ஸ்ரீ நாராயணீயம் – தசகம் 52–ப்ரம்ம கர்வ ஸமனம்-

ஸ்ரீ கோதா ஸ்துதி போல் வசந்த திலக மீட்டர் 10 ஸ்லோகங்களும்

அந்யாவதார நிகரேஷு வநிரீஷிதம் தே
பூமாதிரேகம் அபி வீஷ்ய ததா அகாமோஷே
ப்ரஹ்மா பரீஷிது மநா ச பரோக்ஷ பாவம்
நித்யே அத வத்ஸ கணான் ப்ரவிதத்ய மாயம் –-1-

தாங்கள் முன்பு செய்து அருளினை அவதாரங்களில் காணப்படாத சில அதிசயங்கள்
ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்தில் அகாசூர வதத்தில் காணப்பட்டது
தங்களைப் பரிஷிக்க விரும்பிய பிரம்மன் தன் சக்தியால் மாடு கன்றுகளை
மறைவான இடத்துக்கு அழைத்துச் சென்று மறைத்து வைத்தான் –

————-

வத்ஸாந்  அவீஷ்ய விவேச பஸூ போத்கரே தாந் 
ஆநேது காம இவ தாத்ரு மந அநு வர்தீ
த்வம் சாமி புக்த கபலோ கதவாம்ஸ் ததாநீம்
புக்தாம் ஸ்திரோதித சரோஜ பவ குமாரான் –2-

தாத்ரு மந அநு வர்தீ-பிரமனின் உள்ளப்படி நடக்க

ஒவ்வொரு ஆயர் பிள்ளைக்கும் தான் அமுது செய்து பிரசாதம் அவர்கள் உண்ணும் படி இருப்பதை பார்த்து அஸூயை

யமுனா நதிக்கு மீன்களாக 33 கோடி தேவர்களும் வர
பெருமாள் பிரசாதம் அமுது செய்த பின்பு கையை அலம்பக்கூடாது -ஸாஸ்த்ர விதி செய்தானாம்
அவர்களுக்கு கிடைக்காமல் போக வருந்து நான்முகன் இடம் சொல்ல
இவர்களையும் ஒளித்து வைத்தான் என்றும் சொல்வர்

கோப குமாரர்கள் கன்றுகளைக் காணாமல் துயரம் அடைந்தனர் -உடனே தாங்கள் பிரமனின் செயலை
முடிவுக்குக் கொண்டு வர எண்ணம் கொண்டவர் போலே
பாதி உண்டு கொண்டு இருக்கும் போதே கையில் சாதத்துடன் கன்றுகளைத் தேடித் சென்றீர்-
அப்போது ப்ரம்மா உணவு உண்டு கொண்டு இருக்கும் இடையர்களையும் மறைத்து வைத்தார் –

———-

வத்ஸாயிதஸ் தத் அநு கோப கணாயிதஸ் த்வம்
சிக்யாதி பாண்ட முரலீ கவலாதி ரூப
ப்ராக்வத் விஹ்ருத்ய விபிநேஷு சிராய சாயம்
த்வம் மாயயா அத பஹுதா வ்ரஜம் ஆயயாத —3-

மாயையால் தாங்களே கன்றுகளாயும் இடைச் சிறுவர்களையும் உரு எடுத்துக் கொண்டு மேலும்
உறி -உறியில் உள்ள பாத்திரம் -புல்லாங்குழல்- கவலாதி கொம்புகளாகவும்  முதலியவைகளாயும் வேஷம் பூண்டு
காட்டில் வெகு நேரம் விளையாடிவிட்டு மாலையில் வீடு சென்றீர்கள்–

தானே பரத்வம் என்று காட்டாமல் -அவதார ரஹஸ்யம் வெளிக்காட்டாமல்- செய்த லீலைகள்-

———

த்வாமேவ சிக்ய கவலாதி மயம் ததாநோ
பூயஸ் த்வமேவ பஸூ வத்ஸக பால ரூப
கோ ரூபிணீ பிர் அபி கோப வதூ மயீபிர்
ஆஸாதி தோ அஸி ஜநநீபிர் அதி ப்ரஹர்ஷாத் –4-

கன்றுகளாயும் கோப குமாரர்களாகவும் உருவம் கொண்ட தங்களைப் பசுக்களும்
தாய்மார்களும் சந்தோஷத்துடன் வரவேற்றார்கள் –

தங்களையே அறியாமல் இவற்றின் மேல் ஈர்ப்பு கொள்ளும்படி செய்தாயே –

————-

ஜீவம் ஹி கஞ்சித் அபிமாந வஸாத் ஸ்வ கீயம்
மத்வா தநூஜ இதி ராக பரம் வஹந்த்ய
ஆத்மாநம் ஏவ து பவந்தம் அவாப்ய ஸூநும்
ப்ரீதும் யயுர்ந கீயதீம் வநிதாஸ் ச காவ –5-

உலகில் தங்களுக்கு குழந்தையாகப் பிறந்த ஒரு ஜீவனை அபிமானத்தால் தன் பிள்ளை
என்று கொண்டாடி மகிழ்ச்சி அடைகிறார்கள் –
அப்படி இருக்க பரமாத்மாவான தங்களையே குழந்தையாக அடைந்த பசுக்களும் தாய்மார்களும்
அடைந்த ஆனந்தத்துக்கு அளவும் உண்டோ –

————

ஏவம் பிரதி க்ஷண விஜ்ரும்பித ஹர்ஷ பார
நிஸ் சேஷ கோப கண லாலித பூரி மூர்திம்
த்வாம் அக்ரஜோ அபி புபுதே கில வத்சராந்தே
ப்ரஹ்மாத் மநோர் அபி மஹான் யுவயோர் விசேஷ –6-

ஒரு வருஷம் இவ்வாறு கழிந்த பின்னரே கன்றுகளும் சிறுவர்களும் தாங்களே என்று
நம்பி மூத்த பிரான் உணர்ந்தார் –
தாங்கள் இருவரும் ப்ரஹ்மத்தின் வடிவாக இருந்தாலும் இருவருக்கும் இடையே
நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன –

நம்பி மூத்தபிரான் பூர்ண அவதாரம் இல்லையே ஆவேச அவதாரம் தானே-

———–

வர்ஷா வதவ் நவ புராதன வத்ஸ பாலாந்
த்ருஷ்ட்வா விவேகம் அஸ்ருணே த்ருஹிணே விமூடே
ப்ராதீ த்ருஸ ப்ரதி நவாந் மகுட அங்காதாதி
பூஷாம்ஸ் சதுர் புஜ யுஐ ச ஜலாம்புதா பாந் –7-

வருஷத்தில் முடிவில் பிரம தேவன் கன்றுகளையும் சிறுவர்களையும் கண்டு அவை தன்னால்
மறைக்கப் பட்டவையா அல்லது புதியனவா என்று திகைத்தார் –
அப்போது தாங்கள் புதிதாக உள்ள எல்லாவற்றையும் கிரீடம் தோள் வளைகளுடனும்
நான்கு கரங்கள் கொண்டவைகளாயும் காண்பித்து அருளினீர்கள் –

————-

ப்ரத்யேக மேவ கமலா பதி லாலிதாங்காந்
போகீந்த்ர போக சயனாந் நயநாபி ராமாந்
லீலா நிமீலி தத்ருஸ ஸநகாதி யோகி
வ்யாஸேவிதாத் கமல பூர்வ வதோ ததர்ச -8-

ஒவ் வொருவரையும் ஸ்ரீ லஷ்மீ தேவியுடனும் ஸ்ரீ ஆதி சேஷன் மேல் பள்ளி கொண்டு இருப்பவர்களாயும்
அழகிய வடிவுடனும் கண்ணை மூடிக் கொண்டும் சனகாதிகளும் முனிவர்களும்
ஸேவித்துக் கொண்டு இருக்கக் கண்டார் –

தனக்கே உரிய அசாதாரண லிங்களைக் காட்டக் கண்டான்

——–

நாராயணா க்ருதம் அசம்க்யதமாம் நிரீஷ்ய
ஸர்வத்ர சேவகம் அபி ஸ்வமவேஷ்ய தாதா
மாயா நிமக்ந ஹ்ருதயோ விமுமோஹ யாவத்
ஏகோ பபூவித ததா கபால அர்த பாணீ -9-

கணக்கற்ற வடிவுகளைக் கண்டார் -எங்கும் தாம் சேவகனாய் இருப்பதையும் கண்டார் –
மிகுந்த குழப்பத்தை அடைந்தார் –
அப்போது தாங்கள் கையில் பாதி அன்னக் கவளத்துடன் காட்சி அளித்தீர்கள் –

————–

நஸ்யன் மதே ததநு விஸ்வ பதிம் முஹுஸ் த்வாம்
நத்வா ச நூதவதி தாதரி தாம யாதே
பாதை சமம் ப்ரமுதிதை பிரவிசன் நிகேதம்
வாதால யாதிப விபோ பரிபாஹி ரோகாத் –10-

பிரமன் கர்வம் நீங்கி தங்களை ஸ்துதி செய்து நமஸ்கரித்து ஸத்ய லோகம் சென்றார் –
மகிழ்ச்சியாக மற்ற சிறுவர்களுடன் வீடு திரும்பினீர்கள் –
ஸ்ரீ குருவாயூரப்பன் அடியேனை ரக்ஷித்து அருள வேண்டும் –

ஒரு வருஷம் நடந்தவற்றை அனைவரும் மறக்கும் படி சங்கல்பமும் செய்தாயே

————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading