ஸ்ரீ நாராயணீயம் – தசகம் 56–காளியன் அனுக்ரஹம்-காளிங்க நர்த்தனம் —

காளிய மர்த்தனம் -மூன்று தசகங்கள் காளியனை அடங்கியவை
காளிய நர்த்தனம் -நடனம் ஒரே தசகம்

ஐந்து -இந்திரியங்கள் -உலகியல் விஷய விஷங்களைக் கக்கும்
மனஸ் காளியன் -நேர் வழியில் போகாமல்
அலை பாயுதே கண்ணா -அவன் நாட்டியம் ஆட –
இந்திரியங்கள் அவன் இடம் ஈடுபட மனஸ் அடங்கும்-

நாட்டியம் மனதில் தொடர அதில் இருந்தே இங்கும் தொடங்கும்-ருத விளம்பிதம் மீட்டர்

ருசிர கம்பித குண்டல மண்டல ஸூசிர மீசந நர்தித பன்நகே
அமர தாடித துந்துபி ஸூந்தரம் வியதி காயதி தைவத யவ்வதே–1-

குண்டலங்கள் ஆட –பன்நகே-காளியன் தலைகள் மேலே ஸூசிர-வெகு நேரம் நர்த்தனம் ஆடினீர் –
தைவத யவ்வதே-தேவப் பெண்கள் பாட தேவர்கள் துந்துபி வாசிக்க அழகாக ஆடினீர் –

மகரம் சேர் குழைகள் இரு பாலும் அசைந்து ஆட

———–

நமதி யத் யத் அமுஷ்ய சிரோ ஹரே பரி விஹாய தத் உந்நதம் உந்நதம்
பரி மதன் பத பங்க ருஹா சிரம் வ்யஹரதா கர தால மநோ ஹரம் -2-

காளியனுடைய எந்தத் தலை தொய்கிறதோ அதை விட்டு விட்டு உயரே கிளம்பிய தலை மீது
பத பங்க ருஹா-தாமரைத் திருவடிகளால் தாளம் இட்டுக் கொண்டு நர்த்தனம் ஆடினீர் –

நாராயணீயத்தில் காளியனுக்கு  101 தலைகள் –
திருவடி வைத்ததும் தலை கீழே இறங்கி வணங்க -அத்தை விட்டு மேல் உள்ள தலையில் திருவடி வைத்து ஆடினானாம்-வ்யஹரதா-இன்புறும் இவ்விளையாட்டு

வணங்கும் தலையை விட்டு
உயர்ந்த ஒன்றை தாவி மிதித்து
கையால் தாளம் போட்டு
திருவடியால் நாட்டியம்
சரணம் அடைந்தால் உடனே பலன் -அஹங்காரம் இருந்தால் மிதித்து குனிய வைப்பான்
இத்தை உணர்த்திக் கொண்டே நாட்டியம்
பட்டாபிஷேகம் நடக்கப் போவதால் கிரீடம் குதிக்க -பாதுகை கைங்கர்யம் பண்ணிக் கொண்டு இருப்பதையே மநோ ரதம்
துரியோதனன் தலை மாட்டில் -அர்ஜுனன் திருவடியில் -பார்த்த சாரதி ஆனான்

———

த்வத் அவ பக்ந விபுக்ந பணா கணா கலித ஸோணித ஸோணித பாதஸி
பணி பதவ் அவ் அஸீததி சந்நதாஸ் தத் அபலாஸ் தவ மாதவ பாதயோ -3-

முன்பு விஷம் கக்கி யமுனை நிலமானது
இப்போது ரத்தம் கக்கி சிவந்தது
தத் அபலாஸ் -அவன் மனைவிகள் மாதவா உனது திருப்பாதம் பணிந்தார்கள் –மாதவ பத பிரயோகம்

அவனுடைய படம் எடுத்த தலைகள் தொய்ந்து சரிந்து குளம் முழுவதும்
ரத்தம் கக்கி -தேவையில்லா விஷம் -அவன் சோர்ந்து விழுந்தான் –
அப்போது அவன் மனைவியர் தங்கள் திருவடித் தாமரைகளில் விழுந்து வணங்கினார்கள் –

———

அயி புரைவ சிராய பரி ஸ்ருத த்வத் அநுபாவ விலீந ஹ்ருதோ ஹிதா
முனி பிரப்ய நவாப்ய பதை ஸ்தவைர் நுநுவு ரீஸ பவந்த மயந்த்ரிதம் -4-

அவர்கள் முன்பே தங்கள் மஹிமையை அறிந்து இருந்ததால் தங்கள் இடம் மனசை செலுத்தி
முனிவர்களாலும் அறிய முடியாத
பொருள் கொண்ட ஸ்தோத்ரங்களால் தங்களை ஸ்துதித்தார்கள் –

பக்தி ஸ்ரத்தா இரண்டும் பெண் பால் -இயற்கையாகவே பெண்களுக்கு உண்டே-ஸ்ரீமத் பாகவத் விரிவாக இவர்கள் ஸ்தோத்ரம் சொல்லும்-திருவடி ஸ்பரிசத்தால் அனுக்ரஹம் பண்ணி அருளினாயே என்று ஸ்தோத்ரம் பண்ணினார்கள் -தபஸ் ஒன்றும் செய்யாமல் பிராட்டி கூசிப்பிடிக்கும் மெல்லடியால் தீண்டினாயே
கூரத்தாழ்வான் -எனது தலை காலியான தலை இல்லாமல் பாக்யம் இழந்ததே -என்பார்

யமுனை கரையில் பலர் ஸ்தோத்ரம் பண்ண அவற்றைக் கேட்டு இவன் பத்னிகள்
அந்த ஞானத்தால் ஸ்தோத்ரம் பண்ணினார்களாம்
செல்வத்து சிறந்தது செவிச் செல்வம்
ஸ்ருத்வா குணான் புவன ஸூந்தர -ருக்மிணி தேவி
என் செவியுள் புகுந்த -நீ உள்ளே இருக்க நானே பெரியவன் நம்மாழ்வார்

———

பணி வதூ கண பக்தி விலோகந ப்ரவிகஸத் கருணா குல சேதஸா
பணி பதிர் பவதா அச்யுத ஜீவிதஸ் த்வயி ஸமர்பித மூர்திர் அவாநமத்–5-

அவர்களுடைய பக்தியைக் கண்டு மிகுந்த கருணையுடன் காளியனை உயிர் பிழைக்க விட்டீர்
தங்கள் திருவடித் தாமரைகளில் சரண் அடைந்து தங்களை வணங்கினான் –

பக்தியைப் பார்த்தது உகந்து கருணா ஆகுலம் விகஸித்து -ஸ்தோத்ரம் -இளைய புன் கவிதையேலும் எம்பிராற்கு இனியவாறே
அச் யுதன் -பக்தர்களை நழுவ விடாதவன் அன்றோ

த்வயி ஸமர்பித மூர்திர்-கீழே இவன் திருவடி பட்டு குனிந்த தலைகள் -இப்பொழுது தாமே பக்திப் பெருக்காலே வணங்கி குனிந்தனவே

————-

ரமணகம் வ்ரஜ வாரிதி மத்யகம் பணி ரிபுர்ந கரோதி விரோதி தாம்
இதி பவத் வஸனாத் யதி மாநயன் பணி பதிர் நிரகாத் உரகை சமம் –6-

அவனைக் கடலில் நடுவில் இருக்கும் ரமணகம் என்கிற இடத்துக்கு செல்ல ஆணை இட்டார் –
பெரிய திருவடி உன்னை அங்கே தாக்க மாட்டான் என்று தாங்கள் சொன்னதும்
காளியன் மற்ற பாம்புகளுடன் ரமணகத்துக்குப் புறப்பட்டான் –

தலையில் திருவடி பதித்து -தொண்டனான பின்பு பெரிய திருவடியால் பயம் இல்லையே
ஆதி சேஷன் பெரிய திருவடி கைங்கர்யங்கள் சேர்ந்து செய்கிறார்கள் அன்றோ

ரமணகம் வ்ரஜ வாரிதி மத்யகம்-இது பெருமாள் காளியனுக்கு அளிக்கும் அபய ப்ரதான ஸ்லோகம்-யதி மாநயன்-தலை மேல் கொண்டாடி புறப்பட்டான்

கருடன் இடம் முன்பு அபசாரம் -பிட்டு இங்கு வந்தான் அன்றோ -மீண்டும் ரமணகத்தீவுக்கு இப்பொழுது விரோதம் பார்க்க மாட்டான்
பக்தர்களுக்கும் விரோதம் வராதே -திருவடி பட்ட தழும்பு போல் சங்கு சக்கர லாஞ்சனை

————

பணி வதூ ஜன தத்த மணி வ்ரஜ ஜ்வலித ஹார துகூல விபூஷித
தட கதை ப்ரமத அஸ்ரு விமிஸ்ரிதை சம கதா ஸ்வ ஜனைர் திவஸர் வதவ் –7-

ப்ரமத அஸ்ரு-ஆனந்தக் கண்ணீர்

திவஸர் வதவ்-மாலை சந்தியில்

அவனுடைய மனைவியர் கொடுத்த ஒளி வீசும் ரத்னங்களாலும் முத்து மாலைகளாலும்
பட்டு வஸ்த்ரங்களாலும் தங்களை அலங்கரித்துக் கொண்டு ஆனந்தத்துடன் –தட கதை-நதிக் கரையில்-இருக்கும் தங்களது சுற்றத்தாரை அடைந்தீர்கள் –

—————

நிஸி புனஸ் தமஸா வ்ரஜ மந்திரம் வ்ரஜிதும் அஷம ஏவ ஜநோத் கரே
ஸ்வ பதி தத்ர பவஸ் சரணாஸ்ரயே தவ க்ருசா நுர் அருந்த சமந்தத –8-

தங்களையே நம்பி இருந்த இடையர்கள் இருட்டி விட்டதால் வீடு செல்ல முடியாமல்
கரையிலே தூங்கினார்கள் -அப்போது நாலு புறமும் காட்டுத் தீ சூழ்ந்தது-

——–

ப்ரபுதிதாந்  அத பாலய பாலயேத் யுதயதார் தரவான் பஸூ பாலகான்
அவிதும் ஆஸூ பபாத மஹாநலம் கிமஹ சித்ர மயம் கலுதே முகம் –9-

அதனால் விழித்து எழுந்த அவர்கள் காப்பாற்ற வேண்டும் என்று தீனமாய்க் கூக்குரல் இட்டனர்
அவர்களை ரஷித்து அருள அத் தீயை நீர் உண்டீர் இதில் என்ன ஆச்சர்யம் –
அக்னியே தங்கள் திரு முகம் அன்றோ –

——–

சிகிநி வர்ணத ஏவ ஹி பீததா பரில ஸத்யது நா க்ரியயா அப்யசவ்
இதி நுத பஸூ பைர் முதிதைர் விபோ ஹர ஹரே துரிதை ஸஹ மே கதாத் –-10-

அக்னியிடம் நிறுத்தினால் மட்டும் பீதத்வம் -மஞ்சள் -இருந்தது -இப்போது தாங்கள் உண்டதாலும் –
பீதத்வம் குடிக்கப் பட்ட தன்மை கொண்டது என்று கூறி கோபர்கள் ஆனந்தத்துடன் ஸ்துதித்தார்கள் –
ஸ்ரீ ஹரியே அடியேனை ரக்ஷித்து அருள வேண்டும் –

————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading