ஸ்ரீ நாராயணீயம் –சதகம் -70–ஸ்ரீ ஸூதர்சன சாப மோக்ஷம்-சங்க சூட அரிஷ்டாசுர வதம் —

ஐந்து தசகம் ராஸ க்ரீடை முன்பு பார்த்தோம் நித்ய ப்ரஹ்மச்சாரி கிருஷ்ணன் -அவன் செயல்கள் அனைத்துமே தர்ம செயல்களே அவன் உபதேசப்படியே செய்ய வேண்டும் -அவன் செய்வது எல்லாம் நாம் செய்யக்கூடாதே கோபிகள் -பரம புருஷனுடன் நாட்டியம் -சரீரம் தானே ஜீவாத்மாக்கள் அனைவரும் -அவர்களுக்கும் தோஷம் வராதே – கேட்பவர்களுக்கும் இந்த லீலை பாவனத்வம் அளிக்கும் -ரஜோ தமோ குணங்கள் பிக்கும் முனிவர்கள் தினம் தோறும் ராஸலீலையை த்யானம் பண்ணுவார்கள் – கோபிகள் முன்பு தண்டகாரண்ய ரிஷிகள் -முன்பு கேட்டுப் பிரார்த்தத்தையே அளிக்கிறான் தர்ம சம் ஸ்தாபனம் -இதுவே -புருஷோத்தமன் -ஒருவனே -மற்ற அனைவரும் பெண் ப்ராயரே – கோபிகள் திரும்பியதும் வீட்டில் உள்ளார் ஒன்றுமே அறியாமல் ஏற்றுக்கொண்டனர் – நாயிகா பாவம் -ப்ரேமம் விஞ்சி -ஆழ்வார்கள் – ——— முதல் ஐந்து ஸ்லோகங்கள் ப்ருத்வி விருத்தம் அடுத்த ஐந்தும் ஸ்வாகதா விருத்தம் இதி த்வயி ரஸா குலம் ரமித வல்லபே வல்லபா கதாபி புரம் அம்பிகா மிதுரம்பிகா காநநே ஸமேத்ய பவதா சமம் நிஸி நிஷேவ்ய திவ்ய உத்ஸவம் ஸூகம் ஸூஷுபுர் அக்ர ஸீத் வ்ரஜப முக்ர நாகஸ் ததா –1- இவ்வாறு ராஸ க்ரீடை செய்து முடித்தீர் -ஒரு நாள் கோபர்களுடன் அம்பிகா வனத்தில் உள்ள சிவனைத் தொழுவதற்காகச் சென்றீர்கள் – தொழுது முடித்ததும் கோபர்கள் கண் அயர்ந்தனர் -அப்போது ஒரு பெரிய மலைப் பாம்பு நந்த கோபனை விழுங்கியது – ———- சமுந் முகம் அதோல் முகை ரபி ஹதே அபி தஸ்மிந் பலாத் அமுஞ்சதி பவத் பதே ந்யபதி பாஹி பாஹீதி தை ததா கலு பதா பவான் சமுபகம்ய பஸ் பர்சதம் பபவ் ச ச நிஜாம் தநும் சமுபஸாத்ய வைத்யாத ரீம் –2- கொள்ளிக் கட்டைகளால் அடித்தும் அந்தப் பாம்பு பிடியை விடவில்லை – உடனே கோபர்கள் தங்களைச் சரண் அடைந்து ரக்ஷித்து அருள வேண்டும் என்று கதறினார்கள் – தாங்கள் அப் பாம்பின் அருகே சென்று அதைக் காலால் உதைத்தீர்கள் – உடனே அப் பாம்பு வித்யாதர உருவம் எடுத்தது – ————– ஸூதர்சன தர ப்ரபோ நநு ஸூதர்நாக்யோ அஸ்ம் யஹம் முநீந் க்வசித் அபாஹசம் த இஹ மாம் வ்யதுர் வாஹ சம் பவத் பத சமர்ப்பணாத் அமலதாம் கதோ அஸ் மீத் யசவ் ஸ்துவந் நிஜ பதம் யயவ் வ்ரஜ பதம் ச கோபாமுதா–3– ஸூதர்சன சக்கரத்தைக் கையிலே ஏந்தினவரே -என் பெயர் ஸூதர்சனன் – நான் வித்யா தரனாய் இருந்த பொழுது முனிவர்களைப் பழித்தேன் – அவர்கள் என்னை மலைப் பாம்பாக ஆகும்படி சபித்தனர் – தங்கள் திருவடித் தாமரை பட்டு சுய வடிவத்தை அடைந்தேன் என்று கூறி அவன் வான் உலகம் அடைந்தான் – கோபர்களும் மகிழ்ந்து வீடு சென்றனர் – ———— கதாபி கலு ஸீரிணா விஹரிதி த்வயி ஸ்த்ரீ ஜனைர் ஜஹார தநதாநுக சகில சங்க சூடோ அபலா அதி த்ருத மநுத்ருத ஸ்தமத முக்த நாரீ ஜனம் ருரோஜித ஸிரோ மணிம் ஹல ப்ருதே ச தஸ்யா ததா –-4– ஒரு சமயம் தாங்கள் நம்பி மூத்த பிரானொடும் கோபியர்களோடும் விளையாடிக் கொண்டு இருந்த போது தநதாநுக-குபேரனுடைய வேலையாளான சங்க சூடன் என்பவன் கோபிகளைக் கவர்ந்து சென்றான் – உடனே அவனைப் பின் தொடர்ந்தீர்கள் – தாங்கள் அவனை வதம் செய்து கோபியை மீட்டு அவனுடைய சூடா மணியை எடுத்து நம்பி மூத்த பிரான் இடம் தந்தீர்கள் – ———- திநேஷு ச ஸூஹ்ருஜ் ஜனைஸ் ஸஹ வநேஷு லீலா பரம் மநோ பவ மநோ ஹரம் ரசித வேணு நாதாம்ருதம் பவந்தம் அமரீ த்ருஸாம் அம்ருத பாரணா தாயிநம் விசிந்த்ய கிமுந ஆலபன் விரஹ தாபிதா கோபிகா –5- பகலில் நண்பர்களுடன் காட்டில் விளையாடினீர்கள் – மனதைக் கவரும் திரு மேனியுடன் குழலூதிக் கொண்டு இருந்தீர்கள் – உம்மைப் பிரிந்த கோபியர் தங்களை நினைத்து பலவிதமாகப் புலம்பினார்கள் – வேய் மரு தோளிணை மெலியும் ஆலோ மெலிவும் என் தனிமையும் யாதும் நோக்காக் காமரு குயில்களும் கூவும் ஆலோ கண மயில் அவை கலந்து ஆலும் ஆலோ ஆ மருவு இன நிரை மேய்க்க நீ போக்கு ஒரு பகல் ஆயிரம் ஊழி ஆலோ தாமரைக் கண்கள் கொண்டு ஈர்தி ஆலோ தகவிலை தகவிலையே நீ கண்ணா–10-3-1- வேய்மரு தோளிந்திரைகோன் மேவுகின்ற தேசத்தைத் தான் மருவாத் தன்மையினால் தன்னை இன்னும் – பூமியிலே வைக்குமெனச் சங்கித்து மால் தெளிவிக்கத் தெளிந்த தக்க புகழ் மாறன் எங்கள் சார்வு--93- ——– போஜ ராஜ ப்ருதகஸ் த்வத கஸ்சித் கஷ்ட துஷ்ட பத த்ருஷ்டி ரரிஷ்ட நிஷ்டு ராக் ருதிரபஷ்டு நிநாதஸ் திஷ்டதே ஸ்ம பவதே வ்ருஷ ரூபி –6- போஜ ராஜ-கம்சனின் வேலையாளாக அரிஷ்டன் என்னும் அசுரன் காளை மாடு உருவம் எடுத்துக் கொண்டு பயங்கரமாக சப்தம் இட்டுக் கொண்டு தங்கள் முன் வந்தான் – ——— சாக்வரோ அத ஜகதீ த்ருதி ஹாரீ மூர்தி மேஷ ப்ருஹதீம் பிரத தாந பங்க்தி மாஸூ பரி கூர்ண்ய பஸூ நாம் சந்தசாம் நிதி மவாப பவந்தம் –-7- அனைவரையும் நடுங்கச் செய்து கொண்டு பெரிய உருவத்துடன் பசுக் கூட்டங்களை விரட்டினான் பிறகு வேதங்களின் இருப்பிடமான தங்கள் இடம் வந்தான் – ————— துங்க ஸ்ருங்க முகமாஸ் வபி யந்தம் ஸம் க்ருஹய்ய ரப சாதபியம் தம் பத்ர ரூபமபி தைத்ய மபத்ரம் மர்த யன்நமதய ஸூர லோகம் –8- நீண்ட கொம்புடன் தங்கள் எதிரே வந்தான் -அவனைப் பிடித்துக் கொன்றீர்கள் – தேவர்கள் மகிழ்ந்தனர் – ————— சித்ர மத்ய பகவன் வ்ருக்ஷ காதாத் ஸூஸ்திரா அஜநி வ்ருஷ ஸ்திதி ரூர்வ் யாம் வர்த்ததே ச வ்ருஷ சேதஸி பூயான் மோத இத் யபிநுதோ அஸி ஸூரைஸ் த்வம் –9- வ்ருக்ஷமான அவனைக் கொன்று உலகத்தில் தர்ம ரக்ஷணம் செய்து அருளினீர் என்று ப்ரஹ்மாதிகள் ஸ்துதித்தனர் – வ்ருஷம் -சமஸ்க்ருதம் -காளை -தர்மம் -இந்திரனுக்கும் பெயர் ———- ஓவ்ஷகாணி பரி தாவத தூரம் வீஷ்ய தாம யமிஹ ஓஷா விபேதீ இத்த மாத்த ஹசிதை ஸஹ கோபைர் கேஹகஸ் த்வமவ வாத புரேச –10- இடையர்கள் சிரித்துக் கொண்டு –ஓவ்ஷகாணி-காளைகளே வ்ருஷபாசுரனைக் கொன்ற ஸ்ரீ கிருஷ்ணன் இங்கே இருக்கிறான் – நீங்கள் வெகு தூரம் ஓடி ஒளிந்து கொள்ளுங்கோள் என்று கூறினர்-பிறகு இடையர்களுடன் வீடு திரும்பினீர்கள் ஸ்ரீ குருவாயூரப்பா அடியேனை ரக்ஷித்து அருள வேணும் – ————————– ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் – ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் . ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் . ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply