ஸ்ரீ நாராயணீயம் – தசகம் 48–நள கூபுர மணி க்ரீப சாப விமோசனம் -மோக்ஷம்–

குபேர புத்திரர்கள் சாபம் -மருத மரம் -அர்ஜுன மரம்-என்றும் சொல்வார்கள் -வம்ஸத்வம் மீட்டர்

முதா ஸூரவ் கைஸ் த்வம் உதார சம்மதைர் உதீர்ய தாமோதர இத் யபிஷ்டித
ம்ருது உதரஸ் வைரம் உ லூ கலே லகந் நதூரதோ த்வவ் ககுபவுத் யீஷதா -1-

மிகவும்‌ மகிழ்ச்சி கொண்ட விண்ணவர்கள்‌ பொங்கியெழும்‌ ஆர்வத்தால்‌ தங்களை ‘தாமோதரன்‌’
என்றழைத்துத்‌ துதித்துச்‌ சென்றனர்‌. மிகவும்‌ மிருதுவான வயிற்றையுடைய தாங்கள்‌ தங்கள்‌ விருப்பப்படி யன்றோ
உரலில்‌ கட்டுண்டீர்கள்‌. (அப்படிப்பட்ட) தாங்கள்‌ அருகிலிருந்த இரண்டு மருத மரங்களைக்‌ கண்டீர்கள்‌.

முந்தைய தசகம் -கட்டுண்ட உன்னைக் கண்டு தேவர்கள் ஸ்துதிக்க –
மூன்று தாம தழும்பு -நமக்கு சங்க சக்கர லாஞ்சனை போல் அவனுக்கு இவை

———–

குபேர ஸூநுர் நல கூப ராபித பரோ மணி க்ரீவ இதி ப்ரதாம் கத
மஹேஸ ஸேவ அதிகத ஸ்ரீ யோந் மதவ் சிரம் கில த்வத் விமுகா வகேலதாம் 2-

குபேரனுடைய புத்திரர்களான நள கூபரன்‌, மணிக் கிரீவன்‌ இருவரும்‌ சிவபெருமானை ஆராதித்துப்‌ பெருஞ்செல்வம்‌
பெற்றிருந்த கர்வத்தினால்‌ தங்களிடம்‌ பக்தியின்றி நீண்ட காலம்‌ உலகியலில்‌ ஈடுபட்டிருந்தார்கள்‌-

———–

ஸூராப காயாம் கிலதவ் மதோத்கடவ் ஸூராப காயத் பஹு யவ்தாவ்ருதவ்
விவாஸசவ் கேலி பரவ் ச நாரதோ பவத் பதைக ப்ரவணோ நிரைஷத— 3-

ஸூராப காயாம்-ஆகாச கங்கை -கரையில் -இவர்கள் யக்ஷர்களாக முன்பு இருந்தார்கள்

ஒரு சமயம்‌ அவர்களிருவரும்‌ திமிரினால்‌ மெய் மறந்தவர்களாய்‌ கள்‌ குடித்த மயக்கத்தினால்‌ ஆடிப்‌ பாடுகின்ற
பல இளம் பெண்களால்‌ சூழப்பட்டு கங்கை ஆற்றில்‌ விளையாடிக்‌ கொண்டிருந்தனர்‌.
இதைத்‌ தங்கள்‌ திருவடியில்‌ ‘பக்தி பூண்ட நாரத முனிவர்‌ கண்டார்‌.

——–

பியா ப்ரியா லோகம் உபாத்த வாஸஸம் புரோ நிரீஷ்யாபி மதாந்த சேதஸவ்
இமவ் பவத் பக்தி உப சாந்தி ஸித்தயே முனிர் ஜகவ் சாந்தி ம்ருதே குத ஸூ கம் –4-

நாரதரைக்‌ கண்ட பெண்கள்‌ சபித்து விடுவாரோ என்ற பயத்தினால்‌ தங்கள்‌ தங்கள்‌ வஸ்திரங்களை எடுத்து
உடுத்திக்‌ கொண்டனர்‌. ஆனால்‌ மயக்கத்தால்‌ மதியிழந்த இவர்கள்‌ இருவரும்‌ எதிரில்‌ நிற்கும்‌ முனிவரைக்‌ கண்டும்‌
தங்கள்‌ வஸ்திரங்களை எடுத்துக்‌ கொள்ள வில்லை. அவ் விருவர்களுக்கும்‌ தங்களிடம்‌ பக்தியும்‌, மன அமைதியும்‌
கிட்டுவதற்காக அவர்களை நாரதர்‌ சபித்தார்‌. மன அமைதி இல்லையேல்‌ சுகம்‌ எவ்வாறு உண்டாகும்‌?

———

யுவாம் அவாப்தவ் ககு பாத்ம தாம் சிரம் ஹரிம் நிரீஷ்யாத பதம் ஸ்வம் ஆப் நுதாம்
இதீரே தவ் தவ் பவத் ஈக்ஷண ஸ்ப்ருஹாம் கதவ் வ்ரஜாந்தே ககுபவ் பபூவது -5-

ககு பாத்ம தாம்-மருத மரம் அர்ஜுன மரம் -வஸ்திரம் இல்லாமல் இருக்குமே

நீங்களிருவரும்‌ நீண்ட காலம்‌ மருத மரமாக இருக்கக்‌ கடவீர்கள்‌. ஸ்ரீ ஹரியான பகவானை தரிசனம்‌ செய்து,
பின்‌ உங்களுடைய பதவியை மீண்டும்‌ அடைவீர்கள்‌’ .எனச்‌ சபித்தார்‌.
இவ்வாறு சபிக்கப்பட்ட அவர்களிருவரும்‌ தங்களை தரிசிக்கும்‌ ஆவலுடன்‌ (தாங்கள்‌ அவதரிக்கப்‌ போகும்‌)
கோகுலத்தருகில்‌ மருத மரங்களாகப்‌ பிறவி யடைந்தார்கள்‌.

———

அதந்த்ரம் இந்த்ர த்ரு யுகம் ததா விதம் சமே யுஷா மந்தரகா மிநா த்வயா
திராயித உலூகல ரோத நிர்துதவ் சிராய ஜீர்ணவ் பரி பாதிதவ் தரூ -6-

இந்த்ர த்ரு யுகம்-இரண்டு அர்ஜுன மரங்கள்
உலூகல ரோத-உரல் தடைப்பட
நிர்துதவ் -வேராக சாய்க்கப்பட்டு

அத்தகைய இரண்டு மருத .மரங்களின்‌ இடையில்‌ . தாங்கள்‌ உற்சாகத்துடன்‌ தங்களைக்‌ கட்டியுள்ள உரலுடன்‌
மெதுவாகத்‌ தவழ்ந்து சென்றீர்கள்‌. உரல்‌ குறுக்காகத்‌ தகைந்ததால்‌ வெகு காலமாகி உளுத்துப்‌ போயிருந்த
அவ் விரு மரங்களும்‌ ஆடி யசைந்து வீழ்த்தப் பட்டன.

———

அபாஜி சாகி த்விதயம் யதா த்வயா ததைவ தத் கர்ப தலாந் நிரே யுஷா
மஹா த்விஷா யஷ யுகேந தத் க்ஷணாத் அபாஜி கோவிந்த பவா நபிஸ் தவை –7-

கோவிந்தா! தங்களால்‌ முறிக்கப்பட்ட அவ் விரு மரங்களும்‌ ‘கீழே விழுந்தவுடன்‌, அவற்றின்‌
நடுவிலிருந்து மிகவும்‌ அழகு படைத்த : யஷ யுகேந-இரண்டு யக்ஷர்கள்‌ தோன்றித்‌ தங்களைத்‌ துதித்தனர்‌.

—————

இஹ அந்ய பக்தோ அபி சமேஷ்யதி க்ரமாத் பவந்தம் ஏ தவ் கலு ருத்ர சேவகவ்
முனி ப்ரஸாதாத் பவத் அங்கரி மாகதவ் கதவ் வ்ருணாநவ் கலு பக்திம் உத்தமாம் –8-

முனி ப்ரஸாதாத் பவத் அங்கரி மாகதவ்–ஆச்சார்யர் அனுக்ரஹத்தாலே உனது பக்தர்கள் ஆனார்கள்
பக்திம் உத்தமாம்-உத்தமமான பக்தியையே வரமாக வேண்டினார்கள்

சிவ பக்தர்களான இவர்கள்‌ நாரத முனிவரின்‌ அருளால்‌ தங்களது திருவடியை அடைந்து உயர்ந்த பக்தியையே
வரமாகப்‌ பெற்றுச்‌ சென்றார்கள்‌. இவ்வுலகில்‌ வெவ்வேறு தெய்வங்களை வணங்குபவரும்‌ கூட
படிப்படியாகத்‌ தங்களையே அன்றோ வந்தடைகின்றனர்‌!

————

ததஸ் தரூத் தாரண தாருண ஆரவ பிரகம்பி சம்பாதிநி கோப மண்டலே
விலஜ்ஜித  த்வஜ் ஜநநீ முகேஷிணா வ்யமோஷி நந்தேந பவான் விமோஷத –9-

அதன்‌ பிறகு மரங்களிரண்டும்‌ முறிந்து விழுந்த பயங்கரமான சத்தத்தைக்‌ கேட்டு இடையர்‌ கூட்டம்‌
நடுங்கிக்‌ கொண்டே வந்தது. அப்பொழுது (தங்களைக்‌ கட்டி விட்டோமே என்ற) வெட்கத்தினால்‌
தலை குனிந்து நின்ற தங்கள்‌ தாயின்‌ முகத்தை உற்று நோக்கிய நந்த கோபர்‌ (உலகியலிலிருந்து)
அனைவரையும்‌ விடுவிக்கும்‌ அதாவது முக்தி அளிக்கும்‌ தங்களை (க்கட்டிலிருந்து) விடுவித்தார்‌.

——–

மஹீ ருஹோர் மத்ய கதோ பதார் பகோ ஹரே ப்ரபாவாத் அபரிஷதோ அது ந
இதி ப்ருவாணைர் கமிதோ க்ருஹம் பவான் மருத் புரா தீஸ்வர பாஹி மாம் கதாத் -10-

இரண்டு மரங்களின்‌ நடுவில்‌ சென்ற இக் குழந்தை ஒரு காயமும்‌ படாமல்‌ தப்பி இருப்பது பகவான்‌
ஸ்ரீஹரியின்‌ அருளால் தான்‌. இது வன்றோ வியப்பு என்று சொல்லிக்‌ கொண்டு
நந்தன்‌ முதலியவர்கள்‌ தங்களை வீட்டிற்குள்‌ அழைத்துச்‌ சென்றனர்‌.
குருவாயூரப்பா அடியேனை ரக்ஷித்து அருள வேண்டும் –

————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading