ஸ்ரீ மத் பாகவதம் -ஸ்கந்தம்-3- அத்யாயம் -3-ஸ்ரீ க்ருஷ்ண லீலைகள் -ஸ்ரீ ப்ருந்தாவனத்துக்கு வெளியில் ––

விதுரர் கூறியதைக்கேட்ட உத்தவர் பகவான் மறைந்ததை எண்ணி துக்கம் மேலிட்டு பதில் கூற இயலாதவர் ஆனார். ஐந்து வயதில் இருந்து கிருஷ்ணரை பூஜித்தவர் ஆயிற்றே.

அவர் க்ருஷ்ணபூஜையாகிற விளையாட்டில் ஈடுபட்டு இருந்தபோது அவர் அன்னை உணவு உண்ண அழைத்ததையும் கவனிக்காமல் பூஜையில் ஆழ்ந்திருந்தாராம். பிறகு கிருஷ்ணர் மதுரை வந்த பின்னர் அவருடைய நெருங்கிய நண்பராகி அவரை விட்டுப்பிரியாமல் இருந்தவர். அதனால் கிருஷ்ணரின் பிரிவு அவரால் தாங்க முடியாததாக இருந்தது.

கிருஷ்ணரின் நினைவில் சதா ஆழ்ந்திருந்த அவரால் பேசவும் முடியவில்லை. ஏனென்றால் கிருஷ்ணரின் நாமத்தைக் கேட்ட மாத்திரத்திலேயே தன்னை மறந்தவர் ஆனார்.விதுர அவரை எப்படிக் கண்டார் என்பதை பாகவதம் கூறுகிறது.

தீவ்ரேண பக்தியோகேன நிம்க்ன: ஸாது நிர்வ்ருத:
புலகோத்பின்னஸர்வாங்கோ முஞ்சன் மீலத்ருசா சுச:

கிருஷ்ணானுபவத்தில் திளைத்து புளகாங்கிதராக கண்ணீர் பெருகி நின்றார்.

பின்னர் உலக நினைவுக்கு திரும்பி கூறலானார்
.
“ என் உற்றார் உறவினர் காலசர்ப்பத்தால் விழுங்கப்பட்டவராகி ஒளி இழந்தனர். கிருஷ்ணனாகிய யாதவ சூரியனின் மறைவுக்குப் பிறகு இருள் சூழ்ந்தது.
மீன்கள் தண்ணீரில் தெரியும் சந்திர பிம்பத்தைப் பார்த்து அதுவும் ஒரு நீர் வாழும் பிராணி என்று எண்ணியதைப் போல யாதவர்கள் கண்ணனின் பெருமையை அவன் மறைவுக்கு முன் அறிந்திலர்.

தவத்தினால் மட்டுமே காணகூடிய பகவான் நம்முடன் தோன்றி இந்த உலகத்தை மகிழ்வித்து இப்போது மறைந்ததைப் பற்றி நான் எவ்வாறு விவரிப்பேன்? “

பின்னர் உத்தவர் கிருஷ்ணனின் பால லீலைகளைப் பற்றிக்கூறி , ராஜசூயயாகத்தில் அவரை நிந்தித்த சிசுபாலன் கூட சாயுஜ்யத்தை அடைந்தான் என்று கூறி மஹாபாரத யுத்தத்தில் அர்ஜூனனின் பாணத்தால் உயிர் இழந்த அரசர் அனைவரும் எவ்வாறு கண்ணனின் மலர்ந்த முகத்தைப் பார்த்துக்கொண்டே நல்ல கதி அடைந்தார்கள் என்றும் அவர் எதிரிகள் கூட அவர் நினைவாகவே இருந்ததால் பக்தர்கள் ஆகிவிட்டனர் என்றும் கூறினார்.

கிருஷ்ணரின் ஆதரவால் யாதவர்கள் பலம் பொருந்தியவர்கள் ஆகி இந்த பூமி முழுவதையும் வென்றனர். அவரகளை வெல்ல யாராலும் முடியாது. அவர்களே அவர்களை அழித்துக்கொண்டால்தான் உண்டு என்று கூறிய கிருஷ்ணர் அதற்கு திருவுள்ளம் கொண்டார்.

யுதிஷ்டிரரை சிம்மாசனத்தில் அமர்த்தி, உத்தரையின் கர்பத்தைக் காத்த பின்னர் பற்றற்றவராக த்வாரகையில் வசித்தபோது ஒருநாள் யாதவ இளைஞர்கள் ரிஷிகளை அவமதிக்க அவர்கள் இட்ட சாபமே யாதவகுலம் அழியக் காரணமாயிற்று என்று கூறிய உத்தவர் அதுவும் பகவானின் சங்கல்பமே என்று உரைத்தார்.

இதைப்பற்றி 12 வது ஸ்கந்தத்தில் விரிவாகக் காணலாம்.

———————

உத்³த⁴வ உவாச
தத꞉ ஸ ஆக³த்ய புரம்ʼ ஸ்வபித்ரோ-
ஶ்சிகீர்ஷயா ஶம்ʼ ப³லதே³வஸம்ʼயுத꞉ .
நிபாத்ய துங்கா³த்³ரிபுயூத²நாத²ம்ʼ
ஹதம்ʼ வ்யகர்ஷத்³வ்யஸுமோஜஸோர்வ்யாம் .. 1..

ஸாந்தீ³பனே꞉ ஸக்ருʼத்ப்ரோக்தம்ʼ ப்³ரஹ்மாதீ⁴த்ய ஸவிஸ்தரம் .
தஸ்மை ப்ராதா³த்³வரம்ʼ புத்ரம்ʼ ம்ருʼதம்ʼ பஞ்சஜனோத³ராத் .. 2..

ஸமாஹுதா பீ⁴ஷ்மககன்யயா யே
ஶ்ரிய꞉ ஸவர்ணேன பு³பூ⁴ஷயைஷாம் .
கா³ந்த⁴ர்வவ்ருʼத்த்யா மிஷதாம்ʼ ஸ்வபா⁴க³ம்ʼ
ஜஹ்ரே பத³ம்ʼ மூர்த்⁴னி த³த⁴த்ஸுபர்ண꞉ .. 3..

ககுத்³மதோ(அ)வித்³த⁴னஸோ த³மித்வா
ஸ்வயம்ʼவரே நாக்³னஜிதீமுவாஹ .
தத்³ப⁴க்³னமானானபி க்³ருʼத்⁴யதோ(அ)ஜ்ஞான்
ஜக்⁴னே(அ)க்ஷத꞉ ஶஸ்த்ரப்⁴ருʼத꞉ ஸ்வஶஸ்த்ரை꞉ .. 4..

ப்ரியம்ʼ ப்ரபு⁴ர்க்³ராம்ய இவ ப்ரியாயா
விதி⁴த்ஸுரார்ச்ச²த்³ த்³யுதரும்ʼ யத³ர்தே² .
வஜ்ர்யாத்³ரவத்தம்ʼ ஸக³ணோ ருஷாந்த⁴꞉
க்ரீடா³ம்ருʼகோ³ நூனமயம்ʼ வதூ⁴னாம் .. 5..

ஸுதம்ʼ ம்ருʼதே⁴ க²ம்ʼ வபுஷா க்³ரஸந்தம்ʼ
த்³ருʼஷ்ட்வா ஸுநாபோ⁴ன்மதி²தம்ʼ த⁴ரித்ர்யா .
ஆமந்த்ரிதஸ்தத்தனயாய ஶேஷம்ʼ
த³த்த்வா தத³ந்த꞉புரமாவிவேஶ .. 6..

தத்ராஹ்ருʼதாஸ்தா நரதே³வகன்யா꞉
குஜேன த்³ருʼஷ்ட்வா ஹரிமார்தப³ந்து⁴ம் .
உத்தா²ய ஸத்³யோ ஜக்³ருʼஹு꞉ ப்ரஹர்ஷ-
வ்ரீடா³னுராக³ப்ரஹிதாவலோகை꞉ .. 7..

ஆஸாம்ʼ முஹூர்த ஏகஸ்மின்னாநாகா³ரேஷு யோஷிதாம் .
ஸவித⁴ம்ʼ ஜக்³ருʼஹே பாணீனனுரூப꞉ ஸ்வமாயயா .. 8..

தாஸ்வபத்யான்யஜனயதா³த்மதுல்யானி ஸர்வத꞉ .
ஏகைகஸ்யாம்ʼ த³ஶ த³ஶ ப்ரக்ருʼதேர்விபு³பூ⁴ஷயா .. 9..

காலமாக³த⁴ஶால்வாதீ³னனீகை ருந்த⁴த꞉ புரம் .
அஜீக⁴னத்ஸ்வயம்ʼ தி³வ்யம்ʼ ஸ்வபும்ʼஸாம்ʼ தேஜ ஆதி³ஶத் .. 10..

ஶம்ப³ரம்ʼ த்³விவித³ம்ʼ பா³ணம்ʼ முரம்ʼ ப³ல்வலமேவ ச .
அன்யாம்ʼஶ்ச த³ந்தவக்த்ராதீ³னவதீ⁴த்காம்ʼஶ்ச கா⁴தயத் .. 11..

அத² தே ப்⁴ராத்ருʼபுத்ராணாம்ʼ பக்ஷயோ꞉ பதிதாந்ந்ருʼபான் .
சசால பூ⁴꞉ குருக்ஷேத்ரம்ʼ யேஷாமாபததாம்ʼ ப³லை꞉ .. 12..

ஸகர்ணது³꞉ஶாஸனஸௌப³லானாம்ʼ
குமந்த்ரபாகேன ஹதஶ்ரியாயுஷம் .
ஸுயோத⁴னம்ʼ ஸானுசரம்ʼ ஶயானம்ʼ
ப⁴க்³னோருமுர்வ்யாம்ʼ ந நனந்த³ பஶ்யன் .. 13..

கியான்பு⁴வோ(அ)யம்ʼ க்ஷபிதோருபா⁴ரோ
யத்³த்³ரோணபீ⁴ஷ்மார்ஜுனபீ⁴மமூலை꞉ .
அஷ்டாத³ஶாக்ஷௌஹிணிகோ மத³ம்ʼஶை-
ராஸ்தே ப³லம்ʼ து³ர்விஷஹம்ʼ யதூ³னாம் .. 14..

மிதோ² யதை³ஷாம்ʼ ப⁴விதா விவாதோ³
மத்⁴வாமதா³தாம்ரவிலோசனானாம் .
நைஷாம்ʼ வதோ⁴பாய இயானதோ(அ)ன்யோ
மய்யுத்³யதே(அ)ந்தர்த³த⁴தே ஸ்வயம்ʼ ஸ்ம .. 15..

ஏவம்ʼ ஸஞ்சிந்த்ய ப⁴க³வான்ஸ்வராஜ்யே ஸ்தா²ப்ய த⁴ர்மஜம் .
நந்த³யாமாஸ ஸுஹ்ருʼத³꞉ ஸாதூ⁴னாம்ʼ வர்த்ம த³ர்ஶயன் .. 16..

உத்தராயாம்ʼ த்⁴ருʼத꞉ பூரோர்வம்ʼஶ꞉ ஸாத்⁴வபி⁴மன்யுனா .
ஸ வை த்³ரௌண்யஸ்த்ரஸஞ்ச்சி²ன்ன꞉ புனர்ப⁴க³வதா த்⁴ருʼத꞉ .. 17..

அயாஜயத்³த⁴ர்மஸுதமஶ்வமேதை⁴ஸ்த்ரிபி⁴ர்விபு⁴꞉ .
ஸோ(அ)பி க்ஷ்மாமனுஜை ரக்ஷன் ரேமே க்ருʼஷ்ணமனுவ்ரத꞉ .. 18..

ப⁴க³வானபி விஶ்வாத்மா லோகவேத³பதா²னுக³꞉ .
காமான் ஸிஷேவே த்³வார்வத்யாமஸக்த꞉ ஸாங்க்²யமாஸ்தி²த꞉ .. 19..

ஸ்னிக்³த்³த⁴ஸ்மிதாவலோகேன வாசா பீயூஷகல்பயா .
சரித்ரேணானவத்³யேன ஶ்ரீநிகேதேன சாத்மனா .. 20..

இமம்ʼ லோகமமும்ʼ சைவ ரமயன் ஸுதராம்ʼ யதூ³ன் .
ரேமே க்ஷணத³யா த³த்தக்ஷணஸ்த்ரீக்ஷணஸௌஹ்ருʼத³꞉ .. 21..

தஸ்யைவம்ʼ ரமமாணஸ்ய ஸம்ʼவத்ஸரக³ணான் ப³ஹூன் .
க்³ருʼஹமேதே⁴ஷு யோகே³ஷு விராக³꞉ ஸமஜாயத .. 22..

தை³வாதீ⁴னேஷு காமேஷு தை³வாதீ⁴ன꞉ ஸ்வயம்ʼ புமான் .
கோ விஶ்ரம்பே⁴த யோகே³ன யோகே³ஶ்வரமனுவ்ரத꞉ .. 23..

புர்யாம்ʼ கதா³சித்க்ரீட³த்³பி⁴ர்யது³போ⁴ஜகுமாரகை꞉ .
கோபிதா முனய꞉ ஶேபுர்ப⁴க³வன்மதகோவிதா³꞉ .. 24..

தத꞉ கதிபயைர்மாஸைர்வ்ருʼஷ்ணிபோ⁴ஜாந்த⁴காத³ய꞉ .
யயு꞉ ப்ரபா⁴ஸம்ʼ ஸம்ʼஹ்ருʼஷ்டா ரதை²ர்தே³வவிமோஹிதா꞉ .. 25..

தத்ர ஸ்னாத்வா பித்ரூʼன் தே³வான் ருʼஷீம்ʼஶ்சைவ தத³ம்ப⁴ஸா .
தர்பயித்வாத² விப்ரேப்⁴யோ கா³வோ ப³ஹுகு³ணா த³து³꞉ .. 26..

ஹிரண்யம்ʼ ரஜதம்ʼ ஶய்யாம்ʼ வாஸாம்ʼஸ்யஜினகம்ப³லான் .
யானம்ʼ ரதா²னிபா⁴ன்கன்யா த⁴ராம்ʼ வ்ருʼத்திகரீமபி .. 27..

அன்னம்ʼ சோருரஸம்ʼ தேப்⁴யோ த³த்த்வா ப⁴க³வத³ர்பணம் .
கோ³விப்ரார்தா²ஸவ꞉ ஶூரா꞉ ப்ரணேமுர்பு⁴வி மூர்த⁴பி⁴꞉ .. 28..

———————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூக பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ கிருஷ்ண த்வைபாயன பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நாரத பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply