த்வயி விஹரண லோலே பால ஜாலை ப்ரலம்ப
ப்ரமத நஸ விலம்பே தே நவ ஸ்வைர சாரா
த்ருண குதுகநி விஷ்டா தூர தூரம் ஸரந்த்ய
கிமபி விபினமை ஷீ காக்ய மீஷாம் பபூவ –1–
ப்ரலம்பனை வதம் செய்து ஆயர்களுடன் விளையாடிக் கொண்டு இருந்தீர்கள் –
அப்போது பசுக்கள் புல்லை மேய்ந்து கொண்டே ஐஷீகம் என்கிற காட்டை அடைந்தன —
———–
அ நதி கத நிதாக க்ரவ்ர்ய வ்ருந்தா வனாந்தாத்
பஹி ரித முப யாதா கானனம் தேன வஸ்தா
தவ விரஹ விஷண்ணா ஊஷ் மல க்ரீஷ்ம தாப
பிரசர விச ரதம்ப ஸ் யாகுலா ஸ்தம்ப மாபு –2-
வெப்பம் அற்ற ஸ்ரீ பிருந்தா வனத்தில் இருந்து ஐஷீகம் என்கிற காட்டுக்கு வந்தாலும்
தங்களது பிரிவால் துன்பம் அடைந்த பசுக்கள் கடுமையான வெய்யிலால் கானல் நீரை
நிஜ நீர் என்று நினைத்து தாகத்துடன் திகைத்து நின்றன –
தத நு ஸஹ சஹா யைர் தூரமந்விஷ்ய ஸுவ் ரே
கலித சரணி முஞ்ஜா ரண்ய ஸஞ்ஜாத கேதம்
பஸூ குல மபி வீஷ்ய க்ஷிப்ர மாநேது மாராத்
த்வயி கதவதி ஹீ ஹீ ஸர்வதோ அக்னிர் ஜஜ் ரும்பே –3-
சிறுவர்களுடன் பசுக்களைத் தேடிக் கொண்டு வந்த தாங்கள் வழி தப்பிய
பசுக்களைப் பார்த்து அவற்றை அழைத்துச் செல்ல
அவைகளின் அருகே சென்றீர்-அப்போது சுற்றிலும் தீப்பற்றி சூழ்ந்து கொண்டது –
சகல ஹரிதி தீப்தே கோர பாங்கார பீ மே
சிகி நி விஹித மார்கா அர்த தக்தா இவார் தா
அஹ ஹ புவன பந்தோ பாஹி பாஹீ தி சர்வே
சரண முபகதாஸ் த்வாம் தாப ஹர்தார மேகம் –4–
பயங்கரமான தீ எங்கும் சூழ்ந்ததால் சிறுவர்கள் வழி தடுமாறி அனலால் துன்பப் பட்டனர்
அப்போது அவர்கள் லோக ரக்ஷகரே அடியோங்களையும் ரக்ஷித்து அருள வேண்டும்
என்று தங்களை சரண் அடைந்தனர் –
அலமல மதி பீத்யா ஸர்வதோ மீல யத்வம்
த்ருஸ மிதி தவ வாசா மீலிதா ஷேஷு தேஷு
க்வ நு தவத ஹ நோ அசவ் குத்ர முஞ்ஜாட வீஸா
ஸபதி வவ்ருதி ரே தே ஹந்த பாண்டீர தேஸே –5-
பயப்படாதீர்கள் -எல்லோரும் கண்களை மூடிக் கொள்ளுங்கோள் என்று தங்கள் கூறியதும்
அவர்களும் கண்களை மூடிக் கொண்டனர் –
கண்ணைத் திறந்த போது பாண்டீரம் என்னும் ஆல மரத்தின் அடியில் இருந்தனர் –
தீ எங்குச் சென்றது என்று வியந்தனர் –
ஜய ஜய தவ மாயா கேய மீ சேதி தேஷாம்
நுதி பிருதி தஹாசோ பத்த நா நா விலாஸ
புனரபி விபி நாந்தே பிராசர பாடலாதி
ப்ரஸவ நிகர மாத்ர க்ராஹ்ய கர்ம அநு பாவே –6-
தாங்கள் நீண்ட காலம் வாழ வேண்டும் என்று தங்களை ஸ்துதித்தனர் –
தாங்கள் மந்தஹாசமாகப் புன்னகைத்தீர்
அங்கு பூத்து இருந்த பாதிரி முதலிய மலர்களால் மட்டுமே வெய்யில் காலம் என்பதை
அறிய முடிந்தது ஒழிய வெய்யில் தாபமே தெரிய வில்லை
பலவிதமான அதிசயங்களைச் செய்து கொண்டு சிறுவர்களுடன் அக்காட்டில் திரிந்து விளையாடினீர் –
த்வயி விமுக மிவோச்சைஸ் தாப பாரம் வஹந்தம்
தவ பஜன வதந்த பங்க முச்சோஷ யந்தம்
தவ புஜவது தஞ்சத் பூரி தேஜஸ் ப்ரவாஹம்
தபஸ மயமநை ஷீர் யாமுனே ஷு ஸ் தலேஷு –7-
தங்கள் இடத்தில் பக்தி இல்லாதவன் துன்பத்தை அனுபவிப்பது போலும் அன்பு கொண்டவர்
உள்ளத்தில் உள்ள பாவச் சேறுகள் காய்வது போலும் -தங்கள் திருக்கையில் உள்ள
திருச்சக்கரத்தின் ஒளியைப் போலவும் இந்தக் கோடைக் காலத்தை யமுனை ஆற்றங்கரையிலேயே கழித்தீர்கள் —
தத நு ஜலத ஜாலைஸ் த்வத் வபுஸ் துல்ய பாபிர்
விகஸத மல வித்யுத் பீத வாஸோ விலாஸை
ஸகல புவன பாஜாம் ஹர்ஷதாம் வர்ஷ வேலாம்
ஷிதி தர குஹரேஷு ஸ்வ ரை வாஸீ வ்யநை ஷீ –8-
தங்கள் நிறத்துக்கு ஒப்பான மேகங்கள் வானில் நிறைந்தன -தங்கள் திருப் பீதாம்பரைப் போலே
மின்னல்கள் பிரகாசித்தன –
எல்லா மக்களுக்கும் மகிழ்ச்சியை அளிக்கும் மழைக் காலமும் வந்தது –
மழைக் காலத்தை மலைக் குகைகளிலேயே கழித்தீர்கள் –
குஹர தல நிவிஷ்டம் த்வாம் கரிஷ்டம் கிரீந்த்ர
சிகி குல நவகே காகா குபி ஸ்தோத்ர காரீ
ஸ்புட குட ஜக தம்ப ஸ்தோம புஷ்பாஞ்ஐலிம் ச
ப்ரவித தத நு பேஜே தேவ கோவர்த்தநோ அசவ்–9-
கோவர்த்தன மலை அரசன் குகையில் இருக்கும் தங்களை அழகிய மயில்களின்
அகவல் கொண்டு வரவேற்றான்
மர மல்லிகையும் நீப புஷ்பங்களும் பூச் சொரிய தங்களை வரவேற்றுத் தொழுதான் –
அத சரத முபேதாம் தாம் பகத் பக்த சேதோ
விமல சலில பூராம் மாநய ந் காநநே ஷு
த்ருண மமலவ நாந்தே சாறு சஞ்சாரயன் கா
பவன புரபதே த்வம் தேஹி மே தேஹ ஸுவ்க்யம்–10-
தங்கள் பக்தர்களின் உள்ளம் போல் தெளிந்த நீர் உள்ள ஓடைகள் சரத் காலத்தை அறிவித்தன –
பசுக்களை நல்ல புற்களை மேயச் செய்து மகிழ்ந்து திரிந்தீர்
ஸ்ரீ குருவாயூரப்பா அடியேனை ரக்ஷித்து அருள வேணும் –
————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply