வையம் ஏழும் கண்டாள் பிள்ளை வாயுளே –வ்யோஹினி மீட்டர் எல்லா ஸ்லோகங்களும்
அயி தேவ புரா கில த்வயி ஸ்வயம் உத்தான சயே ஸ்நந்தயே
பரிஜ் ரும்பணதோ வ்யபாவ்ருதே வத நே விஸ்வம சஷ்ட வல்லவீ –1-
அயி -விளிச்சொல்
தேவ
புரா கில த்வயி -முன்பு ஒரு காலத்தில்
ஸ்வயம் உத்தான சயே ஸ்நந்தயே—முலைப் பால் அருந்த மல்லாந்து சாயனத்து இருப்பத்தைச் சொன்னவாறே
பரிஜ் ரும்பணதோ வ்யபாவ்ருதே வதநே -கொட்டாவி விட திருவாய் திறக்க
விஸ்வம சஷ்ட வல்லவீ-ப்ரபஞ்சத்தைக் கண்டாள்
தேவதேவனே! முன்பொரு சமயம் தாங்கள் யசோதையின் மடியில் மல்லாந்து படுத்துப் பால்
அருந்திக் கொண்டிருந்த போது கொட்டாவி வரவே வாயைத் திறந்தீர்கள்.
அப்போது தங்களது திறந்த வாயில் உலகமனைத்தையும் யசோதை கண்டாளல்லவா?
—————-
புனரப் யத பாலகை சமம் த்வயி லீலா நிரதே ஜகத் பதே
பல ஸஞ்சய வஞ்சன க்ருதா தவ ம்ருத் போஜன மூசுரர் பகா –2-
புனரப் யத பாலகை சமம் -மீண்டும் பாலர்களுடன்
த்வயி லீலா நிரதே ஜகத் பதே–லீலா ஸமயத்தில்
பல ஸஞ்சய வஞ்சன க்ருதா –பழங்கள் பறித்து -வஞ்சனையால் பகிர்ந்து கொடுக்காமல் இருக்க அவர்கள் கோபம் கொண்டு
தவ ம்ருத் போஜனம் ஊசுர் அர்பகா –முன் நீ மண் உண்டதை உங்கள் தாயிடம் கோள் சொன்னார்களாமே
உலக நாயகனே! வேறொரு சமயம் தாங்கள் மற்ற இடைச் சிறுவர்களுடன் பழங்களைப் பறித்து விளையாடுகையில்,
அவர்கள் சேர்த்து வைத்திருந்த பழங்களை நீங்கள் ஏமாற்றி எடுத்துக் கொண்டதால் சினம் கொண்ட
அக் குழந்தைகள் நீங்கள் மண் தின்றதாக உங்கள் தாயிடம் கோள் சொன்னார்களாமே!
———-
அயி தே பிரளயாவதவ் விபோ ஷிதி தோயாதி ஸமஸ்த பக்ஷிண
ம்ருது பாசந தோ ருஜா பவேதி தி பீதா ஜநநீ சு கோப ஸா –3-
அயி -விளிச்சொல்
தே பிரளயாவதவ் விபோ
ஷிதி தோயாதி -பூமி நீர் பஞ்ச பூதங்கள்
ஸமஸ்த பக்ஷிண–மஞ்சார கடல் எழும் பார் ஏழும் –ஞாலம் எழும் உண்ட ஆலிலைப் பாலகனாய்
ம்ருது பாசந தோ -மண் உண்டதால்
ருஜா பவேதி -பயந்து
தி பீதா ஜநநீ சு கோப ஸா –பாசத்தினால் கொண்ட கோபம்
நிலம், நீர் முதலிய ஐம்பெரும் பூதங்களை முற்றுமாக பிரளய காலத்தில் விழுங்குகின்ற பிரபுவே!
மண்ணைத் தின்றதால் தங்களுக்கு நோய் வருமே என்று பயந்த தங்கள் தாய் யசோதை
கோபம் கொண்டாள். (இவ்வாறு கேட்கலானாள்.)
—————
அயி துர் விந யாத்மக த்வயா கிமு ம்ருத் சா பத வத்ஸ பஷிதா
இதி மாத்ரு கிரம் சிரம் விபோ விததாம் த்வம் ப்ரதி ஜஜ் ஜி ஜே ஹசன் —4-
அயி
துர் விந யாத்மக த்வயா -பணிவில்லாமல்
கிமு ம்ருத் சா வத்ஸ பஷிதா-மண்ணை உண்டாயா –
பத-ஐயோ
இதி மாத்ரு கிரம் சிரம் விபோ –மீண்டும் மீண்டும் கேட்டாள்
விததாம் த்வம் –நீ சொல்வதால் பொய் என்று
ப்ரதி ஜஜ் ஜிஜே -சொல்வது போல் ஏளனமாக
ஹசன் –புன்னகை செய்து
‘அடே! அடங்காத பயலே! குழந்தாய்! நீ மண் தின்றாயா என்ன? சொல்!” என்று (உன்) தாயார்
மிரட்டிக் கேட்டபோது, பிரபுவே! நீங்கள் வெகு நேரம் சிரித்து விட்டு (அவர்கள் கூறியது)
‘பொய்’ என்று சத்தியம் செய்தீர்களாமே!
————-
அயி தே சகலைர் விநிஸ் சிதே விமதிஸ் சேத் வதனம் விதார்யதாம்
இதி மாத்ரு விபர் ஸி தோ முகம் விகஸத் பத்ம நிபம் வ்யதாரய –5-
அயி தே சகலைர் விநிஸ் சிதே -உனது தோழர்கள் சொன்னது எல்லாமே
விமதிஸ் சேத் -பொய் என்றால்
வதனம் விதார்யதாம்-வாயைத் திறந்து காட்டு
இதி மாத்ரு விபர் ஸி தோ -என்று தாய் சொல்லக் கேட்டு
முகம் விகஸத் பத்ம நிபம் வ்யதாரய-தாமரை மலர்வது போல் திறந்து காட்டினாய்
அப்போது உங்கள் தாய், அடே! எல்லோரும் நீ மண் தின்றதாக உறுதியாகக் கூறுகின்றார்களே!
நீ அதை ஒப்ப வில்லை எனில் உன் வாயைத் திறந்து காட்டு’ என்று அதட்டினாள்.
அப்போது நீங்கள் மலர்ந்த தாமரை போன்ற திருவாயைத் திறந்து காட்டினீர்கள்.
—————-
அபி ம்ருல் லவ தர்சனோத் ஸூகாம் ஜநநீம் தாம் பஹு தர்ப்பந் நிவ
ப்ருத்வீம் நிகிலாம் ந கேவலம் புவநாந் யப்யகிலாந் யதீத்ருஸ–6-
தங்கள் திரு வாயில் சிறிதளவாவது மண் இருக்கும் என்று எதிர்பார்த்திருந்த அந்தத் தாயை
மிகவும் மன நிறைவு கொள்ளச் செய்பவர் போல், இம்மண்ணுலகு மட்டுமின்றி
அனைத்து உலகங்களையும் (தங்கள் திரு வாயில்) காண்பித்தீர்கள்.
அபி ம்ருல் லவ தர்சனோத் ஸூகாம் –கொஞ்சம் மண் கிடைத்தாலும் போதும் என்று நினைத்த
ஜநநீம் தாம் பஹு தர்ப்பந் நிவ–திருப்தியாக பார் என்று
ப்ருத்வீம் நிகிலாம் ந கேவலம் புவநாந் யப்யகிலாந் யதீத்ருஸ–பூ லோகம் மட்டும் இல்லாமல் அனைத்து அண்டங்களையும் காட்டி அருளினாயே
jhony jhony yes baabaa -eating sugar no paa paa — telling lies no paapaa -open your mouth haa haa
kirishnaa kirishnaa yes ammaa – eating mud–no ammaa -telling lies no ammaa -open your mouth haa haa
————-
குஹ சித் வந மம்புதி க்வசித் க்வசிதப்ரம் குஹசித் ரஸா தலம்
மநுஜா தநுஜா க்வசித் ஸூரா தத்ருசே கிம் ந ததா த்வதா நநே –7-
அப்பொழுது தங்கள் திருவாயில் ஓரிடத்தில் காடுகளையும், ஓரிடத்தில் கடல்களையும், வேறொரு இடத்தில்
ஆகாயத்தையும், மற்றுமோரிடத்தில் பாதாள உலகையும், சில இடங்களில் –
மனிதர்கள், அரக்கர்கள், தேவர்கள் என்றிவ்வாறு (தங்கள் தாய்) எதைத்தான் காணவில்லை?
(அதாவது அனைத்துப் பிரம்மாண்டங்களையும் கண்டாள் என்றபடி.)
———
கலாசாம்புதி ஸாயினம் புன பர வைகுண்ட பதாதி வாஸி நம்
ஸ்வ புரஸ் ச நிஜார் பகாத்மகம் கதிதா த்வாம் ந ததர்ச சா முகே -8-
குவாயூரப்பா! தங்கள் தாயார் . தங்கள் திரு வாயில் தங்களைத் கலாசாம்புதி ஸாயினம்-திருப் பாற்கடலில் பள்ளி கொண்ட பிரானாகவும்,
பரம பதத்தில் வீற்றிருக்கும் வைகுண்ட நாதனாகவும், தனக்கு முன் தன் பிள்ளையாக நிற்பதையும் கண்டாள்.
இப்படி எத்தனை எத்தனை விதமாகத் தான் தங்களைக் கண்டாளோ! (அதாவது தங்களது கதிதா த்வாம்-பல வடிவுகளையும் கண்டாள்.)
————
விகஸத் புவனே முகோ தரே தனு பூயோ அபி ததா விதாநந
அநயா ஸ்புடம் ஈ ஷிதோ பவாந் அநவஸ்தாம் ஜகதாம் பத ஆதநோத் –9–
தங்கள் திரு வாயினுள்ளே புவனங்களெல்லாம் காண்கையில் அதில் மேலும் இன்னொரு முகம், வாய் மற்றும்
புவனங்கள், மறுபடியும் அதனுள் இன்னொரு முகம், வாய், புவனங்கள் என்றிப்படி
(ஒன்றுக்கு மேல் மற்றொன்று என்று கண்ணாடிக்குள் கண்ணாடி காண்பது போல்)
வரிசை வரிசையாக யசோதை கண்டாள்.
இவ்வாறு உலகின் எல்லை யற்ற தன்மையை காட்டி யருளினீர்கள்.
————-
த்ருத தத்த்வ தியம் ததா க்ஷணம் ஜநநீம் தாம் ப்ரணயேந மோஹயன்
ஸ்தநம் அம்பதி சேத் யுபாச ஜன் பகவந் நத்புத பால பாஹி மாம் –10-
விந்தையான குழந்தை வடிவிலே தோன்றிய குருவாயூரப்பா! (இவ்வாறான காட்சியைக் கண்ட) யசோதை
ஆனந்த உருவனான பரப் ப்ரஹ்மமே தனக்குக் குழந்தையாகப் பிறந்துள்ளான்’ என்ற உண்மையை அறிந்தாள்.
ஆனால் சிறிது நேரத்திலேயே தாங்கள் அவளைப் புத்திர வாத்ஸல்யத்தினால் மோகமடைய (மயங்க) செய்து
‘அம்மா! பால் தாருங்கள்’ என்று அவள் மடியில் ஏறி அமர்ந்தீர்கள்.
அத்தகைய தாங்கள் அடியேனைக் காத்தருள வேண்டுகிறேன்
————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply