ஸ்ரீ புராணங்கள்–

ஸ்ரீ வேதா சாஸ்திரம் பரம் நாஸ்தி ந தைவம் கேசவாத் பரம்.

18 புராணங்களின் பெயர்களையும் எளிதில் நினைவில் வைத்துக் கொள்ள ஒரு ஸ்லோகம் உள்ளது.

ம த்வயம் ப த்வயம் சைவ ப்ர த்ரயம் வ சதுஷ்டயம் I
அனாபலிங்ககூஸ்கானி புராணானி ப்ருதக் ப்ருதக் II
தேவி பாகவதத்தில் முதல் ஸ்கந்தத்தில் மூன்றாம் அத்தியாயத்தில் எளிதில் நினைவில்
வைத்துக் கொள்ளும் இந்தக் குறிப்பு இடம் பெறுகிறது

இந்த ஸ்லோகத்தின் பொருள் :-
இரண்டு ‘ம’, இரண்டு ‘ப’,
மூன்று ‘ப்ர’,
நான்கு ‘வ’
மற்றும் ‘அ’,’நா’.’ப’, ‘லிங்’, ‘க’, ‘கூ’,’ஸ்கா’ ஆகியவையே புராணங்களாகும்.

இரண்டு ‘ம’ என்பது மகாரத்தில் ஆரம்பிக்கும் மத்ஸ்ய மற்றும் மார்க்கண்டேய புராணத்தைக் குறிக்கும்.
இரண்டு ‘ப’ என்பது பகாரத்தில் ஆரம்பிக்கும் பவிஷ்ய மற்றும் பாகவத புராணத்தைக் குறிக்கும்.
மூன்று ‘ப்ர’ என்பது ப்ர-வில் ஆரம்பிக்கும் ப்ரஹ்ம, ப்ரஹ்மாண்ட மற்றும் ப்ரம்மவைவர்த புராணத்தைக் குறிக்கும்.
நான்கு ‘வ’ என்பது வகாரத்தில் ஆரம்பிக்கும் வராஹ, விஷ்ணு, வாயு, மற்றும் வாமன புராணத்தைக் குறிக்கும்.
‘அ’ என்பது அக்னி புராணத்தைக் குறிக்கும்.
நா’ என்பது நாரதீய புராணத்தைக் குறிக்கும்.
‘ப’ என்பது பத்ம புராணத்தைக் குறிக்கும்.
‘லிங்’ என்பது லிங்க புராணத்தைக் குறிக்கும்.
‘க’ என்பது கருட புராணத்தைக் குறிக்கும்.
‘கூ என்பது கூர்ம புராணத்தைக் குறிக்கும்.
‘ஸ்கா’ என்பது ஸ்கந்த புராணத்தைக் குறிக்கும்.

ஆக இப்படி 18 புராணங்களையும் நினைவில் கொள்ள ஒரு சிறிய ஸ்லோகத்தை நினைவில் வைத்திருந்தால் போதும்.
காலம் காலமாக வழங்கப்பட்டு வரும் ஸ்லோகம் இது.

———

ஸ்ரீ புராணங்கள்
மகா புராணங்கள்
ஸ்ரீ பிரம்ம புராணம் · பத்ம புராணம் · விஷ்ணு புராணம் · சிவ புராணம் · லிங்க புராணம் ·
கருட புராணம் · நாரத புராணம் · பாகவத புராணம் · அக்னி புராணம் · கந்த புராணம் ·
பவிசிய புராணம் · பிரம்ம வைவர்த்த புராணம் · மார்க்கண்டேய புராணம் · வாமன புராணம் ·
வராக புராணம் · மச்ச புராணம் · கூர்ம புராணம் · பிரம்மாண்ட புராணம் ·

இந்த ஸ்ரீ மகா புராணங்களில் பிரம்மனின் பெருமைகளை கூறுபவை ராஜசிக புராணம்
(பிரம்ம வைவர்த்த புராணம், மார்க்கண்டேய புராணம், பவிசிய புராணம், வாமன புராணம்,
பிரம்ம புராணம், பிரம்மாண்ட புராணம்) என்றும்,
திருமாலின் பெருமையைக் கூறுபவை சத்துவ சாத்விக புராணம்(பத்ம புராணம், விஷ்ணு புராணம், நாரத புராணம்,
பாகவத புராணம், கருட புராணம், வராக புராணம்) என்றும்,
சிவபெருமானது பெருமைகளை கூறுபவை தாமச புராணம் என்றும் அழைக்கப் பெறுகின்றன.

ஸ்ரீ உப புராணங்கள்
ஹரி வம்சம் · சூரிய புராணம் · கணேச புராணம் · காளிகா புராணம் · கல்கி புராணம் ·
சனத்குமார புராணம் · நரசிங்க புராணம் · துர்வாச புராணம் · வசிட்ட புராணம் · பார்க்கவ புராணம் ·
கபில புராணம் · பராசர புராணம் · சாம்ப புராணம் · நந்தி புராணம் · பிருகத்தர்ம புராணம் ·
பரான புராணம் · பசுபதி புராணம் · மானவ புராணம் · முத்கலா புராணம் · வாயு புராணம் ·

——–

பிரம்ம புராணம் – முன் நெற்றி
பத்ம புராணம் – இதயம்
விஷ்ணு புராணம் – வலது புஜம்
சிவ புராணம் – இடது புஜம்
ஸ்ரீமத்பாகவத புராணம் – இரண்டு நேத்ரங்கள்
நாரத புராணம் – நாபி
மார்கண்டேய புராணம் – வலது கால்
அக்னி புராணம் – இடது கால்
பவிஷ்ய புராணம் – வலது முட்டிக்கால்
பிரம்மவைவர்த்த புராணம் – இட்து முட்டிக்கால்
லிங்க புராணம் – வலது கணுக்கால்
வராஹ புராணம் – இட்து கணுக்கால்
வாமன புராணம் – ரோமம்
கூர்ம புராணம் – சருமம்
மத்ஸ்ய புராணம் – வயிறு
கருட புராணம் – ம்ஞ்சையும் கொழுப்பும்
பிரம்மாண்ட புராணம் – எலும்பு

———–

1.பிரம புராணம் – பிரம கல்பம்,
2. பத்ம புராணம் – பத்ம கல்பம்,
3. விஷ்ணு புராணம் – வராக கல்பம்,
4. சிவ புராணம் – ச்வேத கல்பம்,
5. பாகவத புராணம் – சாரசுவத கல்பம்,
6. நாரத புராணம் – வ்ரிஹத் கல்பம்,
7. மார்க்கண்டேய புராணம் – ச்வேத வராக கல்பம்,
8. அக்னி புராணம் – ஈசான கல்பம்,
9. பவிஷ்ய புராணம் – அகோர கல்பம்,
10. பிரமவைவர்த புராணம் – ரசுந்த்ர கல்பம்,
11. லிங்க புராணம் – கல்பந்த கல்பம்,
12. வராஹ புராணம் – மனுகல்பம்,
13. கந்த புராணம் – தத்புருஷ கல்பம்,
14. வாமன புராணம் – சிவகல்பம்,
15. கூர்ம புராணம் – லக்ஷ்மி கல்பம்,
16. மத்ஸ்ய புராணம் – கல்பாதி கல்பம்,
17. கருட புராணம் – கருட கல்பம்,
18. பிரமாண்ட புராணம் – பவிஷ்ய கல்பம்

——–

1.பிரம்ம புராணம்( சுமார் 13000 ஸ்லோகங்கள்):
புராணங்களில் முதலில் தோன்றியது. எனவே இதனை ஆதி புராணம் என்றும் கூறுகின்றனர்.
இது ராஜசிக புராண வகையைச் சார்ந்ததாகும்.
2.பத்ம புராணம்(சுமார் 55000 ஸ்லோகங்கள்)
3-விஷ்ணு புராணம்(சுமார் 23000 ஸ்லோகங்கள்)
மைத்ரேய முனிவரின் கேள்விகளுக்கு பராசர மகரிஷி கூறியவை விஷ்ணு புராணமாக தொகுக்கப்பட்டுள்ளது.
உலகம் உண்டான விதம்? எந்த வஸ்துவின் ஸ்வரூபமாக இருக்கிறது? எங்கிருந்து எப்படி உண்டாயிற்று?
எப்படி எங்கே லயப்பட்டது? இனி எங்கே லயமாகும்? நிலம், நீர், நெருப்பு, காற்று,விசும்பு எனும்
ஐந்து பருப்பொருட்களில் (பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாசம் என்னும் பஞ்சபூதங்களின் நிலை என்ன?
எதனால் அவை விளங்கும்? இவ் விஷயங்களையும் தேவதைகள் முதலானவருடைய உற்பத்தியையும்,
மலைகள், கடல்கள் இவற்றின் தோற்றத்தையும் பூமியிருக்கும் விதத்தையும் சூரியன்,சந்திரன், கோள்கள்
ஆகியவற்றின் நிலையையும் அளவுகளையும் தேவர்களின் வம்சங்களையும்,மனுக்களையும், மனுவந்தாரங்களையும்,
மகாகல்பங்களையும், நான்கு யுகங்களால்விகற்பிக்கப்பட்டவையான கல்பங்களின் பிரிவுகளையும்
அவற்றின் முடிவு நிலைகளையும், சகல யுக தர்மங்களை பற்றி இப்புராணத்தில் கூறப்பட்டுள்ளது
ஸ்ரீமத் பாகவத புராணம் : ஸ்ரீ வியாசரே எழுதியது. ஸ்ரீ மகாபாரதத்தில் முழுமையாக இடம் பெறாத ஸ்ரீகிருஷ்ணரின் முழு வரலாறும்,
ஸ்ரீ விஷ்ணுவின் பிற அவதாரங்கள் குறித்த செய்திகளும், பன்னிரண்டு காண்டங்களாகப் பிரிக்கப்பட்டு
பதினெட்டாயிரம் ஸ்லோகங்களாக விவரிக்கப்பட்டுள்ளன
4.சிவ புராணம் (அ) வாயு புராணம்(சுமார் 24000 ஸ்லோகங்கள்)
5.லிங்க புராணம்(சுமார் 10000 ஸ்லோகங்கள்)
6.கருட புராணம்(சுமார் 19000 ஸ்லோகங்கள்)
7-பத்ம புராணம் : ஆறு காண்டங்களில் 55,000 ஸ்லோகங்களைக் கொண்ட பெரிய புராணம் இது.
பிரம்மனின் பத்மாசனம் விவரிக்கப்படுவதால் இது பத்ம புராணம் என்று பெயர் பெற்றது.
8-பிரம்மவைவர்த்த புராணம் : பிரம்மகாண்டம், ப்ரக்ருதி காண்டம், கணேச காண்டம், கிருஷ்ண ஜன்ம காண்டம்
ஆகிய பிரிவுகளுடன் பதினெட்டாயிரம் ஸ்லோகங்கள் கொண்டது.
இதில் உள்ள கணேச காண்டம் என்ற பகுதிதான் விநாயக புராணம் என்ற உபபுராணமாக பின்னர் உருவானது.
“கிருஷ்ண ஜன்ம காண்டம்” என்ற பகுதிகளில் உள்ள தகவல்களை ஸ்ரீமத் பாகவத புராணத்திலும் காணலாம்.
9-பிரம்மாண்ட புராணம் : பன்னிரண்டாயிரம் ஸ்லோகங்களைக் கொண்ட இப் புராணம்
ஒரு பொன்னிற முட்டையிலிருந்துதான் நமது பிரபஞ்சம் (பிரம்மாண்டம்) தோன்றி விரிவடைந்தது என்று விவரிக்கிறது.
நவீன விஞ்ஞானம் தற்காலத்தில் நம்பும் பெருவெடிப்பு என்ற நிகழ்வை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு
முன்பே தொகுக்கப்பட்ட இப்புராணத்தில் காணலாம்.
10-அக்னி புராணம் : அக்னிதேவன் வசிஷ்ட மகரிஷிக்கு விவரித்தது இப்புராணம்.
சிவலிங்கம், துர்க்கை, இராமர், கிருஷ்ணர் ஆகியோரைப் பற்றியும், நாடகம், சிற்பம், ஜோதிடம் போன்ற
கலைகளைப் பற்றியும் விவரிக்கிறது என்பது இப்புராணத்தின் சிறப்பாகும்.
11-வாயுபுராணம் : பதினான்காயிரம் ஸ்லோகங்களைக் கொண்டு இப்புராணத்தில் கி.பி. நான்காம் நூற்றாண்டில்
ஆண்ட குப்த வம்சத்து மன்னர்களைப் பற்றியும், கி.பி.ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த பாணபட்டர் என்பவரைப் பற்றியும்
கூட தகவல்களைத் தருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
12-பவிஷ்ய புராணம் : வருங்காலத்தில் என்னென்ன நிகழ்வுகளெல்லாம் நடக்க இருக்கின்றன என்று
சூரியன் முன் கூட்டியே மனுவுக்குத் தெரிவிப்பதாக அமைந்தது இப்புராணம்.
ஸ்தலங்களைப் பற்றியும் அங்கெல்லாம் யாத்ரிகர்களுக்கு இருக்கக்கூடிய உரிமைகளைப் பற்றியும் கூட இப்புராணம் விவரிக்கிறது.
13-நாரதீய புராணம் : நாரத மகரிஷியானவர் சனத்குமாரருக்கு உபதேசித்தது இப்புராணம். 25,000 ஸ்லோகங்கள் இதில் உள்ளன.
14-ஸ்காந்தம் : முருகனின் வரலாற்றை விவரிப்பதுதான் இப்புராணம்
15-மார்க்கண்டேய புராணம் : மிகப்பழைமையான புராணம் இது. இதிலுள்ள தேவி மகாத்மியம் என்ற பகுதிதான்,
பின்னர் தனியான ஓர் உப புராணமாக உருவெடுத்தது.

——————-

1. சிவ புராணம் – பிரம்மாவால் நாரதருக்குக் கூறப்பட்டது.
2. கூர்ம புராணம் – புலஸ்தியரால் நாரதருக்கு கூறப்பட்டது.
3. கருட புராணம் – கருடன் காசியபருக்குக் கூறினார்.
4. மார்க்கண்டேய புராணம் – மார்க்கண்டேயர் வியாசர் சீடர்களில் ஒருவரான ஜைமினி முனிவருக்கு கூறியது.
5. அக்கினி புராணம் – அக்கினி தானே வசிஷ்டருக்குக் கூற அவர் வியாசருக்கு கூறினார்.
6. வராக புராணம் – வராகரே கூறினார்.
7. கந்த புராணம் – கந்தனே கூறி அருளினார்.
8. வாயு புராணம் – வாயுவாலேயே கூறப்பட்டதாகும்.
9. விஷ்ணு புராணம் – மத்ஸ்யாவதார விஷ்ணு, மனுவுக்குக் கூறினார்.

————–

ஸ்ரீ மைதாரணீய உபநிஷத நிர்ணயம் (ஸ்ரீ வேதாந்த தேசிகர் முதலான பூர்வாச்சார்யர்களால் கையாளப்பட்டது)

ப்ரோக்தா அக்ர்யாஸ்தனவோ ப்ரஹ்மா ருத்ரோ விஷ்ணுரித்யத யோ ஹ கலு வாவாஸ்ய ராஜஸோம்ஶோ ஸௌ
ஸ யோ யம் ப்ரஹ்மாத யோ ஹ கலு வாவாஸ்ய தாமஸோம்ஶோஸௌ ஸ யோயம் ருத்ரோ (நாலாவது ப்ரபாடகம்)

பரமாத்வாக்கு பிரம்மன், ருத்ரன், விஷ்ணு எனும் மூன்று சரீரங்கள் உள்ளன.
பரம புருஷனானுடைய ராஜஸாமசம பிரம்மன், ஸாத்வீகாமசம விஷ்ணு, தாமஸாமசம ருத்ரன் என ஓதப்பட்டுள்ளது
ஸாத்வீகராஜஸதாமஸதேவதா நிர்ணயத்திற்கு இவ்வொரு வாக்யமே போதுமானது

————-

த்ரிபாதவிபூதிமஹாநாராயண உபனிஷத் நிர்ணயம் (ஹரிதாஸர் முதலான பராசீனரான ஸ்ரீ வைஷ்ணவர்களால் கையாளப்பட்டது)

விஷ்ணு மஹேஸ்வராகயா நாராயணமனஸ்ஸ ஸத்வ தமோகுண பரதாநை (52)
நாராயணமசபூதகளாய ஸத்வதமோகுணபரதாத்நரான விஷணு மஹேஸ்வரர்களாலே – என மறுபடியும் உத்கோஷிக்கிறது.

————-

யோகசூடாமணி உபனிஷத் நிர்ணயம் (ஒருவராலும் கையாளப்படாததும் சைவர்களால் கற்பிக்கபட்டதுமான உபனிஷத்)

ராஜஸோ ப்ரஹ்மா ஸாத்வீகோ விஷ்ணு தாமஸோ ருத்ர (46) என ஒப்புக்கொண்டது.

———————

பாசுபதபிரம்மோபனிஷத் நிர்ணயம் (பராசீநராரால் கையாளப்படாத உபநிஷத்)

தமோமாயாத்மகோ ருத்ர: ஸாத்விகமாயாத்மகோ விஷ்ணூ ராஜஸமாயாத்மகோ ப்ரஹ்மா
தமோகுணத்தானவன் ருத்ரன், ஸாத்விகவடிவானவன் விஷ்ணு, ராஜஸமானவன் ப்ரஹ்மா என அடித்துரைக்கிறது

—————-

ஸூபாலோபனிஷத நிர்ணயம் (ஸ்ரீ பகவத் இராமனுஜர் போன்ற பல ஆச்சார்யர்களால் கையாளப்பட்டது)

இவ்வுபனிஷத்தில் இரண்டாம் கண்டத்தில் ருத்ரசிருஷ்டியை விவரிக்கும்போது

லலாடாத கரோதஜோ ருத்ரோ ஜாயதே

பிரமனின் கோபத்தால் நெற்றியிலிருந்து உருத்திரன் உண்டானான் என்று ஓதப்பட்டது.
கோபத்தால் உண்டானது என்றதனால் ரஜஸ தமோ குணமுள்ளவன் ருத்ரன் என்பது ஸித்தம்.

—————–

ந்ருசிம்ஹதாபனீ உபனிஷத் நிர்ணயம்
ஆதிசங்கரால் பாஷ்யம் செய்யப்பட்டும் பல ஆச்சார்யர்களாலும் கையாளப்பட்ட இவ்வுபநிஷத்தில்
உத்தரதாபநீயத்தின் இரண்டாம் கண்ட இறுதியில்

ஸர்வஸம்ஹாரஸமர்த: பரிபவாஸஹ: ப்ரபுர்வ்யாப்த: ஸதோஜஜ்வலோऽவித்யாதத்கார்யஹீன:
ஸ்வாத்மபந்த ஹர: ஸர்வதா த்வைதரஹித ஆனந்தரூப: ஸர்வாதிஷ்டான: ஸன்மாத்ரோ
நிரஸ்தாவித்யாதமோமோஹோऽஹமேவேதி தஸ்மாதேவமேவேமமாத்மானம் பரம் ப்ரஹ்மானுஸந்தத்
யாதேஷ வீரோ ந்ருʼஸிம்ஹ ஏவேதி

அனைவரையும் ஸம்ஹாரம் செய்வதில் வல்லவனாய், ஒருவராலும் அவமதிக்கவொண்ணாதவனாய், ஸர்வேஷ்வரனும்,
ஸர்வவியாபியாய, எப்போதும் பிரகாசிப்பவனாய், அஜ்ஞானமும் அதன் காரியமுமற்றவனாய் ஜீவாத்மாவின்
ஸம்ஸார பந்தத்தை போக்குபவனாய் எப்போதும் ஒப்பற்றவனாய், ஆநந்தரூபமாய், எல்லாவற்றிற்கும் இருப்பிடமாய்,
எப்போதுமுள்ளவனாய் அவித்யத்தையெனபடும் கருமம், தமோகுணம், மயக்கமற்றவனாய் இருப்பவனான இந்த வீரனே நரசிங்கன்”
என்பதன் மூலம் தமோகுணம் அணுவளவும் அண்டாதவன் அநந்தன் என்பது ஸித்தம்.

—————–

புருஷ,விஷ்ணு ஸூக்தவிநிர்ணயம்

ஸாவவேதபடிதமாய், ஸாவவேதச்ரேஷ்டமாய், கபிலத்தவ ஸமபாவநாகநதரஹிதமான புருஷஸூக்தத்திலே
லக்ஷமிநாதனான பரமபுருஷனை ஓதுகையில்
‘தமஸஸ்து பாரே’,
‘தமஸ பரஸ தாத’என்றதன் மூலம் தாமஸத்துக்கு அப்பாற்பட்டவன் என அறைகிறது

—————-

ருக்வேதம் ஐந்தாமஷ்டகம் ஆறாமத்யாயம் இருபத்து நாலாவது விஷ்ணுஸூக்த வாசகம்

‘தம தவா கருணமி தவஸமவதவயாந க்ஷயநதமஸ ரஜஸ பராகே’

மிகவும் முதியவனான ராஜஸூக்கு அப்பால் எழுந்தருளியிருக்கும் அப்படிபட்ட உன்னை
அதிபாலனாம யான் ஸங்கீர்தனம் செய்கிறேன் என உறைத்தது

—————-

சதபதப்ரஹ்மான நிர்ணயம்

பரமபுருஷன் ரஜஸதமோகநகரிஹதன பரமஸதவஸமாசர்யன் என்பதை பல வேதவாக்யங்களை கொண்டு நிருவப்பட்டது.
இனி உருத்திரன் தமோ குணத்தை ப்ரதானமாக கொண்டவன் என்பதை வேதவாக்கியங்கள் உறுதிபடுத்தும்.
சுக்ல யஜூர் வேதத்தை சேர்ந்த சதபதப்ரஹ்மாணம் எனும் வேதபாகத்திலே

“பூதாநாம ச பரஜாபதிஸ ஸமவதஸராய தீக்ஷித உஷ பதநீ பூதாநாம பதீஸ ஸமவதஸேர உஷஸி ரேதோஸிஞசத
ஸமவதஸரே குமாரோ ஜாயத ஸோராதீத தம ப்ரஜாபதிர பரவீதகுமார கிம ரோதிஷ யச்சரமாத தபஸோதி
ஜாதோஸீதா ஸோபரவீத அநபஹதபாபமாவா அஹமநாஹிதநாமா நாம மே ஹேதி பாபமநோ அபஹதயை
தம புந ப்ரஜாபதிரபரவீத ருதரோஸீதி”[சதபதபரஹ்மானம்]

பூதங்களின் பதியின் பிரமன் ஒரு வருஷ தீக்ஷையுடனான பின் உருத்திரனை உண்டாக்கினான். அது பிறந்தவுடன் ஓயாது அழுக
பிரம்மன் ஏன் அழுகிறாய் என வினவினார். அக்குழந்தை பெயரிடபடாதநான் பாபம் நீங்கபெறதவனாயுள்ளேன்;
என் பாபம் நீங்கும்வகையில் நன்நாமம் தருவாயாக என்றது. அதற்கு மறுமொழியாக
” ருத்ரன் எனும் நாமம் உண்டாவதாக”என்றார்.
(இம்மாதிரியே பவன், சாவன், ஈசானன், பசுபதி, பீமன், உகர்ன் எனும் நாமங்கள் கொடுக்கப்பட்டன) என்று ஓதப்பட்டுள்ளது.
இதன்மூலம் ருத்ரன் பிறக்கையிலே பாவம் நிறைந்திருந்ததால் தமோ குணத்தின் ஆதிக்கமே இதன் காரணமாம்.

‘ஸங்கீர்ணாஸதாமஸாஸ சைவ ராஜஸாஸ ஸாத்விகாஸ ததா கல்பாஸசதுர்விதா ப்ரகோதா ப்ரஹ்மணோ தி
வ்ஸாத்யயோ யஸ்மிந் கல்பேது யத்ப்ரோக்தம் புராணம் ப்ரஹ்மணாபுரா தஸ்ய தஸ்யது மாஹாத்ம்யம்
தத்ஸ்வரூபேண வர்ண்யதே அக்நேச் சிவஸ்ய மாஹாத்ம்யம் தாமஸேஷு ப்ரகீர்த்திதம் ராஜஸேஷுச மாஹாத்ம்ய
மதிகம் ப்ரஹ்மனோ விது: ஸம்கீர்ணேஷு ஸரஸ்வத்யா: பித்ருணாம்ச நிகத்யதே ஸாத்விகேஷ்வத கல்பேஷு
மாஹாத்ம்ய மதிகம் ஹரேதேஷவேவ யோக ஸம்ஸிததா கமிக்ஷயந்தி பராம கதிம

பிரம்மனுக்கு ஒவ்வொருநாளும் ஸங்கீர்ணங்கள்,தாமஸங்கள், ராஜஸங்கள், ஸாத்வீகங்கள் என நான்கு விதமான
கல்பங்கள் கூறப்படுகின்றன. ஆதிகாலத்தில் எந்தபுராணம் எந்த கல்பத்தில் உபதேசிக்கப்பட்டதோ
அந்த புராண மஹாத்மியம் அந்த கல்பத்தின் ஸ்வரூபத்தை யொட்டி சொல்லப்படுகிறது.
அக்னி யுடையதும் சிவனுடையதும் பெருமை தாமஸ கல்பங்களில் சொல்லப்பட்டது.
ராஜஸகல்பங்களில் பிரம்மனுடைய பெருமை சொல்லப்பட்டது. ஸங்கீர்ண(மிசர) கல்பங்களில்
ஸரஸ்வதிக்கும் பித்ருக்களுக்கும் பெருமை சொல்லப்பட்டது. ஸாத்வீக கல்பங்களில் பகவான் ஹரிக்கு அதிகபெருமை சொல்லப்படுகின்றன.
அவற்றை பற்றி நின்றே யோகிகள் பரமபதமடைந்தனர் என்று மாத்ஸய புராணம் கூறிநிற்கிறது. இது கூர்ம புராணத்திலும் ஒப்புகொள்ளப்பட்டது.

————–

ஸ்ரீ விஷ்ணுபுராண நிர்ணயம்

‘தத்வவிவேகோ விஷ்ணுபுராணாத்’என்பதால் விஷ்ணு புராணத்திலிருந்து பராவரத் தத்வ விவேகம் உண்டாகிறது என்று
ஆதிசங்கரராலும் புகழப்பட்டது இவ் விஷ்ணுபுராணம். சங்கர இராமானுஜர் போன்ற மதாசாரியார்
இப் புராண வசனங்களை அதிகளவு கையாண்டிருப்பதை அவர்களது கிரந்தங்களில் காணலாம். இப்புராணத்தில்

‘ஸத்வத்யோ ந ஸந்தீயோ யதர ஹி ப்ராக்ருதோ குண| ஸ ஸூத்த ஸாவஸூத தேபய புமாநாதய பரஸீதது||’ (விஷ்ணுபுராணம்1-9-44)

ஸத்வம், ராஜஸஸீக, தாமஸஸீ எனும் ப்ராக்ருதகுணங்கள் எந்த பகவானிடமில்லையோ பரிசுத்தர்கள் அனைவரிலும்
பரிசுத்தனான அந்த ஆதிபுருஷன் உகந்தருள்வானாக என பரம புருஷனின் ஸ்வரூபத்திற்கு ஸாத்வீக ரஜோ தமோகுணங்கள்
கிடையாது என்று நிலை நாட்டியது.

ஜூஷந ரஜோகுணம் ததர ஸ்வயம் விஸ்வேஸ்வரா ஹரி|ப்ரஹ்மா பூதவாஸய ஜகதோ விஸருஷடெள ஸம்பரவாதத்தே||
ஸ்ருஷ்டஞ்ச பாத்யநுகம் யாவத்கல்பவிகல்பநா|ஸத்வப்ருத பகவாந விஷ்ணுரபரமேயபராக்ரமம்|
தமோதகீ ச கல்பாந்தே ருத்ரரூபீ ஜனார்தனன|மைத்ரேயாகில பூதாநி பக்ஷயதயதிதாருண||
பக்ஷயிதவா ச பூதாநி ஜகத்யேகாரணவீக்ருதே|நாகபாயங்கஸ்யநே ஸேதே ச பரமேஸ்வர|| (விஷ்ணுபுராணம் 1-2)

ஜகத் பதியான பகவான் ஹரி ப்ரஹ்ம யோகியாகி ரஜோகுணம் தரித்து நின்று உலகத்தை ஸ்ருடிப்பதில் ஈடுபடுகிறார்.
கல்ப காலம் முடியும் வரை யுகந்தோரும் ஸத்வகுணம் தரித்துநின்று அளவற்ற பராக்கிரமத்தை உடைய
விஷ்ணு படைக்கப்பட்ட உலகை ரக்ஷிக்கிறார். கல்ப முடிவில் ருத்ரரூபியாகி தமோகுணத்தை அதிகளவு கொண்டு
அதிபயங்கரரான ஜனார்தனன் எல்லா ஜீவராசிகளையும் புசிக்கிறார். புசித்த பின் உலகம் முழுவதும்
ஒரே ஜலமயமானவுடன் திருவன நதாழ்வானாகிற சயனத்தில் பரமேஸ்வரரான பகவான் சயனிக்கிறார்.
என்று ஸத்வகுணத்திருமேனியை உடையவன் விஷ்ணுவெனவும் தமோகுணமுடையசரீரத்தை உடையவன்
ருத்ரன் எனவும் காட்டுகிறது.

———————-

ஏகேநாமஸேந ப்ராஹ்மாஸெள வாதததேஸெளரரஜோகுண|ஏகாமஸேநாஸ்தி தோ விஷ்ணு கராதி ப்ரதிபாலநம||
ஸத்வம் குணம் ஸமாஸரிதய ஜகத் புருஷோத்தம|ஆஸ்ரீதய தமஸோ வ்ருத்திமந்தாகாலே ததா புந||
ருத்ரஸ்வரூபோ பகவாநேகாமஸேநபவத்யஜ|| (விஷ்ணுபுராணம் 1-22)

ஓரம்சத்தினால் பிரம்மனாகி ரஜோகுணமுடையவனாய் ஸ்ருஷ்டிக்கிறான் பகவான்.
ஓரம்சத்தில் விஷ்ணுவாயிருந்துகொண்டு புருஷோத்தமன் ஸத்வகுணத்தை எடுத்துகொண்டு உலகத்தை ரக்ஷிக்கிறான்.
ப்ரளயகாலத்தில் ருத்ரரூபியாய் தமோகுணத்தைகொண்டு ஓரம்சத்தால் சம்ஹரிக்கிறான். என்று இவ்விஷயம்
மற்றோர் இடத்தில் காட்டப்பட்டுள்ளது. இவ்வளவால் இவ்விஷ்ணு புராணத்தில் ஸாத்வீகதாமஸ தேவதா நிர்ணயம் செய்யப்பட்டது.

—————————

வராஹபுராண நிர்ணயம்

வராஹபெருமாளே பூதேவியை குறித்து அருளிசெய்ததான இப்புராணம் ஸாத்வீகபுராணத்துள் ஒன்று.
அதிலே அகஸ்தியருத்ர ஸம்வாதத்தில்

யத் ஸத்வம் ஸ ஹரிர தேவோ யோ ஹரிஸ தத பரம் பதம்|ஸத்வம் ரஜஸ தமஸசேதி த்ரியதம் சைததுசயதே ||
ஸத்வேந முசயதே ஜந்துஸ ஸத்வம் நாராயணேதமகம|ரஜஸா ஸத்வயுகதேந பவேசரீரமாந யஸோதிக||
தச்ச பைதாமஹம வ்ருத்தம் ஸாவஸாஸ்த்ரேஷூ படயதே|யத வேதபாஹ்யம் காம ஸயாந மாமுத்திஸயோபஸேவயதோ ||
தத ரெளதரமிதி விகயாதம கநிஷ்டகதிதம ந்ருணாம|யததீந்தபஸா யுக்தம் கேவலம் தாமஸம் து யத||
தத துர்க்கதிபரதம் ந்ரூணாம இஹ லோகே பரதர ச|

தேவனான ஹரி ஸத்வகுணமானவன். ஹரியே பரமபராபயன். ஸத்வம், ராஜஸ, தாமஸம் என்று குணங்கள்
மூன்றாக கூறப்படுகின்றன. ஸத்வகுணத்தால் ஜீவன் முக்தியடைகிறான். ஸத்வம் நாராயணஸ்வரூபமானது.
ஸத்வகுணத்தோடு கூடிய ரஜோகுணத்தால் செல்வமுள்ளவனாகவும், பெரும்புகழாளனாகவுமாகிறன்.
அது பிதாமஹனுடைய குணமாக எல்லா சாஸ்திரங்களிலும் சொல்லப்படுகிறது.
வேதத்திற்கு புறம்பான (கபாலிகம் முதலான) எந்த தாமஸம் (ருத்ரனாகிய)என்னை குறித்து அனுஷ்டிக்கப்படுகிறதோ,
அதுவே ரெளத்திரம் எனப்படுவதாய மனிதர்களுக்கு கீழான கதியை அளிக்கிறது. அது தாழ்ந்த ஆஸாரங்களையுடையது,
கேவலம் தாமஸமானது. இவ்வுலகிலும், அவ்வுலகிலும் மனிதர்களுக்கு துர்கதியை தருவதாகும். என ருத்ரனே ஒப்புகொண்டான்.

———————–

லிங்கபுராண நிர்ணயம்

இலிங்கதிட்ட புராணம் என ஆழ்வார்களாலும் பேசப்பட்ட சைவபுராணமே இவ்விஷயத்தை ஒப்புகொண்டதை காண்போம்.

ஹிரண்யகர்ப்போ ரஜஸா தமஸா ஸங்கர | ஸ்வயம் ஸத்வேந ஸர்வகோ விஷ்ணு ஸர்வாத்மா ஸதஹந்மய||
பிரமன் ரஜோகுணத்தோடும், சங்கரன் தமோகுணத்தோடும்,ஸர்வாத்மாவும் சிதசித் ஸ்வரூபியும் ஆன
விஷ்ணு ஸத்வத்தோடும் கூடியவர்… என்று பதினாலாவது அத்யாயத்திலும்,

த்வத்கோபஸம்பவோ ருத்ரஸ் தமஸா ச ஸமாவ்ருத|த்வத்ப்ரஸாதாஜ்ஜகத்தாதா ரஜஸா ச பிதாமஹ த்வத்ஸ்வரூபாத்
ஸ்வயம் விஷ்ணு ஸத்வேந புருஷோத்தம||

தமம் மூடியிருக்கும் உருத்திரன் உன்கோபத்தால் உண்டானவன்;
உன் உகப்பாலுண்டான பிரமன் ரஜோகுணமுடையவன்.
உன் ஸ்வரூபமாகவே இருக்கும் புருஷோத்தமனான விஷ்ணு ஸத்வ குணமுடையவன் -என்று இருபத்து நாலாவது அத்யாயத்திலும்

தமஸா ருத்ர ஸ்யாத ரஜஸா கந்காண்டஜ|ஸதவேந ஸாவகோ விஷ்ணு ஸர்வலோகநமஸ்கருத||

தமோகுணத்தோடு கூடியவன் ருத்ரன், ரஜோகுணத்தோடு கூடியவன் ஹிரண்யமயமான அண்டத்தில் பிறந்த
பிரமன், ஸர்வ வியாபியாய் ஸர்வலோகநமஸ்கருதனன் விஷ்ணு ஸத்வகுணத்தோடு கூடியவன் எனவும்
லிங்கபுராண வசனங்கள் ஒப்புதல் அளித்தது.

——————–

மத்யஸ்யபுராண நிர்ணயம்

சைவ புராணமாகிய மத்யஸ்ய புராணத்திலும் இவ்விஷயம் நிர்ணயிக்கப்பட்டதை முதலிலேயே கண்டோம்.
மறுமுறை அதை நினைவில் நிறுத்திகொள்க.

யஸ்மிந் கல்பேது யத்ப்ரோக்தம் புராணம் ப்ரஹ்மணாபுரா | தஸ்ய தஸ்யது மாஹாத்ம்யம் தத்ஸ்வரூபேண வர்ண்யதே ||
அக்நேச் சிவஸ்ய மாஹாத்ம்யம் தாமஸேஷு ப்ரகீர்த்திதம் | ராஜஸேஷுச மாஹாத்ம்ய மதிகம் ப்ரஹ்மனோ விது: ||
ஸம்கீர்ணேஷு ஸரஸ்வத்யா: பித்ருணாம்ச நிகத்யதே | ஸாத்விகேஷ்வத கல்பேஷு மாஹாத்ம்ய மதிகம் ஹரே|

ஆதிகாலத்தில் எந்தபுராணம் எந்த கல்பத்தில் உபதேசிக்கப்பட்டதோ அந்தபுராண மஹாத்மியம் அந்த கல்பத்தின்
ஸ்வரூபத்தையொட்டி சொல்லப்படுகிறது. அக்னியுடையதும் சிவனுடையதும் பெருமை தாமஸ கல்பங்களில் சொல்லப்பட்டது.
ராஜஸகல்பங்களில் பிரம்மனுடைய பெருமை சொல்லப்பட்டது.
ஸங்கீர்ண(மிசர) கல்பங்களில் ஸரஸ்வதிக்கும் பித்ருக்களுக்கும் பெருமை சொல்லப்பட்டது.
ஸாத்வீக கல்பங்களில் பகவான் ஹரிக்கு அதிகபெருமை சொல்லப்படுகின்றன.
அவற்றை பற்றி நின்றே யோகிகள் பரமபதமடைந்தனர் .

———————–

ஸ்ரீமத் பாகவத புராண நிர்ணயம்

அநேக திவ்ய சரித்திரங்கள், அநேக மதவிஷயங்களைப்பற்றிய ஆராய்வு, பகவானின் கல்யாண குணங்கள்,
பகவானில் பக்தி செலுத்த மனிதன் உண்மையான நிர்குண நிலையை அடைவதற்கும் பரமபதமெனும்
முக்தியை அடையும் நோக்கு எனும் அரிய விஷயங்களைப்பற்றி இப் புராணம் அடிக்கடி வசனிக்கிறது.
இதனாலேயே இதை “பரமஹம்ஸ ஸம்ஹிதை” என்று பெயர் பெற்றது. இதை வேதவியாஸர் இயற்றிய காரணம்,
இதை வெளியிட்டதனால் அவருக்குண்டான சாந்தியையும் இதை அப்யஸித்து ஆனந்தித்த
சுக பிரம்மத்தின் பெருமையும், மரணவாயில் சிக்கிய பரிக்ஷித்தை இது கரையேற்றிய விதம் என்பவற்றை
ஆராய்வோருக்கு இதன் மேன்மைவிளங்கும்.
இப்புராணத்தில் சரமாரியாய் பலவிடத்தும் ஸாத்வீகதாமஸ தேவதை பற்றி பேசுகிறது.

ஸத்வம் ரஜஸ தம இதி ப்ராக்ருதோ குணஸ தைா யுகத பர புருஷ ஏக இஹாஸய தததே|
ஸதிதயாதயே ஹரிவிரிஞ்சி ஹரேதி ஸமஜ்ஞாம ஸ்ரேயாமஸி ததர கலு ஸத்வதநோ நருணம ஸயு||

ஸத்வம், ராஜஸம், தாமஸம் என்பவை ப்ரக்ருதியின் குணங்கள். இந்த மூன்று குணங்களோடு கூடிய பரமபுருஷன் ஒருவனே.
ரக்ஷணம், ஸ்ருஷ்டி, ஸம்ஹாரம் எனும் காரியங்களுக்காக ஹரி, பிரமன், ஹரன் எனும் பெயர்களை அடைகிறான்.
அவர்களுள் ஸத்வகுணமுடைய ஹரியிடத்தே நன்மையுண்டாகும். என்று ஸத்வ குணமுள்ளவன் ஹரியே என காட்டப்பட்டுள்ளது.

பேஜிரே முந்யோ தாகரே பகவந்தமதோக்ஷஜம|ஸத்வம் விஸுததம க்ஷேமாய கல்பந்தேயேநு தாஹிந||
முமுக்ஷவோ கோரரூபாந ஹிதவா பூதபதீநத |நாராயணகலா ஸாந்தா பஜநதி ஹயநஸுயவ||
ரஜஸ்தம ப்ரருக்தய ஸமஸீலாந பஜநதி வை|பித்ருபூதபரஜேஸாதீந ஸ்ரீயைஸவாயபரஜேபஸவ||

ஆதிகாலத்தில் முனிவாசர்கள் ஸத்வகுணதிருமேனியுடையவனும் பரிசுத்த பகவானுமான புருஷோத்தமனை பூஜித்தனர்.
அவர்களை அனுஸரித்து அவர்களை பூஜிப்பவர்கள் நன்மையடைபவர்கள், மோக்ஷத்தையடைவர்.
கோரமான உருவமுடைய பூதகணங்களுக்கு தலைவனாக இருக்கும் ருத்ராதிகளை விட்டு துவேஷமற்றவர்களாய்
சாந்தியோடு கூடிய நாராயணரை உபாஸிக்கிறனர். ரஜோகுணம், தமோகுணமுடையவர்கள் அதே குணங்களையுடைய
பித்ருக்களையும் பூதகணங்களுக்கு தலைவர்களான ருத்ராதிகள் பிரமன் முதலான ப்ரஜாபதிகள் வரையும் விரும்பி உபாஸிக்கின்றனர் .
என்று ஸத்வ குண திருமேனியையுடைய நாராயணரையும் தாமஸகுணமுடைய சிவனையும் காட்டித் தந்தது.

சிவ ஸக்தியுகத ஸஸ்வத த்ரிலிங்கோ குணஸம்வருத|ஹரி ஹி நிர்க்குண ஸாக்ஷாத புருஷ ப்ரக்ருதே பர ||

பார்வதியேிடு கூடிய சிவன் எப்போதும் ஸாத்வீகராஜஸதாமஸ ஹங்காரத்திற்கு
வசப்பட்டவன். தமோகுணமுடையவன். ஹரியோ எனில் முக்குணங்களுமற்றவன், ப்ரகருதிக்கு மேற்பட்ட புருஷன் அவனே.
இவ்வாறு நூற்றுகணக்கான இடங்களில் பகவானின் திருமேனி ஸாத்வீகமயமானது, தமோகுணம் லேசமும் அற்றதென உத்கோஷிக்கின்றன.

—————————–

பத்மபுராண நிர்ணயம்

ப்ருகு மஹரிஷி ஸாத்வீகபரம்பொருள் யார் என்பதையறிய மூவுலகம் சென்றுமுடிவெடுத்த விஷயம்
பாகவத, பத்ம, நாரதீய புராணங்களில் பேசப்படுகிறது. பத்மபுராண உத்தரகாண்டத்தில்
இருநூற்று ஐம்பத்தைந்தாவது அதிகாரத்தில் இவ்விஷயம் விவரிக்கப்பட்டுள்ளது.

—————-

ஸ்ரீராமாயண நிர்ணயம்
இதிஹாசங்களின் இருகண்களாக ஸ்ரீ ராமாயணமும் மஹாபாரதமும் திகழ்கிறது.
அவ்விரண்டிலும் ராமாயணம் பலவிதங்களில் உயர்ந்தது. வேதத்தின் அவதாரமாக கீர்த்தி பெற்றது.
வைதீகர்கள் அனைவராலும் கொண்டாடப்பெறுவது. அதிலே பரமபுருஷனின் அவதாரமான ராமலக்ஷமணர்கள் பற்றி பேசும்போது

‘தவம் புத்தி ஸஸ்தவம் க்ஷமாதமா'(யுத்தகாண்டம் 120:16)
‘தீர்க்க பாஹூம்மஹாஸ்தவம்'(அயோத்யாகாண்டம் 3:28)
‘ஸத்வயுகதா ஹி புருஷாஸ த்விதா புருஷாஷப அவிமருஸ்ய ந ரோஷஸய ஸஹஸா யாநதி வஸ்யதாம்(கிஷ்கிந்தாகாண்டம்35:11)
ஸத்வ குணமுள்ள முன் போன்றவர்களுக்கு விசாரியாமல் சடக்கென்று கோப வசப்பட மாட்டார்கள்.
“ஸாதுரோகவிநிர்மித”(அயோத்யாகாண்டம்1:18)
ராமஸஸதபுருஷோலோகே” (அயோத்யாகாண்டம்2:29)

‘ஸ ச சர்வகுணோபேத(பாலகாண்டம்1:7)
‘ஸ்ரேஷ்டகுணாயுத(அயோத்யாகாண்டம்1:31)
‘பஹவோ நரூக கல்யாண குண புத்ரஸ்ய ஸநதிதே(அயோத்யாகாண்டம்2:26)
‘தாதூநாமிவ ஸைலேந்தரோகுணநாமாகரோமஹாந'(கிஷ்கிந்தாகாண்டம்15:21)
சிறந்த மலைத்தாதுகளுக்கு இருப்பிடம் போல நற்குணங்களுக்கு பெருநிதியாய் இருப்பவன் இராமன்
என ஸத்வகுணத்திற்கு சான்று பகிர்கின்றது.

———————-

மஹாபாரத நிர்ணயம்

‘பாரதம் பஞ்சமோ வேத’ என புகழப்படும் ஐந்தாம் வேதமாகிய மஹாபாரதத்திலும் இவ்விஷயம் பேசப்பட்டுள்ளது.
ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் ‘ஸத்வவாந ஸாத்விக’ என்றும்
‘ஸத்வஸ்த’ என்றும் நிருநாமங்கள் படிக்கப்படுகின்றன.
இவ்விடங்களுக்கு பாஷ்யமிட்ட ஆதிசங்கரரும், ஸத்வகுணத்தை ப்ரதானமாக அதிஷ்டித்து நிற்பவன் என்றார்.

‘ஸத்வம் வஹதி ஸூததாதமா தேவம் நாராயணம் ப்ரபும்’ (சாந்திபர்வம்307-77)
சுத்த ஸ்வரூபமான ஸத்வம் ஸர்வஸ்யாமிய் நிர்மலமானவனான நாராயணனை அடைவிக்கிறது என்று
நாராயணனை ஸத்வநிஷ்ட பராபயனாக அநுஸநித்தது.

‘ஜாயமாநம ஹி புருஷம் யம பஸ்யேன மதுஸூதன;ஸாத்விக ஸ து விஜஞேய ஸ வை மோக்ஷார்த்த சிந்தக
பஸ்யத்யேநம ஜாயமாநம ப்ரஹ்மா ருத்ரோத்வா புந;ரஜஸா தமஸா சாஸ்ய மாநஸம் ஸம்பிபலுதம'(சாந்தி பர்வம் 358-73, 77)

பிறக்கும்போது ஒரு குழந்தையை மதுஸூதனன் கடாக்ஷித்தானினால் அவனே ஸாத்வீகனானான்.
அவனே மோக் ஷபுருஷார்தத்தைப் பற்றி சிந்திப்பான்;பிறக்கும் போது இவனை பிரமனாவது உருத்திரனாவது பார்த்தாராகில்
ரஜோ குணத்தாலும் தமோ குணத்தாலும் இவன் மனம் கலங்கி நிற்கும் என பகவான் ஸத்வ பரவர்தகனாகிறபடியையும்
ப்ரஹ்ம ருத்ரர்கள் ரஜஸதம பரவர்த்தகனாகிறபடியைைும் அதிஸ்பஷ்டமாக அறிவித்தருளினார் வியாசர்.

ஆக இதிஹாசங்களும் ஸாத்வீகதேவதை விஷ்ணுவே என்பதும் தாமஸ தேவதை ருத்ரனே என்பதும் நிர்ணயிக்கப்பட்டது.

———————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading