ஸ்ரீ நாராயணீயம் – தசகம் 57–பிரலம்பாசுர வதம்-

ஆயர் சிறுவன் கோலத்தில் -வந்த அசுரன்-ப்ரலம்பன் என்ற அசுரன் இடையன்-11 ஸ்லோகங்களும் ஆர்யா மீட்டர்

ராம ஸஹ க்வாபி திநே காமத பகவன் கதோ பவான் விபிநம்
ஸூநுபி ரபி கோபாநாம் தேநுபி ரபி ஸம்வ்ருதோ லஸத் வேஷ —1-

வேண்டியவற்றை அளித்து அருளும் ஸ்ரீ குருவாயூரப்பா -ஒரு நாள் தாங்கள் அழகாக
அலங்கரித்துக் கொண்டு நம்பி மூத்த பிரான் உடனும் இடைச் சிறுவர்களோடும்
பசுக்களுடனும் விபிநம்-காட்டுக்குச் சென்றீர் –

———-

சந் தர்சயன் பலாய ஸ்வைரம் வ்ருந்தா வநஸ்ரியம் விமலாம்
காண்டீரை ஸஹ பாலைர் பாண்டீரகம் ஆகமோ வடம் க்ரீடன் -2-

காண்டீரை ஸஹ-சிறுவர்கள் கையில் கோலுடன் நடக்க -ஸ்ரீ ப்ருந்தா வனத்தின் அழகை ரசித்துக் கொண்டும்
ஸ்வைரம்-விளையாட்டாகப் பேசிக் கொண்டும் பாண்டீரகம் என்னும் ஆல மரத்தடிக்குச் சென்றீர் –

வேலிக் கோல் வெட்டி விளையாடு வில் ஏற்றி
தாலிக் கொழுந்தை தடம் கழுத்தில் பூண்டு
பீலித் தழையை பிணைத்து பிறகிட்டு
காலிப் பின் போவாற் கோர் கோல் கொண்டு வா
கடல் நிற வண்ணற் கோர் கோல் கொண்டு வா– 2-6-1-

—————-

தாவத் தாவக நிதந ஸ்ப்ருஹயாலுர் கோப மூர்திர் அதயாலு
தைத்ய ப்ரலம்ப நாமா ப்ரலம்ப பாஹும் பவந்தம்  ஆபேதே –3–

அப்போது தங்களைக் கொல்லும் நோக்கத்துடன் ப்ரலம்பன் என்ற அசுரன் இடையன்
வேஷத்தில் நீண்ட திருக் கைகளை யுடைய தங்களை அடைந்தான் –

——————

ஜா நந்தப் யவிஜா நந் நிவ தேந சமம் நிபத்த ஸுஹார்த்த
வட நிகடே படு பஸூப வ்யாபத்தம் த்வந்த்வ யுத்தம் ஆரப்தா –4–

அவன் எண்ணத்தை அறிந்த தாங்கள் அறியாதவர் போல் அவனுடன் நட்பு கொண்டீர் –
அம் மரத்து அடியில் இடையர்களுடன் விளையாட்டாக -த்வந்த்வ யுத்தம் –
ஒருவர் உடன் ஒருவர் யுத்தம் -செய்யத் தொடங்கினீர் –

——————

கோபான் விபஜ்ய தன்வந் சங்கம் பல பத்ரகம் பவத் கமபி
த்வத் பல பீரும் தைத்யம் த்வத் பல கதம் அன்வ மன்யதா பகவன் –5-

தங்கள் தலைமையிலும் நம்பி மூத்த பிரான் தலைமையிலும் இடையர்களை இரண்டு குழுக்களாகப் பிரித்தீர்
தங்கள் பலத்தால் பயந்த பிரலம்பாசுரனை தங்கள் குழுவிலேயே இருக்கச் செய்தீர் —

————–

கல்பித விஜேத்ரு வஹநே சமரே பர யூதகம் ஸ்வதயித தரம்
ஸ்ரீ தாமாநம் அதத்தா பராஜிதோ பக்தி தாஸ தாம் ப்ரதயன் –6–

விஜேத்ரு வஹநே-தோற்றவர்கள் வெற்றி பெற்றவர்களைத் தூக்க வேண்டும் என்ற விளையாட்டு நிபந்தனைப் படி
தங்கள் நண்பரான ஸ்ரீ தாமா என்பவரை -தாங்கள் பக்தருக்கு அடிமை என்பது போலத் தூக்கினீர்கள் —

தண் தாமரை சுமக்கும் -ஆஸன பத்மத்தில் அழுந்தி நிற்கும் திருவடி-

பக்தி தாஸ தாம் ப்ரதயன் -விஜிதாத்மா விதேயாத்மா அன்றோ –

———-

ஏவம் பஹுஷு விபூமன் பாலேஷு வஹத்ஸூ வாஹ்ய மாநேஷு
ராம விஜித ப்ரலம்போ ஜஹாரதம் தூரதோ பவத் பீத்யா –7–

இவ்வாறு எல்லா இடையர்களும் தோற்றவர்கள் வெற்றி பெற்றவர்களைத் தூக்கினார்கள்
அப்போது தோற்ற பிரலம்பாசுரன் ஜெயித்த நம்பி மூத்த பிரானைத் தூக்கிக் கொண்டு
தங்கள் இடம் உள்ள பலத்தால் வெகு தூரம் சென்றான் –

——————

த்வத் தூரம் கமயந்தம் தம் த்ருஷ்ட்வா ஹலினி விஹித கரிம பரே
தைத்ய ஸ்வரூபம் ஆகாத் யத் ரூபாத் ச ஹி பலோ அபி சகிதோ அபூத் –8-

வெகு தூரத்துக்கு அப்பால் செல்லும் போது நம்பி மூத்த பிரான் முழு பலத்தாலும் அவனை அழுத்தினார் –
உடனே அவன் பயங்கரமான அசுரர் உருவை எடுத்துக் கொண்டான் –
அதைக் கண்டு நம்பி மூத்த பிரானும் கொஞ்சம் பயந்தார் –

————–

உச்ச யா தைத்ய தநோஸ் த்வன் முகம் ஆலோக்ய தூரதோ ராம
விகத பயோ த்ருட முஷ்ட்யா ப்ருஸ துஷ்டம் சபதி பிஷ்ட வாந் ஏநம் –9-

வெகு தூரத்தில் தெரியும் தங்கள் திரு முகத்தைக் கண்டு பயத்தை விட்டார்
அசுரனை தன் முஷ்டியால் அடித்து நொறுக்கினார் –

————–

ஹத்வா தாநவ வீரம் பிராப்தம் பலம் ஆலிங்கித ப்ரேம்ணா
தாவன் மிலதோர் யுவயோ சிரஸி க்ருதா புஷ்ப வ்ருஷ்டிர் அமர கணை –10-

அசுரனைக் கொன்று விட்டு வரும் நம்பி மூத்த பிரானைத் தாங்கள் தழுவிக் கொண்டீர் –
இருவர்கள் மீதும் தேவர்கள் பூ மாரி பொழிந்தனர் –

—————

ஆலம்போ புவநாநாம் ப்ராலம்பம் நிதநம் ஏவம் ஆரசயந்
காலம் விஹாய சத்யோ லோலம் பருசே ஹரே ஹரே கிலேசான் —11-

வண்டைப் போல நிறம் உள்ள ஸ்ரீ குருவாயூரப்பா -உலகங்களுக்கு எல்லாம் பிடித்தமானவரும் ப்ரலம்பனை அழித்தவருமான தாங்கள் தாமதிக்காமல் அடியேனை ரக்ஷித்து அருள வேண்டும் –

ஹரே ஹரே கிலேசான்-ஹரியே பிரதிபந்தங்களை அபஹரித்து அருள வேணும்

போலி வேஷம் -பக்தி இல்லாமல்
கள்ளத்தே நானும் தொண்டாய் -வெள்கி -குற்றம் உள்ள நெஞ்சு -விலகிப்போவோம்
உண்மையான பக்தராக இருக்க வேண்டும்
பக்தர் -கடல் வண்ணன் பூதனால் -ஆதிசேஷன் போல்வார் உடன் கூடி அந்த நிஷ்டை வர வேண்டுமே

மெய் எல்லாம் போகவிட்டு விரி குழலாரில் பட்டு
பொய் எல்லாம் பொதிந்து கொண்ட போழ்கனேன் வந்து நின்றேன்
ஐயனே அரங்கனே உன் அருள் என்னும் ஆசை தன்னால்
பொய்யனேன் வந்து நின்றேன் பொய்யனேன் பொய்யனேனே –33-

உள்ளத்தே உறையும் மாலை யுள்ளுவார் உணர்வு ஓன்று இல்லாக்
கள்ளத்தேன் நான் உன் தொண்டாய்த் தொண்டுக்கே கோலம் பூண்டு
உள்ளுவார் உள்லிற்று எல்லாம் உடன் இருந்து அறுதி என்று
வெள்கிப் போய் என்னுள்ளே நான் விலவறச் சிரித்திட்டேனே–34-

————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading