ஸ்ரீ நம் ஆழ்வார் அனுபவிக்கும் ஸ்ரீ நம் ஆழ்வார் -ஸ்ரீ திருவாய் மொழி –எட்டாம் பத்து –

பெரிய வப்பனைப் பிரமனப்பனை உருதிரனப்பனை முனிவர்க்
குரியவப்பனை யமரரப்பனை உலகுக்குகோர் தனியப்பனை தன்னை
பெரிய வண் குருகூர்ச் சடகோபன் -8-1-11-

பெரிய அப்பனை –
உபய விபூதிகளையும் உடையவனை

பிரமன் அப்பனை –
சதுர்தச புவன -பதினான்கு உலகுக்கும் ஈஸ்வரனான ப்ரஹ்மாவுக்கும் உத்பாதகனானவனே –
தந்தை யானவனே

உருத்திரன் அப்பனை –
பிரமன் புத்ரனான உருத்திரனுக்கும் நிர்வாஹகன் ஆனவனே –

நான்முகனை நாராயணன் படைத்தான் நான் முகனும்
தான் முகமாய் சங்கரனைத் தான் படைத்தான் –
மலர் வந்த நான் முகன் திரு மைந்தன் அவன் மைந்தன் மதி சூடி –

முனிவர்க்கு உரிய அப்பனே –
சனகன் முதலிய மகரிஷிகளுக்கு ப்ரஹ்ம பாவனையே ஆகையாலே முனிவர்க்கு உரிய அப்பனே -என்கிறது
உரிய -என்று
அணுமையைச் சொன்னபடி

அமரர் அப்பனை –
தேவர்களுக்கு உத்பாதகனானவனை -தந்தை யானவனை

உலகிற்கு ஒரு தனி அப்பன் தன்னை
இப்படி பிரித்து சொல்லுகிறது என் –
சகல -எல்லா உலகங்கட்கும் ஏக -ஒரே நிர்வாஹகன் ஆனவனை
பூதா நாம் யோ அவ்யய பிதா -எல்லா பிராணிகட்கும் அழியாத தந்தை என்று அன்றோ இருப்பது
இப்போது இவை சொல்லுகிறது என் என்னில்
பெரிய நிதி எடுத்தவன் இன்னது கண்டேன் இன்னது கண்டேன் -என்னுமா போலே –
ஸ்வரூபத்திலும் குணத்திலும் அதி சங்கை -ஐயம் கொண்ட போது இழந்தாராய்
இருந்தனவற்றைப் பெறுகையாலே இவற்றைப் பிரித்து சொல்லுகிறார்
முனிவர்க்கு உரிய அப்பனை என்றதனால் ஆஸ்ரித -அடியார்க்கு பரதந்த்ரப் பட்டு இருக்கும்
தன்மையை சொல்லுகிறது-

பெரிய வண் குருகூர் –
ரக்ஷகன் -காப்பவன் தாழ்ந்தவாறே ஐயம் கொள்ளுகையும்-உபகார ஸ்ம்ருதியாலே –
செய் நன்றி நினைவாலே ஹ்ருஷ்டராகையும் -உவகையர் ஆகையும் ஆகிற இவற்றுக்கு அடி –
அவ் ஊரில் பிறப்பு என்கை

வண் சடகோபன் –
மானச அனுபவ மாத்ரமாய் விடாதே -பிரபந்தமாக செய்து கொடுத்த ஔதார்யம்

———————-

பாத மடைவதன் பாசத்தாலே மற்ற வன் பாசங்கள் முற்ற விட்டு
கோதில் புகழ்க் கண்ணன் தன்னடி மேல் வண் குருகூர் சடகோபன்-8-2-11-

பாதம் அடைவதன் பாசத்தாலே மற்ற வல் பாசங்கள் முற்ற விட்டு –
திருவடிகளை கிட்டுகையில் உண்டான சங்கத்தாலே -விருப்பத்தாலே புறம்பு உண்டான
வலிய பற்றுக்களை அடியோடே விட்டார்
இது வாயிற்று இத் திருவாய் மொழியில் சொல்லிற்று ஆயிற்று-என்றது
புறம்பு உண்டான பற்றுக்களை அற்று திருவடிகளை ஆசைப் பட்டவர் அல்லர் –
மாற்பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள் கை விட்டு -மூன்றாம் திருவந்தாதி -14 என்றபடியே
திருவடிகளின் பற்றாலே -ஓவ்பாதிகமான -ஒரு காரணம் பற்றி வந்த -பாஹ்ய சங்கத்தை -புறம்பு உண்டான
பற்றினைத் தவிர்ந்தவர் -என்றபடி

கோது இல் புகழ் –
திருவடிகளில் சங்கத்துக்கு -பற்றுக்கு காரணம் அவனுடைய கல்யாண குணங்கள் –
குணங்களுக்கு கோதாவது-தன்னை ஒழிய புறம்பேயும் நசை செய்யும்படி இருக்கை

கண்ணன் தன் அடி மேல் வண் குருகூர் சடகோபன் சொன்ன –
இப் புகழ்களை உடைய கிருஷ்ணன் திருவடிகளில் ஆயிற்று சொல்லிற்று
பரம உதாரரான ஆழ்வார்

————-

உரையா வெந்நோய் தவிர அருள் நீண் முடியானை
வரையார் மாட மன்னு குருகூர்ச் சடகோபன்-8-3-11-

உரையா வெந்நோய் –
வாசா மகோசரமாய் -சொல்லுதற்கு முடியாததாய் -அதி குரூரமான -மிகக் கொடியதான நோய்
தம் அளவில் சாத்மிக்கை -பொறுத்தல் அன்றிக்கே
உபய விபூதி நாதனுக்கு என் வருகிறதோ என்று அஞ்சின நோயே அன்றோ –

தவிர அருள் நீண் முடியானை –
இது போகும்படிக்கு தகுதியாக திருவருள் புரியும் தன்மையனான-உபய விபூதி நாதனை –
இவர் அச்சம் போகும்படி -நீர் அபேக்ஷித்த விரும்பிய காரித்தைச் செய்கிறோம் என்று தலையை
துலுக்கினான் போலே காண் –-என்று அம்மங்கி அம்மாள் அருளிச் செய்வர்
அன்றிக்கே
இவ் ஆழ்வார் உடைய பயம் நீங்கிய பின் பாயிற்று உபய விபூதிக்கும்
ரஷகனாய் சூடிய முடியும் நிலை நின்றதாயிற்று -என்ற படியுமாம்

வரையார் மாட மன்னு குருகூர்ச் சடகோபன் –
இவர் அச்சம் நிவ்ருத்தம் -நீங்கின வாறே சம்ருத்தமாய் -நிறைவு பெற்றதுமாய் -ஸ்திரமுமாய் –
நிலை உள்ளதுமாயிற்று திரு நகரியும்

————-

தேனை நன் பாலைக் கன்னலை யமுதைத் திருந்துல குண்ட வம்மானை
வான நான்முகனை மலர்ந்த தண் கொப்பூழ் மலர்மிசைப் படைத்த மாயோனை
கோனை வண் குருகூர் சடகோபன்-8-4-11-

தேனை நன் பாலைக் கன்னலை யமுதைத் –
பய சங்கா ஹேதுக்கள்- இவர் ஐயம் கொண்டு அஞ்சுதற்கு உரிய காரணங்கள் சொல்லப் படுகின்றன
அவனுடைய இனிமை அன்றோ இவரை அஞ்சப் பண்ணுகிறது –
எனக்கு எல்ல வித இனிய பொருள்களும் ஆனவனே
சர்வ ரச -என்னக் கடவது அன்றோ –
மேலே பய நிவ்ருத்தி ஹேதுக்கள் -அச்சம் நீங்குவதற்கு உரிய காரணங்கள் சொல்லப் படுகின்றன –

திருந்துலகுண்ட வம்மானை –
கட்டளைப் பட்ட உலகத்தை பிரளயத்தில் அழியாதபடி
திரு வயிற்றிலே வைத்து பரிஹரித்த பாதுகாத்த பெரியோனே –

வான நான்முகனை மலர்ந்த தண் கொப்பூழ் மலர்மிசைப் படைத்த மாயோனை –
கொப்பூழ் மலர்ந்த தண்- மலர்மிசை -வான நான்முகனை -படைத்த மாயோனை –
வானிலே இருக்கிற பிரமனை படைப்பிற்கு தகுதியாக
செவ்வியை உடைத்தாய் திரு நாபி கமலத்தில் படைத்த
ஆச்சர்யத்தை உடையவனை –

கோனை –
நிருபாதிக சேஷியை -காரணம் பற்றாத தலைவனை –
மேலே பிரமன் சிவன் இவர்களுக்கு சொன்ன ஐக்யம் ஸ்வரூபத்தால் அன்று –
கார்ய காரண பாவத்தால் சொல்லிற்று என்னும் இடம் இங்கே ஸ்பஷ்டம் -தெளிவாகும் –

ஆபத்துக்கு துணைவனாய்-சஹனாய் -உலகு உண்ட அம்மானாய் –
அழிந்தவற்றை உண்டாக்க வல்லனாய் -மலர்மிசை படைத்த மாயோனாய் –ப்ராப்தனாய் –
சம்பந்தத்தை உடையவனாய் -கோனை –என்கை-

—————–

எங்கே காண்கேன் ஈன் துழாய் அம்மான் தன்னை யான் என்று என்று
அங்கே தாழ்ந்த சொற்களால் அந்தண் குருகூர்ச் சடகோபன்–8-5-11-

எங்கே காண்கேன் ஈன் துழாய் அம்மான் தன்னை யான் –
ஈன் துழாய் அம்மான் தன்னை யான் எங்கே காண்கேன்-
ஐஸ்வர்ய ஸூசகமான -இறைமை தன்மைக்கு அறிகுறியான திருத் துழாய் மாலை உடைய சர்வேஸ்வரனை
கண்டு தரிக்க மாட்டாதபடி சபலனான ஆசை உடையனான -யான் எங்கே காணக் கடவேன் –

என்று என்று –
பரத்வம் முதலானவற்றை பெறாத நான்
உன்னை நிரந்தரமாக -எக் காலத்திலும் சொல்லி
ஒரு கால் சொல்லி ஆசையை வெளிப்படுத்தினோம் அன்றோ என்று ஆறி இருக்கிறார் அல்லரோ
லாபத்து அளவும் சொல்லும் இத்தனை அன்றே ஆதலின் என்று என்று -என்கிறார் –

அங்கே தாழ்ந்த சொற்களால் –
தோளும் தோள் மாலையிலும் அந்த சேஷித்வத்திலும் -இறைவன் தன்மையில்
ஈடுபட்ட சொற்களாலே –

அந் தண் குருகூர்ச் சடகோபன் –
உபதிஷ்டந்து மாம் சர்வே வியாதய பூர்வ சஞ்சிதா
அன்ருண அஹம் கமிஷ்யாமி தத் விஷ்ணோ பரமம் பதம் -மகா பாரதம்
தனக்கு கிலேசம் உண்டானால் கர்ம பலம் கிருபா பலம் என்றாதல் பிறக்கும் பிரீதியும் -ஸ்ரீ வசன பூஷணம்
சலியாது இருக்கையாலே ஊரும் தழைத்தது
இவ்வாற்றாமைக்கு எல்லாம் ஆடல் கொடுத்த ஆழ்வார் -இடம் கொடுத்த ஆழ்வார் -ஆளவந்தார் நிர்வாஹம்

——————-

சோலைத் திருக் கடித் தானத்துறை திரு
மாலை மதிட் குருகூர்ச் சடகோப சொல்–8-6-11-

சோலைத் திருக் கடித் தானத்துறை திரு மாலை –
ஸ்ரமஹரமாய் -ஸ்ரமத்தைப் போக்குவதாய்-தர்ச நீயமான -காட்சிக்கு இனியதான
சோலையை உடைய திருக் கடித் தானத்திலே
நித்ய வாசம் செய்கிற ஸ்ரீ யப்பதியை -திருமகள் கேள்வனை –

மதிட் குருகூர்ச் –
சம்சாரம் காரணமாக உண்டாகிற பாப கூட்டங்களுக்கு துரிதங்களுக்கு -புக ஒண்ணாத
அரணை உடைய திருநகரி –

சடகோப சொல் –
ரகுவர சரிதம் முனிப்ரணீதம் -பால -2-43-ஸ்ரீ வால்மீகி முனிவராலே சொல்லப் பட்ட
ஸ்ரீ ராகவனுடைய சரிதை –என்னுமாறு போலே –

—————

சுடர்ப் பாம்பணை நம் பரனைத் திருமாலை
அடிச்சேர் வகை வண் குருகூர்ச் சடகோபன்-8-7-11-

கண்ணில் விடமுடைய தொரு பாம்பு போலே திட்டியின் விடமன்ன கற்பின் செல்வியை
விட்டிலையோ இது விதியின் வண்ணமே -கம்பர் கும்பகர்ண வதைப் படலம் -60-

சுடர்ப் பாம்பணை நம் பரனைத் திரு மாலை –
இப் பத்தும் கற்றார்க்கு
பிறவி அறுகை அன்றோ பலமாக சொல்லுகிறது
அதனால் சென்று அனுபவிக்கும் பேற்றினைச் சொல்லுகிறது –
பர்யங்க வித்தையில் சொல்லுகிறபடியே
திரு வநந்த ஆழ்வான் மடியிலே
பெரிய பிராட்டியார் உடன் எழுந்தருளி இருக்கக் கண்டு அனுபவிக்கை அன்றோ முக்த ப்ராப்ய போகம் –
முக்தனாலே அடையப் படுகின்ற இன்பம் தான் –

அடிச்சேர் வகை வண் குருகூர்ச் சடகோபன் –
திருவடிகளில் சேருகையே தமக்கு ஸ்வபாவமாக உடைய ஆழ்வார் –
அன்றிக்கே –
அடிச்சேர் வகை முடிப்பான் -என்றுமாம் –
ஞான ஆநந்தங்கள் அன்று இவருக்கு நிரூபகம்
சேஷத்வமே -அடிமையே ஆயிற்று-

——————

தெருளும் மருளும் மாய்த்துத் தன் திருந்து செம் பொற் கழல் அடிக் கீழ்
அருளி இருத்தும் அம்மானாம் அயனாம் சிவனாம் திருமாலால்
அருளப் பட்ட சடகோபன்-8-8-11-

தெருளும் மருளும் மாய்த்துத்
ப்ரஹ்மாவின் ராஜசம் அடியாக வந்த குத்ருஷ்டி ஞானமானதும் –
சிவனுடைய தாமச ஞானம் அடியாக வந்த ஆகமம் முதலான பாஹ்ய – புற ஞானம் ஆகிற அஞ்ஞானமும் மாய்த்து –
அன்றிக்கே
ஸ்வ தம்முடைய அனுபவத்துக்கு விரோதியான-ப்ராக்ருத
இவ் வுலக விஷயமான ஞான அஞ்ஞானங்களை வாசனையோடு போக்கி -என்னுதல்
அந்யதா ஞானம் -பிறர் தெய்வங்கட்கு தன்னை அடிமை என்று நினைத்தல்
விபரீத ஞானம் -தனத்து தானே உரியன் என்றும் கைவல்ய அனுபவ புத்தியையும் -இவற்றைப் போக்கி என்னுதல்

தன் திருந்து செம் பொற் கழல் அடிக் கீழ் –
ஆஸ்ரிதரை -அடியார்களை வேறு ஒருவர் காலில் குனிய விடாததாய் –ஸ்ப்ருஹணீயமாய் –
விரும்பத் தக்கதாய் –
வீரக் கழலை உடைத்தான-திருவடிக் கீழ்
இப்போதைய வீரக் கழல்
பிராட்டி முன்னாக ஆஸ்ரயித்தாரை அடைந்தாரை அவன் கையிலும் பிறர் கையிலும் காட்டிக் கொடாத வீரக் கழல் –

அருளி இருத்தும் –
கேவல கிருபையாலே இருத்தும் –

அம்மானாம் அயனாம் சிவனாம் திருமாலால் –
பிரமன் சிவன் முதலிய எல்லா ஆத்மாக்களுக்கும் நிர்வாஹகனாய்
சர்வேஸ்வரனான ஸ்ரீ யபதியாலே- திருமகள் கேள்வனாலே-

அருளப் பட்ட சடகோபன் –
மயர்வற மதிநலம் அருளினான் -என்றபடியே அருளுக்கு விஷய பூதரான -பாத்ரமான ஆழ்வார் –
இந்த அருளுக்கு வாய்த்தலை –பிறப்பிடம் -பிராட்டி ஆதலால்-திருமாலால் -என்கிறார் –

————–

நேர் பட்ட நிறை மூ வுலகுக்கும் நாயகன் தன்னடிமை
நேர் பட்ட தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் சொல்-8-9-11-

நேர் பட்ட நிறை மூவுலகுக்கும் நாயகன் தன் –
குறைவு அற்ற மூன்று உலகங்கட்கும் நேர் பட்ட நாயகன்
த்ரை லோக்யம் அபி நாதேந யேந ஸ்யாந்நாத வத்தரம்
எந்த நாதனால் மூன்று உலகங்களும் நல்ல நாதனை உடையவன ஆகுமோ -என்கிறபடியே
ரஷ்ய வர்க்கத்து -பாது காக்கப் படுகின்ற பொருள்களின் அளவு அன்றிக்கே இருக்கிற-ரக்ஷகத்வ –
பாது காக்கின்ற தன்மையின் துடிப்பு
இதனால் நாயகன் படி சொல்லிற்று –
அனுரூபஸ் ச வை நாத -அந்த இராமன் தகுந்த நாதன் என்னுமா போலே

அடிமை நேர்பட்ட தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் –
இதனால் இவர் படி சொல்கிறது –
அவன் சேஷித்வத்துக்கு இறைவனாம் தன்மைக்கு எல்லை ஆனால் போன்று
இவர் சேஷத்வத்துக்கு -அடிமையாம் தன்மைக்கு எல்லை யாம்படி –

———————

நல்ல கோட்பாட்டுலகங்கள் மூன்றின் உள்ளும் தான் நிறைந்த
அல்லிக் கமலக் கண்ணனை அந்தண் குருகூர்ச் சடகோபன்-8-10-11-

நல்ல கோட்பாட்டுலகங்கள்-
இவர் பாகவதர்களுக்கு அடிமைப் பட்டு இருத்தலே-ததீய சேஷத்வமே பரம புருஷார்த்தம் -மிக மேலான பேறு -என்று
நெடுமாற்கு அடிமை -என்னும் திருவாய்மொழி -அருளிச் செய்த பின்பு காணும் உலகம் கட்டளைப் பட்டது –

மூன்றின் உள்ளும் தான் நிறைந்த-
வியாப்தியும் -பரந்து இருக்கும் தன்மையும் தேவை ஆகை அன்றிக்கே புதுக் கணித்தது
அடியார்க்கு அடிமைப் பட்டு இருத்தல் ஆகிய ஞானம் உடையவர்கள் உடைய மனத்தில்
இருக்கையாலே வ்யாப்தியும் தேவையாய் இராதே புதுக் கணித்தது –

அல்லிக் கமலக் கண்ணனை-
இவர் தன்னைப் பற்றினாரைப் பற்றி விரும்ப விரும்ப திருக் கண்களும் சிவந்து புதுக் கணித்தது –

அந்தண் குருகூர்ச் –
ஊரும் தர்ச நீயமாய் -காண்பதற்கு இனியதாய்-ஸ்ரமஹரமாய் – ஸ்ரமத்தை போக்கக் கூடியதாயிற்று –

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading