ராஸ லீலைக்குத் தக்க மீட்டரிலே ஸ்லோகங்கள்-ப்ரக்ருதி சார்ந்த சந்தஸ்
கேஸ பாஸ த்ருத பிஞ்சி காவி ததி சஞ்சலன் மகர குண்டலம்
ஹார ஜால வனமாலி கால லிதம் அங்க ராக கன ஸுவ்ரபம்
பீத சேல த்ருத காஞ்சி காஞ்சிதம் உதஞ்ச தம்ஸூ மணி நூபுரம்
ராஸ கேலி பரி பூஷிதம் தவ ஹி ரூபமீஸ கல யாமிஹ –1-
தலையில் மயில் பீலியுடனும் -காதுகளில் மகர குண்டலங்களுடனும் -கழுத்தில் முத்து மாலைகளும் –
வன மாலையும் அசைய -பீதாம்பரமும் ஒட்டியாணமும் ரத்தினங்கள் இழைக்கப்பட்ட கொலுசுகளும் அணிந்து
வாசனைப் பொடிகள் முதலியவற்றால் மணம் வீசும் சரீரத்துடன் ராஸ க்ரீடைக்காக
அலங்கரிக்கப் பட்ட தங்கள் திரு மேனியைத் தியானிக்கிறேன் –
——–
தாவ தேவ க்ருத மண்டநே கலித கஞ்சு லீக குச மண்டலே
கண்ட லோல மணி குண்டலே யுவதி மண்டலே அதி பரி மண்டலே
அந்தரா ஸகல ஸூந்தரீ யுகலம் இந்திரா ரமண சஞ்சரன்
மஞ் ஜுலாம் ததநு ராஸ கேலிம் அயி கஞ்ஜ நாப சமு பாததா –2-
கஞ்ஜ நாப-நாபியில் நான்முகனைப் படைத்த பராத்பரன்
அப்போதே மார்புக் கச்சையை இறுக்கிக் கட்டிக் கொண்டு தங்களை அணி கலன்களால்
அலங்கரித்துக் கொண்டு கோபியர் உங்களைச் சுற்றி வட்டமாய் நின்றார்கள்
தாங்களும் அப் பெண்களின் இடையே -இரு கோபியர்களுக்கு நடுவில் ஒரு கிருஷ்ணன் –
இரு கிருஷ்ணருக்கு நடுவில் ஒரு கோபிகை -என்னும் படி நின்று கொண்டு
நர்த்தனம் செய்து கொண்டு ராஸ க்ரீடை செய்ய ஆரம்பித்தீர்கள் –
———
வாஸூ தேவ தவ பாஸமாந மிஹ ராஸ கேலி ரஸ ஸுவ்ரபம்
தூரதோ அபி கலு நாரதா கதிதம் ஆகலய்ய குது காகுலா
வேஷ பூஷண விலாஸ பேசலே விலாஸிநீ சதசம் ஆவ்ருதா
நாகதோ யுக பத் ஆகதா வியதி வேகதோ அத ஸூர மண்டல –3-
வாஸூ தேவரின் புத்ரனே -நாரதர் தங்கள் ராஸ க்ரீடையின் அழகை கூறினார் –
அதைக் கேட்டு ஸந்தோஷம் அடைந்த தேவர்கள்
அழகு ஆபரணம் இவற்றால் சிறந்த தேவ மங்கையர் உடன் வேகமாய் வந்து ஆகாசத்தில் சூழ்ந்து நின்றனர் –
—————-
வேணு நாத க்ருத தாந தாந கலகா நரகா கதி யோஜநா
லோப நீய ம்ருது பாத பாத க்ருத தால மேலந மநோ ஹரம்
பாணி ஸம் க்வணித கங்கணம் ச முஹுரம் ச லம்பி தகராம் புஜம்
ஸ்ரோணி பிம்ப சல தம்பரம் பஜத ராஸ கேலி ரஸ டம்பரம் –4–
உமது புல்லாங்குழலில் இருந்து மதுரமான இசை உண்டானது -அழகிய ஸ்வரங்களுடன் –
சிறப்பான ராகங்களுடன் -மனோகரமான ஆலோபனங்கள் உடன் இனிமையான இசை உண்டானது –
அந்த இசைக்கு ஏற்ப கால்கள் தாளம் இட்டன -கை வளைகள் ஒலி எழுப்பின –
இடுப்பில் உள்ள ஆடைகள் அசைய தாமரை போன்ற கைகளைத் தோள்களில் வைத்துக் கொண்டு
இருக்கும் இந்த ராஸ க்ரீடையின் சேவையை மனத்தில் இருந்து சேவிப்போம் –
———-
ஸ்பர் தயா விரசித அநு காந க்ருத தார தார மதுர ஸ்வரே
நர்தநே அத லலி தாங்க ஹார லுலித அங்க ஹார மணி பூஷணே
சம்மதே ந க்ருத புஷ்ப வர்ஷ மல முந் மிஷத் திவிஷதாம் குலம்
சின் மயே த்வயி நிலீய மான மிவ சம்மு மோஹ சவ தூகுலம் –5-
இனிமையான இசையை மேல் ஸ்தாயியில் பாடிக் கொண்டு பின்னணிக் கொத்து என்ற நடனம் ஆரம்பித்து –
நடனத்தின் அசைவின் போது அனைவரும் அணிந்து இருந்த ஆபரணங்கள் இடம் மாறி நகர்ந்து
மிக அழகாய் இருந்தது – தேவர்கள் பூ மாரி பொழிந்து மனம் மயங்கினர் –
தேவ மங்கைகளும் மனம் மயங்கினர் –
————-
ஸ்விந்ந சந்ந தநு வல்ல ரீதத நு காபி நாம பஸூ பங்காநா
காந்தம் அம்சம் அவலம்பதே ஸ்ம தவ தாந்தி பார முகு லேஷணா
காசிதா சலித குந்தலா நவ படீர சார கன ஸுவ்ரபம்
வஞ்சநேந தவ சஞ்சு சும்ப புஜம் அஞ்சி தோரு புல காங்குரா –6-
வியர்த்துக் களைத்த அழகான கோபிகை ஒருத்தி சோர்வுடன் நடனம் செய்ய முடியாமல்
உமது தோளைப் பிடித்துக் கொண்டு தொங்கினாள் –
முன் நெற்றிக் குழல்கள் கலைந்த ஒரு கோபிகை மயிர்க் கூச்சலுடன் சந்தன மணம்
வீசும் தங்கள் கைகளை முத்தம் இட்டன —
——–
காபி கண்ட புவி சந்நிதாய நிஜ கண்ட மா குலித குண்டலம்
புண்ய பூர நிதி ரன்வ வாப தவ பூக சர்விதர சாம்ருதம்
இந்திரா விஹ்ருதி மந்த்ரம் புவன ஸூந்தரம் ஹி நட தாந்தரே
த்வா மவாப்ய தது ரங்க நா கிமு ந சம்மதோன மதத சாந்தரம் –7–
அதிர்ஷ்ட சாலியான ஒரு கோபிகை குண்டலங்கள் ஆடும் தன்னுடைய கன்னத்தை உம்முடைய
கன்னங்கள் உடன் இணைத்து உமது வாயில் இருந்து தாம்பூலத்தைப் பெற்று அதை உரிஞ்சி சுவைத்தாள்
உலகிலேயே அழகியாவானவனும் ஸ்ரீ மஹா லஷ்மி தாயார் விளையாடும் திரு மார்பை உடையவனுமான
தங்களை அடைந்த அப் பெண்கள் நர்த்தனத்தின் போது பலவித சுக மான நிலைகளை அடைந்தார்கள் –
———-
கான மீச விரதம் க்ரமேண கில வாத்ய மேலநமு பாரதம்
ப்ரஹ்ம சம்மத ரஸா குலா ஸதஸி கேவலம் நன்ருதுர் அங்கநா
நாவிதந் நபி ச நீவி காம் கிமபி குந்தலீ மபி ச கஞ்சு லீம்
ஜ்யோதிஷாம் அபி கதம்பகம் திவி விலம்பிதம் கிம் அபரம் ப்ருவே –8–
பாட்டு நின்றது -வாத்தியங்களும் ஓய்ந்தன -ப்ரஹ்மானந்த ரஸத்தில் மூழ்கிய கோபிகள்
மட்டும் ஆடிக் கொண்டு இருந்தனர் -அவர்கள் மேலாடை கலைந்ததையோ ரவிக்கை அவிழ்வதையோ
கச்சத்தின் முடிச்சு அவிழ்வதையோ அறிய வில்லை –
வானில் நக்ஷத்ர கூட்டங்களும் நின்று விட்டன-என்ன சொல்வேன் –
——-
மோத ஸீம்நி புவனம் விலாப்ய விஹ்ருதம் ஸமாப்ய ச ததா விபோ
கேலி ஸம் ம்ருதித நிர் மலாங்க நவ கர்ம லேச ஸூப காத்ம நாம்
மன்மத அஸஹ ந சேதஸாம் பஸோப யோஷி தாம் ஸூஹ்ருத சோதிதஸ்
தாவத் ஆகலித மூர்திர ஆததித மார வீர பரம உத்ஸவான் — 9-
அகில உலகங்களையும் ப்ரஹ்மானந்தத்தில் மூழ்கச் செய்து விளையாட்டையும் முடித்தீர்கள் -நடனம் ஆடியதால் உண்டான வியர்வைத் துளிகளுடன் கோபிகள் மனம் மயங்கினர்
அங்கு எத்தனை கோபிகள் இருந்தார்களோ அத்தனை கிருஷ்ணனாக வந்து
அவர்களைக் களிக்கச் செய்து அருளினீர் –
———-
கேலி பேத பரி லோலிதாபிர் அதி லாலிதாபிர் அபலாலிபி
ஸ்வைர மீச நநு ஸூர ஜாப யஸி சாரு நாம விஹ்ருதம் வியதா
காநநே அபி நிஷா விஸாரி சீதல கிசோர மாருத மநோ ஹரே
ஸூந ஸுவ்ரப மயே விலே சித விலாஸநீ சத விமோஹ நம் –10-
ஸூர ஜாப-சூர்யன் மகள் யமுனை
மிகவும் அழகான சரீரம் உள்ளவர்களும் சோர்வை அடைந்தவர்களான
அப் பெண்களுடன் தங்கள் விளையாடினீர்கள் –
அக் காட்டில் மந்த மாருதம் வீசும் போது வந்த பூக்களின் வாசனையால்
அப் பெண்களை மயக்கினீர்கள் –
இது வரை நிலத்தில் ராஸ க்ரீடை-குரவைக் கூத்து-ஜல க்ரீடை நீரில்
—–
காமி நீரிதி ஹி யாமிநீ ஷு கலு காம நீய கநிதே பவான்
பூர்ண சம்மத ரஸார்ணவம் கமபி யோக கம்யம் அநு பாவயன்
ப்ரஹ்ம சங்கர முகாந பீஹ பஸூ பாங்க நாஸூ பஹு மாநயன்
பக்த லோக கம நீய ரூப கம நீய கிருஷ்ண பரி பாஹி மாம் –– 11-
யோகிகள் மட்டுமே அடையக் கூடிய பரமானந்த வெள்ளத்தில் அப் பெண்களை மூழ்கச் செய்தீர்கள் –
ப்ரஹ்மாதி தேவர்களும் கோபியை வெகுமதிக்கும் படி செய்தீர்கள்
பக்தர்கள் மட்டுமே அடைந்து அனுபவிக்கும் அழகான ஸ்ரீ கிருஷ்ணனே ஸ்ரீ குருவாயூரப்பா
அடியேனை ரக்ஷித்து அருள வேண்டும் –
பெண்கள் திரும்பிப் போனார்களா -கேள்வி -பாகவதத்தில்
அங்கு இவர் வடிவத்தில் இவனே இருந்தானாம் – அங்கும் பஞ்ச லக்ஷம் உருவங்கள் இங்கும் அதே போல் –
முக்த அனுபவமே ராஸ க்ரீடை
நதிகள் கடலை நோக்கி -ஒன்றாகக் கலந்து
அங்கு போன பின்பு உலகியல் அடையாளங்கள் நெடுங்கி சேஷ பூதர்கள் அனைவரும் -அங்கு
ஐந்து தசகம் ராஸ க்ரீடை முன்பு பார்த்தோம்
நித்ய ப்ரஹ்மச்சாரி கிருஷ்ணன் -அவன் செயல்கள் அனைத்துமே தர்ம செயல்களே
அவன் உபதேசப்படியே செய்ய வேண்டும் -அவன் செய்வது எல்லாம் நாம் செய்யக்கூடாதே
கோபிகள் -பரம புருஷனுடன் நாட்டியம் -சரீரம் தானே ஜீவாத்மாக்கள் அனைவரும் -அவர்களுக்கும் தோஷம் வராதே –
கேட்பவர்களுக்கும் இந்த லீலை பாவனத்வம் அளிக்கும் -ரஜோ தமோ குணங்கள் பிக்கும்
முனிவர்கள் தினம் தோறும் ராஸலீலையை த்யானம் பண்ணுவார்கள் –
கோபிகள் முன்பு தண்டகாரண்ய ரிஷிகள் -முன்பு கேட்டுப் பிரார்த்தத்தையே அளிக்கிறான்
தர்ம சம் ஸ்தாபனம் -இதுவே -புருஷோத்தமன் -ஒருவனே -மற்ற அனைவரும் பெண் ப்ராயரே –
கோபிகள் திரும்பியதும் வீட்டில் உள்ளார் ஒன்றுமே அறியாமல் ஏற்றுக்கொண்டனர் –
நாயிகா பாவம் -ப்ரேமம் விஞ்சி -ஆழ்வார்கள் –
————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply