ஸ்ரீ நாராயணீயம் – தசகம் 54–காளிய மர்தனம்-

விஷ ஜலம் பருகின பசுக்களும் கோபர்களும் உஜ்ஜீவனம் -நர்த்தனம் நாட்டியம் -மர்த்தனம் -அடக்குவது
இத்தை மூன்று தசகங்களால் விளக்குகிறார்
இதில் 56- மட்டும் நர்த்தனம்
மேல் மனைவியர் ஸ்தோத்ரம் பண்ண அநுக்ரஹம் 56 தசகத்தில்

சாலிநீ பா வகை

த்வத்ஸே வோத்கஸ் சவ்பரிர் நாம பூர்வம்
காலிந்த் யந்தர்  த்வாதஸ சாப்தம் தபஸ்யந்
மீந வ்ராதே ஸ்நேஹவான் போக லோலே
தார்ஷ்யம் ஸாஷாத் ஐதஷா தாக்ரே கதாசித் –1-

ஸ்நேஹவான்-அன்பும் ஆர்வமும்
ஸ்தானீ பிரபாவம் -இவர் தபஸ்ஸூ செய்வதால் நமக்கு பாக்யம் என்ற எண்ணத்துடன் ஸம்மத மீன் சொல்ல

ப்ரதக்ஷிணம் -வலது பக்கம் -பெரியோருக்கு இடம் left கொடுக்காமல் –
வலது பக்கம் மங்களம் –
இடது பக்கம் போனாலே ப்ரதக்ஷிணம் ஆகும் keep left இதனாலே தான் இன்றும்

முன்பு ஒரு சமயம் ஸுவ் பரி முனிவர் தங்களை தர்சிக்க ஆசை கொண்டு பன்னிரண்டு வருஷம்
காளிந்தி நதியின் உள்ளே நீரில் தவம் செய்தார்
அப்பொழுது நீரில் இருந்த மீன் கூட்டங்கள் உடன் அன்பு கொண்டார் –
ஒரு நாள் எதிரே தார்ஷ்யம்-பெரிய திருவடி வருவதைக் கண்டார் –

————

த்வத் வாஹம் ஜ்ஜஷதம் லஷயன் சதம் ஸ ஷுதம் த்ருஷ ஸூனும்
மீனம் கஞ்சிஜ் ஐஷதம் லஷயன் ச 

தப்தஸ் சித்தே சப்த வான் அத்ர சேத்த்வம்
ஜந்தூன் போக்தா ஜீவிதம் சாபி மோக்தா –2-

அபஹத பாப்மத்வாதிகள் –பசி இருக்காதே விஜிகத்ச உண்டே –
சத்யகாம -தர்மத்துக்கு உட்பட்ட ஆசைகள் நிறைவேறும்
தத்வம் உணர்த்த இங்கு பசி எடுப்பவர் போல் வந்து ஒரு மீனை உண்டார்

உயிரைப் போக்தா செய்தால் மோக்தா ஆவாய் –சாபம்
நித்யர் –
ரிஷியின் சாபம் வாங்கிக் கொள்வார்
இதில் அடியார் அபிமானத்தில் ஒதுக்கினால் நித்யர்களாலும் தீங்கு கிட்டாது என்று உணர்த்தவே இந்த லீலை

பெரிய திருவடி ஷுதம்-பசியால் மீன்களைத் தின்பத்தைக் கண்டார் -துயரம் அடைந்த அவர் –
இங்கு உள்ள ஏதாவது ஒரு ஜீவனைத் தின்றால் உடனே உயிர் இழப்பாய் என்று சபித்தார் –

ராமானுஜர் உடைய ஆறு கட்டளை
பாஷ்யம் கற்று கற்பித்து –
திருவாய் மொழி இதே போல் –
திவ்ய தேச வாசமும் கைங்கர்யங்களும் செய்து
ரஹஸ்ய த்ரயம் அர்த்த சந்தனம்
மேல்கோட்டையில் குடில்
அடியார் திருவடியில் ஒதுங்கி வாழ்தல் போதும்

——–

தஸ்மிந் காலே காலிய ஷ்வேல தர்பாத்
ஸர்பா ராதே கல்பிதம் பாகம் அஸ்நந்
தேந க்ரோதாத் த்வத் பதாம் போஜ பாஜா
பக்ஷ ஷிப்தஸ் தத் துராபம் பயோ அகாத்--3-

ரமணக தீவில் நடந்த விருத்தாந்தம் -காளியன் என்ற பாம்பு பெரிய திருவடிக்கு வைக்கப்பட்ட பாகங்களைத் தின்று வந்தது –
கோபம் அடைந்த பெரிய திருவடி தனது இறக்கைகளால் காளியனை அடித்து விரட்டினான் –
காளியனும் பெரிய திருவடி வர முடியாத காளிந்தி மடுவுக்குச் சென்றது -சகோதரி தவம் புரிந்த இடம் காளியன் மடு ஆனது

மாந்தாதா இருந்த காலம் –சவ்பரி-வ்ருத்தாந்தம் 
பின்பு ராம அவதாரம்
மேல் கிருஷ்ண அவதாரம்
ஷ்வேல தர்பாத்-விஷம் இருப்பதால் கர்வம் -விஷப் பாம்பையும் கொல்ல வல்ல  சக்தி

பெரிய திருவடி -திருமேனியில் அஷ்ட பாம்புகள்-பையுடை நாகப்பகைக் கொடியான்
பூணூல் : வாசுகி
வலது கை கங்கணம்: குளிகன்
இடது கை கங்கணம் : ஆதி சேஷன்
அரையில் அணி: தட்சகன்-பரிஷத்தை கடித்தது
மாலை: கார்கோடகன்.
வலது காது குண்டலம்: பத்மன்
இடது காது குண்டலம் : மஹா பத்மன்
திருமுடியில் : சங்க பாலன்-சங்க சூடன் என்றும் சொல்வர்
ஒன்பது பாம்புகள் கல் கருடனின் மட்டும் உண்டாம் –அஸி வாசன்-என்ற பெயருடன் கத்தியில் -உடை வாளில்- வசிப்பவன்
விடமுடைய பாம்பின் உடம்பையும் உயிரையும் உண்ணும் பறவை கருடன். அக்கருடனுடைய அரைக்கசையாக, கைகளில் தோள் வளைகளாக, முடி மேல், காது குண்டலங்களாக விளங்கும் ஆபரணங்கள் எல்லாம் பாம்பு, குடையும் பாம்பு என்று பரிபாடல் கூறுகின்றது.
 விடமுடை அரவின் உடலுயிர் உருங்கு உவணம் அவன்
 மடிமேல் வலந்தது பாம்பு பாம்பு தொடி பாம்பு தலைமேலது பாம்பு
 இறை தலையன பாம்பு படிமதம் சாய்த்தோய் பசும் பூனலை
 கொடிமேலிருந்தவன் தாக்கு இரையது பாம்பு – பரிபாடல்
நாக பாசத்தால் இந்திரஜித் இளைய பெருமாளை கட்ட, அவர் மயங்கி விழுந்த போது அந்த கட்டிலிருந்து விடுவித்தவன் கருடன். அதற்காக இராம்பிரானின் தழுவுதல பெற்றவன் கருடன். “ககநகர கனககிரி கரிமதர நிகம்மய நிஜ கருட கருதநில லவகளித விஷவதநக்ர கதந” என்று ஸ்வாமி தேசிகன் இவ்வைபவத்தை பாடுகின்றார்.

———

கோரே தஸ்மிந் ஸூரஜா நீர வாஸே
தீரே வ்ருஷா விஷதா ஷ்வேல வேகாத்
பக்ஷி வ்ராதா பேதுர் அப்ரே பதந்த
காருண்யார்த்ரம் த்வன் மனஸ்தேந ஜாதம் –4-

ஸூரஜா–ஸூர்யன் மகளான யமுனை-water pollution நீர் மட்டும் அல்ல -soil -விஷ வாயுவால் -வானம் ஆகாசம் pollution

அந்த மடுவில் காளியன் புகுந்ததும் அவன் –ஷ்வேல வேகாத்-விஷமான மூச்சுக் காற்றால் மடுவின் கரையில்
உள்ள மரங்கள் விஷதா-கருகின
மடுவில் மேலே வானில் பறக்கும் பறவைகளும் இறந்து விழுந்தன –

காருண்யார்த்ரம் த்வன் மனஸ்தேந ஜாதம் -தயையால் திரு உள்ளம் தோய்ந்து மர்த்தனம்-காற்று விஷத்தில் தோய உள்ளம் கருணையால் தோய்ந்து

—————-

காலே தஸ்மிந் நேகதா சீர பாணிம்
முக்த்வா யாதே யாமுநம் கான நாந்தம்
த்வய் யுத் தாம க்ரீஷ்ம பீஷ்ம உஷ்ம தப்தா
கோ கோபாலா வ்யாபிபன் ஷ்வேல தோயம் –5-

சீர பாணிம்-கலப்பை கையனான நம்பி மூத்த பிரான்-சென்றால் குடையாம் –இத்யாதி புல்கும் அரவு -ஆதி சேஷன்

க்ரீஷ்ம -கோடைக் காலம்
பீஷ்ம உஷ்ம தப்தா-வெப்பத்தால் வாடி

ஷீரம் சக்கர ஏவ கண்ணன் பால் பலராமன் சக்கரை -தேசிகன் தசாவதார ஸ்லோகம்-அடியார் குழுவுடன் பகவத் அனுபவம் –

ஆயர்பாடியில் இந்த ஒரு தடவை தான் அவர் இல்லாமல் போனான்-

பாம்பு காளிய நிரஸனத்துக்கு ஆதிசேஷன் அம்சம் -நம்பி மூத்த பிரானை விட்டு
பொங்கும் பிரிவால் நர்த்தனம் காண முடியாமல் அவரே அடக்கி விட்டு இருப்பாரே
ஆகவே தனியே சென்றான்

கடம்ப கிரீடா -பூம் துணர் கொத்து பந்து -cricket -விளையாட்டு போல் -நீர்க்கரை
கந்தக ஸ்துதி மத்வாச்சார்யார் -பந்தைத் தட்டி -அதே ஸ்ருதியில் பாடி உள்ளார்

ஒரு முறை நம்பி மூத்த பிரானை விட்டுத் தனியே யமுனை நதியின் கரையில்
உள்ள காட்டுக்குச் சென்றீர்கள்-
கடுமையான வெய்யிலிலே துன்பம் அடைந்த இடையர்களும் பசுக்களும்
அந்த மடுவின் விஷ நீரைப் பருகினார்கள் –

——-

நஸ் யஜ் ஜீவாந் விஸ்யுதாந் ஷ்மாதலே தாந்
விஸ்வாந் பஸ்யன் அச்யுத த்வம் தயார்த்ர
ப்ரோப்யா பாந்தம் ஜீவயாம் ஆசித த்ராக்
பீயூஷாம் போ வர்ஷிபி ஸ்ரீ கடஷை–6-

உடனே உயிர் இழந்து கீழே விழுந்தார்கள் -தாங்கள் கருணையுடன் அவர்கள் அருகே வந்து
அமிர்தம் ஆகிற தங்கள் கடைக்கண் கடாக்ஷத்தாலே அவர்களைப் பிழைக்கச் செய்தீர்கள் –

அச்யுத பத பிரயோகம்
சாலினி மீட்டர் இந்த ஸ்லோகங்கள்
கேசவ சப்தம் இருந்தாலும் இந்த சந்தஸ்ஸுக்குச் சேரும் இது இல்லாமல்
அச்யுத-நழுவ விடாமல் -கைவிடாத கருணை ப்ரவாஹம் -symbathy மட்டும் இல்லாமல் embathy -தமக்கு வந்த கஷ்டம் போல் கருதுவான்-வ்யஸநேஷு மனுஷ்யாணாம் -சக்ரவர்த்தி திருமகன் போல்

அம்ருதம் -விஷத்துக்கு anti dose -கருணை கடாக்ஷம் -ஆராவமுதம் திருக்கண் பார்வை

அகல்யை திருவடியின் மண் துகள்
பரதன் -பாதுகை
மஹாபலி கர்வம் திருவடி
யாமலார்ஜுனன் மரங்கள் முழங்கால்
மதுகைபடர் தொடையால் தட்டி
ருத்ரன் சாபம் -திருமார்பில் வியர்வை
தேவர்களுக்கு லஷ்மீ கடாக்ஷம்
முதலை சக்கரம்
கஜேந்திரன் கையால்
இங்கு ஸ்ரீ கடாக்ஷம் -என்றும் திருவருள் பெற்று இன்புறலாம்
சீரிய அனுக்ரஹம் மிதுனம் -தனியாகப் பண்ணினால் சீறிய அனுக்ரஹம் –

ஸ்ரீ கடாக்ஷம் -கடாக்ஷமாகவே லஷ்மி -செந்தாமரைக் கண் வண்ணம் -அவளையே பார்த்து பார்த்து குடி வந்தாள்
மைத்தடம் கண் -மைய கண்ணாள் -அவளுக்கு இவனைப் பார்த்து பார்த்து

—————–

கிம் கிம் ஜாதோ ஹர்ஷ வர்ஷ அதி ரேக
ஸர்வாங்கேஷ் வித் யுத்திதா கோப சங்கா
த்ருஷ்ட்வா அக்ரே த்வாம் த்வத் க்ருதம் தத் விதந்த
ஸ்த்வாம் ஆலிங்கன் த்ருஷ்ட நாநா ப்ரபாவா –7-

உயிர் பிழைத்த அவர்கள் இந்த ஆனந்தம் எங்கு இருந்து உண்டாகிறது என்று கூறிக் கொண்டு
எதிரிலே தங்களைக் கண்டார்கள்
இவ் விதமாக தங்கள் மஹிமையை பல முறை முன்பே கண்டு இருந்ததால் இதற்கும்
தாங்களே காரணம் என்று உணர்ந்து தங்களை ஆரக் கட்டித் தழுவிக் கொண்டனர் –

————

காவஸ் சைவம் லப்த ஜீவா ஷணேந
ஸ்பீதா நந்தஸ் த்வாம் ச த்ருஷ்ட்வா புரஸ்தாத்
த்ராக ஆவவ்ரு ஸர்வதோ ஹர்ஷ பாஷ்பம்
வ்யாமுஞ் சந்த்யோ மந்த முத்யன் நிநாத –8-

நொடிப் பொழுதில் பிழைத்த பசுக்களும் ஆனந்தத்துடன் மெதுவாகக் குரல் கொடுத்துக்
கொண்டே தங்களைச் சுற்றி வந்தன –

கோபியர் வேறே என்றும் பார்த்த பின்பே உன்னைப் பார்த்தார்கள்
கோக்கள் க்ஷணப் பொழுதில் நேராக உன்னைப் பார்த்தன-ஹர்ஷ பாஷ்பம்–ஆனந்த கண்ணீர் பொழிந்து திரு மஞ்சனம் -மா மெல்லிய குரலில் ஸ்துதியும் செய்தன

———–

ரோமாஞ்சோ அயம் ஸர்வதோ ந சரீரே
பூயஸ் யந்த காசித் ஆந்த மூர்சா
ஆச்சர்யோ அயம் ஷ்வேல வேகோ முகுந்தே
த்யுக்தோ கோபைர் நந்தி தோ வந்தி தோ அபூ –9-

எங்கள் தேகத்தில் மயிர்க் கூச்சலுடன் சொல்ல முடியாத ஆனந்தம் உண்டாகிறது –
இந்த விஷ வேகம் ஆச்சர்யமாக உள்ளது என்று கூறி இடையர்கள் வணங்கினார்கள் –

விஷம் உண்டு எழுத எங்களுக்கு ஆனந்த கண்ணீர் மெய் சிலிர்த்து -என்ன ஆச்சார்யம் -ஸ்துதி கோபியர்

————

ஏவம் பக்தாந் முக்த ஜீவாந் அபி த்வம்
முக்தா பாங்கைர் அஸ்த ரோகாம் ஸ்த நோஷி
தாத்ருக் பூத ஸ்பீத காருண்ய பூமா
ரோகாத் பாயா வாத கேஹாதி வாஸ –10-

தங்களை அடைந்த பக்தர்களை மரணம் அடைந்தாலும் அழகான கடாக்ஷத்தால்
தாபத்தைப் போக்கிப் பிழைப்பிக்றீர்கள்
அளவற்ற கருணா சமுத்ரமான ஸ்ரீ குருவாயூரப்பா அடியேனை ரக்ஷித்து அருள வேணும் –

வாத ரோகம் அவருக்கு-சம்சார ரோகம் நமக்கு –
வாத கேஹம் -இவன்-அனைத்தையும் போக்கி அருளுபவர்

————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading