ஸ்ரீ ராமர் அஷ்டகம்–ஸ்ரீ வேத வியாசர் அருளியது–

ஸ்ரீ ராமர் அஷ்டகம்–ஸ்ரீ வேத வியாசர் அருளியது

பஜே விசேஷ சுந்தரம் ஸமஸ்தபாப கண்டனம்
ஸ்வ பக்த சித்தரஞ்ஜனம் ஸ தைவ ராம மத்வயம்–1-

அதீதமான அழகுள்ளவரும், அனைத்துப் பாவங்களையும் போக்குபவரும்,
தனது பக்தர்களின் மனதை களிக்கச் செய்கிறவருமான ஸ்ரீராமனை பூஜிக்கிறேன்.

ஜடாகலாப சோபிதம் ஸமஸ்த பாப நாஸனம்
ஸ்வ பக்த பீதி பஜ்ஜனம் பஜேஹராம மத்வயம்–2-

அழகான திருமுடியினை உடையவரும், எல்லாப் பாவங்களையும் அழிப்பவரும்,
தன் பக்தர்களின் பயத்தைப் போக்குகின்றவருமான இணையற்ற ஸ்ரீராமனை துதிக்கிறேன்.

நிஜ ஸ்வரூப போதகம் க்ருபாகரம் பவாபஹம்
ஸமம் சிவம் நிரஞ்ஜனம் பஜேஹ ராமமத்வயம்–3-

ஆன்மாவின் வடிவினை உணர்த்தி உபதேசிப்பவரும், கருணைக்கடலும், பிறப்பு இறப்பு என்ற பயத்தைப் போக்குபவரும்,
எங்கும் எப்போதும் ஒரே சம நிலையிலிருப்பவரும், மங்களத்தைச் செய்கிறவரும், தோஷமற்றவரும்,
இணையற்றவருமான ஸ்ரீராமனை வணங்குகிறேன்.

ஸப்ரபஞ்ச கல்பிதம் ஹ்யநாமரூப வாஸ்தவம்
நிராக்ருதிம் நிராமயம் பஜேஹ ராமமத்வயம்–4-

உலகத்தையே காப்பவரும் நாமரூப மற்றவரும், எப்பொழுதுமுள்ளவரும், உருவமற்றவரும்,
அழிவற்றவரும், இணையற்றவருமான ஸ்ரீராமனை நமஸ்கரிக்கிறேன்.

நிஷ்ப்ரபஞ்ச நிர்விகல்ப நிர்மலம் நிராமயம்
சிதேகரூப ஸந்ததம் பஜேஹ ராமமத்வயம்–5-

பந்த பாசங்களுக்கு அப்பாற்பட்டவரும், நிர்குணமானவரும், பாபமற்றவரும், அழிவற்றவரும்,
ஒளிமயமானவரும், இணையற்றவருமான ஸ்ரீராமனை பூஜிக்கிறேன்.

பவாப்தி போதரூபகம் ஹ்யசேஷ தேஹ கல்பிதம்
குணாகரம் க்ருபாகரம் பஜேஹ ராம மத்வயம்–6-

சம்சார சாகரத்தினைக் கடக்க உதவும் தோணி போன்றவரும், எல்லோருடைய ஆன்மாவிலும் வியாபித்துள்ளவரும்,
குணங்களுக்கு இருப்பிடமானவரும், கருணைக் கடலும் இணையற்றவருமான ஸ்ரீராமனை போற்றுகிறேன்.

மஹாவாக்ய போதகைர் விராஜமான வாக்பதை
பரப்ரஹ்மவ்யாபகம் பஜேஹ ராமமத்வயம்–7-

மஹா வாக்கியத்தின் பொருளை வெளிப்படுத்துகின்ற சிறந்த சொற்களால் கூறப்படும் பரப்பிரம்மமாயும்,
எங்கும் நிறைந்திருப்பவராகவும், இணையற்றவருமாக உள்ள ஸ்ரீராமனை பூஜிக்கிறேன்.
(பரமசிவன் தேவி பார்வதியிடம் ராம என்ற மகாவாக்கியத்தை மூன்று முறை சொன்னாலே போதும்,
அது ஆயிரம் திருநாமங்களால் வழிபட்டதற்குச் சமம் என்று கூறியதை நினைவில் கொள்ளலாம்.)

சிவப்ரதம் ஸுகப்ரதம் பவச்சிதம் ப்ரமாபஹம்
விராஜமான தேசிகம் பஜேஹ ராமமத்வயம்–8-

நன்மைகளைக் கொடுப்பவரும், சுகத்தை அளிப்பவரும், ஜனனமரண பயத்தைப் போக்குபவரும்,
அஞ்ஞானத்தை அழிப்பவரும், ஆசார்யனாய் பிரகாசிக்கிறவரும், இணையற்றவருமான ஸ்ரீராமனை துதிக்கிறேன்.

ராமாஷ்டகம் படத்யஸ்ஸுக கரம் ஸீபுண்யம் வ்யாஸேன பாஷித மிதம் ஸ்ருனுதே மனுஷ்ய
வித்யாம் ஸ்ரியம் விபுல ஸெளக்ய மனந்த கீர்த்தி ஸம்ப்ராவ்ய தேஹவிலயே லபதேச மோக்ஷம் –8-

வியாசரால் சொல்லப்பட்டதும், எளிமையானதும், ஏராளமான புண்ணியத்தைத் தருவதுமான
இந்த ராமாஷ்டகத்தைப் படிக்கிற, கேட்கிற எவரும் கல்வி, செல்வம், கலை, அளவற்ற சுகம்,
சர்வமங்களம் மற்றும் மங்காத புகழையடைந்து முடிவில் மோட்சத்தையும் பெறுவார் என்பது நிச்சயம்!

ஸ்ரீ ராம புஜங்காஷ்டகம் ஸம்பூர்ணம்

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாசர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத சத்ருக்ந லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading