கோகுலம் இருந்து -பிருந்தாவனம் பயணித்தால் -இங்கு தான் கோவர்த்தனமும் உள்ளது
உபஜாதி மீட்டரில் சில ஸ்லோகங்களும் உபேந்த்ர வஜ்ரா மீட்டரில் சில ஸ்லோகங்களும் அமைத்துள்ள தசகம்
பவத் ப்ரபாவ அவிதுரா ஹி கோபாஸ் தரு ப்ரபாதாதிகம் அத்ர கோஷ்டே
அஹேதும் உத்பாத கணம் விசங்க்ய ப்ரயாதும் அந்யத்ர மநோ விதேநு -1-
ஹே குருவாயூரப்பா! தங்கள் மகிமயை அறியாத கோபர்கள், காரணமின்றி மரம் முறிந்து விழுந்தது
முதலியவற்றைத் தீய நிமித்தங்கள் என்று ஐயம் கொண்டு கோகுலத்திலிருந்து
வேறோரிடம் செல்ல நினைத்தார்கள்.
————-
தத்ர உபநந்தா பித கோப வர்யோ ஜகவ் பவத் ப்ரேரணயைவ நூநம்
இத ப்ரதீஸ்யாம் விபிநம் மநோஜ்ஞம் வ்ருந்தா வனம் நாம விராஜ தீதி -2-
நெருஞ்சி முள் காடு -துளசி வனம் என்றும் சொல்வார்கள்
அப்பொழுது கோபர்களில் வயதான உபநந்தன் என்பவன், ‘இங்கிருந்து (ப்ரதீஸ்யாம்)மேற்கே பிருந்தாவனம்
என்ற அழகான ஒரு வனம் உள்ளது’ என்று கூறியது தங்கள் தூண்டுதலினாலன்றோ?
————-
ப்ருஹத் வனம் தத் கலு நந்த முக்யா விதாய கௌஷ்டீ நம் அத ஷணேந
த்வத் அன்வித த்வஜ் ஜநநீ விஷ்ட கரிஷ்ட யாந அநு கதா விசேலு -3-
மாட்டுக்கொட்டகையை விரைவிலே முன்னே சென்று அமைத்தார்கள்
நந்தன் முதலியவர்கள் உடனே ‘பிருஹத்வனம்’ என்கின்ற பழைய கோகுலத்தைக் காலி செய்து விட்டுப்
பிருந்தாவனத்தை நோக்கிச் சென்றார்கள். அப்பொழுது தாங்கள், (தங்கள் தமையனார்) பலராமன்,
தாய் யசோதை, ரோஹிணி ஆகியவர்களோடு சிறந்த வண்டியில் ஏறிக் கொள்ள,
அதைப் பின் தொடர்ந்து மற்ற எல்லோரும் சென்றனர்.
——
அநோ மநோஜ்ஞ த்வநி தேநு பாலீ குர ப்ரணாந்தரவோ வதூபி
பவத் விநோத ஆலபித அக்ஷராணி ப்ரபீய ந அஜ் ஞாயதே மார்க தைர்க்யம் –4-
(அப்படி வண்டியின் பின் தொடர்ந்த அவர்கள்) வண்டிகளினுடைய இனிமையான சத்தத்துடன் -பசுக் கூட்டங்களின்
குளம்பு சத்தத்தையும் கேட்டு இடையில் கோபிகைகளோடு தங்களது மழலைச் சொற்களின் இனிமையையும்
பருகிக் கொண்டு வழி நடந்த களைப்பை அறியவில்லை.
பாதேயம் புண்டரீகாக்ஷ நாம சங்கீர்த்தன அம்ருதம் அன்றோ
—–
நிரீஷ்ய வ்ருந்தா வன மீச நந்தத் ப்ரஸூந குந்த ப்ரமுகத்ரு மௌகம்
அமோ ததா ஸாத்வல ஸாந்த்ர லஷ்ம்யா ஹரீந் மணீ குட்டிம புஷ்டி சோபம் –5-
ஹரீந் மணீ-மரகத மணி
அடர்ந்த மலர்களுடன் கூடிய குந்தம் முதலிய மரங்கள் செறிந்த தோப்புடனும், மரகதப் பச்சைக் கற்கள்
பதித்தாற் போன்ற (ஸாந்த்ர)அடர்ந்த பசும் புல் தரையுடனும் கூடிய அழகு நிறைந்த பிருந்தாவனத்தைக் கண்டு
தாங்கள் மகிழ்ந்தீர்கள்.
———
நவாக நிர் வ்யூட நிவாஸ பேதேஷ் வசேஷ கோபேஷு ஸூகாஸி தேஷு
வனஸ் ரியம் கோப கிசோர பாலீ விமிஸ்ரித பர்யக் அலோகதாஸ் த்வம் -6-
கோபர்கள் அனைவரும் புதிதாகக் கட்டப்பட்ட தனித்தனி வீடுகளில் மகிழ்ச்சியோடு வசிக்கத் தொடங்கினர்.
தாங்கள் இடைச் சிறுவர்களை, அழைத்துக் கொண்டு பிருந்தாவனத்தின் அழகைச் சுற்றிப் பார்த்து
மகிழ்ச்சி யடைந்தீர்கள்.
பெற்றம் மேய்த்து உண்ணும் குலம் -மாடுகளுக்கு கொட்டகை அமைத்த பின்பே தங்களுக்கு குடில்
திருவாராதனம் பண்ணிய பின்பே நாம் அமுது செய்வது போல்
————–
அரால மார்கா கத நிர்மல அபாம் மரால கூஜாக்ருத நர்மல அபாம்
நிரந்தர ஸ்மேர சரோஜ வக்த்ராம் கலிந்த கந்யாம் சம லோக யஸ்த்வம் –7–
அன்னப் பேடுகளின் இனிய கூவுதலையே சாதுர்யமான பேச்சாகவும், மலர்ந்த தாமரைகளையே அழகான புன்னகை
பூத்த முகமாகவும், (அரால மார்கா கத )வளைந்து வளைந்து வருகின்ற தெளிந்த நீரோடும் கூடிய களிந்தனின் பெண்ணான காளிந்தி
என்னும் யமுனையைத் தாங்கள் கண்டு மகிழ்ந்தீர்கள்
————
மயூர கேகா சத லோப நீயம் மயூக மாலா ஸபலம் மணீ நாம்
விரிஞ்ச லோகஸ் ப்ருஸம் உச்ச ஸ்ருங்கைர் கிரிம் ச கோவர்தனம் ஐஷதாஸ் த்வம்–8-
மயில்களின் அழகிய இனிமையான அகவுதலால் மனத்தை ஈர்ப்பதும், ரத்தினங்களுடைய ஒளிக் கிரணங்களால்
பற் பல வர்ணங்களுடன் விளங்குவதும், பிரம்ம லோகத்தையே தொடுவன போன்று உயர்ந்த கொடு முடிகளுடன்
கூடியதுமான கோவர்த்தன கிரியைத் தாங்கள் கண்டு களித்தீர்கள்.
————
சமம் ததோ கோப குமாரகைஸ் த்வம் சமந்ததோ யத்ர வனாந்தம் ஆகா
ததஸ் ததஸ் தாம் குடிலாம் அபஸ்ய கலிந்த ஜாம் ராக வதீமிவை காம் –9—
பிறகு தாங்கள் இடைச் சிறுவர்களுடன் பிருந்தாவனத்தைச் சுற்றி எங்கெங்கு சென்றீர்களோ,
அங்கங்கெல்லாம் தங்களிடம் (ராக வதீமிவை)மிக்க ஆசை கொண்டவள் போல தனித்துச் சுற்றி வரும்
அந்த காளிந்தியாகிய யமுனை யாற்றைக் கண்டீர்கள்.
காளீந்தீ திருமணம் பின்பு வருமே
———
ததோ விதே அஸ்மின் விபநே பசவ்யே ஸமுத் ஸூகோ வத்ஸ கண ப்ரஸாரே
சரந் ச ராமோ அத குமாரகைஸ் த்வம் ஸமீர கேஹாதிப பாஹி ரோகாத் —10-
இவ்வாறு பல பெருமைகள் கொண்டதும், பசுக்களுக்கு இன்பமளிப்பதுமான அந்தப் பிருந்தாவனத்தில்
கன்றுகள் மேய்ப்பதில் ஆசை கொண்டு பலராமனுடனும், மற்ற இடைச்சிறுவர்களுடனும் சேர்ந்து கொண்டு,
ஆடிப் பாடி மகிழ்ந்தீர்கள்-
ஸ்ரீ குருவாயூரப்பா அடியேனை ரக்ஷித்து அருள வேணும் –
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி
கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் அன்றோ
————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply