ஸ்ரீ நாராயணீயம் – தசகம் 12-ஸ்ரீ வராஹ அவதாரம் –

வசந்த திலகம் விருத்தம் -கோதா ஸ்துதி போல் -14 அச்சு எழுத்துக்கள் ஒவ்வொரு பாதத்திலும்

ஸ்வாயம்பு வோ மநு ரதோ ஜன சர்க சீலோ த்ருஷ்ட்வா மஹீம் அஸமயே சலிலே நிமக்நாம்
ஸ்ரஷ்டாரம் ஆப சரணம் பவத் அங்கரி சேவா துஷ்ட  ஆசயம் முனி ஜனை ஸஹ சத்ய லோகே –1-

ஜனங்களைப் படைப்பதில்-சர்க சீலோ- ஈடுபட்டு இருந்த ஸ்வயம்பு மநு அக்காலத்தில் -பிரளயம் இல்லாத காலத்தில் –
பூமி ஜலத்தில் மூழ்குவதைக் கண்டார்
உடனே மநு முனிவர்களுடன் உனது திருவடித் தாமரை சேவையில் விருப்பமுடன் இருக்கும்
ப்ரம தேவரைக் காண சத்ய லோகம் சென்றார் –

—————-

கஷ்டம் ப்ரஜா ஸ்ருஜதி மய் யவநிர் நிமக்நா ஸ்தானம் ஸரோஜ பவ கல்பய தத் ப்ரஜா நாம்
இத்யேவ மேஷ கதிதோ மநு நா ஸ்வயம்பூர் அம்போருஹாக்ஷ தவ பாத யுகம் வயசிந்தீத் –2-

படைப்பின் ஆரம்பத்திலே பூமி நீருக்குள் மூழ்கி விட்டது -பிரம தேவரே மக்களுக்கு வாழும் இடம்
கல்பய-ஏற்படுத்தும் என்று பிரம தேவரைப் பிரார்த்தித்தார்
பிரம தேவரும் இந்த ஆபத்தில் இருந்து ரஷித்து அருள தங்களைத் த்யானித்தாராமே

உமக்கு இருப்பிடம் இருக்கிறது-மக்களுக்கும் வேண்டுமே -அம்போருஹாக்ஷ-தாமரைக்கண்ணனை த்யானித்தாராமே

———————

ஹா ஹா விபோ ஜலமஹம் ந்யபிபம் புரஸ்தாத் அத்யாபி மஜ்ஜதி மஹீ கிமஹம் கரோமி
இத்தம் த்வத் அங்கரி யுகலம் சரணம் யதோ அஸ்ய நாஸா புடாத் சமபவ ஸிஸூ கோல ரூபீ –3-

ப்ரபோ நான் முதலில் நீரைக் குடித்தேன் -இன்னம் பூமி நீரில் மூழ்குகிறது -என்ன செய்வேன் என்று
தங்களுடைய திருவடித் தாமரையைத் தஞ்சம் அடைந்தார்
அப்போது பிரம தேவரின் மூக்கில் இருந்து பன்றிக் குட்டியின் வடிவில்-ஸ்ரீ வராஹ மூர்த்தியாய் தாங்கள் தோன்றினீர்

ஸிஸூ கோல ரூபீ–கோல வராஹ ரூபியாய்த் தோன்றி அருளினாயே குருவாயூர் அப்பா

——————-

அங்குஷ்ட மாத்ர வபுர் உத்பதித புரஸ்தாத் பூயோ அத கும்பி ஸத்ருச சமஜ் ரும்பதாஸ் த்வம்
அப்ரே ததா வித முதீஷ்ய பவந்த முச்சைர் அவிஸ்மே ரதாம் விதி ராகாத் ஸஹ ஸூநுபிஸ் வை –4-

முதலில் கட்டை அளவே இருந்த தாங்கள் விரைவில் -கும்பி ஸத்ருச -யானையின் அளவு வளர்ந்து விட்டீர் –
பின்பு மலை போல் -அப்ரே -வான் உயரத்துக்கு வளர்ந்து கர்ஜித்த தங்களைப் பார்த்த -விதி-பிரம தேவன்
மநு மற்ற முனிவர்களும் வியந்தனர்-ஸூநுபிஸ்-வசிஷ்டாதி முனிவர்கள் –

———————–

கோ அசவ் அ சிந்த்ய மஹிமா கிடிருத்தி தோ மே நாஸா புடாத் கிமு பவேத் அஜிதஸ்ய
இத்தம் விசிந்த்தயதி தாதரி சைல மாத்ர ஸத்யோ பவந் கில ஜகர்ஜித கோர கோரம் –5-

என் மூக்கில் இருந்து வெளி வந்த அளவிட முடியாத மகிமை யுடைய இந்தப் பன்றி-கிடிருத்தி- யாராக இருக்கும் –
அஜிதஸ்ய மாயா-பகவானுடைய மாயையாய் இருக்குமோ என்று பிரம்ம தேவன் யோசித்தார்
அப்போது மலையைப் போலே தோன்றிய நீர் பயங்கரமாகக் கர்ஜித்தீர் -ஜகர்ஜித-

மஹா வராஹ ஸ்புட பத்ர லோசன –
மானமிலா பன்றியாய் -அளவில்லா-உவமானம் இல்லாத -அபிமானம் இல்லாத
ரஷ்யத்தின் அளவு அன்றியே ரக்ஷகனின் பாரிப்பு
நம்மைப் பார்க்காமல் -எல்லை இல்லாத கருணை பீறிட்டு அன்றோ இருக்கும்

பிரமனின் மநோ வேகத்தை விட வேகமாக வளர்ந்து

—————

தம் தே நிநாதம் உப கர்ண்ய ஜனஸ் தபஸ் தா சத் யஸ்தி தாஸ் ச முனயோ நநுவுர் பவந்தம்
தத் ஸ்தோத்ர ஹர்ஷுலமநா பரிணத்ய பூய ஸ்தோயா ஸம் விபுல மூர்திர் அவாதரஸ் த்வம் –6-

தங்கள் -நிநாதம்-கர்ஜனையைக் கேட்டு ஜனோ லோகம் தபோ லோகம் ஸத்ய லோகம் ஆகியவற்றில் உள்ள
முனிவர்கள் தங்களை ஸ்துதித்தனர்
அதைக் கேட்டு ஹர்ஷம் அடைந்த தாங்கள் மிக பெரிய உருவம் கொண்டு சமுத்ரத்துக்குள் பிரவேசித்தீர்

ஸ்தவ பிரியன் -சேஷ பூதர் குழாம் கண்டு மகிழ்வானே -ஆள் கண்ட சமுத்திரம் போல்
மீண்டும் நாதம் செய்து -பெரிய உருவமாய் வளர்ந்து அந்த ஸமுத்ரத்துக்குள்ளே குதித்தீர் அன்றோ

———————-

ஊர்த்வ ப்ரஸாரி பரி தூம்ர விதூத ரோமோ ப்ரோத் ஷிப்த வாலதிர வாங்முக கோர கோண
தூர்ண பிரதீர்ண ஜலத பரி கூர்ண தஷ்ணா ஸ்தோத்ருந் முநீந் ஸிஸிர யந் அவதேரித த்வம் –7-

உயரத் தூக்கிய வாலுடன் கடினமான ரோமங்கள் -ரோம ஹர்ஷம் -உள்ள தோளுடன் கோரைப் பற்களுடன்
கீழ் நோக்கிய மூக்குடன் சுழலும் கண்களுடன் தாங்கள் சமுத்ரத்துக்குள் பிரவேசித்தீர்கள்

கோரைக்கிழங்கைக் கொத்தி எடுக்கும் பன்றி

—————

அந்தர் ஜலம் ததநு சம்குல நக்ர சக்ரம் பிராம்யத் திமிங்கில குலம் கலுஷோர்மி மாலம்
ஆவிஸ்ய பீஷண ரவேண ரஸாதலஸ்தாந ஆகம் பயந் வஸூமதீ மக வேஷ யஸ் த்வம் –8–

தாங்கள் பிரவேசித்த பொழுது கலங்கிய அலைகளால் முதலைகளும் திமிங்கலங்களும்-whale- சுழன்றன
பாதாள லோகத்தில் உள்ளவர்களை நடுங்கச் செய்து கொண்டு தாங்கள் பூமியைத் தேடினீர் அல்லவோ

ரவேண-ஒலி -பேச்சு அரவம் –

————-

த்ருஷ்ட்வா அத தைத்ய ஹத கேந ரஸாத லாந்தே சம் வேசிதாம் ஜடிதி கூட கிடிர் விபோ த்வம்
ஆபாது காந் அவிகணய்ய ஸூராரி கேடாந் தம்ஷ்ட்ராங்குரேண வஸூதாம் அததா சலீலம் –9-

ப்ரபோ அப்போது ரஸாதல பாதாள லோகத்தின் நடுவில் வைக்கப் பட்டு இருந்த பூமியைக் கண்டீர்
எதிர்த்த அஸுரர்களைப் பொருள் படுத்தாமல்-அவிகணய்ய- பூமியைத் தித்திப் பற்களின் முனையால் இடந்து எடுத்து அருளினீர்
உனது சேஷ்டிதமே -மாயம் தானே –

அநாயாசேன -விளையாட்டு போல்-அலகிலா விளையாட்டுடையவன் –
கோல வராஹம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்

——————–

அப் யுத்தரந் நத தராம் தச நாக்ரலக்ந மஸ்தாங்கு ராங்கித இவாதி கபீவ ராத்மா
உத் தூத கோர ஸலிலாஜ் ஜலதே ருதஞ்சந் க்ரீடா வராஹ வபு ரீஸ்வர பாஹி ரோகாத் –10-

ஓ ஸ்ரீ குருவாயூரப்பா லீலையாக ஸ்ரீ வராஹ நாயனாராக திரு அவதாரம் எடுத்து அருளினவனே –
தாங்கள் கோரைப் பல்லின் நுனியில் இருந்த பூமியானது முளை வந்த கோரைக் கிழங்கு போலே தோற்றம் அளித்தது
மிகப் பெரிய ரூபத்துடன் கலங்கிய சமுத்திரத்தில் இருந்து மேலே வருகின்ற தாங்கள்
அடியேனை ரோகத்தில் இருந்து காத்து அருள வேண்டும் –

சிலம்பினில் -பெரிய மேரு கண கணப்ப

——————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading