ஸ்ரீ நாராயணீயம் – தசகம் 11-ஸநகாதீனம் -ஸ்ரீ வைகுண்ட தர்சனம் -ச ஹிரண்யாக்ஷஸ்ய ததா ஹிரண்ய கசிபோ ஜனனம்

உபேந்திரா வஜ்ரா சந்தஸ் 1-2-8-9-
உபஜாதி சந்தஸ் 3-4-5-6-7-10-

———–

க்ரமேண ஸர்கே பரிவர்த்த மாநே கதாபி திவ்யா ஸநகாதயஸ் தே
பவத் விலோகாய விகுண்ட லோகம் ப்ரபேதிரே மாருத மந்திரேச –1-

கதாபி-ஒரு முறை
விகுண்ட-கார்ய ஸ்ரீ வைகுண்டம் –

மாருத மந்திரேச-வாயு பகவான் பிரதிஷடை செய்த திருக்கோயில் ஈசனே

ஹே குருவாயூரப்பா ஸ்ருஷ்டி தொழில் நன்றாக பெருகி விருத்தி அடையும் பொழுது
சனகாதிகள் தங்களை தரிசிக்க ஸ்ரீ வைகுண்ட லோகத்தை அடைந்தார்களாமே

——————

மநோஜ்ஞ நைஸ்ரேயஸ காந நாத்யைர் அநேக வாபீ மணி மந்த்திரைஸ் ச
அநோ பமம் தம் பவதோ நிகேதம் முநீஸ்வரா ப்ரா புரதீத கஷ்யா –2-

நைஸ்ரேயஸ-தோட்டத்தின் பெயர் -திவ்ய அப்ராக்ருதம் இவை எல்லாமே அங்கே உண்டே

ஸப்த பிரகார ஆறு கோட்டைகள் திரு வாசல்களைக் கடந்து அழகிய தோட்டங்கள் குளங்கள்
ரத்ன மயமான திரு மாளிகைகள் முதலியவற்றால் ஒப்பற்று விளங்கும்
தங்களுடைய ஸ்ரீ வைகுண்டத்தை அடைந்தனர் –

—————–

பவத் தித்த்ரு ஷுந் பவனம் விவிஷுந் த்வாஸ்தவ் ஜயஸ்தாந் விஜயோ அப்யருந்தாம்
தேஷாம் ச சித்தே பதமாப கோப சர்வம் பவத் ப்ரேரணயை வ பூமந் –3-

பிராட்டி இடமும் முன்பு இவர்கள் அபசாரம் பட்டார்கள் -இருந்தாலும் அவள் மன்னித்து விட்டத்தை அறிந்த நீ அன்றோ
இவ்வாறு நடக்கும்படி தூண்டி அருளினாய்-இதன் மூலம் பாகவத அபசாரம் குரூரம் என்பதை உலகுக்கு காட்டி அருளினாய்

உன்னை தர்சிக்க விரும்பிய சனகாதிகளை ஜயன் விஜயன் வாயில் காப்போர்கள் தடுத்து நிறுத்தினார்கள்
அவர்கள் மனத்தில் கோபம் உண்டானது -அவ்வாறு நடந்ததும் உனது திரு உள்ள சங்கல்பம் அடியாகவே தானே

—————-

வைகுண்ட லோக அநுசித ப்ரசேஷ்டவ் கஷ்டவ் யுவாம் தைத்ய கதிம் பஜேதம்
இதி ப்ரஸப்தவ் பாவதாஸ் ரயவ் தவ் ஹரி ஸ்ம்ருதிர் நோ அஸ்த் விதி நேமதுஸ்தாந் –4-

மூன்று முறை பிறந்து -நாராயணனையே த்வேஷித்து எப்பொழுதும் நினைந்து கொண்டே இருந்தார்களே
ஹிரண்யாக்ஷன் ஹிரண்ய கசிபு
ராவணன் கும்ப கர்ணன்
சிசுபாலன் தந்தவக்ரன்

ஸ்ரீ வைகுண்டத்துக்குத் தகாத செயல்களை செய்த நீங்கள் இருவரும் அசுரப் பிறவியை அடையுங்கோள்
என்று சபிக்கப் பட்டார்கள் -உடனே அவ்விருவரும் ஸநகாதிகளை வணங்கி அஸுர ஜென்மாவிலும்
ஸ்ரீ ஹரியின் நினைவு எங்களை விட்டு நீங்காது இருக்க வேண்டும் என்று வேண்டினார்கள்

————–

ததே ததா ஜ்ஞாய பவாந வாப்த சஹைவ லஷ்மயா பஹிரம்பு ஜாஷ
ககேஸ்வராம் சார்பித சாரு பாஹுர் ஆனந்தயம் ஸ்தானபி ராம மூர்த்யா –5-

உள்ளூவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறியும் மிதுனம் அன்றோ
லீலா ரசம் அனுபவிக்க முன்பே வராமல்
ககேஸ்வராம்-பறவை அரசன் -புள்ளரையன்
உன்னைக் காட்டி மகிழ்வித்தாயே-

தாமரைக் கண்ணனே நடந்தவற்றை அறிந்த தாங்கள் ஸ்ரீ பெரிய பிராட்டியாருடன் கூட ஸ்ரீ கருடா ரூடனாய் –
அவன் தோளில் திருக் கைகளை வைத்துக் கொண்டு அழகிய திரு உருவுருவத்துடன் ஸநகாதிகளை
திருப்தி படுத்துவதற்காக ஸ்ரீ வைகுண்ட வாசலை அடைந்தீர்

—————–

ப்ரஸாத்யா கீர் பி ஸ்துவதோ முனீந்திராந் அநந்ய நாதவத பார்ஷதவ் தவ்
சம் ரம்பயோ கேந பவைஸ் த்ரி பிர்மா முபேதமித்யாத்த க்ருபம் ந்யகா தீ –6-

மைனஸூ தியானிக்கும் முன் வாயாலே பாடி –
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க -ஆண்டாள்
ஸ்ரீ மத் பாகவதம் இத்தை விவரிக்கும் –
எனது கை பாகவத அபசாரம் செய்தால் அத்தையும் வெட்டி விடுவேன் என்பான்
நானே வந்து உங்களை நிரசிப்பேன்-பின்பு என்னை வந்து அடைவீர்கள்
பாகவத அபசாரத்துக்கு பிராயச்சித்தம் இல்லையே -அனுபவித்தே தீர்க்க வேண்டுமே
நமக்கு அவதாரங்கள் அனுபவிக்கவும் இந்த லீலைகள்-

உம்மைக் கண்டதும் ஸநகாதிகள் ஆனந்தம் அடைந்து பல ஸ்லோகங்களாலே ஸ்துதித்தார்கள் –
அவர்களுக்கு அனுக்ரஹம் செய்தீர்கள் -பிறகு அவர்களைப் பார்த்து அநந்ய கதிகளான நீங்கள்
மூன்று பிறவி எடுத்து முடிவில் என்னை வந்து அடையுங்கோள் என்று கூறினீர்

———

த்வதீய ப்ருத்யாவத காஸ்ய பத்தவ் ஸூராரி வீரா உதிதவ் திதவ் த்வவ்
ஸந்த்யா சமுத்பாதந கஷ்ட சேஷ்டவ் யமவ் ச லோகஸ்ய யமா விவாந் யவ் –7-

பஸ்யகர் -அனைத்தையும் பார்ப்பவர் -த்ருஷ்ட்டி -கஸ்யபர் மாற்றி வைத்தார்
யமவ்-யமங்கள் போல் சஞ்சரித்து வந்தார்கள்

அதன் பிறகு அவர்கள் கஸ்யபருக்கும் திதிக்கும் பிள்ளைகளாக அசுரர்களாக பிறந்தார்கள்
ஸந்த்யா காலத்தில் அவர்கள் பிறப்பு உரிய புணர்ச்சி நடந்ததால் அவர்கள் க்ரூரர்களாகவும்
மூன்று உலகத்தாரையும் அச்சுறுத்து பவர்களாயும் உலகிற்கு மற்ற ஒரு யமன் போலவும் இருந்தனர்

———-

ஹிரண்ய பூர்வ கசிபு கிலைக பரோ ஹிரண்யாக்ஷ இதி ப்ரதீத
உபவ் பவந் நாத மசேஷ லோகம் ருஷா ந்யருந்தாம் நிஜ வாஸ நாந்தவ் –8-

இரட்டை குழந்தை பிறந்தால் இரண்டாம் பிறவி மூத்தவன் -இவன் கரு முதலில் வந்ததால்
முதலில் பிறந்தவன் தம்பி –
ஹிரண்யாக்ஷன் முதலில் பிறந்த தம்பி விஜயன் அம்சம்
ஹிரண்யகசிபு அண்ணன் ஜெயன் அம்சம் மூத்தவன்
வாசனை -தூண்ட மனப்பதிவு -மேலே மேலே -அந்தவ் -உள் கண் இல்லாமல் ஆனார்கள்

ஹிரண்ய கசிபு ஹிரண்யாக்ஷன் என்ற பெயருடன் அஸுர நடத்தையால் உன்னையே
தலைவனாகக் கொண்ட எல்லா உலகோரையும் கொடுமைப் படுத்தினார்கள்

—————

தயோர் ஹிரண்யாஷா மஹா ஸூ ரேந்த்ரோ ரணாய தாவன்ன நவாப்த வைரீ
பவத் ப்ரியாம் ஷமாம் சலிலே நிமஜ்ய சசார கர்வான் விநதன் கதாவான் –9-

அவர்களுக்குள் ஹிரண்யாக்ஷன் என்பவன் கையில் கதையுடன் தன்னை எதிர்த்து சண்டை இட உலகில்
யாவரும் இல்லை என்னும் கர்வத்தால் பூமா தேவியை நீருக்கு அடியில் கொண்டு ஒளித்து வைத்தான்
இந்த வழியில் உம்மையே எதிர்க்கலாம் என்று எண்ணினான்

———–

ததோ ஜலே ஸாத் ஸத்ருசம் பவந்தம் நிசம்ய பப்ராம கவேஷயம் ஸ்த்வாம்
பக்தைக த்ருஸ்ய ஸ கிருபா நிதே த்வம் நிருந்தி ரோகான் மருதால யேஸ –10-

அவன் உனக்கு சமமானவர் என்று வருணன் சொன்னதைக் கேட்டு தங்களளைத் தேடி அலைந்தான்
ஓ குருவாயூரப்பா கருணா ஸமுத்ரமே பக்தர்களால் அடையத் தகுந்த தங்கள் அடியேனுடைய
வியாதிகளைப் போக்கி அருள வேண்டும்

——————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading