தோடகம் சந்தஸில்–நாட்டியத்துக்குத் தக்கபடி –
அத வாரிணி கோர தரம் பணிநம்
ப்ரதி வார யிதும் க்ருததீர் பகவன்
த்ருதம் ஆரித தீரக நீப தரும்
விஷ மாருத சோஷித பர்ண சயம் –1-
அத-பிறகு தாங்கள் யமுனை மடுவில் உள்ள கொடியோனான காளியன் என்கிற பாம்பை அங்கிருந்து
விரட்டி யடிக்கத் திருவுள்ளம் கொண்டு மடுவின் கரையில் விஷக் காற்றினால் வறண்டு வாடிய
இலைகளோடு கூடிய ஒரு கதம்ப மரத்தின் மேல் விரைவாக ஏறினீர்கள்.
————-
அதி ருஹ்ய பதாம் புரு ஹேண சதம்
நவ பல்லவ துல்ய மநோஜ்ஞ ருசா
ஹ்ரத வாரிணி தூர தரம் ந்யபத
பரி கூர்ணித கோர தரங்க கணே-2-
இளந் தளிர் போன்று மனதைக் கவரும் ஒளியுடன் கூடிய திருவடித் தாமரைகளால்
அம் மரத்தின் மேலேறி பயங்கரமான அலைகளும், நீர்ச் சுழல்களும் நிறைந்த
அம் மடுவின் தண்ணீரில் எட்டிக் குதித்தீர்கள்.
பூத்த நீள் கடம்பு ஏறி -நாச்சியார்-திருவடி ஸ்பர்சத்தால் பூக்குமே
———-
புவந த்ரய பார ப்ருதோ பவதோ
குரு பார விகம்பி விஜ்ரும்பி ஜலா
பரி மஜ் ஜயதி ஸ்ம தநுஸ் சதகம்
தடி நீ ஜடிதி ஸ்புட கோஷ வதீ –3-
மூவுலகத்தின் சுமையையும் தாங்கும் தங்களுடைய கனத்தால் அம் மடுவின் தண்ணீர் விகம்பி-கலங்கிப்
பேரிரைச்சலுடன் உயரக் கிளம்பி –தநுஸ் சதகம்-நூறு வில்லிடை யளவு கரையை நீரில் மூழ்கடித்தது.
வில் ஆறு அடி -600 அடி வரை தண்ணீர் வெளியில் -விஷ தண்ணீர் அன்றோ என்றால் -திருவடி பட்டால் பட்ட மரம் துளிர்க்க -இங்கும் விஷ தண்ணீர் அம்ருதமாகுமே-எல்லாம் செழிப்பு அடைய அவன் சம்பந்தம் பெற்ற நீர் அன்றோ
நீ என் செவியின் வழி புகுந்து என்னுள்ளாய் -நான் பெரியன் நீ பெரியை என்பதை யார் அறிவர்
——–
அத திஷு விதிஷு பரி ஷுபித
ப்ரமி தோதர வாரி நிநாத பரை
உதகாத் உதகாத் உரகாதி பதி
ஸ்த்வத் உபாந்தம சாந்த ருஷா அந்த மநா –4-
ருஷா அந்த மநா-கோபம் உட் கண்ணையும் மறைத்து குருடனாக்குமே
அப்பொழுது திக்கு திசைகளிலெல்லாம் சுழல்கள் எழும்படி கலக்கப்பட்ட மடுவின் தண்ணீரில்
அதிகமான இரைச்சல் உண்டாயிற்று. அவ்வமயம் பாம்பரசனான காளியன் மிகுந்த சினத்தினால்
செய்வதறியாது திகைத்துத் தண்ணீரிலிருந்து வெளிக் கிளம்பித் தங்களை அணுகி வந்தான்.
உதகாத் -உதக ஆகாத் – உதகம் நீர்
உரகம் -மார்பைக் கொண்டு பயனிக்கும் பாம்பு
ஸ்த்வத் உபாந்தம–காளியின் உனது பக்கம் வந்தானே -அடியேன் இழந்தேன்
————
பண ஸ்ருங்க ஸஹஸ்ர விநிஸ் ஸ்ருமர
ஜ்வலத் அக்நி கன உக்ர விஷாம் புதரம்
புரத பணிநம் சமலோக யதா
பஹு ஸ்ருங்கிணம் அஞ்ஐன சைலமிவ –5-
ஆயிரம் பணா முடிகளிலிருந்தும் தீப் பிழம்பு போன்ற கொடிய விஷத்தை வெளியே கக்குகின்ற
காளியனைப் பல கொடுமுடிகளுடன் கூடிய ஒரு கரிய மை மலையோ? என்பது போல் எதிரில் கண்டீர்கள்.
ஐந்து தலைகள் என்பாரும் உண்டே-பைந்நாகத் தலை பாய்ந்தவனே -பெரியாழ்வார்
101 தலைகள் பாகவதம்
1000 தலைகள் பட்டாத்ரி
அஞ்ஐன சைலமிவ–அஞ்சனாத்ரி -திருமலை போல் எண்ணி நர்த்தனம்
————-
ஜ்வலதஷி பரி ஷர துக்ர விஷ
ஸ்வ ச நோஷ்ம பர ச மஹா புஜக
பரி தஸ்ய பவந்தம் அநந்த பலம்
சம வேஷ்டயத் அஸ்புட சேஷ்ட மஹோ –6-
ஜ்வலதஷி-தீப்பிழம் பொக்கும் கண்களும், கொடிய விஷத்தைப் பெருக்கும் மூச்சுக் காற்றின் வெம்மை யுமுடைய
அப் பெரிய பாம்பு, அளவற்ற பலம் படைத்தவரும் மனதிற் கெட்டாத செயல் புரிபவருமான தங்களை
இறுகச் சுற்றிக் கொண்டு கடித்தானே அதன்றோ வியப்பு?
———-
அவி லோக்ய பவந்த மதா குலிதே
தடகாமிநி பாலக தேநு கணே
வ்ரஜ கேஹ தலே அப் யநிமித்த சதம்
சமுதீஷ்ய கதா யமுநாம் பஸூபா –7-
யமுனைக் கரையில் நின்று கொண்டிருந்த பசுக்களும், இடைச் சிறுவர்களும் தங்களைக் காணாது
வருந்திக் கொண்டிருக்கையில் இடைச் சேரியில் உள்ள இடையர்கள் பற்பல விதமான தீய சகுனங்களைக்
கண்டு யமுனைக் கரைக்கு ஓடி வந்தார்கள்.
———–
அகிலேஷு விபோ பவதீய தஸாம்
அவ லோக்ய ஜிஹாஸூ ஷு ஜீவ பரம்
பணி பந்தநம் ஆஸூ விமுச்ய ஜவா
துத கம்யத ஹாஸ ஜூஷா பவதா –8-
தங்களுடைய நிலையைக் கண்ட எல்லோரும் துயரம் தாங்காது தத்தம் உயிரையே விடத் துணிந்த பொழுது
பாம்பின் பிடியிலிருந்து விரைவாகத் தன்னைத் தானே விடுவித்துக் கொண்டு
புன் சிரிப்போடு தாங்கள் வேகமாக வெளியே வந்தீர்கள்.
———-
அதி ருஹ்ய தத பணி ராஜ பணான்
நன்ரு தே பவதா ம்ருது பாத ருசா
கல சிஞ்ஜித நூபுர மஜ்ஜூ மிலத்
கர கங்கண சங்குல சங்க் வணிதம் –9-
பின்பு பாம்பரசனான காளியனின் படங்களின் மேல் ஏறி நின்று மிருதுவான அழகான பாதங்களின்
சலங்கைகள் இனிது ஒலிக்கக் கை வளைகள் கிங்கிணி என்று ஒலிக்கத் தாங்கள் நடனமாடினீர்கள்.
மலர் மகள் கை வருட மலர் போது வருந்தும்படி மிருதுவான திருவடிகள்
————
ஜஹ்ருஷு பஸூ பாஸ்து ஷுர் முநயோ
வவ்ருஷு குஸூ மாநி ஸூ ரேந்த்ர கணா
த்வயி ந்ருத்யதி மாருத கேஹ பதே
பரி பாஹி ச மாம் த்வமதான் கதாத் –10-
அவ்வாறு தாங்கள் நடனமாடுவதைக் கண்ட கோபர்கள் மிகவும் மகிழ்ந்தனர்.
முனிவர்கள் ஆனந்தமடைந்தார்கள். தேவர்கள் கூட்டங்கூட்டமாக வந்து தங்கள் மேல்
மலர் மாரி பொழிந்தார்கள்-
ஸ்ரீ குருவாயூரப்பா அடியேனை ரக்ஷித்து அருள வேண்டும் –
————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply