸாம் மாதா -இதிஹாச ஸ்ரேஷிடம் ஸ்ரீ ராமாயணம் –
ஒவ்வொரு ஆயிரமாகப் பிரித்து முதல் ஸ்லோகமாக எடுத்து வந்த ஸ்ரீ ராமாயணம் ஸ்ரீ காயத்ரி ராமாயணம்
இந்த ஸ்ரீ காயத்ரி ராமாயணத்தை படிப்பதால் ஸ்ரீ காயத்ரி ஜபம் செய்த புணயமும்
ஸ்ரீ ராமாயணம் முழுவதும் படித்த பலனையும் பெறலாம்
———–
தபஸ் ஸ்வாத்யாய நிரதம் தபஸ்வீ வாக்விதாம் வரம்
நாரதம் ப்ரிபப்ரச்ச வால்மீகிர் முநி புங்கவம் -1-
மகா முனிவர் வாலிமிகி நாரதரிடம் , “யார் தவம் செய்து வேதம்
ஓதுகிறார்கள் , யார் ஒரு சிறந்த முனிவர், வார்த்தைகளில் வல்லுநர்” என்று கேட்டார்.
வேத வேதாங்காதி ஸகல வித்யா பாராங்கதராய்
விரத நியம ஜபாதி அநுஷ்டான ஸம்பன்னராய்
வேதார்த்த வித்துக்களில் சிறந்தவராய்
முனி ஸ்ரேஷ்டரான நாரதரைக் குறித்து
உயர்ந்த தவமுடைய வால்மீகி மஹரிஷி ப்ரஸ்னம் பண்ணினார்
நாரதோ அஹம் மந ப்ராப்த -த்வத் தர்சன குதூஹலாத் பிரபவோ பகவத் பக்தா மாத்ருஸாம் ஸததம் த்விஜ
நாரதர் என்று சொல்லப்படும் அடியேன் உம்மைக் காணும் ஆசையினால் வந்தடைந்தேன்
ப்ராஹ்மண உத்தம -என்னைப்போல் உள்ளவர்களுக்கு பகவத் பக்தர்கள் எப்பொழுதும் பிரபுக்கள்
தும்புரு நாரதர் புகுந்தனர்
பகவத் பாகவத ஸந்தர்சன ப்ரணாம ஸல்லாபமே தபஸ்
தத் வித்தி ப்ரணிபாதேந பரி ப்ரஸ்நேந ஸேவயா
தபஸ்வாத்யாய நிரதம் –என்று காயிக ஸூத்தியையும்
வாக்விதாம் வரம் என்று வாக் ஸூத்தியையும்
முனி புங்கவம் என்று மனஸ் ஸூத்தியையும் சொல்லிற்று
தபோ நிரதம்’ – தபஸில் ஈடுபட்டவராய் இருக்க வேண்டும்.
‘ஸ்வாத்யாய நிரதம்’ – தனது படிப்பில் திரும்பத் திரும்ப மனசை செலுத்துவதில் விருப்பம் உள்ளவரை இருக்க வேண்டும்.
‘வாக் விதாம் வரம்’ – வாக்கிற்கு என்ன பிரயோஜனம்? பகவானை பற்றி பேசிக் கொண்டிருப்பது. அதைச் செய்து கொண்டிருப்பவர்.
‘முனி புங்கவம்’ – மௌனமாய் இருக்ககூடிய முனி புங்கவருக்குள் ஸ்ரேஷ்ட்டர்.
“தபசு, வேதவேதாந்தங்கள் இவைகளைப் பூரணமாக அடைந்தவரும், உபதேசிப்பவர்களுக்குள் மேலானவரும்,
முனி ஶ்ரேஷ்டருமான நாரத மஹரிஷியை, தவத்தோடுகூடிய வான்மீகி முனிவர் தெண்டம் சமர்ப்பித்து வினாவினார்.”
1) தபோநிரதம் :– தவத்தைப் பூரணமாக அடைந்தவர் என்றதினால் அவர் சர்வசக்தி வாய்ந்தவர் என்பது ஸூசகம்.
“யத்துஸ்தரம் யத்துராபம் யத்துர்கம் யச்சதுஷ்கரம்|
தத் ஸர்வம் தபஸாஸாத்யம் தபோஹி துரதிக்ரமம் ||”
“எது கடக்கமுடியாததோ, எது பெற முடியாததோ, எது செய்யமுடியாததோ அதெல்லாம் தவத்தால் சாதிக்கமுடியும்.
ஆகையால் தவத்தை வெல்வதரிது.”
“வேண்டிய வேண்டியாங் கெய்தலாற்செய்தவ மீண்டு முயலப் படும்.
கூற்றங் குதித்தலும் கைகூடு நோற்றலி னாற்ற றலைப்பட் டவர்க்கு” (திருக்குறள்) என்ற ஆதாரங்கள் நோக்கத்தக்கன.
2) ஸ்வாத்யாய நிரதம்:– வேதவேதாந்தங்களைப் பூர்ணமாக அடைந்தவர், என்றதினால்
நாரதர் சொல்வதெல்லாம் தருமத்தோடு பொருந்திய வசனம் என்பது ஸூசகம்.
3) வாக்விதாம்வரம் :– உபதேசிப்பவர்களுக்குள் மேலானவர், என்றதினால் சிறந்த போதனாசக்தி வாய்ந்தவரெனவும்,
வ்யாகரணம் முதலான சகல சாஸ்திரங்களையும் நன்றாக அறிந்தவரெனவும் பொருள்படும்.
4) முனி புங்கவம்:– முனிஶ்ரேஷ்டர் என்றதினால் இந்திரிய நிக்கிரகமுள்ளவர் என்பதும்,
பகவத்யானத்தோடு கூடியவரென்பதும், திரிகால வர்த்தமானங்களை அறியக்கூடியவரென்பதும் , ஸதா ஜபபரரென்பதும் ஸூசகம்.
5)நாரதம்:– நாரத மஹரிஷியை, என்றதினால், நாரம் – ஜ்ஞானம், அதைக் கொடுக்கக் கூடியவர் என்பதும்,
நாரம் – அஜ்ஞானம், அதை நிவர்த்தி செய்யக்கூடியவ ரென்பதும், த்ரிலோக ஸஞ்சாரியானபடியால்,
மூன்று லோகத்திலுள்ள வர்த்தமானங்களை அறிபவரென்பதும், பிரம்ம புத்திரரானபடியால் உத்தம குலத்தைச் சேர்ந்தவரென்பதும் ஸூசகம்.
ஆகவே, இந்த ஐந்து பதங்களினால், ஆசார்யன் பூர்ணமான தபஸை யுடையவராகவும்,
வேதவேதாந்தங்களையும் வ்யாகரணம் முதலான ஸகல ஶாஸ்திரங்களையும் உணர்ந்தவராகவும்,
பகவத் பக்தியுடன் அநவரத ஜபபரராகவும் சிஷ்யனுடைய அஜ்ஞானத்தைப் போக்கி, ஜ்ஞானத்தைக் கொடுத்துப்
பரமாத்ம ஸ்வரூபத்தை உபதேசிக்கவல்லவராகவும், ஜிதேந்திரியராகவும், உத்தம குலத்தவராகவுமிருக்கவேணும்
எனறு ஆசார்ய லக்ஷணம் சொல்லப்பட்டதாயிற்று.
“குஶப்தஸ் த்வந்தகாரஸ்யாத் ருகாரஸ்தந் நிவர்தக:|
அந்தகார நிரோதித்வாத் குருரித்யபி தீயதே||”
“கு என்பது அஜ்ஞானத்தையும், ரு என்பது அதன் நிவர்த்தியையும் சொல்லுகிற படியால்
மனதின் கண்ணுள்ள அஜ்ஞானமாகிற இருளை நீக்கி மெய்ஞ்ஞானமாகிற பிரகாசத்தைத் தருவதால் குரு வெனச் சாற்றப்படுகின்றனர்.
குலனருள் தெய்வங்கொள்கை மேன்மை
கலைபயில் தெளிவு கட்டுரை வண்மை
நிலமலை நிறைகோல் மலர் நிகர் மாட்சியும்
உலகியலறிவோ டுயர்குண மினையவும்
அமைபவன் நூலுரையாசிரியன்னே.” என்ற நன்னூல் இங்கு நோக்கத் தக்கது.
தப -என்று
பாபத்தைப் போக்கி ஊணை வாட்டி இந்திரியங்களை வசமாக்கிக் கொடுக்க வல்ல க்ருச்ரம் சந்த்ராயணம் முதலிய கர்மத்துக்கும்
யம நியம ஆஸன பிராணாயாம ப்ரத்யாஹார தாரண தியானங்களை அங்கங்களாக யுடைய ஸமாதி என்கிற யோகத்திற்கும்
வேதத்துக்கும்
பர ப்ரஹ்மத்திற்கும்
தபோ விசேஷமான ந்யாஸத்திற்கும் பெயர்
ஸ்வாத்யாயம் -என்று
வேதத்திற்கும் ஜெபத்திற்கும் பெயர்
வாக் என்று
வியாகரணம் சிஷை சந்தஸ் நிருத்தம் ஜ்யோதிஷம் கல்பம் என்ற ஆறு அங்கங்களும்
வித்யா சாமான்யத்திற்கும்
அந்த வந்த சமயத்துக்கு வேண்டும் அர்த்தங்களை போதிக்க வல்ல சப்தத்துக்கும்
ஸரஸ்வதிக்கும் பெயர்
முனி என்று
மனனம்-அதாவது த்யானம் பண்ணுகிறவர்களுக்குப் பெயர்
நார என்று
ப்ரஹ்மத்தையும்
அஞ்ஞானத்தையும் சொல்லும்
ஆக
தபஸ்வாத்யாய நிரதம் தபஸ்வி வாக் விதாம் வரம் நாரதம் — முனி புங்கவம்-என்கிற பதங்களினால்
ஆச்சார்யன்
கர்மயோக ஞானயோக பக்தி யோகங்களிலும் ப்ரபத்தியிலும் ஊற்றம் யுடையவனாய்
வேத வேதாங்களையும் அங்கங்களையும் நியாய மீமாம்ஸாதி ஸகல ஸாஸ்த்ரங்களையும் சம்ஸயம் விபர்யயம் அற உணர்ந்தவனாய்
அனவ்ரத ஜெப பரனாய்
ஸிஷ்யனுடைய சம்சயம் அறும் படி உபதேசிக்க வல்லனாய்
ப்ரஹ்ம வித் அக்ரேரராய்
அஞ்ஞானத்தைப் போக்கி ஞானத்தைக் கொடுத்து பரமாத்ம ஸ்வரூபத்தை உபதேசிக்க வல்லனாய்
ஜிதேந்த்ரியனாய்
ஸத் குல ப்ரஸூதனாய்
ஸ்ரவண மனன நிதித்யாஸன தத் பரனாய் இருக்க வேண்டும் என்று சொல்கிறது –
நாரதோ அஹம் மந ப்ராப்த -த்வத் தர்சன குதூஹலாத் பிரபவோ பகவத் பக்தா மாத்ருஸாம் ஸததம் த்விஜ
நாரதர் என்று சொல்லப்படும் அடியேன் உம்மைக் காணும் ஆசையினால் வந்தடைந்தேன்
ப்ராஹ்மண உத்தம -என்னைப்போல் உள்ளவர்களுக்கு பகவத் பக்தர்கள் எப்பொழுதும் பிரபுக்கள்
தும்புரு நாரதர் புகுந்தனர்
பகவத் பாகவத ஸந்தர்சன ப்ரணாம ஸல்லாபமே தபஸ்
தத் வித்தி ப்ரணிபாதேந பரி ப்ரஸ்நேந ஸேவயா
தபஸ்வாத்யாய நிரதம் –என்று காயிக ஸூத்தியையும்
வாக்விதாம் வரம் என்று வாக் ஸூத்தியையும்
முனி புங்கவம் என்று மனஸ் ஸூத்தியையும் சொல்லிற்று
——–
சிஷ்ய லக்ஷணம்
1) தபஸ்வீ: – என்றதினால் பகவத் ஸ்வரூபத்தை அறிய ஆவல்கொண்டவரென்பதும்,
பல விரதங்களை அனுஷ்டித்தவரென்பதும், ஶமதமாதி ஸம்பந்தங்களை அடைந்தவரென்பதும்,
ஜீவகாருண்யமுடையவரென்பதும், களங்கமற்ற இருதயமுடையவரென்பதும் ஸூசகம்.
“உற்றநோய் நோன்றலுயிர்க்குறுகண் செய்யாமை
யற்றே தவத்திற்குரு” (திருக்குறள்)
2) பரிபப்ரச்ச – என்றதினால் விதிவதுபஸந்ந: என்பது பொருள். அதாவது,
உபதேசம் பெற்றுக் கொள்ள, குருவைத் தேடிப்போய், தண்டம் ஸமர்ப்பித்து, விதி ப்ரகாரம் கேட்கவேண்டுமென்பது
தத்வித்தி ப்ரணிபாதேந பரிப்ரஶ்நேந ஸேவயா|
உபதேக்ஷ்யந்தி தே ஜ்ஞானம் ஜ்ஞாநிநஸ் தத்வதர்ஶிந: ||
“அந்த ஆத்ம ஜ்ஞானத்தை, குருவைத் தேடிப்போய், தண்டம் ஸமர்ப்பித்து, விதிப்ரகாரமான கேள்வியினாலும்,
ஶுஶ்ருக்ஷையினாலும் அறிந்துகொள்ளக் கடவாய். தத்வமறிந்த பண்டிதர்கள் உனக்கு ஜ்ஞானத்தை போதிப்பார்கள்.”
என்று அர்ஜுனனை நோக்கி அருளிச் செய்த ஸ்ரீகிருஷ்ண பகவானுடைய வசனம் இங்கு கவனிக்கத் தக்கது.
ஆகவே, தபஸ்வீ, பரிப்ரச்ச என்ற பதங்களினால் சிஷ்ய லக்ஷணம் சொல்லப்பட்டதாயிற்று.
ஸத்புத்திஸ் ஸாது ஸேவீ ஸமுசித சரிதஸ் தத்வ போதாபிலாஷீ|
ஶுஶ்ருஷுஸ் த்யக்தமாந: ப்ரணி பதந பர: ப்ரஶ்ந கால ப்ரதீக்ஷ:||
ஶாந்தோ தாந்தோ நஸூயுஸ் ஸரணமுபகதஸ் ஶாஸ்த்ர விஶ்வாஸஶாலி|
ஶிஷ்ய:ப்ராப்த: பரீக்ஷாங் க்ருதவி தபிமதம் தத்வதஸ் ஸிக்ஷணீய:
“நற்புத்தியுடன் ஸாது ஸேவை உடையவனாகி, நன்னடத்தை உடையவனும், உண்மை ஞானத்தை அறிவதில்
அபிலாஷை உடையவனும், பணிவிடைக்காரனும், மானாவமான மென்பதற்றவனும், ப்ரஶ்ந காலத்தை எதிர்பார்ப்பவனும்,
சாந்தனும், அஸூயை இல்லாதவனும், சரணாகதி யடைந்தவனும், சாஸ்திர விஶ்வாசமுடையவனுமே
சிஷ்யனாக அங்கீகரிக்கத் தகுந்தவன்” என்பது நோக்கத் தக்கது.
தபஸ்வீ-என்று சிஷ்ய லக்ஷணம் சொல்கிறது
அதாவது
பரமாத்ம ஞான சாதனமான உயர்ந்த தபஸ்ஸையும்
வேதத்தில் கர்ம காண்டங்களை பரிசீலித்து ஸ்வர்க்காதி ஷூத்ர பலன்களில் வைராக்யம் யுடையவனாய்
மோக்ஷத்தில் அபிருசி யுடையவனாய்
ஜிதேந்த்ரியனாய்
சாந்தனாய் –இருக்க வேண்டும் என்று சொல்கிறது
இதனால் ஆச்சார்யாத் தைவ வித்யா விதி தாஸாதிஷ்டம் ப்ரபாத் –என்று
சதாச்சார்யன் இடத்தில் நின்றும் நியம பூர்வகமாகக் கற்ற வித்யையே மோக்ஷ உபயோகியாம் என்னுமது வெளியிடப்பட்டது-
ஆச்சார்யன் உபதேசம் அவரது ஆச்சார்யருக்கு ப்ரீதிக்கு உறுப்பாக என்று மேல் மேல் ஸ்ரீ லஷ்மீ நாதன் பர்யந்தம் போகுமே
இவர் ஓர் இடத்தில் சரியாமல் உடகார்ந்து மெய் மறந்து தபஸ்ஸு பண்ணிக் கொண்டு இருக்கையில் இவர் மேல் புற்று மூடிப் போய் விட்டது
வருண தேவன் மழை பொழிந்து அப் புற்றைக் கரைத்து விட அங்கு நின்றும் புறப்பட்டார்
ஆகவே வால்மீகி புற்றில் நின்றும் வெளிப்பட வருணன் காரணமானதால் ப்ராசேதனர் -வருண புத்ரன் என்றும் செல்லப்படுகிறார்
—————
ஸ ஹத்வா ராக்ஷஸாந் ஸர்வான் யக்ஞக்நான் ரகுநந்தன:
ரிஷிபி: பூஜித: ஸம்யக் யதேந்த்ரோ விஜயீபுரா –-2-
ரகு குலத்தின் மகன் அனைத்து ராட்சசர்களையும் கொன்று, நெருப்பு வேள்விகளைப் பாதுகாத்து முனிவர்களால் வணங்கப்பட்டான், வெற்றி பெற்றபோது இந்திரனைப்
போலவே
முன்பு தேவாஸூர யுத்தத்தில் அஸூரர்களை வெல்லும் போது இந்திரன் அஸூரர்களைக் கொன்றது போலே அந்த சித்தாஸ்ரமத்தில் விச்வாமித்ரருடைய யாகத்தை அழிக்க வந்த அரக்கர்கள் அனைவரையும் ஸ்ரீ ராகவன் கொன்று ருஷிகளினால் பூஜிக்கப் பட்டார்
———-
விஸ்வாமித்ரஸ்து தர்மாத்மா ஸ்ருத்வா ஜனகபாஷித:
வத்ஸ ராம் தனு: பஸ்ய இதி ராகவம்ப்ரவீத் -3-
தர்மத்தின் உருவகமான விஸ்வாமித்திரர் , ஜனகர்
சொன்ன வார்த்தைகளைக் கேட்ட பிறகு , “குழந்தை ராமா , தயவுசெய்து இந்த வில்லைப் பார்” என்றார்.
இந்த வில்லை ஒருவராலும் நாண் ஏற்ற முடியாது என்று ஜனக மஹாராஜர் மொழிந்தத்தைக் கேட்டு தர்மாத்வாகிய விச்வாமித்ரர் இராகவனைப் பார்த்து குழந்தாய் ஸ்ரீ ராகவ அந்த வில்லை நீர் பாரும் என்று பணித்தார்
———–
துஷ்டாவாஸ்ய ததா வம்ஸம் ப்ரவிஸ்ய ஸ விஸாம்புதே
ஸயநீயம் நரேந்த்ரஸ்ய ததாசாத்ய வ்யதிஷ்டத -4
பின்னர் அவர் ராஜாவின் படுக்கையறையை அடைந்து, அருகில் சென்று வெளியே நின்று பாராட்டி, ராஜாவின் விரிவான வம்சாவளியைக் கூறினார்.
ஸூ மந்த்ரர் என்பவர் தசரத மஹா ராஜருடைய அரண்மனையில் நுழைந்து சயன க்ருஹத்தை அடைந்து நின்று அப்பொழுது அந்த தசரத மஹாராஜருடைய வம்ஸா வழியைச் சொல்லி ஸ்துதித்தார்
————–
வனவாசம் ஹி ஸங்க்யாய வாஸாம்ஸ்யாபரணானி ச
பர்தாரமனுகச்சந்த்யை சீதாயை ஸ்வஸுரோ ததௌ -5-
சீதை காட்டில் வசிக்க வேண்டிய ஆண்டுகளின் அடிப்படையில், அவள் தன் கணவனுடன் செல்லும்போது, அவளுடைய மாமனார் அவளுக்குப் போதுமான ஆடைகளையும் ஆபரணங்களையும் கொடுத்தார்
இராகவனுடன் கூட வனவாஸம் போக நிச்சயித்துத் தன் பார்த்தாவைப் பின் சென்று போகிற சீதாப் பிராட்டியாருக்கு மாமனாராகிய தசரத மஹா ராஜர் வஸ்திரங்களையும் ஆபரணங்களையும் கொடுத்தார்
————–
ராஜா ஸத்யம் ச தர்ம்ஸ்ச ராஜா குலவதாம் குலம்
ராஜா மாதா பிதா சைவ ராஜா ஹிதகரோ ந்ருணாம் -6-
ராஜா என்பவர் உண்மையும் தர்மமுமாவார் , நல்ல குடும்பங்களைச் சேர்ந்த மக்களின் இறைவன் அவரே, தாயும் தந்தையும் அவரே, மக்களுக்கு நன்மை செய்பவரும் அவரே.
உலகத்தில் சத்தியத்தையும் தர்மத்தையும் நடப்பிக்க வைப்பவன் அரசன்
நற் குலத்தில் பிறந்தவர்களுடைய குலாச்சாரத்தையும் நடப்பிக்க வல்லவன் அரசன்
ஜனங்களுக்குத் தாயும் தந்தையும் ஹிதம் செய்பவன் அரசனே என்று பரதன் சொல்லுகிறான்
—————-
நிரீக்ஷ்ய ஸ முஹூர்த்தம் து ததர்ஸ பரதோ குரும்
உடஜே ராம மாசீனம் ஜடாமண்டல தாரிணம் -7-
ஒரு நல்ல நேரத்திற்காகக் காத்திருந்த பிறகு, பரதன் தனது குருவான ராமரைக் கண்டார் , அவர் மந்தமான கூந்தலுடன், மரத்தாலான துணியை அணிந்திருந்தார்.
பரதன் சித்ர கூடத்தில் பர்ண சாலையில் ஜடையைச் சக்ராதாரமாகக் கட்டிக் கொண்டு வீற்று இருக்கும் ஸ்ரீ ராமனைப் பார்த்து ஜடாதாரியாகிற இம் மஹாநுபாவன் யாராய் இருக்கலாம் -என்று சிறிது நேரம் நிதானித்துப் பார்த்துப் பின்பு இவர் நம் குருவாகிய ராகவன் என்று அறிந்தார்
—————-
யதி: புத்தி: த்ருஷ்டும் அகஸ்த்யம் தம் மஹாமுனிம் அத்யைவகமனே புத்திம் ரோசயஸ்வ மஹாயஸ:-8-
இதயமே அனைத்து ஞானத்திற்கும் ஆதாரம்-ஐயா, நீங்கள் மகஸ்தி மற்றும் சிறந்த மனிதர், அகஸ்திய முனிவரைப் பார்க்க விரும்பினால், அதைச் செய்யத் தொடங்க விரைவில் முடிவு செய்யுங்கள்.
பெரும் புகழ் படைத்த ஸ்ரீ ராகவனே நீர் முனி ஸ்ரேஷ்டராகிய அகஸ்திய மஹ ரிஷியைப் பார்க்க விரும்பினீராகில் இப்பொழுதே அவருடைய ஆஸ்ரமத்தைக் குறித்துச் செல்ல மனம் வையும் என்று ஸூ தீஷ்ணர் சொன்னார்
————–
பரதஸ் யார்ய புத்ரஸ்ய ஸ்வ ஸ்ரூணாம் மம ச ப்ரபோ ம்ருகரூபமிதம் வ்யக்தம் விஸ்மயம் ஜனயிஷ்யதி-9-
பாரதம் ஆரியபுத்திரம், என் அம்மாவுக்கு வாழ்த்துக்கள்,-ஐயோ கடவுளே, மிகவும் அழகாக இருக்கும் இந்த மான், பரதனுக்கும், உங்களுக்கும், என் மாமியாருக்கும், ஒரு பெரிய அதிசய உணர்வை உருவாக்கும்
ஓ ஸ்வாமீ அதி விசித்ரமாகிய இந்த மான் உமக்கும் பரதனுக்கும் என் மாமிமார்களுக்கும் எனக்கும் வெகு ஆச்சர்யத்தை உண்டு பண்ணுமாகையாலே இதைப் பிடித்துத் தாரும் என சீதாப்பிராட்டியார் வேண்டுகிறார்
———-
கச்ச ஸீக்ரமிதோ ராம ஸுக்ரீவ.ந்தம் மஹாபலம் வ்யஸ்ய.ந்தம் குரு க்ஷிப்ரம் இதோ கத்வாத்ய ராகவ: -10-
ஓ ராமா, இங்கிருந்து உடனடியாகப் போய், மிகவும் வலிமையான சுக்ரீவனிடம், ஓ ராகவா, அவனை உன் நெருங்கிய நண்பனாக்கிக் கொள்
ரகுகுல நாதனாகிய ஓ இராமனே நீர் இங்கு நின்றும் சீக்கிரம் புறப்பட்டுப் போய் மஹா பலசாலியாகிய ஸூக்ரீவன் என்கிற வானர அதிபதியான அக்னி ஸாக்ஷிகமாக ஸ்நேஹன் ஆக்கிக் கொள்ளும் என்று கபந்தன் சொன்னான்
———–
தேஸகாலௌ ப்ரதீக்ஷஸ்வ சமமாண: ப்ரியாப்ரியே ஸுகது:க்கஸஹ: காலே ஸுக்ரீவவஸகோ பவ:-11-பஜஸ் வாத்ய –-பாட பேதம்
காலத்தையும் இடத்தையும் புரிந்துகொண்டு, விருப்பு வெறுப்புகளைப் பொறுமையாகக் கருதி, இன்பத்தையும் துன்பத்தையும் சமமாகக் கருதி, சுக்ரீவனுக்குக் கீழ்ப்படிந்து வாழுங்கள்..
அப்பா அங்கதனே இனி நீ தேச காலங்களை ஆலோசித்து –இந்த தேசத்தில் இந்தக் காலத்தில் இம் மாதிரி இருக்க வேண்டும் மற்றப் பொழுது மற்றப் படியாக இருக்க வேண்டும் என்று விசாரித்து அநிஷ்டம் நேர்ந்ததாகில் அதை இஷ்டம் போலவும் துக்கம் நேர்ந்தால் அதை ஸூகம் போலவும் பாவித்துப் பொறை -பொறுமை அடக்கம் யுற்றவனாய்க் கொண்டு
ஸூ க்ரீவனுக்கு அதீனமாக இருக்கக் கடவாய் என்று வாலி சொன்னான் –
———
வந்த்யாஸ்தே து தபஸ்ஸித்தாஸ்தாபஸா வீதகல்மஷா: ப்ரஷ்டவ்யா சாபி சீதயா: ப்ரவ்ருத்திர்வினையான் விதை:-12-
தவம் செய்யும் சித்தர்கள் வணக்கத்திற்குரியவர்கள், ஏனெனில் அவர்கள் செய்த தவத்தால் நீங்கள் பாவங்களிலிருந்து விடுபட்டவர்கள், அவர்களிடம் சீதையின் தற்போதைய நிலையை மிகுந்த பணிவுடன் விசாரிக்கலாம்
ஓ வானர வீரர்களே தபஸ்ஸினால் பாபம் அற்றவர்களாய் அதனால் அணிமாதி ஸித்தியை அடைந்து இருக்கிற அந்த மஹரிஷிகளை நீங்கள் பணிந்து விநயத்துடனே சீதா தேவி இருக்கும் இடத்தை அவர்களைக் கேளுங்கோள் என்று ஸூக்ரீவன் சொன்னான்
—————–
ஸ நிர்ஜித்ய புரீம் ஸ்ரேஷ்டாம் லங்காம் தாம் காம்ரூபிணீம் விக்ரமேண மஹா: தேஜா: ஹநுமான் மாருதாத்மஜ:-13-
காற்றின் மகனான அனுமன் , வீரமும் பிரகாசமும் கொண்டவன், நகரத்தின் தெய்வமான லங்காவை வென்றவன், தான் விரும்பும் எந்த உறுதியையும் எடுக்கக்கூடியவன்.
வாயு புத்ரராய் மிக்க தேஜஸ்ஸை யுடையவைராக்கிய அந்த ஹனுமான் வேண்டும் உருவம் கொள்ள வல்லவனாய் சிறந்த அந்த லங்கா புரிக்கு தேவதையாகிய இலங்கியை பராக்ரமத்தினால் வென்றார்
————
தன்யா தேவா: ஸகந்தர்வா: ஸ்த்தாஸ்ச பரமர்ஷய: மம பஸ்யந்தி யே நாதம் ராமம் ராஜீவலோசனம்-14-
தாமரை போன்ற அழகான கண்களைக் கொண்ட, கந்தர்வர்கள், சித்தர்கள் மற்றும் முனிவர்களால் பார்க்கப்படும் என் ஆண்டவரான ராமரை நான் காண்கிறேன் , அது அவர்களின் அதிர்ஷ்டத்தின் எழுச்சி போல.
என்னைப் பிரிந்த சோகத்தினால் தேவ லோகத்தை அடைந்த என்னுடைய பர்த்தாவாகிய செந்தாமரைப் பூ போன்ற கண்களை உடைய இராகவனை அங்குள்ள எந்த தேவர்களும் கந்தர்வர்களும் சித்தர்களும் மஹ ரிஷிகளும் பார்க்கிறார்களோ அவர்கள் மஹா பாக்யம் செய்தவர்கள் என்று ஸீதா தேவி சொல்கிறார்
———–
மங்களாபிமுகே தஸ்ய ஸா ததாஸீன்மஹாகபே உபதஸ்தே விஸாலாக்ஷீ ப்ரயதா ஹவ்யவாஹனம்-15-
மங்களகரமான முகத்தைக் கொண்ட அந்தப் பெண், பெரிய குரங்கை ஆசீர்வதிக்க முடிவு செய்து, தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்ட பிறகு , நெருப்புக் கடவுளை வணங்கி பிரார்த்தனை செய்தாள் .
அப்பொழுது பரந்த கண்களை யுடைய அந்த ஸீதா தேவி வாநரோத்தமனாகிற அந்த ஹநுமானுக்கு வாலில் நெருப்புச் சுடாமல் இருக்க வேண்டும் என்ற ஸ்ருதி பரிசுத்தையாய்க் கொண்டு அக்னியைக் கிட்டிப் பிரார்த்தித்தாள்
————
ஹிதம் மஹார்த்தம் ம்ருதுஹேதுஸமிதம் வ்யதீதகாலாயதிஸம்ப்ரதிக்ஷமம் நிஸம்ய தத்வாக்யமுபஸ்திதஜ்வர ப்ரஸங்கவானுத்தரமேததப்ரவீத்-16-ம்ருது ஹேது –பாட பேதம்
நன்மைக்காகக் கூறப்பட்ட சிறந்த பலன்களைத் தரும், இனிமையான,
தர்க்கரீதியான மற்றும் கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்திற்கு ஏற்ற அந்த வார்த்தைகளைக் கேட்ட பிறகு, ராவணன் மிகுந்த கோபத்துடன் இவ்வாறு பதிலளித்தான்.
பிற் காலத்தில் நன்மையை விளைக்குமதாய் அக்கணமே ஸூக ஜனகமாய் யுக்தி யுக்தமாய் பூத பவிஷ்யத் வர்த்தமாநங்கள் என்கிற மூன்று காலங்களுக்கும் உரியதாய் நல் வார்த்தையாய்ச் சொன்ன விபீஷணன் சொல்லைக் கேட்டு தன் கோரிக்கையில் பிடிவாதம் உடைய இராவணன் சினம் உள்ளவனாய்க் கொண்டு இதை மேற் கூறியபடி உத்தரம் பதில் சொன்னான்
————–
தர்மாத்மா ரக்ஷஸாம் ஸ்ரேஷ்ட: ஸம்ப்ராப்தோsயம் விபீஷண: லங்கைஸ்வர்யம் த்ருவம் ஸ்ரீமா நயம் ப்ராப்நோத்யகண்டகம்-17-
தர்மத்தின் உருவகமான விபீஷணன் என்ற அந்தப் பெரிய ராட்சசன் வந்து என்னுடன் சேர்ந்தான், சந்தேகமே இல்லாமல், அவன் இலங்கையின் செல்வத்தை அடைவான்.
தர்ம சிந்தை யுடையவனாய் ராக்ஷஸ ஸ்ரேஷ்டனான இந்த விபீஷணன் என்னை அடைந்தான் ஆகையால் இவ்வளவு அனுகூல்யமுடைய இந்த விபீஷணன் இப்பொழுதே தடையின்றி இலங்கையினுடைய ஐஸ்வர்யத்தை அடையப் போகிறான் என்று இராகவன் பணித்தார்
———-
யோ வஜ்ரபாதாஸனிஸன்னிபாதாத் ந சுக்ஷூபே நாபி ச்சால ராஜா ஸ ராமபாணார்பிஹதோ ப்ருஸார்த்த: சசாலசாபம் ச முமோச வீர:-18-
வஜ்ராயுதனின் தாக்குதலுக்கும், இடி முழக்கத்திற்கும் ஒருபோதும் கவலைப்படாத அந்த மன்னன் இப்போது ராமனின் அம்பினால் தாக்கப்பட்டான். அந்த வீரன் அதிர்ச்சியால் சோகமடைந்து, மிகவும் பதட்டமடைந்தான். நடுங்கத் தொடங்கினான், அவன் கைகளில் இருந்து வில் நழுவியது.
எந்த இராவணன் முன்பு இந்திரனுடைய வஜ்ர ஆயுதத்தினாலும் அடி உண்டவனாய்க் கொண்டு ஆனால் ஒரு வருத்தத்தையும் யடைய வில்லையோ சலிக்கவும் கூட வில்லையோ
அந்த ராவணன் இராகவனுடைய பாணத்தினால் அடிக்கப் பட்டவனாய்க் கொண்டு அதனால் மிக வருத்தம் உள்ளவனாய் நடுங்கினான் கையிலிருந்து வில்லையும் நழுவ விட்டான்
———
யஸ்ய விக்ரமமாஸாத்ய ராக்ஷஸா நிதனம் கதா: தம் மந்யே ராகவம் வீரம் நாராயணம்னாமயம்-19-
அவரது புகழால் ஈர்க்கப்பட்டு, பல ராட்சசர்கள் இறந்தனர், மேலும் அந்த வீரம் மிக்க ராமரை,
உண்மையான கடவுள் நாராயணனாக நான் கருதுகிறேன்.
எந்த இராகவனுடைய பராக்ரமத்திற்கு முன்னே நின்று அரக்கர்கள் மாண்டு விட்டார்களோ அந்த வீரனாகிய இராகவனை நான் ஒரு பத்திரமற்ற நாராயணனாக எண்ணுகிறேன் என்று இராவணன் சொன்னான்
———–
ந தே தத்ருஸிரே ராமம் தஹந்தமரிவாஹினீம் மோஹிதா: பரமாஸ்த்ரேன காந்தர்வேண மஹாதமனா-20-
அந்த ராட்சசர்களால், எதிரிகளின் படையை எரித்துக் கொண்டிருந்த ஸ்ரீராமரைப் பார்க்க முடியவில்லை , ஏனெனில் அவர்கள் பெரிய ராமரால் அனுப்பப்பட்ட கந்தர்வன் என்ற பெரிய அம்பினால் தங்கள் உணர்வுகளை இழந்தனர் .
இராகவன் பிரயோகித்த பெரும் தன்மையை யுடைய சிறந்த அந்த காந்தர்வம் என்கிற அஸ்திரத்தினால் அரக்கர்கள் மோஹம் அடைந்தவர்களாய் சத்ரு ஸைன்யத்தை பாணத்தினால் கொளுத்துகிற இராகவனை காணாதவர்கள் ஆனார்கள்
———–
ப்ரணம்ய தேவதாப்யஸ்ச்ச ப்ராஹ்மணே ப்யஸ்ச மைத்லீ பத்தாஞ் ஜலிபுடா சேதமுவாசாக்.நிஸமீபத:-21-
பிராமணர்களுக்கும் தேவர்களுக்கும் வணக்கம் செலுத்திய பிறகு , மைதிலி கைகளை உயர்த்தி, நெருப்பின் அருகே சென்று சொன்னாள்.
மிதிலேசனுடைய பெண்ணான ஸீதா தேவி அக்னி ப்ரவேஸ காலத்தில் தேவர்களையும் ப்ராஹ்மணர்களையும் நமஸ்கரித்து கையைக் கூப்பிக் கொண்டு நெருப்பின் அருகில் நின்று இதை மேற் கூறியபடி மொழிந்தாள்
———–
சலநாத் பர்வதே.ந்த்ரஸ்ய கணா தேவாஸ்ச கம்பிதா: சசால பார்வதீ சாபி ததாஸ்லிஷ்டா மஹேஸ்வரம்-22-
மலைகளின் ராஜா நகர்ந்தபோது சிவனின் கணங்களும் தேவர்களும் நடுங்கினர். பார்வதி தேவி கூட நடுங்கி, விரைந்து சென்று மகா கடவுளைத் தழுவிக் கொண்டார்.
இராவணன் கைலாஸ மலையை அசைக்கும் போது அங்குள்ள மஹா தேவனுடைய பரிவார கணங்கள் எல்லாம் நடுங்கிப் போயின -பார்வதியும் நடுக்கம் உற்றவளாய் அப்பொழுது
தன் பதியாகிய மஹா தேவனைத் தழுவிக் கொண்டனள்
———
தாரா: புத்ரா: புரம் ராஷ்ற்றம் போகாச்சாதனபாஜனம் ஸர்வமேவாவிபக்.நம் நோ பவிஷ்யதி ஹரீஸ்வர:-23-
ஓ குரங்குகளின் ஆண்டவரே, இன்றிலிருந்து வயல்கள், குழந்தைகள், நகரங்கள், நாடுகள்,
ஆடம்பரங்கள், உணவுகள் மற்றும் வயல்கள் எங்கள் பொதுவான சொத்தாக மாறி,
எங்களுக்குள் சமமாகப் பகிரப்படட்டும்.
ஓ வானர உத்தமனாகிற வாலியே இது முதல் உனக்கும் உனக்கும் பெண்டாட்டிகள் பிள்ளைகள் நகரம் இராச்சியம் கந்த கு ஸூ மாதிகள் ஊண் உடை ஆகிய இவைகளில் ப்ரீதி பேதம் இன்றி நடக்க வேண்டும் இதில் சம்சயம் இல்லை என்று இராவணன் சொன்னான்
——–
யாமேவ ராத்ரிம் ஸத்ருக்ன: பர்ணஸாலாம் ஸமாவிஸத் தாமேவ ராத்ரிம் சீதாபுஇ ப்ரஸூதா தாரகத்வயம்-24-
சத்ருக்னன் ஆசிரமத்தில் தங்கியிருந்த இரவில், சீதை இரண்டு மகன்களைப் பெற்றெடுத்தாள்.அனைவருக்கும் வாழ்த்துக்கள்
லவணாசுரனுடைய வாதார்த்தமாகப் போம் போது எந்த ராத்திரியில் சத்ருக்கனன் வால்மீகி மஹ ரிஷியினுடைய ஆஸ்ரமத்தின் பர்ண சாலையைப் பிரவேசித்தாரோ அந்த ராத்திரியிலே ஸீதா தேவியும் இரண்டு குழந்தைகளைப் பெற்றனள்
——–
இதம் ராமாயணம் க்ருத்ஸ்னம் காயத்ரீபீஜஸம்யுதம் த்ரிஸந்த்யம் ய: படே.ந்நித்யம் ஸர்வபாபை: ப்ரமுச்யதே
இந்த ராமாயணத்தை , காயத்ரி மந்திரத்துடன், தினமும் விடியற்காலை, நண்பகல் மற்றும் அந்தி வேளையில் பாராயணம் செய்தால் , செய்த அனைத்து பாவங்களிலிருந்தும் விடுபடலாம்.
காயத்ரியின் பீஜ அக்ஷரங்களோடு கூடிய இந்த காயத்ரி ராமாயணத்தை முழுதும் யாவன் ஒருவன் மூன்று ஸந்த்யா காலங்களிலும் தினம் தோறும் பாடம் செய்கிறானோ
அவன் எல்லாப் பாபங்களிலும் இருந்தும் விடப்பட்டவன் ஆவான் –
ஸ்ரீ காயத்ரீ ராமாயணம் ஸம்பூர்ணம்
————-
‘காயந்தம் த்ராயதே இதி காயத்ரி.’தன்னை ஓதுபவரைக் காப்பது காயத்ரி.
ஓம் பூர்புவஸ் ஸுவ: தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோன: ப்ரசோதயாத் |–இது தான் காயத்ரி மந்திரம்.
ஓம் பூர், புவ, ஸுவ: – உடல், ஆன்மீக, தெய்வீக வாழ்வுக்குரிய ஸவிதுர் – உலகங்களுக்கு மூலாதாரமாக உள்ள வரேண்யம், தேவஸ்ய – போற்றுதலுக்குரிய , யாவரிலும் மேலான, தெய்வீக மெய்ம்மையின் பர்கோ – தெய்வீகப் பேரொளி மீது தீ மஹி – நாம் தியானிக்கின்றோம் தத் – நாம் மேலான உண்மையை உணரும்படி அந்த மேலான தெய்வம் நஹ – நம் தியோ – அறிவுக்கு ப்ரசோதயாத் – ஒளி ஊட்டட்டும் அறிவைத் தரும் ஆற்றலினைத் தருகிறது காயத்ரி.
அத்தோடு காயத்ரி மந்திரம் சர்வ ரோக நிவாரணி. எல்லா நோய்களையும் போக்க வல்லது. சர்வ துக்க பரிவாரிணி காயத்ரி! அது அனைத்து துன்பங்களையும் கவலைகளையும் போக்குகிறது. சர்வ வாஞ்சா பலஸ்ரீ காயத்ரி. அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றுவது காயத்ரி.
அக்ஷரங்களின் பயன்! ஒவ்வொரு அக்ஷரமும் ஒவ்வொரு பயனைத் தரும். தத் என்பது ப்ரஹ்ம ஞானத்தையும் ‘ஸ’ என்பது சக்தியை நல்வழியில் பயன்படுத்தலையும், ‘வி’ என்பது நல்ல வழியில் செல்வத்தைப் பயன்படுத்தலையும், ‘து’ என்பது தைரியத்தையும், ‘வ’ என்பது பெண்மையின் சிறப்பையும், ’ரே’ என்பது வீட்டிற்கு வரப் போகும் இல்லத்தரசியையும் அவள் குடும்பத்திற்கு கொண்டு வரும் நலனையும், ‘ண்யம்’ என்பது இயற்கையை வழிபடுதலையும், ‘பர்’ என்பது நிலையான மனத்தின் கட்டுப்பாட்டையும், ‘கோ’என்பது ஒத்துழைப்பு மற்றும் பொறுமையையும், தே என்பது எல்லாப் புலன்களும் கட்டுப்பாட்டிற்குள் இருப்பதையும், ‘வ’ என்பது தூய்மையான வாழ்க்கையையும், ‘ஸ்ய’ என்பது மனிதன் இறைவனுடன் ஒன்றுபடுவதையும், ‘தீ’ என்பது எல்லாத் துறைகளிலும் எல்லாவித வெற்றி பெறுதலையும், ‘ம’ என்பது இறைவனது நீதி மற்றும் ஒழுக்கக் கட்டுப்பாட்டையும் ‘ஹி’ என்பது நுண்ணறிவையும், ‘தி’ என்பது வாழ்க்கை மற்றும் மரணத்தையும், ‘யோ’ என்பது தர்ம நெறிப்படியான வாழ்க்கையைப் பின்பற்றுவதையும், ‘யோ’ என்பது வாழ்க்கை சேமிப்பையும் ‘நஹ’ என்பது எச்சரிக்கை மற்றும் பாதுகாப்பையும், ’ப்ர’ என்பது நடக்கப்போவதை அறிவது மற்றும் நல்ல காரியங்களுக்கு உதவி செய்வதையும், ‘சோ’ என்பது அறநெறி நூல்களைப் படிப்பதையும் மகான்களின் தொடர்பு ஏற்படுதலையும் ‘த’ என்பது ஆன்மாவை அறிதல் மற்றும் ஆத்மானந்தத்தையும் ‘யா’ என்பது சத் மக்கட்பேற்றையும் ‘த்’ என்பது வாழ்க்கையில் உள்ள ஒழுக்கக்கட்டுப்பாட்டையும் ஒத்துழைப்பையும் குறிக்கிறது.
காயத்ரி மந்திர தேவதைகள்! ஆக்னேயம், பிரஜாபத்தியம், ஸௌம்யம், ஸமானம், சாவித்திரம், ஆதித்யம், பார்ஹஸ்பத்யம், மைத்ராவருணம், பகதெய்வதம், ஆர்யமைஸ்வரம், கணேசம், துவாஷ்ட் ரம், பௌஷ்ணம், ஐந்திராக்னம், வாயவ்யம், வாமதேவ்யம், மைத்ராவருணி, வைஸ்வதேவம், மாத்ருகம், வைஷ்ணவம், வததெய்வம்ஸும், ருத்ரதெய்வதம், கௌபேரம், ஆஸ்வினம் ஆகியவை காயத்ரி மந்திரத்திற்குள்ள 24 தேவதைகள்.
தேவி பாகவதத்தில் பன்னிரெண்டாம் ஸ்கந்தத்தில் முதல் அத்தியாயத்தில் தரப்படும் அபூர்வமான விவரங்களாகும்.
————
காயத்ரி மந்திரம் கீழ்க்கண்ட சொற்களைக் கொண்டது:
“ஓம் பூர் புவஸ்ஸுவஹ தத் ஸவிதுர் வரேண்யம்
பர்க்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன ப்ரசோதயாத்.”
இதன் பொருள்:
மண்ணுலகம், விண்ணுலகம், சொர்க்கம் ஆகிய மூன்றையும் படைக்க காரணமான ஒளி பொருந்திய, வணக்கத்திற்குரியவரை, நாங்கள் தியானிக்கிறோம். நாங்கள் மேலான உண்மையை உணர, அந்தப் பரம்பொருள் எங்களது அறிவை ஊக்குவிக்கட்டும்.
காயத்திரி மந்திரத்தின் பொருளைப் மகாகவி பாரதியார் தான் பாடிய பாஞ்சாலி சபதத்தில் பின்வருமாறு பாடியுள்ளார்.
“செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம்
அவன் எங்களறிவினைத் தூண்டி நடத்துக”
நல்லனவெல்லாம் எத்திசையிலிருந்து வந்தாலும், எம்மொழியிலிருந்து வந்தாலும் அவற்றை ஏற்று நாம் பயன் பெறுவோமாக
ஓம் பூர்ப்புவ ஸ்ஸீவ தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ் தீமஹி தியோ யோன: ப்ரசோதயாத்
இதுவே காயத்ரீ மந்திரம். இந்த காயத்ரீ மந்திரத்தில் முதல் வரியான ஓம் பூர்ப்புவஸ்ஸீவ-இதில் ஓம் என்பது பிரணவம் ஆகும். பூர்ப்புவஸ்ஸீவ என்பது பூலோகம், புவர்லோகம், சொர்க்கலோகம் ஆகும். தத் எனும் இரண்டாவது வரியிலிருந்து ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு பொருளும், சக்தியும் உண்டு.
தத் – என்ற சொல் தபினி என்ற அம்பிகையைக் குறிக்கிறது. வெற்றியைத் தருபவள்.
ச – என்ற எழுத்து சாமுண்டியை குறிக்கும். இவள் வீரத்தையும், வலிமையையும் அளிப்பாள்.
வி – என்ற எழுத்து விஸ்வா என்ற சக்தியைக் குறிக்கிறது. இவள் நல்ல பலன்களைத் தருவாள்.
துர் – என்ற சொல் துஷ்டி என்ற சக்தியைக் குறிக்கிறது. இவள் சுக வாழ்வு தருவாள்.
வ – என்ற எழுத்து வரதாம்பிகையைக் குறிக்கும். இவள் யோகத்தினைக் கொடுப்பாள்.
ரே – என்ற எழுத்து ரேவதியைக் குறிக்கிறது. இவள் திருமணம் நடத்தி வைக்கவும், தம்பதியருக்குள் அன்பை உருவாக்கும் தேவியாவாள்.
ணி – எழுத்து சூக்ஷ்மா என்ற அம்பிகை ஆவாள். செல்வம் வழங்குவாள்
யம் – ஞானாம்பிகையைக் குறிக்கும். அழகை அளிப்பாள்.
பர் – கார்கவியைக் குறிக்கும். இவள் மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறாள்.
கோ – கோமதி ஆவாள். இவள் நல்ல அறிவையும், ஞானத்தையும் தருவாள்.
தே – தேவிகாவைக் குறிக்கும். இவள் தீய சக்திகளை அழிப்பாள்
வ – வராகியைக் குறிக்கும். தவயோகம் தருவாள்.
ஸ்ய – சின்ஹனியைக் குறிக்கும். இருப்பதை காக்கும் சக்தி படைத்தவள்.
தீ – தியானாம்பிகையைக் குறிக்கும். இவள் நீண்ட ஆயுளைக் கொடுப்பவள்.
ம – மர்யாதா என்ற அம்பிகை ஆவாள். இவள் புலனடக்கம் அளிப்பாள்.
ஹி – ஸ்புட நாயகியைக் குறிக்கிறது. எடுத்த காரியத்தை நிறைவேற்றும் சக்தி கொண்டவள்.
தி – மேதா அம்பிகையைக் குறிக்கிறது. இவள் வருங்காலத்தை உணர்த்துவாள்
யோ – யோகமாயா ஆவாள். விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவாள்.
யோன – யோனியைக் குறிக்கும். உணவு உற்பத்தியையும், விவசாய விருத்தியையும் கவனிப்பாள்.
நஹ் – தாரணியைக் குறிக்கிறது. இவள் சுக வாழ்வு அளிப்பாள்.
ப்ர் – ப்ரபவா என்ற அம்பிகை ஆவாள். குறிக்கோளை அடைய உதவுவாள்.
சோ – ஊஷ்மா தேவியைக் குறிக்கும். இவள் அச்சத்தைப் போக்கி தைரியத்தை அளிப்பாள்.
த் – த்ரஷ்யா என்ற அம்பிகை ஆவாள். இவள் நல்லறிவு, விவேகம் தருவாள்.
யாத் – நிரஞ்சனா தேவியைக் குறிக்கும். இவள் தொண்டு செய்யும் மனதை தருவாள்.
இந்த மகத்தான மந்திரத்தை ஜபித்து அனைவரும் பலன் பெறலாம்.
————
ஓம் பூர்ப்புவஸ்ஸுவ: தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி | தியோ யோ ந: ப்ரசோதயாத் ||
ஓம். யார் நம் அறிவைத் தூண்டுகிறாரோ அந்த சுடர்க் கடவுளின் மேலான ஒளியைத் தியானிப்போமாக.
இது பிரம்ம காயத்ரீ அல்லது சூரிய காயத்ரீ. இதுவே நம் தேசியப் பிரார்த்தனை. இதுவே நம் தேசிய மந்திரம். பல்லாயிரம் ஆண்டுகளாகக் காஷ்மீரத்திலிருந்து கன்னியாகுமரி வரை இது கையாளப் பட்டு வந்துள்ளது.
ஓம் அல்லது ஓங்காரம் ஓசைகள் அனைத்துக்கும் முதல் காரணம். இது நாதப் பிரம்மம் என்று இயம்பப் பெறுகிறது. பரவஸ்து ஓசை வடிவத்தில் இலங்குகிறது. அகிலாண்டத்தின் இயக்கம் ஓசையை உண்டுபண்ணுகிறது. அந்த ஓசையே ஓங்காரம். ஓங்கார ஓசை இயற்கை முழுவதிலும் ஓவாது ஒலித்துக் கொண்டிருக்கிறது. “ஓவாத சத்தத்து ஒலியே போற்றி” என்று இது போற்றப் படுகிறது. ஓம் என்பது பீஜ மந்திரம். இதன் திரிவுகளாக ஏனைய மந்திரங்கள் வந்துள்ளன. ஓங்காரத்தை உச்சரிப்பதற்கு ஏற்ப மனிதன் மேன்மையுறுகிறான். இயற்கை முழுதுக்கும் பொதுவாக அண்டமெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கின்ற இம்மந்திரத்தை யாரோ சிலர் தான் உச்சரிக்க வேண்டும் என்னும் கட்டுப்பாடு எதற்காக? சுவாசிக்கும் காற்று எல்லார்க்கும் பொதுவாக இருப்பது போன்று இந்த ஓசையும் பொது.
ஓங்காரத்தை உச்சரித்த பிறகே ஏனைய மந்திரங்களை உச்சரிப்பது ஐதிகம். ஏனென்றால் மந்திரங்கள் அனைத்திற்கும் மூலமந்திரமாக அல்லது பீஜமந்திரமாக இருப்பது ஓங்காரம்.
பூ: , புவ:, ஸுவ: ஆகிய மூன்று சொற்கள் பூலோகம், புவர்லோகம், ஸ்வர்க்கம் எனப் பொருள்படுகின்றன. இம்மூவுலகங்கள் அகத்திலும் இருக்கின்றன, புறத்திலும் இருக்கின்றன. பண்பாடு அடையாதவர்களுக்கு அம் மூவுலகும் புறத்தில் உள என்னும் கொள்கை ஏற்புடையதாகிறது. அகத்திலேயே அம்மூன்றும் அமைந்துள்ளன என்னும் கொள்கை சிறிது பரிபாகம் அடைந்தவர்களுக்கே விளங்குகிறது.
நம்மிடையே இம்மூவுலகங்களும் எப்படி அமைந்திருக்கின்றன என்று பார்ப்போம். ஜாக்ரதாவஸ்தை, சொப்பனாவஸ்தை, சுஷுப்தி அவஸ்தை ஆகிய மூன்று அவஸ்தைகளும் (நிலைகள்) நம்மிடத்து மாறி மாறி அமைகின்றன. மக்கள் மட்டும் அல்லர்; பறவைகளும், விலங்குகளும் இந்த மூன்று நிலைகளை அனுபவிக்கின்றன.
நனவு அல்லது விழித்திருந்து புறவுலகோடு இணக்கம் வைப்பது ஜாக்ரதாவஸ்தை. நனவு நிலையில் உடல், உள்ளம் ஆகிய இரண்டும் வேலை செய்கின்றன. கனவு என்பது சொப்பனாவஸ்தை. கனவு நிலையில் புறவுலகோடு தொடர்பு வைப்பதில்லை. ஸ்தூல சரீரத்துக்கும் அங்கு வேலையில்லை. அகக் கரணமாகிய மனதே கற்பனையில் ஸ்தூல சரீரத்தையும், புறவுலகத்தையும், அதிலுள்ள உயிர்வகைகளையும் கற்பனை பண்ணிக் கொண்டு வியவகாரம் பண்ணுகிறது. அந்நிலையில் இருக்கின்ற பொழுது அது யாண்டும் ஜாக்ரதாவஸ்தைக்கு நிகராகத் தோன்றுகின்றது. கனவற்ற உறக்கம் சுஷுப்தி அவஸ்தை எனப்படுகிறது. அந்த அவஸ்தையில் அகவுலகம் இல்லை; புறவுலகம் இல்லை. மனதும் செயலற்றுக் கிடக்கிறது. பிரக்ஞை மட்டும் தமோகுணத்தால் [மூவகைக் குணங்களில் ஒன்றான இருள் இயல்பு] மூடப்பட்டிருப்பது போன்று தன்மயமாய் எஞ்சியிருக்கிறது.
இம்மூன்று அவஸ்தைகளிலும் நாம் மாறிமாறி இருக்கின்றோம். இருபத்து நான்கு மணி நேரத்துக்குள் இந்த மூன்று உலகங்களிலும் சற்று ஏறத்தாழ வசித்து வருகிறோம். இந்த மூன்று அவஸ்தைகளே பூலோகம், புவர்லோகம், ஸுவர்லோகம் என்று இயம்பப் பெறுகின்றன. நாம் எந்த அவஸ்தையில் இருந்தாலும் சரி, அதாவது எந்த லோகத்தில் இருந்தாலும் சரி, இந்த காயத்ரி மந்திரத்தினுடைய கருத்தையுணர்ந்து அதைப் பயன்படுத்திக் கொண்டு வருகிற அளவு ஆன்மிகத் துறையில் முன்னேற்றமடைகிறோம்.
விழித்திருக்கின்ற பொழுது நாம் சுவாசிக்கின்றோம்; கனவு காண்கின்ற பொழுதும் சுவாசிக்கின்றோம்; கனவற்ற உறக்கத்திலும் சுவாசிக்கின்றோம். சுவாசிப்பதை நிறுத்துவதில்லை. நிறுத்தினால் ஒழிந்துபட்டுப் போவோம். நிர்விகல்ப சமாதியில் (அனைத்து உணர்வுகளும் ஒடுங்கும் ஒருமை நிலை) இருப்பவர்கள் மட்டும் சுவாசிக்காதும், அழிந்துபட்டுப் போகாமலும் இருக்கின்றனர். மூன்று அவஸ்தைகளிலும் நிறுத்தாது நாம் சுவாசித்து வருவது போன்று மூன்று அவஸ்தைகளிலும் காயத்ரியில் அடங்கியிருக்கிற கருத்துக்கேற்ப நம்முடைய மனத்தைப் பெரிய நிலையில் வைப்போமானால் அதற்கேற்றவாறு ஆத்ம பரிபாகம் நமக்கு வாய்க்கிறது.
சுஷுப்தி அவஸ்தையில் தமோகுணம் ஆதிக்கம் செய்கிறது. தமோகுணத்தில் மூன்று நிலைகள் உண்டு – தமஸில் தமஸ், தமஸில் ரஜஸ், தமஸில் சத்துவம் என அம்மூன்று நிலைகள் விளக்கப் படுகின்றன. ஆத்ம பரிபாகம் அடைந்தவர்கள் தமஸில் சத்துவத்துக்கு மேலோங்க முடியும். அது அறிதுயில் அல்லது யோகநித்திரை எனப்படுகிறது. அந்நிலையை எட்டுகிறவர்கள் காயத்ரீ தத்துவத்தைக் கையாண்டவர்கள் ஆகின்றனர். அந்நிலையை எட்டுவதே குறிக்கோள்.
இனி, ஜாக்ரதாவஸ்தையிலேயே பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம் ஆகிய மூன்று உலகங்களையும் நமக்கு நாம் அமைத்துக் கொள்ள முடியும். உடல் வாழ்க்கையை ஒழுங்காக நடத்துவது பூலோக வாழ்க்கையாகிறது. உள்ளத்தை மேலான எண்ணங்களில் செலுத்துவது புவர்லோகமாகிறது. எண்ணத்தைக் கடவுள் பால் செலுத்துவது ஸ்வர்க்கலோகமாகிறது. அதிகாலையில் எழுந்திருந்து இரவு படுக்கப் போகும் வரையில் வாழ்வாங்கு வாழ்கிற மனிதன் மூவுலகிலும் முறையாக வாழ்ந்தவன் ஆகின்றான்.
இந்த மூன்று லோகங்களிலும் அல்லது மூன்று அவஸ்தைகளிலும் பாரமார்த்திகப் பெருநிலையிலேயே இருந்து பழகுபவன் இரண்டாவது பிறப்பெடுத்தவன் ஆகின்றான். இருபிறப்பாளன் அல்லது துவிஜன் யாண்டும் போற்றுதலுக்குரியவன் ஆகின்றான்.
செய்யுள் மயமாக அமைந்துள்ள காயத்ரியில் உள்ள பதங்களை இப்பொழுது உரைநடைக்குரிய பதங்களாகப் பிரித்து அமைப்போம் –
ஓம் தத் ஸவிது: வரேண்யம் பர்க: தேவஸ்ய தீமஹி |திய: ய: ந: ப்ரசோதயாத் ||
य: ய: – யார், न: ந: – நம்முடைய, धिय: திய: அறிவை, प्रचोदयात् ப்ரசோதயாத் – தூண்டுகிறாரோ, तत् தத் – அந்த, देवस्य தேவஸ்ய – சுடருடைய, सवितु: ஸவிது: கடவுளின், वरेण्यम् வரேண்யம் – மேலான, भर्ग: பர்க: – ஒளியை, धीमहि தீமஹி – தியானிப்போமாக.
ஓம். யார் நம் அறிவைத் தூண்டுகிறாரோ அந்த சுடர்க் கடவுளின் மேலான ஒளியைத் தியானிப்போமாக.
சரியாக அமைந்துள்ள காயத்ரி மந்திரத்தில் பரம்பொருளின் சொரூபத்தை விளக்குவதற்கான பதங்கள் மூன்று அமைந்திருக்கும். ஜீவப் பிரயத்தனத்தையும், தெய்வத்தின் அருளையும் விளக்குவதற்கென்று அமைந்துள்ள வினைச்சொற்கள் மூன்று இருக்கும். இப்பேரியல்புகள் காயத்ரீ மந்திரங்கள் அனைத்துக்குமே பொதுவானவைகள்.
இம்மந்திரத்தில் பரம்பொருளுக்கு விளக்கமாக அமைந்துள்ள மூன்று சொற்களை எடுத்துக் கொள்வோம். ஸவிது: என்னும் சொல் ஸவித்ரு என்னும் சொல்லின் ஆறாம் வேற்றுமையாகும். ஸவித்ரு என்னும் சொல் உயிர்தருகிற, உற்சாகம் ஊட்டுகிற, வாழ்வைச் செப்பனிடுகிற பொருள் என்று சொல்லப் படுகிறது. உலக நடைமுறையில் சூரியன் இச்சொல்லுக்கு இலக்காகிறது. பரதத்துவத்தில் பரமாத்மாவுக்குப் பொருந்தியதாக இப்பதம் அமைகிறது. ஸவித்ரு என்னும் சொல்லைப் பெண்பால் ஆக்குகின்ற பொழுது, அது ஸாவித்ரீ என்று சொல்லப் படுகிறது. காயத்ரீ, ஸாவித்ரீ ஆகிய இரண்டு பெயர்களும் சக்தி தெய்வத்துக்கு உரியவைகள் ஆகின்றன. இந்த இரண்டு பெயர்களுள் ஒன்றிற்குப் பதிலாக மற்றொன்றை மொழியுமிடத்து அது இழுக்கு ஆகாது.
வழிபடுகின்றவர்களுடைய வசதிக்காக ஒரு தெய்வம் ஆண்பாலாகவோ, பெண்பாலாகவோ கருதப் படுகிறது. சிவ என்பது ஆண்பால்; சிவா என்பது பெண்பால். ஸவித்ரு என்பது ஆண்பால்; ஸாவித்ரீ என்பது பெண்பால். ஆணாகவோ, பெண்ணாகவோ, அலியாகவோ எப்படி வைத்துக் கொண்டாலும், அது உயிர்க்கு உயிராய் இருக்கின்ற பரம்பொருள் ஆகிறது
பிரபஞ்சத்துக்கும், ஜீவகோடிகளுக்கும் ஆதாரமாகவும், மூலப் பொருளாகவும், முதல் காரணமாகவும் இருப்பது பரம்பொருள். பரம்பொருளுக்குப் புறம்பாக ஜீவர்களுடைய ஜீவ வியக்தி இல்லை. ஜகத்துக்குத் தோற்றம் என்பது இல்லை. கடலில் தோன்றி, கடலின்மீது அலைகள் உருண்டோடி விளையாடுவது போன்று ஜகத்தும் ஜீவனும் பரத்தில் தோன்றி பரத்தில் நிலைபெற்றிருக்கின்றன. (: தன்னுளே திரைத்தெழும் தரங்க வெண் தடங்கடல், தன்னுளே திரைத்தெழுந்தடங்குகின்ற தன்மை போல் – நின்னுளே பிறந்திறந்து நிற்பவும் திரிபவும், நின்னுளே அடங்குகின்ற நீர்மை நின்கண் நின்றதே : திருமழிசையாழ்வார், நாலாயிர திவ்யப் பிரபந்தம்).
ஆக, ஜகத்துக்கும் ஜீவனுக்கும் தூண்டுதல் அளிக்கும் பாங்கில் இருக்கிற பரவஸ்து (பரம்பொருள்) ஸவித்ரு என்று சொல்லப் படுகிறது. கட்புலனாகிற சூரியன் இச்செயலைப் பிரபஞ்ச நிலையில் செய்து வருவதால் சூரிய நாராயணனும் ஸவித்ரு என்று சொல்லப் படுகிறார். ஆனால் இதன் லட்சியார்த்தம் (குறியீட்டுப் பொருள்) பரமாத்மாவையே குறிக்கிறது.
பரம்பொருளை விளக்குவதற்கு அமைந்துள்ள இரண்டாவது சொல் தேவ: என்பதாகும். தேவஸ்ய என்பது இதன் ஆறாம் வேற்றுமை. தேவ: என்னும் சொல் திவ்யமானவன், பிரகாசமானவன், மேலாம் நிலையில் இருப்பவன் என்றெல்லாம் பொருள் படுகிறது. பிரகாசத்தோடு கூடியிருப்பது மூலநிலை, யதார்த்த நிலை. பிரகாசத்தை இழந்த நிலை கீழ்மைக்கு வந்துள்ள நிலையாகும். ஜகத்தில் ஜடமாய் இருப்பதெல்லாம் மூலநிலையை விட்டு வழுவிக் கீழ்நிலைக்கு வந்தவைகளாம்.
சான்று ஒன்று எடுத்துக் கொள்வோம். சூரியன் சுயப்பிரகாசம் வாய்ந்தவன். சூரியனிடமிருந்து சிதறி வந்துள்ள பூமியும், சந்திரனும் சுயப்பிரகாசத்தை இழந்தைவைகள். இந்த இரண்டு கோளங்களையும் எடுத்து மீண்டும் சூரியனுள் போட்டால் முன்னிருந்தபடி இவைகளுக்குச் சுயப்பிரகாசம் வந்துவிடும். ஜகத் (பருப்பொருள் உலகம்) ஜடமயமாக இருக்கிறது. ஜீவர்களோ ஜடம், சேதனம் (உணர்வு) ஆகிய இரண்டும் கலந்தவைகளாக இருக்கின்றன. பின்பு பரமனோ தனது சுயப் பிரகாசத்தை இழந்துவிடாது யாண்டும் பூரணமாகவே இருப்பவன். தேவ: என்னும் சொல் இப்பேருண்மையை விளக்குகிறது. பரம்பொருள் யாண்டும் சுயம்ஜோதி என்பது இதன் பொருள்.
இனி, பரவஸ்துவைக் குறிக்கின்ற மூன்றாவது பதம் பர்க: என்பதாகிறது. பர்க: என்பது ருத்ரனுக்கும், சிவனுக்கும் அமைந்த மற்றொரு பெயர். ருத்ரனாகக் கருதுமிடத்து அழுகையின் வாயிலாக அழுக்கைப் போக்கக் கூடியவன் என்று பொருள்படுகிறது. சிவனாகக் கருதுமிடத்து ஞானப் பிரகாசத்தின் வாயிலாக அக்ஞான இருளைப் போக்குபவன் என்று பொருள்படுகிறது. பரம்பொருளின் சொரூபத்தை ஜீவர்கள் கிரகித்துக் கொள்வதற்கே இந்த அடைமொழி வந்துள்ளது. ஸ்தூல உலகில் சூரியன் தான் இருக்குமிடத்தைத் தானே விளக்குகின்றான். தன் வெளிச்சத்தைக் கொண்டு ஏனைய பொருள்களையும் விளக்குகின்றான். அங்ஙனம் ஞான சொரூபியாகிய பரமாத்மா தன்னைத் தானே விளக்குகின்றான். அவனுடைய சன்னிதானத்தின் விசேஷத்தால் ஜகத்தும், ஜீவர்களும் ஞானக்காட்சிக்கு இலக்காகின்றன.
இங்ஙனம் ஸவித்ரு, தேவ:, பர்க: ஆகிய மூன்று சொற்களையும் நாம் உச்சரிக்கின்ற பொழுது, அச்சொற்களுக்கு இலக்காக இருக்கிற பரமாத்மாவையே பாவனை பண்ண வேண்டும். . பரமனைப் பற்றிய பதங்களைப் பேசுகின்ற பொழுது, அப்பதங்களின் அடிப்படைக் கருத்து உள்ளத்தில் உதயமாக வேண்டும். அப்பொழுது தான் உச்சரிக்கின்ற மந்திரத்துக்கு வலிவு வருகிறது.
காயத்ரீக்கு இன்றியமையாத மூன்று வினைச்சொற்களை இனி ஆராய்வோம். வரேண்யம் என்பது வர்ணித்தல் எனும் வினையின் விகாரமாம். வரேண்யன் என்னும் சொல் போற்றுதற்குரியது என்றும், வர்ணிப்பதற்குரியது என்றும், விளக்குதற்குரியது என்றும் பொருள்படுகிறது. தங்கம், வெள்ளி முதலிய தாதுக்களை விளக்க விளக்க அவைகள் சுடர்விடுகின்றன. பரமனை விளக்குவதற்கு ஏற்ப ஜீவாத்மனிடம் ஞானச் சுடர் வளருகிறது. பரமனை விளக்குதலே ஆராதனையாகிறது. பரமனைப் பற்றிய விளக்கத்தைப் “பொருள்சேர் புகழ்” என்று பொய்யாமொழிப் புலவர் வள்ளுவர் போற்றுகிறார். நரஸ்துதி பொருள் சேராத புகழ். பரம்பொருளைப் பற்றிய ஸ்துதி பொருள் சேர்ந்த புகழ். ஆயிரம் ஆயிரமாக சொற்களை வாரிக் கொட்டிப் புகழ்ந்து கொண்டு போனாலும் அதனுடைய புகழுக்கு முடிவில்லை. பரமனை இடையறாது புகழ்ந்துகொண்டிருக்க வேண்டும் என்னும் கோட்பாட்டை வரேண்யம் என்னும் பதம் விளக்குகிறது.
வினைச்சொல் தீமஹி. தியானிப்போமாக என்பது இதன் பொருள். ஆத்ம சாதனங்களுள் இது தலை சிறந்தது. அஷ்டாங்க யோகத்தில் ஏழாவது அங்கமாக இருப்பது தியானம். இது முதிர்ந்தால் சமாதியாகப் பூர்த்தியாகிறது. காயத்ரி மந்திரத்தைப் பயன்படுத்துகிற பொழுது சிறிது நேரம் தியானம் பண்ணுவது அவசியமாகிறது.
தியானத்துக்காக நிமிர்ந்து உட்காரவேண்டும். சிரசு, கழுத்து, நெஞ்சு ஆகியவை நேராக இருக்கவேண்டும். உள்ளத்தைச் சுடர்விட்டு ஒளிர்ந்து கொண்டிருக்கின்ற தாமரை மலராகக் கருதவேண்டும். அதில் சுயம் ஜோதி சொரூபமாக வழிபடு தெய்வம் வீற்றிருப்பதாக உணர்தல் வேண்டும். இந்த உணர்வில் நிலைத்திருப்பது தியானமாகிறது. இங்ஙனம் ஐந்து நிமிஷத்துக்குக் குறையாமல் அரைமணி நேரம் வரையில் தியானத்தில் அமர்ந்திருக்க வேண்டும். தியானம் நமது தேசியப் பண்பு. பல்லாயிரம் ஆண்டுகளாக பரதகண்டத்துப் பெருமக்கள் காலையிலும், மாலையிலும் சந்தியா நேரங்களில் ஆழ்ந்து தியானத்திலிருந்து பழகி வந்திருக்கிறார்கள். இந்தப் பண்பில் ஊறியிருப்பதற்கேற்ப ஆன்மிகம் மக்களிடத்து ஓங்குகிறது.
ஈண்டு இயம்பியுள்ள இரண்டு நல்வினைகளுள் ஒன்று நாவால் போற்றுவது; மற்றது மனத்தால் எண்ணுவது. ஜீவாத்மன் செய்கின்ற செயல்களுள் இவையிரண்டும் பாரமார்த்திகப் பண்பாட்டுக்கு உரியவைகள். ஆத்ம சாதகன் இவ்விரண்டையும் ஊக்கத்தோடு அனுஷ்டுக்கக் கடமைப் பட்டிருக்கிறான்.
ப்ரசோதயாத் என்னும் வினைச்சொல் மூன்றாவதாக வந்தமைகிறது. தூண்டுகிற என்பது இதன் பொருள். இச்செயல் ஜீவாத்மனுடையதன்று. உள்ளத்தினுள்ளே வீற்றிருக்கின்ற பரமாத்மனுடைய செயல் ஆகின்றது இது. ஜீவாத்மனுடைய செயலுக்குத் துவக்கமும், முடிவும் உண்டு. ஆனால் பரமாத்மனுடைய செயலுக்கோ ஆதி அந்தம் இல்லை. இச்செயலைத் தான் ஆன்றோர்கள் அருள் என்று அழைக்கின்றனர். அருளின் பாங்கு சர்வகாலமும் உள்ளத்தினுள்ளே நிலைபெற்றிருக்கிறது. ஆத்ம போதத்தில் விழிப்படைந்து வருகிறவர்களுக்கு அது விளங்குகிறது. அருளின் பாங்கை உள்ளத்தினுள்ளே உணர்பவனைத் தான் இருபிறப்பாளன் என்று சொல்லவேண்டும். வெறும் உபநயனச் சடங்கால் இந்த உணர்வு உருவெடுக்காது. பரிபாகத்தின் விளைவாகவே இது உருவெடுக்கிறது.
இந்தக் காயத்ரீ மந்திரத்தில் இறைவனுடைய அருளும், ஜீவப் பிரயத்தனமும் இடம் பெற்றிருக்கின்றன. இவ்விரண்டையும் ஒன்று படுத்துவது தான் யோகம். ஆக, பாரமார்த்திகப் பெருவாழ்வுக்குத் தகுதியுடையவர்களே காயத்ரீ மந்திரத்தைச் சரியாகப் பயன்படுத்த வல்லவர்கள் ஆகின்றார்கள்.
காயத்ரீ மந்திரத்தில் மெய்யெழுத்தை நீக்கிவிட்டு உயிரெழுத்தும், உயிர்மெய் எழுத்தும் சேர்ந்து இருபத்து நான்கு அக்ஷரங்கள் இருக்கும். இவை மூன்று வரிகளாகப் பிரிக்கப் பட்டு ஒவ்வொரு வரியிலும் எட்டு எழுத்துக்கள் அமையப் பெற்றிருக்கும். இதுவே காயத்ரீ அமைப்பின் முறைமையாகும். இம்முறைமை வேதங்களில் முக்கிய இடம் பெறுகிறது.
வேதங்களின் உட்கருத்துக்களெல்லாம் காயத்ரீயில் அடங்கியிருக்கின்றன என்பது ஐதிகம். காயத்ரீயில் அடங்கியிருக்கிற கருத்து யாது என்று ஆராய்ந்து பார்க்குமிடத்து, பரம்பொருளுக்கும், ஜீவாத்மனுக்கும் இடையில் உள்ள இணக்கத்தை அது ஞாபகமூட்டுகிறது. ஜீவாத்மனைப் பரமாத்மன் மயமாகப் பண்படுத்துதற்கு அது வழிகாட்டித் தருகிறது. ஆக, ஜீவாத்மன் பரிணமித்து மேலோங்கி வந்து பரமாத்மனைச் சேர்வது குறிக்கோள். இது வேதங்களின் திட்டம். மானுட வாழ்க்கையின் முடிந்த நோக்கம் இதுவேயாம். இந்த நோக்கத்தைச் சுருக்கமாக காயத்ரீ மந்திரம் தெளிவுபடுத்துகிறது. ஆதலால் தான் காயத்ரீ மந்திரத்தை வேதங்களின் சாரம் என்று சான்றோர் சாட்டியிருக்கின்றனர்.
———
ஸ்ரீராம காயத்ரி ஓம் தாசரதாய வித்மஹே சீதா வல்லபாய தீமஹி தந்நோ ராம ப்ரச்சோதயாத்
ஸ்ரீ சீதா காயத்ரி ஓம் ஜனகபுத்ரியை வித்மஹே ராமப்ரியாய தீமஹி தந்நோ சீதா ப்ரச்சோதயாத்
ஸ்ரீராம பாத காயத்ரி ஓம் ராமபாதாய வித்மஹே ஸ்ரீராமபாதாய தீமஹி தந்நோ ராமபாதப் ப்ரச்சோதயாத் –
விபீஷண காயத்ரி மந்திரம்.. “ஓம் ராம பக்தாய வித்மஹே சர்வாஸ்ரயாய தீமஹி தந்நோ விபீஷண ப்ரசோதயாத்”
—————
அனாயேனம் ஹரிஸ்ரேஷ்ட தத்தம் அஸ்யா அபயம் மம: விபீஷனோவா சுக்ரீவ யதி வா ராவண ஸ்வயம் ||– வால்மீகி ராமாயணம், யுத்த காண்டம்
சிவனும் அம்புய மலரில் அயனும் இந்திரை கொழுநன் அவனும் வந்திட உதவும் அரி எனும் பிரமம் அது துவளும் அஞ்சன உருவு தொடரு செங் கமல மலர் உவமை கொண்டு இதில் ஒருவன் உலகில் வந்ததுகொல~ கம்பராமாயணம், அனுமபடலம்
————–
ஆயுர்வேத, சித்த மருந்துகள் மட்டும் அல்லாது ஆங்கில மருந்துகளை ஏற்போரும் மருந்துகளை விழுங்கும் முன்னால், ஸ்ரீ ராமபாணம் ஸ்ரீ ராமபாணம் ஸ்ரீ ராமபாணம் பாஹிமாம் ஸ்ரீ ராமபாணம் ஸ்ரீ ராமபாணம் ஸ்ரீ ராமபாணம் ரக்ஷமாம் —என்று ஓதி மருந்துகளை, மாத்திரைகளை, டானிக்குகளை உட்கொள்வதால் அந்த மருந்துகளின் முழுப் பலனையும் பெற்று உடனடி நிவாரணம் பெறலாம்.
—————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply