ஸ்ரீ மத் பாகவதம் -ஸ்கந்தம்-3-அத்யாயம் -30-ஸ்ரீ கபில முனிவர் உபதேசம் -சேதனர்களின் சம்சார சாகர அல்ப நிலை–அத்தியாயங்கள் 31-32- —

அத்தியாயம் 30
பொருள், சொத்து முதலியவற்றில் மோகம் கொண்ட மனிதன் விஷய சுகங்கள் நித்தியம் என்றெண்ணி காலம் எல்லாவற்றையும் ஒருநாள் கொண்டு செல்லும் என்று அறிவதில்லை. பல பிறவி எடுத்தும் பல யோனிகளில் பிறந்தும் ஆசை அடங்குவதில்லை.

நரகத்தில் இருப்பினும் புருஷன் சரீரத்தை விடுவதற்கு விரும்புவதில்லை. நரகமும் சுவர்க்கமும் இந்த உலகிலேயே உள்ளன என்று சொல்லலாம். ஏனென்றால் இங்கும் நரக வேதனை அனுபவிக்கப்படுகிறது அல்லவா?

பிராணிகளுக்கு துரோகம் செய்து எந்த உடலானது வளர்க்கப்பட்டதோ அப்படிப்பட்ட உடலைவிட்டு, பாப கர்மத்தை மட்டும் மூட்டை கட்டிக்கொண்டு நரகத்தை அடைகிறான். பல ஜன்மங்கள் கீழ்ப்பட்ட நிலைகளிலும் பிறவிகளிலும் கஷ்டங்களை அனுபவித்து தன்னுடைய பாவம் தீர்ந்த பின் மறுபடி மனித ஜன்மம் அடைகிறான்.

அடுத்த அத்தியாயம் மனிதப்பிறவி கருவடைவதில் இருந்து வர்ணிக்கிறது.

——————-

கபில உவாச
தஸ்யைதஸ்ய ஜனோ நூனம்ʼ நாயம்ʼ வேதோ³ருவிக்ரமம் .
கால்யமானோ(அ)பி ப³லினோ வாயோரிவ க⁴னாவலி꞉ .. 1..

யம்ʼ யமர்த²முபாத³த்தே து³꞉கே²ன ஸுக²ஹேதவே .
தம்ʼ தம்ʼ து⁴னோதி ப⁴க³வான் புமான் ஶோசதி யத்க்ருʼதே .. 2..

யத³த்⁴ருவஸ்ய தே³ஹஸ்ய ஸானுப³ந்த⁴ஸ்ய து³ர்மதி꞉ .
த்⁴ருவாணி மன்யதே மோஹாத்³க்³ருʼஹக்ஷேத்ரவஸூனி ச .. 3..

ஜந்துர்வை ப⁴வ ஏதஸ்மின் யாம்ʼ யாம்ʼ யோனிமனுவ்ரஜேத் .
தஸ்யாம்ʼ தஸ்யாம்ʼ ஸ லப⁴தே நிர்வ்ருʼதிம்ʼ ந விரஜ்யதே .. 4..

நரகஸ்தோ²(அ)பி தே³ஹம்ʼ வை ந புமாம்ʼஸ்த்யக்துமிச்ச²தி .
நாரக்யாம்ʼ நிர்வ்ருʼதௌ ஸத்யாம்ʼ தே³வமாயாவிமோஹித꞉ .. 5..

ஆத்மஜாயாஸுதாகா³ரபஶுத்³ரவிணப³ந்து⁴ஷு .
நிரூட⁴மூலஹ்ருʼத³ய ஆத்மானம்ʼ ப³ஹு மன்யதே .. 6..

ஸந்த³ஹ்யமானஸர்வாங்க³ ஏஷாமுத்³வஹனாதி⁴னா .
கரோத்யவிரதம்ʼ மூடோ⁴ து³ரிதானி து³ராஶய꞉ .. 7..

ஆக்ஷிப்தாத்மேந்த்³ரிய꞉ ஸ்த்ரீணாமஸதீனாம்ʼ ச மாயயா .
ரஹோ ரசிதயா(ஆ)லாபை꞉ ஶிஶூனாம்ʼ கலபா⁴ஷிணாம் .. 8..

க்³ருʼஹேஷு கூடத⁴ர்மேஷு து³꞉க²தந்த்ரேஷ்வதந்த்³ரித꞉ .
குர்வன் து³꞉க²ப்ரதீகாரம்ʼ ஸுக²வன்மன்யதே க்³ருʼஹீ .. 9..

அர்தை²ராபாதி³தைர்கு³ர்வ்யா ஹிம்ʼஸயேதஸ்ததஶ்ச தான் .
புஷ்ணாதி யேஷாம்ʼ போஷேண ஶேஷபு⁴க்³யாத்யத⁴꞉ ஸ்வயம் .. 10..

வார்தாயாம்ʼ லுப்யமானாயாமாரப்³தா⁴யாம்ʼ புன꞉ புன꞉ .
லோபா⁴பி⁴பூ⁴தோ நி꞉ஸத்த்வ꞉ பரார்தே² குருதே ஸ்ப்ருʼஹாம் .. 11..

குடும்ப³ப⁴ரணாகல்போ மந்த³பா⁴க்³யோ வ்ருʼதோ²த்³யம꞉ .
ஶ்ரியா விஹீன꞉ க்ருʼபணோ த்⁴யாயன் ஶ்வஸிதி மூட⁴தீ⁴꞉ .. 12..

ஏவம்ʼ ஸ்வப⁴ரணாகல்பம்ʼ தத்கலத்ராத³யஸ்ததா² .
நாத்³ரியந்தே யதா²பூர்வம்ʼ கீநாஶா இவ கோ³ஜரம் .. 13..

தத்ராப்யஜாதநிர்வேதோ³ ப்⁴ரியமாண꞉ ஸ்வயம்ப்⁴ருʼதை꞉ .
ஜரயோபாத்தவைரூப்யோ மரணாபி⁴முகோ² க்³ருʼஹே .. 14..

ஆஸ்தே(அ)வமத்யோபன்யஸ்தம்ʼ க்³ருʼஹபால இவாஹரன் .
ஆமயாவ்யப்ரதீ³ப்தாக்³நிரல்பாஹாரோ(அ)ல்பசேஷ்டித꞉ .. 15..

வாயுனோத்க்ரமதோத்தார꞉ கப²ஸம்ʼருத்³த⁴னாடி³க꞉ .
காஸஶ்வாஸக்ருʼதாயாஸ꞉ கண்டே² கு⁴ரகு⁴ராயதே .. 16..

ஶயான꞉ பரிஶோசத்³பி⁴꞉ பரிவீத꞉ ஸ்வப³ந்து⁴பி⁴꞉ .
வாச்யமானோ(அ)பி ந ப்³ரூதே காலபாஶவஶம்ʼ க³த꞉ .. 17..

ஏவம்ʼ குடும்ப³ப⁴ரணே வ்யாப்ருʼதாத்மாஜிதேந்த்³ரிய꞉ .
ம்ரியதே ருத³தாம்ʼ ஸ்வாநாமுருவேத³னயாஸ்ததீ⁴꞉ .. 18..

யமதூ³தௌ ததா³ ப்ராப்தௌ பீ⁴மௌ ஸரப⁴ஸேக்ஷணௌ .
ஸ த்³ருʼஷ்ட்வா த்ரஸ்தஹ்ருʼத³ய꞉ ஶக்ருʼன்மூத்ரம்ʼ விமுஞ்சதி .. 19..

யாதநாதே³ஹ ஆவ்ருʼத்ய பாஶைர்ப³த்³த்⁴வா க³லே ப³லாத் .
நயதோ தீ³ர்க⁴மத்⁴வானம்ʼ த³ண்ட்³யம்ʼ ராஜப⁴டா யதா² .. 20..

தயோர்நிர்பி⁴ன்னஹ்ருʼத³யஸ்தர்ஜனைர்ஜாதவேபது²꞉ .
பதி² ஶ்வபி⁴ர்ப⁴க்ஷ்யமாண ஆர்தோ(அ)க⁴ம்ʼ ஸ்வமனுஸ்மரன் .. 21..

க்ஷுத்த்ருʼட் பரீதோ(அ)ர்கத³வானலானிலை꞉
ஸந்தப்யமான꞉ பதி² தப்தவாலுகே .
க்ருʼச்ச்²ரேண ப்ருʼஷ்டே² கஶயா ச தாடி³த꞉
சலத்யஶக்தோ(அ)பி நிராஶ்ரமோத³கே .. 22..

தத்ர தத்ர பதன் ஶ்ராந்தோ மூர்ச்சி²த꞉ புனருத்தி²த꞉ .
பதா² பாபீயஸா நீதஸ்தரஸா யமஸாத³னம் .. 23..

யோஜனானாம்ʼ ஸஹஸ்ராணி நவதிம்ʼ நவ சாத்⁴வன꞉ .
த்ரிபி⁴ர்முஹூர்தைர்த்³வாப்⁴யாம்ʼ வா நீத꞉ ப்ராப்னோதி யாதனா꞉ .. 24..

ஆதீ³பனம்ʼ ஸ்வகா³த்ராணாம்ʼ வேஷ்டயித்வோல்முகாதி³பி⁴꞉ .
ஆத்மமாம்ʼஸாத³னம்ʼ க்வாபி ஸ்வக்ருʼத்தம்ʼ பரதோ(அ)பி வா .. 25..

ஜீவதஶ்சாந்த்ராப்⁴யுத்³தா⁴ர꞉ ஶ்வக்³ருʼத்⁴ரைர்யமஸாத³னே .
ஸர்பவ்ருʼஶ்சிகத³ம்ʼஶாத்³யைர்த³ஶத்³பி⁴ஶ்சாத்மவைஶஸம் .. 26..

க்ருʼந்தனம்ʼ சாவயவஶோ க³ஜாதி³ப்⁴யோ பி⁴தா³பனம் .
பாதனம்ʼ கி³ரிஶ்ருʼங்கே³ப்⁴யோ ரோத⁴னம்ʼ சாம்பு³க³ர்தயோ꞉ .. 27..

யாஸ்தாமிஸ்ராந்த⁴தாமிஸ்ரா ரௌரவாத்³யாஶ்ச யாதனா꞉ .
பு⁴ங்க்தே நரோ வா நாரீ வா மித²꞉ ஸங்கே³ன நிர்மிதா꞉ .. 28..

அத்ரைவ நரக꞉ ஸ்வர்க³ இதி மாத꞉ ப்ரசக்ஷதே .
யா யாதனா வை நாரக்யஸ்தா இஹாப்யுபலக்ஷிதா꞉ .. 29..

ஏவம்ʼ குடும்ப³ம்ʼ பி³ப்⁴ராண உத³ரம்ப⁴ர ஏவ வா .
விஸ்ருʼஜ்யேஹோப⁴யம்ʼ ப்ரேத்ய பு⁴ங்க்தே தத்ப²லமீத்³ருʼஶம் .. 30..

ஏக꞉ ப்ரபத்³யதே த்⁴வாந்தம்ʼ ஹித்வேத³ம்ʼ ஸ்வகலேவரம் .
குஶலேதரபாதே²யோ பூ⁴தத்³ரோஹேண யத்³ப்⁴ருʼதம் .. 31..

தை³வேனாஸாதி³தம்ʼ தஸ்ய ஶமலம்ʼ நிரயே புமான் .
பு⁴ங்க்தே குடும்ப³போஷஸ்ய ஹ்ருʼதவித்த இவாதுர꞉ .. 32..

கேவலேன ஹ்யத⁴ர்மேண குடும்ப³ப⁴ரணோத்ஸுக꞉ .
யாதி ஜீவோ(அ)ந்த⁴தாமிஸ்ரம்ʼ சரமம்ʼ தமஸ꞉ பத³ம் .. 33..

அத⁴ஸ்தான்னரலோகஸ்ய யாவதீர்யாதநாத³ய꞉ .
க்ரமஶ꞉ ஸமனுக்ரம்ய புனரத்ராவ்ரஜேச்சு²சி꞉ .. 34..

இதி ஶ்ரீமத்³பா⁴க³வதே மஹாபுராணே பாரமஹம்ʼஸ்யாம்ʼ ஸம்ʼஹிதாயாம்ʼ
த்ருʼதீயஸ்கந்தே⁴ காபிலேயோபாக்²யானே கர்மவிபாகோ நம த்ரிம்ʼஶோ(அ)த்⁴யாய꞉ .. 30

———————————————————-

ஸ்ரீ கபிலர் கூறினார்.

எந்த யோக விதிகளைக் கைக் கொண்டால் மனது தெளிவடைந்து நல்ல வழியில் செல்லுமோ
அதை உனக்கு இப்போது சொல்லப் போகிறேன்.

1.முழு சக்தியுடன் ஸ்வ தர்மத்தை அனுஷ்டித்தல்.
2. அதர்மத்தில் இருந்து விலகுதல்
3.கிடைத்ததைக் கொண்டு திருப்தி அடைதல்
4,ஆத்ம ஞானிகளை பூஜித்தல்.
5.இந்த்ரிய சுகங்களிலிருந்து விலகுதல்.
6. மோட்சத்தில் விருப்பம்
7. அளவோடு உண்ணுதல்
8.தனிமையாக தொந்தரவற்ற இடத்தில் வசித்தல்
9.அஹிம்சை
10 .சத்தியம்
11.கள்ளத்தனம் இல்லாமை
12.உடமைகளில் ஆசை இல்லாமை
13.ப்ரம்மசர்யம்
14.தவம்
15.பரிசுத்தம்
16.வேதம் ஓதுதல்
17. பகவதாராதனம்
18.மௌனம்
19.யோகாப்யாசம்
20.பிராணாயாமம்
21.இந்த்ரியங்களை மனதினால் கட்டுப்படுத்தி ஹ்ருதயத்தில் நிறுத்துதல்
22. ஆதார சக்ரங்களில் மனதை நிலை நிறுத்துதல்
23.பகவானின் லீலைகளை தியானித்தல்
24.அதனால் சமாதிநிலை அடைதல்

பகவானை மனதில் நிறுத்துவது எப்படி என்றால், முதலில் அவர் உருவத்தை இவ்வாறு த்யானிக்க வேண்டும்.

பிரசன்ன வதனாம்போஜம் பத்ம கர்பாருணேக்ஷணம்
நீலோத்பல தளச்யாமம் சங்கச் சக்ர கதாதரம்
லஸத் பங்கஜ கிஞ்சல்கபீத கௌசேய வாஸனம்
ஸ்ரீவத்ச வவக்ஷம் ப்ராஜத் கௌஸ்துபாமுக்த கந்தரம்
மத்த த்விரேபகலயா பரீதம் வனமாலயா
பரார்க்யஹார வலய கிரீடாங்கத நூபுரம்
காஞ்சீ குணோல்லஸத் ச்ரோணிம் ஹ்ருத்யாம் போஜ விஷ்டரம்
தர்சநீய தமம் சாந்தம் மனோநயன வர்தனம்

மலர்ந்த தாமரை முகம், தாமரையின் உள் பாகம் போல் சிவந்த கண்கள், நீலோத்பலம் போன்ற மேனி,சங்கு சக்கரம் ஏந்திய கைகள்,
அரையில் பீதாம்பரம், மார்பில் ஸ்ரீவத்சம், கழுத்தில் தொங்கும் கௌஸ்துப மணி, மதுவுண்ட வண்டு மொய்க்கும் வனமாலை,
ஹாரம், கிரீடம் ,தோள்வளை ,கங்கணம், நூபுரம், இடுப்பில தங்க அரைஞாண்.
இவற்றோடு, ஹ்ருதயத் தாமரையில் நிற்பவரும் , கண்களையும் மனதையும் மகிழ்விப்பவருமான பகவானை
எல்லா அங்கங்களுடனும் தியானம் செய்ய வேண்டும்.

வஜ்ரம் அங்குசம் கொடி தாமரை ஆகிய சின்னங்களுடன் கூடியதும் சிவந்தும் உயர்ந்தும் பிரகாசிக்கும் திருவடித் தாமரையை சிந்திக்க வேண்டும்.
பின்பு படிப்படியாக ஒவ்வொரு அங்கமாக த்யானித்து தியானத்தின் எல்லையாகிற சிவந்த அதரங்களின் ஒளியால் பிரகாசிக்கும்
மல்லிகை மொட்டுக்களைப் போன்ற பற்களின் புன்முறுவலை ஹருத்யத்தில் நிறுத்த வேண்டும்.

அப்படிப்பட்ட பக்தியின் மூலம் ஹ்ருதயம் உருகி வெள்ளமென கண்ணீர் பெருகுகிறது.
அது ப்ரக்ருதியினுடன் மனதைப் பிணைக்கும் வலையை அறுக்கிறது. இந்நிலை அடைந்த புருஷன் ஒரு குடிகாரன் எவ்வாறு
தன் வஸ்திரத்தை உணருவதில்லையோ அதுபோல தன் தேகத்தை காண்பதில்லை.
விழித்துக் கொண்டவன் கனவில் கண்டதை பொருட்படுத்துவதில்லை. அது போல பிராரப்த கர்மம் உள்ள்வரை
இருந்து கொண்டிருக்கும் இந்த தேகத்தையும் ஆத்மஞானம் பெற்றவன் பெரிதாகக் கருதுவதில்லை.

ஒரு மனிதன் தன் புத்திரர்களிடம் இருந்தும் செல்வம் முதலியவைகளிடம் இருந்தும் எப்படி வேறானவனோ
அவ்வாறே தேகம் முதலியவற்றிலிருந்தும் புருஷன் என்கிற ஆத்மா வேறானவன்.

அக்னி என்பது கொள்ளி, பொறி, புகை , இவைகளின் மயமாகவே காணப்பட்டாலும் உண்மையில் வேறானது.
அது போல ஆத்மா பஞ்ச பூதங்கள் இந்த்ரியம் , மனம் , புத்தி இவைகளில் இருந்து வேறானது.
நெருப்பு ஒன்றாயினும் வெவ்வேறு உபகரணங்கள் மூலம் வேறு வேறாகக் காணப்பட்டாலும் உண்மையில் அது ஒன்று தான்.

அவ்வாறே ஆத்மாவும் வெவ்வேறாக பிரக்ருதியின் குணங்களை ஒட்டி காணப்படுகிறது.
ஆகையால் இந்த பிரகிருதியை பகவான் அருளால் ஜெயித்து பக்தன் தன் ஸ்வரூபத்தில் நிலை பெருகிறான்.
அடுத்து பக்தி யோகத்தைப் பற்றிக் கூறுகிறார்.

————

ஸ்ரீமத்பாகவதம் -ஸ்கந்தம்3- அத்தியாயம் 31

பூர்வகர்மவசத்தால் உந்தப்பட்டு ஜீவன் உடலை எடுக்கும்பொருட்டு புருஷனுடைய வீரியத்தில் ஒட்டிக்கொண்டு ஸ்திரீயின் கர்பப்பையில் புகுகிறான்.ஓர் இரவில் கருவாகவும், ஐந்து இரவுகள் சென்றபின் நுரை போன்ற வடிவமும், பத்து நாட்களில் இலந்தைப்பழ வடிவமும் அதன் பிறகு முட்டை வடிவமும் எய்துகிறான்.

ஒரு மாதத்தில் தலையும், இரண்டு மாதத்தில் கை கால் முதலிய அங்கங்களின் தோற்றமும் மூன்று மாதங்களில் நகம் ரோமம் தோல் எலும்பு முதலியவைகளின் அடையாளங்களும் தோன்றுகின்றன. ஆணா பெண்ணா என்பது இப்போது
நிச்ச்யிக்கப்படுகிறது. ஐந்தாவது மாதத்தில் சிசு பசி தாகம் இவைகளை உணர்கிறது. ஆறாவது மாதம் அசைய ஆரம்பிக்கிறது.

ஏழாவது மாதம் தொடங்கி அறிவு உதிக்க ஆரம்பிக்கிறது. இந்த சமயம் பூர்வஜன்ம நினைவுகள் வர மறுபடி பிறவி எடுக்க பயந்து எந்த பகவானால் தாயின் வயிற்றில் புகுத்தப்பட்டானோ அந்த பகவானை கைகூப்பி துதிக்க ஆரம்பிக்கிறான்.

“ பகவானுடைய மாயையின் சக்தியினால் கர்மவசப்பட்டு என் உண்மை நிலையை உணராமல் சம்சார பந்தத்தில் அகப்பட்டுள்ளேன். எங்கும் நிறைந்த அந்த பரம்பொருளின் கிருபையால் எனக்கு இப்போது பூர்வஜன்ம நினைவு வருகிறது. அவர் அருளாலேயே கர்மபந்தத்தில் இருந்து விடுபட முடியும்.

இப்போது இன்னொரு உடலினுள் அகப்பட்டு அங்குள்ள திரவங்களால்
அலைக்கழிக்கப்பட்டு ஜாடராக்னியால் பொசுக்கப்பட்டு வெளியேறுவேன் என நாளை எண்ணிக்கொண்டிருக்கிறேன்.

ஆயினும் இவ்வளவு கஷ்டங்கள் அனுபவித்தாலும் இதை விட்டு வெளியேற
விரும்பவில்லை. ஏனென்றால் வெளியே என் நினைவுகள் மறைந்து உலக மாயையில் அகப்பட்டு சம்சார பந்தத்தில் சிக்கி பகவானை மறந்து தேகமே நான் என்றெண்ணி மறுபடி பிறவிப்பிணியை அனுபவிக்க வேண்டுமே.

அதனால் நான் இறைவனின் பகவத்த்யானத்தினால் இந்தப் பிறவித் துன்பத்தை ஒழிக்க எண்ணுகிறேன்.
இவ்வாறு கர்பத்தில் இருக்கும்போது ஈச்வரனைத் துதித்துக்கொண்டிருக்கையில் பத்து மாதம் முடிந்து சட வாயுவானது அவனை உந்திக் கீழே தலை கீழாகத் தள்ளிவிடுகிறது. அறிவு மறைந்து விபரீத அஞ்ஞானநிலையடைந்து வீரிட்டு அழத் தொடங்குகிறான்.

பிறந்தவுடன் நடக்கவும் பேசவும் ஆரம்பிக்கும் முன் பிறர் தயவில் வாழும்போது, பூச்சி கடித்தாலும், உடல் உபாதை இருந்தாலும் அவனால் அழத்தான் முடிகிறது. அறிவுள்ள பெற்றோர் வாய்ப்பின் ஓரளவு சுகம் காண முடியும் இல்லாவிட்டால் நரக வேதனைதான்.

வளர்ந்த பிறகும் தேவைகளும் ஆசைகளும் கூடவே வளர்வதால் முந்தைய ஜென்மத்தின் இடர்கள் பின் தொடர்கின்றன.

நல்லவழியில் செல்லும் ஜீவனும் காம இச்சைக்கும் வயிற்றை நிரப்புவதற்குமே வாழும் தீயோரிடம் சேர்ந்தால் முன்போல் நரகவாசம் போன்ற பிறவித்துன்பத்தை அடைகிறான்.

அதனால் இந்த துன்பத்தை வெல்ல என்ன வழி ?
மரணபயத்தை விட்டு தன் உண்மை நிலை என்ன என்று உணர்ந்து பற்றற்ற வாழ்க்கை மூலம் தேஹாத்ம புத்தியை விட்டு கர்ம பந்தத்தில் இருந்து விடுபடவேண்டும்.

ஸ்ரீமத்பாகவதம் -ஸ்கந்தம்3-அத்தியாயம் 32

கபிலர் கூறினார்.

பெரும்பாலான மக்கள் கிருஹஸ்த தர்மத்தில் ஈடுபட்டு தர்ம, அர்த்த காமங்களாகிய மூன்று புருஷார்த்தங்களையே விரும்புகின்றனர். வேதத்தில் கூறப்பட்ட யாகம் , தானம் முதலிய தர்மங்கள் கூட ஸ்வர்க்கம் முதலிய மேல் உலகங்களை அல்லது அடுத்த பிறவியில் இவ்வுலக சுகங்களை அடையவே
பின்பற்றப்படுகின்றன.

அர்த்தம் அல்லது செல்வம் சேர்ப்பது , காமம் அல்லது சுகத்தில் நாட்டம் இவை இரண்டும் எவ்வளவு அனுபவித்தாலும் தீர்வதில்லை.
இவ்வாறு யாகம் முதலியவைகளும் தானம் முதலிய தர்ம காரியங்களும் பலனை எதிர்பார்த்து செய்வது கர்ம மார்க்கம் (கர்ம யோகம் பலனை எதிர்பாராது செய்வது) எனப்படும். இப்படிப்பட்டவர்களை கீதையில் பகவான் ‘காமாத்மான: ஸ்வர்கபரா:’ என்று குறிப்பிடுகிறார்.

இவர்கள் தேவர்களையும் பித்ருக்களையும் திருப்திப்படுத்தி இந்த உடலை விட்டதும் சந்திர லோகத்திற்கு செல்லுகிறார்கள். சுவர்கத்திற்கு சென்றாலும் ‘க்ஷீணே புண்யே மர்த்ய லோகம் விசந்தி ‘ என்ற கீதை
வாக்கியப்படி அவர்கள் செய்த புண்ணியம் தீர்ந்ததும் மறுபடியும் இந்த உலகத்தில் பிறக்கிறார்கள். ஆக இந்த பிறப்பு இறப்பு என்னும் சுழற்சி தொடர்கின்றது.

பகவான் யோகநித்திரையில் எப்போது ஆழ்கிறாரோ அப்போது சந்திரலோகம் வரை உள்ள எல்லா லோகங்களும் அழிகின்றன. மறுபடி சிருஷ்டி ஏற்படும்போது எல்லா உயிர்களும் முன்னிருந்தவாறே மறுபடி தோன்றுகின்றன.

கர்ம மார்க்கத்தில் ஈடுபட்டவர்களினின்றும் வேறானவர்கள் பாகவத தர்மத்தை அனுசரிப்போர்., அவர்கள் ஸ்வதர்மத்தை பயன் கருதாது செய்து ஆசைகளற்று எல்லா செய்கைகளையும் பகவதர்ப்பணமாகவே செய்கின்றனர். இவர்கள் உடலை விட்டபின் சூரியமார்க்கமாகச் சென்று சத்யலோகத்தை அடைகின்றனர். ஸத்ய லோகம் என்பது ப்ரம்மலோகம்.,

ஒரு த்விபரார்த்தத்தின் முடிவில் பிரம்மா (அதாவது பிரம்மாவின் ஆயுள் முடிவில்) பிரம்மப்ரலயம் ஏற்படும்போது பிரம்ம பகவானுடன் ஐக்கியம் ஆகிறார். பிரம்மாவுடன் கூட சத்ய லோகத்தில் இருந்து பகவானையே த்யானித்துக் கொண்டிருந்த இந்த யோகிகள் பிரம்மாவுடனேயே பகவானிடம் ஐக்யமாகின்றனர்.

கபிலர் தேவஹூதியிடம் அதனால் பற்றை விட்டு பகவானிடம் சிந்தையை
செலுத்துமாறு கூறி, வாசுதேவரிடம் கொண்ட பக்தியானது சீக்கிரத்தில் வைராக்யத்தையும் ஞானத்தையும் கொடுக்கிறது என்றார்.

ஞானமாத்ரம் பரம் பிரம்ம பரமாத்மா ஈஸ்வர: புமான்
த்ருச்யாதிபி: ப்ருதக்பாவை: பகவான் ஏக: ஈயதே (ஸ்ரீமத். பா. 3.32.26)

ஞானஸ்வரூபமான பரப்ரம்மம் ஒருவரே பரமாத்மா, ஈஸ்வரன், பகவான் , புருஷன் என்றும், காண்பது, காண்பவன், காணப்படுவது என்று பலவாறாக அறியப்படுகிறான். நிர்குணமான பிரம்மம் ஒன்றே வெளிமுகப்பட்ட இந்த்ரியங்களால் பிராந்தியினால் பலவாகத் தோன்றுகிறது.

யதேந்த்ரியை: ப்ருதக்த்வாரை: அர்தோ பஹுகுணாஸ்ரய:
ஏகோ நானேயதே தத்வத் பகவான் சாஸ்த்ரவர்த்மபி: (ஸ்ரீமத். பா. 3.32. 33)

எவ்வாறு ஒரே வஸ்து இந்த்ரியங்களினால் வெவ்வேறாக அறியப்படுகிறதோ அவ்வாறே பல சாஸ்திர மார்க்கங்களினால் வெவ்வேறாக அறியப்படுகிறார்.

உதாரணமாக பால் கண்ணுக்கு வெண்மையாகவும் நாவுக்கு இனிமையாகவும்
ஸ்பர்சத்தால் தண்மையாகவும் இருக்கிறது அல்லவா? ஆனாலும் பால் என்பது ஒரே வஸ்துதானே. அதுபோல பகவான் வெவ்வேறு அறியும் திறனுக்கேற்ப
வெவ்வேறாகத்தொன்றினாலும் அவன் உண்மைஸ் ஸ்வரூபம் ஒன்றுதான். இதைத்தான் கபிலர் கூறுகிறார்.

இது மட்டும் புரிந்து விட்டால் உலகில் வாதப் பிரதிவாதங்கள் பேதமனப் பான்மையினால் ஏற்படும் சண்டைகள் எல்லாம் மறைந்துவிடும்!.

பக்தி நான்கு வகைப்படும்என்று கபிலர் தேவஹூதியிடம் கூறுகிறார்.

1. ஸகாம பக்தி- பகவானிடம் பலன் எதிர்பார்த்து பக்தி செலுத்துவது (உலகத்தில் பெரும்பான்மையான பக்தி இவ்வகையைச் சேர்ந்தது.)
2. நிஷ்காம பக்தி- கர்மபலனை பகவானுக்கு சமர்ப்பணம் செய்வது.
3. ஸகுணபக்தி- பிரஹ்லாதன் கூறிய நவவிதபக்தி, ஸ்ரவணம், கீர்த்தனம் முதலியவை. 4.நிர்குண பக்தி- இதுவே பிரேம பக்தி எனப்படும். பகவானை நினைத்த மாத்திரத்திலேயே கண்ணில் நீர் பெருக அவனில் ஆழ்ந்து போவது.

கடைசியில் இதை யாருக்குக் கூறலாம் யாருக்குக் கூறக்கூடாது என்பதை சொல்கிறார்.

ஒரு சாஸ்திர உபதேசத்திற்கு நான்கு முக்கியமான அங்கங்கள் உண்டு. ( இது ஆரம்பத்திலேயே முதல் ஸ்கந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது )
அவையாவன, இது என்ன, எதைப்பற்றி, இதைக் கேட்க தகுதியுடையோர் யார், இதன் பலன் யாது என்பதேயாகும்.

இது கபிலோபதேசம் எனப்படும். சாங்க்ய தத்வத்தைப்பற்றியும் பக்தியோகத்தை பற்றியும் விவரிக்கிறது. இப்போது இதைக்கேட்க தகுதியுடையோர் யார் என்பதைப் பற்றிச் சொல்கிறார்.

கபிலர் கூறியது.

இதை துஷ்டன், வினயமில்லாதவன், கர்வம் கொண்டவன் , கெட்ட நடத்தை உள்ளவன், டாம்பீகன், விஷயசுகத்திலும் உலக வாழ்க்கையிலும் பற்றுக்கொண்டவன் , பக்தியில்லாதவன், பக்தர்களுக்கு விரோதியானவன் இவர்களுக்கு இதை
சொல்லகூடாது.

அப்படியானால் யாருக்குச் சொல்லலாம் ? அதற்கு விடை ,

ஸ்ரத்தையுள்ளவன், பக்தயுள்ளவன், வினயமுள்ளவன், அசூயை இல்லாதவன், பிராணிகளிடத்தில் அன்பு பூண்டவன், குருசுச்ரூஷையில் ஈடுபட்டவன், உலகப்பொருள்களில் நாட்டம் இல்லாதவன், சாந்தமானவன், சுத்தமானவன் , பகவானிடம் எதையும் விட அதிகமாக பிரியம் கொண்டவன், இவர்களுக்கு இதைக் கூறவேண்டும் என்கிறார்.

இப்போது நான்காம் அங்கமான பலனைச் சொல்கிறார்.

“ய ஏவம் ஸ்ருணுயாத் அம்ப, ஸ்ரத்தயா புருஷ: ஸக்ருத்
யோவா அபிதத்தே மச்சித்த: ஸ ஹ்யேதி பதவீம் ச மே

எவன் ஒருவன் இதை ச்ரத்தையுடன் என்னிடம் மனதை செலுத்தி ஒருதடவை
கேட்கின்றானோஅல்லது உபதேசிக்கின்றானோ அவன் என்னை வந்தடைவான்

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூக பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ கிருஷ்ண த்வைபாயன பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நாரத பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading