ஸ்ரீ சப்த கிரி / ஒரே சுலோகத்தில் அமைந்த ஸ்ரீ இராமாயணம்-

ஸ்ரீ சப்த கிரி

ஏழுமலையின் பெயர்கள்:
ஸ்ரீ கருடாத்ரி,
ஸ்ரீ விருஷபாத்ரி,
ஸ்ரீ அஞ்சனாத்ரி,
ஸ்ரீ நீலாத்ரி,
ஸ்ரீ சேஷாத்ரி,
ஸ்ரீ வேங்கடாத்ரி,
ஸ்ரீ நாராயணாத்ரி

ஸ்ரீ நீலாத்ரி

நீலப் பெருவரையை மேவும் நெடுமாலை,
மூலப் பொருளை, முழுமையினை- கோலத்
துளப மணி மார்பின் தூயோனை, நெஞ்சில்
உளனை ஒருவனையே நம்பு.

ஸ்ரீ அஞ்சனாத்ரி:

மைக் குன்றம் கொண்டானை, மாசு மனத்தகத்தே
பொய்கின்ற வாறு புரிந்தானை – மெய்க்கென்றும்
வித்தாகி நின்றானை வேங்கடத்து மாமணியை
எத்தாலும் நெஞ்சமே ஏத்து.

ஸ்ரீ கருடாத்ரி:

பருந்தின் வரை யுடையான் பாவனனெம் நெஞ்சில்
இருந்து நிறைந்த இயல்பில் – பொருந்தி யாம்
அற்றேம் மனப் பிணிகள், உற்றேமே
இன்பமெலாம் பெற்றேரும் பெறற்கரிய பேறு.

ஸ்ரீ சேஷாத்ரி:

பார் தாங்கும் பாந்தள் பெரு நாகத் துற்றானைச்
சார்வாரைத் துன்பங்கள் சாராவாம் – சீர் பெற்றிம் மண்ணிலுறை
வானோர் போல் வாழ்வாராம் மா நிலத்தீர்
உண்மையிது கேளீர் உவந்து.

ஸ்ரீ வ்ருஷ பாத்ரி:

இடபப் பெருமலையில் ஏறியவர்க்கு (உ)ண்டோ
இடரும் பிறவித் தொடரும் – சுடரும்
திருவாழி கைக் கொண்ட தெய்வத்தைப்
பற்றீர் பெரு வாழ்வு பெற்றீர் பெரிது.

ஸ்ரீ வேங்கடாத்ரி:

வேங்கடவன் நாமம் விளங்கு திருமலையில்
ஓங்கு புகழ் தேங்கு முயர் பதியி – னூங்கு
திருவும் எழிலுடனும் தெய்வீகமும்
சேரும் ஒரு பதியும் உண்டோ உரை.

ஸ்ரீ நாராயணாத்ரி:

நாரணனின் நாமம் நமைக் காத்துப் பொய்யுறவு
தீருமுழி உய்க்கும் திகழ் தருமால் – பாருளீர்
கள்ளச் சகடம் கடிந்தானைப் போற்றுமினோ
உள்ளம் நிலைபேறு (உ)றற்கு.

ஸ்ரீ தசாவதார வந்தனம்:

வேதங்கள் காத்து வியனுலகைத் தாங்கி யொரு
பாதகனைக் கொன்றடக்கிப் பாரளந்து – தீதழிய
வில்லும் மழுவும் உழு படையும் நேமியொடு
தொல் வாள் எடுத்தான் துணை.

———-

ஒரே சுலோகத்தில் அமைந்த ஸ்ரீ இராமாயணம்

ஆதௌ ராம தபோவனாதி கமனம் ஹத்வா ம்ருகம் காஞ்சனம்
வைதேஹி ஹரணம் ஜடாயு மரணம் சுக்ரீவ ஸம்பாஷனம்
வாலி நிக்ரஹனம் சமுத்ர தரணம் லங்காபுரி தஹனம்
பஸ்சாத் ராவண கும்பகர்ண ஹரணம் ஏததி ராமாயணம்

ஆதௌ ராம தபோவனாதி கமனம் – ஸ்ரீ இராமன் தபோவனங்களுக்குச் செல்வதும்
ஹத்வா ம்ருகம் காஞ்சனம் – பொன்மானைக் கொல்வதும்
வைதேஹி ஹரணம் – ஸ்ரீ சீதை கடத்தப்படுவதும்
ஜடாயு மரணம் – ஸ்ரீ ஜடாயு காலமாவதும்
ஸூக்ரீவ ஸம்பாஷனம் – ஸ்ரீ ஸூக்ரீவனுடன் நட்பு கொண்டு ஆலோசிப்பதும்
வாலி நிக்ரஹனம் – வாலியைக் கொல்வதும்
சமுத்ர தரணம் – கடலைக் கடப்பதும்
லங்காபுரி தஹனம் – இலங்கையை எரிப்பதும்
பஸ்சாத் – பின்னர்
ராவண கும்பகர்ண ஹரணம் – இராவண கும்பகருணர்களை அழிப்பதும்
ஏததி ராமாயணம் – இவையே ஸ்ரீ இராமாயணம்!

இதை தினமும் பாராயணம் செய்தால் ஸ்ரீ ராமாயணம் முழுவதும் படித்த பலனைப் பெறலாம்.
எல்லா காரியங்களிலும் வெற்றி கிட்டும்.

‘ஸ்ரீராமம் ரகுகுல திலகம்
சிவதனுசாக்ருஹீத சீதா ஹஸ்த கரம்
அங்குல் யாபரண சோபிதம்
ஸ்ரீ சூடாமணி தர்ஸன கரம்
ஸ்ரீ ஆஞ்சநேயம் ஆஸ்ரயம்
ஸ்ரீ வைதேஹி மனோகரம்
வானர ஸைன்ய ஸேவிதம்
சர்வ மங்கல கார்யானுகூலம்
சத்தம் ஸ்ரீராமசந்த்ரம் பாலயமாம்.

—————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading