தரல மது க்ருத வ்ருந்தே வ்ருந்தா வநே அத மநோ ஹரே
பஸூப ஸிஸூபி சாகம் வத்ஸா நுபாலந லோலுப
ஹல தர சகோ தேவ ஸ்ரீ மான் விசேரித தாராயந்
கவல முரலீ வேத்ரம் நேத்ராபி ராம தநுத் யுதி –1-ஹரிணீ மீட்டர் அனைத்து ஸ்லோகங்களும்
ஸ்ரீ லஷ்மீ பதியே வண்டுகள் ரீங்காரம் செய்யும் ஸ்ரீ பிருந்தா வனத்தில் கவல கொம்பு முரலீ புல்லாங்குழல் வேத்ரம் பிரம்பு
முதலியவற்றை எடுத்துக் கொண்டு
நம்பி மூத்த பிரானொடும் ஆயர் சிறுவர்களோடும் கன்றுகளையம் பசுக்களையும் மேய்த்துக் கொண்டு
தாங்கள் திரிந்து மகிழ்ந்தீர்கள் –
———–
விஹித ஜகதீ ரக்ஷம் லஷ்மீ கராம் புஜ லாலிதம்
தததி சரண த்வந்த்வம் வ்ருந்தா வனே த்வயி பாவநே
கிமவ நபபவ் ஸம்பத் சம் பூரிதம் தரு வல்லரீ
சலில தரணீ கோத்ர ஷேத்ரா திகம் கமலா பதே –-2-
ஸ்ரீ பெரிய பிராட்டியார் திருக் கைகளால் வருடப் படுவதும் சர்வ ரக்ஷகமான உமது
திருவடித் தாமரைகள் ஸ்பர்சம் பட்டு தரு-மரம் செடி வல்லரீ-கொடி சலில-நீர் தரணீ பூமி கோத்ர மலை ஷேத்ரா திகம் வயல்கள் யாவையும்
பெருமை உடைத்தாய் செழித்து விளங்கின –
பிராட்டியும் அவனும் விட்டாலும் விடாத திண் கழல் அன்றோ–நீர் வளம் நில வளம் பால் வளம் வரச் சொல்லவும் வேண்டுமோ
————-
விலசத் உலபே காந்தா ராந்தே ஸமீரண சீதலே
விபுல யமுநா தீரே கோவர்த்தநாசல மூர்த ஸூ
லலித முரலீ நாத ஸஞ்சாரயன் கலு வாத் சகம்
க்வசன திவஸே தைத்யம் வத்ஸா க்ருதிம் த்வ முதைஷதா –3–
பச்சைப் உலபே புல் வெளியிலும் கோவர்த்தன மலையிலும் குழலூதிக் கொண்டு கன்றுகளை மேய்த்துக்
கொண்டு இருந்த நீர் ஒரு நாள் கன்றின் வடிவில் இருந்த வத்ஸாசுரனைப் பார்த்தீர்கள் –
முரலீ-முகுந்த ரஸாநா லீலே -நேரடியாக புல்லாங்குழலைக் குறித்தாலும் முகுந்தனின் நாக்கின் விளையாட்டு
———–
ரபஸ விலஸத் புச்சம் விச்சா யதோ அஸ்ய விலோகயந்
கிமபி வலித ஸ்கந்தம் ரந்த்ர ப்ரதீஷம் உதீ ஷிதம்
தமத சரணே பிப்ரத் விப்ராமயந் முஹு ருச்சகை
குஹ சந மஹா வ்ருஷே சிஷே பிதே ஷத ஜீவிதம் -4-
அவன் வேகமாக வாலை அசைத்துக் கொண்டு முகத்தை திருப்பிக் கொண்டு தங்களை நெருங்க
சரியான நேரத்தை எதிர் பார்த்துக் கொண்டு காத்து இருந்தான்
அவனைப் பார்த்து அவன் கால்களைப் பிடித்து வேகமாகச் சுற்றி அவனை ஒரு மரத்தின் மீது
எறிந்து அவனைக் கொன்றீர்கள் –
மஹா வ்ருஷே-ரூடி -கள்ளிச்செடி -விபரீத லக்ஷணம்
பாகவதம் வேறே மாதிரி சொல்லும்
ஒவ்வொருவருக்கும் வினோத லீலை அனுபவம் காட்டி அருளுவான்
————-
நிபததி மஹா தைத்யே ஜாத்யா துராத்மநி தத் க்ஷணம்
நிப தந ஜவ ஷுண்ண ஷோணீ ருஹக்ஷத காநநே
திவி பரிமிலத் வ்ருந்தா வ்ருந்தாரகா குஸூமோத் கரை
சிரஸி பவதோ ஹர்ஷாத் வர்ஷந்தி நாம ததா ஹரே –5-
அவன் இறந்து கீழே விழுந்தான் -அவன் விழுந்த வேகத்தில் பல மரங்கள் சாய்ந்து விழுந்தன –
தேவர்கள் பூ மாரி பொழிந்தனர் –
ஜாத்யா துராத்மநி–கருவிலே திருவில்லாதவன்
மரங்களும் சாய்ந்து பூ மழை -வானத்தில் இருந்து தேவர்கள் சாத்தும் பூ மழை இரண்டும் உனக்கு
—————-
ஸூரபில தமா மூர்தந் யூர்த்வம் குத குஸோ மாவலீ
நிபததி தவேத் யுக்தோ பாலை ச ஹேலம் உதைரய
ஜடிதி தநு ஜஷே பேணோர் த்வம் கதஸ் தரு மண்டலாத்
குஸூம நிகர ஸோ அயம் நூநம் சமேதி சனைரிதி –6-
இடைச் சிறுவர்கள் உமது தலையில் விழுந்த பூக்களைப் பார்த்து -மிகவும் மணம் நிரம்பிய
இந்தப் பூக்கள் எங்கு இருந்து விழுகின்றன என்று கேட்டனர் –
தாங்கள்-அசுரனை மரத்தில் எறிந்த போது அம் மரத்தில் இருந்து பூக்கள் உயரே கிளம்பி
மெதுவே கீழே விழுகிறது -என்று விளக்கம் அழித்தீர்கள்-(வேடிக்கையாக –ஹேலம்)
குஸோ மாவலீ-பூக்களின் வரிசை -தீபாவலீ -தீபங்களின் வரிசை -தீபங்களின் ஒளி தப்பாகச் சொல்கிறோம்
———-
க்வசன திவஸே பூயோ பூயஸ் தரே பருஷாதபே
தபந தநயா பத பாதும் கதா பவதா தயா
சலித கருதம் ப்ரேஷா மாஸூர் பகம் கலு விஸ்ம்ர்ருதம்
ஷிதிதர கருச்சேத கைலாச சைலம் இவா பரம் –-7-
தபந தநயா-சூர்யன் மகளான யமுனை
ஒரு நாள் அதிக வெய்யிலால் தாபம் அடைந்த ஆயர் சிறுவர்களும் தாங்களும் யமுனை
நதிக்குத் தண்ணீர் குடிக்கச் சென்றீர்கள்-
அங்கே சலித கருதம்-இறக்கைகளை அசைத்துக் கொண்டு இருக்கும் ஒரு பெரிய கொக்கைக் கண்டீர்கள் –
முன்பு இந்திரன் மலைகளின் இறக்கைகளை வெட்டும் போது வெட்ட மறந்த இறக்கை உள்ள
பெரிய மலை -கைலாச மலை போலவே தோற்றம் அளித்தது –
—————
பிபதி சலிலம் கோப வ்ராதே பவந்த மபி த்ருத
சகில நிகிலந் நக்நி ப்ரக்யம் புநர் த்ருத மூத் வமந்
தலயிதும் அகாத்த் ரோட்யா கோட்யா ததா ஆஸூபவான் விபோ
கல ஜன பிதா சுஞ்சுஸ் சஞ்சூ ப்ரக்ருஹ்ய தரா ரதம் -8-
வமந்-உமிழ்ந்த -vaamit
இடைச் சிறுவர்கள் தண்ணீர் குடிக்கும் போது அந்த கொக்கு தங்களைக் கொத்தியது –
அப்போது தாங்கள் அதற்கு நெருப்பு போலே ஆனீர்கள் –
மறுபடியும் தங்களை விழுங்க வந்தது -தீயவர்களை அழிக்க விருப்பம் கொண்ட தாங்கள்
அதன் அலகினைப் பற்றி இரு கூறாகக் கிழித்துக் கொன்றீர்கள் –புள்ளின் வாய் கீண்ட சரித்திரம்
————-
சபதி ஸஹஜாம் சந் த்ரஷ்டும் வா ம்ருதாம் கலு பூதநாம்
அநுஐம் அகமப் யக்ரே கத்வா பிரதீ ஷிது மேவ வா
சமன நிலயம் யாதே தஸ்மிந் பகே ஸூமநோ கணே
கிரதி ஸூமநோ வ்ருந்தம் வ்ருந்தா வநாத் க்ருஹ மையதா –9-
பகாசுரன் என்ற கொக்கு வடிவில் வந்த அசுரன் தனது சகோதரியான பூதனையைக் காணவோ –
இனி மேல் இறக்கப் போகும் அகாசுரனை எதிர் கொள்ளவோ எம லோகம் சென்றான் –
தேவர்கள் பூ மழை பொழிந்தனர் -தாங்களும் பிருந்தாவனத்தில் இருந்து வீடு திரும்பினீர்கள் –
————
லலித முரலீ நாதம் தூராந் நிசம்ய வதூ ஜநைஸ்
த்வரிதம் உபகம் யாராத் ஆரூட மோதம் உதீஷித
ஜெனித ஜநநீ நந்தா நந்த ஸமீரண மந்திர
பிரதி தவ சதே ஸுவ்ரே தூரீ குருஷ்வ மமா மயான் –-10-
ஸமீரண —வாயு-மந்திர
ஸ்ரீ குருவாயூரப்பா -தங்கள் குழல் ஓசையைக் கேட்ட கோபியர்கள் சந்தோஷத்துடன்
தங்கள் அருகே ஓடி வந்தனர் –
தந்தை நந்த கோபனுக்கும் தாய் யசோதைக்கும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும்
தாங்கள் அடியேனை ரக்ஷித்து அருள வேண்டும் –
————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply