கதாசன வ்ரஜ ஸிஸூபி சமம் பவாந் வநாசநே விஹித மதி பிரகேதராம்
ஸமா வ்ருதோ பஹு தர வத்ஸ மண்டலை சதே மநைர் நிரகம தீச ஜேமநை –1-அதிருசிரா மீட்டர் பத்து ஸ்லோகங்களும்
சதே மநைர் -தின்பண்டங்கள் உடன்
ஜேமநை-அன்னம்-நந்தகிராமம் தங்கி பிருந்தாவனம் நோக்கி போகும் பொழுது
இறைவனே! தாங்கள் ஒரு சமயம் கோகுலச் சிறுவர்களுடன் (வநாசநே–வன அஸனம் -)வன போஜனம் செய்ய மனங்கொண்டு
அதி காலையில் கன்றுகள் சூழ கையில் கட்டுச் சாதமும், ஊறு காயும் எடுத்துக் கொண்டு வனம் சென்றீர்கள்.
————–
வி நிர்யதஸ் தவ சரணாம்புஜ த்வயா துதஞ்சிதம் த்ரி புவன பாவனம் ரஜஸ்
மஹர்ஷய புலக தரை கலே பரை ருதூஹிரே த்ருத பவ தீஷண உத்ஸவா -2-
அவனுக்கும் நமக்கும் உத்ஸாகம் கொடுப்பதே உத்சவம்
தாங்கள் வெளியே புறப்படுகையில் தங்களது திருவடித் தாமரைகளிலிருந்து மேலே கிளம்பிய,
உலகம் யாவையும் தூய்மையாக்கும் தூளிகளைத் தங்களைக் காண வந்த மஹரிஷிகள்
தங்கள் உடலில் புலக தரை-மெய் சிலிர்க்கத் தரித்துக் கொண்டனர்.
——-
ப்ரசாரயத் யவிரல ஸாத்வலே தலே பஸூந் விபோ பவதி சமம் குமாரகை
அகாஸூரோ ந்ய ருணத் அகாய வர்தநீ பயாநக சபதி சயாநக ஆக்ருதி -3-
தாங்கள் இடைச் சிறுவர்களுடன் பசும் புல் தரையில் கன்றுகளை மேய்த்துக் கொண்டிருக்கையில்
அகாஸுரன் என்பான் தங்களுக்குத் –அகாய வர்தநீ-தீங்கிழைப்பதற்காகவே மிக்க பயங்கரமான மலைப் பாம்பு
உருக் கொண்டு திடீரென வழியை மறைத்துக் கிடந்தான்.
பகவத் பிரசாதம் உண்ணும் நம்மைப்போல் பெற்றம் மேய்த்த பின்னும் உண்ணும் குலம் அன்றோ
——
மஹா சல ப்ரதிம தநோர் குஹா நிப பிரசாரித பிரதித முகஸ்ய காநநே
முகோ தரம் விஹரண கௌதுகாத் கதா குமாரகா கிமபி விதூரகே த்வயி –-4-
தாங்கள் சற்று தூரத்திலிருக்கையில் காட்டினில் விளையாடுகின்ற இடைச் சிறுவர்கள் அந்த மலைப் பாம்பை
ஒரு மலை என்றும், அதன் திறந்த வாயை குகை என்றும் எண்ணி அதன் வாயினுள் புகுந்தனர்.
———-
ப்ரமாதத ப்ரவிசதி பந்ந கோதரம் க்வதத் தனவ் பஸூ பகுலே ஸவாத் சகே
விதன் நிதம் த்வமபி விவேசித ப்ரபோ ஸூஹ்ருஜ் ஜநம் விசரணம் ஆஸூ ரஷிதும்–5-
பிரமாதம் -கவனக் குறைவு
பிரபுவே! கோபச் சிறுவர்கள் அறிவின்றி ஸவாத் சகே-கன்றுகளோடு பந்ந கோதரம்-அம் மலைப் பாம்பின் வாயினுள் புகும் பொழுதே
உடல்கள் வெந்து துன்பமடைந்தனர். இதைக் கண்ணுற்ற தாங்கள் வேறு புகலறியாத
தோழர்களைக் காக்க விரைந்து பாம்பின் வாயினுள் நுழைந்தீர்கள்.
————
கலோ தரே விபுலித வர்ஷ்மணா த்வயா மஹோரகே லுடதி நிருத்த மாருதே
த்ருதம் பவான் விதலித கண்ட மண்டலோ விமோசயன் பஸூப பஸூன் விநிர்யயவ் -6-
மஹோ ரகே–மஹா உரகே- மார்பால் பயணிக்கும்
அப்படிச் சென்ற தாங்கள் அதன் கழுத்தின் நடுவில் தங்களது உருவத்தைப் பெரிதாக்கிக் கொள்ளவே
மூச்சு விட முடியாமல் அப் பாம்பு திணறித் தரையில் விழுந்து புரண்டு இறந்தது.
உடனே தாங்கள் அதன் கழுத்தைக் கிழித்துக் கொண்டு இடைச் சிறுவர்களையும், கன்றுகளையும்
துன்பத்திலிருந்து விடுவித்து வெளியே அழைத்து வந்தீர்கள்.
——–
க்ஷணம் திவி த்வதுபக மார்த மாஸ்திதம் மஹா ஸூர ப்ரபவ மஹோ மஹோ மஹத்
விநிர்கதே த்வயி து நிலீந மஞ்ஜசா நப ஸ்தலே நன்ருது ரதோ ஜகு ஸூரா –-7-
இறந்த அக் கொடிய அஸுரனின் உடலிலிருந்து பெரியதொரு ஒளிப் பிழம்பு கிளம்பி தாங்கள்
வெளி வருவதற்காக வானில் சிறிது நேரம் காத்திருந்து தாங்கள் வெளியே வந்ததும்,
தங்களிடம் கலந்து மறைந்தது. அப்பொழுது விண்ணில் விண்ணவர்கள் ஆடிப் பாடி மகிழ்ந்தனர்.
———–
ச விஸ்மயை கமல பவாதிபி ஸூரைர் அநு த்ருதஸ் ததனுகத குமாரகை
திநே புனஸ் தருணதசாம் உபே யுஷி ஸ்வ கைர் பவாந் அத தனுத போஜன உத்சவம் -8-
பிறகு தாங்கள் தோழர்களான இடைச் சிறுவர்களுடன் தருணதசாம் –நடுப் பகலில் வன போஜனத்தைக் கொண்டாடினீர்கள்.
இதை கமல பவாதிபி ஸூரைர்-பிரம்மா முதலிய தேவர்கள் ஆகாயத்தில் மறைந்து நின்று கவனித்தார்கள்.
———-
விஷாணிகாம் அபி முரலீம் நிதம்பகே நிவேசயந் கபல தர கராம் புஜே
பிரஹாசயன் கல வசநை குமாரகான் புபோஜித த்ரித சகணைர் முதாநுதா –-9-
கொம்பையும், குழலையும் இடுப்பில் செருகிக் கொண்டு தாமரை போன்ற கைகளில் அன்னக் கவளத்தை
எடுத்துக் கொண்டு இடைச் சிறுவர்களைத் தங்களது வேடிக்கைப் பேச்சுக்களால் சிரிக்கச் செய்து கொண்டு
மகிழ்ச்சியோடு உண்டு களித்தீர்கள். இதைக் கண்ட த்ரித சகணைர்-தேவர்கள் மகிழ்ச்சி பொங்கத் தங்களைத் துதித்தனர்.
———-
ஸூகா ஸநம் த்விஹ தவ கோப மண்டல மகா சநாத் ப்ரியமிவ தேவ மண்டலே
இதி ஸ்துதஸ் த்ரிதச வரைர் ஜகத் பதே மருத் புரீ நிலய கதாத் ப்ரபாஹி மாம் –10-
இந் நிலவுலகில் இடையர் கூட்டத்தில் இன்பமாய் புசிப்பது, யாகத்தில் அளிக்கப்படும் அவி உணவைத்
தேவருலகில் புசிப்பதை விட மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது போலும்!’ என்று
வானவர்களனைவரும் தங்களைப் போற்றித் துதித்தனர்
அடியேனை ரஷித்து அருள வேணும் –
————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply