ஒரு வருடத்தில் வரும் 24 / 25 ஏகாதசிகள்–

சூரியப் பாதையின் தளத்தில், புவியில் இருந்து பார்க்கும்போது சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையிலான கோணம்
ஒரு அமாவாசையில் 0 பாகையில் தொடங்கி அடுத்த பூரணையில் 180 பாகை ஆகிறது.
அடுத்த அமாவாசைக்கு இது 360 பாகை சுற்றி மீண்டும் 0 பாகை ஆகும். இது சந்திரன் பூமியைச் சுற்றுவதால் ஏற்படுகிறது.
ஒரு முழுச் சுற்றுக்காலத்தில் 30 திதிகள் அடங்குவதால் ஒரு திதி 12 பாகை (360/30) அதிகரிப்புக்கான கால அளவைக் குறிக்கும்.
ஏகாதசித் திதி பதினோராவது திதியும் 26 ஆவது திதியும் என்பதால்,
சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையிலான கோணம் 120 பாகையில் இருந்து 132 பாகை ஆகும் வரை உள்ள காலம்
சுக்கில பட்ச ஏகாதசித் திதியும், 300 பாகையிலிருந்து 312 பாகை வரை செல்வதற்கான காலம் கிருட்ண பட்ச ஏகாதசியும் ஆகும்.

ஸ்ரீ நாராயணனின் சக்திக்கு “ஏகாதசி” எனப் பெயரிட்டு உன்னை விரதம் இருந்து போற்றுவோருக்கு நான்
சகல நன்மைகளையும் தருவேன் என வரமளித்து தன்னுள் மீண்டும் சக்தியை ஏற்றுக்கொண்டார்.
எனவே ஏகாதசி எனும் சக்தி விழிப்புடன் இருந்து ஸ்ரீ நாராயணனின் அருளும் வரமும் பெற்ற ஏகாதசி நாளில்
நாமும் கண்விழித்து விரதம் கடைபிடித்தால் அவரின் அருள் பரிபூரணமாக கிடைக்கப்பெற்று
நீங்காப் புகழுடன் வாழ்வோம் என்பது ஐதீகம்.

மார்கழி மாத சுக்கில பட்ச (வளர்பிறை) ஏகாதசி வைகுண்ட ஏகாதசி எனப்படுகின்றது

தேவர்களும் அசுரர்களும் அமுதம் பெற வேண்டி இரவும், பகலும் விரதம் இருந்து பாற்கடலை கடைந்த போது
அமுதம் வெளிப்பட்டது என்றும் துவாதசியன்று ஸ்ரீ மகாலட்சுமி சமுத்திரத்தில் இருந்து வெளியே வந்து
தேவர்களுக்குத் திருக்காட்சி அளித்து அவர்களுக்கு அருளாட்சி புரிந்தார் என்றும்,
அன்று முதல் ஏகாதசி அன்று இரவும், பகலும் விரதம் இருந்து ஸ்ரீ மஹாவிஷ்ணுவை துதிப்போருக்கு இந்தப் பிறவியில்
நிலைத்த புகழ், நோயற்ற வாழ்வு, நன்மக்கட்பேறு முதலியவற்றை பகவான் அளிப்பதோடு,
மறுபிறவியில் ஸ்ரீ வைகுண்டவாசம் சொர்க்கவாசல் வழங்குவதாகவும் புராணங்களில் கூறப்படுகிறது.

ஒரு வருடத்தில் வரும் 24 ஏகாதசிகள்:

1. உற்பத்தி (ஏகாதசி) – மார்கழி – க்ருஷ்ண (பக்‌ஷம்) – சகல பாக்கியங்களும் கிடைக்கும்.

2. மோட்ச – மார்கழி – சுக்ல – ஸ்ரீ வைகுண்டம் கிடைக்கும்

3. ஸபலா – தை – க்ருஷ்ண – பாப நிவர்த்தி (உலும்பகன் மோட்சம்)

4. புத்ரதா – தை – சுக்ல – புத்ர பாக்கியம் கிடைக்கும் (சுகேதுமான் விரதம் இருந்து பிள்ளைகள் பெற்றான்)

5. ஷட்திலா – மாசி – க்ருஷ்ண – அன்ன தானத்திற்கு ஏற்றது

6. ஜயா – மாசி – சுக்ல – பேய்க்கும் மோட்சம் உண்டு (மால்யவான் பேயான சாபத்தில் இருந்து விடுதலை பெற்றான்)

7. விஜயா – பங்குனி – க்ருஷ்ண – ஸ்ரீ ராமர் ஸ்ரீ சீதையை மீட்க, பகதாப்யர் எனும் முனிவரின் உபதேசப்படி, விரடம் இருந்த நாள்

8. ஆமலதீ – பங்குனி – சுக்ல – கோதானம் செய்ய ஏற்றது

9. பாப மோசனிகா – சித்திரை – க்ருஷ்ண – பாபங்கள் அகலும்

10. காமதா – சித்திரை – சுக்ல – நினைத்த காரியம் நடக்கும்

11. வருதிந் – வைகாசி – க்ருஷ்ண – ப்ரம்மஹத்தி தோஷம் நீங்கும் (சிவன், ப்ரம்மன் தலையை அறுத்த தோஷம் நீங்கிய நாள்)

12 மோஹினி – வைகாசி – சுக்ல – பாவம் நீங்கும்

13. அபார – ஆனி – க்ருஷ்ண – குரு நிந்தனை, பொய் சாட்சி போன்றவை அகலும்

14. நிர்ஜலா (பீம) – ஆனி – சுக்ல – எல்லா ஏகாதசி பலனும் உண்டு (நீர் அருந்தக் கூடாது – பூமியில் நீர் குறைந்து இருக்கும் நாள்)

15. யோகினீ – ஆடி – க்ருஷ்ண – நோய் நீங்கும் (குபேரன் பணியாளன் ஹேமநாதன் விரதம் இருந்து குஷ்ட நோய் நீங்கிய நாள்)

16. சயிநீ – ஆடி – சுக்ல – தெய்வ சிந்தனை அதிகமாகும் – ஸ்ரீ திரிவிக்கிரமனாய்த் தோன்றி, பின் ஸ்ரீ பாற்கடலில் சயனித்த நாள் (பெயர்க் காரணம்)

17. சாமிகா – ஆவணி – க்ருஷ்ண – விருப்பங்கள் நிறைவேறும்

18. புத்ரஜா – ஆவணி – சுக்ல – புத்ர பாக்கியம் கிடைக்கும்

19. அஜா – புரட்டாசி – க்ருஷ்ண – இழந்ததைப் பெறலாம் – அரிச்சந்திரன் விரதம் இருந்த நாள்

20. பத்மநாபா – புரட்டாசி – சுக்ல – பஞ்சம் நீங்கும்

21. இந்திரா – ப்பசி – க்ருஷ்ண – பித்ருக்கள் நற்கதி பெறுவர்

22. பாபாங்குசா – ப்பசி – சுக்ல – கங்கையில் நீராடிய பலன் கிடைக்கும், பாபங்கள் அகலும்

23. ரமா – கார்த்திகை – க்ருஷ்ண – உயர்ந்த பதவி, ஸ்ரீ வைகுண்ட பதவி கிடைக்கும்

24. ப்ரபோதின் – கார்த்திகை – சுக்ல – பொதுவாக உயர்ந்த நன்மைகள் உண்டாகும்

25 – கமலா – (சில வருடங்களில் மட்டும்) – ஸ்ரீ மகாலட்சுமி அருள் கிடைக்கும்

——————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading