ஸ்ரீ ஆஞ்சநேய கவசம்–ஸ்ரீ ஹனுமத் பஞ்சரத்னம்–

ஸ்ரீ ஆஞ்சநேய கவசம்

அஸ்யஸ்ரீ ஹனுமத் கவச ஸ்தோத்ர மஹாமந்த்ரஸ்ய
ஸ்ரீ ராமசந்த்ர ருஷி: காய்த்ரிச் சந்த: ஸ்ரீ ஹனுமான்
பரமாத்மா தேவதாமி மாருதாத்மஜ இதி பீஜம்மி அஞ்ஜ
னா ஸுனுரிதி சக்தி:மி ஸ்ரீ ராம தூத இதி கீலகம்மி மம
மானஸா பீஷ்ட ஸத்யர்த்தே ஜபே விநியோக:

எல்லா கவசங்களுக்கும் அதற்கான ருஷி, அது என்ன சந்தசில் உள்ளது,
அதன் பீஜம் சகதி கீலகம் ஆகியவை கூறப்படும். அதுவே இங்கு கூறப்பட்டுள்ளன.
இது செயல்முறை விளக்கம் மட்டுமே. தொடர்வதே துதி…

ஸ்ரீ ராமசந்த்ர உவாச

ஸ்ரீ ஹனுமான் பூர்வத: பாது தஷிணே பவனாத்மஜ:
ப்ரதீச்யாம் பாதுரக்ஷோக்ன: சௌம்யாம் சாகரதாரண:

ஸ்ரீ அனுமன் என்னை கிழக்கு திக்கில் காக்கட்டும். தெற்கு திசையில் ஸ்ரீ வாயு புத்ரன் ரட்சிக்கட்டும்.
மேற்கு திக்கில் ராட்சதர்களை நாசம் செய்யும் ஸ்ரீ அனுமன் ரட்சிக்கட்டும்.
சமுத்தி ரத்தைத் தாண்டிய ஸ்ரீ ஹனுமான் வடக்கு திக்கில் என்னைக் காத்திடட்டும்.

ஊர்த்வம் மே கேஸரி பாது விஷ்ணு பக்தஸ்து மேஹ்யத:
லங்காவிதாஹக: பாது ஸர்வாபத்ப்யோ நிரந்தரம்

ஸ்ரீ கேசரியின் மைந்தன் என்னை ஆகாயத்தில் காக்கட்டும்.
ஸ்ரீ விஷ்ணு பக்தியுள்ள ஸ்ரீ அனுமன் என்னை கீழ்பாகத்தில் ரட்சிக்கட்டும்.
இலங் கையை எரித்தவர் சர்வ ஆபத்துகளிலிருந்தும் என்னை எப்பொழுதும் காக்கட்டும்.

ஸுக்ரீவ ஸ சிவ: பாது மஸ்தகே வாயு நந்தன:
பாலம் பாது மஹா வீரா: ப்ருவோர் மத்யே நிரந்தரம்

ஸ்ரீ சுக்ரீவனின் மந்திரியானவர் என் தலையை ரட்சிக்கட்டும்.
ஸ்ரீ வாயு புத்ரர் எனது நெற்றியினைக் காத்திடட்டும்.
மகா வீரர் எனது புருவங்களின் நடுப் பகுதியைக் காக்கட்டும்.

நேத்ரோ சாயாபஹாரிச பாதுமாம் ப்லவகேஸ்வர:
கபோலௌ கர்ணமூலேது பாதுமே ராமகிங்கர:

சாயாக்ரஹி என்னும் அரக்கியைக் கொன்ற ஸ்ரீ அனுமன், எனது கண்களை காக்கட்டும்.
வானரங்களின் தலைவர் என்து கன்னங்களைக் காக்கட்டும்.
ஸ்ரீராமதூதன் எனது காதுகளின் கீழ்ப்பகுதியைக் காக்கட்டும்.

நாஸாயாம் அஞ்சனாஸுனு: பாதுவக்தரம் ஹரீச்வர:
பாது கண்டஞ்ச தைத்யாரி: ஸ்கந்தௌ பாதுஸுரார்சித:

ஸ்ரீஅஞ்சனாகுமாரர் எனது மூக்கைக் காக்கட்டும்.
ஸ்ரீ வானராதிபர் எனது முகத்தைக் காக்கட்டும்.
அசுரர்களின் பகைவர் எனது கழுத்தை ரட்சிக்கட்டும்.
தேவர்களால் பூஜிக்கப்படுபவர் எனது தோள்களை ரட்சிக்க வேண்டும்.

புஜௌ பாது மஹா தேஜா: கரௌது சரணாயுத:
நகான் நகாயுத: பாதுகுசெஷள பாது கபீஸ்வர:

ஒளி பொருந்திய தேகத்தை உடையவர் எனது தோள்களைக் காக்கட்டும்.
கால்களை ஆதாரமாகக் கொண்டவர் எனது கால்களைக் காக்கட்டும்.
நகங்களை ஆயுதமாகக் கொண்டவர் எனது நகங்களைக் காக்கட்டும்.
வானரர்களுக்குத் தலைவர் எனது வயிறைக் காக்கட்டும்.

வக்ஷௌ முத்ராபஹாரிச பாது பார்ச்வே மஹாபுஜ:
ஸீதா சோக ப்ரஹர்தாச ஸ்தனௌ பாது நிரந்தரம்

ஸ்ரீ ராமனின் ஸ்ரீ கணையாழியை (ஸ்ரீ மோதிரம்) எடுத்துச் சென்றவர் எனது மார்பைக் காக்கட்டும்.
பெரும் கைகளையுடையவர் எனது இரு பக்கங்களையும் காக்கட்டும்.
ஸ்ரீ சீதையின் துயரத்தை அடியோடு போக்கியவர் எனது ஸ்தனங்களை எப்பொழுதும் காக்கட்டும்.

லங்காபயங்கர: பாதுப்ருஷ்ட தேஸே நிரந்தரம்:
நாபிம் ஸ்ரீராமசந்த்ரோ மே கடிம் பாது ஸமீரஜ:

இலங்கைக்கு பயத்தை அளித்தவர் எனது பின்பாகத்தைக் காக்கட்டும்.
ஸ்ரீராமசந்திர தூதன் எனது தொப்புளைக் காக்கட்டும்.
ஸ்ரீ வாயுபுத்ரன் எனது இடுப்பைக் காக்கட்டும்.

குஹ்யம் பாது மஹா ப்ராக்ஞ: ஸக்தீனீ ச சிவ ப்ரிய:
ஊரூச ஜானுனீ பாது லங்கா ப்ராஸத பஜ்ஜன

மேதாவியான, சகலவேத ஆகமம் யாவும் கற்று சகல சாஸ்திர பண்டிதனான ஸ்ரீ அனுமன் எனது
மர்மப் பிரதேசத்தைக் காக்கட்டும். ஸ்ரீ சிவபக்தரான ஸ்ரீ ஹனுமன் எனது தொடையின் சக்திகளைக் காக்கட்டும்.
எனது தொடைகளையும் முழங்கால்களையும் லங்காபுரியின் உப்பரிகைகளை உடைத்தவர் காக்கட்டும்.

ஜங்கே பாதுகபி ஸ்ரேஷ்ட: குல்பம் பாது மஹாபல:
அசலோத்தாரக பாது பாதௌ பஸ்கர ஸன்னிப:

எனது ஆடுசதையினை ஸ்ரீ வானர உத்தமர் காக்கட்டும்.
மிகுந்த பலசாலி எனது கணுக்கால் களைக் காக்கட்டும்.
சூரியனுக்கு ஒப்பானவரும், சஞ்சீவி பர்வதத்தைத் தூக்கி வந்தவருமான ஸ்ரீ அனுமன் எனது கால்களைக் காக்கட்டும்.

அங்கான்யமித ஸத்வாட்ய: பாது பாதாங்குளிஸ்ஸதா
ஸர்வாங்கானி மஹாசூர: பாது ரோமானி ச ஆத்மவான்

அளவில்லாத பலம் மிக்கவர் எனது அங்கங் களையும் கால் விரல்களையும் எப்பொழுதும் காக்க வேண்டும்.
மகாசூரர் எனது எல்லா அங்கங்களையும் காக்கட்டும். மனதை அடக்கியவர் எனது ரோமங்களைக் காக்கட்டும்.

ஹனுமத் கவசம் யஸ்து படேத் வித்வான் விசக்ஷண:
ஸ ஏவ புருஷஸ்ரேஷ்ட: புக்தி முக்திஞ்ச விந்ததி

எந்த பக்தன் ஸ்ரீ ஹனுமானின் இந்தக் கவசத்தைத் தரிப்பானோ, அவனே மனிதர்களுக்குள் சிறந்தவன்.
போகங்களையும் மோட்சத்தையும் அடைவான். அவன் சிறந்த அறிவாளியாகத் திகழ்வான்.
(இதைப்படிப்பது கவசம் அணிவது போலாகும்)

த்ரிகாலமேக காலம் வா படேன் மாஸத்ரயம்நர:
ஸர்வான் ரிபூன் க்ஷணாஜ்ஜித்வா ஸ புமான் ஸரிய மாப்னுயாத்

மூன்று மாத காலம் தினம் மூன்று முறையோ அல்லது ஒரு முறையோ ஒரு பக்தன் படிப்பானே யாகில்,
அவன் எல்லா சத்ருக்களையும் ஒரு கணத்தில் ஜெயித்து ஸ்ரீ லட்சுமிகரமாகிறான்.
சகல செல்வங்களும் அவனைத் தேடி வருகிறது.

அர்தராத்ரௌ ஜலேஸ்தித்வா ஸப்தவாரம் படேத்யதி
க்ஷயா பஸ்மாரகுஷ்டாதி தாபத்ரய நிவா ரணம்

நள்ளிரவில் நீரில் அசையாமல் நின்று ஏழு தடவை ஜபித்தால் நோய்கள், தீவினைகள், பாவங்கள்,
தாபத்ரயங்கள் என யாவும் நீங்கும்.

அஸ்வத்தமூலேர் கவார்ஸ்தித்வா படதியர்புமான்
அசலாமி ஸ்ரிய மாப் னோதி ஸங்க்ராமே விஜயீபவேத்

ஞாயிற்றுக்கிழமையன்று அரசமரத்தடியில் நின்று, இத்துதியைச் சொல்பவன்
சகல காரியங் களிலும் ஜெயிப்பான். எதிரிகளை தோற்கடிப்பான்.

ஸர்வரோகா: க்ஷயம் யாந்தி ஸர்வ ஸித்திப்ரதாயகம்
ய: கரே தாரயேந்நித்யம் ராமரக்ஷா ஸமன்விதம்

ஸ்ரீ ராமரட்சையுடன் கூடிய ரட்சயை இந்த ஸ்ரீ அனுமன் கவசத்தைச் சொல்லி எவரொருவர் தரித்துக் கொள்வாரோ
அவருக்கு வியாதிகள் யாவும் நீங்கும். எல்லா காரிய சித்தியும் ஏற்படும்.

ஸ்ரீ ராமரக்ஷாம் படேத் யஸ்து ஹனுமத் கவசம் வினா
அரண்யேருதிதம் தேன ஸ்தோத்ர பாடஞ்ச நிஷ்பலம்

ஸ்ரீ ராம ரட்சை என்பதை ஹனுமத் கவசத்துடன் சேர்ந்து படிப்பது தான் சிறந்தது.
இது இல்லாமல் அதை மட்டும் படிப்பது அத்வானக் காட்டு அழுகை போல பலனில்லாது போகும். `
அரண்யேருதிதம்’ என்றால் அடர்ந்த காட்டின் நடுவே பிரலாபிப்பது. அதாவது பயன் தராத அரற்றல், அலம்பல்.

ஸர்வது: கபயம் நாஸ்தி ஸர்வத்ர விஜயீபவேத்
அஹோராத்ரம் படேத்யஸ்து ஸுசிப்ரயத மானஸ:
முச்யதே நாத்ரஸந்தேஹ காராகிருஹகதோ நர:
பாபோப பாதகான் மர்த்ய: முச்ய தே நாத்ரஸம்ஸய:

எல்லா துக்கமும் அழியும். எங்கும் எதிலும் வெற்றி. தூய்மையான மனதுடன் சுத்தமாக
ஒரு நாள் பகல் தொடங்கி மறுநாள் பகல் வரை விடாமல் இந்தக் கவசத்தைப் படித்தால்
சிறைவாசம் நிச்சயம் நீங்கும். இதில் சந்தேகமே யில்லை.
மகாபாதகங்கள், உபபாதகங்கள் யாவும் நீங்கும் என்பதில் ஐயமில்லை.

யோவாரந்நிதி மல்பபல்வல மிவோல்லங்கய ப்ரகாபான் வித
வைதேஹிகன ஸோக தாபஹரணோ வைகுண்ட பதி ப்ரிய:
அக்ஷக்னோஜித ராக்ஷஸேஸ்வர மஹாதர்பா பஹாரிணே
ஸோயம் வானரபுங்கவோ அவது ஸதாத்வஸ்மான் ஸமீராத் மஜ

எந்த ஸ்ரீ அனுமன் மிகுந்த ஆற்றல் கொண்டு பெரும் கடலையே சின்ன குட்டையைத் தாண்டுவது போல் தாண்டி
ஸ்ரீ சீதாதேவிக்கு மிகுந்த சோகத்தால் ஏற்பட்ட தாபத்தைப் போக்கினாரோ,
ஸ்ரீ வைகுண்டநாதரான ஸ்ரீ ராமனிடத்தில் பக்தி கொண்டாரோ, அக்ஷய குமாரனை வதம் செய்தாரோ,
யுத்தத்தில் ஜயிக்கப்பட்ட ராட்சசனான ராவணனுடைய அபரிமிதமான கர்வத்தை அடக் கினாரோ,
அப்படிப்பட்ட ஸ்ரீ வாயு குமாரனும் வானர சிரேஷ்டருமான ஸ்ரீ ஹனுமான் எப்பொழுதும் நம்மை காக்கட்டும்.

ஸ்ரீ ஆஞ்சநேய கவசம் நிறைந்தது

————

ஸ்ரீ ஹனுமத் பஞ்ச ரத்னம்

வீதாகில விஷயேச்சம் ஜாதானந்தாஸ்ரு புலகமத்யச்சம்
ஸீதாபதி தூதாத்யம் வாதாத் மஜமத்ய பாவயே ஹ்ருத்யம்

எல்லாவிதமான விஷய அனுபவங்களைக் கொண்டவரும், ஆனந்தக் கண்ணீர், மயிர்க்கூச்சல் ஆகிய வற்றை அடைந்தவரும்,
சுத்தமான மனம் கொண்டவரும், ஸ்ரீராம தூதர்களில் முதன்மையானவரும், தியானம் செய்யத் தக்கவரும்,
ஸ்ரீ வாயு குமாரனுமான ஸ்ரீ ஹனுமனை தியானிக்கிறேன்.

தருணாருண முககமலம் கருணாரஸ பூரபூரிதா பாங்கம்
ஸஞ்சீவன மாஸாஸே மஞ்சுல மஹிமான மஞ்ஜனா பாக்யம்

பால சூரியனுக்கு ஒப்பான முகக் கமலத்தைக் கொண்டவரும், கருணையாகிய நீர்ப் பிரவாகத்தால் நிறைந்த
கண்களைக் கொண்டவரும், ஔஷதி பர்வதத்தைக் கொண்டு வந்து யுத்தத்தில் இறந்த வானரர்களைப்
பிழைக்கும்படி செய்தவரும், புகழத் தக்க மகிமை உள்ளவரும்,
ஸ்ரீ அஞ்சனாதேவியின் புண்ணிய பலனுமானவருமான ஸ்ரீ ஹனுமனைத் தரிசிக்க விரும்புகிறேன்.

ஸும்பரவைரி ஸராதிகமம் புஜதள விபுல லோசனோதாரம்
கம்புகளமநில திஷ்டம் பிம்ப ஜ்வலிதோஷ்ட மேகமவலம்பே

மன்மத பாணத்தைக் கடந்தவரும், தாமரை தளம் போல் அகன்ற கண்களால் அழகு பொருந்தியவரும்,
சங்கு போன்ற கழுத்தைக் கொண்டவரும், ஸ்ரீ வாயுதேவரின் பாக்கிய பூதருமான
ஸ்ரீ ஹனுமனைச் சரணம் அடைகிறேன்.

தூரீக்ருத ஸீதார்த்தி: ப்ரகடீ க்ருத ராமவைபவஸ் பூர்த்தி:
தாரிததஸ முககீர்த்தி: புரதோ மம பாது ஹனுமதோ மூர்த்தி

ஸ்ரீ சீதையின் கஷ்டங்களை வெகு தூரத்தில் விலக்கியதும், ஸ்ரீராம மகிமையின் நினைவை வெளியிடுவதும்,
ராவணனுடைய கீர்த்தியைப் பிளந்ததுமான ஸ்ரீ ஹனுமனின் சரீரம் எனக்கு முன்னால் தோன்றட்டும்.

வானரநிகராத் யக்ஷம் தானவ குல குமுதரவிகர ஸத்ருஸம்
தீன ஜனவன தீக்ஷம் பவனதப: பாக புஞ்ஜமத்ராக்ஷம்

வானரர்களின் கூட்டத்துக்குத் தலைவரும், ராட்சதர்களின் வம்சமாகிய ஆம்பல் புஷ்பத்துக்கு
சூரிய கிரணம் போல் இருப்பவரும், ராட்சத குலத்தை அழித்தவரும், துக்கம் அடைந்தவர்களை
ரட்சிப்பதில் உறுதி கொண்டவரும், ஸ்ரீ வாயு தேவனின் தவப்பயனாக இருப்பவருமான
ஸ்ரீ ஹனுமனை நேரில் தரிசித்தேன்.

ஏதத் பவன ஸுதஸ்ய ஸ்தோத்ரம் ய: படதி பஞ்சரத்னாக்யம்
சிரமிஹ நிகிலான் போகான் புக்த்வா ஸ்ரீ ராமபக்தி பாக்பவதி

———–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading