ஸ்ரீ மத் பாகவதம் -ஸ்கந்தம்-3-அத்யாயம் -29-கபில முனிவர் உபதேசம் -ப்ரஹ்ம கைங்கர்யத்தின் சீர்மை–

ஸ்ரீமத் பாகவதம் ஸ்கந்தம் 3 அத்தியாயம் 29/30

அத்தியாயம் 29

தேவஹூதி கூறினாள்.

மஹத் தத்துவம் பிரகிருதி புருஷன் லக்ஷணம் முதலியவைகளைப் பற்றி எனக்குக் கூறினீர்கள். இதற்கு ஆதார வேர் போன்ற பக்தியோகத்தின் வழியை எனக்கு உபதேசிக்க வேண்டுகிறேன்.

கபிலர் கூறியது.

பக்தியோகமா னது மனிதர்களின் இயற்கையை ஒட்டி பலவித மார்க்கங்களைக் கொண்டது.
தாமச மார்க்கம்- முன்கோபம் , பேத புத்தி இவைகளுடன், ஹிம்சையை கொண்டதாகவும் ( பலி இடுதல் உடலை ஹிம்சைப்படுத்துதல் ) , டம்பத்திற்காகவும், பொறாமையை முன்னிட்டும் செய்யும் வழிபாடு.

ராஜச மார்க்கம்- பேத புத்தியுடன் விஷய சுகங்கள் , புகழ், ஐஸ்வர்யம் இவைகளைப் பெற செய்யும் பூஜை.

ஸாத்வீக மார்க்கம்- எனது குணங்களைக் கேட்ட மாத்திரத்திலேயே, எல்லோருடைய உள்ளத்திலும் உறைபவனாக உணர்ந்து, சமுத்திரத்தை நோக்கி கங்கை ஓடுவது போல் என்னிடத்தில் இடைவிடாது மனதை செலுத்தி காரணமில்லாத, இயற்கையான , வேறு எதிலும் நாட்டமில்லாத நிர்குண பக்தி.

அப்படிப்பட்ட பக்தர்கள் மோக்ஷத்தையும் விரும்பார். என் சேவையிலேயே திருப்தி அடைவார். (உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம் என்றபடி).
இப்படிப்பட்ட பக்தியினால் முக்குண ப்ர்க்ருதியிடம் இருந்து விடுபட்டு ஜீவன் என்னை அடைகிறான்.

நான் எல்லா உயிர்களிலும் இருக்கிறேன் என்பதை உணராமல் படாடோபமாக என்னை விக்ரஹ ஆராதனை செய்வது ( அதாவது விக்ரஹத்தில் மாத்திரம்தான் நான் இருக்கிறேன் என்று எண்ணி எனக்கு ஏதோ ப்ரீதியை உண்டுபண்ணுவதாக நினைத்து) சாம்பலில் ஹோமம் செய்வதைப் போன்றது.

தன்னலத்துடன் பிறரைப் பகைத்து பேத பாவனையுடன் செய்யும் பூஜையினால் மனம் அமைதியடையாது. அப்படிப்பட்ட பூஜையினால் நான் திருப்தி அடையமாட்டேன்.

எல்லாப் ப்ராணிகளிடத்தும் உறையும் என்னை தன் ஹ்ருதயத்தில் உறைபவனாகக் காணும் வரை அதற்கு சாதனமான விக்ரஹ ஆராதனை அவசியமே . தன் கடமையை பற்றில்லாமல் செய்துகொண்டு என்னை வழிபடவேண்டும்.

பிற உயிர்கள் மூலமாக என்னை தானத்தாலும், மரியாதையாலும், நட்பாலும் பேதமற்ற நோக்கத்தினாலும் பூஜிக்க வேண்டும். எல்லா உயிர்களிடமும் என்னையே காண்பவனும், எல்லாவற்றையும் எனக்கே அர்ப்பணித்தவனும் ஆன பக்தனே எல்லோருக்கும்மேலானவன்.

அத்தியாயம் 30
பொருள், சொத்து முதலியவற்றில் மோகம் கொண்ட மனிதன் விஷய சுகங்கள் நித்தியம் என்றெண்ணி காலம் எல்லாவற்றையும் ஒருநாள் கொண்டு செல்லும் என்று அறிவதில்லை. பல பிறவி எடுத்தும் பல யோனிகளில் பிறந்தும் ஆசை அடங்குவதில்லை.

நரகத்தில் இருப்பினும் புருஷன் சரீரத்தை விடுவதற்கு விரும்புவதில்லை. நரகமும் சுவர்க்கமும் இந்த உலகிலேயே உள்ளன என்று சொல்லலாம். ஏனென்றால் இங்கும் நரக வேதனை அனுபவிக்கப்படுகிறது அல்லவா?

பிராணிகளுக்கு துரோகம் செய்து எந்த உடலானது வளர்க்கப்பட்டதோ அப்படிப்பட்ட உடலைவிட்டு, பாப கர்மத்தை மட்டும் மூட்டை கட்டிக்கொண்டு நரகத்தை அடைகிறான். பல ஜன்மங்கள் கீழ்ப்பட்ட நிலைகளிலும் பிறவிகளிலும் கஷ்டங்களை அனுபவித்து தன்னுடைய பாவம் தீர்ந்த பின் மறுபடி மனித ஜன்மம் அடைகிறான்.

அடுத்த அத்தியாயம் மனிதப்பிறவி கருவடைவதில் இருந்து வர்ணிக்கிறது.

——————

தே³வஹூதிருவாச
லக்ஷணம்ʼ மஹதா³தீ³னாம்ʼ ப்ரக்ருʼதே꞉ புருஷஸ்ய ச .
ஸ்வரூபம்ʼ லக்ஷ்யதே(அ)மீஷாம்ʼ யேன தத்பாரமார்தி²கம் .. 1..

யதா² ஸாங்க்²யேஷு கதி²தம்ʼ யன்மூலம்ʼ தத்ப்ரசக்ஷதே .
ப⁴க்தியோக³ஸ்ய மே மார்க³ம்ʼ ப்³ரூஹி விஸ்தரஶ꞉ ப்ரபோ⁴ .. 2..

விராகோ³ யேன புருஷோ ப⁴க³வன் ஸர்வதோ ப⁴வேத் .
ஆசக்ஷ்வ ஜீவலோகஸ்ய விவிதா⁴ மம ஸம்ʼஸ்ருʼதீ꞉ .. 3..

காலஸ்யேஶ்வரரூபஸ்ய பரேஷாம்ʼ ச பரஸ்ய தே .
ஸ்வரூபம்ʼ ப³த குர்வந்தி யத்³தே⁴தோ꞉ குஶலம்ʼ ஜனா꞉ .. 4..

லோகஸ்ய மித்²யாபி⁴மதேரசக்ஷுஷஶ்சிரம்ʼ
ப்ரஸுப்தஸ்ய தமஸ்யநாஶ்ரயே .
ஶ்ராந்தஸ்ய கர்மஸ்வனுவித்³த⁴யா தி⁴யா
த்வமாவிராஸீ꞉ கில யோக³பா⁴ஸ்கர꞉ .. 5..

மைத்ரேய உவாச
இதி மாதுர்வச꞉ ஶ்லக்ஷ்ணம்ʼ ப்ரதினந்த்³ய மஹாமுனி꞉ .
ஆப³பா⁴ஷே குருஶ்ரேஷ்ட² ப்ரீதஸ்தாம்ʼ கருணார்தி³த꞉ .. 6..

ஶ்ரீப⁴க³வானுவாச
ப⁴க்தியோகோ³ ப³ஹுவிதோ⁴ மார்கை³ர்பா⁴மினி பா⁴வ்யதே .
ஸ்வபா⁴வகு³ணமார்கே³ண பும்ʼஸாம்ʼ பா⁴வோ விபி⁴த்³யதே .. 7..

அபி⁴ஸந்தா⁴ய யோ ஹிம்ʼஸாம்ʼ த³ம்ப⁴ம்ʼ மாத்ஸர்யமேவ வா .
ஸம்ʼரம்பீ⁴ பி⁴ன்னத்³ருʼக்³பா⁴வம்ʼ மயி குர்யாத்ஸ தாமஸ꞉ .. 8..

விஷயானபி⁴ஸந்தா⁴ய யஶ ஐஶ்வர்யமேவ வா .
அர்சாதா³வர்சயேத்³யோ மாம்ʼ ப்ருʼத²க்³பா⁴வ꞉ ஸ ராஜஸ꞉ .. 9..

கர்மநிர்ஹாரமுத்³தி³ஶ்ய பரஸ்மின் வா தத³ர்பணம் .
யஜேத்³யஷ்டவ்யமிதி வா ப்ருʼத²க்³பா⁴வ꞉ ஸ ஸாத்த்விக꞉ .. 10..

மத்³கு³ணஶ்ருதிமாத்ரேண மயி ஸர்வகு³ஹாஶயே .
மனோக³திரவிச்சி²ன்னா யதா² க³ங்கா³ம்ப⁴ஸோ(அ)ம்பு³தௌ⁴ .. 11..

லக்ஷணம்ʼ ப⁴க்தியோக³ஸ்ய நிர்கு³ணஸ்ய ஹ்யுதா³ஹ்ருʼதம் .
அஹைதுக்யவ்யவஹிதா யா ப⁴க்தி꞉ புருஷோத்தமே .. 12..

ஸாலோக்யஸார்ஷ்டிஸாமீப்யஸாரூப்யைகத்வமப்யுத .
தீ³யமானம்ʼ ந க்³ருʼஹ்ணந்தி வினா மத்ஸேவனம்ʼ ஜனா꞉ .. 13..

ஸ ஏவ ப⁴க்தியோகா³க்²ய ஆத்யந்திக உதா³ஹ்ருʼத꞉ .
யேனாதிவ்ரஜ்ய த்ரிகு³ணம்ʼ மத்³பா⁴வாயோபபத்³யதே .. 14..

நிஷேவிதேனாநிமித்தேன ஸ்வத⁴ர்மேண மஹீயஸா .
க்ரியாயோகே³ன ஶஸ்தேன நாதிஹிம்ʼஸ்ரேண நித்யஶ꞉ .. 15..

மத்³தி⁴ஷ்ண்யத³ர்ஶனஸ்பர்ஶபூஜாஸ்துத்யபி⁴வந்த³னை꞉ .
பூ⁴தேஷு மத்³பா⁴வனயா ஸத்த்வேனாஸங்க³மேன ச .. 16..

மஹதாம்ʼ ப³ஹுமானேன தீ³னாநாமனுகம்பயா .
மைத்ர்யா சைவாத்மதுல்யேஷு யமேன நியமேன ச .. 17..

ஆத்⁴யாத்மிகானுஶ்ரவணாந்நாமஸங்கீர்தனாச்ச மே .
ஆர்ஜவேனார்யஸங்கே³ன நிரஹங்க்ரியயா ததா² .. 18..

மத்³த⁴ர்மணோ கு³ணைரேதை꞉ பரிஸம்ʼஶுத்³த⁴ ஆஶய꞉ .
புருஷஸ்யாஞ்ஜஸாப்⁴யேதி ஶ்ருதமாத்ரகு³ணம்ʼ ஹி மாம் .. 19..

யதா² வாதரதோ² க்⁴ராணமாவ்ருʼங்க்தே க³ந்த⁴ ஆஶயாத் .
ஏவம்ʼ யோக³ரதம்ʼ சேத ஆத்மானமவிகாரி யத் .. 20..

அஹம்ʼ ஸர்வேஷு பூ⁴தேஷு பூ⁴தாத்மாவஸ்தி²த꞉ ஸதா³ .
தமவஜ்ஞாய மாம்ʼ மர்த்ய꞉ குருதே(அ)ர்சாவிட³ம்ப³னம் .. 21..

யோ மாம்ʼ ஸர்வேஷு பூ⁴தேஷு ஸந்தமாத்மானமீஶ்வரம் .
ஹித்வார்சாம்ʼ ப⁴ஜதே மௌட்⁴யாத்³ப⁴ஸ்மன்யேவ ஜுஹோதி ஸ꞉ .. 22..

த்³விஷத꞉ பரகாயே மாம்ʼ மானினோ பி⁴ன்னத³ர்ஶின꞉ .
பூ⁴தேஷு ப³த்³த⁴வைரஸ்ய ந மன꞉ஶாந்திம்ருʼச்ச²தி .. 23..

அஹமுச்சாவசைர்த்³ரவ்யை꞉ க்ரியயோத்பன்னயானகே⁴ .
நைவ துஷ்யே(அ)ர்சிதோ(அ)ர்சாயாம்ʼ பூ⁴தக்³ராமாவமானின꞉ .. 24..

அர்சாதா³வர்சயேத்தாவதீ³ஶ்வரம்ʼ மாம்ʼ ஸ்வகர்மக்ருʼத் .
யாவன்ன வேத³ ஸ்வஹ்ருʼதி³ ஸர்வபூ⁴தேஷ்வவஸ்தி²தம் .. 25..

ஆத்மனஶ்ச பரஸ்யாபி ய꞉ கரோத்யந்தரோத³ரம் .
தஸ்ய பி⁴ன்னத்³ருʼஶோ ம்ருʼத்யுர்வித³தே⁴ ப⁴யமுல்ப³ணம் .. 26..

அத² மாம்ʼ ஸர்வபூ⁴தேஷு பூ⁴தாத்மானம்ʼ க்ருʼதாலயம் .
அர்ஹயேத்³தா³னமாநாப்⁴யாம்ʼ மைத்ர்யாபி⁴ன்னேன சக்ஷுஷா .. 27..

ஜீவா꞉ ஶ்ரேஷ்டா² ஹ்யஜீவானாம்ʼ தத꞉ ப்ராணப்⁴ருʼத꞉ ஶுபே⁴ .
தத꞉ ஸசித்தா꞉ ப்ரவராஸ்ததஶ்சேந்த்³ரியவ்ருʼத்தய꞉ .. 28..

தத்ராபி ஸ்பர்ஶவேதி³ப்⁴ய꞉ ப்ரவரா ரஸவேதி³ன꞉ .
தேப்⁴யோ க³ந்த⁴வித³꞉ ஶ்ரேஷ்டா²ஸ்தத꞉ ஶப்³த³விதோ³ வரா꞉ .. 29..

ரூபபே⁴த³வித³ஸ்தத்ர ததஶ்சோப⁴யதோ த³த꞉ .
தேஷாம்ʼ ப³ஹுபதா³꞉ ஶ்ரேஷ்டா²ஶ்சதுஷ்பாத³ஸ்ததோ த்³விபாத் .. 30..

ததோ வர்ணாஶ்ச சத்வாரஸ்தேஷாம்ʼ ப்³ராஹ்மண உத்தம꞉ .
ப்³ராஹ்மணேஷ்வபி வேத³ஜ்ஞோ ஹ்யர்த²ஜ்ஞோ(அ)ப்⁴யதி⁴கஸ்தத꞉ .. 31..

அர்த²ஜ்ஞாத்ஸம்ʼஶயச்சே²த்தா தத꞉ ஶ்ரேயான் ஸ்வகர்மக்ருʼத் .
முக்தஸங்க³ஸ்ததோ பூ⁴யானதோ³க்³தா⁴ த⁴ர்மமாத்மன꞉ .. 32..

தஸ்மான்மய்யர்பிதாஶேஷக்ரியார்தா²த்மா நிரந்தர꞉ .
மய்யர்பிதாத்மன꞉ பும்ʼஸோ மயி ஸன்ன்யஸ்தகர்மண꞉ .
ந பஶ்யாமி பரம்ʼ பூ⁴தமகர்து꞉ ஸமத³ர்ஶனாத் .. 33..

மனஸைதானி பூ⁴தானி ப்ரணமேத்³ப³ஹுமாநயன் .
ஈஶ்வரோ ஜீவகலயா ப்ரவிஷ்டோ ப⁴க³வானிதி .. 34..

ப⁴க்தியோக³ஶ்ச யோக³ஶ்ச மயா மாநவ்யுதீ³ரித꞉ .
யயோரேகதரேணைவ புருஷ꞉ புருஷம்ʼ வ்ரஜேத் .. 35..

ஏதத்³ப⁴க³வதோ ரூபம்ʼ ப்³ரஹ்மண꞉ பரமாத்மன꞉ .
பரம்ʼ ப்ரதா⁴னம்ʼ புருஷம்ʼ தை³வம்ʼ கர்மவிசேஷ்டிதம் .. 36..

ரூபபே⁴தா³ஸ்பத³ம்ʼ தி³வ்யம்ʼ கால இத்யபி⁴தீ⁴யதே .
பூ⁴தானாம்ʼ மஹதா³தீ³னாம்ʼ யதோ பி⁴ன்னத்³ருʼஶாம்ʼ ப⁴யம் .. 37..

யோ(அ)ந்த꞉ப்ரவிஶ்ய பூ⁴தானி பூ⁴தைரத்த்யகி²லாஶ்ரய꞉ .
ஸ விஷ்ண்வாக்²யோ(அ)தி⁴யஜ்ஞோ(அ)ஸௌ கால꞉ கலயதாம்ʼ ப்ரபு⁴꞉ .. 38..

ந சாஸ்ய கஶ்சித்³த³யிதோ ந த்³வேஷ்யோ ந ச பா³ந்த⁴வ꞉ .
ஆவிஶத்யப்ரமத்தோ(அ)ஸௌ ப்ரமத்தம்ʼ ஜனமந்தக்ருʼத் .. 39..

யத்³ப⁴யாத்³வாதி வாதோ(அ)யம்ʼ ஸூர்யஸ்தபதி யத்³ப⁴யாத் .
யத்³ப⁴யாத்³வர்ஷதே தே³வோ ப⁴க³ணோ பா⁴தி யத்³ப⁴யாத் .. 40..

யத்³வனஸ்பதயோ பீ⁴தா லதாஶ்சௌஷதி⁴பி⁴꞉ ஸஹ .
ஸ்வே ஸ்வே காலே(அ)பி⁴க்³ருʼஹ்ணந்தி புஷ்பாணி ச ப²லானி ச .. 41..

ஸ்ரவந்தி ஸரிதோ பீ⁴தா நோத்ஸர்பத்யுத³தி⁴ர்யத꞉ .
அக்³நிரிந்தே⁴ ஸகி³ரிபி⁴ர்பூ⁴ர்ன மஜ்ஜதி யத்³ப⁴யாத் .. 42..

நபோ⁴ த³தா³தி ஶ்வஸதாம்ʼ பத³ம்ʼ யந்நியமாத³த³꞉ .
லோகம்ʼ ஸ்வதே³ஹம்ʼ தனுதே மஹான்ஸப்தபி⁴ராவ்ருʼதம் .. 43..

கு³ணாபி⁴மானினோ தே³வா꞉ ஸர்கா³தி³ஷ்வஸ்ய யத்³ப⁴யாத் .
வர்தந்தே(அ)னுயுக³ம்ʼ யேஷாம்ʼ வஶ ஏதச்சராசரம் .. 44..

ஸோ(அ)னந்தோ(அ)ந்தகர꞉ காலோ(அ)நாதி³ராதி³க்ருʼத³வ்யய꞉ .
ஜனம்ʼ ஜனேன ஜநயன் மாரயன் ம்ருʼத்யுனாந்தகம் .. 45..

இதி ஶ்ரீமத்³பா⁴க³வதே மஹாபுராணே பாரமஹம்ʼஸ்யாம்ʼ ஸம்ʼஹிதாயாம்ʼ
த்ருʼதீயஸ்கந்தே⁴ காபிலேயோபாக்²யானே ஏகோனத்ரிம்ʼஶோ(அ)த்⁴யாய꞉ .. 29

———————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூக பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ கிருஷ்ண த்வைபாயன பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நாரத பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading