ஸ்ரீ நாராயணீயம் – தசகம் 13-ஹிரண்யாக்ஷ வதம்

ஹிரண்யாக்ஷம் தாவத் வரத பவத் அன்வேஷண பரம்
சரந்தம் சாம் வர்தே பயசி நிஜ ஜங்கா பரிமிதே
பவத் பக்தோ கத்வா கபடு படு தீர் நாரத முனி
சனை ரூஸே நந்தன் தனு ஜமபி நிந்தம் ஸ்தவ பலம் –1-

அன்வேஷண-பக்தியுடன் தேடுபவரை சாந்தோக்யம் இதே சொல்லால் சொல்லும்
மனக் கோயிலுக்குள் உள்ளவனைத் தேடுவதை
இங்கே இவன் த்வேஷத்துடன் தேடினான்

கபடு படு தீர் -வஞ்சித்து -தீயவர்களை முடிக்க -ஞானம் கொண்ட நாரதர்

தாவத்-அப்போது- தனது முழங்கால் அளவுள்ள கடலில் தங்களைத் -தேடிக் கொண்டு– இருந்த ஹிரண்யாக்ஷனிடம் –
அவனது பெரிய உருவத்தால் பிரளயமும் முழங்கால் அளவு தான் இருந்ததாம் –
தங்கள் பக்தரான நாரதர் அசுரனைக் கொண்டாடியும் தங்களை நிந்தித்தும் சொல்ல ஆரம்பித்தார் –

———————

ச மாயாவீ விஷ்ணுர் ஹரதி பவதீயாம் வஸூ மதீம்
ப்ரபோ கஷ்டம் கஷ்டம் கிமித மிதி தே நாபி கதித
நதந் க்வாசவ் க்வாஸி விதி ச முனி நா தர்சித பதோ
பவந்தம் ஸம் பிராபத் தரணி தர முத் யந்த முதகாத்–2-

மாயாவீ -மா மாயன் -ஆச்சர்ய சக்தன்

பவதீயாம்-உன்னுடைய-ப்ரபோ-முக ஸ்துதி பாடுகிறார்

அபி கதித -சொல்லப்பட்டான்

பவந்தம் ஸம் பிராபத் முனிவர் வழி காட்ட -அவன் உன்னை வந்து அடைந்தான் -நாரதர் காட்ட இவனும் அவனைக் கண்டானே

நாமோ பின்னானார் வணங்கும் சோதியாக ஸ்ரீ வராஹ திருக்கோலம் சேவிக்க இவனுக்க்குக்கு கிடைத்த பாக்யம் என்னே

அந்த மஹா விஷ்ணு உன்னுடைய பூமியைக் கவர்ந்து செல்கிறார் என்று நாரதர் சொன்னார் –
உடனே ஹிரண்யாக்ஷன் விஷ்ணு எங்கே எங்கே என்று கூக்குரலிட்டான்
நாரதர் காட்டிய வழியில் பூமியைத் தாங்கிக் கொண்டு ஜலத்தில் இருந்து வெளியே வரும்
தங்களை நோக்கி வந்தான்

—————

அஹோ ஆரண்யோ அயம் ம்ருக இதி ஹஸந்தம் பஹு தரைர்
துருக் தைர் வித் யந்தம் திதி ஸூதமவஜ் ஞாய பகவன்
மஹீம் த்ருஷ்ட்வா தம்ஷ்ட்ரா சிரஸி சகிதாம் ஸ்வேந மஹஸா
பயோதவ் ஆதாய பிரசப முத யுங்க் தா ம்ருத விதவ் –3-

பஹு தரைர் துருக் தைர்–சொல்லக்கூடாத வார்த்தைகள் பலவும் சொல்லி

இது காட்டு மிருகம் என்று பரிகாசமாகவும் கெட்ட வார்த்தையால் பேசிய ஹிரண்யாக்ஷனை லட்சியம்
செய்யாமல் தாங்கள் அசுரனைப் பார்த்து பயந்த அந்த பூமா தேவியை கோரைப் பற்களில் இருந்தும் விடுவித்து
தங்களுடைய யோகத்தால் கடலில் வைத்து சண்டை இடுவதற்கு தயாரானீர் –

———————-

கதா பாணவ் தைத்யே த்வம் அபி ஹி க்ருஹீ தோந்நதகோ
நியுத்தே ந க்ரீடன் கட கட ரவோத் குஷ்ட வியதா
ரணாலோ கௌத் ஸூக்யாந் மிலதி ஸூர சங்கே த்ருதமமும்
நிருந்த்யா ஸந்த்யாத ப்ரதம மிதி தாத்ரா ஜகதிஷே –4-

தைத்யே-திதி ஸூத அசுரன்

தாதா -பிரமன் -இரவில் அசுரர் பலம் மிக்கு இருக்கும் என்று அறிந்து பிரார்த்தனை

அசுரன் கதையை எடுத்துக் கொண்டு போர் புரிய வந்தான் -தாங்களும் கதையை எடுத்து போர் புரிய ஆரம்பித்தீர்
விண்ணே அதிரும்படியான அந்த யுத்தத்தைப் பார்க்க தேவர்கள் கூடினார்
அப்போது பிரம தேவர் பொழுது சாயும் முன்னர் இவனைக் கொன்று விடுங்கள் என்று சொன்னார் –

—————————

கதோந் மர்தே தஸ்மிம்ஸ் தவ கலு கதாயாம் திதி புவோ
கதா கதாத் பூமவ் ஜடிதி பதி தாயா மஹஹ போ
ம்ருதுஸ் மோராஸ்ய ஸ்தவம் தனுஜ குல நிர்மூல ந சணம்
மஹா சக்ரம் ஸ்ம்ருத்வா கர புவி ததாநோ ருரு சி ஷே –5-

ஸ்ம்ருத்வா-கருதும் இடம் பொருமே

அந்த யுத்தத்தில்  தங்களுடைய கதையின் அடியால்  அசுரனுடைய கதை கீழே விழுந்தது -ஆச்சர்யம்
தாங்கள் புன்சிரிப்புடன் அசுர குலத்தை அழிப்பதற்காக தங்களுடைய சக்ராயுதத்தை தரித்தீர்
திருக்கையும் திருவாழியுமான சேர்த்தி அழகில் உமது பெருமை ஸ்பஷ்டமாக இருந்ததே –

——————

தத ஸூலம் கால ப்ரதி மருஷி தைத்ய விஸ் ருஜதி
த்வயி சிந்தத்யேநத் கர கலித சக்ர ப்ரஹரணாத்
ஸமாருஷ்டோ முஷ்ட்யா ச கலு விதுதம்ஸ் த்வாம் சமதநோத்
கலந் மாயே மாயாஸ் த்வயி கில ஜகன் மோஹந கரீ–6-

கால பிரதி சூலம் -யமனைப் போல்

இங்கு மாயை -ப்ரக்ருதி -அப்ராக்ருதம் நீ என்று அறியாமல்

உடனே அசுரன் சூலத்தை ஏவினான் -சக்ராயுதம் அதைத் தகர்த்தது –
அசுரன் தங்களை முஷ்டியால் அடித்தான்
மாயா சம்பந்தம் அற்ற தங்கள் இடம் பல மாயைகளை ஏவினான்

—————-

பவச் சக்ர ஜ்யோதிஷ் கண லவநி பாதேந விது தே
ததோ மாயா சக்ர வித தகந ரோஷாந்த மனசம்
கரிஷ்டா பிர் முஷ்டி ப்ரக்ருதி பிரபிக் நந்த மஸூரம்
ஸ்வ பாத அங்குஷ்டேந ஸ்ரவண பத மூலே நிரவதீ –7-

சக்ராயுதம் மாயைகளை போக்கி -சம்சாரம் அழித்து -அவனையே கொடுக்கும் -ஞான ஒளி –

சேஷ பூதன் -நானும் உனக்கு பழ அடியேன் -என்று உணர்த்தும்

அந்த மனசம் -உள் குருடன்

அந்த மாயை யாவையும் சக்ராயுதத்தை ஜ்யோதியாலே தூளாகின – அதிக கோபத்துடன் அவன்
தங்களை முஷ்டியால் குத்தினான்
தங்கள் கையின் நுனியால் அவன் காதின் அடிப் பாகத்தில் அடித்து அவனை வாதம் செய்தீர்

—————————

மஹா காய ஸோ அயம் தவ கர ஸரோஜ ப்ரமதி தோ
கலத் ரக்தோ வக்த்ராத பதத் ருஷிபி ஸ்லாகி தஹதி
ததா த்வா முத்தாம ப்ரமத பர வித்யோதி ஹ்ருதயா
முனீந்த்ரா சாந்தாரபி ஸ்துதிபிர் அநுவந் நத்வர தநும் –8-

மென்மையும் வலிமையையும் காட்டும் திருக்கைகள்

சாந்தாரபி ஸ்துதி -ஆழ்ந்த அர்த்தங்கள் கொண்ட ஸ்துதி

தாமரை போன்ற தங்கள் கைகளால் அடிக்கப்பட்ட அந்த ஹிரண்யாக்ஷன் ரத்தம் வழிய கீழே விழுந்து மாண்டான்
அதைக் கண்ட முனிவர்கள் யஜ்ஞ வராஹ மூர்த்தியான தங்களை உரத்த குரலில் ஸ்துதித்தனர்

—————-

த்வசி ஸந்தோ ரோமஸ் வபி குச கண ஸ் சஷுஷி க்ருதம்
சதுர் ஹோதாரோ அங்க்ரவ் ஸ்ருகபி வதனே சோதர இடா
க்ரஹா ஜிஹ்வாயாம் தே பர புருஷ கர்ணே ச ஸமஸா
விபோ சோமோ வீர்யம் வரத கல தேச அப்யு பசத–9-

வேள்விகள் யாகங்கள் தானே பூமியைத் தரிக்கும்-

யஜ்ஞ வராஹம் -ஞானப்பிரான் -கர்ம யோகத்துக்குள்ளே ஞானப் பாகம் கொண்டே உஜ்ஜீவனம் என்று காட்டவே அன்றோ இந்த அவதாரம்
ஞானப்பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே
வராஹ ஷேத்ரங்கள் எங்கும் உண்டே

தங்கள் தோளில் காயத்ரீ முதலிய சந்தஸ் ஸூக்களும் -ரோமங்களில் குசம் என்கிற நாணல் கூட்டமும் -தர்ப்பைகள்
கண்களில் நெய்யும் -நான்கு கால்களில் நான்கு ரிக்வித்துக்களும்
முகத்தில் ஜூஹூ என்கிற ஹோம பாத்திரமும் -வயிற்றில் இடை என்ற பாத்ரமும் -நாக்கில் உரல் போன்ற
உருவம் உள்ள கிருஹம் என்கிற பாத்திரமும் காதுக்களில் மரத் தட்டுகளும் -தங்கள் வீர்யம் சோம ரசமாகவும் –
கழுத்தில் உபசத் என்னும் இஷ்டிகளும் கொண்டு யஜ்ஞத்தின் உருவமாகவே காட்சி அளித்தீர்
இவ்வாறு யஜ்ஞ வராஹ மூர்த்தியாய் பிரமாதி தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் தர்சனம் அளித்து அருளினீர்

—————

முனீந்த்ரை ரித்யாதிஸ் தவந முகரைர் மோதித மநா
மஹீ யஸ்யா மூர்த்யா விமல தர கீர்த்யா ச விலஸன்
ஸ்வ திஷ்ண்யம் ஸம் ப்ராப்த ஸூக ரஸ விஹாரீ மது ரிபோ
நிருந்த்யா ரோகம் மே சகலமபி வாதால யபதே–10-

வாத ரோகம் போக்க வாதால யபதே -குருவாயூரப்பன் தானே -இவற்றையும் போக்கி
ஸகல ரோகங்களையும் போக்கி சம்சாரக் கடலையும் தாண்ட அருளுவான்

ஓ குருவாயூரப்பா இவ்வாறு முனிவர்களின் ஸ்துதிகளால் திருப்தி அடைந்த திரு உள்ளம் உடையவனே
இப்படி பெருமை வாய்ந்த வடிவுடன் ஆனந்தத்துடன் புகழுடன் ஸ்ரீ வைகுண்டம் அடைந்தவனே
மது என்ற அசுரனைக் கொன்றவனே அடியேனுடைய அனைத்து ரோகங்களையும் போக்கி அருள வேண்டும் –

——————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading