நம்பி மூத்த பிரான் மூலமாகச் செய்த லீலை
தேனுகா வனம் தானே சென்று அசுரனை அழித்தான்
கழுதை வடிவ அசுரன்
உப ஜாதி மீட்டர்
5 வயசு வரை பால்யம்
6-10-வயசு பவ்கண்டம்
11-16-சிசோர
16 மேல் யவ்வனம்
அதீத்ய பால்யம் ஜகதாம் பதே த்வம் உபேத்ய பவ்கண்ட வயோ மநோஜ்ஞம்
உபேஷ்ய வத்ஸா வனம் உத்ஸவேந ப்ராவர்த்ததா கோ கண பால நாயாம் –1–
குழந்தைப் பருவத்தைத் தாண்டி பிள்ளைப் பருவத்தை அடைந்தீர்கள் –
கன்றுகளை மேய்ப்பதை விட்டு பசுக்களை மேய்த்து ரஷிக்கத் தொடங்கினீர்கள் –
—————–
உபக்ரமஸ்ய அநு குணைவ சேயம் மருத் புராதீச தவ ப்ரவ்ருத்தி
கோத்ரா பரித்ராண க்ருதே அவதீர்ணஸ் ததேவ தேவா ஆர பதாஸ் ததா யத் –2-
பூமியை ரக்ஷிக்க திரு அவதாரம் செய்து அருளிய தாங்கள் கோ -பசுக்
கணங்களையும் ரஷிக்கத் தொடங்கினீர்களே –
கோ பாலனம் –கோபாலன்
கோத்ரா பூமி பாலனம் – முன் கோ பாலநம்
கிருஷ்ணா பூமிக்கு ஆனந்தம் கொடுக்கவே அவதாரம் -வார்த்தை விளையாட்டு
மண்ணின் பாரம் நீக்கவே வந்து பிறந்தவன் அன்றோ
——–
கதாபி ராமேண சமம் வநாந்தே வனஸ்ரியம் வீஷ்ய சரந் ஸூகேந
ஸ்ரீ தாம நாம்ந ஸ்வ ஸகஸ்ய வாசா மோதா தகா தேநு ககா நநம் த்வம் –-3-
ஒரு முறை நம்பி மூத்த பிரான் உடன் காட்டின் அழகிய காட்சிகளில் மகிழ்ந்து செல்லும் போது
ஸ்ரீ தாமன் என்ற நண்பன் சொன்ன படி தேனுகன் என்ற அசுரனின் காட்டுக்குச் சென்றீர்கள்-
தேனுக தோட்டம் -பனை மரத்தோட்டம் சென்றாயே
———-
உத்தால தாலீ நிவஹே த்வத் உக்த்யா பலேந தூதே அத பலேந தோர்ப் யாம்
ம்ருது கரஸ் ச அப்ய பதத் புரஸ்தாத் பலோத் கரோ தேநுக தாநவோ அபி –4-
தாங்கள் கூறியதால் அங்கு உயர்ந்து இருந்த தாலீ-பனை மரங்களை பலேந-நம்பி மூத்த பிரான் வலுவாக அசைத்தார் –
பழுத்ததும் பழுக்காததுமான பழங்கள் கீழே விழுந்தன –
தேனுகன் என்ற அசுரனும் கீழே விழுந்தான் –
பலேந பலமான தோள்களால்
—————-
ஸமுத்யதோ தைநுக பாலநே அஹம் கதம் வதம் தைநுகம் அத்ய குர்வே
இதீவ மத்வா த்ருவம் அக்ரஜேந ஸூரவ்க யோத்தாரம் அஜீகநஸ் த்வம் –-5-
தேவனே பசுக்களை -தேனுக்களை -ரக்ஷிக்கத் தொடங்கிய தாங்கள் அந்தப் பெயர் கொண்ட
தேனுகன் என்ற அசுரனை வதம் செய்ய மனம் வராததால் நம்பி மூத்த பிரானைக்
கொண்டு வதம் செய்தீர்கள் –
ஹாஸ்ய ரசம் மிக்க தசகம்
காம தேனு சொல்கிறோம்
———
ததீய ப்ருத்யா நபி ஜம்பு கத்வேந உபாகதாந் அக்ரஜ ஸம்யுதஸ் த்வம்
ஜம்பூ பலா நீவ ததா நிராஸ்தஸ் தாலேஷு கேலந் பகவன் நிராஸ்த –6-
அந்த அஸுரனுடைய பணி யாட்கள் ஜம்பு கத்வேந-நரி வேஷத்தில் தங்களைத் தாக்க வந்தனர் –
அவர்களை நிராஸ்தஸ் –அநாயாசமாக ஜம்பூ பலா-நாகப் பழங்களைப் போல பனை மரங்களில் நிராஸ்த-எறிந்தீர்கள் –
———–
விநிக்நதி த்வய்யத ஜம்பு கௌகம் ச நாம கத்வாத் வருணஸ் ததாநீம்
பயாகுலோ ஜம்புக நாம தேயம் ஸ்ருதி ப்ரஸித்தம் வ்யதி தேதி மன்யே –7-
நரி வேஷத்தில் வந்த அனைவரையும் கொன்றீர்கள்-அதைக் கண்ட வருணன் தனக்கு
ஜம்புகன் என்ற பெயர் இருப்பதால் பயந்தான்
வேதத்தில் மட்டும் தனக்கு அந்தப் பெயர் இருந்தால் போதும் என்று நினைத்தான் –
வேதத்திலே மட்டும் இருக்கட்டும் லோகத்தில் பிரசித்தம் ஆகாதபடி இருக்கச் செய்தான்
————-
தவ அவதாரஸ்ய பலம் முராரே சஞ்ஜாத மத்யேதி ஸூரைர் நுதஸ் தவம்
ஸத்யம் பலம் ஜாத மிஹேதி ஹாஸீ பாலை சமம் தால பலான் யபுங்க்தா -8-
தாங்கள் திரு அவதரித்த பலன் கிடைத்து விட்டது என்று தேவர்கள் ஸ்துதித்தனர்
ஆம் பழம் கிடைத்து விட்டது என்று சிரித்துக் கொண்டே சிறுவர்கள் உடன்
பனம் பழங்களைச் சாப்பிட்டீர்கள் –
————–
மது த்ரவஸ் ருந்தி ப்ருஹந்தி தாநி பலாநி மேதோ பரப் ருந்தி புக்த்வா
த்ருப்தைஸ் ச த்ருப்தைர் பவனம் பலவ்கம் வஹத்பிர் ஆகாகலு பாலகைஸ் த்வம் -9-
பெரியதாகவும் நிறைய சாறுடன் இனிமையாக உள்ள அந்தப் பழங்களை உண்டு மகிழ்ச்சி அடைந்தீர்கள் –
நிறைய பழங்களை எடுத்துக் கொண்டு வீடு திரும்பினீர்கள் –
————
ஹதோ ஹதோ தேநுக இத் யுபேத்ய பலாந்ய தத்பிர் மதுராணி லோகை
ஜயதி ஜீவேதி நுதோ விபோ த்வம் மருத் புரா தீஸ்வர பாஹி ரோகாத் –10-
மக்கள் பழங்களைத் தின்று கொண்டு -தேனுகன் இறந்தான் -என்று கூறிக் கொண்டு –
தாங்கள் நன்றாக இருக்க வேண்டும் –
நீண்ட காலம் வாழ வேண்டும் என்று தங்களை வாழ்த்தினார்கள் –
இப்படிப்பட்ட ஸ்ரீ குருவாயூரப்பா அடியேனை ரஷித்து அருள வேண்டும் -என்று வேண்ட
தலையை அசைத்து அங்கீ கரித்து அருளினீரே –
————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply