ரசோத் கதா மீட்டர்
ஏகதா ததி விமாத காரிணீம் மாதரம் சமுப சேதிவாந் பவாந்
ஸ்தந்ய லோலு பதயா நிவாரயந் நங்க மேத்ய பபிவாந் பயோ தரவ் –1-
ஏகதா ததி விமாத காரிணீம் -ஒரு நாள் தயிர் கடையத் தொடங்கி -கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்து -தானே கடையும் பொழுது
மங்களகரமான தயிர் கடையும் த்வனி
மாதரம் சம் உப சேதிவாந் பவாந்-நீங்கள் அருகில் போனாய்
ஸ்தந்ய லோலு பதயா –முலை உண்ணப் போய்
நிவாரயந் -தயிர் கடைவதைத் தடுக்க
அங்க மேத்ய பபிவாந் பயோ தரவ் -அவளின் மடியில் அமர்ந்து பருகினாய்
ஒரு சமயம் தயிர் கடைந்து கொண்டிருக்கும் தாயாரிடம் பால் குடிக்க விருப்பமுற்று
அவள் மடியில் ஏறியமர்ந்து தயிர் கடைவதைத் தடுத்து நிறுத்திப் பால் குடித்தீர்கள்.
——–
அர்த பீத குச குட் மலே த்வயி ஸ்நிக்த ஹாஸ மதுராந நாம் புஜே
துக்த மீச தஹ நே பரி ஸ்ருதம் தர்துமாஸூ ஜநநீ ஜகாம தே –2-
அர்த பீத குச குட் மலே த்வயி –பாதி அளவு தான் பருகி
ஸ்நிக்த ஹாஸ மதுராந நாம் புஜே-அழகிய மந்தஹாசம் -தாமரை திருமுகத்தில் –
துக்த மீச தஹநே பரி ஸ்ருதம் –பால் பொங்கி வர ஆரம்பிக்கும் பொழுது
தர்துமாஸூ ஜநநீ ஜகாம தே -விரைவாக தாய் கீழே இறக்கி வைத்து அடுப்பை அணைக்கப் போனாள்
ஈசனே! தாமரை மலர் போன்ற திருமுகத்தில் அழகிய புன்முறுவலுடன் தாங்கள், தாமரை மொட்டுகள் போன்ற
நகில்களில் பால் பாதி அருந்தி இருக்கையில், தீயில் பொங்கி வழியும் பாலை எடுத்து வைப்பதற்காகத்:
தங்கள் தாய் (தங்களை மடியிலிருந்து கீழே இறக்கி. வைத்துவிட்டு) விரைவாகச் சென்றாள்-
———–
சாமி பீத ரஸ பங்க சங்கத க்ரோத பார பரி பூத சேதஸா
மந்த தண்ட முப க்ருஹ்ய பாடிதம் ஹந்த தேவ ததி பாஜநம் த்வயா –3-
சாமி பீத ரஸ பங்க சங்கத -பாதி முலை உண்ணும் இனிமையில் பங்கம் வந்ததால் விளைந்த
க்ரோத பார பரி பூத சேதஸா-கோபத்தால் மனம் ஆக்ரமித்து -லீலை என்றே பார்க்க வேண்டும் -அபி நயம் தானே
மந்த தண்ட முப க்ருஹ்ய பாடிதம் -தயிர் கடையும் மத்தைக் கையில் எடுத்து மண் பானையை உடைக்க
ஹந்த தேவ ததி பாஜநம் த்வயா-தயிர் வெளியில் ஆறாக ஓடிற்றே
தேவனே! பால் பாதி அருந்தி இருக்கையில் (அதாவது மனமார முழுமையாகப் பாலை அருந்தி முடியாத நிலையில்)
ஏற்பட்ட தடங்கலினால் சினம் கொண்ட தாங்கள் செய்வதறியாது (அங்கிருந்த) மத்தை எடுத்துத்
தயிர்ச் சட்டியை உடைத்தீர்கள்.
————-
உச்சலத் த்வனிதம் உச்சகைஸ் ததா சந்நிஸம்ய ஜநநீ ஸமாத் ருதா
த்வத் யஸோ விசர வத் ததர்ச சா ஸத்ய ஏவ ததி விஸ்த்ருதம் ஷிதவ் -4-
உச்சலத் த்வனிதம் உச்சகைஸ் ததா -அந்தப் பெரிய த்வனியைக் கேட்டு
சந்நிஸம்ய ஜநநீ ஸமாத் ருதா-கேட்டு தாய் ஓடி வந்தாள்
த்வத் யஸோ விசர வத் ததர்ச சா -உலகம் எங்கும் உன் கீர்த்தி பரவி இருக்குமா போல் பரவி இருப்பதைக் கண்டாள்
ஸத்ய ஏவ ததி விஸ்த்ருதம் ஷிதவ் –பூமியில் ஆறாக ஓடிற்றே
சட்டி யுடைந்த சத்தத்தைக் கேட்டு விரைவாக ஓடி வந்த தங்கள் தாய் தங்கள் “புகழ் பரவியிருப்பது போல்
தரையில் எங்கும் பரவிச் சிதறிக் கிடந்த தயிரை மட்டுமே கண்டாள் (தங்களைக் காணவில்லை என்பது கருத்து)
————–
வேத மார்க பரி மார்கிதம் ருஷா த்வம வீஷ்ய பரி மார்க யந்த்யஸவ்
சந்த தர்ச ஸூ க்ருதிந் யுலூ கலே தீய மாந நவநீத மோதவே –5-
வேத மார்க பரி மார்கிதம் -யதோ வாஸோ இத்யாதி
ருஷா -கோபத்துடன் –
த்வம வீஷ்ய பரி மார்க யந்த்யஸவ்-உன்னைத் தேடி
சந்த தர்ச ஸூக்ருதிந் –தொல்லை இன்பத்து இறுதி கண்ட பாக்யவாள் உனது திருவடிச் சுவடு காட்டக் கண்டு
யுலூ கலே தீய மாந நவநீத மோதவே-புதிதாக கடைந்த ஐயங்க வீநம் -கையில்
ஒரு பகுதி பொத்தை உரலில் வைத்து -அதன் மேல் உட்க்கார்ந்து -கையிலும் வாயிலும் பூனை வாயிலும் வெண்ணெய் கண்டாள்
பகவானையே என்றும் நினைந்துருகும் முனிவர்களும், கர்ம காண்டம். உபாஸனா காண்டம், ஞான காண்டம்
என்கிற முக் காண்டங்களையும் தன்னுள் அடக்கிய “வேத நெறிகளால் தேடிக் காண இயலாத தங்களைப்
பெரும் புண்ணியம் செய்த யசோதை (தான் கீழே இறக்கி விட்ட இடத்தில் காணாது) மிகுந்த சினத்துடன்
தேடிப் போக(ப் புறக் கடையில்) உரல் மேல் அமர்ந்து கொண்டு பூனைக்கு வெண்ணெய் எடுத்துக்
கொடுத்துக் கொண்டிருக்கக் கண்டாள்.
—————-
த்வாம் ப்ர க்ருஹ்ய பத பீதி பாவநா பா ஸூர ஆநந சரோஜாம் ஆஸூசா
ரோஷ ரூஷித முகீ சகீ புரோ பந்த நாய ரஸநா முபாததே–6-
த்வாம் ப்ர க்ருஹ்ய –உன்னைப் பிடித்து -யோகிகள் மனத்தால் கூட பிடிக்க முடியாத உன்னை
பத பீதி பாவநா -பயந்தவன் போல் நடித்தாயே
பா ஸூர ஆநந சரோஜாம் ஆஸூசா ரோஷ ரூஷித முகீ சகீ புரோ -தோழிகள் பார்த்து இருக்க கோபத்துடன்
பந்த நாய ரஸநா முபாததே-அதே கயிற்றைக் கொண்டு உரலில் கட்டிப்போட முயன்றாள்
தாய் அடிப்பாளோ என்ற பயத்தினால் மேலும் அழகாக விளங்கும் தாமரை போன்ற முகத்தை உடைய தங்களை,
கோபத்தால் சிவந்த முகத்தையுடைய யசோதை (தன்) தோழிகளின் முன்னிலையில் வெகு வேகமாகப்
பற்றிக் கொண்டு (உரலில் சேர்த்துக்) கட்டுவதற்காகக் கயிற்றை எடுத்துக் கொண்டாள். இது வியப்பல்லவா?
முழுதும் வெண்ணெய் அளைந்து தொட்டு உண்ணும் முகிழ் இளம் சிறு தாமரை கையும்
எழில் கொள் தாம்பு கொண்டு அடிப்பதற்கு எள்கு நிலையும் வெண் தயிர் தோய்ந்த செவ் வாயும்
அழுகையும் அஞ்சி நோக்கும் அந் நோக்கும் அணி கொள் செஞ்சிறு வாய் நெளிப்பதுவும்
தொழுகையும் இவை கண்ட வசோதை தொல்லை இன்பத்து இறுதி கண்டாளே– 7-8-
————
பந்து மிச்சதி யமேவ சஞ்ஜனஸ்தம் பவந்த மயி பந்து மிச்சதீ
சா நியுஜ்ய ரஸ நா குணாந் பஹுந் த்வ அங்குலோந மகிலம் கிலை ஷ த –7–
பந்தும் இச்சதி யமேவ சஞ்ஜனஸ்–பந்தும் இச்சதி-பந்துவாக விரும்புவார்கள் -வாஸூ தேவ ஸர்வம்-ஏவலாளாகவும் இருப்பானே
தம் பவந்தம் அயி பந்தும் இச்சதீ –அவனை அன்றோ கட்டுவதற்கு விரும்பினாள் இவள்
ஒரு கயிற்றால் இவனையும் -ஒரு கயிற்றால் உரலையும் கட்டி
சா நியுஜ்ய ரஸ நா குணாந் பஹுந் –பல கயிறுகள் கொண்டு சேர்க்கப் பார்த்தாலும்
த்வ அங்குல ஊநம் அகிலம் கிலைஷத–இரண்டு அங்குலம் குறைய இருக்க -மீண்டும் மீண்டும் -இப்படியே இருக்க
சாது பக்த ஜனங்கள் (மோக்ஷத்தில் விருப்பங்கொண்டு) தங்களையே நெருங்கிய உறவினனாகப் பிணிக்க
விரும்புகிறார்கள். அப்படிப்பட்ட தங்களை அந்த யசோதை கயிற்றினால் கட்ட விரும்பிப் பல கயிறுகளை
ஒன்று சேர்த்து இணைத்த போதும், ஒவ்வொரு தடவையும் அவை இரண்டங்குலம் குறைவாய் இருக்கவே கண்டாள்.
(இங்கு ‘பந்தும்’ என்ற சொல் உறவினன், கட்டுதல், அடைக்கலம் என்ற முப்பொருள் தோன்றும் படி
சிலேடையாக அமைந்துள்ளது காண்க. பகவானை அளப்பதற்கு எந்த ஸாதனங்களும் குறைபாடு உடையனவே என்று அறிக.
————–
விஸ்மிதோத் ஸ்மித ஸகீ ஜனேஷி தாம் ஸ்விந்ந சந்ந வபுஷம் நிரீஷ்ய தாம்
நித்ய முக்தவ புரப் யஹோ ஹரே பந்த மேவ க்ருபயா அந்வ மந் யதா –8–
விஸ்மிதோத் ஸ்மித ஸகீ ஜனேஷி தாம் –தோழிகள் -வியந்து சிலர் -ஏளனம் செய்தார் சிலர்
ஸ்விந்ந சந்ந வபுஷம் நிரீஷ்ய தாம்–தாய் களைத்து இளைத்து இருக்கக் கண்டு
நித்ய முக்த வபுரப் யஹோ ஹரே –பிறவிப் பிணி வாசனையே இல்லாத அமரர்கள் அதிபதியான நீ
பந்த மேவ க்ருபயா அந்வ மந் யதா-கிருபையால் கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயன்-தாயைக் குடல் விளக்கம் செய்த தாம உதரன் அன்றோ
சகல பாவங்களையும் போக்குபவரே! ஹரியே! உடம்பெல்லாம் வியர்த்து சோர்ந்து போன யசோதையைக் கண்ட
தோழிகள் வியப்பில் ஆழ்ந்து சிரித்துக் கொண்டிருப்பதைக் கண்டு, எதிலும் கட்டுப்படாத
நித்திய முக்த புருஷனான தாங்கள் கருணையினால் இரக்கம் கொண்டு அவளுக்குக் கட்டுப் பட்டீர்கள்.
இதுவன்றோ வியப்பு!
—————
ஸ்தீய தாம் சிரம் உலூகலே கலேத் யாகதா பவனமேவ சா யதா
ப்ராக் உலுகல பிலாந்தரே ததா சர் பிரர் பிதம் அதந் நவாஸ்திதா –9-
ஸ்தீய தாம் சிரம்–நீண்ட நேரம் இங்கேயே இருக்க வேண்டியது தான்
உலூ கலே –உரலுடனே கட்டுப்பட்டு இரு-
கலேத்–விஷமக்கார கண்ணா
யாகதா பவனமேவ சா யதா–வீட்டுப் பணி செய்யத் தொடங்கினாள்
ப்ராக் உலுகல பிலாந்தரே ததா சர் பிரர்பிதம் அதந் நவாஸ்திதா —முன்பே உரலுக்குள்ளே ஒளித்த வெண்ணெயை அமுது செய்யத் தொடங்கினாய்
இவ்வாறு தங்களைக் கட்டிய யசோதை, ‘அடே போக்கிரிப் பையா! இந்த உரலிலேயே வெகு நேரம்
இப்படியே கட்டுண்டு இரு: என்று சொல்லி வீட்டினுள் திரும்பிச் சென்றாள். அவ்வாறு அவள் சென்றதும்,
முன்பே வெண்ணெய் திருடும்போது உரல் குழியில் வைத்திருந்த வெண்ணெயைத்
தின்று கொண்டு அங்கேயே இருந்தீர்களல்லவா?
———–
யத்ய பாச ஸூகமோ விபோ பவான் சம்யத கிமு சபாசயா அநயா
ஏவ மாதிதி விஜை ரபிஷ்டிதோ வாத நாத பரி பாஹி மாம் கதாத் –10-
யத் யபாச ஸூகமோ விபோ பவான் — உலகியல் பாசம் விட்டவர்களாலேயே விபுவான உன்னை எளிதில் அடைய முடியும்
சம்யத கிமு ச பாசயா அநயா–இவளோ உள்ளத்தில் உன்னிடம் பாசமும் -கையிலே வேறு பாசமும் கொண்டு உன்னை அடைந்து அனுபவிக்கிறாளே
ஏவமாதி திவிஜை ரபிஷ்டிதோ -தேவர்களும் உன்னைக் கண்டு ஸ்துதி செய்யும் படி இருந்தாய்
வாத நாத பரி பாஹி மாம் கதாத்-கட்டுண்ட கண்ணனைத் தியானிக்க ஸம்ஸார பந்தம் அறுந்து போகுமே
பிரபுவே, குருவாயூரப்பா! பாசமில்லாதவர்களால் (பற்றற்றவர்களால்) மட்டுமே எளிதாக அடையக்கூடிய தாங்கள்:
பாசத்தை (கயிற்றை)க் கையில் கொண்ட இந்த யசோதையால் எப்படிக் கட்டப்பட்டீர்கள்?” என்றிவ்வாறு
தேவர்களால் துதிக்கப் பெற்ற தாங்கள் அடியேனை நோயிலிருந்து காப்பாற்றுங்கள்.
(இங்கு “பாசம்” என்னும் சொல் கயிறு, பற்று என்ற இரு பொருள்படுமாறு கையாளப்பட்டது காண்க.)
பத்துடை அடியவர்க்கு எளியவன் பிறர்க்கு அறிய வித்தகன்
ஸ காஷ்டா ச பராம் கதிம்-உபாய உபேய ஐக்யம் -கட்டுண்ணப் பண்ணிய
பற்று இல்லாமல் இருந்தால் தானே -பற்று என்னும் கயிற்றால் எப்படி கட்டுண்ணப் பண்ணிக் கொண்டாய்
பாசம் -கயிறு
ஸத் க்ரது நியாயம் தம்பிற்றே -கட்டுண்ண பண்ணியதை தியானிக்க பிறவிக் கட்டுக்கள் போகுமே
புயல் போல் கர்வம் -த்ருணாவர்த்தன்
உரல் கட்டுண்ண -பக்தி ஏற்றம் -பக்தன் விடுவிக்கும் வரை கிடப்பான்
அப்பொழுது தான் ஸகடாசூரன் -காமம் க்ரோதங்கள் சாய்த்து அருளினான்
தாமம் கயிறு உதரன் -தாமோதரன்
மலைப் பாம்பு தமோ குணம் அகாசூரன்
பகாசுரன் -கொக்கு பேராசை
கேசி -குதிரை புலன்கள் பட்டி மேயாதபடி
கோவர்த்தன கிரி குணங்கள் வடிவம் -அவற்றால் நமக்கே அடைக்கலம்
காட்டுத்தீ -தாபத்ரயங்கள்
காளியன் -மனஸ் அலை பாயாதபடி அடக்கி
கம்சன் -கர்மங்கள் -கண்ணன் வந்தாலே போதுமே -தானே மாயுமே
நானும் வேண்டா நீயும் வேண்டா -தன்னடையே போகும்
————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply